Thursday 26 October 2017

ஜாதகப்படி யாருக்கு கடன் கொடுத்தால் திரும்பி வராது?

ஜாதகப்படி யாருக்கு கடன் கொடுத்தால் திரும்பி வராது?
ஜாதகப்படி யார் கொடுத்த கடன் திரும்பிவராது?
 சமுதாயத்தில் அதிக குடும்பங்களில் இருந்து நிம்மதியை நிதானமாக பிரித்து மனநிறைவான அல்லது மகிழ்ச்சியான வாழ்க்கையினை உருக்குலைத்துக் கொண்டிருக்கும் ஒரு முக்கியமான சமூக பிரச்சனையை பற்றியும் அதிலிருந்து இனிமேல் எப்படி நம்மை தற்காத்துகொள்வது என்பதை பற்றியும் சற்று ஜோதிட அறிவியல் முறைப்படி காண்போம்.
கடன் கொடுக்கல் அல்லது வாங்கல் :
 ஜோதிட சாஸ்திரப்படி சில கிரக அமைப்புகளை கொண்ட ஜாதகர்கள் பிறருக்கு கடன் கொடுத்தால் அந்த கடன் திரும்பிவருவது மிகவும் அரிதான காரியமாகிவிடும். அதற்கேற்ப கடன் பெற்றவர்களுக்கும் அந்த கடனை திருப்பி செலுத்தக்கூடிய சு ழ்நிலை ஏற்படாது. மீறி பெற்ற கடனை திரும்ப செலுத்தினாலும், கடனை முழுவதும் அடைக்கமுடியாத நிலைமை உண்டாகும். எனவே பின்வரும் கிரக அமைப்புகளை கொண்ட ஜாதகர்கள் பிறருக்கு தங்கள் கையால் கடன் கொடுப்பதை முடிந்த அளவு தவிர்க்கவும்.
 ஒரு ஜாதகத்தில் இரண்டாம் இடம் தனம், வாக்கு, குடும்பம் மற்றும் பணவரவை குறிக்கும். ஒரு ஜாதகத்தில் இரண்டாம் இடத்திற்கு அதிபதியான கிரகம் நல்ல நிலைமையில் இருந்தால் மட்டுமே அவர்களுக்கு கொடுத்த கடன் எவ்வித சிரமமுமின்றி திரும்பிவரும்.
கிரக அமைப்புகள் :
 லக்னத்திற்கு இரண்டாமிடத்தில் ராகு கேது போன்ற சர்ப்பகிரகங்கள் இருந்தால் அந்த கிரக அமைப்புடைய ஜாதகர் பிறருக்கு கடன் கொடுக்கக்கூடாது. மீறி கொடுத்தால் கொடுத்த பணத்தையோ அல்லது பொருளையோ முழுமையாக வசு லிக்கமுடியாத சு ழ்நிலை உருவாகலாம்.
 லக்னத்திலிருந்து இரண்டாம் வீட்டிற்குரிய கிரகத்தை சர்ப்பகிரகங்களான ராகு கேது சு ழ்ந்திருந்தாலும் அவர்கள் பிறருக்கு கடன் கொடுக்கக்கூடாது. மீறி கொடுத்தால் அந்த பணத்தையோ, பொருளையோ படாதபாடுபட்டு மீட்கவேண்டி இருக்கும்.
 இரண்டாம் வீட்டிற்குரிய கிரகம் நீச்சம் பெற்று பலமிழந்திருந்தாலும் அவர்கள் பிறருக்கு பொருளையோ பணத்தையோ கடனாக கொடுக்கக்கூடாது.
 இரண்டாம் வீட்டிற்குரிய கிரகம் ராசிகட்டத்தில் எவ்வளவு பலமாக இருந்தாலும் அம்சத்தில் நீச்சம் பெறாமல் இருப்பது மிகமிக அவசியம் ஆகும். ராசிகட்டத்தில் இரண்டிற்குரிய கிரகம் அம்சத்தில் நீச்சம் பெற்றிருந்தால் அது முழுமையாக தன்னுடைய பலத்தை இழந்துள்ளது என்பதாகும். இந்த கிரக அமைப்புள்ளவர்களும் பிறருக்கு கடன் கொடுக்கக்கூடாது.
 ராசிகட்டத்தில் இரண்டாம் வீட்டிற்குரிய கிரகத்துடன் அஷ்டமாதிபதி எனப்படும் எட்டாம் வீட்டிற்குரிய கிரகம் சேர்ந்திருந்தாலும் அவர் பிறருக்கு கடன் கொடுக்கக்கூடாது.
 கடன்கொடுக்கும் எண்ணம் கொண்டவர்கள் உங்கள் வாழ்க்கையை இனிமையானதாகவும் நிம்மதியானதாகவும் அமைத்துக்கொள்ள, மேற்கண்ட கிரக அமைப்புகளை உங்கள் ஜாதகத்துடன் ஒப்பிட்டுபார்த்து முன்னெச்சரிக்கையுடன் நடந்துகொள்ளுங்கள்.
 கொடுத்த கடன் வசு லாகாதது தொடர்பான மேற்கண்ட கிரக அமைப்புகளை தவிர இன்னும் சில கிரக அமைப்புகளும் விதிகளும் ஜோதிட சாஸ்திரத்தில் உள்ளது.
இது போல் கடனை கொடுத்து சிலர் மன உலசலுக்கு தள்ளபடுகிறார் இதை சரி செய்ய யந்திரம் தாய்த்து முறையை செய்வது சிறந்த்து.