Friday 29 January 2016

உணவு பழக்கம் பழமொழி வடிவில்…

“உணவு பழக்கம்" பழமொழி வடிவில்…!

* காட்டுலே புலியும் , வீட்டுலே புளியும் ஆளைக் கொல்லும்.

* போன ஜுரத்தை புளி இட்டு அழைக்காதே

* பொங்குற காலத்தில் புளி.. மங்குற காலம் மாங்கா

* சீரகம் இல்லா உணவும் , சிறு குழந்தைகள் இல்லா வீடும் சிறக்காது.

* எண்னை குடத்தை சுற்றிய எறும்பு போல

* தன் காயம் காக்க வெங்காயம் போதும்

* வாழை வாழ வைக்கும்

* அவசர சோறு ஆபத்து

* ஆறிய உணவு மூட்டு வலி உண்டாக்கும்

* இரைப்பை புண்ணுக்கு எலுமிச்சை சாறு

* ரத்த கொதிப்புக்கு அகத்திக் கீரை

*இருமலை போக்கும் வெந்தயக் கீரை

* உண்ணா நோன்பு ஆயுளைக் கூட்டும்.

* உஷ்ணம் தவிர்க்க கம்பங் களி

* கல்லீரல் பலம் பெற கொய்யாப் பழம்

* குடல் புண் நலம் பெற அகத்திக்கீரை

* கொலஸ்ட்ரால் குறைக்க பன்னீர் திராச்சை

* சித்தம் தெளிய வில்வம்

* சிறுநீர் கடுப்புக்கு அன்னாசி

* சூட்டை தணிக்க கருணை கிழங்கு

* ஜீரண சக்திக்கு சுண்டக்காய்

* தலை வலி நீங்க முள்ளங்கி சாறு

* தேனுடன் இஞ்சி ரத்தத் தூய்மை

* பூண்டில் இருக்கு பென்சிலின் சக்தி

* மூல நோய் தீர வாழைப்பூ கூட்டு

* வாந்திக்கு மருந்து மணத்தக்காளி

* வாத நோய் தடுக்க அரைக் கீரை

* வாய் துர்நாற்றம் தீர்க்க ஏலக்காய்

* பருமன் குறைய முட்டைக்கோஸ்

* பித்தம் தணிக்க நெல்லிக்காய்

* கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது !

* கையில் நாலு மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம் !

* வாழை வாழவும் வைக்கும் தாழவும் வைக்கும் !

உணவு மருந்தாக இருக்க வேண்டும்…. இல்லாவிட்டால் மருந்தே நமக்கு உணவாகும் நிலைமை உருவாகும் ”.

நலம் உடன் வாழ்வோம்!

Thursday 28 January 2016

கை குழந்தைக்கான சத்தான உணவுகள் !

கை குழந்தைக்கான சத்தான உணவுகள் !
கூட்டு குடும்பமாக வாழ்ந்த காலம் மாறி, தனி குடித்தனமாக குறுகிவிட்ட சூழ்நிலையில், குழந்தை வளர்ப்பு பற்றி தெரிந்து கொள்ள, பெற்றோர் மிக சிரமப்படுகின்றனர்.
குழந்தை பிறந்த ஆறு மாதம் வரை, தாய்ப்பாலே போதும். அதன் பின், உடல் வளர்ச்சிக்கு தேவையான கலோரிகள், தாய்ப்பாலில் அதிகம் இல்லாததால், அதற்கு இணையான உணவுகளை, கஞ்சி வடிவில் நன்கு குழைத்து தருவது அவசியம்.
பச்சரிசியை, "மிக்சி'யில் குருணை போல உடைத்து, வெயிலில் காய வைத்து, வறுத்து, பொடி செய்து, காற்று புகாத டப்பாவில் சேமியுங்கள். ஒரு ஸ்பூன் பச்சரிசி மாவு, மூன்று ஸ்பூன் பாசிப்பருப்புடன் தண்ணீர் சேர்த்து, குழைய வேக வைத்த பின், தேங்காய் எண்ணெய், மூன்று சொட்டு சேர்த்து, நன்கு பிசைந்து, நம் கையாலேயே ஊட்டலாம்.
குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகளுக்கு, மருத்துவர்கள் பரிந்துரைக்கும் பல்வேறு சொட்டு மருந்துகள், தேங்காய் எண்ணெயில் உள்ள சத்துக்கள் தான், உடலுக்கு வளம் சேர்க்கும். தேன்வாழை, ரஸ்தாளி, மலை வாழை போன்றவற்றின் விதைகளை நீக்கி, கைகளால் நன்கு மசித்து கொடுத்தால், உடல் எடை அதிகரிக்கும்.
ஏழாம் மாதத்தில் இருந்து கேரட், உருளைகிழங்குகளை நன்கு வேக வைத்து, தோல் நீக்கி, மிளகு, சிறிதளவு உப்பு சேர்த்து, நன்கு மசித்து தர வேண்டும்.
ஒன்பதாம் மாதத்திலிருந்து, அதிக நார்சத்துள்ள கீரை உணவுகளை, நன்கு வேகவைத்து, அதை கடைந்து, உப்பு, சீரகம், மிளகு சேர்த்து கொடுக்கலாம்.
பெற்றோர், தன் குழந்தைக்கு ஈறு வளர்ந்திருக்கிறதா என, கண்காணிக்க வேண்டும். ஈறு வளர்ந்து விட்டால், அதன் பின், நாம் சாப்பிடும் உணவுகளையே குழந்தைக்கும், கொடுக்க ஆரம்பிக்கலாம்.
எட்டு மாதங்கள் வரை அதிக காரம், இனிப்பு, புளிப்பு உள்ள எந்த பதார்த்தத்தையும் தரக்கூடாது. ஏனெனில், தரப்படும் சுவைக்கு ஏற்ப, அச்சுவைக்கு அடிமையாகி, வேறு எந்த உணவையும், உண்ண விரும்ப மாட்டார்கள்.
இதை பின்பற்றினாலே, குழந்தைகள் போதுமான உடல் எடையுடன், ஆரோக்கியமாக இருப்பர்.
ஆறு மாத குழந்தைகளுக்கு, உணவளிக்கும் முறைகளை சொன்னவர் சித்த மருத்துவர், கு.சிவராமன்: தினமலர்
========================================================
குழந்தை உணவுகள் 6 மாதம் முதல் 1 வயது வரை.
இங்கு நான் உங்களுக்கு சொல்ல போவது குழந்தைக்கு என்ன என்ன காய்கறிகள்,கறிகள்,மீன்கள்,மாவு பொருள்கள் எல்லாம் எந்த எந்த மாதத்தில் தொடங்க வேண்டும் என்று சொல்ல போகிறேன்.
இது சாதாரணமாக நான் என் பிள்ளைகளுக்கு கொடுத்தது. இது பிள்ளைகளின் உடல் நிலைக்கு ஏற்றதுப்போல் கொடுக்கவும்.
6 மாதத்தில் கொடுக்க வேண்டிய உணவு:
காய்க்கறிகள்:
நன்றாக வேக வைத்து, மையாக அரைத்து கொடுக்க வேண்டும். கொஞ்சம் தண்ணீர்ராக கொடுக்கவும்.
கேரட்,பீன்ஸ்,மஞ்சள் பூசணிக்காய்,சுக்கினி,புரோக்கோலி,பசலைக்கீரை,தக்காளி,பீட்ரூட்
பால் சம்மந்தப்பட்ட உணவு:
பால்
மாவு சத்து உணவு:
அரிசி சம்மதப்பட்ட உணவு
உருளைக்கிழங்கு,செர்லாக்,ஜவ்வரிசி
பழங்கள்:
ஆப்பிள்,வாழைப்பழம்,பேரிக்காய்
8 மாத குழந்தைக்கு கொடுக்க வேண்டிய உணவு:
வேகவைத்து மசித்த காய்க்கறிகள்/ கொஞ்சம் கட்டியாக கொடுக்கலாம்.
பச்சைப்பட்டாணி
பால் சம்மந்தப்பட்ட உணவு:
பால்
எண்ணெய், வெண்ணெய் சேர்க்கலாம்
புரோட்டீன் உணவு:
இறைச்சி,கோழி,மீன்(நாக்கு மீன் போன்றது) ,ஹேம்(ham)
மாவு சத்து உணவு:
மக்கரோனி,சேமியா,ரவை,கோதுமை சம்மந்தப்பட்ட உணவுகள்.
10 மாதக்குழந்தைக்கு கொடுக்க வேண்டிய உணவுகள்:
இந்த வயதில் பிள்ளைக்கு அரையும் குறையும்மாக அரைத்துக்கொடுக்கவும்.
காய்கறிகள்:
முள்ளங்கி,கோஸ்,கத்தரிக்காய்,குடைமிளக்காய்,வெள்ளரிக்காய்
புரோட்டீன் உணவுகள்:
முட்டையின் மஞ்சள் கரு மட்டும் கொடுக்கலாம்.
பால் உணவுகள்:
பால்லாடைக்கட்டி (வாஷ்கீரி- vache que rit ), தயிர்
மாவு சத்து உணவுகள்:
ரொட்டியின் உள்ளிருக்கும் வெள்ளை பகுதியை நாம் இருக்கும் போது நாமே கொஞ்சம் கொஞ்சமாக கொடுக்க வேண்டும்.
ரோல் ரொட்டியில் இருக்கும்,கடைசி பகுதியை பிள்ளையின் கையில் கொடுத்து சாப்பிட கொடுக்கலாம். நாம் பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும்.
1 வயது குழந்தைக்கு கொடுக்க வேண்டிய உணவுகள்:
கொஞ்சமாக அரைத்தாலே போதும். இந்த வயதில் குழந்தைக்கு பல் இருப்பதால், கால் பாகம் அரைத்தாலே போதும்.
தக்காளி போன்ற காய்யை வேக வைக்கமல் கொடுக்கலாம். கொஞ்சம் வினிகர் ஊற்றிக்கூடக்கொடுக்கலாம்.
புரோட்டீன் உணவுகள்:
இந்த வயதிலிருந்து, முழு முட்டை கொடுக்க தொடங்கலாம்.
உப்பு இந்த வயதில் தான் சேர்க்க வேண்டும்.
பழங்கள்:
எல்லாவித பழங்களும் கொடுக்கலாம்
குழந்தைக்கு உணவுக்கொடுக்கும் போது, உப்பு, சர்க்கரையை அதிகம் தவிர்க்கவும்.
எண்ணெய், வெண்ணெய்யும் தவிர்க்கவும்.
கூடுமான வரை நீங்களாகவே உங்கள் குழந்தைக்கு உணவு தயாரித்துக்கொடுங்கள்.வாங்கிக்கொடுக்காதீர்கள்.
கண்டிப்பாக இது உங்களுக்கு உதவும் என்று நினைக்கிறேன்.

27 நட்சத்திரங்களின் காயத்ரி மந்திரங்கள் !

27 நட்சத்திரங்களின் காயத்ரி மந்திரங்கள் !
உங்கள் நட்சத்திர காயத்ரி மந்திரத்தை மனப்பாடம் செய்து தினமும் குறைந்தது 9 முறையாவது சொல்லுங்கள். வாழ்க்கையில் மிகச்சிறந்த முன்னேற்றம் காணலாம்.
அஸ்வினி
ஓம் ஸ்வேத வர்ண்யை வித்மஹே
சுதாகராயை தீமஹி
தன்னோ அச்வநௌ ப்ரசோதயாத்
பரணி
ஓம் க்ருஷ்ணவர்னாயை வித்மஹே
தண்டதராயை தீமஹி
தன்னோ பரணி ப்ரசோதயாத்
கிருத்திகை
ஓம் வன்னிதேஹாயை வித்மஹே
மஹாதபாயை தீமஹி
தன்னோ க்ருத்திகா ப்ரசோதயாத்
ரோஹிணி
ஓம் ப்ராஜாவிருத்யைச வித்மஹே
விச்வரூபாயை தீமஹி
தன்னோ ரோஹினி ப்ரசோதயாத்
மிருகசீரிடம்
ஓம் சசிசேகராய வித்மஹே
மஹாராஜாய தீமஹி
தன்னோ ம்ருகசீர்ஷா ப்ரசோதயாத்
திருவாதிரை
ஓம் மஹா ச்ரேஷ்டாய வித்மஹே
பசும்தநாய தீமஹி
தன்னோ ஆர்த்ரா ப்ரசோதயாத்
புனர்பூசம்
ஓம் ப்ரஜாவ்ருத்யைச வித்மஹே
அதிதிபுத்ராய த தீமஹி
தன்னோ புனர்வஸு ப்ரசோதயாத்
பூசம்
ஓம் ப்ரம்ம்வர்ச்சஸாய வித்மஹே
மஹா திஷ்யாய தீமஹி
தன்னோ புஷ்ய ப்ரசோதயாத்
ஆயில்யம்
ஓம் ஸர்பராஜாய வித்மஹே
மஹா ரோசனாய தீமஹி
தன்னோ ஆச்லேஷ ப்ரசோதயாத்
மகம்
ஓம் மஹா அனகாய வித்மஹே
பித்ரியா தேவாய தீமஹி
தன்னோ மகஃப்ரசோதயாத்
பூரம்
ஓம் அரியம்நாய வித்மஹே
பசுதேஹாய தீமஹி
தன்னோ பூர்வபால்குநீ ப்ரசோதயாத்
உத்திரம்
ஓம் மஹாபகாயை வித்மஹே
மஹாச்ரேஷ்டாயை தீமஹி
தன்னோ உத்ரபால்குநீ ப்ரசோதயாத்
அஸ்தம்
ஓம் ப்ரயச்சதாயை வித்மஹே
ப்ரக்ருப்ணீதாயை தீமஹி
தன்னோ ஹஸ்தா ப்ரசோதயாத்
சித்திரை
ஓம் மஹா த்வஷ்டாயை வித்மஹே
ப்ரஜாரூபாயை தீமஹி
தன்னோ சைத்ரா ப்ரசோதயாத்
சுவாதி
ஓம் காமசாராயை வித்மஹே
மகாநிஷ்டாயை தீமஹி
தன்னோ சுவாதி ப்ரசோதயாத்
விசாகம்
ஓம் இந்த்ராக்நௌச வித்மஹே
மஹாச்ரேஷ்ட்யைச தீமஹி
தன்னோ விசாகா ப்ரசோதயாத்
அனுஷம்
ஓம் மித்ரதேயாயை வித்மஹே
மஹா மித்ராய தீமஹி
தன்னோ அனுராதா ப்ரசோதயாத்
கேட்டை
ஓம் ஜயேஷ்டாயை வித்மஹே
மகா ஜய்ஷ்ட்யாயை தீமஹி
தன்னோ ஜ்யேஷ்டா ப்ரசோதயாத்
மூலம்
ஓம் ப்ராஜாதிபாயை வித்மஹே
மஹப்ராஜையை தீமஹி
தன்னோ மூலாப் ப்ரசோதயாத்
பூராடம்
ஓம் சமுத்ரகாமாயை வித்மஹே
மஹாபிஜிதாயை தீமஹி
தன்னோ பூர்வாஷாடா ப்ரசோதயாத்
உத்திராடம்
ஓம் விஸ்வேதேவாய வித்மஹே
மஹா ஷாடாய தீமஹி
தன்னோ உத்ராஷாடா ப்ரசோதயாத்
திருவோணம்
ஓம் மஹா ச்ரோணாய வித்மஹே
புண்யஸ்லோகாய தீமஹி
தன்னோ ச்ரோணா ப்ரசோதயாத்
அவிட்டம்
ஓம் அக்ர நாதாய வித்மஹே
வசூபரீதாய தீமஹி
தன்னோ சரவிஹ்டா ப்ரசோதயாத்
சதயம்
ஓம் பேஷஜயா வித்மஹே
வருண தேஹா தீமஹி
தன்னோ சதபிஷக் ப்ரசோதயாத்
பூரட்டாதி
ஓம் தேஜஸ்கராய வித்மஹே
அஜஏகபாதாய தீமஹி
தன்னோ பூர்வப்ரோஷ்டபத ப்ரசோதயாத்
உத்திரட்டாதி
ஓம் அஹிர் புத்ந்யாய வித்மஹே
ப்ரதிஷ்டாபநாய தீமஹி
தன்னோ உத்ரப்ப்ரோஷ்டபத ப்ரசோதயாத்
ரேவதி
ஓம் விச்வரூபாய வித்மஹே
பூஷ்ண தேஹாய தீமஹி
தன்னோ ரைய்வதி ப்ரசோதயாத்.

மறுபிறவி அறுக்கும் துளசி !!!

மறுபிறவி அறுக்கும் துளசி !!!
எந்த இடத்தில் துளசிச் செடி வளர்ந்திருக்கிறதோ அங்கே மும்மூர்த்திகளுடன் சகல தேவதைகளும் வாசம் செய்கிறார்கள். சூரியனைக் கண்டதும் இருள் மறைவது போல் துளசியின் காற்றுப்பட்டாலே பாவங்களும் நோய்களும் விலகி விடும். துளசி இலையைத் தெய்வப் பிரசாதமாக உண்பவர்க்கு சகல பாவங்களும் தொலையும்.
எவரது இல்லத்தில் துளசிசெடிகள் நிறைய இருக்கிறதோ அந்த இடம் புண்ணியமான திருத்தலம். அங்கு அகால மரணம், வியாதி முதலியன ஏற்படாது. துளசிச் செடிகளைத் திருமாலின் அம்சமாக மதித்துப் பூஜை செய்ய வேண்டும். துளசி தளத்தால் திருமாலை அர்ஜனை செய்து பூசிப்பவருக்கு மறுபிறவி கிடையாது.
துளசியை பூஜை செய்ததின் பயனாக சீதைக்கு ராமபிரான் கணவராக கிடைத்தார் என்று துளசி ராமாயணம் கூறுகிறது. விஷ்ணு பூஜைக்குப் பிறகு சந்தன தீர்த்தத்துடன் துளசி தளத்தைப் பிரசாதமாகப் பெறுவது பக்தர்கட்கு உவப்பானதாகும்.
இதைச் சரணாமிர்தம் தீர்த்த பிரஸாதம் பெருமாள் தீர்த்தம் என்றெல்லாம் சிறப்பித்துக் கூறுவர். இதைப்பற்றி ஆகமநூல், துளசி தளம் கலந்த ஸ்ரீமந் நாராயணனின் ஸ்ரீபாத தீர்த்தத்தை பருகுபவர்களுக்கு மறு பிறப்பில்லை. அகால மரணம், உடல், உள்ளம் பற்றிய வியாதிகள் எல்லாமே விலகும் என்கிறது.

துளசி பூஜை செய்யும் முறை!

முறைப்படி துளசியைப் பறித்து, சுத்த நீர் தெளித்து வைத்துக் கொள்ள வேண்டும். திருமகள் அருளைப் பெற வேண்டும் என்று விரும்புவோர், வெள்ளிக்கிழமை காலையிலும், பவுர்ணமி அன்றும் இதைச் செய்யலாம்.துளசி மாடம் இல்லாதவர்கள் 12 அல்லது 16 செங்கற்களால் துளசி பீடம் அமைத்து, அதன் முன்பு பெரிய அகலில் தீபம் ஏற்றி வைக்க வேண்டும். அடுத்து பீடத்தின் நடுவில் துளசிச் செடியை வைத்து, சுற்றிலும் 12 என்ற எண்ணிக்கையில் சந்தன குங்குமப் பொட்டுகள் வைக்க வேண்டும். தொடர்ந்து அவை ஒவ்வொன்றின் மீதும் மலர்கள் வைத்து கேசவா, நாராயணா, மாதவா, கோவிந்தா, விஷ்ணு, மதுசூதனா, த்ரிவிக்ரமா, வாமனா, ஸ்ரீதரா, ஷ்ருஷிகேசா, பத்மநாபா, தாமோதரா என்று சொல்லி, மனதார வணங்கவும். அத்துடன், ஸ்வாகதம் என்றும் 3 முறை கூறவும்.
இனி, வெற்றிலையின் மீது சந்தனப் பிள்ளையார் பிடித்து வையுங்கள். அவருக்கு குங்குமத் திலகமிட்டு செம்மலரால் அர்ச்சனை செய்து வணங்க வேண்டும்.அடுத்து, தேங்காய் பழம், தாம்பூலம், பால் பாயாசம் நிவேதனத்துக்கு வைத்துக்கொண்டு பூஜையைத் துவக்குங்கள்.
ஓம் ஸ்ரீ விஷ்வக்சேனாய நம:- என்று மூன்று முறை சொல்லி விநாயகருக்கு துளசி தீர்த்தம் விடவேண்டும். தொடர்ந்து... ஓம் கஜானனாய நம:
என்று துவங்கி விநாயகர் திருநாமங்கள் சொல்லி துதித்து, பழம் நிவேதித்து ஆரத்தி செய்யவும்.அடுத்ததாக, அன்றைய நாள் குறிப்புடன் சங்கல்பம் செய்துகொள்ள வேண்டும். பின்னர், கணவன்-மனைவி இருவருமே துளசி பீடத்துக்கு (துளசி மாடம் இருந்தால் அதன் முன்பு) முன்பாக அமர்ந்து, கீழ்க்காணும் நாமாவளிகளைக் கூறி குங்குமத்தால் அர்ச்சனை செய்ய வேண்டும்.
ஓம் ஸ்ரீம் பிருந்தா தேவ்யை நம:ஓம் விஸ்வ பூஜிதாயை நம:ஓம் விஷ்ணுப்ரியாயை நம:ஓம் தேவ மூலிகாயை நம:ஓம் கிருஷ்ண ப்ரியாயை நம:ஓம் சவுபாக்ய நிலயாயை நம:ஓம் விஷ்ணு கேசின்யை நம:ஓம் புஷ்பசாராயை நம:
ஓம் நந்தவன நாயகாயை நம:ஓம் விஸ்வ பாவணாயை நம:ஓம் யாக பூஜிதாயை நம:ஓம் தான ப்ரதாயின்யை நம:ஓம் மகாலக்ஷ்மி வாசாயை நம:ஓம் சகல மாட கலாலங்கார்யை நம:ஓம் ஸ்ரீராமப்ரியாயை நம:ஸ்ரீ துளசீ தேவ்யை நமோ நம:
அர்ச்சனை முடிந்ததும் தூப தீப நிவேதனம் செய்து, கையில் மலர் எடுத்து மூன்றுமுறை தன்னையே சற்றிக்கொண்டு கீழ்க்காணும் துதியை மூன்று முறை சொல்லுங்கள்ஓம் ப்ருந்தா ப்ருந்தாவனீவிஸ்வ பூஜிதா விஸ்வபாவனீபுஸ்பஸாரா நந்தனீசதுளசீ க்ருஷ்ண ஜீவனீஏகாந்தாமாஷ்டகம் சைவ ஸ்தோத்ரம்நாமார்த்த ஸம்யுதம் ய:படேத் தாம்ஸஸம்பூஜ்ய அஸ்வ மேத பலம் லபேத்!இப்போது மலர்களை அர்ப்பணித்துவிட்டு, மீண்டும் கைகளில் மலர் எடுத்துக்கொண்டு, மனதில் உங்களுடைய வேண்டுதல்களை நினைத்தபடி ஒரு நிமிடம் தியானித்து,ப்ரசீத துளசி தேவி ப்ரசீத ஹரிவல்லபேக்ஷீரோத மதநோத்பூதே துளசி த்வாம் நமாம்யஹம்என்றபடி துளசிச்செடியின் மேல் மலர்களை போட்டு ஆரத்தி செய்ய வேண்டும்.ஓம் ஸ்ரீத்ரிபுராயை வித்மஹே துளசி பத்ராய தீமஹிதந்நோ துளசீ ப்ரசோதயாத்யந்மூலே சர்வதீர்த்தாநீ யந்மத்யே சர்வதேவதாயதக்ரே சர்வ வேதாஸ்ச துளசீம் தாம் நமாம்யஹம்கற்பூர நீராஜனம் சமர்ப்பயாமிஎன்று சொல்லி நமஸ்கரித்து, பிரசாதம் எடுத்துக்கொள்ளலாம்.
பெண்கள் அர்ச்சனை குங்குமத்தை திருமாங்கல்த்திலும், நெற்றி வகிட்டிலும் இட்டுக்கொள்ளலாம்.
மேலும், குடும்பத்தோடு சேர்ந்து துளசி ஆராதனை துதிப் பாடலைப் பாடி வழிபடுவதால், மேலான பலன்கள் கைகூடும். சர்வ மங்கலங்களும் ஸித்திக்கும்.துளசி ஆராதனை துதி!
ஓம் தீத் தொளியே தீருவே துளசியம்மாபாபத்தைத் தீர்க்கும் பரிவே துளசியம்மா
கோவிந்தன் உட்பொருளாய்க் கூடிக் கலந்த அம்மா
மாவிந்தை உன்றன் மகிமைச் சிறப்பு அம்மா...!
செவ்வாய் திருவெள்ளி செல்வி தழைக்க வந்தாய்
உய்வாக எந்நாளும் உரிமையில் நீ இருப்பாய்
கைவாய்க் கனிவதென்ன கருத்தொன்றிப் போன அம்மா
கண்ணன் மனது வைத்தால் கனிந்துருக வாராயோ!
நாபிக்கமலமம்மா நல்லவனின் தேகமம்மா நான்முகனும் தஞ்சமென நாடியங்கு வீற்றிருப்பான் கோபிக் கமலனிகள் கூட்டுதனை விரும்புகின்ற கோவிந்தன் கொண்டாடும் கொள்கை துளசியம்மா !நாடி விளக்கு வைத்தோம் நறு நெய்யும் ஊற்றி வைத்தோம் நாயகியே பாருமம்மா நலமே துளசியம்மா பாடித் துதிக்கின்றோம் பரதேசம் போகாதே பார்த்து அருள்புரிக பண்பே துளசியம்மா !!.

காலசர்ப்ப தோஷம் போக்கும் துவிதநாக பந்தம் !!!



நாம் மேலே காண்பது ஞானபானு பாம்பன் சுவாமிகள் இயற்றிய துவிதநாக பந்தம் ஆகும். இதை நம்மில் பலர் பார்த்திருக்கலாம். துவிதம் என்பதன் பொருள் இரண்டு ஆகும். இரண்டு நாகங்கள் ஒன்றொடொன்று பின்னி இருக்கும் தோற்றமே நாம் மேலே காணும் தோற்றம் ஆகும். நாகதோஷம் உள்ளவர்களுக்கு பரிகாரமாக இரண்டு பாம்புகள் பிணைந்திருக்கும் சிலையை நாக பஞ்சமி தினத்தன்று பிரதிஷ்டை செய்தால் நாகதோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை. அதற்கு பொருள் செலவு அதிகம். செலவில்லாமல் நாகதோஷம், காலசர்ப்ப தோஷம் நீங்க வழி இருக்கிறது. நாகதோஷம் உள்ளவர்களின் வாழ்க்கையில் ஏதேனும் ஒரு வகையில் தீராத பிரச்சனை ஒன்று தவிர்க்க முடியாததாகிறது.
அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாக நிறுத்திவிட்டு, மேற்கண்ட துதியை தினமும் பாராயணம் செய்து வரவும். மேற்கண்ட துவிதநாகபந்த படத்தினை அச்சிட்டு பூசையறையில் வைத்துக்கொள்ளவும். வசதி படைத்தவரகள் வெள்ளியில் நாகங்கள் வாங்கி வைத்துக்கொள்ளவும். முதன் முதலில் ஆரம்பிக்கும் போது அசுவினி, மகம், மூலம் ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாளிலோ அல்லது திருவாதிரை, சுவாதி, சதயம் ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாளிலோ ஆரம்பிக்கவும். அவ்வாறு இயலவில்லை எனில் செவ்வாய் கிழமை அல்லது கிருத்திகை நட்சத்திரம் அல்லது விசாகம் நட்சத்திரம் அல்லது சஷ்டி திதி அன்று வீட்டிற்கு அருகில் உள்ள முருகன் தலத்தில் 27 முறை பாராயணம் செய்யவும். முருகன் தலம் இல்லாவிடில் சிவத்தலத்தில் உள்ள முருகன் சந்நிதியில் 27 முறை பாராயணம் செய்யவும். திருவாதிரை நட்சத்திரம் வரும் நாளும், மகம் நட்சத்திரம் வரும் நாளும் மிக மிக சிறப்பானவை.
பின்பு வீட்டில் வந்து முருகனின் படம் முன்போ அல்லது சிலை முன்போ 27 முறை பாராயணம் செய்யவும். துவிதநாகபந்த படம் உடன் இருத்தல் மிக நன்று. அதன் பின்பு தினமும் 27 முறை பாராயணம் செய்து வரவும். முருகனின் படம் அல்லது சிலை இல்லாத நிலையில் பித்தளையில் ஒரு வேல் வாங்கிக் கொள்ளவும். அதனை முருகனாக பாவித்து மேற்கண்ட துதியை பாராயணம் செய்யவும். நீங்கள் வாங்கும் வேல் உங்களின் கட்டைவிரலின் உயரத்தை விட 21 மடங்கிற்கு மேல் இருக்கக்கூடாது. ஒரு சாண் அளவை விட குறைவாக இருப்பது நலம். அதனை தினமும் கழுவி விபூதி, சந்தனம் மற்றும் குங்குமம் வைத்து வணங்கி வருதல் நன்று. அவ்வாறு தினமும் அபிசேகம் செய்ய இயலவில்லை என்றாலும் பரவாயில்லை.
ஐந்து எண்ணெய் ஊற்றி வாழைத்தண்டு திரியையும், பருத்தி பஞ்சு திரியையும் ஒன்றாக முறுக்கி திரியாகக் கொண்டு இரண்டு தீபங்கள் ஏற்றி தினமும் பாராயணம் செய்யவும். முருகரின் படம் கிழக்கு நோக்கியும் தீபங்கள் மேற்கு நோக்கியும் இருத்தல் வேண்டும். மந்திர சக்தி உண்டாகும். பாராயணம் வெகு விரைவில் பலனளிக்கும். முதன்முதலில் ஆரம்பிக்கும் நாளன்று விரதம் இருப்பது நன்று.
தினமும் 27 முறை பாராயணம் செய்யவும். சர்ப்ப தோஷம், காலசர்ப்ப தோஷம், பாம்புகளின் தொல்லை, பாம்புகளை அடித்ததால் வந்த தோஷம், குழந்தைகள் மாலை சுற்றி பிறந்த தோஷம், பிரசவ கால துன்பம் மற்றும் ராகு, கேது கிரகங்களின் தோஷங்கள் நீங்கி என்றும் நியம்மதியாக வாழ முருகனருள் என்றும் துணை நிற்கும் என்பதில் ஐயமில்லை.
ஓம் பாம்பன் சுவாமியே போற்றி…!

இறந்தவர்க்கும் நட்சத்திரம் பார்க்க வேன்டும்.!!!

இறந்தவர்க்கும் நட்சத்திரம் பார்க்க வேன்டும்.!!!
இறந்தவர்களுக்கும் நட்சத்திரம் பார்க்க வேண்டியது மிக அவசியமானது என சித்தர்கள் கூறியுள்ளார்கள்.
தனிஷ்டா பஞ்சமி என்றால் என்ன? தனிஷ்டா பஞ்சமியில் என்ன செய்ய வேண்டும்?
தனிஷ்டா பஞ்சமி நட்சத்திரங்கள் 13 ஆகும்.
• அவிட்டம், சதயம்,பூரட்டாதி, உத்திரட்டாதி,ரேவதி ஆகிய 5 நட்சத்திரங்களில் இறந்தவர்களுக்கு ஆறு மாதங்கள் அடைப்பு.
• ரோஹிணியில் இறந்தவர்களுக்கு நான்கு மாதங்கள் அடைப்பு.
• கார்த்திகை, உத்திரம் ஆகிய நட்சத்திரங்களில் இறந்தவர்களுக்கு மூன்று மாதங்கள் அடைப்பு.
• மிருகசீருஷம், சித்திரை, புணர்பூசம்,விசாகம், உத்திராடம் ஆகிய ஐந்து நட்சத்திரங்களில் இறந்தவர்களுக்கு இரண்டு மாதங்கள் அடைப்பு என்றும் குறிப்பிடப் பட்டுள்ளது.
பிறக்கும் போது நட்சத்திரத்தையும், இறப்புக்குத் திதியையும் நாம் நினைவில் கொள்வோம். ஆனால் இறக்கும் போது நட்சத்திரம் பார்க்க வேண்டியது அவசியம் என்று சித்தர்கள் சொல்லி வைத்துள்ளனர். சில நட்சத்திரங்கள் அடைப்பு என்று வழங்கப்படுகின்றன.
அது என்ன அடைப்பு? - அதாவது கர்மவினை, வினைப்பயன் காரணமாக மேலுலகம் செல்வதற்கு ஏற்படும் தடையையே அடைப்பு என்று சொல்கிறார்கள். சித்தர்கள் தனிஷ்டா பஞ்சமி என்றழைப்பதுவும் இந்த நட்சத்திரங்களில் ஏற்படும் மரணங்களைத்தான்.
தனிஷ்டா பஞ்சமி என்பது ஒரு துர்தேவதையாகச் சொல்லப்பட்டுள்ளது. தீய அல்லது அடைப்பு உள்ள நட்சத்திரங்களில் இறந்தவர்கள் வீட்டில் முறையான பரிகாரங்களைக் கைகொள்ளாவிட்டால் இந்த துர்தேவதை புகுந்து அந்த வீட்டில் உள்ளவர்களை ஆவிரூபமாகவோ, கனவு மூலமாகவோ, பிரம்ம ராக்ஸத ரூபமாகவோ தோன்றி பயமுறுத்தி, 6 மாதத்திற்குள் மரணப்படுக்கையில் தள்ளிவிடும் என்பார்கள்.
முக்தி பெற்ற உயிர்கள் கபாலம் திறந்து சூரியன் வழியாக ஒளிவடிவான இறைவனை அடைகின்றன. ஆனால் முக்திநிலையை எட்டாத உயிர்கள் மீண்டும் உடல் எடுக்க உடல்காரகனான சந்திரனையே அடைகின்றன.
கடந்த காலங்களில் இந்த அடைப்பு காலங்கள் முடியும் வரை வீட்டை பூட்டியே வைத்திருப்பார்கள். சில இடங்களில் இறந்தவருடைய சடலத்தை வாசல் வழியாக கொண்டு செல்லாமல் சுவரை இடித்து அதன்வழியாக எடுத்துக் கொண்டுபோவது, போன்ற கடுமையான விதிமுறைகளை எல்லாம் தனிஷ்டா பஞ்சமிக்காக கடைபிடித்திருக்கிறார்கள். கூரையைப் பிரித்து அதன்வழியாகக் கூட சடலத்தை அப்புறப்படுத்தி உள்ளதைக் கேள்விப் படுகிறோம்.
ஒரு மனிதனானவன் எந்த நட்சத்திரத்தில் இறக்கிறானோ அந்த நட்சத்திரத்தின் வழியாகவே எமலோகத்திற்கு செல்வதாகச் சொல்லப்படுகிறது. 27 நட்சத்திரங்களில் இந்த தனிஷ்டாபஞ்சமி நட்சத்திரங்களான 13 நட்சத்திரங்கள் போக மீதமுள்ள 14 நட்சத்திரங்களில் இறப்பவர்கள் விரைவில் தடையேதுமின்றி எமலோகம் அடைகிறார்கள். தனிஷ்டாபஞ்சமி நட்சத்திரங்களில் இறந்தவர்கள் எமலோகம் சென்றடைய அந்த அடைப்பு என்று சொல்லப்பட்டுள்ள கால அவகாசம் தேவைப்படுகிறது. இதையே கருடபுராணமும் உறுதிப் படுத்துகின்றது.
இதற்கு பரிகாரமாக வீட்டையெல்லாம் இடிக்கத் தேவையில்லை. அந்த குறிப்பிட்ட காலம்வரை இறந்த இடத்தில் ஒரு திண்ணை அமைத்து, மாலைநேரத்தில் தீபம் ஏற்றி,தண்ணீர், நைவேத்தியம் வைத்து, கற்பூர ஆரத்தி செய்து ''இறந்த இந்த உயிருக்கு உணவும், நீரும் சென்றடைய இறைவா நீ உதவவேண்டும் '' என்று வேண்டிக் கொண்டு,கற்பூர ஆராதனைக்குப் பிறகு தீபம் அனையாதவாறு ஒரு கூடையைப் போட்டு மூடி வைத்துவிட வேண்டும். அந்த குறிப்பிட்ட நட்சத்திரத்துக்கான காலம்வரை இதைச் செய்து முடிக்க வேண்டும். அதன் பிறகு அதற்கான கிரியைகளை தகுந்த வேதப் பயிற்சி பெற்ற அந்தணர்களைக் கொண்டு செய்து கொள்ளவேண்டும்.

Thursday 21 January 2016

ஆத்திச்சூடி.

1. அறம் செய விரும்பு / 1. Learn to love virtue.
2. ஆறுவது சினம் / 2. Control anger.
3. இயல்வது கரவேல் / 3. Don't forget Charity.
4. ஈவது விலக்கேல் / 4. Don't prevent philanthropy.
5. உடையது விளம்பேல் / 5. Don't betray confidence.
6. ஊக்கமது கைவிடேல் / 6. Don't forsake motivation.
7. எண் எழுத்து இகழேல் / 7. Don't despise learning.
8. ஏற்பது இகழ்ச்சி / 8. Don't freeload.
9. ஐயம் இட்டு உண் / 9. Feed the hungry and then feast.
10. ஒப்புரவு ஒழுகு / 10. Emulate the great.
11. ஓதுவது ஒழியேல் / 11. Discern the good and learn.
12. ஒளவியம் பேசேல் / 12. Speak no envy.
13. அகம் சுருக்கேல் / 13. Don't shortchange.
14. கண்டொன்று சொல்லேல் / 14. Don't flip-flop.
15. ஙப் போல் வளை / 15. Bend to befriend.
16. சனி நீராடு / 16. Shower regularly.
17. ஞயம்பட உரை / 17. Sweeten your speech.
18. இடம்பட வீடு எடேல் / 18. Judiciously space your home.
19. இணக்கம் அறிந்து இணங்கு / 19. Befriend the best.
20. தந்தை தாய்ப் பேண் / 20. Protect your parents.
21. நன்றி மறவேல் / 21. Don't forget gratitude.
22. பருவத்தே பயிர் செய் / 22. Husbandry has its season.
23. மண் பறித்து உண்ணேல் / 23. Don't land-grab.
24. இயல்பு அலாதன செய்யேல் / 24. Desist demeaning deeds.
25. அரவம் ஆட்டேல் / 25. Don't play with snakes.
26. இலவம் பஞ்சில் துயில் / 26. Cotton bed better for comfort.
27. வஞ்சகம் பேசேல் / 27. Don't sugar-coat words.
28. அழகு அலாதன செய்யேல் / 28. Detest the disorderly.
29. இளமையில் கல் / 29. Learn when young.
30. அரனை மறவேல் / 30. Cherish charity.
31. அனந்தல் ஆடேல் / 31. Over sleeping is obnoxious.
32. கடிவது மற / 32. Constant anger is corrosive.
33. காப்பது விரதம் / 33. Saving lives superior to fasting.
34. கிழமைப்பட வாழ் / 34. Make wealth beneficial.
35. கீழ்மை அகற்று / 35. Distance from the wicked.
36. குணமது கைவிடேல் / 36. Keep all that are useful.
37. கூடிப் பிரியேல் / 37. Don't forsake friends.
38. கெடுப்பது ஒழி / 38. Abandon animosity.
39. கேள்வி முயல் / 39. Learn from the learned.
40. கைவினை கரவேல் / 40. Don't hide knowledge.
41. கொள்ளை விரும்பேல் / 41. Don't swindle.
42. கோதாட்டு ஒழி / 42. Ban all illegal games.
43. கெளவை அகற்று / 43. Don't vilify.
44. சக்கர நெறி நில் / 44. Honor your Lands Constitution.
45. சான்றோர் இனத்து இரு / 45. Associate with the noble.
46. சித்திரம் பேசேல் / 46. Stop being paradoxical.
47. சீர்மை மறவேல் / 47. Remember to be righteous.
48. சுளிக்கச் சொல்லேல் / 48. Don't hurt others feelings.
49. சூது விரும்பேல் / 49. Don't gamble.
50. செய்வன திருந்தச் செய் / 50. Action with perfection.
51. சேரிடம் அறிந்து சேர் / 51. Seek out good friends.
52. சையெனத் திரியேல் / 52. Avoid being insulted.
53. சொற் சோர்வு படேல் / 53. Don't show fatigue in conversation.
54. சோம்பித் திரியேல் / 54. Don't be a lazybones.
55. தக்கோன் எனத் திரி / 55. Be trustworthy.
56. தானமது விரும்பு / 56. Be kind to the unfortunate.
57. திருமாலுக்கு அடிமை செய் / 57. Serve the protector.
58. தீவினை அகற்று / 58. Don't sin.
59. துன்பத்திற்கு இடம் கொடேல் / 59. Don't attract suffering.
60. தூக்கி வினை செய் / 60. Deliberate every action.
61. தெய்வம் இகழேல் / 61. Don't defame the divine.
62. தேசத்தோடு ஒட்டி வாழ் / 62. Live in unison with your countrymen.
63. தையல் சொல் கேளேல் / 63. Don't listen to the designing.
64. தொன்மை மறவேல் / 64. Don't forget your past glory.
65. தோற்பன தொடரேல் / 65. Don't compete if sure of defeat.
66. நன்மை கடைப்பிடி / 66. Adhere to the beneficial.
67. நாடு ஒப்பன செய் / 67. Do nationally agreeables.
68. நிலையில் பிரியேல் / 68. Don't depart from good standing.
69. நீர் விளையாடேல் / 69. Don't jump into a watery grave.
70. நுண்மை நுகரேல் / 70. Don't over snack.
71. நூல் பல கல் / 71. Read variety of materials.
72. நெற்பயிர் விளைவு செய் / 72. Grow your own staple.
73. நேர்பட ஒழுகு / 73. Exhibit good manners always.
74. நைவினை நணுகேல் / 74. Don't involve in destruction.
75. நொய்ய உரையேல் / 75. Don't dabble in sleaze.
76. நோய்க்கு இடம் கொடேல் / 76. Avoid unhealthy lifestyle.
77. பழிப்பன பகரேல் / 77. Speak no vulgarity.
78. பாம்பொடு பழகேல் / 78. Keep away from the vicious.
79. பிழைபடச் சொல்லேல் / 79. Watch out for self incrimination.
80. பீடு பெற நில் / 80. Follow path of honor.
81. புகழ்ந்தாரைப் போற்றி வாழ் / 81. Protect your benefactor.
82. பூமி திருத்தி உண் / 82. Cultivate the land and feed.
83. பெரியாரைத் துணைக் கொள் / 83. Seek help from the old and wise.
84. பேதைமை அகற்று / 84. Eradicate ignorance.
85. பையலோடு இணங்கேல் / 85. Don't comply with idiots.
86. பொருள்தனைப் போற்றி வாழ் / 86. Protect and enhance your wealth.
87. போர்த் தொழில் புரியேல் / 87. Don't encourage war.
88. மனம் தடுமாறேல் / 88. Don't vacillate.
89. மாற்றானுக்கு இடம் கொடேல் / 89. Don't accommodate your enemy.
90. மிகைபடச் சொல்லேல் / 90. Don't over dramatize.
91. மீதூண் விரும்பேல் / 91. Don't be a glutton.
92. முனைமுகத்து நில்லேல் / 92. Don't join an unjust fight.
93. மூர்க்கரோடு இணங்கேல் / 93. Don't agree with the stubborn.
94. மெல்லி நல்லாள் தோள்சேர் / 94. Stick with your exemplary wife.
95. மேன்மக்கள் சொல் கேள் / 95. Listen to men of quality.
96. மை விழியார் மனை அகல் / 96. Dissociate from the jealous.
97. மொழிவது அற மொழி / 97. Speak with clarity.
98. மோகத்தை முனி / 98. Hate any desire for lust.
99. வல்லமை பேசேல் / 99. Don't self praise.
100. வாது முற்கூறேல் / 100. Don't gossip or spread rumor.
101. வித்தை விரும்பு / 101. Long to learn.
102. வீடு பெற நில் / 102. Work for a peaceful life.
103. உத்தமனாய் இரு / 103. Lead exemplary life.
104. ஊருடன் கூடி வாழ் / 104. Live amicably.
105. வெட்டெனப் பேசேல் / 105. Don't be harsh with words and deeds.
106. வேண்டி வினை செயேல் / 106. Don't premeditate harm.
107. வைகறைத் துயில் எழு / 107. Be an early-riser.
108. ஒன்னாரைத் தேறேல் / 108. Never join your enemy.
109. ஓரம் சொல்லேல் / 109. Be impartial in judgement.

- ஔவையார். (Tamil Poet)

Monday 11 January 2016

ஓம் என்ற சொல்லின் மகிமை

ஓம் என்ற சொல்

அயர்லாந்து நாட்டில் நியூகிரேஞ்ச் என்னும் இடத்தில் பெருங்கற்காலக் கல்லறைகள் இருக்கின்றன. அதன் முன்னால் வைக்கப்பட்டுள பாறையில் மர்மமான மூன்று சுழிச் சின்னங்கள் இருக்கின்றன. “என்னை நினைத்து ஓம்காரத்தைச் சொல்லி உயிர் விடுபவன் பரம கதியை அடைகிறான்” — என்று கிருஷ்ண பரமாத்மா சொன்னதை உறுதிபடுத்தும் வகையில் இச்சின்னத்தைக் கல்லறையில் காண்கிறோம். இதன் காலம் கி.மு 2000 முதல் 3000 என்று பல கணிப்புகள் உள்ளன. மால்டா என்ற தீவு நாட்டிலும், அயர்லாந்தில் மேலும் பல இடங்களிலும் பிரான்ஸில் பிரிட்டனி என்னும் இடத்திலும் இதே போல மூன்று சுழிச் சின்னங்கள் உளது. ஆயினும் நியூகிரேஞ்ச் சின்னம் தெள்ளத் தெளிவானது. அதில் ஏழு வளைவுக் கோடுகள் கடிகார முறையிலும் எதிர்திசையிலும் செல்லும்படி வரைந்துள்ளனர். இதன் காரணமாக, இதில் உட்பொருள், மறை பொருள் உண்டு என்றே தொல்பொருட்த் துறை அறிஞர்கள் வியாக்கியானம் செய்கின்றனர். இதே போல கெல்டிக் ஆர்ட் எனப்படும் ஐரிஷ் கலாசாரம் பரவிய நாடுகளில் கை போன்ற மூன்ற வளைவுகள் உடைய சின்னம் — ட்ரஸ்கெலியான் எனப்படும்—சின்னம் காணப்படுகிறது. ் உலகமே உச்சரிக்கும் காலம் வெகு தூரம் இல்லை ஆரய்ச்சியலர் ஆரய்ச்சியில் திக்கு முக்காடி போணார்கள் வியர்வையில் அவர்கள் நலைந்தார்கள் என்றால் மிகை ஆகாது ஓம்_பற்றிய_விஞ்ஞான_ஆராய்ச்சி தரும்_புது_உண்மைகள் ! ஓம் தரும் நலன்கள் ஓம் என உச்சரிப்பதால் ஒரு புதிய உத்வேகம் உடலில் ஏற்படுவதையும் பிரக்ஞை தூண்டப்படுவதையும் மனத்தின் வரையறுக்கப்பட்ட தடைகள் இந்த மந்திர ஒலியால் மீறப்படுவதையும் அவர்கள் உறுதிப்படுத்துகின்றனர்! இதைக் கண்டுபிடிக்க அவர்கள் வேவ்லெட் டிரான்ஸ்பார்ம்ஸ் மற்றும் டைம் ப்ரீகுவென்ஸி அனாலிஸிஸ் (wavelet transforms, time- frequency analysis) ஆகிய உத்திகளைப் பயன்படுத்தினர். ஓம் என உச்சரிக்கும் போது ஈஈஜி அலைகளில் மாறுதல் ஏற்படுவதையும் மூளையில் ஒலியினால் மின் செயல் மாறுபாடுகள் ஏற்படுவதையும் அவர்கள் நவீன சாதனங்கள் மூலம் குறித்துக் கொள்ள முடிந்தது. ஈஈஜி சிக்னல் மூலம் ஓம் என்பதை உச்சரிப்பதற்கு முன்னரும் பின்னரும் நரம்பு மண்டலத்தில் ஏற்படும் மாறுதல்களை அவர்களால் கண்காணிக்க முடிந்தது. மந்திர ஒலிகள் மனிதர்களின் நரம்பு மண்டலத்தில் அதிசயமான நல்ல விளைவுகளை ஏற்படுத்துகின்றன என்கின்றனர் அவர்கள். அகார உகார மகாரங்கள் ஆக்கல் காத்தல் அழித்தல் என்ற முப்பெரும் தொழில்களை பிரம்மா விஷ்ணு சிவன் ஆகியோர் செய்வதை ஹிந்து மதம் கூறுவதையும் ஓமில் உள்ள அகார உகார மகாரங்கள் பிரம்மா விஷ்ணு சிவனைக் குறிப்பதையும் அனைவரும் அறிவர். ஓம் என நாம் ஒலிக்கும் போது பிரபஞ்ச ஆற்றல்கள் நேரடியாக அதிர்வுகள் மூலமாக நமது உடலில் நுழைகின்றன. வாயின் பின் புறம் உதிக்கும் ‘அ’ சுவாசிப்பு அமைப்பில் அடிவயிற்றில் உணரப்படுகிறது. வாயின் நடுவில் பிறக்கும் ’உ’ மார்புப் பகுதியில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. குவிந்த உதடுகளின் வழியே வரும் ‘ம’ தொண்டை மற்றும் தலையில் உள்ள சுவாச அமைப்பில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்த ஒவ்வொரு ஒலியும் ஒரு குறிப்பிட்ட ஆற்றலை உடலின் சிறு திசுவிலிருந்து முழு சுவாச அமைப்பு வரை ஏற்படுத்துகிரது. ஓம் முழுதாக ஒலிக்கப்பட்டவுடன் பிராண ஆற்றல் உடல் முழுவதும் பாய்கிறது. ஆராய்ச்சியில் ஈடுபட்டது ஏன் இப்படிப்பட்ட ஆராய்ச்சியில் அனில் குர்ஜருக்கு ஏன் ஈடுபாடு வந்தது என்பதற்கு அவர் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவமே காரணம்! 1999 மே மாதம் 29ம் தேதி தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்த போது திடீரென்று அவரது தாயாருக்கு பேசும் சக்தி போய்விட்டது. மூளையில் இரத்தம் கட்டி விட்டதால் நினைவையும் இழந்து அவர் பக்கவாதத்தால் பீடிக்கப்பட்டார். அடுத்த நாள் அவருக்கு கோமா நிலை ஏற்பட்டது. இப்போதோ அவருக்கு 90 சதவிகிதம் பழைய ஆற்றல் வந்து விட்டது. அவருக்கு ஸ்பீச் தெராபி எனப்படும் பேச்சாற்றல் மருத்துவம் தரப்பட்டதே இதற்குக் காரணம். அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மூளையில் ரத்தம் உறைவதற்கான காரணம் ஹைபர்டென்ஷன் மற்றும் அதிக மன அழுத்தமே எனத் தெரிவித்தனர். இப்படிப்பட்ட நிலையைப் போக்குவதற்கான சிறந்த சொல் எது என்று ஆராயப் போக அவர் ஓம் ஆராய்ச்சியில் இறங்கி ஓம் மந்திரத்தின் அற்புத ஆற்றல்களை அறிந்தார். மந்திரத்தின் ஆற்றல்களை அறிய டிஜிடல் சிக்னல் ப்ராஸஸிங் உத்திகளை அவர் பயன்படுத்தினார். ஓம் பற்றிய முந்தைய ஆராய்ச்சிகள்! 19ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் லார்ட் ராலே மனித உடல் அமைப்பில் இசையின் தாக்கம் பற்றி ஆராய்ந்தார். ஆனால் இப்போது தான் மனித உடல் மீது மந்திரத்தின் தாக்கம் எப்படி இருக்கிறது என்பது ஆராயப்படுகிறது. 1993ல் டெல்லஸ் எட் அல் 14 ஆண்களை இரண்டு குழுக்களாகப் பிரித்து ஓம் மந்திரத்தை உச்சரிக்க வைத்து அதன் விளைவுகள் பற்றிய ஆராய்ச்சியை மேற்கொண்டார். இதே ஆய்வுகளை 1996 வரை வெவ்வேறு குழுக்களை வைத்து மேற்கொண்டு ஆய்வின் முடிவில் குறிப்பிடத்தக்க அளவில் சுவாசம் மெதுவாக ஆவதோடு இதயத் துடிப்பு மிக மெதுவாக இருப்பதையும் கண்டறிந்தார். தகாஷி எடல் என்பவர் 1999ல் மேற்கொண்டஆய்வில் குறைந்த அதிர்வெண் கொண்ட சப்தம் உடலில் மார்பு மற்றும் அடிவயிற்றுப் பகுதிகளில் மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்பதை கண்டறிந்தார். இதை அடுத்து 2003ல் ஹெய்ஸ்னம் ஜினா தேவி எடல் ஓம் மந்திர உச்சரிப்பை ஆராய்ந்த போது அது இரு பகுதிகளைக் கொண்டிருப்பதைக் கண்டு ஓ என்று ஆரம்பித்து ம் என்று முடிக்கும் போது உடலில் ஏற்படும் மாறுதல்களைத் தொகுத்தார். இந்த உச்சரிப்பு மனிதனின் நரம்பு மண்டலத்தில் சாதகமான விளைவுகளை ஏற்படுத்துவது ஒவ்வொரு ஆராய்ச்சி முடிவிலும் தெளிவாக விளங்க ஆரம்பித்தது! குர்ஜரின் ஆராய்ச்சி இதையெல்லாம் முன்னோடி ஆராய்ச்சியாகக் கொண்ட அனில் குர்ஜர் 25 முதல் 40 வயது வரை உள்ள ஆண்-பெண்கள் அடங்கிய 125 பேர் கொண்ட ஒரு குழுவிடம் ஆறு வருட காலம் தனது ஆராய்ச்சியை நடத்தினார். அமைதியான ஒரு அறையில் 44.1 ஹெர்ட்ஸ் சாம்ப்ளிங் வீதத்தில் 16 பிட் அமைப்பில் ஒரு மைக்ரோபோன் மூலமாக ஓம் மந்திரத்தை ஓதச் செய்து ஆய்வுகள் தொடரப்பட்டன! 20 நிமிடங்கள் ஓம் ஒலிக்கப்பட்டவுடன் மூளையிலும் உடல் நரம்பு மண்டலத்திலும் ஏற்படும் மாறுதல்கள் துல்லியமாகக் குறிக்கப்பட்டன! இந்த ஆய்வின் முடிவில் 1)ஓம் மந்திரத்தை உச்சரிப்பதால் மன அழுத்தம் குறைகிறது; 2)எதன் மீதும் செய்யப்படும் கவனக்குவிப்பு அதிகரிக்கிறது. 3)ஏழு உச்சநிலைகளைக் கொண்ட ஓம், உடலின் ஏழு சக்கரங்களில் அதிர்வெண் மூலமாக ஒரு பெரிய குறிப்பிடத்தக்க மாறுதலை ஏற்படுத்துகிறது என்று கண்டார். மூலாதாரத்தில் 256 ஹெர்ட்ஸ¤ம் ஸ்வாதிஷ்டானத்தில் 288 ஹெர்ட்ஸ¤ம் மணிபூரத்தில் 320 ஹெர்ட்ஸ¤ம் அனாகதத்தில் (இதயம்) 341.3 ஹெர்ட்ஸ¤ம் விசுத்தாவில் (தொண்டை) 384 ஹெர்ட்ஸ¤ம் ஆஞ்ஜாவில் (மூன்றாம் கண்) 426.7 ஹெர்ட்ஸ ¤ம் சஹஸ்ராரத்தில் 480 ஹெர்ட்ஸ¤ம் அளக்கப்பட்டு உடலின் ஏழு சக்கரங்களும் புத்துணர்ச்சி அடைவதை ஆய்வு நிரூபித்தது. ஓம் மந்திரத்தை உச்சரிக்கும் போது மிகவும் நுண்ணிய உறுப்பான காதுகள் மெடுல்லா மூலமாக உடலின் திசுக்களை இணைக்கிறது. நமது உடலின் தன்மை,சமன்பாடு,நெகிழ்வுத் தன்மை, பார்வை அனைத்தும் ஒலியால் பாதிக்கப்படுவதால் ஓம் உருவாக்கும் நல்ல ஒலி நன்மையைத் தருகிறது. இது வேகஸ் நரம்பு மூலமாக உள் காது,இதயம், நுரையீரல், வயிறு, கல்லீரல், சிறுநீரகப்பை, சிறுநீரகங்கள், சிறு குடல், பெருங்குடல் ஆகிய அனைத்து உறுப்புகளையும் இணைத்து நன்மையை நல்குகிறது. இப்படி ஓமின் பெருமையை விஞ்ஞான ரீதியாக விளக்கிக் கொண்டே போகலாம். அவ்வளவு உண்மைகளை ஆராய்ந்து கண்டுபிடித்திருக்கிறார் அனில் குர்ஜர். அவருக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்துள்ளார் அவரது பிரின்ஸிபல் சித்தார்த் லடாகே. இந்த ஆராய்ச்சியில் இணைந்து பணியாற்றிய இன்னொருவர் அஜய் பி.தாக்கரே ஆவார். இவர்களின் ஆராய்ச்சி இன்னும் தொடர்கிறது. மந்திரங்களின் மகிமை பற்றிய விஞ்ஞான விளக்கப் புதுமைகள் இன்னும் அதிகமாகவரவிருக்கின்றன!

Wednesday 6 January 2016

பயனுள்ள இணையதள முகவரிகள்

பயனுள்ள இணையதளங்கள்...!

சான்றிதழ்கள் :-

1) பட்டா / சிட்டா அடங்கல்
http://taluk.tn.nic.in/edistrict_certificate/land/chitta_ta.html?lan=ta

2) அ-பதிவேடு விவரங்களை பார்வையிட
http://taluk.tn.nic.in/eservicesnew/land/areg_ta.html?lan=ta

3) வில்லங்க சான்றிதழ்
http://www.tnreginet.net/igr/webAppln/EC.asp?tams=0

4) பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்
http://www.tn.gov.in/appforms/birth.pdf

http://www.tn.gov.in/appforms/death.pdf

5) சாதி சான்றிதழ் / வாரிசு சான்றிதழ்
http://www.tn.gov.in/appforms/cert-community.pdf

6) இருப்பிட மற்றும் வருமான சான்றிதழ்
http://www.tn.gov.in/appforms/cert-income.pdf

C. E-டிக்கெட் முன் பதிவு

1) ரயில் மற்றும் பஸ் பயண சீட்டு
http://tnstc.ticketcounters.in/TNSTCOnline/

http://www.irctc.co.in/

http://www.yatra.com/

http://www.redbus.in/

2) விமான பயண சீட்டு
http://www.cleartrip.com/

http://www.makemytrip.com/

http://www.ezeego1.co.in/

D. E-Payments (Online)

1) BSNL தொலைபேசி மற்றும் Mobile Bill கட்டணம் செலுத்தும் வசதி
http://portal.bsnl.in/portal/aspxfiles/login.aspx

2) Mobile ரீ- சார்ஜ் மற்றும் டாப் அப் செய்யும் வசதி
https://www.oximall.com/

http://www.rechargeitnow.com/

http://www.itzcash.com/

3) E.B. Bill கட்டணம் செலுத்தும் வசதி
http://www.itzcash.com/

https://www.oximall.com/

http://www.rechargeitnow.com/

4) NEFT / RTGS மூலம் பிறர் ACCOUNT ‘க்கு பணம் மாற்றும் வசதி

5) E-Payment செய்து வேண்டிய பொருள் வாங்கும் வசதி
http://www.ebay.co.in/

http://shopping.indiatimes.com/

http://shopping.rediff.com/shopping/index.html

6) Share Market – பங்குச் சந்தையில் On-Line வணிகம் செய்யும் வசதி
http://www.icicidirect.com/

http://www.hdfcsec.com/

http://www.religareonline.com/

http://www.kotaksecurities.com/

http://www.sharekhan.com/

E. கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சார்ந்த சேவைகள் (Online)

1) மாணவர்கள் மேற்படிப்புக்கான வங்கிக் கடன் விவரங்கள் மற்றும் விண்ணப்பங்கள்
https://www.sbi.co.in/user.htm?action=viewsection&lang=0&id=0%2C1%2C20%2C118

http://www.indianbank.in/education.php

http://www.iob.in/vidya_jyothi.aspx

http://www.bankofindia.com/eduloans1.aspx

http://www.bankofbaroda.com/pfs/eduloans.asp

http://www.axisbank.com/personal/loans/studypower/Education-Loan.asp

http://www.hdfcbank.com/personal/loans/educational_loan/el_indian/el_indian.htm

2) பள்ளி மற்றும் கல்லூரி தேர்வு முடிவு / மதிப்பெண் பற்றிய தகவல் அறிந்துக் கொள்ளும் வசதி
http://www.tn.gov.in/dge/

http://www.tnresults.nic.in/

http://www.dge1.tn.nic.in/

http://www.dge2.tn.nic.in/

http://www.Pallikalvi.in/

http://www.results.southindia.com/

http://www.chennaionline.com/results

3) சமச்சீர் கல்வி பாட புத்தகங்களை பதிவிறக்கம் செய்ய
http://www.tn.gov.in/dge

4) இனையதளங்கள் மூலமாக 10th, 12th Std பாடங்களை கற்றுக்கொள்ளும் வசதி
http://www.classteacher.com/

http://www.lampsglow.com/

http://www.classontheweb.com/

http://www.edurite.com/

http://www.cbse.com/

5) 10th & 12th வகுப்பிற்கான அரசு தேர்வு மாதிரி கேள்வி தாள்கள் மற்றும் பாடங்களை படிக்க அல்லது பதிவிறக்கம் செய்ய
http://www.kalvisolai.com/

6) UPSC/ TNPSC/ BSRB / RRB / TRB க்கான பயிற்சி, தேர்வு மற்றும் வேலை வாய்ப்புகள் பற்றிய தகவல் அறிந்துக் கொள்ளும் வசதி
http://www.tnpsc.gov.in/

http://www.tnpsctamil.in/

http://www.upsc.gov.in/

http://upscportal.com/civilservices/

http://www.iba.org.in/

http://www.rrcb.gov.in/

http://trb.tn.nic.in/

http://www.tettnpsc.com/

7) உள் நாடு மற்றும் உலக நாடுகளில் வேலை வாய்ப்புகள் பற்றிய தகவல் அறிந்துக் கொள்ளும் வசதி, பதிவு செய்து விண்ணப்பிக்கும் வசதி
http://www.employmentnews.gov.in/

http://www.omcmanpower.com/

http://www.naukri.com/

http://www.monster.com/
.இந்திய ராணுவத்தில் வேலை வாய்ப்புகள் அறிய
http://www.ssbrectt.gov.in/

http://bsf.nic.in/en/career.html

http://indianarmy.nic.in/

9) இந்திய கப்பல் படையில் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்புகள் அறிய
http://nausena-bharti.nic.in/

10) Face to Face chat / Interview நேர்காணல் செய்யும் வசதி
http://www.skype.com/

http://www.gmail.com/

http://www.yahoochat.com/

http://www.meebo.com/

F. கணினி பயிற்சிகள் (Online)

1) அடிப்படை கணினி பயிற்சி
http://www.homeandlearn.co.uk/

http://www.intelligentedu.com/

http://www.ehow.com/about_6133736_online-basic-computer-training.html

2) சிறார்களுக்கு கணினி பயிற்சி
http://www.ehow.com/video_5846782_basic-computer-training-children.html

3) இ – விளையாட்டுக்கள்
http://www.zapak.com/

http://www.miniclip.com/

http://www.pogo.com/

http://www.freeonlinegames.com/

http://www.roundgames.com/

4) ப்ரௌசிங், இ-மெயில், சாட்டிங், வெப் கான்ஃபெரென்ஸ், தகவல் தேடுதள்
http://www.google.com/

http://www.wikipedia.com/

http://www.hotmail.com/

http://www.yahoo.com/

http://www.ebuddy.com/

http://www.skype.com/

G. பொது சேவைகள் (Online)

1) தகவல் அறியும் உரிமை சட்டம்
http://rti.gov.in/

http://www.rtiindia.org/forum/content/

http://rti.india.gov.in/

http://www.rti.org/

2) சுற்றுலா மற்றும் முக்கிய தலங்கள் பற்றிய தகவல் பெறும் வசதி
http://www.incredibleindia.org/

http://www.india-tourism.com/

http://www.theashokgroup.com/

http://www.smartindiaonline.com/

3) திருமணம் புரிய விரும்புவோர் இணையதளங்கள் மூலமாக பதிவு செய்து தங்கள் வாழ்க்கை துணையை தேடி தேர்வு செய்யும் வசதி
http://www.tamilmatrimony.com/

http://kalyanamalai.net/

http://www.bharatmatrimony.com/

http://www.shaadi.com/

4) குழந்தைகளுக்கான தமிழ் பெயர்களை அர்த்ததோடு பார்க்கவும் மற்றும் தமிழ் அகராதி, தமிழ் புத்தகங்களை பார்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய
http://www.tamilcube.com/

5) ஜாதகம் மற்றும் ராசிபலனை அறிந்துக் கொள்ள
http://www.koodal.com/

http://freehoroscopesonline.in/horoscope.php

6) இனையதளம் மூலமாக இந்தியாவில் எந்த ஒரு மொபைலுக்கும் இலவசமாக SMS அனுப்பும் வசதி
http://www.way2sms.com/

7) இனையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான VIDEO படங்களை தேடி கண்டு மகிழலாம்
http://www.youtube.com/
இனையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான தொழில் / வர்த்தகம் மற்றும் ஸ்தாபனங்கின் முகவரி / தொலைபேசி தகவல்கலை இலவசமாக தேடி தெரிந்து கொள்ளலாம்
http://www.justdial.com/

9) இனையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான மொழியில் தினசரி / வார நாளிதல்களை இலவசமாக வாசித்து செய்திகளை அறியலாம்
http://www.dinamalar.com/

http://www.dinamani.com/

http://www.dailythanthi.com/

http://www.tamilnewspaper.net/

http://www.vikatan.com/

http://www.puthiyathalaimurai.com/

http://www.nakkheeran.in/

10) இனையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை நேரலையாக இலவசமாக கண்டு மகிழலாம்
http://puthiyathalaimurai.tv/new/

http://www.bbc.co.uk/

11) SPEED POST மூலமாக நீங்கள் அனுப்பும் தபால்களை இந்திய தபால் துறையின் இனையதளம் மூலமாக தபால் சேர்ந்த விவரம் அறியலாம்
http://services.ptcmysore.gov.in/Speednettracking/Track.aspx

12) இந்திய தபால் துறையின் INTERNATIONAL SPEED POST / ELECRTONIC MONEY ORDER / REGISTERED POST / EXPRESS PARCEL / E-VPP சேவைகளை தபால் துறையின் இனையதளம் மூலமாக விவரம் அறியலாம்.
http://www.indiapost.gov.in/tracking.aspx

H. மென்பொருள் (Software) பதிவிறக்கம் செய்ய

1) இனையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான மென்பொறுளை இலவசமாக பதிவிறக்கம் செய்து உபயோகிக்கலாம்
http://www.filehippo.com/

I. வணிகம் (Economy)

1) தமிழ் நாட்டின் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் விலை விவரம் அறியலாம்
http://www.goldenchennai.com/

http://www.rates.goldenchennai.com/

http://www.bullionrates.in/p/live-bullion-rates.html

2) வெளிநாட்டின் பணமதிப்புக்கு இந்திய ரூபாயின் அன்றைய மாற்றத்தக்க மதிப்பை அறியலாம்
http://www.gocurrency.com/

http://www.xe.com/

H. அரசு சார்ந்த விண்ணப்ப படிவங்கள் (Online)

1) பாஸ்போர்ட் விண்ணப்பம்
http://www.passport.gov.in/

2) பட்டதாரிகள் அரசு வேலைவாய்ப்பிற்கு பதிவு செய்ய
http://www.tn.gov.in/services/employment.html

J. அரசு நலத் திட்ட படிவங்கள் (Online)

1) குடும்ப அட்டை
http://www.tn.gov.in/appforms/ration.pdf

2) மகளிர் சுய வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வங்கிக் கடன் பெறுவதற்கான விண்ணப்பம்
http://www.tn.gov.in/tamiltngov/appforms/socialwelfare/wses_bankloan_form.pdf

3) பெண்கள் திருமணத்திற்கு கோரப்படும் உதவித் தொகை விண்ணப்பம் மற்றும் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்
http://www.tn.gov.in/tamiltngov/appforms/socialwelfare/socialwelfareschemes.pdf

4) நலிந்தோர் குடும்ப நல நிதியுதவி பெருவதற்கான மனு
http://www.tn.gov.in/tamiltngov/appforms/pdf-drs.pdf

5) ஆதரவற்ற முதியோர் / விதவைகள் / கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் / உடல் ஊனமுற்றோர் உதவி தொகைக்கான மனு
http://www.tn.gov.in/tamiltngov/appforms/pdf-oap.pdf

http://www.tn.gov.in/schemes/swnmp/social_security_net.pdf

6) புல எல்லை அளந்து அத்து காட்டக் கோருவதற்கான விண்ணப்பம்
http://www.tn.gov.in/tamiltngov/appforms/pdf-boundary.pdf

7) திருமணப்பதிவிற்கான குறிப்பாவணம் மற்றும் விண்ணப்ப படிவம்
http://www.tnreginet.net/english/Applforms/appln3.doc

http://www.tnreginet.net/english/Applforms/compulsory_marriage/Comp_Marriage_Application_Tamil.pdf
பட்டா பதிவு மாற்றம் கோருவதற்கான விண்ணப்ப படிவம் – சாதாரண பெயர் மாற்றம் / உட்பிரிவு மாற்றம்
http://www.tn.gov.in/tamiltngov/appforms/pdf-patta-transfer.pdf

K. விவசாய சந்தை சேவைகள் (Online)

1) தேசிய அளவிலான விற்பனை நிலவரம்
http://agmarknet.nic.in/

2) பதிவு செய்து தினசரி சந்தை விலைகளை பெறும் வசதி
http://indg.in/agriculture/e2030aci-nya2039-aea3153oiTM-moo2039/

3) தோட்டப்பயிரகளின் சந்தை நிலவரம்
http://nhb.gov.in/OnlineClient/categorywiseallvarietyreport.aspx

4) முக்கிய வியாபாரிகள் பற்றிய விவரம்
http://indg.in/agriculture/major-traders-database/

5) தமிழ்நாட்டில் உள்ள விவசாய அமைப்புகள் / சங்கங்கள்
http://indg.in/agriculture/database-of-growers-federations-farmers-associations-in-tamil-nadu/

6) கொள்முதல் விலை நிலவரம்
http://www.tnsamb.gov.in/price/login.php

7) ஒழுங்குமுறை விற்பனை கூடம்
http://www.tnsamb.gov.in/mktcom.php
தினசரி சந்தை விற்பனை விலை நிலவரம்
http://59.90.246.98/pricelist/

9) வானிலை செய்திகள்
http://services.indg.in/weather-forecast/

L. தொழில் நுட்பங்கள்

1) பயிர் சாகுபடி, பாதுகாப்பு மற்றும் பயிர் பெருக்கம்
http://www.agritech.tnau.ac.in/ta/Agriculture/agri_index_ta.html

http://www.agritech.tnau.ac.in/ta/crop_protection/crop_prot_ta.html

2) விதை கொள்முதல் செய்ய இருப்பு நிலை விவரம்
http://www.tnagrisnet.tn.gov.in/website/availabilityReports.php?type=Seed

3) உயிரிய தொழில்நுட்பம்
http://www.agritech.tnau.ac.in/ta/bio_tech/biotech_ta.html

4) அறுவடை பின்சார் தொழில் நுட்பம்
http://www.agritech.tnau.ac.in/ta/post_harvest/post_harvest_ta.html

5) உயிரி எரிபொருள்
http://www.agritech.tnau.ac.in/ta/bio_fuels/bio_fuels_ta.html

M. வேளாண் செய்திகள்

1) பாரம்பரிய வேளாண்மை
http://www.agritech.tnau.ac.in/ta/itk/indi_farm_ta.html

http://www.agritech.tnau.ac.in/ta/crop_protection/crop_prot_ta.html

2) வளம்குன்றா வேளாண்மை
http://www.agritech.tnau.ac.in/ta/sustainable_agri/susagri_ta.html

3) பண்ணை சார் தொழில்கள்
http://www.agritech.tnau.ac.in/ta/farm_enterprises/farm_enter_ta.html

4) ஊட்டச்சத்து
http://www.agritech.tnau.ac.in/ta/nutrition/nutrition_ta.html

5) உழவர்களின் கண்டுபிடிப்பு
http://www.agritech.tnau.ac.in/ta/farm_innovations/farm_innovations.html

N. திட்டம் மற்றும் சேவைகள்

1) ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் திட்டங்கள் & சேவைகள்
http://www.tnrd.gov.in/schemes_states.html

2) வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சிக்கான திட்டங்கள் & சேவைகள்
http://www.agritech.tnau.ac.in/ta/govt_schemes_services/govt_serv_schemes_ta.html

3) வட்டார வளர்ச்சி
http://www.agritech.tnau.ac.in/ta/dev_blocks/indextnmap_ta.html

4) வங்கி சேவை & கடனுதவி
http://www.agritech.tnau.ac.in/ta/banking/credit_bank_ta.htm

5) பயிர் காப்பீடு
http://www.agritech.tnau.ac.in/ta/crop_insurance/crop_ins_ta.html

6) Krishi Vigyan Kendra (KVK) | Agricultural Technology Management Agency (ATMA)
http://www.agritech.tnau.ac.in/ta/kvk/kvk_ta.html

http://www.agritech.tnau.ac.in/ta/atma/atma_ta.html

7) NGOs & SHGs
http://www.agritech.tnau.ac.in/ta/ngo_shg/ngo_shg_ta.html
அக்ரி கிளினிக்
http://www.agriclinics.net/

9) கிசான் அழைப்பு மையம்
http://www.agritech.tnau.ac.in/ta/kisan/kisan_ta.html

10) பல்லாண்டு மேம்பாட்டு குறிக்கோள்
http://www.agritech.tnau.ac.in/ta/mdg/mdg_ta.html

11) கேள்வி பதில்
http://www.agritech.tnau.ac.in/ta/faq_ta.html

12) பல்கலைக்கழக வெளியீடுகள்
http://www.agritech.tnau.ac.in/ta/tnau_publications/tnau_publish_ta.html

O. ஈ – வேளாண்மை செய்தி மற்றும் சேவைகள்

1) தோட்டக்கலை
http://www.agritech.tnau.ac.in/ta/horticulture/horti_index_ta.html

2) வேளாண் பொறியியல்
http://www.agritech.tnau.ac.in/ta/agrl_engg/agriengg_index_ta.html

3) விதை சான்றிதழ்
http://www.agritech.tnau.ac.in/ta/seed_certification/seedcertification_index_ta.html

4) அங்கக சான்றிதழ்
http://www.agritech.tnau.ac.in/ta/org_farm/orgfarm_index_ta.html

5) பட்டுபுழு வளர்பு
http://www.agritech.tnau.ac.in/ta/sericulture/seri_index_ta.html

6) வனவியல்
http://www.agritech.tnau.ac.in/ta/forestry/forestry_tamil_index.html

7) மீன்வளம் மற்றும் கால்நடை
http://www.agritech.tnau.ac.in/ta/fisheries/fish_index_ta.html
தினசரி வானிலை, மழைப்பொழிவு மற்றும் நீர்த்தேக்க நிலைகள்
http://services.indg.in/weather-forecast/

9) விதை மற்றும் உரம் தயாரிப்பாளர் விபரம்
http://www.tnsamb.gov.in/seedcomp.html

http://www.tnsamb.gov.in/fertilizers.html

10) உரங்களின் விலை விபரம்
http://www.tnagrisnet.tn.gov.in/website/FertilizerPrice.php

P. போக்குவரத்து துறை

1) ஓட்டுனர் பழகுனர் உரிமம் மனு முன்பதிவு
http://www.tn.gov.in/appforms/form2.pdf

2) புகார்/கோரிக்கைப் பதிவு
http://transport.tn.nic.in/transport/registerGrievanceLoad.do

3) வாகன வரி விகிதங்கள்
http://www.tn.gov.in/sta/taxtables.html

4) புகார்/கோரிக்கை நிலவரம்
http://transport.tn.nic.in/transport/grievance_statusLoad.do

5) ஓட்டுனர் உரிமம் சேவை முன்பதிவு
http://tnsta.gov.in/transport/transportTamMain.do

6) தொடக்க வாகன பதிவு எண்
http://transport.tn.nic.in/transport/rtoStartNoListAct.do