Saturday 11 May 2019

வாய்ப்புண் சரியாக ஹோமியோபதி மருந்து

வாய்ப்புண் சரியாக ஹோமியோபதி மருந்து
.BORAX - 30 Ch தினசரி மூன்று வேளை சாப்பாட்டுக்கு முன் 5 மாத்திரைகள் சாப்பிடவும் மேலும் MERC SOL - 30 ch வாரம் ஒரு முறை இரவில் சாப்பாட்டுக்கு முன் 5 மாத்திரைகள் சாப்பிடவும்
சரியாகும் வரை தொடர்ந்து சாப்பிடவும்.
நன்றி : bns
Image result for வாய்ப்புண்

ஒரு மாதத்தில் இரண்டு முறை மாதவிலக்கு(மாதவிடாய்) ஆகும் பெண்களுக்கு ஹோமியோ மருந்து

ஒரு மாதத்தில் இரண்டு முறை மாதவிலக்கு(மாதவிடாய்) ஆகும் பெண்களுக்கு ஹோமியோ மருந்து
1.BORAX - 30 Ch ஹோமியோ மருந்து தினசரி மூன்று வேளை சாப்பாட்டுக்கு முன் 5 மாத்திரை அல்லது 5 சொட்டுக்கள் வீதம் 10 நாட்கள் சாப்பிடவும்
பிறகு 24 மணி நேரம் கழித்து
2.CALCAREA CARBONICA- 200 Ch 5 மாத்திரைகள் அல்லது 5 சொட்டுக்கள் , ஒரு டோஸ் மட்டும் சாப்பிடவும் போதும் சரியாகிவிடும்.
நன்றி : bns

முன் கழுத்து கழலை நோய் தைராய்டு அல்லாமல் வெறும் கொழுப்பு கட்டிக்கு ஹோமியோ மருந்து

முன் கழுத்து கழலை நோய் . தைராய்டு அல்ல . வெறும் கொழுப்பு கட்டிக்கு ஹோமியோ மருந்து
1.IODIUM-30ch/ 5 மாத்திரைகள் வீதம் உணவிற்கு முன்பு ஒரு வாரம் சாப்பிடவும் . பிறகு 48 மணி நேரம் கழித்து
2.BROMIUM-6ch/ 5 மாத்திரைகள் வீதம் உணவிற்கு முன்பு ஒரு வாரம் சாப்பிடவும் . பிறகு 48 மணி நேரம் கழித்து
3.Fucus Vesiculosus-6ch/ 5 மாத்திரைகள் வீதம் உணவிற்கு முன்பு ஒரு வாரம் சாப்பிடவும் . பிறகு 48 மணி நேரம் கழித்து இதே முறையில் மாற்றி மாற்றி அனைத்து மருந்துகளும் சரியாகும்வரை சாப்பிடவும் .
நன்றி ; bns
Image may contain: one or more people

50 அல்லது 60 நாட்களுக்கு பிறகு ஆகும் மாதவிடாய் கோளாறு நீங்க ஹோமியோ மருந்து

50 அல்லது 60 நாட்களுக்கு பிறகு ஆகும் மாதவிடாய் கோளாறுகளுக்கு ஹோமியோ மருந்து
1.Sulphur-200 ch /5 சொட்டு ஓரு ஸ்பூன் தண்ணீரில் கலந்து காலையில் பருக வேண்டும். பிறகு 3 மணி நேரம் கழித்து
2.Pulsatilla-200 ch /5 சொட்டு ஓரு ஸ்பூன் தண்ணீரில்
கலந்து பருக வேண்டும். பிறகு 3 மணி நேரம் கழித்து
3. Gossypium-Q MT/ 25 சொட்டுக்கள் ஓரு ஸ்பூன் தண்ணீரில் கலந்து பருக வேண்டும்.
இப்படிஒன்று இரண்டு நாட்கள் பருக மாதவிடாய் சரியாக வரக்கூடும் . அடுத்த மாதவிடாய் நாட்கள் அதிகரிக்கும் போது மறுமுறை இதே போல் மருந்து சாப்பிட உடல் இயல்பு நிலைக்கு சீரான பக்குவத்திற்கு வந்துவிடும் ,
நன்றி ; bns

உடலில் இரத்த தேக்கத்தால் காலில் இப்படி வருபவர்களுக்கு ஹோமியோ மருந்து.

உடலில் இரத்த தேக்கத்தால் காலில் இப்படி வருபவர்களுக்கு ஹோமியோ மருந்து.
டிஜிடாலிஸ் 30 Ch/தினசரி மூன்று வேளை 5 மாத்திரைகள் அல்லது 5 சொட்டுக்கள் சாப்பாட்டுக்கு முன் 10 நாட்களுக்கு சாப்பிடவும்.
சிலர் காலை தொங்க விட்டால் பாதங்கள் வீங்கிவிடும் அதனால் பலர் காலை ஸ்டுல்மேல் வைத்துக் கொள்வார்கள் ,அதிக நேரம் அதிக தூரம் அமர்ந்து பயணம் செய்யும் சிலருக்கும் பாதங்களில் இரத்த தேக்கம்
ஏற்படும் அவர்களும் இந்த மருந்தை சாப்பிட்டு குணம் காணலாம்.
நன்றி ; bns
Image may contain: one or more people

Thursday 2 May 2019

பீஜமந்திரம் என்றால் என்ன

பீஜமந்திரம்......
மிக முக்கியமான பதிவு இப்பதிவாகும்.
பீஜ மந்திரங்களை உட்சரிப்பதனால் பயன் என்ன?? என்பதை விளக்குவதே இப்பதிவு.
நாம் சாதாரணமாக வார்த்தைகளை பயன்படுத்தும் போதும் பேசும் போதும் "ம்" தான் "ங்" ஆக மாறுகின்றது. அதாவது "ஓம்"காரம் என்பது "ஓங்"காரமாகவும், "ரீம்"காரம் என்பது "ரீங்"காரமாகவும் மாறுகின்றது. "காரம்" என்பது வரிசை என பொருள் கொள்ள வேண்டும். ஆனால் குழந்தைகளை பொறுத்தவரையில் முதலில் பேச பழகும்போது "ங்" சேர்ந்த வார்த்தைகளை தான் அதிகம் பயன்படுத்துகின்றன. அதாவது அங்கு, வங்கு, வங், யங் போன்ற பீஜ வார்த்தைகளை பயன்படுத்துகின்றன. இதற்குபின் தான் "ம்" சேர்ந்த பீஜ வார்த்தைகளை பயன்படுத்துகின்றன. அதாவது அம்மா, ஓம், ஆமா போன்ற வார்த்தைகளை உச்சரிக்கின்றன.
மேலும் "ங்" சேர்ந்த பீஜங்களை உச்சரிக்கும் குழந்தைகள் பெரும்பாலும் இமையை அதிகமாக அசைக்காது கூர்ந்து எதையும் கவனிக்கும். இது குழந்தைகளுக்கு மட்டுமல்ல அனைவருக்கும் இது பொருந்தும்.
அடுத்ததாக "ம்" சேர்ந்த பீஜங்களை ஊமை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்துகின்றனர். உதாரணமாக இம், உம், அம், ஓம், ஈம் போன்ற வார்த்தைகள். இதனால் வாய் பேசாதவர்களுக்கு இவ்வார்த்தைகள் இயற்கையாகவே வருவதால் அவர்களுக்கு ஓர் தனித்துவமான உள்ளே உற்றுநோக்கல் எளிதாக கிடைக்கின்றது. எதிலும் வெற்றியடைய வேண்டும் என்ற தன்னம்பிக்கை வெறி அதிகமாகிறது. இதுவும் இந்த பலனும் அனைவருக்கும் பொருந்தும். ஆக "ங்" சேர்ந்த பீஜங்களை உச்சரித்து பழகினால் வெளியில் உற்று நோக்கலும், நாதமும், இமை அசைக்கா தன்மையும் எளிதாக கைகூடும். மேலும் இமை அசைவது குறைய குறைய மன சஞ்சலம் குறைந்து மன நிம்மதியும் எதிலும் எளிதாக முடிவெடுக்கும் திறனும் கிடைக்கும்.
சித்தர்கள் முதல் அனைவரும் போற்றும் நன் மந்திரங்களுள் "அங்" என்ற பீஜ மந்திரமும் ஒன்று. இம்மந்திரத்தை ஒருவர் தொடர்ந்து மனதினால் உட்சரித்து கொண்டிருந்தாலே போதும், அவர் எல்லா விதத்திலும் சகல நன்மைகளையும் அடைவது சத்தியம்.
1. இந்த "அங்" என்ற பீஜமந்திரத்தை தொடர்ந்து மனதினுள் உட்சரித்துகொண்டிருந்தால் "கங்" என்று மாறி ஒலிக்கும். கங் என்ற பீஜம் கணபதிக்கு ஊறிய மந்திரமாகும். எனவே இதை மந்திரங்களிலே முதன்மையானது என்பர்.
2. "அங்" என்று உட்சரிக்க தொடங்கிய நொடியே வாசி(சுவாசம்) ஊர்த்துவ கதியாக அண்ணாக்கிற்கு மேலே செல்வதை கண் கூடாக உணரலாம். வாசியோகம் செய்வதால் என்ன பலன் உண்டோ அதே பலன் இதற்கும் உண்டு.
3. இம்மந்திரத்தை தொடர்ந்து ஐந்து நிமிடத்திற்கு மேல் உட்சரிக்கும் போதே சுவாசம் இயற்கையாகவே குறைய தொடங்கும். தொடர்ந்து உட்சரிக்கும் போது சுவாசம் இயற்கையாகவே நின்றுவிடும். வாசி, கிரியா யோகத்தின் முடிவு நிலை என்பது சுவாசமற்ற நிலையாகும். அது இம்மந்திரத்தால் இயற்கையாகவே நடந்துவிடுகின்றது. மேலும் இம்மந்திரம் எண்ணெற்ற பயன்களை தன்னுள் அடக்கி வைத்துள்ளது.
அங்" என்பது வாலைக்குரிய பீஜமந்திரமாகும். அதாவது "அம்" என்ற நாதம் ஒளிக்குரியது ஆகும். ஒருவர் தொடர்ந்து இம்மந்திரத்தை மனதினுள் உட்சரிக்கும் போது ஒளியின் நாத அதிர்வுகளை முதலில் கேட்க தொடங்கி பின் பார்க்கவும் தொடங்குகின்றான். ஒளியை பற்றிய எல்லா இரகசியங்களும் அவனுக்குள் ஒலிக்கும் நாதத்தின் மூலமாக கற்றுதரப்படுகின்றது. இது விஞ்ஞான முறையில் கூறுவதாகும். மெஞ்ஞானமுறையில் கூற வேண்டும் என்றால் வாலையின் அருளை பெற்றவன் என்பார்கள். மேலும் அவன் "அங்" என்று தொடர்ந்து உட்சரித்துக் கொண்டே இருக்கும் போது, அது "கங்" என்று மாறி ஒலிக்க தொடங்கும். வேண்டுமென்றால் நீங்கள் அங்அங்அங் என்று வேகமாக உட்சரித்து பாருங்கள் அது "கங்" என்று மாறி கேட்கும். முன்பே கண்டதுபோல் "கங்" என்பது கணபதிக்குரிய பீஜமந்திரமாகும். மேலும் "கம்" என்பது ஆகாயத்திற்கு உரிய நாதமாகும். எனவே அந்நாதத்தின் மூலமாக ஆகாயத்தின் இரகசியங்களை கற்றுகொள்கின்றான்.
மேலும் ஆகாயத்தில் எண்ணென்ன உள்ளனவோ, அவைகளின் நாத ஒலிகளும் இவனுள் கேட்க தொடங்கி அவைகளின் இரகசியங்களையும் இவனுக்கு அந்தந்த நாதங்களின் மூலமாக கற்றுதரப்படுகின்றது. பொதுவாக ஒவ்வொரு விதமான மந்திரங்களுக்கும் ஒவ்வொரு விதமான பலன்கள் உண்டு என்பார்கள். உண்மையில் ஒருவர் விடாமுயற்சியுடன் ஒரே மந்திரத்தை உட்சரித்து கொண்டே இருந்தால் போதும், மேலே பார்த்ததுபோல் அம்மந்திரமே மாறிமாறி ஒலித்து அவனுக்கு இல்லறத்தில் சகல நன்மைகளையும் பெறசெய்து, ஆன்மீகத்தின் சகல இரகசியங்களையும் கற்றுதந்துவிடும்.
ஒரே மந்திரத்தை தொடர்ந்து உட்சரிப்பது என்பது ஒரே இடத்தில் மண்ணை தோண்டுவதற்கு சமம். என்றோ ஒரு நாள் தண்ணீர் கிடைத்து தான் ஆக வேண்டும். ஒருவன் ஆன்மீகத்தில் பின்தங்குவதற்கு காரணம் பல இடங்களில் தோண்டுவதால் தான். அதுவும் வெளியே தோண்டுவதால் தான். அது அவரவர் எண்ணங்களையும் சூழ்நிலையையும் பொறுத்தது. ஆனால் கண்டிப்பாக பலன் உண்டு.
ஆன்மீகத்தில் ஒருவர் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டிய கட்டுபாடுகளையும், விடை கிடைக்காத எதார்த்தமான கேள்விகளுக்கு விடைகளையும் விளக்குவதே இப்பதிவு.
1. எந்த ஒரு சூழ்நிலையிலும் உங்களையும் உங்கள் ஆன்மீக முறைகளையும் வெளிக்காட்ட கூடாது. பொதுவாக ஒருவர் தான் செய்யும் யோகமுறைகளையோ மந்திர ஜபங்களையோ வெளிப்படுத்தும் போதே அவற்றின் பலன்கள் குறைந்து விடுகின்றன.அவர் அதை வெளிபடுத்த காரணமே தன்னை பற்றி பெருமைபட்டு கொள்ளவோ அல்லது தனது முறைகளை பெருமைபடுத்த முற்படுவதே ஆகும். இதில் அவரை பற்றி வெளிபடுத்தும் போது அவரின் ஆணவம் அதிகமாகின்றது. அவரின் முறைகளை பற்றி வெளிபடுத்தும் போது தேவையில்லாத கேலி பேச்சுகளுக்கு ஆளாகின்றார். ஆன்மீகத்தில் உயர்வுநிலை என்பது ஒன்றும் இல்லாமல் இருப்பதுதான். அதாவது மனதில் எந்த ஒரு எண்ணமோ சலனமோ இல்லாமல் இருப்பது. மிகவும் சாதாரண மனிதன் எவனோ!! மிகவும் அசாதாரண மனிதனும் அவனே. அதாவது அவனால் மட்டும்தான் அசாதாரண செயல்களை செய்யமுடியும். எங்கே எளிமையும், பணிவும் உள்ளதோ!! அங்கே ஆணவமும் ஆடம்பரமும் இருக்காது!! மாறாக அவனிருப்பான்!! ஆன்மீகத்தை பொறுத்தவரை மறைந்து வாழ்பவனுக்கு, அதாவது தன்னை மறைத்து வாழ்பவனுக்கே அனைத்தும் எளிது. அவன் தன்னை எந்த சூழ்நிலையிலும் வெளிபடுத்த மாட்டான். எளிமை என்ற வாழ்க்கையே அனைத்திற்கும் ஆதாரம்.
2. பலவருடங்கள் பல யோகங்கள் செய்தும் எந்தவித முன்னேற்றமும் தெரியவில்லை!! இதற்கு காரணம் என்ன??
ஒருவன் ஒரு முறையை கடைபிடிக்க தொடங்கும் போதே அது அதன் வேலையை தொடங்கிவிடுகின்றது. ஆனால் அது முதலில் வேலை செய்வது அவன் கர்மவினையில் ஆகும். அதாவது முதலில் வாங்கிய கடனை அடைத்த பிறகுதான் சேமிக்க முடியும். இதை புரிந்து கொள்ளாமல் ஆன்மீகத்தில் முன்னேற நிறைய பொருமை அவசியம் என்று கதைகட்டி விட்டார்கள்.
3. ஆன்மீகத்தில் காலடி எடுத்து வைக்கும் பலர் ஏன் கஷ்டபடுகின்றனர்??
இதற்கு காரணம் அவர்களே!! அதாவது நுழைந்தால் மட்டும் போதுமா?? அவர்கள் மனதில் உள்ள தீய எண்ணங்களை அகற்ற வேண்டாமா!! முன்பே சொன்னது போல் ஒரு பயிற்சியை கடைபிடிக்கும் போது அது வேலை செய்வது அவன் கர்மாவில் ஆகும். இவன் அந்த சமயத்தில் அடுத்தவர்களுக்கு தன் எண்ணங்களால் தீங்கு நினைக்கும்போது அது அவனுக்கே திருப்பப்படுகின்றது. அதுவும் அவனுக்கு அதுபோன்ற எண்ணங்களை வரவிடாமல் தடுப்பதற்கு ஆகும். நல்ல எண்ணம், சொல், செயல் உருவாக்கி கொண்டால் போதும். கஷ்டம் ஏற்பட வாய்ப்பு இல்லை.
4. ஆன்மீக அனுபவங்களை பகிர வேண்டாம்!! ஒருநிலைக்கு மேல் செல்லும்போது பலவிதமான அனுபவங்களும் இரகசியங்களும் கிடைக்கும். இதை வெளிபடுத்துவது என்பது தன்னை பற்றி பெருமைபட்டு கொள்வதற்காகவே, மேலும் பக்குவநிலைக்கு தகுந்தவாறே இரகசியங்கள் கற்பிக்கபடுகின்றன. இதை வெளிபடுத்தும் போது அடுத்து வரவிருக்கும் பாடங்கள் தடைசெய்ய படுகின்றன.
5. அடுத்தவர் முறைகளில் தலையிட வேண்டாம்!! ஆன்மீகத்தில் எல்லோருக்கும் ஒரே விதமான பயிற்சி கிடையாது. எனவே மற்றவர்கள் பாதைகளில் நீங்கள் தலையிட வேண்டிய அவசியம் இல்லை. அப்படி அடுத்தவர் முறை தவறு என்று நீங்கள் உணர்ந்தால், அதை சொல்வதற்கு நீங்கள் ஆன்மீகத்தில் கரைகண்டவராக கரைகடந்தவராக இருக்க வேண்டும். இது மனதில் பதிந்தால் யாருடைய பாதையிலும் தலையிட தோன்றாது.
எவனொருவன் தன்னை தாழ்த்தி கொள்கின்றானோ, அவனே ஆன்மீகத்தின் உச்சநிலையை எளிதாக அடையமுடியும். இறைவன் தான் குறிகோள் என்றால் நமது கடமைகளிலும் இறைவனின் மீது மட்டும் மனம் செலுத்த வேண்டும். அதுதான் ஆன்மீகத்திற்கு உண்டான எளிமையான பாதை. உங்களை நீங்கள் வெளிகாட்டி கொள்ளாத வரை எந்த ஒரு எதிர்பார்ப்பிற்குள்ளும் சிக்க வாய்ப்பே இல்லை. எளிமை, பணிவு, அன்பு, தன்னை தாழ்த்தி கொள்ளுதல், மறைந்து வாழ்வது(தன்னை(நான்) மறைத்து வாழ்வது) போன்ற நல்ல குணங்களை வளர்த்து கொள்பவர்களுக்கு ஆன்மீகமும் வாழ்க்கையும் எளிமையானது!!! இனிமையானது!!
நன்றி குருமுனி.

மந்திரத்திற்கு காக்கும் சக்தி உண்டா?

மந்திரத்திற்கு காக்கும் சக்தி உண்டா?
எப்படி உண்டு?
என்ற சந்தேகம் வருவது இயற்கை அதை போக்க வேண்டுமானால் சற்று நாம் கடினமான விஷயத்தை பற்றி சிந்திக்கும் ஆர்வத்தை நமக்குள் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். அப்போது தான் உண்மைகளை உண்மைகளாக உணர முடியும்.
நம்ம உடம்புக்குள்ளே உட்கார்ந்து இருக்கிறதே உயிர், அந்த உயிர் திடப்பொருளா? திரவபொருளா? வாயு பொருளா? எதனால் ஆனது உயிர் மேலே சொன்ன எதுவாளையும் உயிர் ஆகவில்லை, எதுவாகவும் உயிர் இல்லை, உயிர் என்பது நாதம் அதாவது சத்தம் என்று சித்தர்கள் ஆராய்ந்து அனுபவித்து கூறுகிறார்கள்.
சத்தத்திற்கு பொருட்களை அதிர வைக்க கூடிய சக்தி உண்டு, இயங்க வைக்கும் ஆற்றலும் உண்டு, நமது உடம்பிற்குள் உயிர் என்ற நாதம் அதாவது சத்தம் மூலாதாரத்தில் உடலில் நடுப்பகுதியில் அமர்ந்து கொண்டு உடல் முழுவதும் அதிர்வலைகளாக துடிப்புகளாக பரவி இருக்கிறது. இதனால் தான் நமது உடம்பு சூடாக இருக்கிறது.
உடம்பில் இருக்கின்ற இந்த நாதம் உடம்போடு மட்டும் நின்றுவிடுவது இல்லை. பிரபஞ்சம் முழுவதும் பரவி இருக்கிறது. உயிர் சக்தியானது அண்டம் முழுவதும் பரவி இருப்பதனால் தான் அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் உள்ளது என்று சித்தர் வாக்கியம் கூறுகிறது.
பிரபஞ்சம் முழுவதும் நாத அலை பரவி உள்ளது ஐம்பூதங்களும் நாத அலைகளாலேயே இயங்குகிறது. இந்த நாத அலைகளை பீஜ மந்திரங்கள் என்கிறோம். ஒவ்வொரு பூதத்திற்கும் தனித்தனியான பீஜங்கள் உண்டு.
உதாரணமாக ஹம் என்ற பீஜம் ஆகாயத்திற்கு சொந்தமானது, யம் என்ற பீஜம் காற்றுக்கு உரியது, ரம் என்பது நெருப்புக்கு சொந்தமானது, வம் என்பது நீருக்கு சொந்தமானது, லம் என்பது நிலத்திற்கு உரிய பீஜமாகும்.
பரிசோதனை செய்வதற்காக இந்த பீஜ மந்திரங்களில் ஏதாவது ஒன்றை சிறிது காலத்திற்கு ஜபம் செய்து பாருங்கள். உங்களது உடம்பில் அந்த பூதத்தின் சக்தி அதிகரிப்பதை நீங்கள் கண்கூடாக காணலாம். அப்போது தெரியும் உங்களுக்கு அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் உள்ளது என்ற வாசகத்தின் உண்மை பொருள்.
இந்த பீஜ எழுத்துகளுக்கு தெய்வத்தை ஈர்க்க கூடிய ஆற்றல் உள்ளதா? என்று நினைப்பவர்கள் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும், தெய்வ சக்தி இறைவனின் அருள் என்பவைகள் மனிதனை அடையவேண்டுமென்றால் இயற்கை பொருட்களையே ஊடகமாக பயன்படுத்த வேண்டும், அதற்கு இந்த மந்திர பீஜங்களே சரியான ஊடகங்களாகும்.
ஹ்ரீம் என்ற பீஜ மந்திரத்தில் உள்ள ஹ என்ற எழுத்தும், ர என்ற எழுத்தும், ஈ என்ற எழுத்தும், ம என்ற எழுத்தும் தனித்தனியாக உச்சரிக்கப்படும் போது ஆகாயத்திற்கான பீஜமும் நெருப்பிற்கான பீஜமும் வருகிறது. இந்த இரண்டு பீஜங்களையும் ஒருங்கிணைத்தால் அர்த்தநாதீஸ்வர தெய்வத்தின் நாத விந்து கிடைக்கிறது. அதாவது ஹ்ரீம் என்ற மூல மந்திரம் அர்த்தநாதீஸ்வரரை சூட்சகமாக அடையாளப் படுதுவதால் அந்த தெய்வத்தின் அருளை சுலபமாக மனிதன் பெற்றுவிட முடிகிறது.
எப்படி ஒவ்வொரு இயற்கை பூதத்திற்கும் தனித்தனியான பீஜ மந்திரங்கள் உண்டோ? அதே போன்றே தெய்வங்களுக்கான பீஜ மந்திரங்களும் இருக்கிறது, ''ஆச்சரியமான ஒரு விஷயம்'' ஒவ்வொரு மனிதனுக்கும் அவனுகென்றே பீஜ மந்திரங்கள் உண்டு, யாருக்கு என்ன மந்திரம் பொருந்தும் என்பதை வேதங்கள் குறிப்பிடும் மனசாஸ்திர அடிப்படையில் பிரித்து விடலாம்.
குறிப்பாக ஸ்ரீம் என்ற மூல மந்திரம் எனக்கு சொந்தமானது என்று வைத்துகொள்வோம், இந்த மந்திரத்தை நான் மீண்டும் மீண்டும் சொல்ல சொல்ல எனக்குள் மறைந்து கிடக்கின்ற பிரபஞ்ச ஆற்றல், ஆகாசத்தில் பரவியுள்ள பிரபஞ்ச ஆற்றலோடு தொடர்பு கொண்டு இறை சக்திக்கு என்னை மிகவும் நெருங்கியவனாக மாற்றி விடுகிறது. இறை சக்தியானது என் அருகில் இருக்கும் போது எவையெல்லாம் என் வாழ்க்கைக்கு தேவையோ அவையெல்லாவற்றையும் நான் சுலபமாக பெற்றுவிட முடியும் அல்லவா.
அடுத்த பதிவில் பீஜ மந்திரத்தை இன்னும் விளக்கமாக பார்க்கலாம்.


நன்றி குருமுனி.