Sunday 25 April 2021

சிவஞானபோதம் மூலமும் உறையும்

சிவஞானபோதம்



சிறப்புப் பாயிரம்
மங்கல வாழ்த்து
அவையடக்கம்
 

பொதுவதிகாரம் : பிரமாணவியல் (Piramaanaviyal)

  • முதல் சூத்திரம் (The First Sutra)
  • இரண்டாம் சூத்திரம் (The Second Sutra)
  • மூன்றாம் சூத்திரம் (The Third Sutra)

பொதுவதிகாரம் : இலக்கணவியல்(Ilakkanaviyal)

  • நாங்காம் சூத்திரம் (The Fourth Sutra)
  • ஐந்தாம் சூத்திரம் (The Fifth Sutra)
  • ஆறாம் சூத்திரம் (The Sixth Sutra)

உண்மை அதிகாரம் : சாதனவியல் (Saathanaviyal)

  • ஏழாம் சூத்திரம் (The Seventh Sutra)
  • எட்டாம் சூத்திரம் (The Eighth Sutra)
  • ஒன்பதாம் சூத்திரம் (The Nineth Sutra)

உண்மை அதிகாரம் : பயனியல் (Payaniyal)

  • பத்தாம் சூத்திரம் (The tenth Sutra)
  • பதினொறாம் சூத்திரம் (The eleventh Sutra)
  • பனிரண்டாம் சூத்திரம் (The twelfth Sutra)

திருவெண்ணெய்

நல்லூர் மெய்கண்ட தேவர் அருளிய

சிவஞானபோதம்

சிறப்புப் பாயிரம்

நேரிசை ஆசிரியப்பா

 

மலர்தலை உலகின் மாயிருள் துமியப்
பலர்புகழ் ஞாயிறு படரின் அல்லதைக்
காண்டல் செல்லாக் கண்போல் ஈண்டிய
பெரும்பெயர்க் கடவுளிற் கண்டுகண் இருள்தீர்ந்து
அருந்துயர்க் குரம்பையின் ஆன்மா நாடி
மயர்வுஅற நந்தி முனிகணத்து அளித்த
உயர்சிவ ஞான போதம் உரைத்தோன்
பெண்ணைப் புனல்சூழ் வெண்ணெய்ச் சுவேதவனன்
பொய்கண்டு அகன்ற மெய்கண்ட தேவன்
பவநனி வன்பகை கடந்த
தவரடி புனைந்த தலைமை யோனே.

 

நூல்

மங்கல வாழ்த்து

 

கல்லால் நிழன்மலை
வில்லார் அருளிய
பொல்லார் இணைமலர்
நல்லார் புனைவரே

 

அவையடக்கம்

 

தம்மை உணர்ந்து தமையுடைய தன்னுணர்வார்
எம்மை உடைமை எமை இகழார் - தம்மை
உணரார் உணரார் உடங்குஇயைந்து தம்மில்
புணராமை கேளாம் புறன்

 

பொதுவதிகாரம் : பிரமாணவியல்

 

முதல் சூத்திரம்

அவன் அவள் அதுவெனும் அவை மூவினைமையின்
தோற்றிய திதியே ஒடுங்கி மலத்து உளதாம்
அந்தம் ஆதி என்மனார் புலவர்

என்பது சூத்திரம்.

 

வார்த்திகப் பொழிப்பு

கருத்துரை : என் நுதலிற்றோ எனின், சங்கார காரணனாய் உள்ள முதலையே முதலாக உடைத்து இவ்வுலகம் என்பது உணர்த்துதல் நுதலிற்று.

 

உரைவகை : இதன் பொழிப்பு உரைத்துக் கொள்க.

 

1. முதல் அதிகரணம்

மேற்கோள் : ஈண்டு, உளதாய் ஒருவன் ஒருத்தி ஒன்று என்று சுட்டப்பட்ட பிரபஞ்சம் உற்பத்தி திதி நாசம் உடைத்துஎன்றது.

 

ஏது : தோற்றமும் ஈறும் உள்ளதின்பாலே கிடத்தலின்

 

உதாரணம் :

பூதாதி ஈறும் முதலும் துணையாக
பேதாய்! திதி ஆகும் பெற்றிமையின் - ஓதாரோ
ஒன்று ஒன்றின் தோன்றி உளதாய் இறக்கண்டும்
அன்றுஎன்றும் உண்டு என்ன ஆய்ந்து 1

 

2. இரண்டாம் அதிகரணம்

மேற்கோள் : இனி, ஒடுங்கின சங்காரத்தின் அல்லது உற்பத்தி இல்லை என்றது

 

ஏது : இல்லதற்குத் தோற்றம் இன்மையின், உள்ளதற்குச் செய்வோர் இன்றிச் செய்வினை இன்மையின்.

 

உதாரணம் :

இலயித்த தன்னில் இலயித்ததாம் மலத்தால்
இலயித்தவாறு உளதா வேண்டும் - இலயித்தது
அத்திதியில் என்னின் அழியாது அவையழிவது
அத்திதியும் ஆதியுமாம் அங்கு 2

 

வித்துண்டாம் மூலம் முளைத்தவா தாரகமாம்
அத்தன்தாள் நிற்றல் அவர்வினையால் - வித்தகமாம்
வேட்டுவனாம் அப்புழுபோல் வேண்டுருவைத் தான் கொடுத்துக்
கூட்டானே மண்போல் குளிர்ந்து 3

 

நோக்காது நோக்கி நொடித்து அன்றே காலத்தில்
தாக்காது நின்று உளத்திற் கண்டு இறைவன் - ஆக்காதே
கண்ட நனவு உணர்விற் கண்ட கனவு உணரக்
கண்டவனின் இற்று இன்றாம் கட்டு 4

 

3. மூன்றாம் அதிகரணம்

மேற்கோள் : இனி, சங்காரமே முதல் என்றது.

 

ஏது : சுட்டுணர்வாகிய பிரபஞ்சம் சுட்டுணர்வு இன்றி நின்ற சங்காரத்தின் வழியல்லது சுதந்திரமின்றிநிற்றலான்.

 

உதாரணம் :

ஒன்று அலா ஒன்றில் உளது ஆகி நின்றவாறு
ஒன்று அலா ஒன்றில் ஈறாதல் _-- ஒன்றலா
ஈறே முதல் அதனின் ஈறு அலா ஒன்று பல
வாறே தொழும்பு ஆகும் அங்கு 5

 

இரண்டாம் சூத்திரம்

அவையே தானே ஆய், இரு வினையிற்
போக்கு வரவு புரிய ஆணையின்
நீக்கம் இன்றி நிற்கும் அன்றே

என்பது சூத்திரம்.

 

வார்த்திகப் பொழிப்பு

 

கருத்துரை : என் நுதலிற்றோவெனின், புனருற்பவம் வருமாறு உணர்த்துதல் நுதலிற்று.

 

4. முதல் அதிகரணம்

மேற்கோள் : ஈண்டு, இவ்வான்மாக்கள் பலவும் முதல்வன் தானேயாய் நிற்கும் என்றது.

 

ஏது : அத்துவிதம் என்ற சொல்லானே ஏகம் என்னில், ஏகம் என்று சுட்டுவது உண்மையின் அத்துவிதம் என்றசொல்லே அந்நிய
நாத்தியை உணர்த்துமாயிட்டு.

 

உதாரணம் :

கட்டும் உறுப்பும் கரணமும் கொண்டு உள்ளம்
இட்டதொரு பேர் அழைக்க என் என்றாங்கு-- ஒட்டி
அவன் உளம் ஆகில்லான் உளம் அவன் ஆ மாட்டாது
அவன் உளமாய் அல்லனுமாம் அங்கு. 6

 

ஒன்று என்றது ஒன்றேகாண் ஒன்றே பதிபசுவாம்
ஒன்று என்ற நீ பாசத்தோடு உளைக் காண்--- ஒன்று இன்றால்
அக்கரங்கள் இன்றாம் அகர உயிர் இன்றேல்
இக்கிரமத்து என்னும் இருக்கு. 7

 

பண்ணையும் ஓசையும் போலப் பழமதுவும்
எண்ணுஞ் சுவையும்போல் எங்குமாம்-- அண்ணல்தாள்
அத்துவிதம் ஆதல் அருமறைகள் ஒன்று என்னாது
அத்துவிதம் என்று அறையும் ஆங்கு 8

 

அரக்கொடு சேர்த்தி அணைத்த அக்கற்போல்
உருக்கி உடங்கு இயைந்து நின்று--- பிரிப்பு இன்றித்
தாமே உலகாம் தமியேன் உளம் புகுதல்
யானே உலகு என்பன்இன்று 9

 

5. இரண்டாம் அதிகரணம்

மேற்கோள் : இனி, இவ்வான்மாக்களுக்கு இருவினை முதல்வன் ஆணையின் வருமென்றது

 

ஏது : ஒரு நகரியைக் காப்பான் பாடிகாவல் இட்டாங்கு அவை அவனது ஆக்கினை ஆகலான்

 

உதாரணம் :

உள்ளதே தோற்ற உயிர் அணையும் அவ்வுடலில்
உள்ளதாம் முற்செய்வினை உள் அடைவே - வள்ளலவன்
செய்பவர் செய்திப் பயன் விளைக்குஞ் செய்யேபோல்
செய்வன், செயல் அணையா சென்று. 10

 

அவ்வினையைச் செய்வதனில் அவ்வினைஞர் தாம் சென்றங்கு
அவ்வினையைக் காந்த பசாசம் போல் - அவ்வினையைப்
பேராமல் ஊட்டும் பிரானின் நுகராரேல்
ஆர்தான் அறிந்து அணைப்பார் ஆங்கு. 11

 

நெல்லிற்கு உமியும் நிகழ் செம்பினில் களிம்பும்
சொல்லில் புதிதன்று தொன்மையே - வல்லி
மலகன்மம் அன்று உளவாம் வள்ளலால் பொன்வாள்
அலர்சோகம் செய் கமலத்து ஆம். 12

 

6. மூன்றாம் அதிகரணம்

மேற்கோள் : இனி, இவ்வான்மாக்கள் மாறி பிறந்து வரும் என்றது.

 

ஏது : தோற்றமும் ஈறும் உள்ளதற்கு அல்லது உளதாதல் இன்மையான்.

 

உதாரணம் :

கண்ட நனவைக் கனவு உணர்வில் தான் மறந்து
விண்படர்ந்து அத்தூடு வினையினால் - கண்செவிகெட்டு
உள்ளதேத் தோற்ற உளம் அணுவாய்ச் சென்றுமனம்
தள்ள விழும் கருவில் தான். 13

 

அரவுதன் தோல் உரிவும் அக்கனவும் வேறு
பரகாயம் போய்வரும் அப்பண்பும் - பரவில்
குடாகாய ஆகாயக் கூத்தாட்டம் என்பது
அடாது உள்ளம் போமாறு அது 14

 

7. நாங்காம் அதிகரணம்

மேற்கோள் : இனி, நீக்கமின்றி நிற்குமன்றே என்றது

 

ஏது : அவன் ஏகன் அநேகன் இரண்டும் இன்றிச் சருவவியாபியாய் நிற்றலான்.

 

உதாரணம் :

எங்குமுளன் என்ற அளவை ஒன்று அன்று இரண்டென்னில்
எங்கும் உளன் அன்று, எவற்று எவனும் - அங்கண்
அவை அவன் அன்றில்லை பொன்னொளிப்பொல் ஈசன்
அவையுடமை ஆளாம் நாம் அங்கு. 15

 

மூன்றாம் சூத்திரம்

உளதுஇலது என்றலின் எனதுடல் என்றலின்
ஐம்புலன் ஒடுக்கம் அறிதலின் கண்படின்
உண்டிவினை இன்மையின் உணர்த்த உணர்தலின்
மாயா இயந்திரத் தனுவினுள் ஆன்மா

என்பது சூத்திரம்.

 

வார்த்திகப் பொழிப்பு

கருத்துரை : என் நுதலிற்றோ வெனின், ஆன்மப் பிரகாசம் உணர்த்துதல் நுதலிற்று.

 

8. முதல் அதிகரணம்

மேற்கோளும் ஏதுவும் : ஈண்டு , இலது என்றலின் ஆன்மா உளது என்றது.

 

பொழிப்புரை : எவற்றினையும் அன்று அன்று எனவிட்டு, ஆன்மா இலது என்று நிற்பது உளதாகலின் அதுவே அவ்வான்மாவாம் என்றது.

 

உதாரணம் :

அன்று அன்று எனநின்று அனைத்தும்விட்டு அஞ்செழுத்தாய்
நின்றஒன்று உளதுஅதுவே நீ அனைத்தும் - நின்றுஇன்று
தர்ப்பணம்போல் காட்டலால் சார்மாயை நீயல்லை
தற்பரமும் அல்லை தனி. 16

 

9. இரண்டாம் அதிகரணம்

மேற்கோளும் ஏதுவும் : இனி, எனது உடல் என்றலின் ஆன்மா உளது என்றது

 

பொழிப்புரை : என்பதி என்மனை என்றாற்போல என்கை என்கால் என நிற்பது உளதாகலின் அதுவே அவ்வான்மாவாம் என்றது.

 

உதாரணம் :

எனதுஎன்ற மாட்டின் எனது அலாது என்னாது
உனதலாது உன்கைகால் யாக்கை - எனதென்றும்
என்னறிவது என்றும் உரைத்துநீ நிற்றிகாண்
உன்னில் அவை வேறாம் உணர். 17

 

10. மூன்றாம் அதிகரணம்

மேற்கோளும் ஏதுவும் : இனி, ஐம்புலன் அறிதலின் ஆன்மா உளது என்றது

 

பொழிப்புரை : ஐம்புலனாகிய சத்த பரிச ரூப ரச கந்தங்களை இந்திரியங்கள் ஒன்று அறிந்து ஒன்றுஅறியாமையின் இவ் ஐந்தினாலும் ஐம்பயனும் அறிவது உளதாகலின், அதுவே அவ் ஆன்மாவாம் என்றது.

 

உதாரணம் :

ஒன்று அறிந்தது ஒன்று அறியா தாகி உடல்மன்னி
அன்றும் புலனாய அவ் அஞ்செழுத்தை - ஒன்று அறிதல்
உள்ளதே ஆகில் அதுநீ தனித்தனி கண்டு
உள்ளல் அவை ஒன்றல்ல ஓர். 18

 

11. நான்காம் அதிகரணம்

மேற்கோளும் ஏதுவும் : இனி, ஒடுக்கம் அறிதலின் ஆன்மா உளது என்றது.

 

பொழிப்புரை : நனவின்கண் கனவு காண்டாம் என்றும் கண்டிலம் என்று நிற்பது உளதாகலின் அதுவே அவ்வான்மாவாம்என்றது.

 

உதாரணம் :

அவ்வுடலின் நின்றுயிர்ப்ப ஐம்பொறிகள் தாம்கிடப்பச்
செவ்விதின் அவ்வுடலிற் சென்று அடங்கி - அவ்வுடலின்
வேறொன்று கொண்டு விளையாடி மீண்டு அதனை
மாறல், உடல் நீ அல்லை மற்று 19

 

12. ஐந்தாம் அதிகரணம்

மேற்கோளும் ஏதுவும் : இனிக் கண்படில் உண்டிவினை இன்மையின் ஆன்மா உளது என்றது.

 

பொழிப்புரை : ஒடுங்கினவிடத்து இன்பத்துன்பஞ் சீவனம் பிரகிருத்திக்கு இன்மையின், ஒடுங்காதவிடத்துஇன்பத்துன்பஞ் சீவியா
நிற்பது உளதாகலின் அதுவே அவ்வான்மாவாம் என்றது.

 

உதாரணம் :

கண்டறியும் இவ்வுடலே காட்டு ஒடுங்கக் காணாதே
உண்டிவினை இன்றி உயிர்த்தலால் - கண்டறியும்
உள்ளம்வேறு உண்டுஆய் ஒடுங்காது உடல்நண்ணில்
உள்ளதாம் உண்டிவினை ஊன். 20

 

13. ஆறாம் அதிகரணம்

மேற்கோளும் ஏதுவும் : இனி, உணர்த்த உணர்தலின் ஆன்மா உளது என்றது.

 

பொழிப்புரை : அவன் அறிந்தாங்கு அறிவன் என்று அறிவிக்க அறிந்து உபதேசியாய் நிற்பது உளதாகலின்அதுவே அவ்வான்மாவாம் என்றது.

 

உதாரணம் :

அறிந்தும் அறிவதே ஆயும் அறியாது
அறிந்ததையும் விட்டு அங்கு அடங்கி - அறிந்தது
எது? அறிவும் அன்றாகும் மெய்கண்டான் ஒன்றின்
அதுஅதுதான் என்னும் அகம். 21

 

14. ஏழாம் அதிகரணம்

மேற்கோளும் ஏதுவும் : இனி, மாயா இயந்திர தனுவினுள் ஆன்மா உளது என்றது.

 

பொழிப்புரை : அவைதாம் வெவ்வேறு பெயர்பெற்று நிற்றலான்.

 

உதாரணம் :

கலைஆதி மண் அந்தம் காணில் அவை மாயை
நிலையாவாம், தீபமே போல - அலையாமல்
ஞானத்தை முன்னுணர்ந்து நாடில் அதுதனுவாம்
தானத்தின் வேறாகும் தான். 22

 



பொதுவதிகாரம் : இலக்கணவியல்

 

நான்காம் சூத்திரம்

அந்தக் கரணம் அவற்றினொன்று அன்று அவை
சந்தித்தது ஆன்மாச் சகச மலத்து உணராது
அமைச்சுஅரசு ஏய்ப்பநின்று அஞ்ச அவத்தைத்தே

என்பது சூத்திரம்.

 

வார்த்திகப் பொழிப்பு

கருத்துரை : என் நுதலிற்றோ எனின், இதுவும் அது.

 

15. முதல் அதிகரணம்

மேற்கோள் : ஈண்டு, இவ்வான்மாவாவது அந்தக்கரணங்களாய் உள்ள மனோ புத்தி அகங்கார சித்தங்களில்ஒன்று அன்று என்றது.

 

ஏது : அவைதாம் பிரகாசமாய் நின்றே அப்பிரகாசமாய் நிற்றலான்.

 

உதாரணம் :

மனம் ஆதியால் உணர்தல் மன்னு புலன்கள்
மனம் ஆதி மன்புலனின் அல்லன் - மனமேல்
உதித்து ஒன்றை உள்ளம் உணர்தல் அதனில்
உதிக்கும் கடல்திரையை ஒத்து 23

 

சிந்தித்து ஆய்ச் சித்தம் தெளியாதாய் ஆங்காரம்
புந்தியாய் ஆய்ந்து மனமாகிப் - பந்தித்து
வெவ்வேறு தானே துணிந்து உள்ளம் இவ்வேறாம்
அவ்வேறாம் போதுபோல் ஆங்கு 24

 

அகாரம் உகாரம் அகங்காரம் புத்தி
மகாரம் மனம் சித்தம் விந்து - பகாது இவற்றை
நாதம் உளவடிவாம் நாடில் பிரணவமாம்
போதம் கடற்றிரையே போன்று 25

 

எண்நிலவு ஓங்காரத்து ஈசர் சதாசிவமாம்
நண்ணிய விந்துவொடு நாதத்து - கண்ணில்
பகர் அயன்மா லொடு பரமன் அதிதெய்வம்
அகரஉக ரம்மகரத் தாம் 26

 

16. இரண்டாம் அதிகரணம்

மேற்கோள் : இனி, இவ்வான்மாச் சகச மலத்தினால் உணர்வு இன்று என்றது.

 

ஏது : அதுதான் ஞானதிரோதகமாய் மறைத்துகொடு நிற்றலான்

 

உதாரணம் :

மாய தனுவிளக்காம் மற்று உள்ளம் காணாதேல்
ஆயாதாம் ஒன்றை அதுவதுவாய் - வீயாத
வன்னிதனைத் தன்னுள் மறைத்து ஒன்றாம் காட்டம்போல்
தன்னை மலம் அன்றணைதல் தான் 27

 

17. மூன்றாம் அதிகரணம்

மேற்கோள் : இனி, இவ்வான்மா, சாக்கிரம் சொப்பனம் சுழுத்தி துரியம் துரியாதீமாயுள்ள பஞ்சஅவத்திதனாய் நிற்கும் என்றது.

 

ஏது : அதுதான் மல சொரூபத்தின் மறைந்து அரூப சொரூபியாய் நிற்றலான்.

 

உதாரணம் :

ஒன்று அணையா மூலத்து உயிர் அணையும் நாபியினில்
சென்றணையும் சித்தம் இதயத்து - மன்ற ஏய்
ஐயைந்தாம் நல்நுதலில் கண்டத்தின் வாக்காதி
மெய்யாதி விட்டு அகன்று வேறு 28

 

இலாடத்தே சக்கிரத்தை எய்திய உள்ளம்
இலாடத்தே ஐந்தவத்தை எய்தும் - இலாடத்தே
அவ்வவ் இந்திரியத்து அத்துறைகள் கண்டு அதுவே
அவ்வவற்றின் நீங்கல் அது ஆங்கு 29

 

ஐந்தாம் சூத்திரம்

விளம்பிய உள்ளத்து மெய்வாய் கண்மூக்கு
அளந்து அறிந்து அறியா ஆங்குஅவை போலத்
தாம்தம் உணர்வின் தமியருள்
காந்தம் கண்ட பசாசத்து அவையே

என்பது சூத்திரம்

 

வார்த்திகப் பொழிப்பு

கருத்துரை : என் நுதலிற்றோ எனின், இவ்வான்மாக்களிடத்துத் தமது முதல் உபகாரம் உணர்த்துதல் நுதலிற்று.

 

18. முதல் அதிகரணம்

மேற்கோள் : ஈண்டு, ஐ உணர்வுகள் ஆன்மாவால் உணரும் என்றது.

ஏது : அவற்றினான் ஆன்மா ஒன்றித்துக் காணின் அல்லது அவை ஒன்றையும் விடயியா ஆகலான்

 

உதாரணம் :

ஐம்பொறியை ஆண்டு அங்கு அரசாய் உளம்நிற்ப
ஐம்பொறிகள் உள்ளம் அறியாவாம் - ஐம்பொறியில்
காணாதேல் காணாது காணும் உளம் காணாதேல்
காணாகண் கேளா செவி 30

 

19. இரண்டாம் அதிகரணம்

மேற்கோள் : இனி, இதுவும் தமது முதலாலே உணரும் என்றது.

 

ஏது : அவ் ஆன்மாத் தன்னாலே உணரும் இந்திரியங்களைப் போலத் தானும் தன்னை உணராது நிற்றலான்.

 

உதாரணம் :

மன்னுசிவன் சந்நிதியில் மற்று உலகம் சேட்டித்தது
என்னும் மறையின் இயல்மறந்தாய்-- சொன்ன சிவன்
கண்ணா உளம்வினையால் கண்டு அறிந்து நிற்கும்காண்
எண்ணான் சிவன் அசத்தை இன்று 31

 

வெய்யோன் ஒளியில் ஒடுங்கி விளங்காது
வெய்யோனை ஆகாத மீன்போல--- மெய்யவனில்
கண்டுகேட்டு உண்டு உயிர்த்து உற்று அறியும் ஐம்புலனைக்
கண்டு உடனாய் மன்னுதலைக் காண் 32

 

அருளுண்டாம் ஈசற்கு அதுசத்தி அன்றே
அருளும் அவன் அன்றி இல்லை-- அருளின்று
அவன் அன்றே இல்லை அருட்கண்ணார் கண்ணுக்கு
இரவிபோல் நிற்கும் அரன் ஏய்ந்து 33

 

ஆறாம் சூத்திரம்

உணருரு அசத்து எனின் உணராது இன்மையின்
இருதிறன் அல்லது சிவசத்தாம் என
இரண்டு வகையின் இசைக்குமன் உலகே

என்பது சூத்திரம்

 

வார்த்திகப் பொழிப்பு

கருத்துரை : சத்தும் அசத்தும் வரைசெய்து உணர்த்துதல் நுதலிற்று

 

20. முதல் அதிகரணம்

மேற்கோள் : ஈண்டு, அறிவினால் அறியப்பட்ட சுட்டு அசத்து என்றது.

 

ஏது : அவைதாம் பிரகாசமாய் நின்றே அப்பிரகாசமாய் நிற்றலான்

 

உதாரணம் :

அசத்து அறியாய் கேள்நீ அறிவு அறிந்த எல்லாம்
அசத்தாகும் மெய்கண்டான் ஆயின் - அசத்துஅலாய்!
நீரில் எழுத்தும் நிகழ் கனவும் பேய்த்தேரும்
ஓரில் அவை இன்று ஆம் ஆறு ஒப்பு 34

 

21. இரண்டாம் அதிகரணம்

மேற்கோள் : இனி, இவ்விரண்டு தன்மையும் இன்றி வாக்கு மனாதீத கோசரமாய் நின்ற அதுவே சத்தாயுள்ளசிவன் என்றது

 

ஏது : பிரகாசத்தினுக்குப் பிரகாசிக்க வேண்டுவது இன்மையானும் அப்பிரகாசத்தினுக்குப் பிரகாசம்இன்மையானும்.

 

உதாரணம் :

எண்ணிய சத்தன்று அசத்தன்று ஆம் என்றால் என்
கண்ணி உளது என்றல், மெய்கண்டான் - எண்ணி
அறிய இரண்டு ஆம் அசத்து ஆதல் சத்தாம்
அறிவு அறியா மெய்சிவந்தாள் ஆம் 35

 

உணர்ப அசத்தாதல் ஒன்று உணராது ஒன்றை
உணருநீ தான் உணராய் ஆயின் - உணரும் உனில்
தான் இரண்டாம் மெய்கண்டான் தன்னால் உணர்தலால்
தான் இரண்டாய்க் காணான் தமி 36

 

பாவகமேல் தான் அசத்தாம், பாவனா அதீதம் எனில்
பாவகமாம் அன்றென்னில் பாழ் அதுவாம் - பாவகத்தைப்
பாவித்தல் தான் என்னில் பாவகமாம் தன்னருளால்
பாவிப்பது பரம் இல் பாழ் 37

 

அறிய இரண்டு அல்லன், ஆங்கு அறிவு தன்னால்
அறியப் படான், அறிவின் உள்ளான் - அறிவுக்குக்
காட்டு ஆகி நின்றானைக் கண்ணறியா மெய்யென்னக்
காட்டாது அறிவு அறிந்து கண்டு 38

 

அதுவெனும் ஒன்றுஅன்று அதுவன்றி வேறே
அதுவென்று அறி அறிவும் உண்டே- அதுவென்று
அறிய இரண்டல்லன் ஆங்கு அறிவுள் நிற்றல்
அறியும் அறிவே சிவம் ஆம் 39

 


 

உண்மை அதிகாரம் : சாதனாவியல்

 

ஏழாம் சூத்திரம்

யாவையும் சூனியம் சத்துஎதிர் ஆகலின்
சத்தே யறியாது அசத்துஇலது அறியா
இருதிறன் அறிவுளது இரண்டலா ஆன்மா

என்பது சூத்திரம்

 

வார்த்திகப் பொழிப்பு

கருத்துரை : என் நுதலிற்றோ வெனின், மேலதற்கோர் புறனடை உணர்த்துதல் நுதலிற்று

 

22. முதல் அதிகரணம்

மேற்கோள் : ஈண்டு, சத்தினிடத்து அசத்துப் பிரகாசியாது என்றது.

 

ஏது : மெய்யினிடத்துப் பொய் அப்பிரகாசமாய் நிற்றலான்.

 

உதாரணம் :

அன்னியம் இலாமை அரற்கு ஒன்று உணர்வு இன்றாம்
அன்னியமிலான் அசத்தைக் காண்குவனேல் - அன்னியமாக்
காணான் அவன்முன், கதிர்முன் இருள்போல்
மாணா அசத்து இன்மை மற்று 40

 

23. இரண்டாம் அதிகரணம்

மேற்கோள் : இனி, அசத்தினுக்கு உணர்வு இன்று என்றது

 

ஏது : அதுதான் நிரூபிக்கில் இன்றாகலான்

 

உதாரணம் :

பேய்த்தேர் நீர் என்றுவரும் பேதைக்கு மற்று அணைந்த
பேய்த்தேர் அசத்தாகும் பெற்றிமையின் - வாய்த்து அதனைக்
கண்டுணர்வார் இல்வழியின் காணும் அசத்தின்மை
கண்டுணர்வார் இல்லது எனக் காண் 41

 

24. மூன்றாம் அதிகரணம்

மேற்கோள் : இனி, இருதிறன் அறிவு உளது இரண்டலா ஆன்மா என்றது.

 

ஏது : இவ்விரண்டனையும் அறிவதாய் உபதேசியாய் நின்ற அவ்வறிவு இரண்டன் பாலும் உளதாயுள்ள அதுவே அவ் ஆன்மாவாம் என்றது

 

உதாரணம் :

அரு உருவம் தான் அறிதல் ஆய் இழையாய் ஆன்மா
அரு உருவம் அன்று ஆகும் உண்மை - அரு உருவாய்த்
தோன்றி உடன் நில்லாது தோன்றாது நில்லாது
தோன்றல் மலர்மணம்போல் தொக்கு 42

 

மயக்கமது உற்றும் மருந்தின் தெளிந்தும்
பெயர்த்து உணர் நீ சத்து ஆகாய் பேசில் - அசத்தும் அலை
நீ அறிந்து செய்வினைகள் நீ அன்றி வேறு அசத்துத்
தான் அறிந்து துய்யாமை தான் 43

 

மெய்ஞானந் தன்னில் விளையாது அசத்தாதல்
அஞ்ஞானம் உள்ளம் அணைதல்காண் - மெய்ஞ்ஞானம்
தானே உள அன்றே தண் கடல்நீர் உப்புப்போல்
தானே உளம் உளவாய்த் தான் 44

 

எட்டாம் சூத்திரம்

ஐம்புல வேடரின் அயர்ந்தனை வளர்ந்து எனத்
தம்முதல் குருவுமாய்த் தவத்தினில் உணர்த்தவிட்டு
அன்னியம் இன்மையின் அரன்கழல் செலுமே

என்பது சூத்திரம்

 

வார்த்திகப் பொழிப்பு

கருத்துரை : என் நுதலிற்றோ எனின், ஞானத்தினை உணரும் முறைமையினை உணர்த்துதல் நுதலிற்று

 

25. முதல் அதிகரணம்

மேற்கோள் : ஈண்டு இவ்வான்மாக்களுக்கு முன்செய் தவத்தால் ஞானம் நிகழும் என்றது

 

ஏது : மேற் சரியை கிரியா யோகங்களை செய்துழி நன்னெறியாகிய ஞானத்தைக் காட்டியல்லது மோட்சத்தைக்கொடா ஆகலான்.

 

உதாரணம் :

தவம்செய்வார் என்றும் தவலோகம் சார்ந்து
பவஞ் செய்து பற்று அறுப்பார் ஆகத் - தவஞ் செய்த
நற்சார்பில் வந்து உதித்து ஞானத்தை நண்ணுதலைக்
கற்றார்சூழ் சொல்லுமாம் கண்டு 45

 

பசித்து உண்டு பின்னும் பசிப்பானை ஒக்கும்
இசைத்து வருவினையில் இன்பம் - இசைத்த
இருவினை ஒப்பில் இறப்பில் தவத்தான்
மருவுவன் ஆம் ஞானத்தை வந்து 46

 

26. இரண்டாம் அதிகரணம்

மேற்கோள் : இனி, இவ் ஆன்மாக்களுக்கு தமதுமுதல் தானே குருவுமாய் உணர்த்தும் என்றது.

 

ஏது : அவன் அன்னியம் இன்றிச் சைதன்னிய சொரூபியாய் நிற்றலான்.

 

உதாரணம் :

மெய்ஞ்ஞானம் தானே விளையும் விஞ்ஞானகலர்க்கு
அஞ்ஞான அச்சகலர்க்கு அக்குருவாய் - மெய்ஞ்ஞானம்
பின்னுணர்த்தும் அன்றிப் பிரளயா கலருக்கு
முன்னுணர்த்தும் தான் குருவாய் முன் 47

 

அறிவிக்க அன்றி அறியா உளங்கள்
செறியுமாம் முன்பின் குறைகள் - நெறியில்
குறையுடைய சொற்கொள்ளார் கொள்பவத்தின் வீடுஎன்
குறைவில்சகன் சூழ்கொள் பவர்க்கு 48

 

இல்லா முலைப்பாலும் கண்ணீரும் ஏந்திழைபால்
நல்லாய் உளவாமால் நீர்நிழல்போல் - இல்லா
அருவாகி நின்றானை ஆரறிவார் தானே
உருவாகித் தோன்றானேல் உற்று 49

 

27. மூன்றாம் அதிகரணம்

மேற்கோள் : இனி, இவ் ஆன்மாக்கள் ஐ உணர்வுகளால் மயங்கித் தம்மை உணரா என்றது.

 

ஏது : அவைதாம் பளிங்கில் இட்ட வன்னம்போல் காட்டிற்றைக் காட்டி நிற்றலான்.

 

உதாரணம் :

பன்நிறம் காட்டும் படிகம்போல் இந்திரியம்
தன்னிறமே காட்டும் தகைநினைந்து - பன்னிறத்துப்
பொய்ப்புலனை வேறுணர்ந்து பொய்பொய்யா மெய் கண்டான்
மெய்பொருட்குத் தைவமாம் வேறு 50

 

28. நான்காம் அதிகரணம்

மேற்கோள் : இனி, இவ் ஆன்மாத் தன்னை இந்திரியத்தின் வேறாவான் காணவே தமது முதல் சீபாதத்தைஅணையும் என்றது.

 

ஏது : ஊசல் கயிறு அற்றால் தாய்தரையேயாம் துணையால்.

 

உதாரணம் :

சிறைசெய் நின்ற செழும்புனலின் உள்ளம்
சிறைசெய் புலனுணர்வில் தீர்ந்து - சிறைவிட்டு
அலைகடலில் சென்று அடங்கும் ஆறுபோல் மீளாது
உலைவுஇல் அரன் பாதத்தை உற்று 51

 

எவ்வுருவும் தானென்னில் எய்துவார் இல்லைதாள்
இவ்வுருவின் வேறேல் இறைஅல்லன் - எவ்வுருவும்
கண்போல் அவயவங்கள் காணாஅக் கண் இல்லார்
கண்பேறே காண் அக் கழல் 52

 

ஐம்பொறியின் அல்லை எனும் அந்த தர சிவனை
ஐம்பொறியை விட்டு அங்கு அணைசகலன் - ஐம்பொறியின்
நீங்கான்நீர்ப் பாசிபோல் நீங்குமல கன்மம்வரின்
நீங்கானை நீங்கும் நினைந்து. 53

 

ஒன்பதாம் சூத்திரம்

ஊனக்கண் பாசம் உணராப் பதியை
ஞானக் கண்ணினிற் சிந்தை நாடி
உராத்துனைத் தேர்த்து எனப் பாசம் ஒருவத்
தண் நிழலாம் பதிவிதி எண்ணும் அஞ் செழுத்தே

என்பது சூத்திரம்

 

வார்த்திகப் பொழிப்பு

கருத்துரை : என் நுதலிற்றோ எனின், ஆன்மசுத்தி பண்ணுமாறு உணர்த்துதல் நுதலிற்று

 

29. முதல் அதிகரணம்

மேற்கோள் : ஈண்டு, அம்முதலை ஞானக் கண்ணினாலேயே காண்க என்றது.

 

ஏது : அவன் வாக்கு மன அதீத கோசரமாய் நிற்றலான்.

 

உதாரணம் :

நாடியோ என்போ நரம்புசீக் கோழையோ
தேடி எனையறியேன் தேர்ந்தவகை - நாடி அரன்
தன்னாலே தனையும் கண்டு தமைக்காணார்
என்னாம் என அறிவார் இன்று 54

 

காட்டிய கண்ணே தனைக்காணா கண்ணுக்குக்
காட்டாய உள்ளத்தைக் கண் காணா - காட்டிய
உள்ளம் தனைக்காணா உள்ளத்தின் கண்ணாய
கள்வன்தான் உள்ளத்திற் காண் 55

 

30. இரண்டாம் அதிகரணம்

மேற்கோள் : இனி, அசத்தாயுள்ள வன்னபேதங்களை அசத்து என்று காண உளதாய் நிற்பது ஞானசொரூபம்என்று உணரற்பாற்று

 

ஏது : இனி அசத்தாயுள்ள பிரபஞ்சத்தை அசத்தென்று காண உளதாய் நிற்பது ஞானசொரூபம் என்றது வேற்றியல்பாகிய வன்னபேதங்களை வேற்றியல்பு என்று கண்டு கழிப்பின் உளதாய் நிற்பது படிக சொரூபமாம் துணையான்

 

உதாரணம்:

நிர்க்குணனாய் நின்மலனாய் நித்தியா னந்தனாய்த்
தற்பரமாய் நின்ற தனிமுதல்வன் - அற்புதம்போல்
ஆனா அறிவாய் அளவுஇறந்து தோன்றானோ
வானே முதல்களையின் வந்து 56

 

சுட்டி உணர்வதனைச் சுட்டி அசத்தென்னச்
சட்ட இனியுளது சத்தேகாண் - சுட்டி
உணர்ந்த நீ சத்து அல்லை உண்மையைத் தைவம்
புணர்ந்ததனால் பொய்விட்டுப் போம் 57

 

கண்டதை அன்று அன்று எனவிட்டுக் கண்டு அசத்தாய்
அண்டனை ஆன்மாவில் ஆய்ந்துணரப் - பண்டு அணைந்த
ஊனத்தை தான்விடுமாறு உத்தமனின் ஒண்கருட
சானத்தின் தீர்விடம்போல் தான் 58

 

31. மூன்றாம் அதிகரணம்

மேற்கோள் : இனி, இவ்விடத்து சிறீ£ பஞ்சாக்கரத்தை (திருவைந்தெழுத்தை) விதிப்படி உச்சரிக்க என்றது.

 

ஏது : இவ்வான்மாக்களுக்கு ஞானம் பிரகாசித்தும் அஞ்ஞானத்தை வேம்பு தின்ற புழுப்போல நோக்கிற்றைநோக்கி நிற்குமாகலின் அது நீக்குதற்கு எனக் கொள்க.

 

உதாரணம் :

அஞ்செழுத்தால் உள்ளம் அரனுடைமை கண்டு அரனை
அஞ்செழுத்தால் அர்ச்சித்து இதயத்தில் - அஞ்செழுத்தால்
குண்டலினியிற் செய்து ஓமம் கோதண்டம் சானிக்கில்
அண்டனாம் சேடனாம் அங்கு 59

 

இந்துவில் பானுவில் இராகுவைக் கண்டுஆங்குச்
சிந்தையில் காணில் சிவன் கண்ணாம் - உந்தவே
காட்டாக்கின் தோன்றி கனல்சேர் இரும்பென்ன
வாட்டானாம் ஓது அஞ்செழுத்து 60

 

மண்முதல் நாளம் அலர் வித்தை கலாரூபம்
எண்ணிய ஈசர் சதாசிவமாம் - நண்ணில்
கலை உருவாம் நாதமாம் சத்தி அதன் கண்ணாம்
நிலைஅதில் ஆம் அச்சிவன்தாள், நேர். 61

 


 

உண்மை அதிகாரம் : பயனியல்

 

பத்தாம் சூத்திரம்

அவனே தானே ஆகிய அந்நெறி
ஏகன் ஆகி இறைபணி நிற்க
மலமாயை தன்னொடு வல்வினை இன்றே

என்பது சூத்திரம்.

 

வார்த்திகப் பஒழிப்பு

கருத்துரை : என் நுதலிற்றோ வெனின், பாசŒயம் பண்ணுமாறு உணர்த்துதல் நுதலிற்று.

 

32. முதல் அதிகரணம்

மேற்கோள் : ஈண்டுப் பரமேசுவரன் இவ்வான்மாவாய் நின்ற முறைமையான் அவனிடத்து ஏகனாகி நிற்கஎன்றது.

 

ஏது : அவ்வாறு நிற்கவே யான் எனது என்னும் செருக்கு அற்று அவனது சீபாதத்தை அணையும் ஆகலான்.

 

உதாரணம் :

நான் அவன் என்று எண்ணினர்க்கும் நாடும் உளம் உண்டாதல்
தான் என ஒன்று இன்றியே தானதுவாய் - நான் எனவொன்று
இல்லென்று தானே எனும் அவரைத் தன்னடிவைத்து
இல்லென்று தான் ஆம் இறை 62

 

33. இரண்டாம் அதிகரணம்

மேற்கோள் : இனி, இறைபணி வழுவாது நிற்க என்றது.

 

ஏது : அவன் அருளால் அல்லது ஒன்றையும் செய்யான் ஆகவே அஞ்ஞான கன்மம் பிரவேசியா ஆகலான்.

 

உதாரணம் :

நாம் அல்ல இந்திரியம் நம்வழியின் அல்ல, வழி
நாம் அல்ல நாமும் அரனுடைமை - ஆம் என்னில்
எத்தனுவில் நின்றும் இறைபணியார்க்கு இல்லைவினை
முற்செய்வினையும் தருவான் முன் 63

 

சார்ந்தாரைக் காத்தல் தலைவர் கடனாதல்
சார்ந்தாரைக் காத்தும் சலமிலனாய்ச் - சார்ந்தடியார்
தாந்தானாச் செய்துபிறர் தங்கள்வினை தான்கொடுத்தல்
ஆய்ந்தார்முன் செய்வினையும் ஆங்கு 64

 

இங்குளி வாங்கும் கலம்போல ஞானிபால்
முன்செய் வினை மாயை மூண்டிடினும் - பின்செய்வினை
மாயையுடன் நில்லாது மற்றவன்தான் மெய்ப்பொருளே
ஆய அதனால் உணரும் அச்சு 65

 

நண் அனல் வேவாத நற்றவர் தம்மினும்
பண் அமர மாச்செலுத்தும் பாகரினும் - எண்ணி
அரனடி ஓர்பவர் ஐம்புலனில் சென்றும்
அவர்திறல் நீங்கார் அதற்கு 66

 

சதசத்தாம் மெய்கண்டான் சத்தருளிற் காணின்
இதமித்தல் பாசத்தில் இன்றிக் - கதமிக்கு
எரிகதிரின் முன்னிருள்போல், ஏலா அசத்தின்
அருகு அணையார், சத்து அணைவார் ஆங்கு 67

 

பதினொன்றாம் சூத்திரம்

காணும் கண்ணுக்குக் காட்டும் உளம்போல்
காண உள்ளத்தைக் கண்டு காட்டலின்
அயரா அன்பின் அரன்கழல் செலுமே

என்பது சூத்திரம்

 

வார்த்திகப் பொழிப்பு

கருத்துரை : என் நுதலிற்றோ எனின், பரமேசுரனது சீபாதங்களை அணையுமாறு உணர்த்துதல் நுதலிற்று

 

34. முதல் அதிகரணம்

மேற்கோள் : ஈண்டு, அவனும் அவற்றது விடயத்தை உணரும் என்றது

 

ஏது : இவ்வான்மாக்கள் அவனையின்றி அமைந்து ஒன்றையும் விடயியா ஆகலான்

 

உதாரணம் :

ஐந்தையும் ஒக்க உணராது அவற்றுணர்வது
ஐந்தும்போல் நின்றுணரும் ஆகலான் - ஐந்தினையும்
ஒன்றொன்றாப் பார்த்துணர்வது உள்ளமே எவ்வுலகும்
ஒன்றொன்றாப் பார்க்கும் உணர்ந்து 68

 

ஏகமாய் நின்றே இணையடிகள் ஒன்றுணரப்
போகமாய்த் தான் விளைந்த பொற்பினால் - ஏகமாய்
உள்ளத்தின் கண்ணானான் உள்குவார் உள்கிற்றை
உள்ளத்தாற் காணானோ உற்று 69

 

35. இரண்டாம் அதிகரணம்

மேற்கோள் : இனிப் பத்தியினான் மறவாது ஏத்த அவனது சீபாதத்தை அணையும் என்றது.

 

ஏது : அவன் அன்னியமின்றிச் செய்வோர் செய்திப்பயன் விளைத்து நிற்றலான்.

 

உதாரணம் :

அருக்கன் நேர் நிற்பினும் அல்லிருளே காணார்க்கு
இருட்கண்ணே பாசத்தார்க்கு ஈசன் - அருட்கண்ணால்
பாசத்தை நீக்கும் பகல் அலர்த்தும் தாமரைபோல்
நேசத்தின் தன்னுணுர்ந்தார் நேர். 70

 

மன்னும் இருளை மதிதுரந்த வாறு அன்பின்
மன்னும் அரனே மலம் துரந்து - தன்னின்
வலித்து இரும்பைக் காந்தம் வசஞ்செய்வான் செய்தல்
சலிப்பில் விகாரி அலன் தான் 71

 

நசித்து ஒன்றின் உள்ளம் நசித்தலால் ஒன்றா
நசித்திலதேல் ஒன்றாவது இல்லை - நசித்துமலம்
அப்பு அணைந்த உப்பின் உளம் அணைந்து சேடமாம்
கப்பு இன்றாம் ஈசன் கழல் 72

 

பொன்வாள்முன் கொண்மூவிற் புக்கு ஒடுங்கிப்போய் அகலத்
தன்வாளே எங்குமாம் தன்மைபோல் - முன்வாள்
மலத்தின் மறைந்து உள்ளம் மற்று உலகை உண்ணும்
மலத்து இரித்துச் செல்லும் வரத்து 73

 

பன்னிரண்டாம் சூத்திரம்

செம்மலர் நோன்தாள் சேரல் ஒட்டா
அம்மலங் கழீஇ அன்பரொடு மரீஇ
மால்அற நேயம் மலிந்தவர் வேடமும்
ஆலயம் தாமும் அரன் எனத் தொழுமே

என்பது சூத்திரம்.

 

வார்த்திகப் பொழிப்பு

கருத்துரை : என் நுதலிற்றோ வெனின், அசிந்திதனாய் நின்ற பதியைச் சிந்திதனாகக் கண்டு வழிபடுமாறுஉணர்த்துதல் நுதலிற்று.

 

36. முதல் அதிகரணம்

மேற்கோள் : ஈண்டு, ஆணவம் மாயை கான்மியம் எனும் மலங்களைக் களைக என்றது.

 

ஏது : அவைதாம் ஞானத்தை உணர்த்தாது அஞ்ஞானத்தை உணர்த்தும் ஆகலான்.

 

உதாரணம் :

புண்ணிய பாவம் பொருந்தும் இக் கான்மியமும்
மண்முதல் மாயைகாண் மாயையும் - கண்ணிய
அஞ்ஞானம் காட்டும் இவ் ஆணவமும் இம் மூன்றும்
மெய்ஞ்ஞானிக் காகா விடு. 74

 

37. இரண்டாம் அதிகரணம்

மேற்கோள் : இனிச் சிவபத்தர்களோடு இணங்குக என்றது.

 

ஏது : அல்லாதார் அஞ்ஞானத்தை உணர்த்துவார் ஆகலான்.

 

உதாரணம் :

மறப்பித்துத் தம்மை மலங்களின் வீழ்க்குஞ்
சிறப்பிலார் தம்திறத்துச் சேர்வை - அறப்பித்துப்
பத்தர் இனத்தாய்ப் பரன் உணர்வினால் உணரும்
மெய்த்தவரை மேவா வினை 75

 

38. மூன்றாம் அதிகரணம்

மேற்கோள் : இனிப் பத்தரது திருவேடத்தையும் சிவாலயத்தையும் பரமேசுரன் எனக் கண்டு வழிபடுக என்றது.

 

ஏது : அவன் மற்று இவ்விடங்களில் பிரகாசமாய் நின்றே அல்லாத விடத்து அப்பிரகாசமாய் நிற்றலான்.

 

உதாரணம்:

தன்உணர வேண்டித் தனது உருவைத் தான்கொடுத்து
தன் உணரத் தன்னுள் இருத்தலால் - தன் உணரும்
நேசத்தர் தம்பால் நிகழும் ததிநெய்போல்
பாசத்தார்க்கு இன்றாம் பதி 76

 

கண்டதொரு மந்திரத்தாற் காட்டத்தில் அங்கிவேறு
உண்டல்போல் நின்று அங்கு உளதாமால் - கண்ட உருத்
தான் அதுவாய் அன்று ஆனான் தான் அதுவாய்த் தோன்றானோ
தான் அதுவாய்க் காணும் தவர்க்கு 77

 

39. நான்காம் அதிகரணம்

மேற்கோள் : இனி இவ்விடங்களில் வழிபடுக என்றது.

 

ஏது : நரம்பு நாடி முதலானவற்றைத் தானதுவாய் வரும் புருடன் அவையாகாவாறு அப்புருடனும் ஆகலான்.

 

உதாரணம் :

அது இது என்றது அதுஅல்லான் கண்டார்க்கு
அது இது என்றதையும் அல்லான் - பொது அதனில்
அத்துவிதம் ஆதல் அகண்டமும் தைவமே
அத்திவிதி அன்பின் தொழு 78

 

வினையால் அசத்து விளைதலால் ஞானம்
வினைதீரின் அன்றி விளையா - வினைதீர
ஞானத்தை நாடித் தொழவே அதுநிகழும்
ஆனத்தால் அன்பின் தொழு. 79

 

தன்னை அறிவித்துத் தான் தானாய்ச் செய்தானைப்
பின்னை மறத்தல் பிழையல் அது - முன்னவனே
தானே தானாச் செய்தும் தைவமென்றும் தைவமே
மானே தொழுகை வலி 80

 

நூற்கு அதிகாரிகள்

சிவமென்றும் அந்ததர சிந்தைநேர் நோக்கப்
பவமின்றாம் கண் வாசகத்தின் - சிவன் உண்டாம்
ஒன்றும் இரண்டும் மலத்தார்க்கு இங்கு ஒண்குருவால்
இன்று இந்நூல் மும்மை மலர்க்கு.

 

சிறப்புப் பாயிரம்

எந்தை சனற்குமரன் ஏத்தித் தொழ இயல்பாய்
நந்தி உரைத்து அருளும் ஞானநூல் - சிந்தை செய்து
தான் உரைத்தான் மெய்கண்டான் தாரணியோர் தாம் உணர
ஏதுதிருட் டாந்தத்தால் இன்று.

 

- சிவஞானபோதம் முற்றும் -

Monday 5 April 2021

38 மலர் மருத்துவம் பயன்கள்

#மலர்_மருந்து

மனம் சம்பந்தப்பட்ட
 பிரச்சினைகளுக்கு தீர்வு
மலர் மருந்துகளின் தன்மையும் 
அதன் பயன்களும்

1. அக்ரிமோனி- Agrimony

"கவலை, கடுமையான வேதனை"

 வெளியே சொல்ல முடியாமல் தவிக்கும் ஆழ்ந்த கவலை மற்றும் மன வேதனையை போக்கி மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிது. மது மற்றும் புகைப் பிடிக்கும் எண்ணம் தோன்றாமல் செய்கிறது.

1. பார்ப்பதற்கு மகிழ்ச்சியோடு இருப்பதாக காட்டிக் கொள்வார்கள் ஆனால் மனதிற்குள் வேதனை படுவார்கள்.
2. தனக்கு உள்ள நோயையும் மன வேதனையையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் மகிழ்ச்சியாக இருப்பதுபோல் நடிப்பார்கள்.
3. மற்றவர்களிடம் சகஜமாக பழகுவார்கள் எப்போதும் அமைதியாக இருப்பார்கள்.
4. தனிமையை விரும்பாதவர்கள்
6. வேடிக்கையாகவும் தமாசாக பேசும் குணம் படைத்தவர்கள்.
7.சண்டை சச்சரவுகளை விரும்பாதவர்கள்.
8. கவலைகளை போக்க புகைப்பிடித்தல் மது அருந்துதல் போன்ற தீய பழக்கத்திற்கு அடிமையாவார்கள்.
9. துன்பத்தை மறக்க கோமாளித் தனமாக நடந்துகொள்ளுதல்.
10.தனிமையில் இருக்க பயந்துகொண்டு யாருடனாவது இருக்க விரும்புதல்.
11.இளமையை விரும்புதல், எதிர்காலத்தை எண்ணி வருந்துதல்.

 ஹீதர் நபர்கள் தங்கள் கவலை துன்பங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வர் ஆனால் அக்ரிமோனி நபர்கள் தங்கள் கவலை துன்பங்களை யாரிடமும் கூறமாட்டார்கள்.
 
 
2. ஆஸ்பென் - Aspen
"காரணம் இல்லாத பயம்"

சிலருக்கு காரணமே தெரியாமல் அடிமனதில் ஒருவித பயம் இருந்துகொண்டே இருக்கும். அத்தகைய பயத்தைப் போக்கி மனதிற்குள் தைரியத்தை கொடுக்கும். கனவுத்தொல்லை, தூக்கமின்மையை போக்கும்.

1. காரணமே இல்லாமல் எப்போதும் ஒருவித பயத்துடனே இருப்பார்கள்.
2. இருட்டைக் கண்டு பயப்படுதல்.
3. இயற்கை சீற்றங்களை கண்டு பயப்படுதல்.
4. நடக்கக்கூடாதது ஏதாவது நடந்துவிடுமோ என்று பயப்படுதல்.
5. கெட்ட கனவைக் கண்டு பயப்படுதல்.
6. மரணத்தை கண்டு பயப்படுதல்.
7. இடி, மின்னலுக்கு பயப்படுதல்.
8. ஊசி போட்டுக்கொள்ள பயப்படுதல்.
9. விபத்து நடந்து விடுமோ என்ற பயம்,
10. இவர்கள் தாம் பயப்படுவதை வெளிக்காட்டிக் கொள்ள மாட்டார்கள் தைரியமாக இருப்பதுபோல் காட்டிக் கொள்வார்கள்.
11. ஆஸ்பென் தெரியாத காரணங்களால் ஏற்படும் பயத்தை போக்கும். மிமுலஸ் தெரிந்த காரணங்களால் ஏற்படும் பயத்தை போக்கும்.
12. பயத்தால் அமைதியின்றி இருத்தல், செயல்களில் பின்வாங்குதல், நேருக்கு நேர் பார்த்து பேசுவதற்கு தயங்குதல்.
 மிமுலஸ் தெரிந்த காரணங்களால் ஏற்படும் பயத்தை போக்கும் ஆஸ்பென் தெரியாத காரணங்களால் ஏற்படும் பயத்தை போக்கும்.

 
 3. பீச் - Beech

"எல்லா விஷயங்களிலும் சட்ட ஒழுங்கை எதிர்பார்த்தல்"

   சிலர் எல்லாவற்றிலும் ஏதோ குறை கூறிக்கொண்டே இருப்பர். எதிலும் திருப்தி இருக்காது. அத்தகைய நபர்கள் பீச் எடுத்துக்கொண்டால் எல்லாவற்றிலும் ஒரு நிறைவையும், திருப்தியையம் காணும் மனநிலையில் ஏற்படும்.
 
1. எல்லா செயல்களிலும் ஒரு ஒழுக்கத்தை கடைபிடிப்பார்கள்.
2. எல்லோரும் நியாயமாகவும், நேர்மையாகவும், உண்மையாகவும் நடந்துகொள்ள வேண்டும் என்று எதிர்பார்பார்கள்.
3. நீதி நேர்மை தவறி நடந்துகொள்பவர்கள் மீது கடுமையாக கோபப் படுவார்கள். அவர்களைப் பற்றி எப்போதும் விமர்சனம் செய்துகொண்டே இருப்பார்கள்.
4. வீடு மற்றும் பணியிடங்களில் ஒரு அழகையும் ஒழுங்கையும் கடைபிடிப்பார்கள். அந்த அந்த பொருள் அந்த அந்த இடத்தில் இருக்கவேண்டும் என்று விரும்புவார்கள். மீறினால் கோபப்படுவார்கள். இதனால் நண்பர்கள் உறவினர்கள் இவர்களுக்கு குறைவாகவே இருக்கும்.
5. கடுமையான சொற்களை பிறயோகித்தல், துருவித்துருவி குற்றம் கண்டுபிடித்தால்.
6. தலைக்கனம், திமிர், தற்பெருமை கொள்ளுதல்.
7. உடுத்தும் உடை அணிகலன்கள் ஆகியவற்றில் ஒரு நேர்த்தியை எதிர்பார்ப்பார்கள்.
8. உறவினர்கள் நண்பர்கள் வீடுகளுக்கு சென்றால் அங்கே அலங்கோலமாக இருக்கும் பொருட்களை ஒழுங்கு படுத்துவார்கள் அவர்களுக்கு ஒழுங்கு பற்றி அறிவுரை கூறுவார்கள்.

4. சென்டாரி - Centuary
 
"கோழைத்தனம், அடிபணிந்து போதல்"

 இது மனதில் தோன்றும் கோழைத்தனமான எண்ணங்கள் மற்றும் மற்றவர்களுக்கு அடிமைபோல் இருக்கவேண்டும் என்ற எண்ணத்தை போக்கி எல்லாச் செயல்களையும் தைரியமுடனும் வீரத்துடனும் ஈடுபடச் செய்யும்.
1. இவர்கள் மிகவும் கோழைத்தனமாகவும் அமைதியாகவும் இருப்பார்கள்.
2. யார் எந்த வேலை சொன்னாலும் தட்டாமல் செய்வார்கள்.
3. இவர்கள் தங்கள் வேலைகளை விட்டுவிட்டு மற்றவர்கள் சொன்ன வேலைகளை செய்வதில் கருத்தாக இருப்பார்கள்.
4. இவர்கள் மனவலிமை குன்றியவர்கள்.
5. எதையும் எதிர்த்து பேசத் துணிவின்றி அடிமையாக நடந்து கொள்வார்கள்.
6. தனது உணர்ச்சிகளையும் விருப்பு வெறுப்புகளையும் வெளிக்காட்ட முடியாமல் உள்ளுக்குள் அடக்கி எப்போதும்சோர்வுடனே கானப்படுவார்கள். இத்தகைய குணம் உடையவர்களுக்கு சென்டாரி நல்ல மருந்து
.வைன் நபர்கள் மற்றவர்களை வேலை வாங்குவார்கள். சென்டாரி நபர்கள் மற்றவர்களுக்காக வேலை செய்வார்கள்.

 
 
5. செராட்டோ - Cerato
"தன்னம்பிக்கை இன்மை, பிறர் ஆலோசனையை எதிர்பார்த்தல்"

இது தன்னம்பிக்கை இல்லாதவர்களிடம் தன்னம்பிக்கையை ஏற்படுத்தும். மற்றவர்கள் உதவியை நாடாமல் சொந்தமாக ஆலோசிக்கும், முடிவெடுக்கும் திறனை ஊக்குவிக்கும்.

1. தன்னம்பிக்கை இல்லாதவர்கள்
2. எந்த காரியத்திலும் சரிவர முடிவு எடுக்கத் தெரியாதவர்கள்.
3. அப்படியே முடிவெடுத்தாலும் அதில் நம்பிக்கை இல்லாமல் மற்றவர்களிடம் ஆலோசனை கேட்டுக்கொண்டு இருப்பார்கள்.
4. எல்லா விஷயங்களிலும் கேள்வி கேட்டுக்கொண்டேஇருப்பார்கள்.
5. மற்றவர்களின் ஆலோசனையின் படியே காரியங்களை செய்வார்கள். இதனால் தோல்வியும் அடைவார்கள்.
6. தனக்கு எந்த வகை மருத்துவம் தேவை என்பதுகூட தெரியாமல் மற்றவர் ஆலோசனையின்படி மாறிமாறி கடைசியில் தவறான முடிவை எடுப்பார்கள்.
7. எந்த இடத்தில் என்ன பேசவேண்டும் எதைப் பேசவேண்டும் என்று தெரியாதவர்கள்.
8. எடுத்த காரியங்களை சரியாக முடிக்கும் முன்பே அடுத்த காரியங்களில் ஈடுபடுபவர்கள். இத்தகைய குணம் உடையவர்களுக்கு செராட்டோ நல்ல மருந்து.

6. செர்ரி ப்ளம் - Cherry plum

"கோபம், சகிப்புத்தன்மை இன்மை, உணர்ச்சி வசப்படுதல்"

  எதற்கெடுத்தாலும் கோபப்படுதல், உணர்ச்சிவசப்படுதல், சகிப்புத்தன்மை இல்லாமல் இருத்தல், உடலில் ஏற்படும் வலிகள், எரிச்சல் ஆகிய பிரச்சனைகளை போக்கி மனதில் அன்பு, அமைதி, நிதானத்தை ஏற்படுத்தும். தற்கொலை எண்ணத்தை போக்கும். 

1. அதிக கோபம் உணர்சிவசப் படுதல் ஆகியவற்றிற்கு செர்ரி ப்ளம் நன்கு வேலை செய்யும். கோபத்தையும் உணர்சிவசப்படுவதையும் கட்டுப்படுத்தும்.
2. கைகால் வலி, உடல் வலி, காயங்களினால் ஏற்படும் ஏற்படும் வலிகள் போன்றவற்றால் அவதிப்படுபவர்கள் புலம்பிக்கொண்டே இருப்பவர்களுக்கு இது நல்ல நிவாரணம் தரும். எல்லா வலிகளையும் கட்டுப்படுத்தும்.
3. கோடையில் ஏற்படும் அதிகப்படியான தாகத்தை தணிக்கும்.
4. உணர்ச்சி வசப்பட்டு கண்டபடி கத்துவது, கையில் கிடைத்த பொருள்களை எடுத்து வீசுவது போன்ற குணங்களை கட்டுப்படு
கட்டுப்படுத்தும்.
5. மனைவி குழந்தைகளைஅடித்து துன்புறுத்தி மனநிறைவு கொள்ளும் நபர்களுக்கு இது சிறந்த மருந்து.
6. காபி, புகையிலை பழக்கத்தில் இருந்து விடுபட்ட நினைப்பவர்களுக்கு இது நல்ல பயன்தரும்.
7. கோபம், ஆத்திரம், வெறித்தனமாக எல்லைமீறிய செயலில் ஈடுபடுவதை கட்டுப்படுத்திமனதிற்கு அமைதியைத் தரும்.

7. செஸ் நட் பட் - Chest Nut Bud
"ஞாபகமறதி, சோம்பல்"

 இது உடல் சோர்வு மன சோர்வு மற்றும் ஞாபகமறதியை போக்கி உற்சாகத்தையும் சுறுசுறுப்பையும் உண்டாக்கும். எந்த ஒரு செயலையும் கூர்ந்து கவனிக்கும் ஆற்றலை அதிகரிக்கும்.

1. அதிக சோம்பலும் ஞாபகமறதியும் கொண்டவர்கள்.
2. ஒரு விஷயத்தை கற்றுக்கொள்வதில் அக்கறை காட்ட மாட்டார்கள்.ஊன்றி கவனிக்க மாட்டார்கள்.
3. இவர்களுக்கு ஒரு விஷயத்தை ஒன்றுக்கு இரண்டு முறை சொல்லி புரியவைக்க வேண்டும்.
4. ஒரே தவறை திரும்ப திரும்ப செய்வார்கள். செய்யும் தவறுகளை அன்றே மறந்துவிட்டு மீண்டும் அதே தவற்றை திரும்ப செய்வார்கள்.
5. எடுத்த காரியத்தை முடிக்காமல் ஏதாவது சாக்கு போக்கு சொல்லி தப்பிக்கப் பார்ப்பார்கள்.
6. உழைக்காமல் சுலபமான வழியில் அல்லது குறுக்கு வழியில் அதிக பணம் சம்பாதிக்க ஆசைப்படுவார்கள்.
7. படிக்கும் பாடங்களை சரியாக புரிந்துகொள்ள முடியாமல் பள்ளிக்கு செல்ல மறுப்பவர்கள். பள்ளிக்கு அல்லது பணிக்கு செல்லாமல் ஊர்சுற்றுபவர்கள்.
 ஹனிசக்கிள் நபர்கள் கடந்தகால தவறுகளை எப்போதும் நினைத்து நினைத்து வருந்துவர். ஆனால் செஸ்ட் நட் பட் நபர்கள் கடந்தகால தவறுகளை மறந்துவிடுவர்.

 
8. சிக்கரி - Chicory

"மற்றவர் கவனிப்பை எதிர்பார்த்தல், பிறர் துணையை நாடுதல்"

 இது மனதில் தோன்றும் சுயநல எண்ணங்களை போக்கி பொது நலனின் அக்கரை கொள்ளச் செய்கிறது. ஒரு காரியத்தில் பிறர் துணையை நாடும் எண்ணத்தை போக்கி தன்னால் சுயமாக செய்யமுடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.

1. எல்லோரும் தன்னை கவனிக்க வேண்டும் என்று விரும்புவார்கள். யாரும் தன்னை கவனிக்கவில்லை என்று கவலைப்படுவார்கள்.
2. எப்போதும் மற்றவர் துணையை எதிர்பார்ப்பார்கள்.
3. எங்கேயும் வெளியில் செல்லவேண்டி இருந்தால் நண்பர்கள் அல்லது உறவினர்கள் துணையுடன் செல்வார்கள். தனியாக செல்ல அச்சப்படுவார்கள்.
4. அதிக சுயநலம் கொண்டவர்கள்.
5. மற்றவர்கள் தன்மீது அக்கறை உள்ளவர்களாக இருக்கவேண்டும் என்பதற்க்காக உடல் நிலை சரியில்லாத நோயாளிபோல் காட்டிக்கொள்வார்கள்.
6. தனிமையை போக்க நாய் பூனை போன்ற பிராணிகளிடம் பழகுவார்கள்.
7. பிறர் பொருளுக்கு ஆசைப்படுபவர்கள், கஞ்சத்தனம் கொண்டவர்கள்.
8. மற்றவர்கள் மீது அதிக அக்கறை உள்ளவர்கள் போல் காட்டிக் கொள்வார்கள்.
9. மற்றவர்கள் விஷயங்களை தெரிந்துகொள்ள ஆர்வம் கொண்டவர்கள். 10. ஒரு செய்தியை மிகைப்படுத்தி கூறும் தன்மையை கொண்டவர்கள்.

 
9. க்ளமெட்டீஸ் - Clematis

"கனவு,கற்பனை, மூர்சையடைதல், சுயநினைவிழத்தல்"

மயக்க நிலை, சுய உணர்வு இல்லாமை இருத்தல், மனதில் தேவையற்ற எண்ணங்கள் தோன்றுதல், செயலில் கவனமின்மை போன்ற சூழலில் கிளமெட்டிஸ் பயன்படும்.

1. இவர்கள் நிகழ்காலத்தில் வாழாமல் எப்போதும் ஆகாய கோட்டை கட்டி வாழ்பவர்கள்.
2. எப்போதும் எதைப்பற்றியேனும் பகல் கனவு கண்டு கொண்டு இருப்பார்கள்.
3. அதிகமாக ஞாபகமறதி இருக்கும்.
4. செய்யும் தொழிலில் ஈடுபாடு இருக்காது.
5. எப்போதும் ஏதாவது சிந்தனையில் இருப்பார்கள்.
5. போதை பழக்கத்திற்கு அடிமையானவர்களாக இருப்பார்கள்.
6. கடினமான சிக்கலான வேலைகளை தவிர்ப்பார்கள்.
7. ஆடம்பரமாக பணக்காரராக இருப்பது போல் கற்பனை செய்து மகிழ்வார்கள்.
8.தூக்கத்தை அதிகம் விரும்புவார்கள்.
9. தனக்கு மிகவும் பிரியமானவர்கள் இறந்துவிட்டால் தானும் தற்கொலை செய்துகொள்ளலாமா என்று எண்ணுவார்கள்.
10. தனிமையை விரும்புவார்கள்.

 
10. க்ராப் ஆப்பிள் - Crab Apple

"சுத்தம் விரும்பி, அற்ப விஷயங்களுக்கு முக்கியத்துவம் "

எந்த பொருளை பார்த்தாலும் அருவெருப்புக் கொள்ளுதல் ,எரிச்சலடைதல், மிகவும் சின்னச்சின்ன விஷயங்களுக்கு கவனம் செலுத்தி மனதை வருத்திக் கொள்ளுதல் போன்ற பிரச்சனைகளை தீர்க்கும். 

1. சின்ன சின்ன அற்ப விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
2. அசுத்தத்தைக் கண்டால் இவர்களுக்கு பிடிக்காது. வாயையும் மூக்கையும் பொத்திக் கொள்வார்கள்.
3. அசுத்தமான இடங்களுக்கு போவதை தவிர்ப்பார்கள். அருவெருப்பு கொள்வார்கள்.
4. அடிக்கடி வீட்டை சுத்தம் செய்தல், கைகளை அடிக்கடி கழுவிக்கொண்டே இருத்தல் போன்ற காரியங்களில் ஈடுபடுவார்கள்.
5. அடிக்கடி குளிப்பது கழுவிய பொருள்களை மீண்டும் மீண்டும் கழுவுவது.
6. அடுத்தவர்கள் பயன்படுத்திய தொடவோ பயன்படுத்தவோ மாட்டார்கள்.
7. வெளியிடங்களில் ஹோட்டலில் சாப்பிட்ட தயங்குவார்கள்.

 
11. எல்ம் - Elm

"சந்தேகம், கவலை "

 தங்கள் திறமையின் மேல் சந்தேகம் கெள்ளுதல். தனக்கு போதுமான திறமை இல்லை என்ற எண்ணம் அடிக்கடி தோன்றுதல், எந்த செயல்களிலும் ஈடுபட தயக்கம் போன்ற சந்தர்ப்பங்களில் இந்த மருந்து பயன்படுகிறது.

1. தாம் செய்கின்ற செயல்களைப் பற்றி சரியாகத்தான் செய்கின்றோமா என்ற எண்ணத்துடனே செய்வார்கள்.
2. செய்த செயலில் முழு திருப்தி இருக்காது. இன்னும் சிறப்பாக செய்திருக்கலாம் என்று எண்ணுவார்கள்.
3. பொறுப்புகள் அதிகமாகும்போது ஐயோ இவற்றை சமாளிக்க முடியுமா என்று திகைத்து போவார்கள்.
4. அரசியல், மருத்துவம், பொதுப்பணியில் இருப்பவர்கள் முடிவுகள் எடுக்க யோசிக்கும்போது இந்த மருந்து கைகொடுக்கும்.

 
12. ஜென்ஷன் - Gentian

"எல்லாவற்றிலும் அவநம்பிக்கை, வாழ்க்கையில் துயரமான சம்பவங்களைமட்டுமே நினைத்தால், வாழ்வில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணமே இருக்காது"

எல்லாவற்றிலும் அவநம்பிக்கை, வாழ்க்கையில் ஏற்பட்ட துயரச் சம்பவங்களை மட்டும் எண்ணி வருந்துதல், மனதில் எப்போதும் எதிர்மறை எண்ணங்களாகவே தோன்றுதல், தோற்றுவிடுவோமோ என்ற சிந்தனை. ஆகிய குணமுடையவர்கள் ஜென்ஷன் எடுத்துக் கொள்ளாலாம். 

1. எப்போதும் முகத்தில் மகிழ்ச்சியே இருக்காது. ஒருவித சோகமாகவே காணப்படுவார்கள்.
2. எதிர்மறையான எண்ணத்துடன் சிந்திப்பார்கள். எதிர்மறையான பேச்சுக்களையே பேசுவார்கள்.
3. எதிலும் நம்பிக்கை இன்றி உற்சாகம் இல்லாமல் காணப்படுவார்கள்.
4. எனக்கு விதித்தது இவ்வளவுதான், நான் நினைத்தது எதுவுமே நடக்காது எல்லாம் என் தலையெழுத்து என்று புலம்புவார்கள்.
5. வெற்றி தோல்வியை சமமாக பாவிக்கும் எண்ணம் இருக்காது. தோற்றுத்தான் போவோம் என்று நினைப்பார்கள்.
இத்தகைய எண்ணம் உடையோர் ஜென்சன் எடுத்துக்கொண்டால் எதிர்மறை எண்ணங்கள் மாறி சுறுசுறுப்புடன் செயல்படுவார்கள்.

13. கோர்ஸ் - Gorse

"நம்பிக்கையின்மை, விரக்தி"

நம்பிக்கையின்மை ,எவ்வளவு மருந்து மாத்திரைகள் சாப்பிட்டாலும் இனி நம் நோய் குணமடைய போவதில்லை என்று அவநம்பிக்கை கொண்டவர்களுக்கு கோர்ஸ் சிறந்த மருந்து.
 
1.இனி இறந்து விடுவோம் என்று கருதுபவர்கள்.
2. எத்தனையோ டாக்டர்களை பார்த்தாச்சு எல்லாம் வேஸ்ட் என கருதுபவர்களுக்கு இது தன்நம்பிக்கை கொடுக்கும்.
3. நாள்பட்ட நோயால் அவதிப்படுபவர்கள்.(ஆஸ்துமா, நீரிழிவு, இரத்த அழுத்தம் )
4. இந்த மருந்து மட்டும் நம்மை காப்பாத்தவா போகுது என்று எதோ கடமைக்கு மருந்து சாப்பிடுவது. போன்ற அவநம்பிக்கை எண்ணம் உடையோருக்கு இம்மருந்து நம்பிக்கை கொடுக்கும்.

 
14. ஹீதர் - Heather

"அதிக கவலை, மன வேதனை அதை எல்லோரிடமும் சொல்லிக்கொண்டு இருப்பார்"

அளவுக்கு அதிகமாக கவலை மற்றும் மனவேதனை கொண்டோர். அதை மற்றவர்களிடம் சொன்னால் மனதில் உள்ள பாரம் குறையும் என கருதுவோர் ஹீதர் எடுத்துக் கொள்ளலாம். 

1. இவர்கள் தங்களுடைய வேதனை, கவலை, வறுமை, நோய் பற்றி எப்போதும் மற்றவர்களிடம் புலம்பிக்கொண்டே இருப்பார்கள்.
2. அப்படி சொல்வதினால் மன பாரம் குறைத்ததாக கருதுவார்கள்.
3. மற்றவர்கள் தமது பேச்சை கவனிக்கிறார்களோ இல்லையோ அதைப்பற்றி கவலையின்றி தொடர்ந்து பேசிக்கொண்டே இருப்பார்கள்.
4. மற்றவர்கள் சொல்வதை இவர்கள் கவனிக்க மாட்டார்கள். அக்கறை படவும் மாட்டார்கள்.
5. தனிமையை இவர்கள் விரும்ப மாட்டார்கள்.
6. மற்றவர்கள் கவனத்தை ஈர்க்க எல்லோரிடமும் சகஜமாக தொட்டுப் பேசும் பழக்கம் உடையவர்.
ஊர் சுற்றுவதில் விருப்பம் கொண்டவர்.
7. அறுவை கேஸ் என்று பெயர் பெற்றவர்கள்.
இவர்கள் ஹீதர் சாப்பிட்டால் பேச்சில் அடக்கம் அமைதி உண்டாகும் தன் பணியில் சிறப்பாக ஈடுபடுவர்.

 
15. ஹால்லி - Holly

"பொறாமை, வெறுப்பு, விரோதம், போன்ற எதிர்மறை குணங்களை கொண்டவர்"

 மற்றவர்கள்மீது அதிக பொறாமை, வெறுப்பு, விரோதம் போன்ற எண்ணங்கள் மனதில் தோன்றிக்கொண்டே இருந்தால் அவர்கள் ஹால்லி எடுத்துக் கொள்ளலாம் இதனால் தீய எண்ணங்கள் விலகி நல்ல எண்ணங்கள் தோன்றும்.

1. ஹால்லி தேவையில்லாமல் அதிகமாக உணர்சி வசப்படுபவர்களுக்கான மருந்தாகும்.
2. போட்டி, பொறாமை, சந்தேகங்களால் எப்போதும் மனதில் நிம்மதி இல்லாமல் கடுகடுப்புடன் இருப்பார்கள்.
3. நண்பர்கள், உறவுகளுக்குள் பிரிவினை உண்டாக்குவார்கள்.
4. தேவையற்ற கடுமையான வார்த்தைகளை பேசி அடுத்தவர்களை நிம்மதி இழக்கச் செய்து தானும் நிம்மதி இல்லாமல் இருப்பார்கள்.
5. விட்டுக்கொடுக்கும் தன்மையோ பணிவுடன் நடந்து கொள்ளும் தன்மையோ இவர்களிடம் இருக்காது.
6. எப்போதும் கோபத்தோடும் பொறாமை எண்ணத்துடன் இருப்பதால் உடல் நலன் குன்றி கானப்படுவார்கள்.
இத்தகைய குணமுடையோர் ஹால்லி எடுத்துக்கொண்டால் மனதில் அன்பு பாசம் கருணை சகிப்புத்தன்மை அதிகரித்து எல்லோரிடமும் பிரியமுடன் நடந்தது கொள்வார்கள்.
கணவன் மனைவி சண்டை, மாமியார் மருமகள் சண்டைக்கு இது ஏற்ற மருந்து.

 
16. ஹனிசக்ள் -Honeysuckle

"கடந்த காலத்தை எண்ணி வருந்திக் கொண்டிருந்தால்"

 தினமும் கடந்த காலத்தில் ஏற்ப்பட்ட விருப்பு வெறுப்புகள், சம்பவங்களை எண்ணி எண்ணி வருந்திக் கொண்டிருப்போருக்கு ஹனிசக்ள் ஏற்றது.

1. கடந்த காலத்தில் தவறவிட்ட வாய்ப்புகளை எண்ணி வருந்திக் கொண்டிருப்பர்.
2. நடக்க வேண்டியதை விட்டுவிட்டு கடந்தகால நிறைவேறாத ஆசைகள் கனவுகள் பற்றி பேசி புலம்பிக்கெண்டிருப்பர்.
3. உடன் இருப்பவர்களை மறந்துவிட்டு இறந்து போனவர்களைப் பற்றி கவலைப் படுவார்கள்.
4. சிறுவயதில் நான் ராஜா மாதிரி இருந்தேன் ராணி மாதிரி இருந்தேன் என்று புலம்புவார்கள்.
இப்படிப்பட்டமனிதர்கள் ஹனிசக்ள் எடுத்துக் கொண்டால் கடந்தகால நினைவுகளை துயரங்களை மறந்து நிகழ்காலத்தில் நிம்மதியாக வாழ்வார்கள்.

 
17. ஹார்ன் பீம் -Hornbeam

"சோர்வு, கலைப்பு, மலைப்பு"

தனக்கு போதுமான ஆற்றல் இல்லை என்று கருதி சோம்பேரித் தனமாக இருத்தல், காலையில் எழும்போதே கடும் சோர்வு, ஏதாவது ஊட்டச்சத்து பானம் சாப்பிட்டால் நன்றாக இருக்கும் என்று கருதுவோர் ஹார்ன் பீம் எடுத்துக்கொள்ளலாம். 

1. வேலை செய்ய தொடங்கும் முன்பே அய்யோ இதை என்னால் செய்ய முடியுமா என்று மலைத்துப் போவார்கள்.
ஆனால் வேலை செய்ய தொடங்கிவிட்டால் திறம்பட செய்து முடிப்பார்கள்.
2. காலையில் எழும்பொழுதே இந்த வேலையை எப்படி செய்வேனோ என்று ஒரு சோர்வுடன் கானப்படுவார்கள்.
3. இவர்கள் மனதாலும் உடலாலும் சோர்வு மிக்கவராக கானப்படுவார்கள் ஆனால் வேலை செய்ய தொடங்கினால் படபடவென்று உற்சாகத்துடன் செய்து முடிப்பார்கள்.
இவர்களுக்கு ஹார்ன் பீம் கொடுத்தால் எந்த வித சோர்வும் இன்றி உற்சாகமாக வேலை செய்வார்கள் இவர்கள் நல்ல திறமைசாலிகள்.

18. இம்பேஷன்ஸ் - Impatiens

"அவசரம், நிதானம் இன்மை, எரிச்சல்"

எரிச்சல் அடைதல், எதிலும் நிதானமின்மை, எல்லாவற்றிலும் அவசரம். எல்லாம் உடனே நடக்க வேண்டும் என்ற மனநிலை கொண்டோர் இம்பேஷன்ஸ் எடுத்துக்கொள்ளலாம். 

1. இம்மருந்து பொறுமை இல்லாத எதை எடுத்தாலும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று வேலை செய்யும் அவசர காரர்களுக்கு ஏற்ற மருந்து.
2. எந்த காரியத்திலும் நிதானம் இல்லாமல் அவசர அவசரமாக தவறான முடிவுகளை எடுப்பார்.
3. எப்போதும் பதற்றத்துடன் நிலைகொள்ளாமல் இருப்பார்கள்.
4.எந்நேரமும் டென்ஷனாக அடுத்தவர்களை அதட்டிக் கொண்டும் இருப்பார்கள்.
5. தங்கள் வேலைகளை தாங்களே செய்து கொள்வார்கள். மற்றவர்கள் உதவியை நாடமாட்டார்கள்.
6. இவர்கள் நடை உடை பாவனையில் ஒரு அவசரம் இருக்கும். மற்றவர்களையும் அவசரப் படுத்துவார்கள்.
7. வேகமாக பேசுவதும் விரைவாக புரிந்துகொள்ளும் தன்மை உடையவர்கள்.
இவர்கள் இம்பேஷன்ஸ் மருந்தை எடுத்துக் கொண்டால் மனதில் பொறுமை நிதானம் ஏற்படும் எடுக்கப்படும் காரியம் எல்லாம் வெற்றி பெரும் .

 
19. லார்ச் - Larch

"தன்னம்பிக்கை இன்மை, தோல்வி மனப்பான்மை"

தன்னம்பிக்கை சிறிதும் இல்லாமல் எந்த முயற்சியிலும் ஈடுபடாமல்; நமக்கு தோல்விதான் கிட்டும் நமக்கு திறமை போதாது என்று கருதிக் கொண்டிருப்போர் லார்ச் எடுத்துக்கொள்ளலாம். 

1. பல திறமைகள் இருந்தும் தன்நம்பிக்கை இல்லாமல் இருப்பாவர்களுக்கு இம்மருந்து கைகொடுக்கும்.
2. திறமை இருந்தும் தன்னால் முடியாது என்ற எண்ணத்தால் முன்னுக்கு வராமல் இருப்பவர்கள்.
3. பணியை தொடங்கும் முன்பே தோல்வி பயத்தில் பின்வாங்குபவர்.
4. ஒரு விஷயத்தை தாங்களே சொல்ல பயந்து கொண்டு நண்பர்களிடம் சொல்லி சொல்லச் சொல்லுவார்கள்.
5. சபையில் பேச அஞ்சுவார்கள். தடுமாறுவார்கள்.
இத்தகைய குணமுள்ளோர் லார்ச் எடுத்துக் கொண்டால் எதையும் எதிர்கொள்ளும் துணிச்சல் ஏற்படும். தைரியம் பிறக்கும்.
நேர்முகத் தேர்வுகளில் பங்குகொள்ள இது மிகவும் உதவும்.

 
20. மிமுலஸ் - Mimulus

"பயம்"

 தெளிவாக தெரிந்த காரணங்களினால் ஏற்படும் பயம் அதை வெளியே சொல்ல வெட்கப்படுதல் இத்தகைய மனப்போக்கு உடையோர் மிமுலஸ் எடுத்துக்கொள்ளலாம்

1. குறிப்பிட்ட காரணத்தை சொல்ல முடிகின்ற பயம்.
2. மேடையில் பேச பயம், நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ள பயம், தனியாக வெளியூர்களுக்கு செல்ல பயம்,
நாய், பூனை, கரப்பான் பூச்சியை கண்டு பயம்.
3. பரிட்சை எழுத பயம், ஆசிரியர் அடித்துவிடுவாரோ என்று மாணவர்களுக்கு ஏற்படும் பயம்.
இப்படி சொல்லத் தெரிந்த பயங்களுகு மிமுலஸ் நல்ல மருந்து. இது இவ்வித பயங்களை போக்கி தைரியத்தை தன்னம்பிக்கையை கொடுக்கும்
மாணவர்களுக்கு பெண்களுக்கு இம் மருந்து அதிகம் பயன்படும்.

21. மஸ்டர்டு Mustard
"காரணம் இல்லாத கவலை, சோர்வு"

 காரணம் ஏதும் இன்றியே சிலர் எப்போதும் கவலைப் பட்டுக்கொண்டே இருப்பர் அதனால் சோர்வாகவும், உடல்நலக் குறைவாகவும், வாழ்க்கையில் ஒரு பிடிப்பு இல்லாமல் காணப்படுவர் .மஸ்டர்டு அவர்களுக்கு ஏற்ற மருந்து.

1. இவர்கள் எதற்காக கவலைப் படுகிறோம் என்று தெரியாமல் கவலைப் படுவார்கள்.
2. என்னமோ தெரியலை மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு என்பார்கள்.
3. மற்றவர்களுடன் சகஜமாக பேசி பழக மாட்டார்கள். எப்போதும் எதையயோ பரிகொடுத்த மாதிரி ஊம் மென்று இருப்பார்கள்.
4. ஏதோ நடக்கக்கூடாதது நடந்துவிட்டது போல் அவர்களை அறியாமலேயே கண்ணீர் வடிப்பர்.
5. மகிழ்ச்சியான சூழ்நிலையை கூட துயரமான சூழ்நிலையாக மாற்றிவிடுவர்.
இவர்கள் இம் மருந்தை எடுத்துக் கொண்டால் தேவையற்ற கவலைகள் நீங்கி மகிழ்ச்சியான மனநிலை உருவாகும்.

22. ஓக் - Oak

"விடா முயற்சி, அதீத நம்பிக்கை"

 செய்ய முடியாது என்று தெரிந்தும் விடாமல் தன் தகுதிக்கு மீறீய ஒரு காரியத்தில் இறங்கி தன் உடலையும் மனதையும் வருத்திக்கொண்டு கஷ்டப்படுவார்கள்.தோல்வி மீது தோல்வி வந்தாலும் விடாமல் அதே காரியத்தில் ஈடுபடுவார்கள் அத்தகைய பிடிவாதக் காரர்களுக்கு ஓக் ஏற்ற மருந்து

1. இவர்கள் ஒரு காரியத்தை எடுத்தால் வெற்றி அடையும் வரையில் விட மாட்டார்கள். தோல்வி ஏற்படும் நஷ்டம் ஏற்படும் என்று தெரிந்தால் கூட எப்படியாவது வெற்றி அடையவேண்டும் என்று தன்நம்பிக்கையுடன் செயல்படுவார்.
2. முடியாது! நடக்காது! என்ற பேச்சுக்கே இடம்தர மாட்டார்கள். துணிந்து செயல் படுவார்கள்.
3. சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையில் அளவுக்கு அதிகமாக உழைத்து உடம்பை வருத்திக் கொள்வர்.
4. இம்மருந்து அனாவசியமான வேலைகளில் ஈடுபடுவதை தடுக்கிறது.வாழ்க்கையில் ஏற்படும் தேவையற்ற சிரமங்களை குறைக்கிறது.

23. ஆலிவ் - Olive

"சோர்வு, களைப்பு"

 இனிமேல் முயற்ச்சி செய்ய சக்தி இல்லை என்று கருதி உடலாலும் உள்ளத்தாலும் வலிமையற்று தளர்ந்துபோய் கிடப்பவர்களுக்கு ஏற்ற மருந்து.

1. சிறிதுநேரம் வேலை செய்தாலும் களைத்து விடுபவர்களுக்கு இம்மருந்து பயன்படுகிறது.
2. இவர்கள்எடுத்த பணியை உடனே முடிக்க முடியாது. இடையிடையே ஓய்வெடுத்து பணிகளை செய்வர்.
3. உடல் பலகீனம் கொண்டவர்.
4. மாணவர்கள், வீட்டில் கடுமையாக உழைக்கும் பெண்கள், உடற்பயிற்சி செய்வோர், நீண்ட நேரம் உழைப்பவர்கள்
ஆகியோருக்கு இம்மருந்து நல்ல பலன் தரும்.

24. பைன் - Pine

"தாழ்வு மனப்பான்மை, குற்ற உணர்வு"

காரணமின்றி ஏதோ குற்ற உணர்வால் தம்மைத்தாமே தாழ்த்திக்கொண்டும் கடிந்துகொண்டும் மனதளவிலும் உடலளவிலும் நிம்மதியின்றி காணப்படுவார்கள் .பைன் இவர்களுக்கு ஏற்றது.

1. இவர்கள் எந்த வேலை செய்தாலும் அதில் முழு திருப்தி இருக்காது இன்னும் நன்றாக செய்திருக்கலாம் என்று வருத்தம் இருந்து கொண்டே இருக்கும்.
2. மற்றவர்கள் செய்த குற்றம் குறைகளை தாம் செய்த குற்றமாக தன் மேல் பழிபோட்டுக் கொள்வர்.
3. மனசாட்சிக்கு பயந்து நடப்பவர்கள்.
4. எப்போதும் நான் அதிஷ்டம் இல்லாதவன் எதற்கும் லாயக்கு இல்லாதவன் என்று புலம்புவார்கள்.
5. சண்டை சச்சரவுகளை விரும்பாதவர்கள். மிகவும் விசுவாசமாக நடந்து கொள்வார்கள்.
7. எப்போதும் ஏதாவது குற்ற உணர்வுடன் இருப்பார்கள்.
பைன் குணம் உள்ளவர்கள் வில்லோவின் குணத்திற்கு எதிர்மறையாக நடந்து கொள்வார்கள்.

25. ரெட் செஸ்ட் நட் - Red Chest Nut

"மற்றவர்களைப் பற்றிய கவலை, பயம்"

காரணமின்றி உறவினர்,நண்பர்களுக்கு அல்லது தாம் வளர்க்கும் செல்லப் பிராணிகளுக்கு ஏதாவது ஆபத்து  நேர்ந்துவிடுமோ என்ற கவலையில் முழ்கிக் கிடப்பவர்களுக்க்கு

1. பிறர் நலனில் தேவைக்கு அதிகமாக அக்கறை கொள்வார்கள். அவர்களுக்கு ஏதாவது நடந்துவிடுமோ என்று பயப்படுவார்கள்.
2. வேண்டியவர்கள் யாராவது வெளியூர் சென்றால் அடிக்கடி போனில் தொடர்பு கொண்டு விசாரித்துக்கொண்டே இருப்பார்கள்.
3. மனதில் எதிர்மறையான சிந்தனையே ஓடிக்கொண்டிருக்கும்.
4. சுயநலம் இன்றி பிறர் நலனில் அக்கறை கொண்டவர்.

26. ராக் ரோஸ் - Rock Rose

"திகில், பீதி"

 அச்சம், பயம், பதற்றம் போன்ற காரணங்களால் உணர்வற்று கிடப்பவர்களுக்கு ராக் ரோஸ்.

1. உடைகளில் தீ பற்றிக்கொண்டாலோ,ஏதாவது விபத்து நடந்தாலோ, நண்பர்கள் இறப்பு செய்தியை கேட்டாலோ இந்த மாதிரி சம்பவங்களில் மிகவும் பயங்கரமாக பீதி அதிர்ச்சி அடைவர். இதனால் உடல்நிலை பாதிக்கப்பட்டு படுத்த படுக்கை ஆகிவிடுவர்.
2. ஏதாவது விபத்தை நேரடியாக பார்த்தால் அதிர்ச்சியில்மயங்கி விழுந்து விடுவார்கள்.
அப்போது ராக் ரோஸ் இரண்டொரு துளி கொடுத்தால் உடனே மயக்கம் தெளியும்.
3. யாராவது பயமுறுத்தினாலோ, இரத்தத்தை பார்த்தாலோ பேரதிர்ச்சிக்கு உள்ளாவர்.
இவர்களுக்கு இம்மருந்து நல்ல பலன் கொடுக்கும்.

27. ராக் வாட்டர் - Rock Water

"கொள்கை வாதிகள், பிடிவாதக்காரர்கள்"

 எதற்கும் விட்டுக்கொடுக்காமல் பிடிவாதம் பிடிக்கும் பிடிவாதக் காரர்களுக்கு இது ஏற்ற மருந்து

1. இவர்கள் சிறந்த கொள்கை வாதிகளாக இருப்பார்கள். எதற்காகவும் தனது கொள்கையை விட்டுக்கொடுக்க மாட்டார்கள். தனது கொள்கையை அடுத்தவர்கள் மீது தினிக்கவும் மாட்டார்கள்.
2. இவர்கள் சுயநலம் இல்லாது சமுதாய நலனில் அக்கறை உள்ளவர்கள்.
3. எளிமையாகவும் பிறருக்கு எடுத்துக்காட்டாக விளங்கவேண்டும் என்று கருதுபவர்கள்.
4. மிகவும் பிடிவாத காரர்கள்.
5. பிடிவாதம் பிடிக்கும் குழந்தைகளுக்கு இது நல்ல மருந்து.

28. ஸ்க்ளெராந்தஸ் - Seleranthus

"உறுதியற்ற தன்மை, சந்தேகம், குழப்பம், சோம்பேரித்தனம்"

ஒரு செயலில் தகுந்த முடிவெடுக்கத் தெரியாமல் குழம்புதல், உறுதியில்லாமல் தள்ளிப்போடுதல் ஆகிய குணமுடையோர்

1. இதைச் செய்வதா அதைச் செய்வதா என்று முடிவு எடுக்க முடியாமல் குழம்பிக் கொண்டிருப்பார்.
2. சோம்பேறித்தனம் கொண்டவர்கள். பிறகு பார்த்துக் கொள்வோம், நாளை செய்து கொள்வோம் என்று ஒத்திப் போடும் தன்மை கொண்டவர்கள்.
3. திடமான ஒரு முடிவை எடுக்க முடியாமல் எண்ணத்தை அடிக்கடி மாற்றிக்கொண்டே இருப்பார்கள்.
4. வேலைகளை சேர்த்து வைத்துக்கொண்டே போய் கடைசியில் எதைச் செய்வது எப்படிச் செய்வது என தடுமாறுவர்.
"ஆற்றில் ஒரு கால்! சேற்றில் ஒரு கால்!"
என்னும் பழமொழி இவர்களுக்கு பொருந்தும்.
5. கடைகளுக்கு சென்றால் வீட்டைப் பூட்டினோமா!? சுவிட்ச் ஆப் செய்தோமா! என்ற குழப்பத்தில் இருப்பர்.
6. பள்ளி மாணவர்கள் அன்றைய பாடங்களை அன்றே படித்து முடிக்க இது உதவும்.

29. ஸ்டார் ஆப் பெத்லகேம் - Star of Bethlehem

"அதிர்ச்சி, உடல் நலக்குறைவு"

 அதிர்ச்சியின் காரனமாக உள்த்தால் உடம்பால் பாதிக்கப்பட்ட நிலையில் இருப்போர்.

1. விபத்தில் அல்லது அதிர்ச்சியில் பாதிக்கப்பட்டு மயக்க நிலையில் இருப்பாவர்களை உடனே மயக்கம் தெளியச் செய்கிறது.
2. காதல் தோல்வி, வியாபார நஷ்டம், தேர்வில் தோல்வி போன்றவற்றால் பாதிக்கப்பட்டு நோய்வாய்பட்டு கிடப்பவர்களை இது குணப்படுத்துகிறது.
3. பலகீனமான மனம் கொண்டவர்களுக்கு இம்மருந்து பெரிதும் உதவும்.
4. சிறுவயதில் ஏற்ப்பட்ட அதிர்ச்சியினால் ஏற்ப்பட்ட பாதிப்புகள்.
5. பழைய விரும்பத்தகாத சம்பவங்களை நினைத்து பயப்படுதல்.

30. ஸ்வீட் செஸ்ட் நட் - Sweet Chest Nut

"அளவுக்கு மீறிய துன்பம், நம்பிக்கை அற்ற நிலை"

அளவுக்கு மீறிய துன்பத்தாலும் அவநம்பிக்கையாலும் தளர்ந்து தனிமையில் இருத்தல் தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் கொண்டவர்களுக்கு இது ஏற்ற மருந்து. 

1. பல வருடங்களாக துன்பத்தை அனுபவித்து மனம் ஒடிந்து விட்ட நிலை
2. தனிமையில் முடங்கிக் கிடத்தல்
3. எல்லோரும் கைவிட்டு விட்டார்கள் என்ற மனப்போக்கு.
4. இனி கடவுள்தான் நமக்கு துணை என்று ஆன்மிகத்தில் அதிக நாட்டம் கொள்ளுதல்.
5. இனி நமக்கு எதிர்காலம் என்று ஒன்று இல்லை என்று எண்ணி மிகுந்த துன்பம் வேதனை அடைபவர்கள்.
இது மனச்சோர்வு, நம்பிக்கை இழந்த நிலை கவலையை போன்றவை ஏற்கப்படாமல் பாதுகாக்கும்.

31. வெர்வைன் - Vervaine

"பேரார்வம், அதிக உழைப்பு, சக்திக்கு மீறிய செயல்"

கடுமையான உழைப்பால் மன அழுத்தம் மற்றும் மன இருக்கமாகவும் சோர்வாகவும் காணப்படுபவர்களுக்கு 

1. அளவிற்கு அதிகமாக உழைப்பவர்கள்.
2. எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டு செய்வது. நேரம் போதவில்லை என்று புலம்புவது.
3. மற்றவர்களைவிட தமக்கு அதிகம் தெரிந்திருக்க வேண்டும் என்று விரும்புவது.
4. எதற்கெடுத்தாலும் நேரம் இல்லை நேரம் இல்லை என்ற வார்த்தையை பிரயோகிப்பது.
5. பயனை எதிர்பாராமல் திறமையாக பணிகளை செய்து முடிப்பது.

32. வைன் - Vine

"அதிகாரம், ஆணவம், ஆதிக்கம்"

எதற்கும் விட்டுக்கொடுத்து போகாமல் அதிகாரம் செசெய்துகொண்டு சண்டையிட்டுக் கொண்டும் இருப்பவர்கள்

1. எப்போதும் எல்லோரையும் அதிகாரம் செய்து கொண்டே இருப்பார்கள்.
2. வீட்டில் கணவன் மனைவி குழந்தைகளை அதட்டிக் கொண்டும் மிரட்டிக் கொண்டும் இருப்பார்கள்.
3. தமக்கு கீழே வேலை செய்பவர்களை துச்சமாக மதிப்பார்கள்.
4. மற்றவர்கள் தன்னை புகழ்ந்து கொண்டே இருக்கவேண்டும் என நினைப்பார்கள்.
5. இவர்கள் பேச்சுக்கு மறு பேச்சு பேசினால் கோபம் கொள்வார்கள்.

இவர்களுக்கு வைன் கொடுக்கப் பட்டால் மற்றவர்களிடம் அன்புடனும் அனுசரனையுடனும் நடந்தது கொள்வார்கள்.

33. வால்நட் - Walnut

"தீய பழக்க வழக்கங்கள்"

  டீ, காபி, புகைபிடித்தல்,மது போன்ற கெட்ட பழக்கங்களில் இருந்து விடுபட நினைப்பவர்கள், தட்பவெட்ப நிலை மாறுபாடு மற்றும் இடமாற்றத்தால் பாதிப்புக்கு உள்ளானவர்கள்.

1. டீ, காபி, புகைபிடித்தல்,மது போன்ற கெட்ட பழக்கங்களில் இருந்து விடுபட்ட வால்நட் எடுத்துக் கொள்ளலாம்.
2. பல ஆண்டுகளாக மது புகையிலை பயன்படுத்தினாலும் வால்நட் எடுத்துக்கொண்டால் அதிலிருந்து விடுபடலாம்.
3. குழந்தைகள் பால் குடி மறக்க, கை சூப்பும் பழக்கத்தை மறக்க.
4. புதிய இடங்களில் குடிபுகுதல், புதிதாக பணிக்கு செல்வோர். பள்ளி கல்லூரி மாற்றிச் செல்வோர் அந்த புதிய இடங்களில் இயல்பாக பழக வால்நட் எடுத்துக் கொள்ளலாம்.
5. புதிதாக பூனை நாய் கிளி போன்ற செல்லப் பிராணிகள் வாங்குவோர் அதற்கு வால்நட் குடுத்தால் இடத்திற்கு தக்கவாறு இயல்பாக பழகும்.

34. வாட்டர் வைலெட் - Water Violet

"கர்வம், தனிமை"

1. இவர்கள் தனியாக ஏதாவது செய்துகொண்டு இருப்பார்கள். மற்றவர்கள் விஷயங்களில் தலையிட மாட்டார்கள். மற்றவர்கள் இவர்கள் விஷயத்தில் தலையிடுவதை விரும்பமாட்டார்கள்.
2. இவர்களுக்கு சும்மா இருக்க பிடிக்காது. எதையாவது செய்து கொண்டே இருப்பார்கள்.
3. உடல் நலக்குறைவு ஏற்ப்பட்டாலும் சரியான சிகிச்சை எடுக்க மாட்டார்கள். தானாகவே சரியாகிவிடும் என்று இருந்து விடுவார்கள்.
4. இவர்கள் தனிமை விரும்பி. மற்றவர்களிடம் இருந்து ஒதுங்கியே இருப்பார்கள்.
5. மனதை ஒரு நிலைப்படுத்தி கவனமாக செயல்படுவார்கள்.

35. ஒயிட் செஸ்ட் நட் - White Chest Nut

தேவையற்ற எண்ணங்கள், வாக்குவாதம்"

தேவையற்ற சிந்தனைகளாலும் எண்ணங்களாலும் மனதலவில் நிம்மதியற்ற நிலையில் இருப்பவர்கள். 

1. ஒரே செயலை திரும்ப திரும்ப செய்து கொண்டே இருப்பார்கள்.
2. தேவையற்ற சிந்தனைகளை சிந்தித்து சிந்தித்து மனதை வருத்திக் கொள்வார்கள்.
3. மனதை ஒருநிலைப் படுத்த முடியாமல் அவதிப்படுவர்.
4. பேய் பிசாசு போன்றவற்றில் நம்பிக்கை உடையவர்.
5. எங்காவது வெளியே சென்றால் தேவையில்லாமல் அங்கே உள்ள மரங்களை எண்ணிப் பார்பது மாதிரி செயல்களில் ஈடுபடுவர்.
6. தேவையில்லாத விஷயங்களை மனதில் இருந்து அகற்ற முடியாமல், இரவில் தூக்கம் இன்றி தவிப்பர்.

இவர்கள் ஒயிட் செஸ்ட் நட் எடுத்துக் கொண்டால் மனதில் தேவையற்ற சிந்தனைகள் தோன்றாது. மனம் ஒருநிலைபடும்.

36. வைல்ட் ஒட் - Wild oat

"நிலையில்லாமை,தடுமாற்றம், திருப்பதி இன்மை"

தமது செயல்களில் பற்றோ உறுதியோ இல்லாமல் இருத்தல் அடிக்கடி மனதை மாற்றிக்கொண்டே இருப்பவர்கள்

1.இவர்களுக்கு தனக்கு எது சரியான வழி என்று தீர்மானம் செய்ய தெரியாது.
2. செய்யும் வேலைகளை திறம்பட செய்வார்கள். ஆனால் ஒரே வேலையில் தொடர்ந்து இருக்க மாட்டார்கள்.
3. நல்ல லாபம் ஈட்டும் தொழிலாக இருந்தாலும் தன் வியாபாரத்தையும் தொழிலையும் மாற்றிக்கொண்டே இருப்பார்கள்.
இவர்கள் வைலெட் ஒட் எடுத்துக் கொண்டால் எது சரியான வழி என குழப்பம் இல்லாமல் தீர்மானம் செய்ய முடியும்.
ஒரு தொழிலில் பற்றுடன் நிலையாக ஈடுபட முடியும்.

37. வைல்ட் ரோஸ் - Wild Rose

"எதிலும் அக்கறை இன்மை"

எந்த செயலிலும் அக்கரையோ ஆர்வமோ பற்றோ இல்லாமல் வாழ்க்கையில் பிடிப்பு இல்லாமல் வாழ்பவர்கள்

1. இவர்களை தன் வேதனையை துயரத்தை யாரிடமும் பகிர்ந்து கொள்ள மாட்டார்கள். தன் மனதிற்குள் வைத்தே பூட்டிக் கொள்வார்கள்.
2. தன் உடல் நலன் பற்றியோ ஆரோக்கியம் பற்றியோ கவலைப்பட மாட்டார்கள். வந்தா வருது போ என்பார்கள்.
3. வாழ்க்கையில் எந்த பிடிப்பும் லட்சியம் இல்லாமல் வாழ்வார்கள்.
4. எப்போதும் சுறுசுறுப்பு இன்றி சோர்வாக இருப்பார்கள்.
5. கையில் பணம் கிடைத்தால் தாம் தூம் என்று செலவு செய்வார்கள்.
6. எல்லாம் என் தலைவிதி,
வெந்ததை தின்னுட்டு விதிவந்தா சாவோம்,
என்ற சிந்தனையோடு வாழ்வார்கள்.
இத்தகைய போக்கு கொண்டோர்கு வைல்ட் ரோஸ் கொடுத்தால் வாழ்க்கையில் ஒரு நல்ல பிடிப்பு ஏற்படும். உற்சாகம் சுறுசுறுப்போடு செயல்படுவர்.

38. வில்லோ - Willow

"பிறர்மேல் குற்றம் சாட்டுதல்"

தனது குறை நிரைகளை உணராமல் எல்லாவற்றிற்கும் பிறர்மீது குற்றம் சுமத்தும் மனம் கொண்டவர்கள்

1. இவர்கள் தனக்கு வரும் துன்பம் அனைத்திற்கும் மற்றவர்களையே குற்றம் சாட்டுவர்.
2. தானும் மகிழ்ச்சியாய் இருக்க மாட்டார் மற்றவர்கள் மகிழ்ச்சியாய் இருந்தால் இவருக்கு பிடிக்காது.
3. எப்போதும் மற்றவர்கள் உதவியை எதிர்பார்ப்பார்.
4. எப்போதும் கடுகடுவென்று முகத்தை வைத்திருப்பர். விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இருக்காது.
5. மற்றவர்களைப் பற்றி புறம் பேசுவார்.
6. நேர்மை நியாயத்திற்கு கட்டுப்பட மாட்டார்கள்.
இத்தகைய குணம் உடையவர்களுக்கு வில்லோ ஏற்ற மருந்து.

 
39. ரெஸ்க்யூ ரெமடி - Rescue Remedy
        பாச் மலர் மருத்துவத்தில் மொத்தம் முப்பத்தி எட்டு மருந்துகள் உள்ளன என்று பார்த்தோம். இந்த முப்பத்தி எட்டிலிருந்து தேர்ந்தெடுத்த ஐந்து மருந்துகளின் கலவை தான் ரெஸ்க்யூ ரெமடியாகும்.(Rescue Remedy)இதனை சுருக்கமாக RR என்று அழைப்பார்கள். அவை 1. செர்ரிப்ளம், 2. க்ளமாட்டிஸ் 3. இம்பேஷன்ஸ் 4. ராக்ரோஸ் 5. ஸ்டார் ஆப் பெத்லகேம்.
இதையும் சேர்த்து மொத்தம் முப்பத்தி ஒன்பது மலர் மருந்துகள் உள்ளன. அவசர நேரங்களில் இந்த மருந்து முதலுதவியாக செயல்பட்டு பல நேரங்களில் உயிர் காப்பாற்றும் அளவிற்கு பயன்படும். விபத்து, விஷக்கடி, நெருப்பு காயம், விபத்தினால் ஏற்படும் அதிக இரத்தப் போக்கு, அதிர்ச்சி, அதீதமான பயம், மயக்கம், கோமா என்று எந்த விதமான அவசர நேரமாக இருந்தாலும் முதலுதவியாக அநேகமாக இந்த மருந்து பயன்படும்.
ரெஸ்க்யூ ரெமடி பல நேரங்களில் உயிரைக்கூட காக்க கூடிய ஆற்றல் கொண்ட மருந்தாகும். சாதாரணமாக அவசர நேரம் அல்லது விபத்தின் பொழுது பாதிக்கப்பட்டவரின் மனநிலை அநேகமாக கீழே கொடுத்துள்ள ஐந்து விதமாக இருக்கும்.
இந்த ஐந்து விதமான மனநிலைக்கு ஏற்றபடி, (ரெஸ்க்யூ ரெமடி)
விபத்து நடந்த உடனே இந்த மருந்து கொடுத்தால், சில நிமிடங்களில் இரத்தப் போக்கு கட்டுக்குள் வந்து, வலியும் குறைந்து, பாதிக்கப்பட்டவர் அதிர்ச்சியிலிருந்து மீண்டு, பதட்டம் குறைந்து மயக்கம் தெளியும் பொழுது டாக்டரிடம் செல்வதற்கு முன்பே அநேகமாக முழுமையாக நிவாரணம் பெற்று விடுவார்.
ரெஸ்க்யூ ரெமடி எப்பொழுதும் கைவசம் இருக்க வேண்டிய மருந்தாகும். பல நேரங்களில் இந்த மருந்து கொடுத்தவுடன் வேறு மருத்துவ உதவி இல்லாமலே பாதிக்கப்பட்டவர், சில நிமிடங்களில் எழுந்து நடந்து செல்வதை காணலாம். மிகவும் ஆபத்தான நிலையில் இருந்தால், சரியான மருத்துவ உதவி கிடைக்கும் வரை இந்த மருந்து மூலமாக பாதிக்கப் பட்டவரின் உயிரை 
காப்பற்றாலாம்...