Tuesday 21 June 2022

லைகோபோடியம்.Lycopodium. ஹோமியோ மருந்தின் குணம்

லைகோபோடியம்.
Lycopodium. ஹோமியோ மருந்தின் குணம் 

வலப்பக்க உபாதைகள்.வலப்புறத்தில் தொடங்கி இடப்புறம் செல்லுதல்.தொண்டை, சினைப்பைகள் , கற்பப்பை,மூத்திரக்காய், சருமம் இவைகளின்
உபாதைகள், குடல் வாதம்,வயிறு நிரம்பிய உணர்ச்சி,பசி ஆனால் சீக்கிரமே வயிறு
நிரம்பிய உணர்ச்சி.

உறுமல் சப்தத்துடன் அதிக
வாயு உப்புசம்.குடல் சம்பந்தமானதும் கீழ் நோக்கி அமுக்குதல்.கைகால் விரல்களை பற்றிய கீல் பிடிப்பு.

சுத்தமான சிறுநீரில் செம்மணல் போன்ற பிடிமானம்.சிறுநீர் கழித்த பின் முதுகில் மூத்திரக் காய்களில் வலி
குறைதல். கறுத்த உடல்.முகமும் இடுப்புக்கு மேலும் இளைத்திருத்தல். இடுப்புக்கு கீழ் கால்கள் உப்பி அல்லது வீங்கியிருத்தல். புத்தி கூர்மையாயிருத்தல் .தசைகள் மெலிந்திருத்தல்.

கடுகடுத்தல்,விழித்தெழுந்ததும் கோபம்.சிடு சிடுப்பான குணம். குழந்தைகள் உதைத்து கொண்டு வீரிட்டு அழுதால். எளிதில் கோபம்
கொள்ளுதல்.எதிர்த்து அல்லது மறுத்துப் பேசினால்
பொறுக்க முடியாது.சண்டைக்கு இழுத்தல்.

தேகம் வெளிர் மஞ்சள் நிறம்.அழுக்கடைந்திருத்தல்
ஆரோக்ய குறைவு.சோகை
வெறுப்பு.வயதை மீறிய கிழத் தோற்றம்.

ஒருபாதம் சூடாயும் மற்றது
குளிர்ந்து பிருந்தாவன். வியர்த்த பிறகு அதிக தாகம்.
உடலின் இடப்பாகம் சில்திப்பு. சில்லிப்பிற்கும் உஷ்ணத்திற்கும் இடையில் புளித்த வாந்தி.
   
லைகோபோடியம்
Lycopodium.
தொடர்ச்சி...

அடி வயிற்றின் கீழ்பகுதியில் வாயு
உப்புசம்.(அடி வயிற்றின் மேல் பகுதியில் வாயு உப்புசம் "கார்போ வெக்" ;
அடி வயிறு முழுதும் உப்புசம் "சைனா") .மூக்கின் நுனித்தோல் விசிறி போல் விரிந்து சுருங்குதல் (பாஸ்பரஸ்).
நெற்றித் தோலில் ஆழமான
வெடிப்புகள். புளிப்புத் தன்மை.புளிப்பு சுவை.புளிப்பான ஏப்பம்.புளிப்பான வாந்தி இரவில் கசப்பு சுவை .அதிகபசி கொஞ்சம் உண்டவுடன்
வயிறு நிரம்பிய உணர்ச்சி.
தோலில் வறட்சி.திறந்த வெளியில் இருக்க விருப்பம்.
நீர் வீக்கம். வயதான தோற்றம்.உடலின் வலது பக்க வலிப்புகள்.இச்சையின்றி கை கால் இழுத்தல் விறைத்தல்.

சுய இன்பம் காண்பதால் ஏற்படும் பின் விளைவுகள்.ஆண் குறி சிறுத்து சில்லிட்டு ஆண் தன்மை குறைதல்.
தூங்கும் சமயம் பாதிக்கண்கள் திறந்திருத்தல்.வலது பக்க அறையிடுக்கில் வரும்
குடல் பிதுக்கம். உடலுறவில்
சீக்கிரமே விந்து வெளிப்ப
டுதல் (கிராபைட்டஸ், சிங்கம்
மெட்) இரவில் படுத்தால் மூக்கடைத்துக் கொள்ளுதல்.(அம்மோனியம் கார்ப்,
நக்ஸ் வாமிகா)சாப்பிட்ட உடனே வயிற்றில் வேதனை உணர்ச்சி.

விரல்கள் மரத்துப் போதல்.
(பாஸ்பரஸ்).அக்குள் சுரப்பிகள் வீங்கி பருத்து விடுதல்.
உடல் கழிவுகள் துர்நாற்றம்
அடித்தல்.எலும்பு வேக்காடு.
எலும்பு மென்மையடைதல்.
எலும்புகள் அழிதல்.

உடலின் மேல் பகுதி இளைப்பு;கீழ் பகுதி நீர்வீக்கம். மிக சீக்கிரமே முதுமை
யடைதல்.
   
லைகோபோடியம்.
Lycopodium.
தொடர்ச்சி...

மனம்.கவலை.தன்னம்பிக்கையிழத்தல்.மனிதர்களை கண்டால் பயம். யாருடனும் பேச விரும்புவதில்லை .அப்படியிருந்தும் தனியாயிருக்கவும் விருப்பமிருக்காது.அதிக கோபம்.கடுமையான 
வார்த்தைகளை உபயோகப்
படுத்துதல்.ஞாபக சக்தியிழத்தல். எழுதும் பொழுது வார்த்தைகளை விட்டு விடுதல்.

தலை கனத்துடன் வலி. பொரிகளில் வலி. காலையில்எழுந்தவுடன் மயக்கம். முடி கொட்டுதல் அல்லது நரைத்தல்.

கண்களில் வறட்சி,வலி.
கண்களில் உப்பு இருப்பது
போன்ற எரிச்சல்.இமைகள்
மட்டும் சிவந்திருக்கும்.பார்கப்படும் பொருட்களின் இடது பக்கம் மட்டும் தெரியும்.

காதுகளில் மஞ்சள் சீழ்,செவிடு,கொய்னா மாத்திரை
அல்லது பாதரசம் கலந்த
மாத்திரைகள் அதிகம் சாப்பிட்டதால் ஏற்பட்ட செவிடு.
காதுகளில் இரைச்சல். காதுகளுக்கு பின் புறம்படை.

மூக்கடைப்பு.பச்சை நிறமான சளி.குழந்தைகள் சுவாசிக்க கஷ்டப்படும்.தூக்கத்திலும் தூங்கி எழுந்த பிறகும்,மூக்கை தேய்த்துக்
கொண்டிருத்தல்.சுவாசிக்கும் பொழுது "குர்"என்ற சப்தம்.நாசியினுள் புண்கள்.
    

லைகோபோடியம்.
Lycopodium.
தொடர்ச்சி...

சாம்பல் மஞ்சள் நிற
முகத்துடன் கண்களைச்சுற்றிலும் நீல நிறவட்டம்,சுருங்கிய இளைத்த முகம்.செப்பு நிற சரும எழுச்சி.குடற்காய்ச்சலில் கீழ் தாடை தொங்கி விடுதல்(லாக்கசிஸ்,ஓபியம்) முகம் மற்றும் உதட்டு ஓரங்களில் அரிப்புடன் கூடிய எச்சில் தழும்பு.

வாயில் மற்றும் நாக்கில்
வறட்சி ஆனால் தாகமின்மை.நாக்கு வறண்டு,கரு நிறத்துடன் வெடித்து வீங்கியிருக்கும்.நாக்கு முன்னும் பின்னும் ஆடுதல்.வாயில்
உமிழ்நீர் ஒழுகுதல்.நாக்கில்
நீர் கொப்புளங்கள்.நாக்கின் மேற்பகுதியிலும் அடியிலும் புண்கள்.

தாகமின்மையுடன் தொண்
டையில் வறட்சி.சாப்பிட்ட உணவு மூக்கின் வழியாக எதிர்க்கழித்தல். டான்சில் கோளங்கள் வீங்கி சீழ் பிடித்தல். டான்சில் புண்கள்.
தொண்டை அடைப்பான் வலது பக்கம் ஆரம்பித்து இடது பக்கம் பரவும்.குரல் நாண் புண்கள்.மெலிந்த
இளைத்த சிறுவர்களின் நீடித்த வறண்ட இருமல்.
                        

லைகோபோடியம்.
Lycopodium.
தொடர்ச்சி...

அகோரப்பசி.இனிப்பில் விருப்பம்.முட்டைகோஸ்,பீன்ஸ் உண்பதால் அஜீரணம்.மிக மந்தமாக ஜீரணம்.சிறிது உணவு
உண்டதும் வயிறு நிறைந்த
உணர்வு.இரவில் பசியுடன் 
விழித்தெழுதல்.விக்கல். முழுமையடயாத ஏப்பத்துடன் குரல்வளை வரை எரிச்சல்.

இடது மேல் வயிறு உப்புசம்.
வலது பக்கம் குடல் இறக்கம்.உணர்ச்சி பூர்வமான கல்லீரல்.வயிற்றில் பழுப்பு
நிறப் புள்ளிகள்.கல்லீரல்
உபாதையுடன் உடலில் நீர்
வீக்கம்.கல்லீரல் வேக்காட்டில் ஈரல் சுண்டி அளவு சிறுத்து விடும்.கல்லீரலின்
செயல் கடுமையாக பாதிக்கும்.அடைபட்ட வயிற்றுக்
காற்று மேலும் கீழும் பிரியும். ஜீரணமாகும் சமயத்தில் இதயத் துடிப்பு அதிகமாகும்.உணவு உண்டதும்
தூக்கக் கலக்கம்.

குடல் பாதையில் மந்தமான
தன்மை.கெட்டியான சிறிய
அளவு முழுமையடையாத மலம் கடினத் தன்மையுடன் வெளிப்படும் .மலம் கழிக்கதூண்டல் ஏற்படும் ஆனால்
பலன் கிடைக்காது.

சிறுநீர் கழிக்கும் முன்பு முதுகில் கடுமையான வலிஇருக்கும்.சிறுநீர் கழித்த பின் வலி மறையும்.மிக நிதானமாகவே சிறுநீர் கழியும்.இரவில் அதிக சிறுநீர்.சிறுநீரில் கெட்டியான சிவந்த வண்டல் படியும்.சிறுநீர்க்
கற்கள், கற்களால் திருகுவலி.சிறுநீர் கழிக்கும் முன்பு குழந்தை வீறிட்டு அழும்.(போராக்ஸ்).
                          

நன்றி - சீரங்கன் ராமலிங்கம் ஐயா.                                                        

கார்போ வெஜிடாபிலிஸ்.Carbo vegetabilis ஹோமியோ மருந்தின் குணம்

கார்போ வெஜிடாபிலிஸ்.
Carbo vegetabilis. ஹோமியோ மருந்தின் குணம் 

உடல் வலிமை முழுவதும் குறைந்து
விடுதல்.சிறிய மயிரிழை இ
ரத்தக் குழாய்களில் இரத்தத் தேக்கம் ஏற்படுதல்.அசுத்த இரத்தக் குழாய்களில் வீக்கமும் முடிச்சுகளும் தென்படுதல்.உடல் சில்லென்றும் நீல நிறமாகவும் ஆகிவிடுதல்.

இரத்தப் பெருக்கு,இத்துடன்
உடலின் மேல் பாகமெல்லாம் வெளுத்து விடும்.சளித் தோல்கள்அழிவுறுதல்
பஞ்சு போலாகுதல்.இரத்தக்கசிவுடன் இரணமாகி துர்நாற்றமடித்தல்.

இரைப்பையிலும் வயிற்றிலும் அதிக காற்று உப்புசம்.
இது மேலே அமுக்குதல்.பிராண வாயு அதிகம் தேவைப்படுதல்.இரத்தத்தில் கரியமில வாயு அதிகரித்தல்.
     
கார்போவிஜிடாபிலிஸ் 
Carbo vegetabilis.
தொடர்ச்சி...

இருட்டைக்கண்டால் பயம்.
தாமதமாக யோசிப்பது. ஞாபகமறதி.சோம்பேரித்தனம். அலட்சமாய் இருத்தல்.

மந்தமான ஜீரணம்.பலமற்ற
மந்தமான பிரசவ வலி.மந்த
குணத்தால் பிரசவத்திற்கு
பின் நஞ்சுக்கொடி வெளியேறாமை.

மந்தமான ஜீரணசக்தி. கொழுப்புச்சத்து சிறிதும் ஒத்துக்கொள்ளாது.ஏப்பம் விட்டாலும் வயிறு உப்புசம் குறையாது.
புளிப்பான ஏப்பம்.அழுகிய
நாற்றமுள்ள அபான வாயு .துர்நாற்ற அபானவாயுவுடன் வயிற்றில் திருகுவலி. சில
நேரங்களில் பிண வாடை அடிக்கும் மலம் நோயாளியின் முயற்சியின்றியே வெளிப்படும். அபான வாயு அடிக்கடி வந்துகொண்டே இருக்கும்.

தலைவலி குறிப்பாக பின்மண்டையில் அதிகம்.பின் மண்டையில் வலி உள்ளபோது தலைபின்பக்கம் இழுக்கப்பட்டிருப்பது போலவும் தலையை தலையனையிலிருந்து தூக்கமுடியாதது போலவும்
வலி. சளி அமுகாகப்பட்டதால் வரும் தலைவலி.

கார்போ வெஜிடாபிலிஸ்.
Carbo vegetabilis.
தொடர்ச்சி...

ஜலதோசத்தில் மூக்கில் சளி பிடித்து, குரல் வளையை தாக்கும்.குரல்
வளையில் அடைப்பு; பிறகு
ஆழ்ந்து சென்று மார்புக் கிளைக் குழல் நுரையீரல் ஆகியவற்றை தாக்கும்.மார்பிலோ குறல் வளையிலோ
சளி முதலில் பிடித்து மாலையில் குறல் கம்மல்.பேசுவதால் குறல் வளையில் பலவீனம். கக்குவான் இருபல், மூச்சுத்திணறல்,படுத்தால் மூச்சுத்திணறல்.ஏப்பம் விடுவதால் சிறிது சமனம்.

வயதானவர்களுக்கு வரும்
மார்புச்சளி உபாதைக்கு
கார்போ வெக் பொன்போன்றது. வயதானவர்களின் ஆஸ்த்துமா. ஆஸ்துமா நோயாளி இறந்து விடுவாரோ என்று தோன்றும் அந்திமக்கட்டத்தில் கார்போ வெக் அற்புத பலன் தரும்.ஜீரணப்பாதையில் சளிச்சவ்வுகளில் ஏற்படும் வேக்காடு மற்றும் சுவாச உறுப்புகளின் சளிச்சவ்வு
வேக்காட்டிற்கும் ஏற்றது.

மார்பில் அலைபாயும் சளியுடன் இருமல்.ஓக்காளம். வாந்தி.மார்பில் அலைபாயும் சளியுடன் காலையில்
இருமல். இருமி இருமி அதிக
கோழையை வாந்தியெடுத்தல். களைத்துவிடுதல்.அலைபாயும் சளியுடன் விசில்
சப்தம். கக்குவான் இருமல்.
கக்குவான் இருமல்.இரவு
முழுதும் விட்டு விட்டு வரும்
கடுமையான கக்குவான் இருமல். இருமலுடனேயே தூங்குதல்.
      

கார்போ வெஜிடாபிலிஸ்.
Carbo vegetabilis.
தொடர்ச்சி...

உயிர்ப்புசக்தி முற்றிலும் அழிந்த நிலை.இந்நிலையில் நோயாளிக்கு உடல் சில்லென்றிருக்கும். குறிப்பாக முழங்காலுக்கும் கீழ்பகுதி முழுவதும் சில்லென்றிருக்கும்.நாக்கு சில்லென்றிருக்கும். உடலில் குளிர்ந்த
வியர்வை அதிகம் வெளிப்படும்.மூச்சுக் காற்றும் சில்லென்று குளிர்ந்திருக்கும்.
களைப்பை உண்டாக்கும் வியர்வை.நெற்றியிலும்
குளிர்ந்த வியர்வை.உடலின் வெளிப்பகுதி குளிர்ந்து சில்லென்றிருப்பினும்
உடலின் உள்ளே எரிச்சலிருக்கும் .நோயாளி அமைதியாகவே இருப்பார்.

எப்பொழுதும் நோயாளி விசிறிக் கொண்டே இருப்பார்.
அதிக காற்றுப் பசி.இதுவே
கார்போ வெக்கின் முத்திரைக் குறி. இந்த ஆபத்தான உயிர்ப்பு சக்தி குன்றிய நிலையில் கார்போ வெக்
காப்பாற்றும்.

சிறிய இரத்தக் குழாய்களில் இரத்த ஓட்டம் தடைபட்டு சருமம் நீல நிறமாகும்.அதனால் உடல் சில்லென்று
மாறும்.நீல நிறமூலம்.நீலநிற பெருத்த மூலம் வெளியே பிதுங்கி சீழ் கொண்டு மிகுந்த துர்நாற்றக் கசிவுடன் எரியும்.         ‌
கார்போ வெஜிடாபிலிஸ்.
 Carbo vegetables.
தொடர்ச்சி...

ஆறாத துர்நாற்றமடிக்கும் சதை அழுகும் புண்களுக்கும் எரிச்சலுடன் கூடிய துர்நாற்றப் புண்களுக்கும்
ஏற்றது. சிறிய இரத்தத் தேக்கமும் வேக்காடடைந்து கறுப்பாகவோ நீல நிறமாகவோ மாறி, செப்டிக் அடைந்து, புண்கள் தோன்றிச் சதைஅழுகும். அடிபட்டபிறகும், அதிர்ச்சிக்குப் பிறகும்,அறுவை சிகிச்சைக்குப் பிறகும் இரத்தம் விசமாகி செப்டிக் அடையும் நிலைக்கு கார்போ வெக் அற்புத மருந்து.விரல் நுனியில்
புண்கள் ஆறாமலிருப்பது.
வயதானவர்களுக்கு உடலில் வட்ட வட்டமாக சதை
அழுகிவிடுதல். கால் விரல்களில் தோன்றும் புண்கள்.
இரைப்பை புண்கள்.குதத்தில் தோலுரிதல்.

கறுப்பு நிறத்துடன் தண்ணீர் போல் இடைவிடாமல் வெளிப்படும் லேசான இரத்தப் போக்கிற்கு மிகவும் ஏற்றது.முகம் வெளுத்து மூக்கிலிருந்து இரத்தப்போக்கு ஏற்படுதல்.ஒரே நாளில் பல முறை மூக்கிலிருந்து இரத்தப் போக்கு.மலக்குடல் இரத்தப்போக்கு. ஈறுகளில் இரத்தக் கசிவு .கருப்பையிலிருந்து கறுநிற இரத்தக் கசிவு.
     
கார்போ வெஜிடாபிலிஸ் 
Carbo vegetables.
 தொடர்ச்சி...

உடலில் குளிர்ச்சி.
மூச்சுக் காற்று குளிர்ந்து
இருக்கும்.குளிர்ந்த வியர்வை இருப்பினும் நோயாளி
மிக அதிக குளிர்ந்த நீரைக்
குடிப்பார்.விட்டு விட்டு வரும் காய்ச்சலில்'குளிர் நிலையில் அதிக தாகம்'என்பது கார்போ வெக்கின் விநோதமான முத்திரைக்குறி.

பெண்களின் உடல் உள் உறுப்புகளில் தளர்ச்சி.கருப்பையில் கனத்த தன்மையுடன் கீழ் இழுக்கும் உணர்ச்சி .அனைத்து உள் உறுப்புக்களும் வெளியே பிதுங்கி வந்துவிடுமோ என்ற உணர்வு. கருப்பையின் கீழ் இழுக்கும் உணர்ச்சியால் நோயாளியால் எழுந்து நிற்க முடியாது.கருப்பையிலிருந்து
கறுப்பு நிற இரத்தம் கசிந்து
கொண்டே இருக்கும். கருப்பையிலிருந்து வெளிப்படும்
கசிவு துர்நாற்றமாகவும், கறுப்பாகவும்,சிறு சிறு கட்டிகளுடனும் ,மாதவிலக்கின் இடைக்காலம் முழுவதும் இருக்கும்.'குபீர் குபீர்'என்ற
அதிகமான போக்கு இருக்காது.மிகுந்த பலவீனத்துடன் பலம் முழுவதும் இழந்த
கர்ப்பிணிப் பெண்களுக்கு
கார்போ வெக் தெம்பூட்டும்.
இவர்களுக்கு குமட்டல்,வயிறு உப்புசம்,பலவீனம், அசுத்த இரத்தக் குழாய் பெருத்து
விடுதல் ஆகிய குறிகள் காணப்படும்.பலவீனமான,
தெம்பே இல்லாத ,குழந்தை
இழுக்கும் பால் தரும் தாய்க்கு பால் வற்றிவிடும் சமயம்
கார்போ வெக் கொடுக்க
வேண்டும். இரத்தக் கசிவுடன் கருப்பையில் தங்கிவிட்ட நஞ்சுக் கொடியை கார்போ வெக் வெளிக் கொண்டுவரும்.பலமில்லாத பிரசவ
வலிக்கும் ஏற்றது.                  ‌        

கார்போ வெஜிடாபிளிஸ்.
Carbo vegetabilis.
தொடர்ச்சி...

கார்போ வெக்கின்
கழிவுகள் அனைத்தும் மிகுந்த துர்நாற்றமடிக்கும்.
கொய்னாவினால் அமுக்கப்பட்ட முறை சுரத்திற்கு ஏற்றது. வியாதியில் அடிபட்டதால் வரும் களைப்பை போக்கி
தெம்பை உண்டாக்கும்.

நாடி உணரமுடியாத அளவு
குட்டையாயும், மிருதுவாயுமிருத்தல். அடிக்கடி விந்து கசிதல்.தூங்கும் சமயமே சுயஇன்பம் காணுதல்.உடலின்
உட்புறத்தில் ஏதோ ஓர் இடத்தில் எரிச்சலும் சூடும்.ஆசன வாயில் காரமான, பட்டஇடங்களில் புண்ணை உண்டாக்கும் தன்மையான
நீர் கசிதல்.சிறுநீரக உபாதடைகள், காசநோய், புற்றுநோய் ஆகிய உபாதைகளின் உக்கிரத்தை தணிக்கும்.

பொன்னுக்கு வீங்கி எனும்
காதின் கீழுள்ள பரோடிட்
சுரப்பி வீங்கிய வியாதி விரைக்கு தாவுமானால் "கார்போ வெக்" பயன்படும்.
முலைக்கு தாவுமானால் "பல்சடில்லா".

அரையிடுக்கு அக்குள் பகுதிகளில் மேககிரந்தியால்
சுரப்பிகள் கல் போல் கடினமாதல். வயோதிகர்களின்
வலியுள்ள வயிற்றுப்போக்கு இவையாவும் தீரும்.காலரா வயிற்றுப் போக்கின் அந்திம கூட்டத்திற்கும். தவிர்க்க வேண்டியவை..கொழுப்பு
உணவு வெண்ணெய்.

குறிப்பு..மிக அதிகமான குளிர்ந்த வியர்வை, உடல் சில்லிப்பு,குளிர்ச்சியான சுவாசம், குளிர்ச்சியான நாக்கு, குரல் இழந்து போதல்,சருமம் நீல நிறமாக மாறுதல், காற்றுப் பசி ஆகிய ஆபத்தான
கட்டத்தில் கார்போ வெக்
நோயாளியின் உயிரைக்
காப்பாற்றும். 

Cinchona Officinalis ஹோமியோ மருந்தின் குணம்

சிங்கோனா அபிஷினாலிஸ் ஹோமியோ மருந்தின் குணம் 
Cinchona Officinalis.

உடலிலிருந்து நீர்களோ, இரத்தமோ அதிகமாக வெளியேறிய பிறகு
ஏற்படும் பலவீனம். அதிக இரத்தப் போக்கு, அதனால் மயக்கம் வரும் நிலை,கண்பார்வை குறைதல்,காதுகளில் இரைச்சல்.வயிற்றில்
அதிகக் காற்று உப்பிசம்,வயிற்றில் எதையோ வைத்து
அடைத்திருப்பது போன்ற
உணர்ச்சி;ஏப்பத்தினாலோ,
அபான வாயு பிரிவதனாலோ சமனப் படாது. வலியோ உபத்திரமோ இல்லாத
வயிற்றுப் போக்கு.முறை
வைத்து வரும் உபாதைகள்,
முக்கியமாக ஒருநாள் விட்டு
ஒருநாள் வருதல்.

சரீரத்திலிருந்து அதிக நீர் வெளியேற்றத்திற்குப் பின்
நீர் வீக்கம்; அதிகப்பலவீனம்
நடுக்கல்கள்,சரீர உழைப்பு
பிடிக்காமை.நரம்பு பலவீனம், தொடுதல்,வலி,காற்று
மேலே வீசுதல் இவை சகிக்காமை;விடியற்காலை மூன்று மணிக்கு மேல் புத்துணர்ச்சி தராத தூக்கம்.

முகம் வெளுத்து, பிணக்களையுடனிருத்தல்; கண்கள்
குழி விழுந்து சுற்றிலும் நீல
வளையங்கள் தென்படுதல்;
முகம் வெளுத்து நோயுள்ளவர் போல் தோற்றம் தரும்.

இரத்தப் போக்கு; உடலின்
எல்லா வெளி துவாரங்க
ளில் இருந்தும் இரத்தம் கருப்பாகவோ, கருப்பு நிறமும்
கட்டி தட்டியதுமாகவோ இருத்தல் ,இத்துடன் காதுகளில் இரைச்சல்,கண்கள்
பார்வை குறைதல்,சரீரமே
சில்லென்றிருத்தல்,சில சமயங்களில் வலிப்புகள்.

      சிங்கோனா அபிசினாலிஷ்.
Cinchona Officinalis.

மனம் மந்தம்.வேலை
செய்ய மனமின்மை.
அலட்சியம்.மௌனம் சாதித்தல்.கவலை.தைரியமின்மை.

தலை கிறு கிறுப்பு.வெடித்தது விடுவது போன்ற வலி.மயிர்கால்களில் அதியுணர்ச்சி மயிரை இழுப்பது போல
உணர்ச்சி.குளிர் காற்றை சகிக்க முடியாது.முகத்தில் நரம்பு வலி.

குளிர் காற்றை சகிக்க முடி
யாது.கடுமையான தும்மல்.
சோகை உள்ளவர்களுக்கு
மூக்கிலிருந்து இரத்தம் வந்
து தலை வலியை குறைக்கும்.

குளிர்காற்று படுவதால் பற்களில் வலி.குழந்தை பால்குடிக்கும் போது தாய்க்குப் பற்களில் வலி.

வாய் காப்பு. ஆகாரத்தில் வெறுப்பு.குளிர்ந்த நீர் அதிகம் குடித்தல்.பால் குடிக்கப்
பிடிக்காது.

கொஞ்சம் சாப்பிட்டதும் வயிறு ஊதி கனத்துடன் பசி அடங்கி விடும்.வயிற்றைத் தொட்டால் அதியு
ணர்ச்சி. அடிக்கடி ஏப்பம்.வயிறு உப்பி முறைவைத்து வரும் வலி,இரவில் வரும் வலி,பழம் சாப்பிடுவதால்
வரும் வலி.தாமதமான ஜீரடம்.ஆகாரத்தை வாந்தியெடுத்தல் .விக்கல் கல்லீரல்,
மண்ணீரலில் வீக்கம்,வலி
மிதமிஞ்சி.டீ குடித்ததால் ஏற்பட்ட கோளாறுகள்.

வலியில்லாத வயிற்றுப் போக்கு, இரவில் அல்லது
சாப்பிட்டவுடன்,அதிக வாயுவுடன் போகும்.மலம் மஞ்சளாகவும், நுழைத்துப்,ஜீரணமாகாத ஆகாரத்துடனும் இருக்கும். குடலிலிருந்து இரத்தப் போக்கு.வயிற்று
போக்கும் இரத்தப்போக்கும்
அதிக பலவீனப்படுத்தும்.
   
சிங்கோனா அபிசினாலிஷ்
Cinchona Officinalis.
தொடர்ச்சி...

பிரசவித்தப் பிறகு ஏற்படும் இரத்தப் போக்கு.இரத்தப் போக்கு வெளியாகும் சமயமே வலிப்பு ஏற்படுதல்.கருப்பை இரத்தப்போக்கிற்கும்,
அதிக மாதவிலக்கு இரத்தப்
போக்கிற்கும் சைனா(china ) ஏற்றது. இப்போக்கு கறுப்பாகவும் கட்டிகளாகவும் வெளிப்படுவது முத்திரைக் குறி.மாத விலக்கின் இடைக்காலப்போக்கு.மாதவிலக்கு நிற்கும் காலத்திற்கு பிறகு இரத்தப் போக்குடன் காதில்ரீங்கார ஓசையுடன்,பலவீனம், நீர் வீக்கம் ஏற்பட்டு களைத்து விடுதல்.

உணர்ச்சிகள் அதிகரித்த
நிலை .தலைசீவும் பொழுது
மண்டைத் தோலில் புண்
போன்ற உணர்ச்சி.தொடுவதால் வலி அதிகமடைந்து
உச்ச கட்டத்தை அடையும்.வலி காற்று பட்டால் கூட அதிகமாகும்.நடக்கும் சமயம் முழங்காலில் பலவீனம்.முதுகுத் தண்டில் சில இடங்களில் புண் போன்ற வலி.

சைனாவின் குறிகள் முறை
வைத்து ஒரு நாள் விட்டு மறுநாள் தோன்றும்.இது
போன்று குறிகள் முறை
வைத்து தோன்றுவது சைனாவின் முத்திரைக்குறி.
முறைசுரத்திலும்,நரம்பு வலிகளிலும் இதுபோல்
முறைவைத்து உபாதைகள்
தோன்றும்.சில சமயம் 14 
நாட்களுக்கு ஒரு முறையும்,
வளர்பிறை நாட்களிலும், மூன்று மாதங்களுக்கு ஒரு
முறையும் உபாதைகள் அதிகமடையும்.காய்ச்சல் 7 வது நாளோ, 14 வது நாளோ முறை வைத்துத்
தோன்றும்.ஒவ்வொரு நாளுமோ அல்லது ஒரு நாள் விட்டு ஒருநாளோ,ஓரிரண்டு மணிக்கு முன்பாகவோ முறை வைத்து உபாதை தாக்கும்.

சிங்கோனா அபிசினாலிஸ்
Cinchona Officinalis.
தொடர்ச்சி...

வினோதக்குறிகள்.
பசியும் பசியே இல்லாமையும், உணவில் வெறுப்பும் கடுமையான பசியும்.

களைப்பை உண்டாக்கும் இரவு வியர்வை. கண்பார்வை
மங்குதல். இரவில் கண் தெரியாமை.அடிக்கடி விந்து வெளியாகி பலவீனத்தையும்,களைப்பையும் உண்டாக்குதல். பால் கொடுக்கும்
தாய்மார்களுக்கு வரும் பல்
வலி.உமிழ்நீர் தொடர்ந்து
சுரத்தல்.மஞ்சள் காமாலை.
மலம் கறுப்பாகவும், சிறுநீர்
மஞ்சளாயும் வெளிப்படுதல்
மாதவிலக்கிற்கு பதிலாக
சீழ்போன்ற இரத்தம் தோய்ந்து வெள்ளைப்படுதல்.பழங்களை உண்பதால் உண்டாகும் வயிற்று உபாதை.ஒரு கை குளிர்ச்சியாயும் மற்றது சூடாகவுமிருத்தல். பல்வலி தொடுவதால் அதிக வேதனை.கல்லீரல்
பகுதியில் வலி.பித்தக் கற்களால் வலி. மஞ்சள் காமாலையுடன் கல்லீரல் மண்ணீரல் வீங்கி விடுதல்.

குளிர் காற்று,திறந்த வெளி,
பால் பழங்களை உண்பது,
அதிகமான மன உழைப்பு,
விர் என்று வீசும் காற்று,அதிர்வு ,டீ,வெய்யில் காலம் இவைகளால் உபாதைகள் அதிகமாகும்.                                 
நன்றிகள் - சீரங்கன் ராமலிங்கம் ஐயா.