Carbo vegetabilis. ஹோமியோ மருந்தின் குணம்
உடல் வலிமை முழுவதும் குறைந்து
விடுதல்.சிறிய மயிரிழை இ
ரத்தக் குழாய்களில் இரத்தத் தேக்கம் ஏற்படுதல்.அசுத்த இரத்தக் குழாய்களில் வீக்கமும் முடிச்சுகளும் தென்படுதல்.உடல் சில்லென்றும் நீல நிறமாகவும் ஆகிவிடுதல்.
இரத்தப் பெருக்கு,இத்துடன்
உடலின் மேல் பாகமெல்லாம் வெளுத்து விடும்.சளித் தோல்கள்அழிவுறுதல்
பஞ்சு போலாகுதல்.இரத்தக்கசிவுடன் இரணமாகி துர்நாற்றமடித்தல்.
இரைப்பையிலும் வயிற்றிலும் அதிக காற்று உப்புசம்.
இது மேலே அமுக்குதல்.பிராண வாயு அதிகம் தேவைப்படுதல்.இரத்தத்தில் கரியமில வாயு அதிகரித்தல்.
கார்போவிஜிடாபிலிஸ்
Carbo vegetabilis.
தொடர்ச்சி...
இருட்டைக்கண்டால் பயம்.
தாமதமாக யோசிப்பது. ஞாபகமறதி.சோம்பேரித்தனம். அலட்சமாய் இருத்தல்.
மந்தமான ஜீரணம்.பலமற்ற
மந்தமான பிரசவ வலி.மந்த
குணத்தால் பிரசவத்திற்கு
பின் நஞ்சுக்கொடி வெளியேறாமை.
மந்தமான ஜீரணசக்தி. கொழுப்புச்சத்து சிறிதும் ஒத்துக்கொள்ளாது.ஏப்பம் விட்டாலும் வயிறு உப்புசம் குறையாது.
புளிப்பான ஏப்பம்.அழுகிய
நாற்றமுள்ள அபான வாயு .துர்நாற்ற அபானவாயுவுடன் வயிற்றில் திருகுவலி. சில
நேரங்களில் பிண வாடை அடிக்கும் மலம் நோயாளியின் முயற்சியின்றியே வெளிப்படும். அபான வாயு அடிக்கடி வந்துகொண்டே இருக்கும்.
தலைவலி குறிப்பாக பின்மண்டையில் அதிகம்.பின் மண்டையில் வலி உள்ளபோது தலைபின்பக்கம் இழுக்கப்பட்டிருப்பது போலவும் தலையை தலையனையிலிருந்து தூக்கமுடியாதது போலவும்
வலி. சளி அமுகாகப்பட்டதால் வரும் தலைவலி.
கார்போ வெஜிடாபிலிஸ்.
Carbo vegetabilis.
தொடர்ச்சி...
ஜலதோசத்தில் மூக்கில் சளி பிடித்து, குரல் வளையை தாக்கும்.குரல்
வளையில் அடைப்பு; பிறகு
ஆழ்ந்து சென்று மார்புக் கிளைக் குழல் நுரையீரல் ஆகியவற்றை தாக்கும்.மார்பிலோ குறல் வளையிலோ
சளி முதலில் பிடித்து மாலையில் குறல் கம்மல்.பேசுவதால் குறல் வளையில் பலவீனம். கக்குவான் இருபல், மூச்சுத்திணறல்,படுத்தால் மூச்சுத்திணறல்.ஏப்பம் விடுவதால் சிறிது சமனம்.
வயதானவர்களுக்கு வரும்
மார்புச்சளி உபாதைக்கு
கார்போ வெக் பொன்போன்றது. வயதானவர்களின் ஆஸ்த்துமா. ஆஸ்துமா நோயாளி இறந்து விடுவாரோ என்று தோன்றும் அந்திமக்கட்டத்தில் கார்போ வெக் அற்புத பலன் தரும்.ஜீரணப்பாதையில் சளிச்சவ்வுகளில் ஏற்படும் வேக்காடு மற்றும் சுவாச உறுப்புகளின் சளிச்சவ்வு
வேக்காட்டிற்கும் ஏற்றது.
மார்பில் அலைபாயும் சளியுடன் இருமல்.ஓக்காளம். வாந்தி.மார்பில் அலைபாயும் சளியுடன் காலையில்
இருமல். இருமி இருமி அதிக
கோழையை வாந்தியெடுத்தல். களைத்துவிடுதல்.அலைபாயும் சளியுடன் விசில்
சப்தம். கக்குவான் இருமல்.
கக்குவான் இருமல்.இரவு
முழுதும் விட்டு விட்டு வரும்
கடுமையான கக்குவான் இருமல். இருமலுடனேயே தூங்குதல்.
கார்போ வெஜிடாபிலிஸ்.
Carbo vegetabilis.
தொடர்ச்சி...
உயிர்ப்புசக்தி முற்றிலும் அழிந்த நிலை.இந்நிலையில் நோயாளிக்கு உடல் சில்லென்றிருக்கும். குறிப்பாக முழங்காலுக்கும் கீழ்பகுதி முழுவதும் சில்லென்றிருக்கும்.நாக்கு சில்லென்றிருக்கும். உடலில் குளிர்ந்த
வியர்வை அதிகம் வெளிப்படும்.மூச்சுக் காற்றும் சில்லென்று குளிர்ந்திருக்கும்.
களைப்பை உண்டாக்கும் வியர்வை.நெற்றியிலும்
குளிர்ந்த வியர்வை.உடலின் வெளிப்பகுதி குளிர்ந்து சில்லென்றிருப்பினும்
உடலின் உள்ளே எரிச்சலிருக்கும் .நோயாளி அமைதியாகவே இருப்பார்.
எப்பொழுதும் நோயாளி விசிறிக் கொண்டே இருப்பார்.
அதிக காற்றுப் பசி.இதுவே
கார்போ வெக்கின் முத்திரைக் குறி. இந்த ஆபத்தான உயிர்ப்பு சக்தி குன்றிய நிலையில் கார்போ வெக்
காப்பாற்றும்.
சிறிய இரத்தக் குழாய்களில் இரத்த ஓட்டம் தடைபட்டு சருமம் நீல நிறமாகும்.அதனால் உடல் சில்லென்று
மாறும்.நீல நிறமூலம்.நீலநிற பெருத்த மூலம் வெளியே பிதுங்கி சீழ் கொண்டு மிகுந்த துர்நாற்றக் கசிவுடன் எரியும்.
கார்போ வெஜிடாபிலிஸ்.
Carbo vegetables.
தொடர்ச்சி...
ஆறாத துர்நாற்றமடிக்கும் சதை அழுகும் புண்களுக்கும் எரிச்சலுடன் கூடிய துர்நாற்றப் புண்களுக்கும்
ஏற்றது. சிறிய இரத்தத் தேக்கமும் வேக்காடடைந்து கறுப்பாகவோ நீல நிறமாகவோ மாறி, செப்டிக் அடைந்து, புண்கள் தோன்றிச் சதைஅழுகும். அடிபட்டபிறகும், அதிர்ச்சிக்குப் பிறகும்,அறுவை சிகிச்சைக்குப் பிறகும் இரத்தம் விசமாகி செப்டிக் அடையும் நிலைக்கு கார்போ வெக் அற்புத மருந்து.விரல் நுனியில்
புண்கள் ஆறாமலிருப்பது.
வயதானவர்களுக்கு உடலில் வட்ட வட்டமாக சதை
அழுகிவிடுதல். கால் விரல்களில் தோன்றும் புண்கள்.
இரைப்பை புண்கள்.குதத்தில் தோலுரிதல்.
கறுப்பு நிறத்துடன் தண்ணீர் போல் இடைவிடாமல் வெளிப்படும் லேசான இரத்தப் போக்கிற்கு மிகவும் ஏற்றது.முகம் வெளுத்து மூக்கிலிருந்து இரத்தப்போக்கு ஏற்படுதல்.ஒரே நாளில் பல முறை மூக்கிலிருந்து இரத்தப் போக்கு.மலக்குடல் இரத்தப்போக்கு. ஈறுகளில் இரத்தக் கசிவு .கருப்பையிலிருந்து கறுநிற இரத்தக் கசிவு.
கார்போ வெஜிடாபிலிஸ்
Carbo vegetables.
தொடர்ச்சி...
உடலில் குளிர்ச்சி.
மூச்சுக் காற்று குளிர்ந்து
இருக்கும்.குளிர்ந்த வியர்வை இருப்பினும் நோயாளி
மிக அதிக குளிர்ந்த நீரைக்
குடிப்பார்.விட்டு விட்டு வரும் காய்ச்சலில்'குளிர் நிலையில் அதிக தாகம்'என்பது கார்போ வெக்கின் விநோதமான முத்திரைக்குறி.
பெண்களின் உடல் உள் உறுப்புகளில் தளர்ச்சி.கருப்பையில் கனத்த தன்மையுடன் கீழ் இழுக்கும் உணர்ச்சி .அனைத்து உள் உறுப்புக்களும் வெளியே பிதுங்கி வந்துவிடுமோ என்ற உணர்வு. கருப்பையின் கீழ் இழுக்கும் உணர்ச்சியால் நோயாளியால் எழுந்து நிற்க முடியாது.கருப்பையிலிருந்து
கறுப்பு நிற இரத்தம் கசிந்து
கொண்டே இருக்கும். கருப்பையிலிருந்து வெளிப்படும்
கசிவு துர்நாற்றமாகவும், கறுப்பாகவும்,சிறு சிறு கட்டிகளுடனும் ,மாதவிலக்கின் இடைக்காலம் முழுவதும் இருக்கும்.'குபீர் குபீர்'என்ற
அதிகமான போக்கு இருக்காது.மிகுந்த பலவீனத்துடன் பலம் முழுவதும் இழந்த
கர்ப்பிணிப் பெண்களுக்கு
கார்போ வெக் தெம்பூட்டும்.
இவர்களுக்கு குமட்டல்,வயிறு உப்புசம்,பலவீனம், அசுத்த இரத்தக் குழாய் பெருத்து
விடுதல் ஆகிய குறிகள் காணப்படும்.பலவீனமான,
தெம்பே இல்லாத ,குழந்தை
இழுக்கும் பால் தரும் தாய்க்கு பால் வற்றிவிடும் சமயம்
கார்போ வெக் கொடுக்க
வேண்டும். இரத்தக் கசிவுடன் கருப்பையில் தங்கிவிட்ட நஞ்சுக் கொடியை கார்போ வெக் வெளிக் கொண்டுவரும்.பலமில்லாத பிரசவ
வலிக்கும் ஏற்றது.
கார்போ வெஜிடாபிளிஸ்.
Carbo vegetabilis.
தொடர்ச்சி...
கார்போ வெக்கின்
கழிவுகள் அனைத்தும் மிகுந்த துர்நாற்றமடிக்கும்.
கொய்னாவினால் அமுக்கப்பட்ட முறை சுரத்திற்கு ஏற்றது. வியாதியில் அடிபட்டதால் வரும் களைப்பை போக்கி
தெம்பை உண்டாக்கும்.
நாடி உணரமுடியாத அளவு
குட்டையாயும், மிருதுவாயுமிருத்தல். அடிக்கடி விந்து கசிதல்.தூங்கும் சமயமே சுயஇன்பம் காணுதல்.உடலின்
உட்புறத்தில் ஏதோ ஓர் இடத்தில் எரிச்சலும் சூடும்.ஆசன வாயில் காரமான, பட்டஇடங்களில் புண்ணை உண்டாக்கும் தன்மையான
நீர் கசிதல்.சிறுநீரக உபாதடைகள், காசநோய், புற்றுநோய் ஆகிய உபாதைகளின் உக்கிரத்தை தணிக்கும்.
பொன்னுக்கு வீங்கி எனும்
காதின் கீழுள்ள பரோடிட்
சுரப்பி வீங்கிய வியாதி விரைக்கு தாவுமானால் "கார்போ வெக்" பயன்படும்.
முலைக்கு தாவுமானால் "பல்சடில்லா".
அரையிடுக்கு அக்குள் பகுதிகளில் மேககிரந்தியால்
சுரப்பிகள் கல் போல் கடினமாதல். வயோதிகர்களின்
வலியுள்ள வயிற்றுப்போக்கு இவையாவும் தீரும்.காலரா வயிற்றுப் போக்கின் அந்திம கூட்டத்திற்கும். தவிர்க்க வேண்டியவை..கொழுப்பு
உணவு வெண்ணெய்.
குறிப்பு..மிக அதிகமான குளிர்ந்த வியர்வை, உடல் சில்லிப்பு,குளிர்ச்சியான சுவாசம், குளிர்ச்சியான நாக்கு, குரல் இழந்து போதல்,சருமம் நீல நிறமாக மாறுதல், காற்றுப் பசி ஆகிய ஆபத்தான
கட்டத்தில் கார்போ வெக்
நோயாளியின் உயிரைக்
காப்பாற்றும்.
No comments:
Post a Comment