Lycopodium. ஹோமியோ மருந்தின் குணம்
வலப்பக்க உபாதைகள்.வலப்புறத்தில் தொடங்கி இடப்புறம் செல்லுதல்.தொண்டை, சினைப்பைகள் , கற்பப்பை,மூத்திரக்காய், சருமம் இவைகளின்
உபாதைகள், குடல் வாதம்,வயிறு நிரம்பிய உணர்ச்சி,பசி ஆனால் சீக்கிரமே வயிறு
நிரம்பிய உணர்ச்சி.
உறுமல் சப்தத்துடன் அதிக
வாயு உப்புசம்.குடல் சம்பந்தமானதும் கீழ் நோக்கி அமுக்குதல்.கைகால் விரல்களை பற்றிய கீல் பிடிப்பு.
சுத்தமான சிறுநீரில் செம்மணல் போன்ற பிடிமானம்.சிறுநீர் கழித்த பின் முதுகில் மூத்திரக் காய்களில் வலி
குறைதல். கறுத்த உடல்.முகமும் இடுப்புக்கு மேலும் இளைத்திருத்தல். இடுப்புக்கு கீழ் கால்கள் உப்பி அல்லது வீங்கியிருத்தல். புத்தி கூர்மையாயிருத்தல் .தசைகள் மெலிந்திருத்தல்.
கடுகடுத்தல்,விழித்தெழுந்ததும் கோபம்.சிடு சிடுப்பான குணம். குழந்தைகள் உதைத்து கொண்டு வீரிட்டு அழுதால். எளிதில் கோபம்
கொள்ளுதல்.எதிர்த்து அல்லது மறுத்துப் பேசினால்
பொறுக்க முடியாது.சண்டைக்கு இழுத்தல்.
தேகம் வெளிர் மஞ்சள் நிறம்.அழுக்கடைந்திருத்தல்
ஆரோக்ய குறைவு.சோகை
வெறுப்பு.வயதை மீறிய கிழத் தோற்றம்.
ஒருபாதம் சூடாயும் மற்றது
குளிர்ந்து பிருந்தாவன். வியர்த்த பிறகு அதிக தாகம்.
உடலின் இடப்பாகம் சில்திப்பு. சில்லிப்பிற்கும் உஷ்ணத்திற்கும் இடையில் புளித்த வாந்தி.
லைகோபோடியம்
Lycopodium.
தொடர்ச்சி...
அடி வயிற்றின் கீழ்பகுதியில் வாயு
உப்புசம்.(அடி வயிற்றின் மேல் பகுதியில் வாயு உப்புசம் "கார்போ வெக்" ;
அடி வயிறு முழுதும் உப்புசம் "சைனா") .மூக்கின் நுனித்தோல் விசிறி போல் விரிந்து சுருங்குதல் (பாஸ்பரஸ்).
நெற்றித் தோலில் ஆழமான
வெடிப்புகள். புளிப்புத் தன்மை.புளிப்பு சுவை.புளிப்பான ஏப்பம்.புளிப்பான வாந்தி இரவில் கசப்பு சுவை .அதிகபசி கொஞ்சம் உண்டவுடன்
வயிறு நிரம்பிய உணர்ச்சி.
தோலில் வறட்சி.திறந்த வெளியில் இருக்க விருப்பம்.
நீர் வீக்கம். வயதான தோற்றம்.உடலின் வலது பக்க வலிப்புகள்.இச்சையின்றி கை கால் இழுத்தல் விறைத்தல்.
சுய இன்பம் காண்பதால் ஏற்படும் பின் விளைவுகள்.ஆண் குறி சிறுத்து சில்லிட்டு ஆண் தன்மை குறைதல்.
தூங்கும் சமயம் பாதிக்கண்கள் திறந்திருத்தல்.வலது பக்க அறையிடுக்கில் வரும்
குடல் பிதுக்கம். உடலுறவில்
சீக்கிரமே விந்து வெளிப்ப
டுதல் (கிராபைட்டஸ், சிங்கம்
மெட்) இரவில் படுத்தால் மூக்கடைத்துக் கொள்ளுதல்.(அம்மோனியம் கார்ப்,
நக்ஸ் வாமிகா)சாப்பிட்ட உடனே வயிற்றில் வேதனை உணர்ச்சி.
விரல்கள் மரத்துப் போதல்.
(பாஸ்பரஸ்).அக்குள் சுரப்பிகள் வீங்கி பருத்து விடுதல்.
உடல் கழிவுகள் துர்நாற்றம்
அடித்தல்.எலும்பு வேக்காடு.
எலும்பு மென்மையடைதல்.
எலும்புகள் அழிதல்.
உடலின் மேல் பகுதி இளைப்பு;கீழ் பகுதி நீர்வீக்கம். மிக சீக்கிரமே முதுமை
யடைதல்.
லைகோபோடியம்.
Lycopodium.
தொடர்ச்சி...
மனம்.கவலை.தன்னம்பிக்கையிழத்தல்.மனிதர்களை கண்டால் பயம். யாருடனும் பேச விரும்புவதில்லை .அப்படியிருந்தும் தனியாயிருக்கவும் விருப்பமிருக்காது.அதிக கோபம்.கடுமையான
வார்த்தைகளை உபயோகப்
படுத்துதல்.ஞாபக சக்தியிழத்தல். எழுதும் பொழுது வார்த்தைகளை விட்டு விடுதல்.
தலை கனத்துடன் வலி. பொரிகளில் வலி. காலையில்எழுந்தவுடன் மயக்கம். முடி கொட்டுதல் அல்லது நரைத்தல்.
கண்களில் வறட்சி,வலி.
கண்களில் உப்பு இருப்பது
போன்ற எரிச்சல்.இமைகள்
மட்டும் சிவந்திருக்கும்.பார்கப்படும் பொருட்களின் இடது பக்கம் மட்டும் தெரியும்.
காதுகளில் மஞ்சள் சீழ்,செவிடு,கொய்னா மாத்திரை
அல்லது பாதரசம் கலந்த
மாத்திரைகள் அதிகம் சாப்பிட்டதால் ஏற்பட்ட செவிடு.
காதுகளில் இரைச்சல். காதுகளுக்கு பின் புறம்படை.
மூக்கடைப்பு.பச்சை நிறமான சளி.குழந்தைகள் சுவாசிக்க கஷ்டப்படும்.தூக்கத்திலும் தூங்கி எழுந்த பிறகும்,மூக்கை தேய்த்துக்
கொண்டிருத்தல்.சுவாசிக்கும் பொழுது "குர்"என்ற சப்தம்.நாசியினுள் புண்கள்.
லைகோபோடியம்.
Lycopodium.
தொடர்ச்சி...
சாம்பல் மஞ்சள் நிற
முகத்துடன் கண்களைச்சுற்றிலும் நீல நிறவட்டம்,சுருங்கிய இளைத்த முகம்.செப்பு நிற சரும எழுச்சி.குடற்காய்ச்சலில் கீழ் தாடை தொங்கி விடுதல்(லாக்கசிஸ்,ஓபியம்) முகம் மற்றும் உதட்டு ஓரங்களில் அரிப்புடன் கூடிய எச்சில் தழும்பு.
வாயில் மற்றும் நாக்கில்
வறட்சி ஆனால் தாகமின்மை.நாக்கு வறண்டு,கரு நிறத்துடன் வெடித்து வீங்கியிருக்கும்.நாக்கு முன்னும் பின்னும் ஆடுதல்.வாயில்
உமிழ்நீர் ஒழுகுதல்.நாக்கில்
நீர் கொப்புளங்கள்.நாக்கின் மேற்பகுதியிலும் அடியிலும் புண்கள்.
தாகமின்மையுடன் தொண்
டையில் வறட்சி.சாப்பிட்ட உணவு மூக்கின் வழியாக எதிர்க்கழித்தல். டான்சில் கோளங்கள் வீங்கி சீழ் பிடித்தல். டான்சில் புண்கள்.
தொண்டை அடைப்பான் வலது பக்கம் ஆரம்பித்து இடது பக்கம் பரவும்.குரல் நாண் புண்கள்.மெலிந்த
இளைத்த சிறுவர்களின் நீடித்த வறண்ட இருமல்.
லைகோபோடியம்.
Lycopodium.
தொடர்ச்சி...
அகோரப்பசி.இனிப்பில் விருப்பம்.முட்டைகோஸ்,பீன்ஸ் உண்பதால் அஜீரணம்.மிக மந்தமாக ஜீரணம்.சிறிது உணவு
உண்டதும் வயிறு நிறைந்த
உணர்வு.இரவில் பசியுடன்
விழித்தெழுதல்.விக்கல். முழுமையடயாத ஏப்பத்துடன் குரல்வளை வரை எரிச்சல்.
இடது மேல் வயிறு உப்புசம்.
வலது பக்கம் குடல் இறக்கம்.உணர்ச்சி பூர்வமான கல்லீரல்.வயிற்றில் பழுப்பு
நிறப் புள்ளிகள்.கல்லீரல்
உபாதையுடன் உடலில் நீர்
வீக்கம்.கல்லீரல் வேக்காட்டில் ஈரல் சுண்டி அளவு சிறுத்து விடும்.கல்லீரலின்
செயல் கடுமையாக பாதிக்கும்.அடைபட்ட வயிற்றுக்
காற்று மேலும் கீழும் பிரியும். ஜீரணமாகும் சமயத்தில் இதயத் துடிப்பு அதிகமாகும்.உணவு உண்டதும்
தூக்கக் கலக்கம்.
குடல் பாதையில் மந்தமான
தன்மை.கெட்டியான சிறிய
அளவு முழுமையடையாத மலம் கடினத் தன்மையுடன் வெளிப்படும் .மலம் கழிக்கதூண்டல் ஏற்படும் ஆனால்
பலன் கிடைக்காது.
சிறுநீர் கழிக்கும் முன்பு முதுகில் கடுமையான வலிஇருக்கும்.சிறுநீர் கழித்த பின் வலி மறையும்.மிக நிதானமாகவே சிறுநீர் கழியும்.இரவில் அதிக சிறுநீர்.சிறுநீரில் கெட்டியான சிவந்த வண்டல் படியும்.சிறுநீர்க்
கற்கள், கற்களால் திருகுவலி.சிறுநீர் கழிக்கும் முன்பு குழந்தை வீறிட்டு அழும்.(போராக்ஸ்).
நன்றி - சீரங்கன் ராமலிங்கம் ஐயா.
No comments:
Post a Comment