நவகிரகங்களில் ராகு - கேது கிரகங்கள் நிழல் கிரகங்கள் என அழைக்கப்படுகின்றன. அதோடு மகாவிஷ்ணுவின் மோகினி அவதாரத்திற்கு முன்னர் ராகு - கேது இல்லை. இதன் காரணமாக மற்ற கிரகங்களுக்கு ஒவ்வொரு நாள் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், ராகு - கேதுக்கென ஒரு நாள் ஒதுக்க முடியாததால், ஒவ்வொரு நாளும் அந்த கிரகங்களுக்கு என ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்க சிவபெருமான் உத்தரவிட்டார்.
அந்த வகையில் ராகு காலம் என்றும், கேதுவுக்கான நேரம் எமகண்டம் என ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இராகு காலம் நேரம் :
தினமும் நிழல் கிரகமான ராகுவால் ஆளப்படக்கூடிய குறிப்பிட்ட ஒன்றரை மணி நேரத்தை ராகு காலம் என அழைக்கப்படுகிறது. இது கெட்ட நேரமாக கொள்ளப்படுவதால், இந்த நேரத்தில் எந்த ஒரு சுப நிகழ்வுகளைத் தொடங்குவதைத் தவிர்க்க வேண்டும்.
ராகு காலத்தை நினைவில் வைத்துக் கொள்ளும் வழி
ராகு காலம் முதலில் ஆரம்பிப்பது திங்கட்கிழமையாகும்.
திங்கள் கிழமை - காலை 7.30 மணி முதல் 9.00 வரை
சனி கிழமை - காலை 09.00 மணி முதல் 10.30 வரை
வெள்ளி கிழமை - காலை 10.30 மணி முதல் 12.00 வரை
புதன் கிழமை - மதியம் 12.00 மணி முதல் 01.30 வரை
வியாழன் கிழமை - மதியம் 01.30 மணி முதல் 03.00 வரை
செவ்வாய் கிழமை - பிற்பகல் 03.00 மணி முதல் 04.30 வரை
ஞாயிறு கிழமை - மாலை 04.30 மணி முதல் 06.00 வரை
*எமகண்டம்* :
எமகண்டம் ஒவ்வொரு நாளும் ஒன்னரை மணி நேரம் வருகிறது.
இந்த எமகண்ட நேரமும் கெட்ட நேரமாக கருதப்படுகிறது. இது எமனுக்கு ஏற்ற நேரமாக பார்க்கப்படுகிறது.
குரு பகவானின் புதல்வன் எமன் என்பதால், எமகண்ட நேரத்தை முதலில் வியாழக் கிழமையில் இருந்து முதலில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
அப்படியே நாட்களை பின்னோக்கி புதன், செவ்வாய், திங்கள், ஞாயிறு, சனி, வெள்ளி என நினைவில் வைத்துக் கொண்டு நேரத்தை வரிசையாக நினைவில் வைத்துக் கொள்ளலாம்.
எமகண்ட நேரம் :
வியாழக் கிழமை -காலை 6.00 மணி முதல் 7.30 வரை
புதன் கிழமை : காலை 07.30 மணி முதல் 09.00 வரை
செவ்வாய்க் கிழமை : காலை 09.00 மணி முதல் 10.30 வரை
திங்கட் கிழமை : காலை 10.30 மணி முதல் 12.00 வரை
ஞாயிறு கிழமை: மதியம் 12.00 மணி முதல் 01.30 வரை
சனிக் கிழமை: மதியம் 01.30 மணி முதல் 03.00 வரை
வெள்ளிக் கிழமை : பிற்பகல் 03.00 மணி முதல் 04.30 வரை
நிழல் கிரகம், சர்ப்ப கிரகம் எனப்படும் ராகு காலம், எமகண்ட நேரங்களில் சுபச் செயல்களைச் செய்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
*குளிகை* :
குளிகன் என்றழைக்கப்படுபவர் சனி பகவானின் மைந்தன். இவரைக் குறிக்கும் காலம் தான் குளிகை காலம்.
குளிகை காலமான தினமும் 1.30 மணி நேரம் சற்று கெட்ட நேரமாக பார்க்கப்படுகிறது.
இருப்பினும் இந்த நேரத்தில் அசுப காரியங்களை செய்வதை தவிர்க்க வேண்டும்.
இந்த நேரத்தில் ஆரம்பிக்கும் எந்த ஒரு செயலும் முற்றுப் பெறாமல் மீண்டும், மீண்டும் தொடர்ந்து நடக்கும் என கருதப்படுகிறது.
அதனால் தான் இந்த நேரத்தில் திருமணம் போன்ற முக்கிய சுப காரியங்களைத் தவிர்க்க வேண்டும்.
ஆனால் நகை வாங்குதல், தங்கம், வெள்ளி வாங்கும் செயல்களை இந்த நேரத்தில் செய்தால் நம்மிடம் நிறைய செல்வம் சேரும் என்பது நம்பிக்கை.
குளிகை நேரம் :
சனியின் மைந்தன் குளிகன் என்பதால் இதனை சனிக்கிழமையிலிருந்து பின்னோக்கி கணக்கிடுங்கள்.
சனிக் கிழமை -காலை 06.00 மணி முதல் 07.30 வரை
வெள்ளிக் கிழமை - காலை 07.30 மணி முதல் 09.00 வரை
வியாழன் கிழமை - காலை 09.00 மணி முதல் 10.30 வரை
புதன் கிழமை - காலை 10.30 மணி முதல் 12.00 வரை
செவ்வாய்க் கிழமை - மதியம் 12.00 மணி முதல் 01.30 வரை
திங்கள் கிழமை - மதியம் 01.30 மணி முதல் 03.00 வரை
ஞாயிறு கிழமை - பிற்பகல் 03.00 மணி முதல் 04.30 வரை
🙏🙏🙏