Wednesday, 22 July 2026

குவாண்டத்தின் கதை 2

"குவாண்டத்தின் கதை"… 02

“பேராற்றின் ஊற்று”

இந்த உலகத்தில் உண்மையிலேயே விசித்திரமான ஒன்று இருக்கிறதா?
அப்படி இருந்தால்…
அது கருந்துளை அல்ல.
காலப்பயணமும் அல்ல.
வேற்றுக்கோள்வாசி என்னும் ஏலியம் அல்ல.

அது...
"குவாண்டம் (Quantum)". 
தமிழில் அதை "மீநுண்மம்" எனலாம்.

இன்று 'குவாண்டம்' (Quantum) என்னும் சொல் உலகம் முழுவதும் எதிரொலிக்கிறது. செயற்கை நுண்ணறிவு (AI), குவாண்டம் கணினி, குவாண்டம் தகவல் தொடர்பு, குவாண்டம் குறியாக்கம் என்று அறிவியலின் பல துறைகளிலும் அது தனது தடத்தைப் பதித்திருக்கிறது. ஆனால் இன்று பரந்து விரிந்திருக்கும் இந்தக் குவாண்டம் பேரரசு ஒரே நாளில் உருவாகிய ‘மயன்’ நகரமில்லை. ஒரு மாபெரும் ஆறு, மலையின் உச்சியில் இருக்கும் சிறிய ஊற்றிலிருந்து பிறப்பதைப் போல, குவாண்டத்தின் பயணமும் ஒரு சிறிய அறிவியல் கேள்வியிலிருந்தே தொடங்கியது.

அந்தப் பயணம் தொடங்கிய ஆண்டு 1900.
ஆரம்பித்த இடம், ஜெர்மனியின் பெர்ளின் நகரம்.

இயற்பியலாளரான 'மாக்ஸ் பிளாங்க்' (Max Planck) ஒரு சிக்கலான பிரச்சினைக்குத் தீர்வைத் தேடிக்கொண்டிருந்தார். 'கருவுடல் கதிர்வீச்சு' (Black Body Radiation) என்னும் ஆய்வின்போது உருவான சிக்கல் அது.

அக்கால இயற்பியலாளர்கள் ஒரு விசயத்தை இயல்பாக நம்பிக்கொண்டிருந்தார்கள். "ஆற்றல் (Energy) என்பது தொடர்ச்சியாகப் பாய்கிறது". ஆனால் மாக்ஸ் பிளாங்கின் கணிதக் கணிப்புகள் வேறொரு முடிவைச் காட்டின. "ஆற்றல் தொடர்ச்சியாக வெளிப்படும் ஒன்றல்ல. மாறாக, மிகச்சிறிய தனித்தனிப் பொதிகளாக அது உமிழப்படுகிறது அல்லது உறிஞ்சப்படுகிறது". அவரது கணிப்புகள் சுட்டிக் காட்டிய அம்மீச்சிறு ஆற்றல் பொதிகளுக்குத்தான் பின்னாட்களில் ‘குவாண்டா’ (Quanta) என்னும் பெயர் இடப்பட்டது.

பிளாங்கின் அந்தக் கருத்து, அப்போது ஒரு சிறிய கணிதத் தீர்வு மட்டுமே. ஆனால் அது, இயற்பியலின் வரலாற்றையே மாற்றப்போகிறது என்பதை அப்போது பிளாங்க் அறிந்திருக்கவில்லை. அதற்கான நோபல் பரிசும் பின்னர்தான் வழங்கப்பட்டது.

ஐந்து ஆண்டுகளின் பின், 1905இல், ஒரு இளம் இயற்பியலாளர் அந்த விதையை மேலும் வலிமையாக்கினார். அவர் வேறு யாருமில்லை, மாமேதை ‘அல்பேர்ட் ஐன்ஸ்டைன்’ (Albert Einstein). 'ஒளிமின் விளைவு' (Photoelectric Effect) என்னும் தனது ஆய்வில், 'ஒளி, தனித்தனிப் பொதிகளாகப் செயல்படுகிறது' என்ற கருதுகோளை அவர் முன்வைத்தார். ஒளி அலையாகவே பயணிக்கிறது என்ற கருத்து நிலவிவந்த காலம் அது. 

நுண்ணிய ஆற்றல் பொதிகளாக ஒளி செயல்படுகிறது என்னும் புரட்சிகரமான சிந்தனை, பிளாங்க் விதைத்த விதைக்கு உரமாக இருந்தது. பின்னர் அந்த ஆற்றல் பொதிகளுக்கு 'ஃபோட்டான்கள்' (Photons) என்னும் பெயர் வழங்கப்பட்டது.

அதன் பின்னர் அறிவியல் உலகம் அதுவரை சந்தித்திராத மிகப்பெரிய கேள்விகளை எதிர்கொண்டது. 
ஒளி என்றால் என்ன?
அது அலையா?
இல்லை துகளா?
இல்லை இரண்டுமா?
அல்லது…
மனிதன் இதுவரை நினைத்துப் பார்க்காத வேறொன்றா?

இந்தக் கேள்விகள், உலகின் தலைசிறந்த இளம் இயற்பியலாளர்களை ஒரே சிந்தனை மேடைக்கு அழைத்து வந்தன. கேள்விகளுக்கான பதிலைத் தேடி, அந்த அடுத்த தலைமுறை இயற்பியலாளர்கள், ஆர்வத்துடன் களத்தில் குதித்தார்கள். 

அவர்களின் முயற்சி வீண்போகவில்லை. மாக்ஸ் பிளாங்க் விதைத்து, ஐன்ஸ்டைன் உயிர்ப்புடன் வைத்திருந்த விதை, 'குவாண்டம் இயங்கியல்' என்னும் மரமாக முளைக்கத் தொடங்கியது. 

அதன் கிளைகள் அனைத்துத் திசைகளிலும் பரவத் தொடங்கின. 

இன்று குவாண்டம் என்னும் பெருமரத்தின் பூக்கள், உலகெங்கும் வாசனையைப் பரப்பிக் கொண்டிருக்கின்றன. இன்று மனித நாகரிகத்தை வழிநடத்தும் கணினிகளுக்குக் கூட, நாளை குவாண்டமே அடித்தளமாக மாறக்கூடும்.

இவை அனைத்தும் இலகுவில் நடந்தவையல்ல. பல கணிதவியலாளர்கள் மற்றும் இயற்பியலாளர்களின் உழைப்பில் உருவான பெருமரம் அது. அந்தப் பெருமரத்தின் முதல் கிளையில் இருப்பவர் ஒரு இளம் இயற்பியலாளர்.
அவர் பெயர் 'வேர்னர் ஹைசன்பேர்க்’ (Werner Heisenberg).

அவரைப் பார்ப்பதற்கு நாம் அடுத்த கதவைத் திறக்கப் போகிறோம்.

ராஜ்சிவா(ங்க்) 

#குவாண்டத்தின்_கதை
 #ராஜ்சிவாங்க் 
#ராஜ்சிவா 

குவாண்டத்தின் கதை 1

"குவாண்டத்தின் கதை"�-ராஜ்சிவா(ங்க்)

01
"குவாண்டம் ஏன் தெரிந்திருக்க வேண்டும்"

கடந்த முப்பது ஆண்டுகளில் உலகத்தை அதிகமாக மாற்றிய அறிவியல் தொழில்நுட்பம் எது?
இணையமா? ஸ்மார்ட்போன்களா? சமூக வலைத்தளங்களா?
இல்லை.
செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence).

இப்போது ஆரம்பித்திருப்பது செயற்கை நுண்ணறிவின் காலம். ஏஐ (AI) இல்லாது இனி எதுவுமே இல்லை. விரும்பியோ, விரும்பாமலோ, தெரிந்தோ, தெரியாமலோ அதை உள் நுழைய வைத்துவிட்டோம் . இனி மனித வாழ்க்கையின் பெரும்பாலான துறைகளில் ஏஐயின் பங்கைத் தவிர்க்க முடியாது. அதன் நன்மைகளை சுவீகரிக்க விரும்பும் நாம், அதனால் உருவாகும் தீமைகளையும் அனுபவிக்கப் பழக வேண்டும். சில நாட்களில் பழகியும் விடுவோம். அறிவியல் தொடர்ந்து தன்னை வளர்த்துக் கொண்டே போகும். அதனால், இனி வரப்போகும் காலங்களிலும் செயற்கை நுண்ணறிவு இப்போதிருப்பதுபோலவே இருக்கப் போகின்றதா என்று கேட்டால், இல்லை, அதுவும் தனது அடுத்த பாய்ச்சலுக்குத் தயாராக வேண்டும்.

இன்றுள்ள செயற்கை நுண்ணறிவின் பயன்பாடுகள் அலாதியானவை. ஆனாலும், நமக்கு உதவும் கருவியாக மட்டுமே அவை செயல்படுகின்றன. மனிதனுக்கு அது போதாது. அவனைப் போலவே சிந்திக்கக் கூடிய கூட்டாளியாகவும் (Collaborator), முடிவுகளை எடுக்கக் கூடிய பொறுப்பாளனாகவும் (Decision maker), நண்பன்போன்ற ஒரு துணைவனாகவும் ஏஐ இருக்க வேண்டும் என்றே விரும்புகிறான். பல ஹாலிவூட் திரைப்படங்களில் நாயகனுக்குத் துணையாக அப்படியான ஒன்று இருப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். தனிப்பட்ட வாழ்க்கையிலோ, பணியிடங்களிலோ அவற்றிற்கான முக்கியத்துவம் அதிகமாக இருக்கும். எதிர்காலம் அதைநோக்கியே நகர்கிறது. இவற்றிற்கான ஆயத்தங்கள் எல்லாம் முடிந்துவிட்டன. ஆனால், ஏஐயின் மேம்படுத்தலையும், அடுத்த பாய்ச்சலையும் ஒரு தடை நகரவிடாமல் தடுக்கிறது. அந்தத் தடை, ஏஐயிடம் இல்லை. அதை இயக்கும் கணினிகளிடம்தான் இருக்கிறது. இன்றுள்ள ஏஐக்கு ஒரு எல்லை உண்டு. அது மிகவும் புத்திசாலியாகத் தோன்றலாம். ஆனால், அதன் பின்னால் இயங்குவது பாரம்பரியக் கணினிகள்தான்.

இப்போதிருக்கும் அதியுயர் ஆற்றல் கொண்ட உச்சக் கணினிகள் (Super Computers), ட்ரான்ஸிஸ்டர் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட சிப்களுடனே (Chips) இயங்குகின்றன. இன்றுள்ள அனைத்துக் கணினிகளும் மிக எளிய மொழியில்தான் பேசிக்கொள்கின்றன. அந்த மொழியில் இரண்டு குறியீடுகள்தான் உள்ளன. அவை 0 மற்றும் 1. இந்த இரு மதிப்புகளைக் கொண்ட 'இருமை' முறைதான் 'பிட்' (Bit) என்னும் தகவல் அலகிற்கான அடிப்படை. இன்றுள்ள உச்சக் கணினி, அதிகபட்சமாக ஒரு நொடியில், ஒரு குயிண்டில்லியன் (Quintillion) அதாவது 10^18 கணிப்புகளைச் செய்யக்கூடியது. ஆனால், இப்படிப்பட்ட வேகத்தில் கணிக்கும் கணினிகளின் சிப்கள் கொதிக்கும் உலைகள்போலச் சூடாகின்றன. அவற்றைக் குளிர்விப்பதில் பல நடைமுறைச் சிக்கல்கள் இப்போதே இருக்கின்றன. இந்த நிலையில், இதற்கும் அதிகமான பயன்களைப் பெறுவதற்கு, இந்தச் சிப்கள் போதுமானவை இல்லை. அதை எப்படி ஈடு செய்யலாம்?

அதற்கிருக்கும் ஒரேயொரு வாய்ப்புத்தான், குவாண்டம் கணினிகள். 

குவாண்டம் கணினிகள் இருமை முறையில் இயங்குவதில்லை. அவற்றிற்கான அடிப்படை 'பிட்' அல்ல. ’க்யூபிட்’ (Qubit). குவாண்டம் பிட் (Quantum Bit) என்பதன் சுருக்கம்தான் க்யூபிட். 0 அல்லது 1 என்னும் இருநிலைகளில் ஒன்றாக மட்டும் இல்லாமல், அவற்றின் உச்சநிலைக் கலவையாகவும் இருக்க முடியும். இது குவாண்டத்தின் 'உச்சநிலை' (Quantum Superposition) என்னும் வினோதச் செயற்பாட்டை அடிப்படையாகக் கொண்டது. இதை நீங்கள் இப்படிப் புரிந்துகொள்ளலாம்

நீங்கள் ஒரு இடத்தில் பணி புரிகிறீர்கள். பணி முடிந்ததும் வீடு என்றிருக்கும் ஒரு அப்பாவி. ஒரு பகல் பொழுதில் உங்களைத் தேடி நண்பர் வருகிறார். நீங்கள் வீட்டில் இல்லையென்று மனைவி சொல்கிறார். அப்படியெனில் நீங்கள் பணியிடத்தில் இருப்பீர்கள். இது உங்கள் நண்பருக்கு நன்கு தெரியும். இதேபோல, பணியிடத்தில் நீங்கள் இல்லையென்றால், வீட்டில் இருப்பீர்கள். வீடு, பணியிடம் இதுதான் உங்கள் இருமை நிலை. வீட்டில் இருந்தால், வீட்டு வேலைகளைச் செய்வீர்கள். பணியிடத்திலிருந்தால் அங்குள்ள வேலைகளைச் செய்வீர்கள். ஒன்று இது அல்லது அது. நீங்கள் வீட்டில் இருந்துகொண்டு வீட்டு வேலைகளைச் செய்யும் அதேகணம் பணியிடத்திலும் வேலை செய்தால் உங்கள் மூலம் நிறைய வேலைகள் நடக்கும். ஆனால், சாதாரண மனிதனான உங்களால் அது முடியாது. அதுவே, நீங்கள் ஒரு சுப்பர்மானாக இருந்தால், இரண்டு இடத்திலும் ஒரே சமயத்தில் வேலை செய்வீர்கள். இது மூன்றாம் நிலை. குவாண்டம் உலகத்தை கற்பனை செய்ய இந்த மூன்றாவது நிலையை மட்டும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள். இப்போது உங்களுக்கும் மூன்று வெவ்வேறு சாத்தியங்கள் உண்டு. வீட்டில் இருப்பீர்கள் அல்லது பணியில் இருப்பீர்கள் அல்லது வீட்டிலும், பணியிலும் ஒரே சமயத்தில் இருப்பீர்கள். கிட்டத்தட்ட இதுபோன்றதுதான் கியூபிட்டிலும் நடக்கிறது. ஆனால், மூன்று சாத்தியங்கள் மட்டுமில்லை. பல சாத்தியங்கள். பொதுவாக அதை ஒரு நாணயத்தைச் சுண்டும் உதாரணத்துடன் சொல்வார்கள். நான் உங்களை வைத்துச் சொன்ன உதாரணம், உண்மையில் குவாண்டம் உலகில் நடப்பது அல்ல. அந்த வினோதத்தை கற்பனை செய்ய உதவும் ஓர் ஒப்புமை மட்டுமே.

குவாண்டம் துகள்களான எலெக்ட்ரோன் மற்றும் போட்டோன் போன்றவை, குவாண்டம் உச்சநிலையில் இருக்கக் கூடியவை. குவாண்டம் துகள்களுக்கான அடிப்படை இயல்புகளில் இதுவும் ஒன்று. ஒரு எலக்ட்ரோனின் நிலை, அளவிடப்படுவதற்கு முன் பல சாத்தியங்களின் கலவையாகக் காணப்படுகிறது. அளவிடும் கணத்தில் ஒற்றை முடிவைத் தருகிறது. குவாண்டம் துகள்களின் இந்த விசித்திர செயற்பாடுகளை அடிப்படையாக வைத்துத்தான் குவாண்டம் கணினிகள் இயங்குகின்றன. 1, 0 என்னும் இருமையைக் கொண்டிருக்காமல், பல சாத்தியங்களைக் கொண்டவை. அதனால், ஒரு நொடியில் பல கணிப்புகளை அவற்றால் செய்ய முடிகிறது. 

குவாண்டம் கணினிகளை நாம் உருவாக்கி விட்டோம். ஆனால், சில நடைமுறைச் சிக்கல்களால் அவை முழுமையாக இயங்குவதில் தடைகள் உருவாகின்றன. புறத் தடைகளால் (Noise), குவாண்டம் ஒத்திசைவு (Quantum Coherence) நடைபெற முடியாமல், ஒத்திசைவின்மைக்குப் (Decoherence) போய்விடுகின்றன. அந்தத் தடைகள் உடைக்கப்பட்டுக் குவாண்டம் கணினிகள் முழுமையாக இயங்க ஆரம்பித்தால் மனிதனின் அறிவியல் மிகப்பெரிய உயரத்தைத் தொடும்.

இப்போதுள்ள நிலையில், குவாண்டம் கணினிகளால் அதிகபட்சம் சில மில்லிசெக்கன்களே இயங்க முடிகிறது. சமீபத்தில், கூகிள் நிறுவனத்தின் ‘வில்லோ’ (Willow) குவாண்டம் கணினி ஐந்து நிமிடங்கள் இயங்கியிருக்கிறது. அப்போது அது நம்பவே முடியாத அதிசயமொன்றைச் செய்திருப்பதாகக் கூகிள் நிறுவனம் அறிவித்திருக்கிறது. ஒரு குறிப்பிட்ட கணிதப் பிரச்சினையில், இன்றுள்ள உச்சக் கணினிகள் (Supercomputers), 10^25 ஆண்டுகள் (அதாவது 1 உடன் 25 பூச்சியங்கள் சேர்ந்துவரும் ஆண்டுகளில்) செய்யும் கணிப்புகளை, வில்லோ குவாண்டம் கணினி, 5 நிமிடத்தில் முடித்திருக்கிறது. இப்போது குவாண்டம் கணினிகளின் ஆற்றல் எந்த அளவு பெரியது என்பதை உங்களால் புரிந்துகொள்ள முடிகிறதா?

மனிதனின் அடுத்த தீர்மானம், ஏஐயைக் குவாண்டம் கணினிகளில் இயக்குவது. அக்காலம் ரொம்பத் தூரத்தில் இல்லை. அது நடந்தால் அறிவியல் தன் உச்சத்தைத் தொடும். தீர்க்க முடியாத அனைத்துச் சிக்கல்களும் நொடியில் தீர்க்கப்படும். சில ஆண்டுகளில் குவாண்டம் கணினிகள் பாவனைக்கு வரலாம். அவற்றில் ஏஐ இயங்கும். நம் எதிர்காலமும் ஏஐ மற்றும் குவாண்டம் கணினி ஆகியவற்றுடன் இணைக்கப்படும்.

எதிர்காலம் ஏஐ, குவாண்டம் ஆகிய இரண்டின் கைகளிலேயே ஒப்படைக்கப்படப் போகிறது. அதனால், அவை இரண்டையும் நாம் விரும்பாவிட்டாலும் தெளிவாகத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அதற்கென நான் ஒரு தொடர் எழுத இருக்கிறேன். குவாண்டத்தை அடிப்படையிலிருந்து எழுத முடிவெடுத்திருக்கிறேன். 'அ' இலிருந்து 'ஃ' வரையில் முடிந்த அளவு விளக்கமாக எழுதுவேன். 

குவாண்டத்தைப் புரிந்துகொள்வது அவ்வளவு எளிதல்ல.
சரியான கதவு வழியாக உள்ளே நுழைந்தால் கடினமானதுமல்ல.
அந்தக் கதவைத் திறப்பது என் பொறுப்பு.
உள்ளே வருவது உங்கள் விருப்பு.

அதன் முதல் கதவு நாளை திறக்கும்.

-ராஜ்சிவா(ங்க்)

#குவாண்டத்தின்_கதை
#ராஜ்சிவா 

Wednesday, 3 December 2025

மனிதன் உடலை மேல்நிலைக்கு கொண்டு செல்லும் ரகசியம்

மனித உடல் முழுவதுமான மாற்றத்திற்கான சித்தர் கலையின் இரகசிய வழிமுறைக்கானஅடிப்படை அறிவோம்.

மனித உடலில் எவ்வாறு உணவின் சத்துக்கள் ( தண்ணீரில் கலந்து ) உடலுக்குள் செயல்படுகின்றது என்பதே அடிப்படை ஆகும். 

எனவே சித்த மருத்துவம் செயல்படும் முறை மற்றும் சீன மருத்துவமான அக்குபஞ்சர் செயல்படும் வழிமுறை அறிவதன் மூலமாக உறுதி செய்ய வாய்ப்பு உள்ளது. 

( 1 ) சித்த மருத்துவம் என்பது உணவானது சீரணமாகி - பல்வேறு சத்துக்களாகி ( இரத்தம் மூலமாக ) உடலின் எல்லா பகுதிக்கும், நரம்புகளுக்கும் சென்று சேர்கின்றது. தினசரி இந்த செயல்பாட்டை சரியாக செய்யாத காரணத்தால் உண்டாகும் குறைபாடுகளையே ( நோய் என்பதாக ) அறியப்பட வேண்டி உள்ளது. இதற்கான மருத்துவமே சித்த மருத்துவமாக செயல்படுகிறது. 

( 2 ) சீனர்களால் அறிமுகமாகிய ( அக்குப் பங்சர் ) முதன் முதலாக 1939 ல் உடலியங்கு முறை சார்ந்த வல்லுனர்கள் மற்றும் விஞ்ஞானிகள் கொண்ட குழுவும் இணைந்து - பலவித சோதனைகளை நடத்தியது. இந்த ஆராய்ச்சியை அமெரிக்காவின் சைரஸ் நகரில் உள்ள அப்ஸ்டேட் மெடிக்கல் சென்டரில் நடத்தியது. சீனர்களது வரை படத்தை ஒத்த பாதையில் - ஐசோடோப் திரவம் சரியாக பயணம் செய்து - அடுத்த பாதையில் உடல் உறுப்புகளுடன் இணைந்தது. அரூபமான உயிரை வடிவமாய் - அதற்கு வேறுபட்ட உடலையும் இணைப்பவை - ஆற்றல் சக்திப் பாதைகள் என்பது இப்போது ஏற்றுக் கொள்ளப்பட்ட உண்மையாகும்.

இந்த சோதனைகளின் பயனாக அக்குபங்சர் புள்ளிகளை அறிய உதவும் கருவி கண்டுபிடிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டது. ஆராய்ச்சியின் முடிவில் அக்குபங்சர் புள்ளிகளில் ஒருவித மின்னோட்டம் இருந்ததை அறிந்தனர். இந்த சோதனைகளின் பயனாகவும் - இதற்குப் பிறகு 1970 களில் நடந்த ஆராய்ச்சியில் - உடலின் சக்திப் பாதையின் துவக்கத்தில் - ஔி விடக் கூடிய - திரவ நிலை ஐசோடோப் செலுத்தப்பட்டு - கிர்லியான் கருவி பயன்படுத்தப்பட்டு - உடல் தொடர்ந்து கவனிக்கப்பட்டு - திரவம் செல்லும் பாதை பதிவு செய்யப்பட்டது. இம் முறையில் திரவ நிலை ஐசோடோப் என்பது - ரத்த ஓட்டத்திலோ அல்லது நரம்புகளிலோ செல்லாமல் - தனியான ஒரு பாதையில் செல்வதையும் - அது இடைப்பட்ட உடல் உறுப்புகளில் தடையின்றிப் பயணம் செய்வதையும் கண்டு வியந்தனர்.

இந்த சோதனை முறையில் ஆராய்ச்சியாளர் குழுவானது - கண்களால் காண முடியாத சூரிய சக்திப் பாதை உடலில் இருப்பதையும் - அந்த பாதையில் சக்தி என்பது குறிப்பிட்ட முறையில் நகரவும் செய்கிறது என்கிற உண்மையை - ஔி உமிழும் ஐசோடோப் திரவத்தால் காண முடிந்தது.

அக்குபஞ்சர் மருத்துவம் என்பது, உணவில் உள்ள சத்துக்கள் ( இரத்தத்தில் கலந்து ) செல்லும்போது - உண்டாகும் ஆற்றல் மற்றும் மின்காந்த அதிர்வு அலைகளை ) அடிப்படையாக கொண்டதாக உள்ளது.இதனையே Energy and ritham or Essence ( ஆற்றல் மற்றும் அதிர்வு அல்லது எசன்ஸ் ) என்ற இயக்கமாக கொண்டு - உடல் குறைபாட்டு மூலமாக உருவாகும் நோய்களை சரி செய்கின்றது. 

இதற்காக உடல் நரம்பு பாதைக்கு இணையாக ( உடல் உறுப்புகளுடன் ) இணைந்துள்ள - தனி வழியான ( சக்தி ஓட்டம் ) பாதைக்குள், சிறிய ஊசிகளை செலுத்தி சரி செய்கின்றது. இதன் மூலமாக இரத்த ஓட்டம் மூலமான ( உடல் குளிர்ச்சி மற்றும் வெப்பம் மற்றும் துடிப்பு ) மாற்றங்களை உண்டாக்கிட, வெள்ளி ( குளிர்ச்சி ) – தங்கம் ( துடிப்பு ) – செம்பு ( வெப்பம் ) ஊசிகளை பயன்படுத்துகின்றனர். உடலுக்குள் உள்ள முக்கியமான உறுப்புகளான ( மண்ணீரல், கல்லீரல், இருதயம், சிறுநீரகம், நுரையீரல் ) ஆகியவைகளில் துடிப்பு இயக்கத்தில் மாற்றம் உண்டாக்கி - நோய்களை குணப்படுத்துகின்றன. 

24 மணி நேரத்தில் ஒவ்வோரு உறுப்புகளின் செயல்பாட்டிற்கு உதவும் ( இரத்தத்தின் சத்துக்கள் காரணமாக உருவாகும் ) துடிப்பை - 2 மணி நேரத்துக்கான உறுப்புகளாக அறிந்து குணப்படுத்தி வருகின்றது. இதனையே தற்போது Essence Acubunture, Astrology Acupunture, Heeling Acubunture என அறிமுகப்படுத்திக் கொண்டு இயங்கி வருகின்றது.

( 3 ) சித்தர் கலை மூலமான முழு உடல் மாற்றம் என்பது ( உடல் தண்ணீர் மூலமாக செல்லும் ) தனிமங்கள் – Nano நுண்மை நிலையில் கதிர்வீச்சு அலைகளை அதிகமாக்கி - சக்திப் பாதைக்குள் Plasma என்ற மின்சார அயன்களான ( +, - ) என்பதாக செயல்படுத்தி உண்டாக்குவதாக உள்ளது. 

உடல் முழுவதும் உள்ள அனைத்து செல்களால் ஆன உறுப்புகள் மாறிட காரணமாக ( கதிரியக்கமடைந்த, நுண் தனிமங்கள் ) மட்டுமே காரணமாக செயல்படுவதாக அறிய வேண்டும். 

ஒவ்வோரு செல்களின் உள் பகுதிக்குள் சென்று. அணுத்துவமான நிலையை அடையும் தன்மையுள்ள பொட்டாசியம் மற்றும் மெக்னீசிய தனிமங்கள் அடங்கிய ஆற்றல்மிக்க ( தண்ணீர் ) என்பதே - முழு உடல் மாற்றத்திற்கு காரணமாகின்றது. இந்த தண்ணீரானது உடலுக்குள் சென்று ( புரோட்டான், எலக்ட்ரான், நியூட்ரான் ) என்ற மின் ஆற்றல் செயல்பாடாகி, எல்லா செல்களிலும் சரியான மாற்றத்தை உண்டாக்கிட - பஞ்சபூத சமநிலை பயன்பாடு மட்டுமே உதவுகின்றதை அறிவது அவசியமாகும்.

திரவ நிலை ஐசோடோப் என்பது மட்டுமே ரத்த ஓட்டத்திலோ அல்லது நரம்புகளிலோ செல்லாமல் - தனியான ஒரு சக்தி பாதையில் செல்வதையும் - அது இடைப்பட்ட உடல் உறுப்புகளில் தடையின்றிப் பயணம் செய்வதையும் கண்டு வியந்தனர்.

எனவே சக்தி பாதையில் செல்லும் துடிப்பை சரி செய்யும் ( அக்குபஞ்சர் ) மருத்துவத்தை அறியும்போது மட்டுமே, சக்திப் பாதையில் செல்லும் அனைத்தையும் ஒழுங்காக்கி தரும் Plasma செயல்பாட்டின் ( திரவ நிலை ஐசோடோப் ) வித்தியாசத்தை அறியலாம். எனவே திட, திரவ, வாயு ஆகிய நிலைக்கும் அதிகமான நுண்மை நிலையான Plasma என்ற ( +,- ) அயன் நிலையே சித்தர் கலை இரகசிய வழிமுறை என்பதை புரிந்து கொள்ள முடியும்.

அக்குபஞ்சர் மருத்துவத்தில் தங்க ஊசியை பயன்படுத்தி ( Ritham என்கின்ற இயக்க அலை ) சரி செய்யப்படுகிறது. சித்தர் கலை என்பது உடலின் ஒவ்வோரு அணுவிலும் உள்ள ( தேவையற்ற மின்காந்த அதிர்வு அலைகளின் பதிவை நீக்கிட ) ஒவ்வோரு செல்களிலும் தங்கம் தங்கும்படி செய்வதால் மட்டுமே - கர்மா என்ற தேவையற்ற அதிர்வு அலைகள் நீக்கப்படுகின்றது.

தங்கச் சத்தானது மனித உடலுக்குள் சிகப்பு செல்களினை அதிகப்படுத்தி - நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி - உடல் சக்கரங்களில் உள்ள குறைபாடுகள் மற்றும் உடலினை சுற்றியுள்ள ஆராவில் உள்ள குறைபாடுகளையும் சரி செய்கிறது. நமது தலைக்குள் உள்ள இரண்டு மூளையையும் - ஒரே சமயத்தில் இயங்கச் செய்து - தெளிவான சிந்தனையுள்ள அறிவினை உருவாக்குவதாக தங்கச் சத்தானது செயல்படுகின்றது.

செல்களுக்குள் 10 nm க்கும் குறைவான தங்க நுண் துகள்கள் சேரும்போது, கதிரியக்கங்களால் செல்கள் பாதிக்கப்படுவது குறைக்கப்பட்டு, உடலை சுற்றியுள்ள பாதுகாப்பு வளையமான " ஆராவின் " அளவானது 1/2 அடி தூரத்தில் இருந்து 10 அடி தூரத்திற்கு அதிகமாக மாறிச் செயல்படுகிறது.

எனவே மனித உடல் முழுவதுமான மாற்றத்திற்கான சித்தர் கலை என்பது ( சித்த மருத்துவம், அக்குபஞ்சர் மருத்துவத்தில் ) இருந்து முழுவதும் மாறுபட்ட செய்முறை அடங்கிய இரகசிய வழிமுறை என்பதே உண்மை ஆகும்.

*****************************************

சித்தர் கலைக்கான வழிமுறைகளை உறுதி செய்வதற்காக - அக்குபஞ்சர் பற்றிய அடிப்படை தகவல்கள் தொகுப்பை, இணைய வழியாக பெற்ற தகவல்களை இங்கு பதிவு செய்துள்ளேன்.

இந்தியாவின் பழமையான குணப்படுத்தும் முறைகளில் ஒன்றானது சித்த மருத்துவம் ஆகும், தென்னிந்தியாவில் ( குறிப்பாக தமிழ்நாட்டில் ) கிமு 10,000 முதல் 6,000 வரை தோன்றியதாக நம்பப்படுகிறது. இந்த முறையானது சிறப்புத் திறன்களைக் கொண்ட ( ஆன்மீக குருக்களான சித்தர்களால் ) உருவாக்கப்பட்டது, மேலும் பண்டைய தமிழ் கலாச்சாரம் மற்றும் மரபுகளில் சித்த மருத்துவம் ஆழமாக வேரூன்றியுள்ளது.

பாரம்பரிய சீன மருத்துவம் ( TCM ) 3,000 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்டுள்ளது, இது பண்டைய நடைமுறைகளிலிருந்து ஒரு சிக்கலான சுகாதார அமைப்பாக உருவாகி வருகிறது. பாரம்பரிய சீன மருத்துவம் (TCM) என்பது சீனாவில் உருவாக்கப்பட்ட பொதுவான கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளும் பரந்த அளவிலான மருத்துவ நடைமுறைகளாகும், மேலும் இது 2,000 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியத்தை அடிப்படையாகக் கொண்டது, இதில் பல்வேறு வகையான மூலிகை மருத்துவம், குத்தூசி மருத்துவம், மசாஜ் ( துய் நா ), உடற்பயிற்சி ( கிகோங் ) மற்றும் உணவு சிகிச்சை ஆகியவை அடங்கும்.

பாரம்பரிய சீன மருத்துவம் (TCM) என்பது - மோசமான ஊட்டச்சத்து அல்லது செரிமான குறைபாடு காரணமான ( இரத்த நாளங்களுக்குள் ) அதன் குளிர் மற்றும் வெப்ப உணர்வுகள் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்ட அலைகளை முறையே ( யின் மற்றும் யாங் ) அறிகுறிகளாகக் கருதப்படுகின்றன.

பாரம்பரிய சீன மருத்துவம் (TCM) முதன்மையாக - மூலிகை வைத்தியம் மற்றும் மனம் - உடல் நுட்பங்களைப் பயன்படுத்துகிறது. யின் மற்றும் யாங், ஐந்து கூறுகள் மற்றும் குய் ஓட்டம் போன்ற கருத்துகளில் TCM கவனம் செலுத்துகிறது, மேலும் மூலிகை மருத்துவம், குத்தூசி மருத்துவம், மோக்ஸிபஸ்ஷன் மற்றும் சிகிச்சை மசாஜ் போன்றவற்றைப் பயன்படுத்துகிறது.

TCM, qi என்பது உயிர் சக்தி அல்லது முக்கிய ஆற்றல். உலகில் உள்ள அனைத்தும் qi-யால் ஆனது, இதில் உடல் மற்றும் ஒரு நபரின் உணர்வுகள் அடங்கும். வாழ்க்கையில் சமநிலையில் இருக்கவும், உடல் அல்லது மன ஆரோக்கிய பிரச்சினைகளிலிருந்து விடுபடவும், ஒரு நபர் சமநிலையான qi-யைக் கொண்டிருக்க வேண்டும் என்று TCM நம்புகிறது.

இரத்த நாளங்களுக்குள் இயங்கும் குய் என்பதற்கும், தோல், தசைகள் மற்றும் அவற்றுக்கிடையேயான திசுக்களில் பரவியுள்ள குய் என்பதற்கும் TCM சிறப்புச் சொற்களைப் பயன்படுத்துகிறது.

குய் தடை காரணம்?

குய் குறைபாடு பொதுவாக மோசமான ஊட்டச்சத்து அல்லது செரிமானத்தால் ஏற்படுகிறது, மேலும் சில சந்தர்ப்பங்களில், இது மரபுவழி பலவீனமான அத்தியாவசிய குய் காரணமாக இருக்கலாம்.

இரத்த நாளங்களுக்குள் அதன் இயக்கத்தைக் குறிப்பிடும்போது, இது பெரும்பாலும் ஊட்டச்சத்து குய் (யிங் குய்) மற்றும் இரத்தத்துடன் (சூ) தொடர்புடையது. 

* குய் குறைபாடு மற்றும் ஊட்டச்சத்து:

TCM கோட்பாடு, பெரும்பாலும் மோசமான உணவு மற்றும் உறுப்பு செயலிழப்புடன் தொடர்புடைய குய் குறைபாட்டை சரியான ஊட்டச்சத்து மூலம் நிவர்த்தி செய்ய முடியும் என்று கூறுகிறது. 

* குய் ஊட்டமளிக்கும் உணவுகள்:

* புரதங்கள்: திசுக்களை உருவாக்குவதற்கும் சரிசெய்வதற்கும் அவசியம், ஒட்டுமொத்த ஆற்றல் மற்றும் உயிர்ச்சக்தியை ஆதரிக்கிறது. 

* ஆரோக்கியமான கொழுப்புகள்: ஆற்றலை வழங்குகின்றன மற்றும் ஹார்மோன் உற்பத்தியை ஆதரிக்கின்றன, இது குய் சமநிலைக்கு முக்கியமானது. 

* மாவுச்சத்து இல்லாத கார்போஹைட்ரேட்டுகள்: நிலையான ஆற்றல் மூலத்தை வழங்குகின்றன மற்றும் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்தவை. 

* மாவுச்சத்துள்ள கார்போஹைட்ரேட்டுகள்: அதிக நீடித்த ஆற்றல் வெளியீட்டை வழங்குகின்றன மற்றும் அதிக ஆற்றல் தேவைகள் உள்ளவர்களுக்கு முக்கியமானதாக இருக்கலாம்.

பாரம்பரிய சீன மருத்துவம் (TCM), Qi மற்றும் Essence ஆகியவை வாழ்க்கை மற்றும் உயிர்ச் சக்திக்கு அவசியமான அடிப்படைப் பொருட்களாகக் கருதப்படுகின்றன. Qi என்பது உடல் முழுவதும் பரவும் முக்கிய சக்தியாகும், அதே நேரத்தில் Essence (Jing) என்பது Qi மற்றும் பிற முக்கியப் பொருட்களுக்கு பொருள் அடிப்படையை வழங்கும் அடிப்படைப் பொருளாகும். அவை ஒன்றோடொன்று இணைக்கப்பட்டு பரஸ்பரம் சார்ந்துள்ளது, Essence Qi மற்றும் Qi ஐ உருவாக்குகிறது, இது சாரத்தை பாதிக்கிறது.

"யின் -யாங்" - தத்துவம் நமது சிவ-சக்தி தத்துவத்தை அடிப்படையாகக்கொண்டு உருவாக்கப்பட்டது தான் சீன "யின் -யாங்" (yin-yang)-தத்துவம் எனலாம். "யின்" என்பது நமது உடலில் அமைந்துள்ள நெகட்டிவ் (-ve) எனப்படும் "எதிர்மறை சக்தி" மற்றும் "யாங்" என்பது நமது உடலில் அமைந்துள்ள பாசிடிவ் (+ve) எனப்படும் "நேர்மறை சக்தி" ஆகும். "யின் -யாங்" இவ்விரண்டின் நுண்ணியமான ”சேர்ந்து இயங்கும்" தன்மைதான் நமது உடல் ஆரோக்கியத்தின் அடிப்படையாக செயல்படுகிறது. யின்-யாங் செயல்பாட்டின் ஒத்திசைவு கெடுமானால், நமது உடலில் இயங்கிக்கொண்டிருக்கும் பஞ்சபூத சக்திகளின் செயல்பாடு பாதிக்கப்பட்டு, நமது உயிர் சக்தி ஒட்டப்பாதையில் தடைகள் ஏற்பட்டு உடல் நலக்குறைவு உண்டாகிறது.

TCM Essence அக்குபஞ்சர் = Qi & Essence.

சக்தி - ஆற்றல்( Qi)

சிவம் – Essence

முக்கிய கருத்துக்களில் Qi (முக்கிய ஆற்றல்), யின் மற்றும் யாங் (எதிர்க்கும் ஆனால் நிரப்பு சக்திகள்), மற்றும் ஐந்து கூறுகள் ( மரம், நெருப்பு, பூமி, உலோகம் மற்றும் நீர் ) ஆகியவை அடங்கும். இந்த சக்திகள் மற்றும் கூறுகளில் உள்ள ஏற்றத்தாழ்வுகள் நோய்க்கு வழிவகுக்கும் என்று நம்பப்படுகிறது, மேலும் TCM பல்வேறு முறைகள் மூலம் நல்லிணக்கத்தை மீட்டெடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

யின் மற்றும் யாங்கின் பொதுவாகப் பயன்படுத்தப்படும் இரண்டு பிரதிநிதித்துவ உருவகங்கள் நீர் மற்றும் நெருப்பு. யின் மற்றும் யாங்கின் கருத்து மனித உடலுக்கும் பொருந்தும்; எடுத்துக்காட்டாக, உடலின் மேல் பகுதி மற்றும் முதுகு யாங்கிற்கு ஒதுக்கப்படுகின்றன, அதே நேரத்தில் உடலின் கீழ் பகுதி யின் தன்மையைக் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது. யின் மற்றும் யாங் குணாதிசயம் பல்வேறு உடல் செயல்பாடுகளுக்கும், - மிக முக்கியமாக - நோய் அறிகுறிகளுக்கும் ( எ.கா., குளிர் மற்றும் வெப்ப உணர்வுகள் முறையே யின் மற்றும் யாங் அறிகுறிகளாகக் கருதப்படுகின்றன ) நீண்டுள்ளது.

பாரம்பரிய சீன மருத்துவம் ( TCM ) முறையில், குய் ( Qi ) எனப்படும் உயிர் சக்தி ஆற்றல் கருத்து மிகவும் முக்கியமானது. இந்த குய் ஆற்றல், மெரிடியன்கள் எனப்படும் குறிப்பிட்ட பாதைகள் வழியாக உடலெங்கும் பாய்வதாக நம்பப்படுகிறது. 

மெரிடியன்கள்: மெரிடியன்கள் என்பவை குய் ஆற்றல் பாய்வதற்கான பாதைகளாகும். இவை உடலின் வெவ்வேறு பகுதிகளையும், உறுப்புகளையும் இணைக்கின்றன. 

பாரம்பரிய சீன மருத்துவத்தில் TCM-ல் உடலில் ஆற்றல் பாயும் பாதைகளாக மெரிடியன்கள் கருதப்படுகின்றன. மெரிடியன்களில் ஏற்படும் தடைகள் நோய்களுக்கு வழிவகுக்கும், என்று கருதப்படுகிறது. இந்த மெரிடியன்களில் உள்ள ஆற்றல் ஓட்டம் சீராக இருந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. அக்குபஞ்சர் சிகிச்சையில், மெரிடியன்களில் உள்ள குறிப்பிட்ட புள்ளிகளில் ஊசிகள் செலுத்தப்படுவதன் மூலம், ஆற்றல் ஓட்டத்தை சீராக்கி, உடல்நலப் பிரச்சனைகளை சரிசெய்ய முடியும் என்று கருதப்படுகிறது. 

அக்குபஞ்சர் மருத்துவத்தில், மெரிடியன்கள் என்பவை உடலில் ஆற்றல் (Qi) பாயும் குறிப்பிட்ட பாதைகளாகும். இவை நரம்பு மண்டலத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படுகிறது, ஆனால் அவை நரம்பு இழைகள் அல்ல. இவை நரம்பு மண்டலத்தின் ஒரு பகுதியாகும், இவை உணர்ச்சிகளையும், தகவல்களையும் உடலின் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு கடத்துகின்றன.

ஒவ்வொரு மெரிடியனும் குறிப்பிட்ட உறுப்பு அல்லது உறுப்புகளுடன் தொடர்புடையது மற்றும் உடலில் ஒரு குறிப்பிட்ட பாதையில் செல்கிறது. இவை 12 முக்கிய மெரிடியன்களாக பிரிக்கப்பட்டுள்ளன, அவை ஒவ்வொன்றும் இடது மற்றும் வலது பக்கங்களில் உள்ளன.

"உடல் நலக்குறைவு" என நாம் கருதும் பல குறிகள், நமது உடலினுள் "யின்-யாங்" இணைந்து நடத்தும் போராட்டத்தின் விளைவே தவிர, அவை நோயல்ல. அக்குபஞ்சர் சிகிச்சை மூலம் பஞ்சபூத சக்திகளின் செயல்பாடு சரிசெய்யப்பட்டு சக்தி ஒட்டப்பாதைகளில் ஏற்பட்டுள்ள தடை அகற்றப்படுவதன் மூலம் யின்-யாங் ஒத்திசைவு பாதுகாக்கப்பட்டு, உடல் நலம் சீராகிறது.

யின்-யாங் குணங்கள்: யின் - யாங் நெகட்டிவ் - பாசிடிவ் பெண் தன்மை - ஆண் தன்மை கெட்டியானது - பை போன்று குழிவானது குளிர் - வெப்பம் இருட்டு - வெளிச்சம் கருப்பு - வெள்ளை மந்தம் - சுறுசுறுப்பு இடது - வலது யின்-யாங் செயல் தன்மைகள் இரவில்லாமல் பகலில்லை - பகலில்லாமல் இரவில்லை; வெளிச்ச மில்லாமல் இருட்டில்லை- இருட்டில்லாமல் வெளிச்சமில்லை. அதுபோல் "யின்" மட்டும் தனியாகவோ அல்லது "யாங்" மட்டும் முழுவதும் தனியாக இருப்பதுமில்லை - இயங்குவதுமில்லை. எந்த ஒரு "யின்"னும் சிறிதளவாவது "யாங்" இல்லாமல் இருப்பதுமில்லை - அதேபோல் எந்த ஒரு "யாங்"கும் சிறிதளவாவது "யின்" இல்லாமல் இருப்பதுமில்லை. இரண்டும் எப்போதும் "சம அளவு" "நிலையாக" இருப்பதில்லை.காலை, பகல், மாலை, இரவு, மற்றும் உடலின் செயலாக்கம் - இவற்றுக்கேற்ப அளவு மாறிக்கொண்டே இருக்கும். இரண்டும் ஒன்றுக்கொன்று எதிராக - ஆனால் ஆதரவு தரும் வகையில் செயல்படுகின்றன. ஒன்றின் இயக்கம் அதிகமாகும் போதோ அல்லது குறையும் போதோ- மற்றொன்றின் இயக்கம் அதை நிலைப்படுத்தும் வகையில், பூர்த்தி செய்யத்தக்கதாக இருக்கும். உடல் நலத்தை நிலைப்படுத்தும் ஒரே குறிக்கோளுடன் எப்போதும் இயங்கிக்கொண்டிருக்கும்.

பாரம்பரிய சீன மருத்துவத்தில் (TCM), யின் மற்றும் யாங் என்பது உடலுக்குள் உள்ள மாறும் சமநிலையையும், உயிரியல் தாளங்கள் உட்பட இயற்கை உலகத்துடனான அதன் உறவையும் விவரிக்கும் அடிப்படைக் கருத்துகளாகும். உடலின் செயல்பாடுகள், அதன் தாளங்கள் உட்பட, எவ்வாறு ஒழுங்குபடுத்தப்படுகின்றன மற்றும் அவை சுற்றுச்சூழலுடன் எவ்வாறு தொடர்புபடுகின்றன என்பதைப் புரிந்துகொள்ள TCM யின் மற்றும் யாங்கைப் பயன்படுத்துகிறது. உயிரியல் தாளங்களில் யின் மற்றும் யாங்: பகல் மற்றும் இரவின் 24 மணி நேர சுழற்சி மற்றும் பருவகால சுழற்சிகள் உட்பட உயிரியல் தாளங்களைப் புரிந்துகொள்ள யின் மற்றும் யாங்கின் கருத்துக்களை TCM பயன்படுத்துகிறது.

உடலில் குறிப்பிட்ட பாதைகளில் இயங்கும் 12 முக்கிய மெரிடியன்கள் உள்ளன, மேலும் இந்த பாதைகள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட உறுப்பு அல்லது உறுப்பு அமைப்புடன் தொடர்புடையவை. உடலில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அதிகபட்ச ஆற்றலுடன் பாயும் 12 மெரிடியன்கள் உள்ளன. இந்த அமைப்பு சீன மருத்துவத்தில் "உறுப்பு கடிகாரம்" என்று அழைக்கப்படுகிறது, மேலும் இது 24 மணி நேர சுழற்சியில் ஒவ்வொரு மெரிடியனுக்கும் இரண்டு மணி நேர உச்ச நேரத்தைக் கொண்டுள்ளது.

12 மெரிடியன்கள் மற்றும் அவற்றின் உச்ச நேரங்கள்:

( 1 ) நுரையீரல் மெரிடியன் (Lung Meridian) : காலை 3-5 மணி வரை. மார்பிலிருந்து கை வழியாக செல்கிறது.

( 2 ) பெருங்குடல் மெரிடியன் (Large Intestine Meridian) : காலை 5-7 மணி வரை. கை விரல் நுனியிலிருந்து கை வழியாக, தோள்பட்டைக்கு மேலே சென்று முகத்தை அடைகிறது.

( 3 ) வயிற்று மெரிடியன் (Stomach Meridian) : காலை 7-9 மணி வரை. முகத்திலிருந்து கால் வரை செல்கிறது.

( 4 ) மண்ணீரல் மெரிடியன் (Spleen Meridian) : காலை 9-11 மணி வரை. கால் முதல் வயிறு வரை செல்கிறது.

( 5 ) இதய மெரிடியன் (Heart Meridian) : காலை 11-1 மணி வரை. மார்பிலிருந்து கை வழியாக விரல் நுனியை அடைகிறது.

( 6 ) சிறுகுடல் மெரிடியன் (Small Intestine Meridian) : மதியம் 1-3 மணி வரை. கை விரல் நுனியிலிருந்து கை வழியாக, தோள்பட்டைக்கு மேலே சென்று முகத்தை அடைகிறது.

( 7 ) சிறுநீர்ப்பை மெரிடியன் (Urinary Bladder Meridian) : மதியம் 3-5 மணி வரை. தலையிலிருந்து கால் வழியாக பாதத்தை அடைகிறது.

( 8 ) சிறுநீரக மெரிடியன் (Kidney Meridian) : மாலை 5-7 மணி வரை. பாதத்திலிருந்து வயிறு வரை செல்கிறது.

( 9 ) இதய உறை மெரிடியன் (Pericardium Meridian) : மாலை 7-9 மணி வரை.

மார்பிலிருந்து கை வழியாக விரல் நுனியை அடைகிறது.

( 10 ) மும்மடங்கு வெப்பமூட்டும் மெரிடியன் (Triple Energizer Meridian) : இரவு 9-11 மணி வரை. கை விரல் நுனியிலிருந்து கை வழியாக, தோள்பட்டைக்கு மேலே சென்று முகத்தை அடைகிறது.

( 11 ) பித்தப்பை மெரிடியன் (Gallbladder Meridian) : இரவு 11-1 மணி வரை. தலையிலிருந்து கால் வழியாக பாதத்தை அடைகிறது.

( 12 ) கல்லீரல் மெரிடியன் (Liver Meridian) : இரவு 1-3 மணி வரை. கால் முதல் வயிறு வரை செல்கிறது.

இந்த மெரிடியன்கள் உடலில் ஆற்றல் ஓட்டத்தை சீராக்கி, ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றன. இந்த உச்ச நேரங்களில், குறிப்பிட்ட மெரிடியனுடன் தொடர்புடைய உறுப்பு அதிகபட்ச ஆற்றலுடன் செயல்படுகிறது, மேலும் அந்த நேரத்தில் அந்த உறுப்பு தொடர்பான சிகிச்சைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

வெள்ளி, தாமிரம் அல்லது தங்கத்தால் செய்யப்பட்ட அக்குபஞ்சர் ஊசிகள், உடலில் உள்ள குறிப்பிட்ட புள்ளிகளைத் தூண்டுவதற்குப் பயன்படுத்தப்படுகின்றன, குய் (முக்கிய ஆற்றல்) மற்றும் இரத்த ஓட்டத்தைத் தூண்டுவதற்காக அக்குபஞ்சர் ஊசிகள் அக்குபாயிண்ட்களில் செருகப்படுகின்றன, இது சமநிலையை மீட்டெடுக்கும் மற்றும் குணப்படுத்துவதை ஊக்குவிக்கும் என்று நம்பப்படுகிறது.

பிற பயன்கள்: அக்குபஞ்சர் ஊசிகளை மின்குத்தூசி மருத்துவத்திலும் பயன்படுத்தலாம், அங்கு சிகிச்சை விளைவுகளை மேம்படுத்த ஊசிகளில் ஒரு சிறிய மின்சாரம் செலுத்தப்படுகிறது. 

துருப்பிடிக்காத எஃகு ஊசிகள்: இவை அவற்றின் வலிமை, நெகிழ்வுத்தன்மை மற்றும் அரிப்புக்கு எதிர்ப்பு காரணமாக இன்று பயன்படுத்தப்படும் மிகவும் பொதுவான வகை அக்குபஞ்சர் ஊசிகள் ஆகும். 

வெள்ளி ஊசிகள்: இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், குறிப்பாக பாலிபினால்கள் நிறைந்துள்ளன, இது உடலை ஃப்ரீ ரேடிக்கல்களிலிருந்து பாதுகாக்க உதவும் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளையும் கொண்டிருக்கலாம். TCM இல், வெள்ளி ஊசிகள் சில நேரங்களில் மயக்கத்திற்காக அல்லது வெள்ளி ஊசி சிகிச்சை (SNT) போன்ற குறிப்பிட்ட சிகிச்சைகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன, அங்கு வலிக்கு சிகிச்சையளிக்க ஊசிகள் சூடேற்றப்படுகின்றன என்று ஃபிரான்டியர்ஸ் கூறுகிறது. 

தங்க ஊசிகள்: தங்க ஊசி சிகிச்சை என்பது ஒரு சிறப்பு சாதனம் மூலம் தோலின் கீழ் ரேடியோ அதிர்வெண் அலைகளை வழங்க அனுமதிக்கும் ஒரு முறையாகும். அக்குபஞ்சர் உலகின் படி, தங்க ஊசிகள் பொதுவாக TCM இல் வலுப்படுத்துதல் அல்லது டோனிஃபைங் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன, பெரும்பாலும் ஆரிகுலர் அக்குபஞ்சரில் (காது அக்குபஞ்சர்).

செம்பு ஊசிகள்: தலைவலி, முதுகுவலி மற்றும் மூட்டு வலி உள்ளிட்ட வலி நிவாரணத்திற்கு செம்பு ஊசிகள் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. செம்பு ஊசிகள் குத்தூசி மருத்துவத்திலும் பயன்படுத்தப்படுகின்றன, சில சமயங்களில் சுழல் கைப்பிடிகளுடன், மேலும் பல்வேறு சிகிச்சைகளுக்கும் இதைப் பயன்படுத்தலாம். கீல்வாதம் மற்றும் ஃபைப்ரோமியால்ஜியா போன்ற நாள்பட்ட வலி நிலைகளை நிர்வகிக்க இதைப் பயன்படுத்தலாம். ஊசிகள் எண்டோர்பின்கள், இயற்கை வலி நிவாரணிகள் மற்றும் வலி உணர்வைக் குறைக்க உதவும் பிற இரசாயனங்கள் வெளியீட்டைத் தூண்டுவதாக நம்பப்படுகிறது.

பிளாஸ்மா அலைகள் மற்றும் சர்க்காடியன் தாளங்கள் இரண்டும் இயக்கம் மற்றும் அலைவுகளை உள்ளடக்கியிருந்தாலும், அவை தனித்துவமான கருத்துக்கள். 

பிளாஸ்மா அலைகள் பொதுவாக மனித உடலில் "ரிதம்" என்று குறிப்பிடப்படுவதில்லை. மனித உடலின் சூழலில் "ரிதம்" என்ற சொல் பொதுவாக சர்க்காடியன் தாளங்களைக் குறிக்கிறது, அவை 24 மணி நேர காலப்பகுதியில் தூக்க-விழிப்பு சுழற்சி மற்றும் பிற உடல் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்தும் இயற்கையான, உள் செயல்முறைகள் ஆகும். 

பிளாஸ்மா அலைகள் என்பது பிளாஸ்மாவிற்குள் உள்ள சார்ஜ் செய்யப்பட்ட துகள்களின் அலைவுகளாகும், இது எலக்ட்ரான்கள் அணுக்களிலிருந்து பிரிக்கப்பட்டு, அயனிகள் மற்றும் இலவச எலக்ட்ரான்களின் கடலை உருவாக்கும் ஒரு பொருளின் நிலை. அவை செல்கள் மற்றும் திசுக்களின் மின் செயல்பாடு மற்றும் நடத்தையுடன் அதிகம் தொடர்புடையவை. ஆராய்ச்சியாளர்கள் செல் சிக்னலிங் அல்லது நரம்பியல் செயல்பாட்டின் பின்னணியில் பிளாஸ்மா அலைகளைப் படிக்கலாம், ஆனால் இந்த அலைகள் உடலின் ஒட்டுமொத்த தாள செயல்முறைகளுக்கு சமமானவை அல்ல.

அக்குபஞ்சர் சாராம்சத்தில், குய், யின் மற்றும் யாங் ஆகியவை பிரபஞ்சம், மனித ஆரோக்கியம் மற்றும் சமநிலை மற்றும் நல்லிணக்கத்தின் கொள்கைகளைப் புரிந்து கொள்வதற்கான கட்டமைப்பை வழங்கும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட கருத்துக்கள் ஆகும்.

பாரம்பரிய சீன மருத்துவத்தில் (TCM), "குய்" (Qi) என்பது ஒரு முக்கிய கருத்தாகும். இது உயிர் அல்லது ஆற்றல் என்று பொருள்படும். இது உடல் முழுவதும் ஓடும் ஒரு வகையான ஆற்றல் மற்றும் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதது. 

குய் என்பது உடலின் உயிர் ஆற்றல், இது உடலின் செயல்பாடுகளை இயக்க உதவுகிறது. இது சுவாசம், இரத்த ஓட்டம், ஜீரணம் போன்ற அனைத்து இயக்கங்களுக்கும் ஆதாரமாக உள்ளது. 

உயிர் + எலுமிச்சை ( எலுமிச்சை ):

"குய்" என்பது உயிர் அல்லது ஆற்றல் என்று பொருள்படும், எலுமிச்சை ஒரு பழம். இந்த இரண்டையும் சேர்த்துப் பார்க்கும்போது, எலுமிச்சை ஒரு ஆரோக்கியமான குய் ஓட்டத்தை ஆதரிக்கும் ஒரு பொருளாகப் பயன்படுத்தப்படலாம் என்று பாரம்பரிய சீன மருத்துவம் கூறுகிறது. எலுமிச்சை வைட்டமின் சி மற்றும் பிற ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது, இது உடலுக்கு ஆற்றலை அளித்து ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். 

சுருக்கமாக: பாரம்பரிய சீன மருத்துவத்தில் குய் (Qi) ஒரு முக்கிய கருத்தாகும், இது உயிர் அல்லது ஆற்றல் என்று பொருள்படும். இது உடல் முழுவதும் ஓடும் ஒரு ஆற்றல் மற்றும் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதது. எலுமிச்சை போன்ற ஒரு பொருளைப் பயன்படுத்தி, குய் ஓட்டத்தை சமப்படுத்தவும், ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் முடியும். 

குய் உருவாவதற்கு மண்ணீரல் மூல காரணமாகும், ( 1 ) மண்ணீரல் குய்யின் பிறப்பிடமாகும், ( 2 ) நுரையீரல் உடலின் Qi ஐ நிர்வகிப்பதில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது, இது, Qi - யை சீராக வைத்திருக்க உதவுகிறது, மற்றும் காற்றை உள்ளிழுத்து, வெளியேற்றுவதன் மூலம் ஆக்ஸிஜனை இரத்தத்தில் கலக்க உதவுகிறது , கார்பன் டை ஆக்சைடை வெளியேற்றுகிறது. உடலின் செயல்பாட்டை சீராக வைக்கிறது. ( 3 ) குய் ( Qi ) எனப்படும் உயிர் ஆற்றல் சிறுநீரகங்களில் சேமிக்கப்படுகிறது என்று பாரம்பரிய சீன மருத்துவம் கூறுகிறது. உயிர் சக்தி மற்றும் உயிர்ச்சக்தியின் மூலமாக ( Qi ) கருதப்படுகிறது. சிறுநீரகங்களில் சேமிக்கப்படும் குய்யின் ஒரு வகை யுவான் குய் ( Yuan Qi ). இது பெற்றோரிடமிருந்து பெறப்பட்ட மகப்பேறுக்கு முற்பட்ட சாரத்திலிருந்து உருவாகிறது. யுவான் குய் தவிர, மார்பு குய் (Zong Qi), ஊட்டச்சத்து குய் ( Ying Qi ), தற்காப்பு குய் ( Wei Qi ) போன்ற பிற குய் வகைகளும் உள்ளன, இவை அனைத்தும் சிறுநீரகங்களுடன் தொடர்புடையவை. சிறுநீரகங்கள் எசென்ஸைச் சேமிப்பதிலும், ( எசென்ஸை Qi குய்யாக ) மாற்றுவதை ஒழுங்குபடுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன. ( 4 ) Qi - யை விநியோகிக்கும் வேலை பெரும்பாலும் இதயத்தாலும், கல்லீரலால் செய்யப்படுகிறது என்று TCM கூறுகிறது. 

( 1 ) மண்ணீரலின் வேலை:

நாம் உட்கொள்ளும் உணவு மற்றும் பானங்களை எடுத்து, அவற்றை குய் மற்றும் இரத்தமாக மாற்றுவதாகும். இந்த செயல்பாடு - செரிமானம், அடிப்படையில் - மோசமாக வேலை செய்யும் போது, மற்ற விஷயங்களும் மோசமாக வேலை செய்யும் வரை அது காலத்தின் ஒரு விஷயம் மட்டுமே. குளிர் மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை அதிகமாக உட்கொள்வதாலும், அதிகமாக யோசிப்பதாலும் மண்ணீரல் எளிதில் சேதமடைகிறது. 

இரத்தத்திற்கும் Qi க்கும் இடையிலான உறவு என்னவென்றால் , Qi இரத்தத்தை உருவாக்குகிறது, இரத்தத்தை நகர்த்துகிறது, மேலும் மண்ணீரல் பிடித்து வைக்கும் செயல்பாட்டின் மூலம், இரத்தத்தை நாளங்களுக்குள் வைத்திருக்கிறது .

மண்ணீரல், உடலின் நிணநீர் மண்டலத்தின் ஒரு பகுதியாகும், இது பல முக்கிய செயல்பாடுகளைச் செய்கிறது. இரத்தத்தை வடிகட்டுதல், பழைய இரத்த அணுக்களை அகற்றுதல், நோய்த் தொற்றுகளிலிருந்து உடலைப் பாதுகாத்தல் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குதல், நச்சுகளை நீக்குவதிலும் முக்கிய பங்கு ஆகியவை இதில் அடங்கும். எனவே, போதுமான அளவு தண்ணீர் குடிப்பதன் மூலம், மண்ணீரல் அதன் செயல்பாட்டை திறம்பட செய்ய முடியும். மண்ணீரல் ஆரோக்கியத்திற்கு நிறைய பழங்கள், காய்கறிகள், மற்றும் நார்ச்சத்துள்ள உணவுகளை அதிகம் சேர்த்துக்கொள்வது நல்லது.

மண்ணீரலின் ஆரோக்கியத்திற்கு நிறைய தண்ணீர் குடிப்பது நல்லது. ஏனெனில், நிறைய தண்ணீர் குடிப்பது உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது, இது மண்ணீரலின் சீரான செயல்பாட்டிற்கு அவசியமானது. மேலும், நீர் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது, இது மண்ணீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

நம் உடலில் உள்ள கழிவுகளை வெளியேறுவதற்கு தண்ணீரை மிகவும் அவசியம். குடிநீர் இரத்த அழுத்தத்தை சீராக்க உதவுகிறது இது உங்கள் பசியை அடக்கவும், உங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், உடற்பயிற்சியை மிகவும் சுவாரஸ்யமாகவும் பயனுள்ளதாகவும் மாற்ற உதவும், எடையை குறைக்கவும் உதவும்.

கருத்துக்கள்: S.மணிவாசகம், D.M.E., A.A.T., B.A.P.,

Saturday, 3 February 2024

A1 A2 பால் என்றால் என்ன? பால் பற்றி அறிவோம் (A1 A2 milk )

#A1___A2__Milk 
#பித்தலாட்டங்கள்_பாகம்_1

முதல்ல A1 பால் அப்படீனா என்ன
A2 பால் னா என்னனு தெரிஞ்சுப்போம்.

பொதுவா பாலில் புரதம்,விட்டமின் ஏ,
கால்சியம் இருக்கும்.

கூடவே கேசின் ப்ரோட்டின் அப்டீன்ற ஒன்னும் இருக்கும் இது நீரழிவு நோயை தூண்டகூடியதுனு சொல்றாங்க.
அதெப்படி டா தூண்டும்னு குறுக்க கேள்வி கேக்க கூடாது அது எப்படினு கீழ சொல்லுவேன்😁

இந்த கேசின் பயபுள்ளையே ரெண்டுவிதமா இருப்பான் அதாவது டபுள் ரோல் அந்த ரெண்டு பேர்தான்
A1,A2

இந்த ஏ2 பயபுள்ள பாஸ்இன்டிகஸ் இன மாடுகளோட கூட்டாளி அதாவது திமில் இருக்கற நாட்டுரக மாடுகள்.

 சிவனும் சக்தியும் சேந்தா மாஸுடா அப்படீனு பாட்டுபாடுற அளவுக்கு கூட்டாளிங்க.

வேற எந்த மாட்டுகிட்டையும் இந்த ஏ2
பய வரமாட்டான்.

 இந்த ஏ 1 பயபுள்ள விருந்தாளிக்கு பொறந்தபய. 

 பாஸ்டாரஸ் அப்படீன்ற இனமாடுகளிடம் மட்டுமே உற்பத்தி ஆவான் அதாவது திமில் இல்லாத கலப்பின மாடுகள். (ஹைப்ரீட்)

இந்த ஏ1 பால குடிச்சா அது 
ஜீரணம் ஆகும்போது #BCM_7 (beta-caso-morpin 7) ஆக மாற்றமடைந்து நீரழிவு,ஆட்டிசம் ,நரம்புதளர்ச்சி போன்ற வியாதிகளை உருவாக்குவதாகவும்

ஏ2 பாலை குடிச்சா அது ஜீரணமாகி உடலுக்கு நல்லது சொய்றதாகவும்

கண்டுபிடிச்சு சொன்னாரு பாப் எலியாட்
அப்படீன்ற மகராசன்.

இவரு ஆக்லாந்து பல்கலைக்கழகத்துல 1990 வது வருசம் குழந்தைகளுக்கான மருத்துவ பிரிவை சேர்ந்த பேராசிரியர்.

அந்த வெண்ண என்ன கண்டுபிடிக்கிறதுனு
அதுல உள்ளத தோண்டுனோம்னா

வேற பதில் வருது 😁😁😁 அது என்ன

பாலில் 209 வகையான அமினோ அமிலங்கள் இருக்குது

அதுல 67வது இடத்தில் Proline அப்படீன்ற அமிலம் அதிகமா இருந்தா அது ஏ2 பால்

அதே 67 வது இடத்தில் Histidine அப்படீன்ற அமினோ அமிலம் அதிகமா இருந்தா அது ஏ1 பால்

இவ்வளவு தான் வித்தியாசம் இந்த ரெண்டு பாலுக்கும்😉😉

நா மேல சொன்ன 209 அமினோ அமிலத்துல இந்த ரெண்டும் இருக்கும் ஆனா இடம் மாறி இருக்கும் அல்லது அளவு மாறி இருக்கும்.

இதுல மரபனு மாற்று தொழில்நுட்பம் முலம் இந்த அளவை மாற்றியும் அமைக்கலாம் அந்த இடத்தையும் மாற்றி அமைக்கலாம்😁😁😁

நிலமை இப்படி இருக்கும் போது ஏ1 பால் கெட்டது ஏ2 பால் நல்லது அப்படீன்றதெல்லாம் ஹீரோ வில்லன் பார்முலாதான் அதாவது ஒன்ன விட இன்னொன்னு சிறந்தது அப்படீன்ற எண்ணவிதைத்தல் 😤

எதுக்கு இந்த விதைத்தல் 
எல்லாம் வணிக வெறிதான்😅😅

அதென்ன வெறி சொறி🤗

அடுத்த பதில் பாக்கலாம்😁😁

அதுலையும் முழுசா எழுதமுடியாது பல பாகங்கள் வரும்னு நெனைக்கேன்😁

ஆஸ்திரேலியா நியூஸ்லாந்துல ஆரம்பிச்சு ஆப்ரிக்கா வரைக்கும் போகுது மக்களே தேடல் 😁😁 இதுல இந்தியா லிஸ்டலயே இல்ல

அதாவது கடல்லயே இல்லையாம்😁😁

             




#A1__A2__milk

#பித்தலாட்டங்கள்__பாகம்__2

இந்த ரெண்டு வகை பாலில் எது நல்லதுனு இன்னைக்கு நேத்து இல்ல
1980லயே பிரச்சினை ஆரம்பிச்சிருச்சு

அப்போதிருந்தே இந்த ரெண்டு வகை பாலை பற்றியும் ஆராய்ச்சி நடந்திட்டே இருக்கு

ஒன்னுமேல ஒன்னு பழிபோட்டு பணம் பண்ணதான்😁

1994ல் இந்த ஏ2 பால் உற்பத்தி முறைய
நியூசிலாந்து டெய்ரி போர்ட் அப்படீன்ற கூட்டுறவு பால் உற்பத்தி நிறுவனம் காப்புரிமை சட்டத்தின் படி பதிவு சொஞ்சுட்டு (New Zealand patent application 295774)

அதாவது எமன் எறுமைல ஏற ஆரம்பிச்ச வருடம் அங்க இருந்து உலகம் முழுக்க வலம் வந்த கதையதான் இனி பாக்க போறோம்🤗🤗

நியூசிலாந்து கூட்டுறவு பால் உற்பத்தி
நிறுவனத்தில் Howard patterson அப்படீன்ற ஒரு பெரிய மனுசனும் இருந்தாப்ல அவரோட வியாபார புத்தி
ஏ2 பால் வணிகம் அது சம்பந்தமான காப்புரிமை அப்படி இப்படீனு அவரு ஆசைய கெளப்பி விட்டுச்சு🙄🙄

அதனால மனுசன் தூங்காம தவிச்சுபோய் 1994 அதே வருசத்துலயே
நியூசிலாந்து டெய்ரி போர்ட் நிறுவனத்தோட காப்புரிமைய விலைக்கு வாங்கிட்டாப்ல😁

அதுக்கு அப்புறமா ஏ2 பால் வணிகத்த வச்சு எல்லார் பணத்தையும் அள்ள நினைச்சு 2001வது வருசம் ஏ2 கார்பரேஷன் அப்படீன்ற நிறுவனத்த ஆரம்பிக்காரு அதோட விடாம

2012 ல உலகம் முழுவதும் ஏ2பால் உற்பத்தி முறை மற்றும் அதுசார்ந்த உட்பொருள் தயாரிப்பு முறை அதோட வணிகம்,ட்ரேட் மார்க் இப்படி கெடைச்சதுக்கெல்லாம் காப்புரிமை வாங்கிட்டாரு ஏ2 நிறுவனத்தோட பேருல

காப்புரிமைக்கே அப்பனா இருப்பான் போல காட்டுப்பய😁😁

1994 ல் நியூசிலாந்து டெய்ரி போர்ட் காப்புரிமை வாங்குனதுல இருந்தே இந்த ஏ1 பால பற்றி பல்வேறு ஆராய்ச்சி நடத்த ஏ2 கார்ப்ரேஷன் நிறைய செலவு செஞ்சிருக்கு

ஆனா அம்புட்டு ஆராய்ச்சி பண்ணியும்
ஏ1 வகை பால் தீங்கானதுனு சந்தேகத்துக்கு இடமில்லாம நிரூபிக்க ஒரு ஆதாரம் கூட அவிங்க கம்பெனிகிட்ட
இல்ல 🙄

சரியான கேக்ரான்மேக்ரான் கம்பெனி போல😁😁

அதே நேரம் எதிர் பக்கமும் ஆராய்ச்சி பண்ண களத்துல அஞ்சாரு ஆராய்ச்சி மருத்துவர்கள் களத்துல குதிச்சாங்க அவிங்க பேர்லாம் வாய்ல நுழைய மாட்டேங்குது முடிஞ்சா வாசிச்சு பாருங்க😁

Ivano De Noni, Richard J. FitzGerald, Hannu J. T. Korhonen, Yves Le Roux, Chris T.Livesey, Inga Thorsdottir, 

இவிங்கதான் அந்த டீமு இவிங்க ஆராய்ச்சி முடிவு என்னனா

அதெ எதுக்கு உருட்டிகிட்டு அப்படியே கவுத்த வேண்டியதான அப்படீன்ற கததான்

ஏ1 பால் தீங்கானது இல்ல 😁😁
அதுசம்பந்தமா அவிங்க டீமு சொல்றது பொய்யிங்கோ அப்படீனாங்க😁

இந்த ஆய்வு.The A2 milk case: a critical review AS Truswell - என்ற தலைப்பில் Nature குழுமத்தின் European Journal of Clinical Nutrition (2005) என்ற ஏட்டில் வெளியானது.  

அதன்பிறகு, ஐரோப்பிய உணவுப் பாதுகாப்பு நிறுவனமான EFSA என்ற அமைப்பு 2009 ல் Ivano De Noni, Richard J. FitzGerald, Hannu J. T. Korhonen, Yves Le Roux, Chris T.Livesey, Inga Thorsdottir, Daniel Tome, Renger Witkamp 

ஆகிய அறிவியல் அறிஞர்களைக் கொண்டு ஏ1, ஏ2 பற்றி ஒரு விரிவான ஆராய்ச்சியை மேற்கொண்டது.

அதோட முடிவும் இது கததான் பழையபடி பல்லகாட்டிட்டு😁😁

ஆனா நீங்க என்னவேணா சொல்லுங்கடா உங்க பாலு கெட்டதுதான்னு ஏ2 கார்ப்ரேஷன் தன்னோட வேலைய தொடர்ந்து செஞ்சிட்டு இருந்துச்சு😁😁

கவுண்டமணி செவுடன் காதுல கத்துன மாதிரி அட நாசமா போன பாலுதானுங்க அப்படீனு ஊர ஏமாத்தினு திரிஞ்சாய்ங்க
😁😁

மோசடியான அறிவியல் கருத்தை அடிப்படையாக வைத்து, தனது வணிகக் கொள்ளையை உயர்த்த துடித்த A2 Corporation நிறுவனம் பல நாடுகளிலும் தனது முயற்சிகளை மேற்கொண்டு வந்தது.

நியூசிலாந்தில் Fonterra Co-operative Group Limited என்ற கூட்டுறவு நிறுவனம் இருக்கிறது. அந்த நாட்டின் ஒட்டு மொத்த பால் உற்பத்தியாளர்களும் இணைந்த கூட்டுறவு நிறுவனம்அது. 

நியூசிலாந்தின் பால் வணிகம் அந்நிறுவனத்தின் கையில்தான் உள்ளது. நியூசிலாந்தின் பால் வணிகத்தை கைப்பற்றத் துடித்த A2 Corporation நிறுவனம், தனது ஏ 2 பால் என்ற பால் பொருளை ஒரு மருந்துப்பொருள் என்றி பிரிவில் பதிவுசெய்தது.

 பிறகு, Fonterra Co-operative Group Limited மீது 2001 ல் நியூசிலாந்து உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்குத் தொடுத்தது.

அதாவது எதிரியோட ஆயுதத்தை பலவீனபடுத்தவும் தன்னோட ஆயுதத்தை வலிமை படுத்தவும் முயற்சி பண்ணாங்க
செங்கிஸ்கான் மாதிரி😁😁

ஆனா அந்த வழக்குல தீர்ப்பு ரிவர்ஸ்ல வந்துட்டு 😁😁

ஏலேய் செத்தசெவரு ஒரு சரியான ஆதாரத்தையும் நிரூபிக்காம இங்க எதுக்குலே கேஸ்குடுத்த அப்படீனு ஏ2 கார்ப்ரேஷன் கம்பெனிய ஜட்ஜ் ஐயா அடிச்சு தொரத்தி விட்டாரு😁😁

அதன் பிறகு ஆஸ்திரேலியாவின் பால் வணிகத்தைக் கைப்பற்ற Denniston என்ற குழுவுடன் ஒப்பந்தம் போட்டு, அங்கும் தனது ஏ2 பால் என்ற மோசடி அறிவியல் கருத்தை பரப்பத் தொடங்கியது. 

ஆஸ்திரேலியா ஜட்ஜ் ரொம்ப கேவகாரரு போல 50,000டாலர் அபராதமும் போட்டு
ஆஸ்திரேலியா நாட்ல ஏ2 கார்ப்ரேஷன் கம்பெனி லைசென்ஸையும் புடிங்கினு விட்டாரு😁😁

ஆக ஏ2 கார்ப்ரேஷன் மைன்ட் வாய்ஸ்
சோத்துலையும் அடிவாங்கியாச்சு சேத்துலையும் அடிவாங்கியாச்சு😁😁

ஆனா நரிய அடிச்சு விட்டா திருந்துமா திருந்தாது

அதன்பிறகு, ஆஸ்திரேலிய உணவுப் பாதுகாப்பு அமைப்புகளுடன் சுமுகப் போக்கை மேற்கொண்டு, பேச்சுவார்த்தைகளை நடத்தியது. A2Australia என்ற புதிய நிறுவனத்தைத் தொடங்கி, உலகம் முழுதும் கிளை பரப்பியுள்ள Fraser & Neave என்ற நிறுவனத்துடன் இணைந்து தற்போது ஆஸ்திரேலியாவின் பால் வணிகத்தை முழுவதும் ஆக்கிரமித்துவிட்டது.

2003 ல் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் தொடங்கிய ஏ2 பால் வணிகம், 2015 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் மட்டும் 3000 கோடி யூரோ அளவுக்கு வணிகம் நடத்தும் மிகப் பெரிய நிறுவனம் என்ற அளவுக்கு வளர்ந்துள்ளது.

அடுத்து நாம இங்கிலாந்து அமெரிக்கா சீனா அப்படீனு போகபோறோம்😁😁

#A1___A2__milk

#பித்தலாட்டங்கள்__பாகம்__3

2003-லிருந்து அமெரிக்காவில் #Ideasphere__Incorporated அப்படீன்ற நிறுவனத்துடனும்

 2005 லிருந்து Twinlab என்ற நிறுவனத்துடனும் இணைத்து அமெரிக்காவின் பால் வணிகத்தைத் தன் கட்டுக்குள் கொண்டுவந்தது ஏ2 கார்ப்ரேஷன்

2011 நவம்பரில் இங்கிலாந்து நாட்டின் மிகப்பெரும் தொழில் நிறுவனமான #Muller__Wiseman__Dairies உடன் ஒப்பந்தம் செய்து இங்கிலாந்தில் பால்வணிகத்தையும் கைப்பற்றியது. 

தற்போது 2014 ல் சீனாவிலும் கால்பதித்துள்ளது. 
#Tmall__Global_and__JD__Worldwide என்ற நிறுவனங்களுடன் இணைந்து சீனாவின் பால் வணிகத்தையும் தன்வசப்படுத்தியுள்ளது

அடுத்த டார்க்கெட்டா தான் இந்தியா பக்கம் எட்டி பாக்காப்ல ஏ2 கார்ப்ரேஷன்
அதுக்கு நம்மாளுங்களும் தயாராகிட்டாங்க அதான் உங்களால பால் இல்லாம இருக்க முடியாதுல்ல😁😁

அதன் விளைவாக தான் நாட்டுமாட்டு பாலை பற்றிய விழிப்புணர்வு சமீபத்தில் அதிகரித்திருக்கிறது 

இப்போ மெரினாவுல கூவுனவங்க எல்லாரும் கைய தூங்குங்க 😁😁

எப்பா இந்த ஏ2 அப்படீனா நாட்டுமாட்டு பால் நியாபகம் வச்சுக்கோங்க 

இந்தியாவின் 2016 - 17 வரவு செலவு அறிக்கையில் இந்த நாட்டுப்பசு மாடுகளை மேம்படுத்த 850 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவின் வட பகுதியில் உள்ள கிர், காங்கிரேஜ், தார்பார்க்கர், சிந்து, சாஹிவால், தமிழ்நாட்டு இனமான காங்கேயம், பர்கூர் போன்ற கலப்பினமாக மாற்றப்படாத எந்த மாட்டில் இருந்தும் ஒரு லிட்டர் பால் கறந்தாலும் A 2 Milk Corporation நிறுவனத்துக்கு இராயல்டி கட்டப்போகும் நாள் வெகு தொலைவில் இல்லை.

ஆக, இந்தியா ஒரு வேட்டைக்காடு என்பதை இந்த இடத்தில் நினைவுபடுத்த விழைகிறேன்😁😁

இந்தியாவின் நாட்டுப்பசு மாட்டிலிருந்து மட்டும்தான் இந்த ஏ 2 பால் கிடைக்கிறது. வெளிநாட்டு மாடுகளுக்கு வியர்வைச் சுரப்பிகளே கிடையாது. எனவே அவற்றின் வியர்வையும் பாலின் வழியாகத் தான் வரும். அந்த மாடுகளின் பால் சர்க்கரை நோயை உருவாக்கும். எனவே இந்திய நாட்டு மாடுகளை அந்நிய நாடுகளுக்குக் கொண்டு செல்வதற்காக ஜல்லிக்கட்டைத் தடுக்கிறார்கள்.”

என்று அரைகுறையாகத் தகவல்களைத் தெரிந்து கொண்டு ஆளாளுக்கு அறிவியலாளர்கள் போலக் கருத்துக்களைப் பரப்பி வருகிறார்கள்.😁😁

வாங்கடா முகநூல் போராளிகளா 
இதுல பின்னனி இசை வேற
தமிழன்னா என்றாலே சொன்னாலே திமிரேறும்னு 😁😁😁

இந்திய நாட்டுப் பசு மாடுகளிடம் மட்டுமே ஏ 2 பால் கிடைக்கும் என்பது தவறான தகவல் என்பதை - 

ஏ 2 பால் என்பதை வணிகமயப்படுத்திய - உலகமயப்படுத்திய A2 Milk Corporation நிறுவனமே உறுதி செய்து விட்டது

இந்த A 2 Milk Corporation தனது பால் உற்பத்தித் திட்டங்களுக்கு எந்த வெளிநாட்டு மாடு களையும் பயன்படுத்துவதில்லை. 

ஆஸ்திரேலியாவைத் தாயகமாகக் கொண்டு அந்த நாட்டுக்கு உள் நாட்டு மாடுகளான Holstein மாடுகளைத்தான் நம்பி இருக்கிறார்கள். இந்தியாவிலும் ஏராளமாகக் கிடைக்கும் இந்த Holstein தான் ஏ 2 பாலைத் தருகிறது என A2 Milk Corporation நிறுவனமே அறிவித்துவிட்டது. 

அந்நிறுவனத்தின் அனைத்துப் பண்ணைகளிலும் ஆயிரக்கணக்கான ஐரோப்பிய மேய்ச்சல் நிலங்களிலும் மேய்ந்து கொண்டிருப்பவை இந்த Holstein தான். இது தொடர்பான தகவல்கள் ஏ2 நிறுவனத்தின் இணையதளங்களிலும், சர்வதேச அளவிலான அறிவியல் ஆய்வு 
முடிவுகள் அவிங்க வெப்சைட்லயே கெடைக்குது குடுகுடுனு ஓடிபோய் கூகிள்ள தேடுனீங்கனா நல்லா தெரியும்😁😁

இந்தியாவில் ஜெர்சி, ஹோல்ஸ்டியன் ஆகிய ஐரோப்பியப் பசுக்கள் ஏ 2 பாலைத் தராது எனத் தவறான பிரச்சாரம் நடைபெறுகிறது. இதையும் Nature என்ற சர்வதேச அறிவியல் இதழ் மறுத்துள்ளது.

 இந்தியாவின் கிர், சாஹிவால், தார்பார்க்கர், காங்கேயம் மட்டுமல்ல. ஆப்பிரிக்கா கண்டத்திலுள்ள அனைத்து மாடுகளும் ஏ 2 வகைப் பாலைத் தான் தருகின்றன. ஆசியக் கண்டத்திலுள்ள எல்லா நாடுகளிலும் உள்ள அனைத்து வகை மாடுகளும் ஏ 2 பாலைத் தான் வழங்குகின்றன. 

குறிப்பாக, ஃப்ரான்சில் உள்ள Limousin, Charolasis, இங்கிலாந்தில் உள்ள Jersey, Guernsey, Alderney போன்ற மாட்டினங்களும் ஏ 2 பாலைத் தான் வழங்குகின்றன. 2005 ஆம் ஆண்டிலேயே இக்கருத்து வெளியிடப்பட்ட போதிலும் இங்க இருக்குற முகநூல் போராளிகளும்
டுபாக்கூர் யூடிப்பர்ஸூம் இதைக் கண்டுகொள்ளவே இல்லை.

ஏ2 பால் தான் நல்லதுனு இந்தியாவில் தவறான கருத்தை உருவாக்கியுள்ளனர்.

மாட்டுபாலே மனிதனுக்கானது இல்லை 
அதெப்படினு கடைசி பதிவா அடுத்த பதிவுல பாக்கலாம்😁

            
#A1__A2__milk

#பித்தலாட்டங்கள்__பாகம்_4

ஒட்டுமொத்த மாட்டுப்பாலே மனிதனுக்கு கேடானது அப்படீனு ஆய்வுகள் நிறைய சொல்லிருச்சு

சுவீடனில் உள்ள உப்சலா பல்கலைகழக ஆராய்ச்சியாளர்கள் Susanna C. Larsson, Alessio Crippa,Nicola Orsini, Alicja Wolk Karl Michaëlsson ஆகியோர் இணைந்த குழுவினர், 

கடந்த 20 ஆண்டுகளாக பால் குடிப்பவர்கள் - பாலையே பயன்படுத்தாதவர்கள் என சுமார் 1 இலட்சம் மக்களிடம் ஆய்வு மேற்கொண்டு முடிவினை வெளியிட்டுள்ளனர்.

 “Milk Consumption and Mortality from All Causes, Cardiovascular Disease, and Cancer: A Systematic Review and Meta-Analysis” என்ற தலைப்பில் சுவிட்சர்லாந்திலிருந்து வெளி வரும் உலகப்புகழ் பெற்ற அறிவியல் ஏடான ‘Nutrients’ இந்த ஆய்வை வெளியிட்டுள்ளது.

“தினமும் இரண்டு டம்ளருக்கும் அதிகமாக, அதாவது அரை லிட்டர் அல்லது அதற்கு அதிகமாக பால் குடிப்பவர்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு சீக்கிரமே உயிரிழப்பது தெரியவந்தது. பாலில் கலந்திருக்கும் 'லக்டோஸ் மற்றும் கிளாக்டோஸ்' என்ற பொருட்கள் (சர்க்கரை தன்மை) காரணமாக, பல்வேறு உடல்நல பாதிப்பு ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுவதாகவும் தெரியவந்துள்ளது. குறைவாக பால் குடிப்பவர்களை விட அதிகமாக பால் குடிப்பவர்கள் விரைவாக உயிரிழப்பது உறுதி”

பால்குடிச்சா ஆஸ்பத்திரி செலவு குறையும்னு சொல்றதெல்லாம்
அக்ஷயதிரிதியில் நகை வாங்குனா வீட்ல
செல்வம் பெருகும்னு சொல்ற கதைதான்

ஆனா யார்வீட்ல நகைகடகாரன் வீட்லதான்
அந்த மாதிரி நீங்க பால்குடிச்சா
உங்க ஏரியாவ சுத்தி இருக்குற டாக்டர்கள் வசதியா இருப்பாங்க

எல்லத்துக்கும் மேல தாய்பாலுக்கு ஓரளவு இணையான பால் ஆட்டுப்பால் மட்டுமே ஏ2,பீட்டாகெஸின் புரதம் ,செலினியம் இப்படி பல சத்துக்களில் தாய்பாலும் ஆட்டுப்பாலும் ஒற்றுப்போகிறது

வயிற்றில் அலர்ஜியை ஏற்படுத்தும்
ஆல்பா எஸ் 1 அப்படீன்ற கெஸின் புரதம்
மாட்டுப்பாலில் அதிகம் இருக்கு
ஆனா தாய்ப்பால் மற்றும் ஆட்டுப்பாலில்
ஆல்பா எஸ் 2 கெசின் புரதம் இருப்பதால் இந்தமாதிரி அலர்ஜி தவிர்க்கபடுகிறது

பாலில் உள்ள லாக்டோஸ் என்னும் சர்க்கரையைச் செரிப்பதற்கு லாக்டேஸ் என்னும் நொதி மிகவும் இன்றியமையாதது. இந்த லாக்டேஸ் அளவு மிகக் குறைவாகவோ அல்லது முற்றிலுமாக இல்லாமல் இருப்பவர்கள் பாலைச் செரிக்க முடியாமல் லாக்டோஸ் சகிப்புத்தன்மை இல்லாமையால் (lactose intolerant) அவதிப்படுகின்றனர்

உடனே முகநூல் போராளிகள் ஒரு கேள்வி கேப்பாங்க அதாவது நாட்டுமாடு இருந்தாதான விவசாயம் செய்யமுடியும்னு

அடுத்த பதிவு உங்களுக்கு தான்
உங்களை சுற்றி உள்ள சிலந்திவலையை பற்றி தெரியாமல் முகநூலில் கிடைத்தை பகிர்ந்துகொண்டு எதற்கு ஏந்துகிறோம்னு தெரியாம கார்ப்பரேட் நிறுவனத்திற்கு ஆதரவாக இன்னொரு கார்ப்ரேட்டை எதிர்த்து கையில் வாசகத்தை ஏந்தி போராடிய மாவீரர்களே
அடுத்த பதிவு உங்களுக்காகவே தான்

நீங்கள் அத்தியாவசியமென போராடிய நாட்டுமாட்டை ஏ2கார்ப்பரேஷன் நிறுவனம் தானே கட்டுபாட்டில் வைத்திருக்கிறது

எதையும் முழுமையாக ஆராயாமல் களத்துல இறங்குனா இப்படிதான்

                   
#A1__A2__milk
#பித்தலாட்டங்கள்__பாகம்_5

செயற்கை உரங்களுக்கு மாற்றாக இயற்கை விவசாயத்தைத் திறம்பட நடத்த இயற்கை உரம் தேவை. அதற்கு நாட்டுப்பசுக்கள் தேவை என்ற ஒரு கருத்தும் முன்வைக்கப்படுகிறது. நாட்டு எருமையிலும் அதே தரமான எரு கிடைக்கிறது.

நாட்டுப்பசுக்களின் எருவைவிட ஆட்டுஎரு, பன்றி எரு, கோழி எரு ஆகியவை மிகச்சிறந்த இயற்கை உரங்கள். இவை எல்லாவற்றையும் விட மனிதக் கழிவு மிகச்சிறந்த எருவாகும். ஆடு, மாடு, கோழி, பன்றி எருக்கள் எவையாக இருந்தாலும், அவை தாவரங்களில் உடனடியாக மாற்றத்தைக் கொடுக்காது. மனிதக்கழிவு மட்டுமே பயிர்களுக்கு உடனடி ஊட்டம் கொடுக்கக் கூடியது.

கி.பி. 1880 களில் இங்கிலாந்து ராணி இந்திய விவசாயமுறை பற்றி அறிந்து அறிக்கை கொடுக்குமாறு ஒருவரை அனுப்பிவைத்தார். அவர் பெயர் ஜான் அகஸ்டன் வால்கர். அவர் ஓராண்டு இந்தியா முழுவதும் சுற்றி அலைந்து, ஆராய்ந்து ஒரு அறிக்கை கொடுத்தார். இந்திய விவசாய முறையின் பெருமைகளைப் பேசும் அந்த அறிக்கை முக்கியமாகச் சொன்னது இது.

“பயிர் சாகுபடியைப் பொறுத்தவரை ஒரே ஒரு குறைபாட்டைத்தான் பார்க்கிறேன். மனித மலத்தை எருவாகப் பயன்படுத்துவது இந்தியாவில் காண முடியவில்லை. அதற்குக் காரணம் உள்ளது. நிலம் மேல் ஜாதிக்காரனிடம் இருக்கிறது. கீழ்ஜாதிக்காரர்கள் தங்கள் நிலத்தில் மலம் கழிக்க மேல்ஜாதிக்காரர்கள் அனுமதிக்க மாட்டார்கள். அதனாலேயே மனித மலம் இன்னும் எருவாகப் பயன்படவில்லை.” என்கிறார்.

இன்று செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் வாகனங்கள் ஏராளமாக வந்துவிட்டன. வத்துக் கறவைப் பசு மாடுகளை வளர்த்து, நட்டப்பட வேண்டியதில்லை. ஒரு ஏக்கருக்கு ஒரு டேங்க் என தாராளமாகக் கொட்டலாம். அதுபற்றி இயற்கைக் காவலர்கள் யோசிப்பதே இல்லை.

பார்ப்பன வந்தனா சிவாவின் ‘நவதான்யா’, நம்மாழ்வாரின் ‘வானகம்’, சுற்றுச்சூழலுக்காக இயங்கும் ‘பூவுலகின் நண்பர்கள்’ உட்பட இந்த நாட்டில் இயற்கை விவசயாம், இயற்கை உரம் பற்றிப் பேசுபவர்கள் ஏராளமாக உள்ளனர். 

பார்ப்பன ‘பசுமை விகடன்’ உட்பட ஏராளமான ஏடுகள் உள்ளன. எந்த நிறுவனமும், எந்த ஏடும், எந்த இயற்கை ஆர்வலரும், பயிர்களுக்கு உடனடிப்பலனைக் கொடுக்கக்கூடிய இயற்கை எருவான, மனித மலத்தைப் பயன்படுத்துவது பற்றிப் பேசுவதுகூடக் கிடையாது.

எல்லாத்துக்கும் மேல நாங்க தினமும் பால்குடிப்போம்னு நீங்க தலைகீழா நிற்கும் வரை உங்கள் கண்ணைகட்டி கையில் போர்டை குடுத்து போராட வைப்பார்கள் அவர்களுக்கு ஆதரவாகவே

பால் எப்படி அன்றாட தேவையாக மாறியது ஒரு ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு இல்லால பழக்கம் இப்போது மட்டும் ஏன்வந்தது யோசித்ததுண்டா

அடுத்தவரை நகலெடுக்கும் மனிதனின் அற்ப குணத்தினால் மட்டுமே
ஆம் அவன் குடிக்கான் நானும் குடிக்கேன்
அப்போது தான் என்னை உயர்வாக எண்ணுவான் என்ற மோசமான மனபாங்கு 

காக்கா முட்டைனு ஒரு படம் அதுல சிம்பு சாப்டுறாருன அந்த பீட்சாவ வாங்க இரண்டு சிறுவர்கள் படாதபாடு படுவார்கள்
அதே உளவியல் தாக்கம்தான் அனைவரிடமும் உள்ளது அவன் தின்றான் நானும் தின்றேன் அவன் அவன் அவன் இப்படி எல்லாவற்றிர்க்கும் காரணம் கேட்டால் உங்கள் ஆழ்மனது அடுத்தவரை தான் கைகாட்டும் 

இப்படி மேல்தட்டு ஆட்களை நகலெடுத்து
வாழ்பவர்களே வணிககொள்ளையர்களின் இரை

இயல்பை உணர்ந்து உங்கள் தேவைய அறிய முற்படுங்கள் 

      நன்றி - துரியன்🙏

Wednesday, 6 December 2023

நீள் கதை பாடம் தமிழ்ச்செல்வியின் பயணம்

புதிய தொடர் ஆரம்பம். 

உங்கள் வகுப்பில் நடத்தி்ப் பார்க்கச் சில சுவையான மொழிச்செயல்பாடுகளை அறிமுகப்படுத்த இருக்கிறேன். நண்பர்களுடன் பகிர்ந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன். 

தமிழ்ச்செல்வியும் கலைச்செல்வியும் – 1

அன்று திங்கள்கிழமை. வழக்கம்போல் தாமதமாக எழுந்து, கொட்டாவி விட்டு, வீட்டினரின் கட்டாயத்தால் குளித்து முடித்து, உணவின் சுவையை உணராமல் வாய்வழி வயிற்றுக்குள் தள்ளி, வெள்ளிக்கிழமை வைத்த பையை அப்படியே தூக்கித் தோளிலிட்டு, பள்ளிப் பேருந்துக்குள் நுழைந்து, பள்ளிக்கு வந்து மெல்ல வகுப்புக்குள் நுழைந்தார்கள். 

ஆறாம் வகுப்பு அ பிரிவுக்குள் நுழைந்த குழந்தைகளுக்கு ஓர் ஆச்சரியம் காத்திருந்தது. அங்கே ஒரு பெண்குழந்தை உட்கார்ந்திருந்தாள். புதியதாகச் சேர்ந்திருந்தாள். அவள் அந்த வகுப்பிலுள்ள புதிய குழந்தைகளைப் பார்த்து மெல்லச் சிரித்தாள். 
எல்லோரும் அவரவர்களின் இடத்தில் பள்ளிப்பைகளை வைத்துவிட்டு அவளைச் சுற்றி உட்கார்ந்தார்கள். 

புதுசா சேர்ந்திருக்கியா?
உன் பெயர் என்ன? 
இதற்கு முன்னாடி எங்கே படிச்சே? 
எங்கே தங்கியிருக்கே? 

என ஆளாளாளுக்கு கேள்விக்கணைகளைத் தொடுத்தார்கள். அத்தனை கேள்விகளையும் கேட்ட அவள் ஹ ஹ் ஹா... என்று சிரித்தாள். 
இருங்க இருங்க... உங்கள் எல்லா வினாக்களுக்கும் விடை சொல்கிறேன் என்றபடி தன் பள்ளிப் பையைத் திறந்தாள். குறிப்பேட்டை எடுத்தாள். பேனாவைத் திறந்தாள். 

நான் முதன் முதலாக என் பெயரைச் சொல்கிறேன் என்றபடி குறிப்பேட்டில் கீழ்வரும் வாக்கியத்தை அமைதியாக எழுதினாள். எல்லோரும் வியப்போடு அவள் என்ன எழுதுகிறாள் என்பதையே ஆவலோடு பார்த்துக்கொண்டிருந்தார்கள். 

பெயரைச் சொல்கிறேன் என்பவள் ஒரு வாக்கியத்தை அல்லவா எழுதுகிறாள். ஒரு வாக்கியமே பெயராக இருக்குமா? இவளுக்கு என்ன ஆயிற்று என்று நினைத்தனர். 

தங்கம் உமியில் அமிழ்ந்தது 

இந்த வாக்கியத்தில் என் பெயர் மறைந்து இருக்கிறது. முடிந்தால் கண்டுபிடியுங்கள் பார்ப்போம் என்று அவர்களை நோக்கி அழகான புன்சிரிப்பொன்றை உதிர்த்தாள். அவள் சிரித்தபோது கன்னத்தில் விழுந்த குழி அவளின் அழகை மேலும் கூட்டியது. 
ஆகா இவள் ஒரு குறும்புக்காரி. அதுவும் புத்திசாலியான குறும்புக்காரி என்று எல்லோரும் மனத்துக்குள் நினைத்தார்கள். 
கைகளில் முகத்தைத் தாங்கியபடி சிலபேர். தலையைச் சொறிந்தபடி சிலபேர். கண்களை மூடியபடி சிலபேர், ஒரு விரலால் கன்னத்தைத் தட்டியபடி சிலபேர்... என எல்லோரும் அந்த வாக்கியத்தையே பார்த்தார்கள். பலமுறை படித்தார்கள். முணுமுணுத்தார்கள். 
தங்கம் உமியில் அமிழ்ந்தது என்ற வாக்கியத்தில் மறைந்திருக்கும் ஒரு பெயர். பெண் குழந்தையின் பெயர். அது என்ன?

ஜி. ராஜேந்திரன்.


🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹


தமிழ்ச்செல்வியும் கலைச்செல்வியும் – 2

“தங்கம் உமியில் அமிழ்ந்தது” என்ற வாக்கியத்தில் மறைந்திருக்கும் ஒரு பெயர். பெண் குழந்தையின் பெயர். அது என்ன?

“ஓ... உன் பெயர் தமிழ். சரியா...?” கலைச்செல்விதான் முதலில் கேட்டாள். தமிழ்ச்செல்வி சரியென்பது போல் தலையாட்டியபடி சிரித்தாள்.

“எப்படிக் கண்டுபிடித்தாய் கலை?” சில குழந்தைகள் கேட்டார்கள்.

கலை ஏதோ பேசப்போனாள். “கலை கலை... இப்போது நீ அதைச் சொல்லாதே. நம் நண்பர்களே கண்டுபிடிக்கட்டும். அதுதான் அவர்களுக்கு மகிழ்ச்சியைத் தரும்” என்றாள் தமிழ்ச்செல்வி. பிறகு நண்பர்களைப் பார்த்துப் பேசத் தொடங்கினாள்.   

“நான் ஐந்து வாக்கியங்கள் சொல்கிறேன். அவற்றுள் ஐந்து பெயர்கள் மறைந்துள்ளன. எல்லாம் நம் வகுப்பிலுள்ளவர்கள் பெயர்கள்தாம். கண்டுபிடியுங்கள். அப்போது புரியும்” என்றபடி தமிழ்ச்செல்வி வாக்கியங்களைக் கூறத் தொடங்கினாள். 

“இரு இரு... நீ இப்போதுதான் புதியதாய் வந்திருக்கிறாய். உனக்கெப்படி நம் வகுப்பிலுள்ள நண்பர்களின் பெயர்கள் தெரியும்?” என்று ஆர்வத்தோடு கேட்டாள் கலைச்செல்வி. 

தமிழ்ச்செல்வி சிரித்துக்கொண்டே சுவர் பக்கம் கைகாட்டினாள். அங்கே மாணவர்கள் எழுதிய கதை, கவிதை. துணுக்குகள் போன்றவை காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு படைப்பின்கீழ் அவர்களுடைய பெயர்களும் இடம்பெற்றிருந்தன. 
“தமிழ்ச்செல்வி, நீ சரியான ஆள்தான்” என்று பாராட்டினாள் கலை. 

தமிழ்ச்செல்வி கீழ்வரும் வாக்கியங்களைக் கூறினாள். 

1. வாசலில் பசு நிற்கிறது. 
2. பிணியைப் பரப்புவது தப்பு 
3. மலையில் கொஞ்சம் பஞ்சு
4. பூ வரவில்லை அண்ணி
5. பழத்தைப் புவியில் புசித்திட வருவாரா

தமிழ்ச்செல்வி புதுப்புது வாக்கியங்களை, அதுவும் சிரமமான வாக்கியங்களை எளிதில் உருவாக்குவதைக் கண்கொட்டாமல் பார்த்தாள் கலைச்செல்வி. தமிழ்ச்செல்வி தன் தோழியாகப்போவதை நினைத்துப் பெருமைப்பட்டாள்.

எல்லோரும் அந்த வாக்கியங்களில் மறைந்திருக்கும் பெயரைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கினார்கள். 

“முதல் சொல்லில் முதல் எழுத்து, இரண்டாவது சொல்லில் இரண்டாவது எழுத்து... மூன்றாவது சொல்லில் மூன்றாவது எழுத்து... எனத் தேர்ந்தெடுத்தால் பெயர்கள் கிடைக்கும் இல்லையா... முதல் வாக்கியத்தில் இருப்பது என் பெயர்..” வாசுகி மகிழ்சியோடு முகம் மலரச் சொன்னாள். 

“வாசுகியின் மகிழ்ச்சியைப் பார்த்தாயா கலை... நீ சொல்லிக்கொடுத்திருந்தால் இந்த மகிழ்ச்சி கிடைத்திருக்காதல்லவா. அவர்களாகக் கண்டுபிடிக்க வாய்ப்புக்கொடுப்பதுதான் எப்போதும் நல்லது.” 
“புரிகிறது... புரிகிறது...” கலைச்செல்வி யோசித்தபடியே மெதுவாகச் சொன்னாள். 

அகில், கார்த்தி, நவ்யா, சுகந்தி... என எல்லோரும் தங்கள் பெயருக்கேற்ற வாக்கியங்களை உருவாக்கும் முயற்சியில் இறங்கினார்கள். 

எங்கே நீங்களும் சில பெயர்களை மறைத்து வைத்து வாக்கியங்கள் உருவாக்குங்கள். நண்பர்களிடம் காட்டுங்கள். அவர்களால் கண்டுபிடிக்க முடிகிறதா என்று பாருங்கள்.

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

தமிழ்ச்செல்வியும் கலைச்செல்வியும் – 3

“நல்ல ஆந்தைகள் மத்தியில்.... ஐயோ என் பெயருக்கேற்ற வாக்கியம் வரமாட்டேன் என்கிறதே... னி என்ற எழுத்து நான்காவதாக வரக்கூடிய ஒரு சொல்வேண்டுமே...”
நந்தினி தனக்குத்தானே பேசிக்கொண்டே யோசித்தாள். அதைப் பார்த்த கலைச்செல்வி “நல்ல ஆந்தைகள் மத்தியில் இன்கனி” என்றாள். அதைக் கேட்ட நந்தினி “ஆகா… பொருத்தமான சொல். என் பெயருக்கேற்ற வாக்கியம் கிடைத்துவிட்டது. நான் நண்பர்களிடமும் வீட்டினரிடமும் இந்த வாக்கியத்தைச் சொல்லி இதில் மறைந்திருக்கும் பெயரைக் கண்டுபிடிக்கும்படி சவால் விடப்போகிறேன்” என்று முகம் மலரக் கூறினாள். 

கலைச்செல்விக்கும் தமிழ்மொழி மீது ஆர்வம் இருப்பதைத் தமிழ்ச்செல்வி கண்டுகொண்டாள். அவள் முகத்தில் புன்சிரிப்பொன்று மின்னி மறைந்தது. 
“தமிழ்ச்செல்வி, நீங்கள் எல்லோரும் இந்த விளையாட்டில் ஆர்வமாகப் பங்கெடுத்தீர்கள். ஆனால் நாங்கள் சிலர் இங்கு என்ன நடக்கிறது என்றே தெரியாமல் உட்கார்ந்திருக்கிறோம். நீங்கள் என்ன விளையாட்டு விளையாடுகிறீர்கள்? எங்களுக்கும் சொல்லுங்கள்” என்று கேட்டான் சிவா. 

தமிழ்ச்செல்வி ஒரு நிமிடம் யோசித்தாள். 
“சிறுவனே வா... சிறுவனே வா” என்று சிரித்தபடி சிவாவை அழைத்தாள். 

“சிவா... உன் பெயருக்கேற்ற வாக்கியம்தான் சிறுவனே வா என்பது” என்று கலகலவெனச் சிரித்தாள் கலைச்செல்வி. 

“ஆகா... இது புதுவித உத்தியாக இருக்கிறதே. சொல்லிலுள்ள முதல் எழுத்துகளை இணைத்தால் போதும். இல்லையா?” சிவா கேட்டான்.  

“ஆம். இப்போது நான் ஐந்து வாக்கியங்கள் கூறுகிறேன். ஆனால் ஒருமுறைதான் கூறுவேன். சட்டென பெயரைக் கண்டுபிடித்து எழுத வேண்டும். எத்தனை பேர் சரியாக எழுதுகிறீர்கள் என்று பார்ப்போம்” என்றபடி கீழ்வரும் வாக்கியங்களைக் கடகடவெனக் கூறினாள் தமிழ்ச்செல்வி. 

பாடம் புதியது 
வாழைப்பழம் சுவையானது கிடைத்தது 
விடியலில் ஜன்னலில் யார் 
திடீரென லட்டைக் காணவில்லை 
அதோ பின்னால் நடப்பது யார் 

தமிழ்ச்செல்வி வாக்கியங்களைக் கூறிமுடிக்கவும் சிவா “பாபு, வாசுகி, விஜயா, திலகா, அபிநயா” என்று பெயர்களை உரக்கச் சொல்லவும் சரியாக இருந்தது. எல்லோரும் கரவொலி எழுப்பிச் சிவாவைப் பாராட்டினார்கள். 

“ஆனால் இந்த உத்தியைப் பயன்படுத்தி செல்வி, தமிழ், மஞ்சு போன்று மெய்யெழுத்துகள் வரும் பெயர்களுக்கான வாக்கியங்களை உருவாக்க முடியாது. இல்லையா?” கலைச்செல்வி யோசனையோடு கூறினாள். 

“ஆமாம். அதுமட்டுமல்ல மீனா, பானுமதி,, அழகிரி போன்ற பெயர்களில் வரும் னா, னு, ழ போன்ற எழுத்துகள் சொல்லின் முதலில் வாரா. அத்தகைய எழுத்துகள் வரும் பெயர்களுக்கும் இந்த உத்தியைப் பயன்படுத்தி வாக்கியங்கள் அமைக்க முடியாது என்றாள் தமிழ்ச்செல்வி. 

நண்பர்களே, இப்போது உங்களுக்கு இரண்டு வேலை. 
தமிழ் எழுத்துகளுள் எவையெல்லாம் சொல்லின் முதலில் வரும், எவையெல்லாம் வாரா என்று உங்களுக்குத் தெரிந்த முறையில் பிரிக்க முடியுமா? 

கவிதா, பபிதா, மமதா, சவிதா போன்ற பெயர்களுக்கேற்ற வாக்கியங்கள் எழுதுங்கள்.

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

தமிழ்ச்செல்வியும் கலைச்செல்வியும் – 4

தமிழ்ச்செல்வி அந்தப் பள்ளிக்கூடத்தில் அன்றுதான் சேர்ந்திருந்தாள். அவளுக்கு அது முதல் நாள். ஆனால் வகுப்பிலுள்ள அனைவரும் அவளைத் தங்கள் நெடுநாள் தோழிபோல் உணர்ந்தார்கள்.

தயக்கமின்றி அனைவரிடமும் நெருங்கிச் சென்று, திறந்த கை நீட்டி, “நான் தமிழ் உன் பெயரைத் தெரிந்துகொள்ளலாமா?” என்று கேட்டதுமே அவர்களுக்குள் நெருக்கம் வந்துவிடுகிறது. கள்ளம் கபடமற்ற அவளுடைய வெள்ளைச் சிரிப்பு நெருங்கச் சற்று தயங்கி நிற்பவரையும் அவளை நோக்கி இழுத்துவிடும். 

ஆனால் கலைச்செல்வி அவளுடைய வேறொரு சிறப்பைக் கவனித்தாள். அவள் பேசும் வாக்கியங்களில் பொருத்தமான சொற்கள் பொருத்தமான இடத்தில் வந்து அமர்ந்துகொள்கின்றன. அச்சொற்கள் எல்லாம் தனக்கும் தெரிந்தவைதாம். இருந்தபோதும் நான் பேசினால் அச்சொற்கள் வருவதில்லையே என்று சிந்தித்தாள். தமிழ்ச்செல்வி பேசும்போது எந்தக் குழப்பமும் யாருக்கும் வருவதில்லை என்பதையும் கவனித்தாள்.

இச்செல்வளம் தமிழ்ச்செல்விக்கு எப்படி வந்திருக்கும்? அவளிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும் என்று நினைத்துக்கொண்டாள் கலைச்செல்வி. அவள் தன்னுடைய பள்ளிப் பையைத் திறந்து முதல் பிரிவேளைக்கான குறிப்பேட்டை எடுத்தாள். பேனாவையும் பென்சிலையும் எடுத்து வைத்தாள். ஆசிரியர் வருவதற்கு இன்னும் சில நிமிடங்கள் இருந்தன. குறிப்பேட்டை விரித்தாள். ஒரு நிமிடம் யோசித்தாள். ஒரு படம் வரைந்தாள். அது கேள்விக்குறியின் படம். அதுவும் தலைகீழாக நிற்கும் கேள்விக்குறி. பிறகு அதன் கீழே “எப்படி? எப்படி? எப்படி?” என்று எழுதினாள். 

ஆசிரியர்கள் வந்தார்கள். பாடம் நடத்தினார்கள். உணவு இடைவேளையும் வந்தது. எல்லோரும் அவரவர் உணவுப் பாத்திரத்தையும் எடுத்துக்கொண்டு பள்ளி மைதானத்திலிருந்த வேப்பமர நிழலில் அமர்ந்தார்கள். உணவு உண்டார்கள். பொரியல் கூட்டு வகைகளைத் தங்களுக்குள் பகிர்ந்துகொண்டார்கள். தமிச்செல்வி பேச்சைத் தொடங்கி வைத்தாள். “ஏய் கலை, ஆசிரியர் வருவதற்கு முன்பாக நீ குறிப்பேட்டில் ஏதோ எழுதிக்கொண்டிருந்தாயே. என்ன எழுதினாய்?” எனக் கேட்டாள். 

“ஓ... கலைச்செல்வி உண்மையில் ஒரு கலைஞர் என்பது உனக்குத் தெரிய நியாயமில்லைதான். அவள் நன்றாகப் பாடுவாள். ஓவியம் வரைவாள். வீண்பொருட்களிலிருந்து கலைப்பொருட்கள் செய்வாள்” என்றான் மகிழ். 
அதைக்கேட்ட கலைச்செல்வி, “அப்படியெல்லாம் ஒன்றுமில்லை தமிழ். நீ ஏதோ பெரியதாக எண்ணிவிடாதே. அது போகட்டும். உனக்கு யார் தமிழ்ச்செல்வி என்று பெயர் வைத்தது? யார் பெயர் சூட்டியிருந்தாலும் உனக்குப் பொருத்தமான பெயர்தான். உன் தமிழார்வத்தைப் பார்த்து உனக்குத் தமிழ்ச்செல்வி என்று பெயர் சூட்டினார்களா இல்லை தமிழ்ச்செல்வி என்று பெயர் சூட்டியதால் தமிழில் ஆர்வம் வந்ததா?” என்று கேட்டாள். 

கலைச்செல்வியின் கேள்வியைக் கேட்டு எல்லோரும் சிரித்தார்கள். பிறகு தமிழ்ச்செல்வியின் முகத்தைப் பார்த்து அவள் என்ன பதில் சொல்லப்போகிறாள் என்பதற்காக செவிகூர்த்து நின்றார்கள். 

“என்னுடைய பதில் ஒரு பக்கம் இருக்கட்டும். கலைச்செல்வியின் பேச்சைக் கேட்டபோது எனக்குள் வேறு இரண்டு கேள்விகள் எழுந்தன. கலைச்செல்வியின் கலையார்வத்தைப் பார்த்து கலைச்செல்வி என்று பெயர் சூட்டினார்களா இல்லை கலைச்செல்வி என்று பெயர் சூட்டியதால் கலையார்வம் வந்ததா?” என்று சிரித்தபடி கேட்டாள். 

மீண்டும் எல்லோரும் சிரித்தார்கள். “சபாஷ், சரியான போட்டி. ஆமாம் இரண்டாவது கேள்வி என்ன?” மகிழ் சிரித்துக்கொண்டே கேட்டான். 

“அது உன்னைப் பற்றித்தான்” தமிழ்ச்செல்வி சிரித்துக்கொண்டே கூற “என்னைப் பற்றியா? என்னிடம் என்ன கேட்கப் போகிறாய்?” என்று வியப்போடு கேட்டான். 

“நீ எப்போதும் சிரித்து மிகழ்ந்திருப்பதால் உனக்கு மகிழ் என்று பெயர் சூட்டினார்களா? இல்லை மகிழ் என்று பெயர் சூட்டியதால் நீ எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கிறாயா?” என்று கேட்டாள். 

அவ்வளவுதான் எல்லோரும் ஹோவெனச் சிரிக்க அங்கங்கே அமர்ந்து 

உணவருந்திக்கொண்டிருந்தவர்கள் இவர்களை நோக்கித் தலையைத் திருப்பினார்கள். இப்படி வெடிச்சிரிப்பு சிரிப்பதற்கு இங்கே என்ன நடந்தது என்று நினைத்து வியந்தார்கள். 

(நண்பர்களே, கலைச்செல்வியும் தமிழ்ச்செல்வியும் கேட்டது போன்று வேறு வினாக்களை உங்களால் உருவாக்க முடியுமா? குறைந்தது ஐந்து வினாக்களாவது உருவாக்குங்கள். உங்கள் நண்பர்களுக்கு வாசித்துக் காட்டுங்கள்.)


🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

தமிழ்ச்செல்வியும் கலைச்செல்வியும் – 5

கலைச்செல்வி காத்திருந்தாள். தமிழ்ச்செல்விக்காகக் காத்திருந்தாள். இருவரும் பள்ளி நேரத்திற்குச் சற்று முன்னரே வருவார்கள். எதைப் பற்றியாவது பேசுவார்கள். 

பேசுவார்கள், பேசுவார்கள், பேசிக்கொண்டே இருப்பார்கள். 

தமிழும் கலையும் இணைபிரியா தோழிகளாகிவிட்டனர். பிற மாணவ மாணவியரும் அவர்கள் இருவருடனும் சேர்ந்து இருக்கவே விரும்பினார்கள். காரணம் எப்போது வேண்டுமானாலும் அவர்களின் பேச்சில் கலகலப்பு தொற்றிக்கொள்ளும். புதுமையான, சவாலான செயல்பாடுகள் உருவாகும். அந்தச் செயல்பாட்டை வீட்டினரிடமும் பிற நண்பர்களிடம் சொல்லிச் சொல்லிப் பெருமைபட்டுக்கொள்ளலாம் அல்லவா. 
எதிர்பாராத நேரத்தில், தமிழ்ச்செல்வி ஒரு செயல்பாட்டை எப்படி உருவாக்குகிறாள் என்பதற்கு கீழ்வரும் நிகழ்ச்சி நல்ல எடுத்துக்காட்டு.  

தமிழ்ச்செல்வி பத்து நிமிடங்கள் தாமதமாக வந்தாள். அவளைப் பார்த்ததும் கலைச்செல்வி அவளை நோக்கி எழுந்து சென்றாள். “என்ன தமிழ்? என்னாச்சு? ஏன் தாமதம்?” என்று கேட்டாள். தமிழ்ச்செல்வி சிரித்துக்கொண்டே “இரண்டு பிரச்சனைகள்” என்றபடி இரண்டு விரல்களை உயர்த்திக் காட்டினாள். 
“என்ன? இரண்டு பிரச்சனைகளா? என்னென்ன பிரச்சனைகள்? சொல்லு நான் தீர்த்து வைக்கிறேன்” என்று இரண்டு கைகளையும் இடுப்பில் வைத்தபடி நிமிர்ந்து நின்றாள். 

“ஹ் ஹ்ஹா... உன்னால் முடியாது கலை. இவை அப்படிப்பட்ட பிரச்சனைகள்” தமிழ்ச்செல்வி கலைச்செல்வியின் ஆர்வத்தைத் தூண்டினாள். 

“எனக்குத் தெரிந்தேயாக வேண்டும். தெரியாவிட்டால் தலை வெடித்துவிடு” என்று உரக்கச் சொன்னாள் கலைச்செல்வி. அவள் அப்படி உரக்கக் கத்தியதைக் கேட்டு அங்கங்கு அமர்ந்திருந்த மாணவ மாணவியர் அவர்களைச் சுற்றிச் சூழ்ந்துகொண்டனர். 

தமிழ்ச்செல்வி எதிர்பார்த்ததும் அதைத்தானே. “இதோ அந்தப் பிரச்சனை. உங்களால் முடிந்தால் தீர்த்து வையுங்கள்” என்றபடி கீழ்வரும் வாக்கியங்களை நிறுத்தாமல், ஒரே மூச்சில் சொன்னாள். 

“அங்கிருந்தும் இங்கிருந்தும் மேகம் வந்தபோது இரண்டு பிரச்சனை உருவாயின. மழை வருமா வராதாவென்று 
மழை வராவிட்டால் பிரச்சனை இல்லை. மழை வந்தால் இரண்டு பிரச்சன நனைவோமா நனையமாட்டோமாவென்று 
நனையாவிட்டால் பிரச்சனையில்லை, நனைந்தால் இரண்டு பிரச்சனை சளிப்பிடிக்குமா பிடிக்காதாவென்று 
சளி பிடிக்காவிட்டால் பிரச்சனை இல்லைய பிடித்தால் இரண்டு பிரச்சனை மருத்துவரிடம் போகலாமா வேண்டாமாவென்று 
போகாவிட்டால் பிரச்சனை இல்லை. போனால் இரண்டு பிரச்சனை. மருந்து தருவாரா தரமாட்டாரா என்று
மருந்து தராவிட்டால் பிரச்சனை இல்லை. தந்தால் இரண்டு பிரச்சனை சாப்பிட வேண்டுமா வேண்டாமென்று... 
சாப்பிடாவிட்டால் பிரச்சனை இல்லை. சாப்பிட்டால் இரண்டு பிரச்சனை...” 

“ஐயோ ஐயோ போதும் போதும் தாங்க முடியவில்லை” என்று சுற்றிலும் சூழ்ந்து நின்றவர்கள் சிரித்துக்கொண்டே கைகளால் காதுகளைப் பொத்திக்கொண்டனர்.  

“தமிழ், எப்படி உன்னால் இப்படி யோசிக்க முடிகிறது. அருமையான செயல்பாடு. அதுவும் நீ மூச்சுவிடால் பேசினாயே அதுதான் உச்சகட்டம். எங்களுக்கே மூச்சு முட்டியது.” கலைச்செல்வி தமிழ்ச்செல்வியைக் கட்டிக்கொண்டாள். 

அப்போது வகுப்பு துவங்குவதற்கான மணியடித்தது. அதைக்கேட்டதும் “மணியடிக்காவிட்டால் பிரச்சனை இல்லை. மணியடித்தால் இரண்டு பிரச்சனை ஆசிரியர் வருவாரா வரமாட்டாரா என்று. ஆசிரியர் வராவிட்டால் பிரச்சனை இல்லை, வந்தால் இரண்டு பிரச்சனை…” என்று கலைச்செல்வி சொல்ல எல்லோரும் கொல்லெனச் சிரித்தார்கள். 

(கலைச்செல்வி கூறிய வாக்கியத்தைத் தொடர்ந்து உங்களால் எத்தனை வாக்கியங்கள் சொல்ல முடியும் என்று யோசியுங்கள்.)

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

தமிழ்ச்செல்வியும் கலைச்செல்வியும் – 6

தமிழும் கலையும் பள்ளிப்பேருந்தை விட்டு இறங்கினார்கள். வகுப்பை நோக்கி நடந்தார்கள். 

“கூடாது... கூடாது... கவலைப்படக் கூடாது. 
மாட்டேன்... மாட்டேன்... நான் கவலைப்பட மாட்டேன். 
ம்ஹூம்... ம்ஹூம்... கவலைப்படக் கூடாது. கவலைப்படக் கூடாது. கவலைப்படவே கூடாது...”
தமிழ்ச்செல்வி தனக்குத்தானே முணுமுணுத்துக்கொண்டிருந்தாள்.

“என்ன தமிழ்... என்ன முணுமுணுக்கிறாய்? என்னிடம் சொல்லக்கூடாதா?” கலைச்செல்வி கேட்டாள். 
“உன்னிடம் சொல்லாமலென்ன? இன்றைக்கு எல்லா ஆசிரியர்களிடமும் நான் வாங்கிக் கட்டிக்கொள்ளப்போகிறேன். ஒரு வீட்டுப்பாடமும் செய்யவில்லை.... அதுதான் கவலைப்படாதே கவலைப்படாதே என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டிருக்கிறேன்” 

“நீ ஒருநாள்கூட வீட்டுப்பாடம் செய்யாமல் வந்ததில்லையே... ஏன் வீட்டில் ஏதாவது பிரச்சனையா?”

“ஆமாம். பிரச்சனைதான். ஆனால் அந்தப் பிரச்சனை என் கட்டுப்பாட்டில் இல்லை. அதனால் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. என்னால் கட்டுப்படுத்த முடியாததை நினைத்து நான் ஏன் கவலைப்பட வேண்டும்?” 

“அது சரிதான். நம் கட்டுப்பாட்டில் இல்லாத ஒன்று நம் விருப்பம்போல் நடக்காவிட்டால் நாம் கவலைப்படக் கூடாததுதான். ஆமாம்... உன் கட்டுப்பாட்டில் இல்லாத எந்த ஒன்று வீட்டுப்பாடம் செய்யாமல் உன்னைத் தடுத்தது. அதையறிய ஆர்வமாக இருக்கிறது” 

“அது கொல்லத்தில் இருக்கிறது. வெல்லத்தில் இல்லை. பசுமையில் இருக்கிறது. பதுமையில் இல்லை” 

“என்னது… என்னது... இது புதுப்பிரச்சனையாக இருக்கிறதே. ஒருமுறை திருப்பிச் சொல்லு” என்றாள் ஆர்வமாக.

தமிழ்ச்செல்வி சிரித்துக்கொண்டே அதைத் திருப்பிச் சொல்ல கலைச்செல்வி எதுவும் புரியவில்லையென்பதுபோல் தலையையாட்ட அவர்கள் வகுப்பறையை அடைந்தார்கள். ஒரு பத்து நிமிடத்திற்குள் வகுப்பறையிலுள்ள நிறையப் பேர் “கொல்லத்தில் இருக்கிறது வெல்லத்தில் இல்லை. பசுமையில் இருக்கிறது பதுமையில் இல்லை. அது என்னவென்று தெரியுமா?” என்று மெல்லிய குரலில் கேட்கத் துவங்கினார்கள். 

இரண்டாம் பிரிவேளை முடிந்தது. இடைவேளைக்கான மணியடித்ததும் எல்லோரும் தமிழ்ச்செல்வி மற்றும் கலைச்செல்வியை நோக்கி ஓடி வந்து சுற்றும் கூடிநின்றார்கள். 

“வீட்டுப்பாடம் செய்யவிடாமல் உன்னைத் தடுத்த அந்தப் பிரச்சனை எது? அதைவிட கொல்லத்தில் இருப்பதும் வெல்லத்தில் இல்லாததும் எது? முதலில் அதைச் சொல்லு” என்று வற்புறுத்தத் தொடங்கினார்கள். 

“சரி சரி சொல்கிறேன். அதற்கு முன்பு 
கிழவனிடம் இருக்கிறது. உழவனிடம் இல்லை. அவளிடம் இருக்கிறது அவனிடம் இல்லை என்பதற்கான விடையைக் கண்டுபிடித்து வாருங்கள். வீட்டுப்பாடம் செய்யவிடாமல் என்னைத் தடுத்த அந்தப் பிரச்சனயைப் பற்றி நான் சொல்கிறேன் என்று புன்னகைத்தபடியே கழிப்பறையை நோக்கி நடக்கத் தொடங்கினாள். 

கூட்டம் மறுபடியும் கிழவனிடம் இருக்கிறது உழவனிடம் இல்லை. அவளிடம் இருக்கிறது. அவனிடம் இல்லை என்னும் வாக்கியங்களை முணுமுணுக்கத் தொடங்கியது.

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

தமிழ்ச்செல்வியும் கலைச்செல்வியும் – 7

கிழவனிடம் இருக்கிறது. உழவனிடம் இல்லை 
அவளிடம் இருக்கிறது. அவனிடம் இல்லை
அது என்ன? 

பலர் முணுமுணுத்துப் பார்த்தார்கள். பலர் குறிப்பேட்டில் வாக்கியங்களை எழுதி உற்றுப் பார்த்தார்கள். கிழவனிடம் கைத்தடி இருக்கும் அது உழவனிடம் இருக்காது. அவளிடம் பின்னல் இருக்கும். அது அவனிடம் இருக்காது. ஆனால் பின்னலுக்கும் கைத்தடிக்கும் என்ன தொடர்பு? அவை எப்படி வீட்டுப்பாடம் செய்யவிடாமல் தடுக்கும்? என்று பலவாறு ஊகித்தார்கள். யோசித்தார்கள். 

இரண்டாவது பிரிவேளை முடிந்ததும் எல்லோரும் தமிழ்ச்செல்வியை நோக்கிப் பாய்ந்து வந்தார்கள். 
“கைத்தடியா? பின்னலா? விடை என்ன?” என்று ஆர்வத்தோடு கேட்டார்கள். 

தமிழ்ச்செல்வி சிரித்துக்கொண்டே கரும்பலகையின் அருகே போனாள். நான் சொன்ன ஒவ்வொரு வாக்கியத்திலும் இந்தத் தொடரையும் சேர்த்து விரிவுபடுத்துங்கள். விடை கண்டுபிடிக்க முடியும் என்றபடி “என்ற சொல்லில்” என்ற தொடரைக் கரும்பலகையில் எழுதினாள். எல்லோரும் மூச்சுவிட மறந்து நின்றார்கள். 

கிழவனிடம் இருக்கிறது என்ற வாக்கியத்தோடு “என்ற சொல்லில்” என்பதை சேர்த்தால் “கிழவனிடம் என்ற சொல்லில் இருக்கிறது. உழவனிடம் என்ற சொல்லில் இல்லை… ஓ... அதுவா... என்று குதித்தாள் நவ்யா. எல்லோரும் அவளைச் சூழ்ந்துகொண்டார்கள். 
நவ்யா நேராகக் கரும்பலகைக்கு அருகே சென்றாள். கீழ்வரும்படி எழுதினாள். 

கிழவனிடம் 
உழவனிடம் 

பாருங்கள். கிழவனிடம் என்ற சொல்லில் இருக்கிறது. ஆனால் உழவனிடம் என்ற சொல்லில் இல்லை. அப்படியானால் உ, ழ, வ, னி, ட, ம் ஆகிய எழுத்துகள் அல்ல. பிறகு கிழவனிடம் என்ற சொல்லில் இருப்பது கி என்ற எழுத்து மட்டுந்தானே. கி என்பதுதான் விடை. கூடவே அடுத்த சோடி சொற்களையும் எழுதினாள். 

அவளிடம்
அவனிடம் 

அவளிடம் இருக்கிறது. அவனிடம் இல்லை. அப்படியானால் அது ளி என்ற எழுத்து. இரண்டையும் சேர்த்தால் கிளி என்று கிடைக்கும். அதுதான் விடை. 
பாராட்டுகள் நவ்யா... அப்படியானால் என்னை வீட்டுப்பாடம் செய்யவிடாமல் தடுத்தவர் யார் என்று கண்டுபிடிக்க முடியுமே... தமிழ்ச்செல்வி சொல்ல 

கொல்லத்தில் 
வெல்லத்தில் கொ என்ற எழுத்து 
பதுமையில் 
பசுமையில் சு என்ற எழுத்து 
விடை கொசு 

குறிப்பேட்டைப் பார்த்துக்கொண்டே கூறினாள் கலைச்செல்வி. 

ம் நல்லது. அடுத்து நாம் என்ன செய்யப்போகிறோம் சொல்லுங்கள் பார்க்கலாம் என்று தமிழ்ச்செல்வி கேட்டாள். 

அதில் யோசிப்பதற்கு என்ன இருக்கிறது. புதுப் புதிர்கள் உருவாக்கப்போகிறோம். ஆடு, மாடு, நாய், கோழி, காகம்... போன்ற சொற்களுக்கான புதிரை உருவாக்குங்கள் பார்ப்போம் என்று 
சொல்லப்போகிறாய் அவ்வளவுதானே என்று சிரித்தாள் கலைச்செல்வி. கூடவே எல்லோரும் சிரித்தார்கள். 

(கலைச்செல்வி கூறிய சொற்களுக்கான புதிரை நீங்களும் உருவாக்குங்கள். உங்கள் நண்பர்களிடம் புதிர் போடுங்கள். அவர்களால் கண்டுபிடிக்க முடிகிறதா என்று பாருங்கள்.)

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

தமிழ்ச்செல்வியும் கலைச்செல்வியும் – 8

அடுத்தநாள். 
கலைச்செல்வி தமிழ்ச்செல்வியைப் பார்த்து கண்களால் சிரித்தாள். “நான் சொன்ன பொருள் உன் பையில் இருக்கிறதல்லவா?” என்று தமிழ்ச்செல்வி கேட்டாள். “மறப்பேனா...?” என்றபடி பையைத் தொட்டுக்காட்டினாள். “அதை வைத்து என்ன செய்யப்போகிறாய்?” என்று கேட்டாள். “நீயே பார்...” என்றாள் ஒரு குறும்புச் சிரிப்போடு. 

எல்லோரும் வகுப்புக்குள் நுழைந்தார்கள். ஆனால் கலைச்செல்வியும் தமிழ்ச்செல்வியும் நுழையவில்லை. அப்படியே சுவரின் ஓர் ஓரமாக ஒதுங்கினார்கள். கலைச்செல்வி தன் பையைத் திறந்தாள். அந்தப் பொருளை எடுத்தாள். தமிழ்ச்செல்வியும் பையைத் திறந்தாள். கறுத்த மேலாடையை எடுத்தாள். அதை அணிந்துகொண்டாள். வண்ணக் காகிதத்தால் சுற்றப்பட்ட ஒரு தடியை எடுத்துக் கையில் பிடித்துக்கொண்டாள். கலைச்செல்வி தந்ததைத் தலையில் அணிந்தாள். வகுப்புக்குள் சட்டென நுழைந்தாள். 

“ஆகா… யார் இந்த மந்திரவாதி” என்று எல்லோரும் ஒரு நொடி வியந்தாலும் அது தமிழ்ச்செல்விதான் என்று அடுத்த நிமிடமே கண்டுகொண்டார்கள். ஏதோ ஒரு சுவையான செயல்பாட்டை அறிமுகப்படுத்தப் போகிறாள் என்பது புரிந்தது. எல்லோரும் ஆவலாக அவளையே பார்த்துக்கொண்டிருந்தனர். 

தமிழ்ச்செல்வி கரும்பலகையின் அருகே சென்றாள். தலையில் அணிந்த தொப்பியை எடுத்தாள். தலையைக் குனிந்தாள். “எல்லோருக்கும் வணக்கம்” என்றாள். பிறகு பேசத் தொடங்கினாள். 

“வீட்டுப்பாடம் செய்யவிடாமல் என்னைத் தடுத்த கொசுவுக்கு நான் தண்டனை கொடுக்க நினைத்தேன். இறைவனை வணங்கினேன். வரம் பெற்றேன். கொசுவுக்குத் தண்டனை கொடுத்தேன். என்ன தண்டனை தெரியுமா? கொசுவை யானையாக மாற்றிவிட்டேன். அதைக் கேட்க வந்த நாயை நரியாக மாற்றினேன். நாயின் நண்பனான பூனையைப் புழுவாக மாற்றினேன். நீங்கள் நம்ப மாட்டீர்கள் என்று தெரியும். இதோ இப்போதே உங்கள் முன்னே மாற்றிக் காட்டுகிறேன்” என்றபடி சுண்ணக்கட்டியை எடுத்துக்கொண்டு கருபலகையில் எழுதத் தொடங்கினாள். 

கொசு பசு பனை யானை 

எழுதி முடித்தவள் “பார்த்தீர்களா… கொசுவை யானையாக மாற்றிவிட்டேன்” என்று சிரித்தாள். 

கலைச்செல்வியால் இந்தச் செயல்பாட்டின் விதியைக் கண்டுபிடிக்க முடியவில்லை. மொழிவிளையாட்டுக்கு ஒரு விதி இருக்குமே. அவள் யோசிக்கத் தொடங்கினாள். 
“என்ன கலை, விதியைக் கண்டுபிடிக்க முடியவில்லையல்லவா. ஓர் எடுத்துக்காட்டை மட்டும் வைத்து விதி உருவாக்குவது கடினம். அதனால் மேலும் இரண்டு எடுத்துக்காட்டுகள் தருகிறேன். அதிலிருந்து உங்களால் இந்த விளையாட்டின் விதியைக் கண்டுபிடிக்க முடியும்” என்றபடி மீண்டும் எழுதத் தொடங்கினாள். 

“இதோ நான் நாயை நரியாக்கப் போகிறேன்” என்று கூறியவள் கீழ்வரும்படி எழுதினாள். 

நாய் காய் காரி நரி 

“இதோ பூனையைப் புழுவாக மாற்றப்போகிறேன்.” 

பூனை பனை பல் புல் புழு

“ஓ... ஒவ்வொரு முறையும் ஒரேயொரு எழுத்தை மட்டும் மாற்றுகிறாய். சரியா?” என்று உற்சாகமாகக் கேட்டாள் கலைச்செல்வி. 

“ஆம். ஒரு சொல்லின் ஓர் எழுத்தை மட்டும் மாற்றி அடுத்த சொல் உருவாக்க வேண்டும். பிறகு இரண்டாவது சொல்லின் ஓர் எழுத்தை மட்டும் மாற்றி மூன்றாவது சொல் உருவாக்க வேண்டும். எல்லா சொற்களும் பொருளுள்ள சொற்களாகவும் இருக்க வேண்டும். இவைதாம் இந்த மொழி விளையாட்டின் விதிகள். இப்போது நான் கூறும்படி சொற்களை மாற்ற முயற்சி செய்யுங்கள்.” என்றபடி கீழ்வரும் வாக்கியங்களைக் கரும்பலகையில் எழுதினாள்.  

1. கோழியைக் கிளியாக மாற்றுங்கள். 
2. கல்லைக் கூடையாக மாற்றுங்கள். 
3. காயைக் கனியாக மாற்றுங்கள். 

எங்கே முயற்சி செய்யுங்கள். பார்க்கலாம்.
🌹🌹🌹🌹🌹🌹🌹


தமிழ்ச்செல்வியும் கலைச்செல்வியும் – 9

எல்லோரும் உணவருந்திக்கொண்டிருந்தார்கள். கைககள் பாத்திரத்திற்குப் பாத்திரம் தாவிக்கொண்டிருந்தன. மாங்காய்ப் பச்சடி ஆகா... ஆகா.. அடுத்தமுறை அம்மாவிடம் சொல்லி தனிப்பாத்திரத்தில் கொண்டு வா கலை என்ற வாசுகி பாத்திரத்திலுள்ள பச்சடியை வழித்துச் சாப்பிட்டாள். 

புரியுது புரியுது அப்படியானால் அடுத்தமுறை எல்லோரிடமும் இரண்டு பாத்திரங்கள் இருக்க வேண்டும் இல்லையா... கலைச்செல்வி சிரித்துக்கொண்டாள். 

என்னிடம் இரண்டு பாத்திரங்கள் இருக்கின்றனவா என்று கேட்டால் இருக்காது. ஆனால் உண்மையில் இரண்டு பாத்திரங்கள் இருக்கும் என்று புதிர் போட்டாள் தமிழ்ச்செல்வி. 

இதென்ன விளையாட்டு தமிழ்? இருக்கும் என்கிறாய் ஆனால் இருக்காது என்கிறாய்? வாசுகி உண்மையான சந்தேகத்தோடு கேட்டாள். 

ஆமாம். நான் சொன்னது அத்தனையும் உண்மை. இரண்டு பாத்திரங்கள் இருக்கும். ஆனால் இருக்காது. தமிழ்ச்செல்வி விடாமல் குழப்பினாள். 

ம்ம் புரிந்துவிட்டது, புரிந்துவிட்டது... கலைச்செல்வி இருந்த இடத்திலிருந்து எழுந்தாள். ஒரு பத்திரத்திற்குள் இன்னொரு பாத்திரம் இருந்தால்... பார்ப்பதற்கு ஒரு பாத்திரம் போல் இருக்கும் ஆனால் திறந்தால் இரண்டு பாத்திரங்கள் இருக்குமே. இல்லையா தமிழ்.... 
அதேதான் என் அறிவுக்கொழுந்தே... ஆனால் "இருக்கும் ஆனால் இருக்காது" என்பது ஒரு தமிழ்ச்செயல்பாடு. தண்ணீரை வீணாக்காமல் சீக்கிரமாகப் பாத்திரங்களைக் கழுவிவிட்டு வகுப்புக்கு வந்தால் அந்தச் செயல்பாட்டை அனுபவிக்கலாம். வாங்க... என்றபடி குழாயடியை நோக்கி நடந்தாள். 

அதற்குள் செய்தி பல காதுகளுக்கு மாறியது. தமிழ்ச்செல்வி வகுப்புக்குள் நுழைந்தபோது பிற வகுப்பு மாணவர்களும் உள்ளே வந்து ஆர்வத்தோடு அமர்ந்திருந்தார்கள்.

தமிழ்ச்செல்வி கையில் சுண்ணக்கட்டியோடு கரும்பலகைக்கு அருகே நின்றிருந்தாள். எல்லோரையும் ஒருமுறை பார்த்தாள். 

"உங்கள் கையில் குறிப்பேடும் பேனாவும் இருக்கின்றன அல்லவா. இந்த முறை அடுத்த வகுப்பிலிருந்து வந்தவர்களுக்கு முதல் வாய்ப்பு. நீங்கள் உங்களுக்கு மிகவும் நெருங்கிய நண்பர் ஒருவரின் பெயரைச் சொல்லுங்கள்" என்றாள். அவர்கள் சொல்லச் சொல்ல தமிழ்ச்செல்வி ஒன்றுக்குக் கீழ் மற்றொன்று என எழுதிக்கொண்டே வந்தாள். அப்பெயர்கள் இதோ 

முகம்மது இப்ராஹிம் 
சகாய மேரி 
கலைவாணி 
ரூபேஷ் குமார் 
சந்திரசேகர் 
பாத்திமா பீகம் 
அந்தோணிச்சாமி 
அபிநயா 
ஆனந்தராணி 
செல்வராஜ் 

இதில் என்ன இருக்கும், என்ன இருக்காது எதுவும் புரியவில்லையே, கூட்டத்திலிருந்து ஒரு குரல் கேட்டது. 
"அட இருங்க இருங்க... நீங்கள் ஒவ்வொருவரும் குறைந்தது ஐந்து பெயர்களாவது எழுத வேண்டும். ஆனால் அப்பெயர்களிலுள்ள சொற்கள் இங்கு எழுதப்பட்ட பெயர்களிலுள்ள சொற்களாக இருக்க வேண்டும். அதே நேரத்தில் இதே பெயர்களாக இருக்கவும் கூடாது. அதாவது நீங்கள் எழுதும் பெயர்கள் இதில் இருக்கும். ஆனால் நேரடியாகப் பார்த்தால் இருக்காது. தேடினால்தான் கிடைக்கும். எங்கே எழுதுங்கள் பார்ப்போம்" என்றபடி தன் இருப்பிடத்தை நோக்கி நடந்தாள் தமிழ்ச்செல்வி. 

எல்லோரும் கரும்பலகையில் எழுதிய பெயர்களையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவர்களையறியாமலே அப்பெயர்களை அவர்கள் திரும்பத் திரும்ப வாசித்துக்கொண்டிருந்தார்கள். 

(நண்பர்களே, உங்களால் இச்சொற்களைப் பயன்படுத்தி ஐந்து புதிய பெயர்கள் எழுத முடியுமா? முயற்சி செய்யுங்கள்.)

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

தமிழ்ச்செல்வியும் கலைச்செல்வியும் – 10

“இருக்காது; ஆனால் இருக்கும்” என்று தமிழ்ச்செல்வி சிரித்துக்கொண்டே சொன்னாள். அப்போதே கலைச்செல்விக்கு விளங்கிவிட்டது. இருந்தாலும் அவள் வெளிக்காட்டவில்லை. பிறர் என்ன செய்கிறார்கள் என்று சுற்றும் முற்றும் பார்த்தாள்.

அவர்கள் எல்லோரும் அப்பெயர்களைப் பலமுறை வாசிப்பதைப் பார்த்தாள். உதடுகள் பெயர்களை முணுமுணுக்கின்றன. கருவிழிகள் உயர்ந்து தாழ்கின்றன. சட்டென “ஆஹா... கிடைத்துவிட்டது” என உற்சாகமாக குரல் எழுப்பினாள் வாசுகி.
“ஐயோ வாசுகி... விடையைச் சொல்லாதே... விடையைச் சொல்லாதே… எல்லோரும் எழுதட்டும்” என்று தமிழ்ச்செல்வி அவசர அவசரமாகக் கூறினாள். 

ஒருவர் விடையைக் கண்டுபிடிக்கிறார். அவர் உரக்கக் கூறினால் அது அடுத்தவர்களுக்கு கண்டுபிடிப்பதின் மகிழ்ச்சியை கிடைக்காமல் செய்துவிடும் என்பது தமிழ்ச்செல்வியின் கருத்து. 

இந்த இடத்தில் மட்டும் யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்பது பொருந்தாது. ஒவ்வொருவருக்கும் தங்கள் திறமைக்கேற்ப, வேகத்திற்கேற்ப மட்டுமே தீர்வுகளைக் கண்டுபிடிக்க முடியும் அல்லவா. அதனால் அவர்களுக்கும் அம்மகிழ்ச்சி கிடைக்கவேண்டுமானால் முதலில் கண்டுபிடித்தவர்கள் சொல்லாமல் இருக்க வேண்டும். தமிழ்ச்செல்வி அப்படி அவசரப்பட்டது அதனால்தான். 

மெல்ல மெல்ல எல்லோரும் குறிப்பேடுகளில் ஒரு புன்சிரிப்போடு சொற்களை எழுதத் தொடங்கினார்கள். 

“ஓஹோ... இதுதானா அந்த இரகசியம், ஆகா இது நல்ல செயல்பாடாக இருக்கிறதே, பரவாயில்லையே நாம் நினைக்காதே பெயர்கள் வருகின்றனவே...” என்றெல்லாம் முணுமுணுப்பது அடுத்தவர்கள் காதுகளுக்குக் கேட்டது. 

சகாய ராணி 
ஆனந்த குமார் 
பாத்திமா சேகர் 
செல்வா வாணி
ரூபேஷ் மேரி
அந்தோணிராஜ் 

என கரும்பலகையில் இல்லாத பெயர்களை அவர்கள் எழுதத் தொடங்கினார்கள். குறைந்தது ஐந்து பெயர்களை எழுதினால் போதும் என்று சொன்னாலும் பலரும் பத்து பெயர்களுக்கு மேல் எழுதிக்கொண்டிருந்தார்கள். இதுதான் நல்ல செயல்பாட்டின் பண்பு என்று நினைத்துக்கொண்டாள் தமிழ்ச்செல்வி. 

சிலருக்கு அவர்கள் எழுதிய பெயர்களை வாசிக்க வாய்ப்பளித்தாள். அவர்கள் வாசிக்க வாசிக்க குழுமியிருந்தவர்கள் “இந்தப் பெயர் சற்று வித்தியாசமாக இருக்கிறது. நான் இதுவரை கேட்டதேயில்லை” என்று சொல்லிக்கொண்டார்கள். அவர்கள் இதழோரம் புன்னகை தவழ்ந்தது. 

அடுத்து தமிழ்ச்செல்வி தோழிகளிடமும் தோழர்களிடமும் பத்து ஊர்ப்பெயர்களைச் சொல்லச் சொன்னாள். அவர்கள் கூறிய ஊர்ப்பெயர்கள் இதோ

கன்னியாகுமரி
திருநெல்வேலி 
தருமபுரி 
காஞ்சிபுரம் 
கோயம்புத்தூர் 
நாகர்கோவில்
ஏற்காடு 
ஆனைகட்டி 
கிருஷ்ணகிரி
திருச்சிராப்பள்ளி

“நண்பர்களே, இப்பெயர்களிலுள்ள சொற்களைப் பயன்படுத்தி பத்து ஊர்ப்பெயர்கள் எழுதுங்கள். ஆனால் அப்பெயர்கள் இப்பட்டியலில் இருக்கவும் கூடாது. ஆம். இருக்காது; ஆனால் இருக்கும்” என்றாள் தமிழ்ச்செல்வி. 

எல்லோரும் உற்சாகமாக எழுதத் தொடங்கினார்கள். 
நண்பர்களே நீங்களும் எழுதுங்கள்.

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

தமிழ்ச்செல்வியும் கலைச்செல்வியும் – 11

வழக்கம்போல் மதிய உணவு இடைவேளையில் தோழிகள் தமிழ்ச்செல்வியைத் தேடி வந்தார்கள். இன்று என்ன செயல்பாடு செய்யப்போகிறாள் என்பதையறிய ஆவலாக இருந்தார்கள். வந்தவர்களிடம் குறிப்பேடும் பேனாவும் இருந்தது. அதைக் கவனித்த தமிழ்ச்செல்வியின் இதழோரம் ஒரு புன்னகை விரிந்து மறைந்தது.  

நாம் சொல்லாமலே, நம் செயல்கள் செய்தியைக் கடத்துகின்றன. அது செயல்களின் வெற்றியைக் குறிக்கும் அறிகுறி என்று நினைத்துக்கொண்டாள். 

தமிழ்ச்செல்வி எழுந்தாள். தோழிகள் முன் நின்றாள். கலைச்செல்வி எழுந்தாள். கரும்பலகைக்கு அருகே சென்று நின்றாள். அவள் கையில் சுண்ணக்கட்டி இருந்தது. தொண்டையைச் சரிசெய்துகொண்டு தமிழ்ச்செல்வி பேசத்தொடங்கினாள். 

“நான் சாலையில் நடந்து கொண்டிருந்தேன். நேரம் மாலை நான்கு மணியிருக்கும். நல்ல வெயில். ஆனால் சட்டென அங்கிருந்தும் இங்கிருந்தும் மேகம் வந்தது. வானம் கறுத்தது. மின்னல் மின்னியது. இடி இடித்தது. சட்டென சோவென மழை கொட்டத்தொடங்கியது. நான் அருகில் கண்ட கடைத்திண்ணையில் ஒதுங்கினேன். 

மழை எப்போது விடும் என்று காத்திருந்தேன். கனமழை, ஒவ்வொரு துள்ளியும் உடம்பில் பட்டால் கல் வந்து விழுவது போலிருந்தது. அதனால் மழை ஓய்வதற்காக காத்திருந்தேன். ஐந்து நிமிடங்கள் ஆனது. பத்து நிமிடங்கள் ஆனது. அரை மணிநேரமும் ஆனது. மெல்ல மழை ஓய்ந்தது. வானம் தெளிந்தது. சட்டென வெயிலும் அடிக்கத் தொடங்கியது. நான் மெல்ல வெளியே வந்தேன். மீண்டும் மழை வருமா என்று தெரிந்துகொள்ள வானத்தைப் பார்த்தேன். அப்போதுதான் அந்த அதிசயத்தைக் கண்டேன். என்னைப் போலவே எல்லோரும் அந்த அதிசயத்தைப் பார்த்தார்கள். அது என்னவென்று தெரிந்துகொள்ள ஆசையா நீங்களே கண்டுபிடியுங்கள்.” என்றபடி கலைச்செல்வியைப் பார்த்தாள். அவள் கீழ்வரும் வாக்கியத்தை அமைதியாக எழுதினாள்.

தனம் வெயிலில் வாடி விழுந்தாள் 

தோழிகள் எல்லோரும் யோசனையில் ஆழ்ந்தார்கள். ஒருவரைப் பார்த்துக்கொண்டார்கள். நேரம் மெல்ல நகர்ந்தது. யாரும் குறிப்பேட்டைத் திறக்கவில்லை.

அதைக் கவனித்த தமிழ்ச்செல்வி “சரி, உங்களுக்கு நான் வேறோர் எடுத்துக்காட்டு சொல்கிறேன். அதிலிருந்து உங்களுக்கு இந்தச் செயல்பாட்டின் விதியை உருவாக்க முயற்சி செய்யுங்கள்” என்றபடி கீழ்வரும் நிகழ்ச்சியைக் கூறினாள். 

“நேரம் மாலை ஆறு மணி இருக்கும். நான் தெருவில் நடந்துகொண்டிருந்தேன். தெருவின் ஒரு பக்கம் மட்டும் வீடுகள் இருந்தன. மறுபக்கம் புதர் மண்டிக் கிடந்தது. நான் எதையோ நினைத்துக்கொண்டு நடந்துகொண்டிருந்தேன். அப்போது காய்ந்த சருகுகளை யாரோ மிதிப்பதுபோல் சத்தம் கேட்டது. நடப்பதை நிறுத்திவிட்டு நான் திரும்பிப் பார்த்தேன். யாரையும் காணவில்லை. நான் மீண்டும் நடக்கத் தொடங்கினேன். மீண்டும் காய்ந்த சருகுகள் சலசலக்கும் ஓசை கேட்டது. நான் சுற்றும் முற்றும் பார்த்தேன். யாரையும் காணவில்லை. மெல்ல மெல்ல எனக்குள் ஒரு பயம் உருவானது. நான் அசையாமல் நின்றேன். நான் பயந்ததுபோலவே நடந்தது. நான் ஏன் பயந்தேன் என்று தெரியுமா? நீங்களே கண்டுபிடியுங்கள்” என்றபடி கலைச்செல்வியைத் திரும்பிப் பார்த்தாள்.

கலைச்செல்வி கீழ்வரும் வாக்கியத்தை எழுதினாள். அவளுடைய முகத்திலும் ஒரு புன்சிரிப்பு விரிந்தது. 

பார்வதி படிக்கும் புத்தகம்

 மெல்ல குழந்தைகளுக்கு இந்த விளையாட்டின் விதி புரிந்தது. அவர்கள் குறிப்பேட்டைத் திறந்து விடையை எழுதிவிட்டு எழுந்து நின்றார்கள். தமிழ்ச்செல்வி அவர்களின் குறிப்பேட்டைப் பார்த்தாள். சிலரிடம் “பாராட்டுகள் நீங்கள் கண்டுபிடித்துவிட்டீர்கள்” என்றாள். சிலரிடம் “இல்லை. இது தவறு. மீண்டும் முயற்சி செய்யுங்கள்” என்றாள். 

நண்பர்களே, நீங்களும் விடைகளைக் கண்டுபிடியுங்கள். விதியை உருவாக்குங்கள். நீங்கள் உருவாக்கிய விதி சரியா என்றறிய அடுத்த பதிவுக்காக காத்திருங்கள்.
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

தமிழ்ச்செல்வியும் கலைச்செல்வியும் – 12

தனம் வெயிலில் வாடி விழுந்தாள் – வானவில் 
பார்வதி படிக்கும் புத்தகம் – பாம்பு  

என்றெழுதிய தோழியின் அருகே சென்றாள் தமிழ்ச்செல்வி. “நீங்கள் எழுதிய விடைகள் சரி. இருப்பினும் கண்டுபிடித்த முறையை எங்களுக்கு விளக்கிச் சொல்ல முடியுமா?” என்று கேட்டாள். 
“ஒவ்வொரு சொல்லிலிருந்தும் ஒவ்வொரு எழுத்தை எடுக்க வேண்டும். பிறகு அவற்றைப் பலவிதங்களில் அடுக்கிப் பார்க்க வேண்டும். அப்போது விடை கிடைக்கும்” என்றார் அவர்.

“எனக்கும் இதே விடைகள் கிடைத்திருக்கின்றன...” என்ற குரல் அங்கும் இங்கும் கேட்டன. “நல்லது. மேலும் சில எடுத்துக்காட்டுகள் தேவையா? இல்லை அடுத்த நிலைக்குப் போவதா?” என்று கேட்டாள். 

“மேலும் ஓர் எடுத்துக்காட்டு வேண்டும். விடை கிடைக்கும் வழியையும் விளக்கிச் சொல்ல வேண்டும்” என்றாள் சிறுமி ஒருவர். அதைக் கவனித்த தமிழ்ச்செல்வி “நிச்சயமாகச் சொல்கிறேன்” என்றபடி கீழ்வரும் நிகழ்ச்சியைக் கூறினாள். 

“நான் சென்னை மெரீனா கடற்கரையோரமாக நடந்துகொண்டிருந்தேன். மாலைநேரத் தென்றால் காற்று என் முகத்தை தழுவிச் சென்றது. கடல் நீரின் உப்புச்சுவையை என் நா உணர்ந்தது. கால் பாதங்களை நனைத்துச் சென்ற கடல்நீரின் குளர்ச்சி என் உடலெங்கும் பரவியது. கைகளை மார்போடு கட்டியபடி நான் நடந்துகொண்டிருந்தேன். சட்டென என் முன்னால் ஓர் உருவம் தோன்றியது. அதன் இடுப்புக்குக் கீழே மீனின் உருவம். இடுப்புக்கு மேல் அழகிய பெண்ணின் உருவம். ஆகா அழகான கடற்கன்னி. நான் அதன் அழகை வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தேன். சட்டென எங்கிருந்தோ வந்த காற்று பலமாக சுழன்று வீசியது. அவ்வளவுதான் அந்த உருவம் அப்படியே கரைந்து காணாமல் போனது. அப்படியானால் அந்த உருவம் எந்தப் பொருளால் செய்தது என்று கண்டுபிடிக்க வேண்டும். அதற்கான வாக்கியம் இதோ” என்று கீழ்வரும் வாக்கியத்தைக் கரும்பலகையில் எழுதினாள். 

குணம் மனிதனுக்கு நல்லது

உடனே சிலர் விடை தெரியும் என்பதன் அடையாளமாக கையை உயர்த்தினர். “இருங்கள் இருங்கள். அந்தச் சிறுமிக்கு வாய்ப்புக்கொடுப்போம்” என்று கூறிய தமிழ்ச்செல்வி சிறுமியை நோக்கி நடந்தாள். 

“உங்களுக்கு விடை கிடைத்ததா?” என்று கேட்டாள். 
“உறுதியாகத் தெரியவில்லை. நீங்கள் கடற்கரையில் நடந்துகொண்டிருந்தீர்கள் என்று கூறியதால் அக்கடற்கன்னியின் சிலையை மணலால் செய்திருப்பார்கள். பலமாக காற்று வீசியதால் சிலை உடைந்திருக்கும் என்று நினைக்கிறேன்” அச்சிறுமி தயக்கத்தோடு கூறினார்.  

“ஆகா… அருமை அருமை. பாராட்டுகள். அப்புறம் என்ன சந்தேகம்?” 

“மணல் என்ற விடையை இந்த வாக்கியத்திலிருந்து எப்படிக் கண்டுபிடிப்பது என்பதுதான் புரியவில்லை.” 
“ஓ... ஒவ்வொரு சொல்லிலிருந்தும் ஒவ்வோர் எழுத்தை எடுத்து மணல் உருவாக்க முடிந்தால் நீங்கள் நினைத்த விடை சரியென்று எடுத்துக்கொள்ளலாம். குணம் என்ற சொல்லிலிருந்து “ண” என்ற எழுத்து. மனிதனுக்கு என்பதிலிருந்து “ம”, நல்லது என்ற சொல்லிலிருந்து “ல்.” இம்மூன்று எழுத்துகளையும் அடுக்கி சொல்லுருவாக்க முயற்சித்தால் நமக்கு மணல் கிடைக்கிறதே. அப்படியானால் அதுதானே விடை” என்றபடி கரும்பலகை நோக்கிச் சென்றாள். 

“நான் இப்போது குறிப்புக்கான நிகழ்வுகளைச் சொல்லப்போவதில்லை. ஆனால் வாக்கியம் மட்டும் எழுதுவேன். ஒவ்வொரு சொல்லிலிருந்தும் ஒவ்வோர் எழுத்தை எடுத்து, அடுக்கி சொற்கள் உருவாக்க வேண்டும். நீங்கள் உருவாக்கிய சொல்லும் உங்கள் நண்பர்கள் உருவாக்கிய சொல்லும் ஒன்று தானா என்று பரிசோதியுங்கள். இதோ அந்த வாக்கியம்” என்றபடி கீழ்வரும் வாக்கியத்தைக் கரும்பலகையில் எழுதினாள். 

குரங்கின் கையில் குல்லா

நீங்களும் சொல்லுருவாக்குங்கள். உங்கள் நண்பர் உருவாக்கிய சொல்லுடன் ஒப்பிடுங்கள்.


🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹


தமிழ்ச்செல்வியும் கலைச்செல்வியும் – 13

“நான் இப்போது குறிப்புக்கான நிகழ்வுகளைச் சொல்லப்போவதில்லை. ஆனால் வாக்கியம் மட்டும் எழுதுவேன். ஒவ்வொரு சொல்லிலிருந்தும் ஒவ்வோர் எழுத்தை எடுத்து, அடுக்கி சொற்கள் உருவாக்க வேண்டும். நீங்கள் உருவாக்கிய சொல்லும் உங்கள் நண்பர்கள் உருவாக்கிய சொல்லும் ஒன்று தானா என்று பரிசோதியுங்கள். இதோ அந்த வாக்கியம்” என்றபடி கீழ்வரும் வாக்கியத்தைக் கரும்பலகையில் எழுதினாள்.
 
குரங்கின் கையில் குல்லா

நீங்களும் சொல்லுருவாக்குங்கள். உங்கள் நண்பர் உருவாக்கிய சொல்லுடன் ஒப்பிடுங்கள் என்று தமிழ்ச்செல்வி சொன்னதுமே சில நண்பர்கள் இதில் மறைந்திருக்கும் சொல்லைக் கண்டுபிடித்துவிட்டதின் அடையாளமாக கைகளை உயர்த்தினர். 

கலைச்செல்வியோ முன்பு சந்தேகம் கேட்ட அந்தச் சிறுமியைக் கவனித்துக்கொண்டிருந்தாள். சிறுமி இம்முறை குயில் என்று சரியாக எழுதியிருந்ததைப் பார்த்தாள். கலைச்செல்வி தமிழ்ச்செல்வியைப் பார்த்துப் புன்னகைத்தாள். தமிழ்ச்செல்வியும் பதிலுக்குப் புன்னகைத்தாள். 

ஒரு சிறுமி சந்தேகம் கேட்டபோது, கண்டுபிடிக்கும் வழியை விளக்கிச் சொன்னபோது, அடுத்துக் கொடுக்கும் புதிர் வாக்கியம் எளிமையாக இருக்க வேண்டும் என்று தமிழ்ச்செல்வி நினைத்திருக்கிறாள். அது அச்சிறுமிக்குத் தன்னம்பிக்கையைக் கொடுக்கும் என்று முடிவு செய்து இவ்வெளிய வாக்கியத்தை உருவாக்கியிருக்கிறாள் என்பதைக் கலைச்செல்வி புரிந்துகொண்டாள். அப்படி நான் புரிந்துகொண்டேன் என்பதைக் காட்டவே அவள் தமிழ்ச்செல்வியைப் பார்த்துப் புன்னகைத்தது. 

தமிழ்ச்செல்வி பதில் சொல்வதற்கான வாய்ப்பை அந்தச் சிறுமிக்கு வழங்கினாள். குயில் என்று அச்சிறுமி கூறியதும் தமிழ்ச்செல்வியும், கலைச்செல்வியும் கரவொலி எழுப்பிப் பாராட்டைத் தெரிவித்தார்கள். உடனே பிற தோழிகளும் கரவொலி எழுப்பினார்கள். 
“மணல் என்ற விடையைக் கண்டுபிடிக்க உதவும் ஒரு நிகழ்ச்சியைக் கூறியது நினைவிருக்கிறதா?” தமிழ்ச்செல்வி கேட்டாள். 

“ஆம்... கடற்கரையில் நடந்ததும், கடற்கன்னியின் சிலையைப் பார்த்ததும் எல்லாம் சொன்னாய்.” சிலர் கூறினார்கள். 

“ஆம். அதுபோல் குயில் என்பதை ஊகிப்பதற்கான ஒரு நிகழ்ச்சியை உங்களால் சொல்ல முடியுமா? அதுதான் உங்களுக்கான சவால். பத்து நிமிடங்கள் எடுத்துக்கொள்ளுங்கள்” என்று சிரித்தபடி கூறினாள் தமிழ்ச்செல்வி. 

பல்வேறுவிதமான நிகழ்ச்சிகளைக் கேட்க ஆவலாக இருந்தாள் கலைச்செல்வி.

வகுப்பில் இருந்தவர்கள் குயில் என்ற விடையை ஊகிப்பதற்கேற்ற ஒரு நிகழ்ச்சியை எப்படி உருவாக்குவது என்று யோசிக்கத் தொடங்கியிருந்தனர். வகுப்பு அமைதியானது. சிலர் தலையை உயர்த்தி விட்டத்தைப் பார்த்தார்கள். சிலர் பேனாவால் கன்னத்தைத் தட்டத் தொடங்கினார்கள். சிலர் இரண்டு கைகளிலும் முகத்தை வைத்துக்கொண்டு கீழே பார்த்தார்கள். 

நேரம் மெல்ல கரைந்தது. ஒரு நிமிடம், இரண்டு நிமிடம் என் மெல்ல நகர்ந்தது. அங்கங்கு ஓரிருவர் குறிப்பேட்டில் எழுதத் தொடங்கியிருந்தார்கள். அப்படி எழுதிக்கொண்டிருக்கும்போதே சிலரின் முகங்களில் புன்சிரிப்பு மலர்வதையும் கண்டாள். அப்படிச் சிரித்தவர்களிடம் நிகழ்ச்சியை வாசிக்கச் சொல்ல வேண்டும் என்று முடிவு செய்தாள் தமிழ்ச்செல்வி. 

அவர்கள் கூறிய நிகழ்ச்சி என்ன? 
அடுத்த பதிவில் பார்ப்போம்.

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹


தமிழ்ச்செல்வியும் கலைச்செல்வியும் – 14

குயில் என்பது சொல். இது மூன்று எழுத்துச் சொல். எனவே மூன்று சொற்கள் கொண்ட வாக்கியம் உருவாக்க வேண்டும். ஒவ்வொரு சொல்லில் இருந்தும் ஒவ்வோர் எழுத்தை எடுத்து இணைத்தால் குயில் என்பது கிடைக்க வேண்டும் என்று தமிழ்ச்செல்வி கூறியதும் தோழிகள் வாக்கியங்கள் எழுதினார்கள்.
 
“குரங்கு கையில் குல்லா” என்பது ஓர் எடுத்துக்காட்டு.
 
தோழிகளுள் சிலர் வாக்கியங்களை வாசிக்க அனைவரும் ஆர்வத்தோடு அவற்றைக் கவனித்தார்கள். 
“சரி. இனி குயில் என்பதை ஊகிப்பதற்கான நிகழ்ச்சியை எழுத வேண்டும். மணல் என்ற சொல்லை ஊகிக்க கூறிய நிகழ்ச்சி நினைவிருக்கறதா?
மாலை வேளையில் கடற்கரையில் நடந்ததும். கண்முன்னே ஓர் அழகிய கடற்கன்னியின் உருவம் தெரிந்ததும் காற்றடித்ததும் அது கலைந்து போனதும் உங்கள் நினைவில் இருக்கும் என்று நம்புகிறேன். நான் அந்த நிகழ்ச்சியைக் கூறிவிட்டு காற்றடித்தும் அந்த உருவம் கலைந்துபோனால் அந்த உருவத்தை எந்தப் பொருளால் செய்திருப்பார்கள் என்ற கேள்வியையும் நான் கேட்டேன். அதுபோல் நீங்களும் குயில் விடையாக வரும் ஒரு நிகழ்ச்சியை ஊகிக்க வேண்டும். அதை விளக்கமாக எழுத வேண்டும். இறுதியில் ஒரு கேள்வியும் இருக்க வேண்டும்” என்றாள் தமிழ்ச்செல்வி. 

உடனே கூட்டத்தில் சிறு சலசலப்பு ஏற்பட்டது. தோழிகள் என்ன செய்கிறார்கள் என்பதைப் பார்ப்பதற்காக தமிழ்ச்செல்வி அவர்களின் அருகே சென்றாள். எல்லோரும் நிகழ்ச்சியை விரிவாக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தார்கள். 

ஓ... நீங்கள் மிகச் சுருக்கமாக எழுதியிருந்தீர்களா... நான் விளக்கமாகக் கூறினேன். என்றதும் நிகழ்ச்சியை விரிவாக்கி எழுதுகிறீர்கள். நல்லது நல்லது மேலும் உங்களுக்குச் சற்று நேரம் தேவைப்படலாம். எடுத்துக்கொள்ளுங்கள் என்றாள் சிரித்தபடி.  

ஐந்து நிமிடங்கள் கடந்திருக்கும். அங்கங்கு சிலர் தலையை உயர்த்தித் தமிழ்ச்செல்வியைப் பார்த்தார்கள். ஆகா எழுதி முடித்துவிட்டீர்களா எங்கே நீங்கள் கற்பனை செய்த நிகழ்ச்சியை வாசியுங்கள். கேட்க ஆவலாக இருக்கிறேன் என்று உற்சாகமூட்டினாள். ஒரு தோழி வாசித்த நிகழ்ச்சி இதோ:

“கோழி கூவியது. கதிரவன் உறக்கம் கலைந்து கண்விழித்தான். கிழக்கு வெளுத்தது. காலை நேரம் ஆனது. பச்சைமலைக் காடும் உறக்கத்திலிருந்து விழித்தது. காகம் கரைந்தது. மயில் ஆடியது. முயல் தாவியது. குரங்கு ஊஞ்சல் ஆடியது. கோழிகள் இரைதேடப்புறப்பட்டன. தவளைக் குளத்தில் குதித்தது. எங்கும் மகிழ்ச்சி. 
அப்போது ஒருவர் கூவினார். வருத்தத்தோடு கூவினார். அவர் குரலில் அப்படியொரு சோகம். அவர் கூவியதைக் கேட்டால் நமக்கும் கவலை வரும். அப்படி கவலையோடு கூவியது யார்? அதற்கான விடை குரங்கு கையில் குல்லா என்ற வாக்கியத்தில் இருக்கிறது” என்று வாசித்து முடித்தாள். 

தமிழ்ச்செல்வியும் கலைச்செல்வியும் தங்களையறியாமல் கரவொலி எழுப்பினார்கள். 

நண்பர்களே, உங்களுக்கு ஒரு வேலை. 
குரங்கு என்ற சொல்லைக் கண்டுபிடிப்பதற்கேற்ற ஒரு வாக்கியத்தை உருவாக்குங்கள். கூடவே ஒரு நிகழ்ச்சியையும் கற்பனை செய்து எழுதுங்கள். உங்கள் நண்பர்களுக்குக் காட்டுங்கள். அவர்களால் கண்டுபிடிக்க முடிகிறதா என்று பரிசோதியுங்கள்.

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

தமிழ்ச்செல்வியும் கலைச்செல்வியும் – 15

கலைவாணி எல்லோரையும் பார்த்தாள். தொண்டையைச் செருமினாள். பிறகு பேசத் தொடங்கினாள். தமிழ்ச்செல்வி ஒரு குறிப்பேட்டுடன் வகுப்பின் பின்னால் அமர்ந்திருந்தாள். 

"செந்தில் ஐந்தாம் வகுப்பில் படிக்கும் மாணவன். அவன் நாளும் பள்ளிக்கூடத்திற்குப் பேருந்தில் வந்து போவது வழக்கம். பள்ளி விட்ட பின் சற்று நேரம் கழிந்துதான் பேருந்து வரும். அந்த இடைவெளியில் நண்பர்களுடன் சேர்ந்து விளையாடுவது அவனுக்கு மிகவும் பிடிக்கும். 
செந்திலுக்கு எப்போதும் தமிழ்ப்பாடத்தில்தான் அதிக மதிப்பெண் கிடைக்கும். மொழிப்பாட வகுப்பு என்றால் அவனுக்குக் கொள்ளை இன்பம் தேன் குடிப்பது போல. 
தமிழ் மொழியின் பழமையும் வளமையும் நினைத்து வியந்து போவான். தமிழ் மொழியிலுள்ள சில சொற்களைப் போல அழகான சொற்கள் வேறு எந்த மொழியிலும் இருக்கவே இருக்காது என்பான்.

நண்பர்களுடன் ஓடியாடி விளையாடுவதை விட சொல் விளையாட்டுகள், அந்தாதி விளையாட்டுகள், விடுகதைகள் உருவாக்கி் விளையாடுதல் போன்றவைதான் அவனுக்கு மிகவும் பிடித்தமான விளையாட்டுகள். 

நிறைய புத்தகங்கள் வாசிப்பதாலும் வாராவாரம் வரும் சிறுவர் இதழ்களைத் தொடர்ந்து வாசிப்பதாலும் செந்திலின் சொல்லாற்றல் வளர்ந்திருந்தது. வகுப்பில் நண்பர்கள் ன, ண வரும் சொற்களைத் தவறான உச்சரிப்புடன் வாசித்தால் அவர்களின் உச்சரிப்பைத் திருத்துவதற்காக அவனே அழகான வாக்கியங்கள் உருவாக்குவான். அவ்வாக்கியத்தை நண்பர்களிடம் கூறும்படி சொல்லுவான். 

"பனியில் பணி செய்யும் மனிதன்தான் மணி" என்ற வாக்கியம் இதற்கு ஓர் எடுத்துக்காட்டு. அதுபோல் சொற்களைப் புதுமையான முறையில் பயன்படுத்தி நண்பர்களுடன் பேசுவதும் அவனுக்குப் பிடித்தமான பொழுது போக்கும். "நான் கடலை தின்றபடி கடலைப் பார்த்துக்கொண்டிருந்தேன்" என்ற வாக்கியம் ஓர் எடுத்துக்காட்டு. 

ஒரு நாள் நண்பர்களின் கட்டாயத்திற்கு வழங்கி ஓடியாடி விளையாட ஒப்புக்கொண்டான். தொட்டு விளையாட்டு. ஓடிச்செல்லும் ஒருவரை விரட்டித் தொட வேண்டும். செந்தில் ஓடினான். வேகமாக ஓடினான். சட்டென்று கால்விரல் வலித்தது. "ஆ அம்மா" என்று அலறியபடி ஓட்டத்தை நிறுத்திய செந்தில் காலைப் பார்த்தான். ஒரு விரலிலிருந்து ரத்தம் வழிந்துகொண்டிருந்தது.

நண்பர்கள் அவனை அழைத்துக்கொண்டு பக்கத்திலுள்ள மருத்துவமனைக்குக் சென்றார்கள். மருத்துவரும் கால் விரலில் பட்ட காயத்தைத் துடைத்துக் கட்டியபடியே செந்திலிடம் பேச்சுக் கொடுத்தார். 

"காலில் எப்படி காயம் ஆனது? உன் ஊர் எங்கே?" என்னும் இரண்டு கேள்விகளைக் கேட்டார். 

கால் வலிக்கும்போது செந்திலின் திமிழார்வம் குறையவில்லை. அவ்விரண்டு கேள்விகளுக்கும் செந்தில் பதில் சொன்னான். அதுவும் ஒரேயொரு சொல். அந்த சொல்லில் இரண்டு கேள்விகளுக்குமான பதில் இருந்தது. 

செந்தில் சொன்ன பதில் என்ன? 

என்றபடி கலைச்செல்வி பேச்சை நிறுத்தினாள். அவள் முன்நெற்றியில் வேர்வை முத்துகள் தோன்றியிருந்தன. அவள் தமிழ்ச்செல்வியைப் பார்த்தாள். எப்படி நான் பேசியது என்று கண்ணால் கேட்டாள். தமிழ்ச்செல்வி கட்டை விரலை உயர்த்தி நன்றாகப் பேசியிருப்பதாகச் சொன்னாள். அப்போதுதான் கலைச்செல்வியின் முகத்தில் மகிழ்ச்சி தோன்றியது. 

காலில் காயம் பட்டது எப்படி? உன் ஊர் எங்கே? என்னும் இரண்டும் கேள்விக்கும் செந்தில் ஒரே சொல்லில் பதில் சொன்னான். அந்தச் சொல் என்னவாக இருக்கும்? 
யோசியுங்கள். அடுத்த பதிவுக்காக காத்திருங்கள்.

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹


தமிழ்ச்செல்வியும் கலைச்செல்வியும் – 16

காலில் காயம் பட்டது எப்படி? 
உன் ஊர் எங்கே? 

ஆகிய இரண்டு கேள்விக்கும் செந்தில் ஒரே சொல்லில் பதில் சொன்னான். அந்தப் பதில் என்னவாக இருக்கும் என்று கலைச்செல்வி கேட்டதும் வகுப்பு ஒரு நிமிடம் அமைதியானது. 

எல்லோரும் ஆழ்ந்து யோசிப்பது தெரிந்தது. ஒருமுறை கூட கேள்வியை விளக்கிச் சொல்ல வேண்டும் என்று நினைத்தவள் எல்லோரும் யோசிப்பதைப் பார்த்து அந்த எண்ணத்தை மாற்றிக்கொண்டாள். 

இரண்டு நிமிடத்திற்குள் கூட்டத்திலிருந்து ஒரு மாணவர் "செங்கல்பட்டு" என்று உரக்கக் கூவினார். 
அவர் பதில் கூறியதும் எல்லோரும் தலையைத் திருப்பி அவரைப் பார்த்தார்கள். ஒரு நொடிக்குள் எல்லோரும் கரவொலி எழுப்பிப் பாராட்டினார்கள். 

எல்லோரும் கரவொலி எழுப்பியதைப் பார்த்த கலைச்செல்வி மாணவர் கூறிய பதிலின் பொருள் எல்லோருக்கும் புரிந்துவிட்டது. இனி அதன் விளக்கம் கேட்கத் தேவையி்ல்லை என்று முடிவு செய்தாள். கலைச்செல்வியும் கரவொலி எழுப்பிப் பாராட்டினாள். 
"நல்லது. சரியாகக் கண்டுபிடித்துவிட்டீர்கள். இது போன்ற வேறொரு நிகழ்வைச் சொல்லட்டுமா?" என்று கேட்டாள். எல்லோரும் மகிழ்ச்சியோடு கண்கள் விரிய "சொல்லுங்கள்... சொல்லுங்கள்" என்று குரலெழுப்பினார்கள்.  

தன்னால் ஒரு செயல்பாட்டை வெற்றிகரமாக நடத்த முடியுமா என்று முதலில் சந்தேகப்பட்டது பறந்தே விட்டது. அவள் உற்சாகத்தோடு பேசத் தொடங்கினாள். அவளுடைய உற்சாகத்தைப் பார்த்த தமிழ்ச்செல்வி தன் குறிப்பேட்டில் "ஓர் ஆசிரியர் உதயமாகிறார்" என்று எழுதி ஒரு சரியடையாளம் இட்டாள். குறிப்பேட்டை மூடி வைத்துவிட்டு கலைச்செல்வியைப் பார்க்கத் தொடங்கினாள். 

கலைச்செல்வி பேசத்தொடங்கினாள். 

"மஞ்சு கடைவீதிக்கு வந்திருந்தாள். அவள் ஒரேயொரு பொருளை வாங்குவதற்காகத்தான் வந்திருந்தாள். கடைவீதிகளைப் பார்த்துக்கொண்டே வந்தவள் ஒரு குறிப்பிட்ட கடையில் ஏறினாள். தேவையான பொருளை வாங்கினாள். கடையைவிட்டு வெளியே வந்தவளின் கையை யாரோ ஒருவர் பிடித்து இழுத்து நிறுத்தினார். மஞ்சு ஆச்சரியத்தோடு திரும்பிப் பார்த்தாள். "ஹாய் லிவ்யா... நீயா? எப்படி இருக்கிறாய்? உன்னைப் பார்த்து எத்தனை நாட்களாயிற்று" என்று கேள்விகளை அடுக்கினாள். அப்புறம் என்ன? பேசினார்கள் பேசினார்கள். பேசிக்கொண்டே இருந்தார்கள். கடை வாசலின் ஓர் ஓரத்தில் நின்றபடி பேசினார்கள். வருவோர் போவோர் எல்லாம் அவர்களைப் பார்த்தார்கள். ஆனால் தோழிகள் இருவரும் ஒருவரையும் பார்க்கவில்லை. 

"சரி மஞ்சு அடுத்தவாரம் இதே நாளில் இதே நேரத்தில் இதே கடைக்கு வா. நானும் வருகிறேன். பேசுவோம்" என்றபடி லிவ்யா கைகளை அசைத்து மஞ்சுவிடமிருந்து விடைபெற்றாள். 

"ஐயோ, அம்மா தேடுவார்களே" என்று நினைத்த மஞ்சு ஓட்டமும் நடையுமாக வீட்டை வந்தடைந்தாள். அம்மா வாசலில் மஞ்சுவின் வருகையை எதிர்பார்த்துக் காத்திருந்தாள். 

கையில் என்ன? நேரம் எத்தனை? என்னும் இரண்டு கேள்விகளைக் கேட்டாள். மஞ்சு அந்த இரண்டு கேள்விகளுக்கும் ஒரே பதில் சொன்னாள். அந்த பதில் என்னவாக இருக்கும்? யோசியுங்கள். உங்கள் பதில் சரியாவென்றறிய காத்திருங்கள்.

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹