இயற்கை உணவின் இனிய பயன்கள் !!!
இயற்கை உணவின் இனிய பயன்களைச் சொல்லிக்கொண்டே போகலாம். அவ்வளவு உள்ளது. இயற்கை உணவில் நம்பிக்கை இல்லாதவர்களுக்கு, சமையல் உணவுக்கு அடிமையானவர்களுக்கு, இயற்கை உணவின் அளப்பரிய இனிய பயன்கள் புரியாது. ஓரளவாவது இயற்கை உணவில் வாழ்ந்தவர்களுக்கு இந்தப் பேருண்மை ஓரளவுக்குப் புரியும்.
தனி மனிதர் நலமும், பொதுநலமும் இயற்கை உணவில் இணைந்து கிடைக்கிறது. மனிதருக்கு நோய், நொடிகள் இல்லை. நோய் ஒன்றே, வழியும் ஒன்றே; அதுதான் இயற்கை உணவு வழி. நோய்கள் பலப்பல அல்ல. எந்த மருத்துவத்திலும் குணம் கிடைக்காத எல்லா வகையான நோய்களும், ஒட்டுமொத்தமாக இயற்கை உணவுக்கு மாறுவதன் மூலம் – சமையல் உணவைத் துறப்பதன் மூலம் மறைந்து குணம் பெற்று, உடலும் உள்ளமும் ஆரோக்கிய-ஆனந்த-ஆன்மிக-சிக்கன நிலை பெறுகிறது.
இயற்கை உணவில் வாழும்போது, பண்ட பாத்திரங்கள் தேவை இல்லை. மனிதனது புத்தி கூர்மைபெற்று, அறிவு ஓங்கி, நல்ல சாத்விக முடிவு எடுக்க முடிகிறது.
பெண்கள், சமையல் தொழிலிருந்து விடுதலை பெறுகின்றனர். குடும்பத்தை கவனிக்கவும், பொதுநலத் தொண்டுகளில் ஈடுபடவும், போதுமான கால அவகாசம் கிடைக்கின்றது.
அறுகுணம் (காமம், குரோதம், மோகம், லோகம், சினம், மாச்சரியம்) சீரமைகின்றது. இதனால், உலகில் நல் விளைவுகள்தான் நிகழும். தீய விளைவுகள் ஏற்படாது.
உணவை சமைக்கும்போது உற்பத்தியாகும் கார்பன்-டை-ஆக்ஸைடு, காற்று மண்டலத்தில் கலக்க வாய்ப்பில்லை. மேலும், சமையல் உணவு உயிரற்ற உணவு. உயிரற்ற சமையல் உணவில் முழுவதும் நாம் வாழும்போது, நமது உடலையும் உயிரற்றதாக ஆகிறது. இயற்கை உணவு உயிருள்ள உணவு. உயிருள்ள இயற்கை உணவில் குறைந்தபட்சம் பெரும்பாலும் வாழும்போது, நமது உடலுக்கும் உயிரை ஊட்டுகின்றது.
இயற்கை உணவில் வாழும்போது, வெட்டுக் காயங்கள் மற்றும் புண்களில் சீழ் வைப்பதில்லை. வலி ஏற்படுவதில்லை. மேலும் எவ்வித மருந்தும் அவசியமில்லாது, மருந்தைவிட இயற்கை உணவு அதிகபட்சம் குணப்படுத்துகின்றது.
உலகில் சண்டை சச்சரவுகள் குறைந்து, இல்லாது போகும். ஒற்றுமை வளரும். குழந்தைப்பேறு இல்லாதவர்களும் இயற்கை உணவுக்கு மாறுவதன் மூலம் குழந்தைப்பேறு கிடைக்கிறது. சாக்கடை உற்பத்தி இல்லை. சமையலுக்கான விறகு, காஸ் போன்ற எரிபொருட்கள் தேவையில்லை. தண்ணீர் தேவை மிக மிகக் குறைவு. உணவின் அளவும் தேவையும் மிகக் குறைவு. உண்டி சுருங்கி, உபாயம் பல ஏற்படுகின்றது.
தேங்காயும் பழங்களுமே மனிதனின் தலையாய ஒப்பற்ற உணவு. இயற்கை உணவு வாழ்வில் என்றும் இன்பமே. துன்பமில்லை. என்றும் இளமையாக வலுவாக வாழ வழிவகுக்கிறது அது. உண்மையான இறை பக்தியை வளர்க்கிறது. மூட நம்பிக்கைகள் மறைந்துபோகின்றன. எளிமை ஓங்கும். ஆடம்பரம் மறையும். பகட்டான வாழ்வு பறந்துபோகும். இயற்கை உணவில் வாழும்போது, நமது உடல் பனை மரக் கட்டைபோல் வைரமாகி, உடல் உறுதி பெறுகின்றது. சமையல் உணவில் வாழும்போது நமது உடல் பனை மர சோற்றுக் கட்டை போன்று உறுதியற்றதாகின்றது.
உணவே மருந்து, மருந்தே உணவு. படுக்கைக் காபி, படுக்கையில் தள்ளும். நீரை உண். உணவைக் குடி. வேகாப் பண்டம் வைட்டமின் நிறைந்தது. கண்ட மருந்து காலனுக்கு விருந்து. இளநீர் இனிய நீர். பதப்படுத்திய உணவு, பயனற்ற உணவு. வாழ உண்போம்; உண்ண வாழுவோம். உயிரை ஓம்ப உடலை ஓம்புக. கனிகள், பிணிகளைப் போக்கும். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். சமைக்காத உணவு, சத்துள்ள உணவு. நமக்கு நாமே சிறந்த மருத்துவர். உண்ணாநோன்பே உயரிய மருந்து. பச்சை உணவு பாதுகாக்கும் உணவு. மருந்துகளை மறந்து வாழ்வோம். மாத்திரை, இறுதி யாத்திரைக்கு வழி காட்டும்.
இயற்கை உணவு காதலை வளர்க்கும். சமையல் உணவு காமத்தை மட்டுமே வளர்க்கும். இயற்கை உணவின் விளைவு, மெய்ஞான வளர்ச்சி. மெய்ஞான வளர்ச்சி ஆக்க வளர்ச்சி. சமையல் உணவின் விளைவு, விஞ்ஞான வளர்ச்சி. விஞ்ஞான வளர்ச்சி அழிவு வளர்ச்சி. பசியோடு உண்ண உட்காருங்கள். பசியோடு உண்டு எழுந்திருங்கள். இயற்கை வாழ்வே இறை வாழ்வு. பழம் பலம் தரும். சோறு சோர்வு தரும்.
சமையல் உணவில் உடல், உள்ளம் அழிவு வளர்ச்சி பெறுகின்றது. இயற்கை உணவில் உடல், உள்ளம் ஆக்க வளர்ச்சி பெறுகின்றன. இயற்கையே இறைவன். இயற்கையை ஓம்புதலே இறைவழிபாடு. மருத்துவ உலகம், உடலுறுப்புகளை சீர்கேடு அடையச் செய்து, இறப்பை ஏற்படுத்துகின்றது. இயற்கை உணவு, முதுமையில் இளமையைத் தருகின்றது. சமையல் உணவு, இளமையில் முதுமையைத் தருகின்றது.
‘பல மனிதர்கள் நோய்களால் மடிவதில்லை; தாம் உண்ட மருந்துகளால்தான் மடிகிறார்கள்’ – இது, ஜப்பான் நாட்டுப் பழமொழி.
மனிதரை நோயாளியாக ஆக்குவதும், இறப்பை விரைவில் வரவழைப்பதும் தவறான சமைத்த உணவுதான். நோயிலிருந்து விடுவிப்பதும், இறப்பை தள்ளிப்போடுவதும் சரியான இயற்கை உணவுதான். எத்தகைய மருத்துவமோ, மருந்தோ அன்று!
‘உண்ணும் உணவுகளெல்லாம்
இயற்கை உணவுகளாகட்டும்
கேட்கும் ஒலிகளெல்லாம்
இயற்கை ஒலிகளாகட்டும்
தோயும் ஒளிகளெல்லாம்
இயற்கை ஒளிகளாகட்டும்
காணும் காட்சிகளெல்லாம்
இயற்கை காட்சிகளாகட்டும்
வாழும் வாழ்வுகளெல்லாம்
இயற்கை வாழ்வுகளாகட்டும்’!
‘பஞ்சபூத நிறை சுகத்தால்
பசித்தபோது பழந் தேங்காய்
கொஞ்சுங் காற்று வெளியிலே
கொட்ட வேர்வை வேலை செயல்
நெஞ்சு நிரம்ப மூச்சிழுத்தல்
நீரிலாடித் தியானித்தல்
நஞ்சு நீங்கப் பட்டினியால்
நல்லியற்கை வாழ்வோமே’
என்கிறார் யோகி சுத்தானந்த பாரதி. எனவே, உலகில் பழ உணவு உண்போர் சமுதாயம் பெருக உறுதுணையாக இருப்போம். உலகில் தரிசு நிலங்களில் எல்லாம், மற்றும் இதர விளை நிலங்களில் எல்லாம் பழமுதிர்ச் சோலைகள் உருவாகப் பாடுபடுவோம். உலகில் செயற்கை வாழ்வு நீங்கி, இயற்கை வாழ்வு மிளிரச் செய்வோம். இப்பூவுலகை சொர்க்கபூமியாக மாற்றுவோம். இயற்கை வாழ்வியல் இலக்கம் உலகெலாம் தோன்றி, பல்கிப் பெருகட்டும்.
வளர்வோம் இயற்கை உணவில்!
வாழ்வோம் இயற்கை வாழ்வில்!!
அடைவோம் மரணமிலாப் பெருவாழ்வை!!!
No comments:
Post a Comment