Wednesday, 16 November 2016

கீழ்வரும் வாக்கியங்களைக் கவனியுங்கள்.

கீழ்வரும் வாக்கியங்களைக் கவனியுங்கள்.
பல் இல்லாப் பல்லி என் இல்லத்தில் இல்லவே இல்லை.
கள்ளமில்லா வெள்ளையுள்ளம்கொண்ட வள்ளி வெள்ளிக்கொலுசணிந்து வெள்ளிக்கிழமை பள்ளிக்கு வந்தாள்.
வியாழக்கிழமை ஏழைக்கிழவன் வழுவழுப்பான வாழைப்பழத்தோல் வழுக்கிக் கீழே விழுந்தான்.
முதல் வாக்கியத்தில் ல என்ற எழுத்து 11 முறை வந்துள்ளது
இரண்டாவது வாக்கியத்தில் ள என்ற எழுத்து 15 முறை வந்துள்ளது.
மூன்றாவது வாக்கியத்தில் ழ என்ற எழுத்து 11 முறை வந்துள்ளது.
உரத்த குரல் கேட்டு விரைந்தங்கு காணின், வலக்கரத்தின் இரு விரல்கள், உதிரம் உதிர்த்து உரல் இடுக்கில்.

பார் அங்கே பார் சிறியதொரு பறவை ஒன்று பறக்கிறது. அதற்கு இரை வேண்டும். இறக்கைகளுடன் படைத்த இறைவன் அவற்றிக்கு இரையையும் படைத்திருக்கிறான். மரம் அதன் இல்லம். சிரமமில்லாமல் வாழ்க்கையில்லை என்பதை அந்தச் சிறிய பறவை சிறப்பாய் சொல்லிவிட்டு சிட்டெனப் பறந்துவிட்டது.

No comments:

Post a Comment