செயற்கை OXYGEN மழை பற்றிய ஒரு விளக்கம்.
*******************************************
இயல்பாக வானத்தில் மேக துகள்கள் எப்போதும் உள்ளன. அவை 16 micron அளவில் உள்ளவை . இவை . கண்ணுக்கு தெரியாது. இது எப்போது 300 micron அளவை அடைகிறதோ அப்போது சாரல் மழையாக பொழியும். 500 எனில் நல்ல கன மழை, 1000 தாண்டிவிட்டால் மேகவெடிப்பு நிகழும்.
இந்த மேகங்கள் மழையாக மாற கடற்காற்று உள்ளே வர வேண்டும். அதே சமயம் rain gravity எனப்படும் மேகத்தை மழையாக மாற்றக்கூடிய வெப்பநிலையும் சரியாக அமைய வேண்டும். எனவே மழை பெய்ய மேகத்துகள்கள் , கடற்காற்று , வெப்பநிலை மூன்றும் சரியான விகிதத்தில் இருக்க வேண்டும். வெப்பநிலை அதிகமானால் மழை குறையும். குளிர்ச்சியான பகுதியில் அதிக மழை பொழியும்.
இந்த குளிர்ச்சிக்கு முக்கிய பங்கு மரங்கள் வெளியிடும் oxygen. இந்த oxygen அளவை செயற்கையாக அதிகப்படுத்தினால் குளிர்ச்சியை அதிகமாக்கலாம். இது மேக துகள்களின் அளவை (micron ) அதிகமாக்கி நாம் வேண்டிய இடத்தில / தேவையான அளவு மழையாக பொழிய வைக்கலாம். இதில் humidity - ஈரப்பதமும் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இதைப்போல காற்றில் கலக்கும் carbon அளவும் இதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
இதில் பூமியில் இருந்து மேல் நோக்கி செல்லும் வெப்ப அலைகள் rain gravity ஐ பாதித்து மேலே உள்ள மேக கூட்டங்களின் தன்மையை மாற்றுகின்றன. இதுவும் மழை பொழிவதற்கு மிக முக்கிய காரணமாய் அமைகின்றது. அதேபோல் அதிக மழை பெய்யும்போது அதை நிறுத்தவும் முடியும்.
இவைகளை செயல்படுத்த சில கருவிகளை கொண்டுகொண்டு வெப்பத்தை குறைத்தும், oxygen அளவை கூட்டியும், மேலே செல்லும் வெப்ப அலைகளின் அளவை மாற்றியும் மேக துகள்களை மழையாக மாற்ற செய்வதே இந்த தொழில் நுட்பம். இதில் எந்த ரசாயனமும் பயன்படுத்துவது இல்லை.
தமிழ்நாட்டில் 5 இடங்களில் வான் நீரோட்டங்கள் செல்கின்றன. அதைப்போல தமிழ்நாட்டில் கடற்காற்று அதிகம் நுழையும் முக்கிய பாதைகள் 5 உள்ளன. இதில் ராமேஸ்வரம் வழி நுழைந்து கொடைக்கானலை மோதும் வான் நீரோட்ட பாதை அதிக மழையை நமக்கு தரும். இதை போல் மேலும் 4 வான் நீரோட்ட பாதைகள் உள்ளன. இவைகள் மிக விரிவான விஷயங்கள். இப்போது இது போதும்.
இவ்வாறு வான் நீரோட்டங்கள் செல்லும் பாதைகளையும் , கடற்காற்று உள்ளே நுழையும் பாதைகளையும் அடிப்படையாக கொண்டு இதன் போக்கில் OXYGEN அளவை செயற்கையாக அதிகப்படுத்தி அதை மழையாக பெய்ய வைக்கும் நுட்பமே செயற்கை OXYGEN மழை .
இந்த நீரோட்ட பாதைகள் மூலமாக தமிழ்நாட்டில் நமக்கு வேண்டிய இடத்தில, வேண்டிய அளவு, வேண்டிய நேரம் வரை தேவையான மழை பெய்ய வைக்கலாம்.
மேலும் இந்த மழை நீரில் OXYGEN அளவு அதிகம் இருப்பதால் இது நன்மையே செய்யும் என JAYAKRISHNA அவர்கள் கூறினார்கள்.
இதை பற்றி எனக்கு மேற்கண்ட விவரங்களை தெரிவித்த Jayakrishna Krishna ஐயா அவர்களுக்கு மிக்க நன்றிகள்.
இது பற்றி தெரிந்து கொள்ள தூண்டுதல் அளித்த Rajendran Kumaresan ஐயா அவர்களுக்கும் மிக்க நன்றிகள்.
JAYAKRISHNA ஐயா அவர்களை இந்த வாரம் நேரில் சந்தித்து ஒரு முழு வீடியோ எடுத்து விரைவில் வெளியிட இருக்கிறோம். அதில் இன்னும் மேலும் பல்வேறு விவரங்களை தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment