சித்த மருந்துவம் மூலிகைகள் சுத்தி முறைகள் :--
சித்த மருத்துவ மருந்துகள் தாவர வர்க்கங்கள், தாது வர்க்கங்கள், சீவ வர்க்கங்கள் என்று என்று மூன்று பிரிவுகள் உள்ளது அவற்றைப் பற்றிய விபரங்கள் அவை கிடைக்கும் சூழ்நிலைகள் அதன் பாதிப்புகள் என்று பாகு படுத்திப் பார்க்க வேண்டும். மனிதனின் முதல் மருந்தாக தெரிந்து கொண்டது தாவரவர்க்கங்கள் தான் .
மனிதர்கள் ஆதி காலங்களில் நோய்கள் ஏற்படும் காலங்களில், அக் கோளாறுகளை நிவர்த்தி செய்ய – மிருகம், பறவைகளின் சில இயற்கை நடத்தைகளைப் பின் பற்றி விசய தத்துவங்களை உணர்ந்து கொண்டனர்.
ஒவ்வொரு மருந்திலும் அதனதன் தன்மைக்கேற்ப நல்ல, தீய என்று இரண்டுவிதக் குணங்கள் உண்டு. இதனால் நற்செயளுக்குப் பதில் தீச்செயல்கள் நோயை தீர்ப்பதற்குப் பதில் அதை அதிகரிக்கச் செய்யும் மற்றும் பின் விளைவுகளும் ஏற்பட வாய்ப்புண்டு. எனவே தூய்மைப்படுத்தி உபயோகிக்க வேண்டும் இனி அது பற்றிப் பார்ப்போம்.
திரவவகைகள், பால்வகைகள், நெய்வகைகள், தாவரவகைகள், கடைச்சரக்குகள், உப்புக்கள், உலோகங்கள், உபரசங்கள், பாடனங்கள் என பலவகைப்படும்.
திரவவகைகள் :-- பனிநீர் இவற்றை சேகரிப்பதற்கு மெல்லிய வெள்ளை பருத்தித் துணியை அதில் உள்ள கஞ்சி பாடம் நீங்க துவைத்து வெய்யிலில் உலர்த்தி எடுத்துக் கொள்ளவும். அதை நெல் பயிர், அருகம்புல் போன்ற செடியில் இரவில் பனிகாலத்தில் விரித்து சூரிய உதயத்திற்கு முன் எடுத்து சுத்தமான பாத்திரத்தில் பிழிந்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
ஆலங்கட்டியை– இது மழைக் காலத்தில் விழும் பனிக்கட்டி – இதை சிறிது கறி மஞ்சள் தூள் கூட்டி பீங்கானில் விட்டு எழு நாளைக்கு வெய்யிலில் வைத்து பின் துணியில் வடிகட்டவும்.
சுத்தநீர் ஆற்றுநீரை– ஏழு முறை ஏழாக மடித்த முரட்டுத் துணியில் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
சுட்டு நீரை -- கறுப்புத் துணியில் மூன்று முறை வடிகட்டவும்.
அரிசிக் கழுநீரை– அரிசியை இரண்டாவது கழுவி எடுத்துக் கொண்டு அதை மூன்று மணி நேரம் ஒரு இடத்தில் வைத்து தெளிவை எடுத்துக் கொள்ளவும்.
காடிநீர்– காடி நீர் உள்ள பானையை அதன் வாயை மூடி கடும் வெய்யிலில் மூன்று தினம் வைத்த பின் வண்டலை நீக்கி வடிக்கவும்.
இளநீரை– வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
கோநீரை– பசு மூத்திரத்தை புதுச் சட்டியில் ஊற்றி பத்து நிமிடம் தயிர் மத்தினால் கடைந்து உண்டாகும் நிறைகளை நீக்கி முரட்டுத் துணியில் ஏழுமுறை வடிகட்டவும். ( எருது, வெள்ளாடு, கழுதை, குதிரை, யானை, நாய், இவற்றின் சிறுநீரை இது போல் சுத்தி செய்யவும்.இது போல் வயதுக்கு வராத சிறுகுழந்தைகளின் சிறுநீரையும் எடுத்துக் கொள்ளவும். ( இதில் நோய்வாய் படாத குழந்தைகளின் சிறு நீரை பயன் படுத்த வேண்டும்.)
பால் வகைகள் :--
பசுவின் பாலை -- மாட்டின் மடியை நன்றாக கழுவிய பின் கறந்து நுரை அடங்கிய பின் வடிகட்டிக் கொள்ளவும்.
வெள்ளாட்டுப் பாலை– முரட்டுத் துணியில் ஏழுமுறை வடிகட்டிக் கொள்ளவும்.
முலைப்பாலை– சூடேற்றிய வெள்ளிக் கிண்ணத்தில் விட்டவுடனேயோ அல்லது சிறிது தும்பைப் பூவையிட்டு ஐந்து நிமிடம் கழித்து வடித்து உபயோகிக்கவும்.
தயிரை தோய்ந்தபின் நீரை விளக்கி விட்டு எடுத்துக் கொள்ளவும், மோரை சிறிதளவு உப்புக் கூட்டி பயன் படுத்தவும்.
நெய்வகை :---
வெண்ணையை சுத்த நீரில் புளிப்பு நீங்க பிசைந்து கழுவி எடுத்துக் கொள்ளவும்.
நெய்யை நீர் சுண்ட காய்ச்சி அடிப்பிடிக்கால் எடுத்துக் கொள்ளவும்.
பாதாம் நெய்யை படிகப் பாத்திரத்தில் நிரப்பி அரைப் பங்கு மணலில் புதைத்து ஆறுமணி நேரம் வெய்யிலில் வைத்து அடிவண்டல் இல்லாமால் எடுத்துக் கொள்ளவும்.
ஆமணக்கு எண்ணையை– ஒரு குப்பியில் ஊற்றி ஒரு சட்டியில் மணல் போட்டு அதில் எண்ணெய் குப்பியை கால் பாகம் மறையும் படி வைத்து இரண்டு நாள் வெய்யிலில் வைத்து தெளிவை எடுத்துக் கொள்ளவும். இது போல் மற்ற எல்லா வகை எண்ணைகளையும் செய்து எடுத்துக் கொள்ளவும்.
புங்கண் நெய்க்கு – அதன் சம அளவு அளவு புன்கண் பாலை விட்டுக் காய்ச்சி எடுத்துக் கொள்ளவும்.
இலுப்பை நெய்க்கு– சமனளவு எழுத்தாணிப் பூண்டுக் கியாழம் கூட்டிக் காய்ச்சி வடிகட்டவும்.
வேம்பின் நெய்க்கு–சமனளவு வேப்பம்பட்டை கியாழம் வைத்து அதை சேர்த்து காய்ச்சி வடிக்கவும்.
வேர் வகை :-- இவற்றை ஆற்று நீரில் கழுவ வேண்டும்.
கிழங்கு வகை :-- இவற்றை நான்கு கழுவி மேற்றோலையும் உள் நரம்பையும் நீக்கித் துடைக்கவும்.
பட்டை வகை :-- இவற்றைத் துணியில் அல்லது பிரசில் துடைத்து தூசியை நீக்கி பின் கத்தியால் மேற்புறணியைச் சீவிக்கழிக்கவும்.
இலைவகை :-- இவற்றை நீரில் கழுவாமல் சுத்தத் துணியால் துடைத்துப் பழுப்பு, அழுகல் முதலியவற்றை நீக்கவும்.
மலர் வகை :-- இவற்றுள் காம்பு, புல்லிதழ், மகரந்தம் முதலியவற்றை நீக்கித் தனி இதழாக எடுத்துக் கொள்ளவும்.
கடைச்சரக்கு வகை :---
சுக்கு –- இதன் இருபங்கு சுண்ணாம்புக்கல் கூட்டித் தாளித்து மூன்று மணி நேரம் சென்று கழுவி உலர்த்தி மேற்றோலைச் சீவிக் கழிக்கவும்.
மிளகு – புளித்த மோரில் மூன்று மணிநேரம் உறவைத்து பின் வெய்யிலில் உலர்த்தி எடுத்துக் கொள்ளவும்.
ஆணைத் திப்பிலி– காடியில் மூன்று மணி நேரம் உறவைத்துக் பின் வெய்யிலில் உலர்த்தி எடுத்துக் கொளவும்.
கடுகு ரோகினி :-- வேம்பு அல்லது நொச்சியிலை சாற்றில் மூன்று மணி நேரம் உறவைத்து பின் வெய்யிலில் உலரவைத்து எடுத்துக் கொள்ளவும்.
திப்பிலி :-- கொடிவேலி இலைச் சாற்றில் ஒரு பதினைந்து நிமிடம் ஊறவைத்து எடுத்து உலர்த்தி எடுத்திக் கொள்ளவும்.
வெந்தயம் :-- நீராகரத் தெளி நீரில் பத்து நிமிடம் உறவைத்து எடுத்து உலர்த்திக் கொள்ளவும்.
சேங்கொட்டை :-- மூக்கை வெட்டிக் கழுநீரில், எருமைப் பாலிலும் ஒவ்வொன்றிலும் மூன்று மணி நேரம் முறையே ஊரவிட்டு பின் உலர்த்திக் கொள்ளவும்.அதிவிடையம், சிறுதேக்கு, சாதிக்காய், அரத்தை, இவற்றின் மேற்புரணி நீக்கி எடுத்துக் கொள்ளவும்.
திப்பிலி மூலம் : இதனைக் கணுக்கள் நீக்கி எடுத்துக் கொள்ளவும்.
ஓமம் :-- இதைச் சுன்னநீரில் நனைத்து உலர்த்தி எடுத்துக் கொள்ளவும்.
சித்தரமூலம் :-- இதன் பட்டையை பிட்டவியல் செய்து உலர்த்தி எடுத்துக் கொள்ளவும்.
சீரகம்,சதகுப்பை, வாய்விடங்கம், தாளிசபத்திரி, சிறுநாகப்பூ, ஏலம், கிராம்பு, சடாமாஞ்சில், சாதிப்பத்திரி, சதகுப்பை, மஞ்சிஷ்டி, கிச்சலிக் கிழங்கு, கங்குட்டம், கெந்தமஞ்சில், கோட்டம்,செவ்வள்ளி, பிசின் வகைகள்:-- இவற்றை மண் தூசி நீக்கி வெய்யிலில் உலர்த்தி எடுத்துக் கொள்ளவும்.
புளியன் கொட்டை :-- கோது நீக்கி கழுவி வெய்யிலில் உலர்த்தி எடுத்துக் கொள்ளவும்.
கடுகு, வெண்கடுகு :-- ஆய்ந்து குப்பை நீக்கி உலர்த்தி எடுத்துக் கொள்ளவும்.
கடுக்காய் :-- கழுநீரில் ஊறவிட்டு, விதை நீக்கியும் உலர்த்தி எடுத்துக் கொள்ளவும்.
நெல்லி வற்றல் :-- பாலில் வேகவிட்டு விதை நீக்கி உலர்த்தி எடுத்துக் கொள்ளவும்.
தான்றிக்காய் :-- தாளை விழுதுச்சாற்றில் மூன்று மணி நேரம் ஊறவிட்டு விதையை நீக்கி உலர்த்தி எடுத்துக் கொள்ளவும்.
அதிமதுரத்தை :-- நீரில் தோலைச் சீவி துண்டுகளாக்கி உலர்த்தி எடுத்துக் கொள்ளவும்.
கார்போகரிசியை :-- திருநீற்றுப் பச்சிலைச் சாற்றில் நனைத்து உலர்த்தி எடுத்திக் கொள்ளவும்.
வாலுழுவை அரிசி :-- சோற்றுக் கற்றாழை சாற்றில் கழுவி எடுத்து உலர்த்திக் கொள்ளவும்.
வெற்றிலை :--பெருநரம்புகளை நீக்கி எடுத்துக் கொள்ளவும்.
கூகைநீரை :-- ஏழுமுறை நீரில் கரைத்து தெளிவிருத்துக நீக்கி அடியில் படிந்துள்ள மாவை காயவைத்து எடுத்துக் கொள்ளவும்.
கருஞ்சீரகம் :-- ஆய்ந்து தூசு நீக்கி வெய்யிலில் உலர்த்தி பொன்மேனியாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
கொருக்காபுளி :-- நீர் தெளித்துப் பிசரி நிழலில் ஒரு நாள் ஆறவிடவும்.
வசம்பு :-- சுட்டு கரியாக்கிக் கொள்ளவும்.
கற்கடகசிங்கி :-- வாதுமை நெய்விட்டு வறுக்கவும்.
அரக்கு :-- இதை நொறுக்கி உள்ளிருக்கும் குச்சிகளை நீக்கவும்.
மெழுகு :-- இதை உருக்கி தெளிவை வடித்து எடுத்துக் கொள்ளவும்.
குங்கிலியங்கள் :-- திரிபலாதி கியாழத்தில் தோலாந்திரமாகாக் கட்டி ஆறுமணி நேரம் எரித்து எடுத்துக் கொள்ளவும்.
குக்கில் :-- வேப்பம்பட்டை, கண்டங்கத்திரி, சீந்தில், கோரைக்கிழங்கு, நிலவேம்பு, ஆடாதோடை, வெண்நொச்சியிலை, பேய்ப்புடல் இவை ஒவ்வொன்றிலும் கைப் பிடி வீதம் ஒரு மண் கலயத்தில் போட்டு நீர் விட்டு அதன் மீது துணி ஏடு கட்டி அதில் குங்கிலியத்தை வைத்து சட்டி மூடி மூன்று மணி நேரம் எரித்து எடுத்துக் கொள்ளவும்.
குந்திரிகம் :-- இதைச் சாராயத்தில் ஒரு நாள் ஊறவைத்து எடுத்துக் கொள்ளவும்.
குங்குமப்பூ :-- ஒரு தாளில் பரப்பி அதை நெருப்பு அனால் படும்படி காட்டி உலர்த்தி எடுத்துக் கொள்ளவும்.
சந்தனம், சென்சந்தனம், அகரு இவற்றின் வைரம் இல்லாதா பகுதிகளைக் கழிக்கவும்.
பெருங்காயத்தை :-- கறி நெருப்பில் பொரித்தோ, அல்லது தாமரையிலைச் சாற்றில் ஐந்து நிமிடம் ஊறவிட்டு எடுத்துக் கொள்ளவும்.
கஸ்த்துரி, கோரோசனை இவற்றின் இயற்கை தன்மையை அறிய வேண்டும்.
நேர்வாளம் :-- இதை எருமைச் சானிக் கரைசலில் வேகவைத்து பின் மேல் ஓடு, தோல், உள்நரம்பு நீக்கி உலர்த்தி எடுத்துக் கொள்ளவும். பின் எலுமிச்சம் பழச்சாற்றில் ஒருநாள் ஊறவிட்டு எடுத்துக் கொள்ளவும். பின் பாலில் சுண்ட வேகவிட்டு அலம்பி பின் அதை சிறிது விளக்கெண்ணை விட்டு வறுத்து எடுக்கவும்.
இலவங்கப்பட்டை இலவங்கப்பத்திரி, தக்கோலம், வெட்பாலையரிசி, வலம்புரிக்காய், கடலிரஞ்சிப் பட்டை, தலைச் சுருளிப்பட்டை, கோரைக்கிழங்கு, நிலவேம்பு :-- இவற்றை வெய்யிலில் உலர்த்தவும்.
வால்மிளகு :-- இதன் காம்புகளை நீக்கி விடவும்.
வெட்டிவேர், விலாமிச்சம் :- வேர்களைத் துண்டுகளாக்கி எடுத்துக் கொள்ளவும்.
குரோசாணி ஓமத்தைத் :- தேய்த்துப் புடைத்து எடுத்துக் கொள்ளவும்.
அக்கிரகாரம், கஸ்தூரி மஞ்சள், பீதரோகினி,, வட்டத் திருப்பி :-- இவற்றின் புரணி நீக்கித் துண்டுகளாக்கிக் கொளவும்.
மதனகாமப்பூ :-- காம்பு,மகரந்தத்தை நிக்கி எடுத்துக் கொள்ளவும்.
காட்டாத்திப்பூ :-- இலை,காம்பு நீக்கி உலர்த்தி எடுத்திக் கொள்ளவும்.
புகையிலை :-- இதை சுருட்டி அகத்திக் கீரையின் நடுவில் வைத்து நீர் நிட்டு அவித்து எடுத்து உலர்த்திக் கொள்ளவும்.
காட்டு மிளகு :-- வெற்றிலைச் சாற்றில் பாதினைந்து நிமிடம் உறவிட்டு எடுத்து உலர்த்திக் கொளவும்.
இருவி, நாவி :-- இவற்றை துண்டுகளாக்கி முறையே சிறுநீர், பசு மூத்திரத்தில் மூன்று நாள் உறாவைத்து உலர்த்தி எடுத்துக் கொள்ளவும்.
சிவதைவேர் :-- இதை நடு நரம்பை நீக்கி விட்டு பாலில் வேகவிட்டு எடுத்து உலர்த்திக் கொள்ளவும்.
ஊமத்தை விதைகள் :-- எலுமிச்சம் பழச்சாற்றில் மூன்று மணி நேரம் ஊறவைத்து எடுத்து உலர்த்திக் கொள்ளவும்.
பிரண்டை :-- இதை கணு, புறணி நீக்கி உப்பு போட்ட மோரில் மூன்று நாள் ஊறவிட்டு எடுத்துக் கொள்ளவும்.
கழற்சி விதையை ஓடு நீக்கி நீரில் இரவில் ஊறவிட்டு பின் கழுவி உலர்த்திக் கொள்ளவும்.
கஞ்சா :--விதைகள்,காம்பு நீக்கி உப்பு போட்ட நீரில் இரவில் ஊறவிட்டு மறுநாள் ஏழுமுறை கழுவி எடுத்து உலர்த்திக் கொள்ளவும்.
பறங்கிச் சக்கை, அமுக்கிராங் கிழங்கு,தண்ணீர் விட்டான் கிழங்கு, நிலாவரை இவற்றைச் சூரணித்து பிட்டவியல் செய்து எடுத்து உலர்த்திக் கொள்ளவும்.
நாகணம் :-- இதை நெய் தடவிய சட்டியிலில் போட்டு வறுக்கவும்.
தேற்றான் கொட்டை :-- பசுவின் பாலில் அல்லது நாளுபங்கு சிறு கீரைச் சாற்றில் போட்டு அரைப் பாகம் சுண்டக் காய்ச்சி கழுவி எடுத்துக் கொள்ளவும்.
எட்டிக் கொட்டை : இதை நெல்லுடன் சேர்த்து அவித்து சிறுகீரை சாற்றில் மூன்று மணி நேரம் ஊறவிட்டு எடுத்துக் கொள்ளவும்.
சீந்தில் :-- இதை புரணி நீக்கி எடுத்துக் கொள்ளவும்.
சமுத்திர சோகி :-- இதை ஓடு நீக்கி பருப்பை எடுத்துக் கொள்ளவும்.
கரும்பு :-- கணு, புரணி நீக்கி எடுத்துக் கொள்ளவும்.
சிற்றேலம் :-- இளவருப்பாக வறுக்கவும்.
உப்பு வகைகள் :--
பூநீர் –இதற்கு நாலுபங்கு நீர் விட்டு கரைத்து தெளிவிருத்து வாயகன்ற பாத்திரத்தில் விட்டு வெய்யிலில் வைத்து உலர்த்தவும்.
பிடாலவணம் -- கோநீர் அல்லது மோரில் ஊறவைத்து உலர்த்தி எடுத்துக் கொள்ளவும்.
இந்துப்பு -- காடியில் மூன்று ஊறவிட்டு உலர்த்தி எடுத்துக் கொளவும். அட்டுப்பு --இதற்கு நான்கு பங்கு நீரில் கரைத்து தெளிவிருத்து சுண்டவைத்து வெய்யிலில் வைத்து உலர்த்தி எடுத்துக் கொள்ளவும்.
வளையல் உப்பு– காடியில் மூன்று மணி நேரம் உறவைத்து உலர்த்தி எடுத்துக் கொள்ளவும்.
எவச்சாரம்– வெள்ளாட்டு சிறுநீரில் கரைத்து வடிகட்டி உலர்த்தி எடுத்துக் கொள்ளவும்.
சவுக்காரம்– பிட்டவியல் செய்து உலர்த்தி எடுத்துக் கொள்ளவும்.
நவச்சாரம்– கோநீரில் கரைத்து சுண்ட எரித்து வெய்யிலி உலர்த்தி எடுத்துக் கொள்ளவும்.
கர்ப்பூரம், பச்சைக் கர்ப்பூரம்– செங்கழுநீர் பூவிதழ்ச் சாற்றில் ஒரு நாழிகை ஊறவிட்டு எடுத்துக் கொள்ளவும்.
சத்திச்சாரம்– காடி அல்லது வெள்ளாட்டுப் நீரில் மூன்று நாள் வைத்து எடுத்துக் கொள்ளவும்.
கல்லுப்பு – காடியில் பிசரி துடைத்து எடுத்துக் கொள்ளவும்.
உழமண் உப்பு– நான்கு பங்கு நீரில் கரைத்து மறு நாள் தெளிவிருத்து சுண்டாக் காய்ச்சி வெய்யிலில் உலர்த்தி எடுத்துக் கொள்ளவும்.
வெடியுப்பு – நாலுபங்கு நீரில் விட்டு எரித்து கொதிக்கையில் கோழி முட்டையின் வெண்கருவை விட்டுக் கலக்கி மேல்ப்படியும் அழுக்கை அகப்பையில் மோந்து வழித்து எரிந்து விட்டு பி வேறு சட்டியில் துணி கட்டி வடித்து காற்றுப் புகாத இடத்தில் அசையாமல் வைத்து மறுநாள் வடித்து பீங்கானில் ஊற்றி கடும் வெய்யிலில் உலர்த்தவும். இது போல் எழு முறை செய்ய ஏலாம் காய்ச்சல் வெடியுப்பாகும்.
கறியுப்பு – புது ஓட்டில் இட்டு வறுத்து எடுத்து கொள்ளவும். அல்லது மோரில் கலக்கி வெய்யிலில் வைத்து சுண்டிய பின் எடுத்துக் கொள்ளவும்.
வெங்காரம், படிக்க்காராம்– பொறித்து எடுத்துக் கொள்ளவும்.
உலோக வகைகள் :--
தாம்பிரம்– இதை தகடாக்கி புரசு, விராலி, மருதோன்றி, சரக்கொன்றை, முருங்கை வேர், வித்து இவற்றின் குழித்தைலத்தில் நவசாரத்தூளைக் கலந்து அதில் பத்து முறை காய்ச்சி தோய்த்து எடுக்கவும்.
தங்கம்– இதை தகடாக்கி செம்மண் தடவி காய்ச்சி எடுக்கவும்.
நாகம்– இதை உருக்கி இலுப்பை எண்ணையில் பத்து முறை சாய்த்து எடுத்துக் கொள்ளவும்.
கருவங்கம்– இதை உருக்கி நல்லெண்ணையில் ஏழுமுறையும், கோநீரில் பிரண்டையை அரைத்துக் கலந்த நீரில் ஏழுமுறையும் சாய்த்து எடுத்துக் கொள்ளவும்.
வெண்கலம்– இதைக் காய்ச்சி புளியிலைசாற்றில், கொள்ளுச் சாற்றில் அல்லது கசயத்தில் ஒவ்வொன்றிலும் மூன்று முறையும் தோய்த்து எடுக்கவும்.
இரும்பு– இதை இராவி தூளாக்கி எலுமிச்சம்பழ சாற்றில் மூன்று நாள் ஊறவைத்து அரைத்துக் கழுவி எடுத்துக் கொள்ளவும்.
வெள்ளி – சமனளவு காரியம் கூட்டி குகையில் வைத்து காரியம் போக ஊதி எடுத்துக் கொள்ளவும்.
பித்தளை– தடாகி பளுக்கவைத்து குப்பைமேனி, புளி இலை, கொள்ளுக்கசாயம், வெள்ளாட்டுப் பால் இவற்றில் தனித்து அல்லது ஒன்று கூட்டியோ மூன்று முறை தோய்த்து எடுத்துக் கொள்ளவும்.
வெள்ளியம்– இதை உருக்கி இலுப்பை எண்ணெய், நல்லெண்ணெய், மோர்,கொள்ளுக் கசாயம் பசும் கோமியத்தில் ஒவ்வொன்றிலும் ஏழுமுறை சாய்க்கவும்.
குறிப்பு :-- வங்கம் நாகம் போன்றவைகளை உருக்கி எண்ணைகளில் உருக்கி சாய்க்கும் போது பாத்திரத்தில் எண்ணையை வைத்து அதில் விடவும். சாறு வகைகள், கசாயங்களில் விடும் போது குழிஉரலில் திரவங்களை விட்டு அதன் மேல் ஓட்டை உள்ள கனமான கல்லு அல்லது அதிக வெயிட்டான கட்டையை வைத்து அந்த ஓட்டை வழியாக விடவேண்டும் இல்லாவிடில் முகம் உடலில் வெடித்து சிதறும் போது பட்டு புண்ணாக்கி விடும் உருக்குவதையும் நீளமான இரும்புக் கரண்டியில் வைத்து உருக்கி தூர நின்று விடவேண்டும்.
உபரசங்கள் :--
பூநாகம்– இதை பசுவின் பாலில் ஆறுமணி நேரம் போட்டு மண்ணைக் கக்கிய பின் நீரில் அலம்பி எடுத்துக் கொள்ளவும்.
இந்திர கோபப் பூச்சி– தைலப் பசை போகாமல் கண்ணாடிப் பாத்திரத்தில் அல்லது பீங்கானில் போட்டு உலர்த்தவும்.
முத்துச் சிப்பி– பூநீர் கரைசலில் போட்டு கொதிக்கவைத்து கழுவி எடுத்துக் கொள்ளவும்.
அபினி– சிறிது நெய் கூட்டி மத்தித்து ஒரு வெற்றிலையில் தடவி அனலில் வெதுப்பிக் கொள்ளவும். முட்டை ஓட்டை பூநிர்க் கரைசலில் போட்டு மூன்று மணிநேரம் கொதிக்க வைத்து சவ்வு நீக்கி உலர்த்தி எடுத்துக் கொள்ளவும்.
நிமிளைகளை– தேனில் மத்தித்து இரட்டை மடிப்பு துணியில் முடிந்து காடி, கோநீர், கொள்ளுக் கசாயம் இவற்றில் முறையே ஒவ்வொருநாள் கிளிகட்டி எரிக்கவும்.
சங்கு – இதை பசுவின்மொரில் ஏழு நாள் ஊறப்போட்டு கழுவி எடுத்துக் கொள்ளவும்.
முத்து – சங்கம் பழம் அல்லது புளி இலை சாற்றில் மூன்றுநாள் ஊறப்போட்டு எடுத்துக் கொள்ளவும்.
பவளம்– பழச்சாற்றில் ஒருநாள் ஊறப்போட்டு எடுத்துக் கொள்ளவும்.
புஷ்பராகம்–வெள்ளாட்டு நீரில், புளி இலைச் சாற்றில் மூன்று மணி நேரம் உறப்போட்டு எடுத்துக் கொள்ளவும்.
வைரம் – இதை பிரண்டைச் சாற்றில் ஒருநாளும்
வைடுரியம் – பூசணிக்காய் சற்றிலும் கருப்பு பெண் குதிரை மூத்திரத்திலும் ஒவ்வொரு நாளும் ஊறவைத்து எடுத்துக் கொள்ளவும்.
மான் கொம்பு– இதன் துண்டுகளை பசு மூத்திரத்தில் மூன்று நாள் ஊறப்போட்டு எடுத்துக் கொள்ளவும்
கோமேதகம் – இதை நிலக் குமிழ் வேர்ச் சாற்றில், குதிரை மூத்திரத்தில் மூன்று நாள் ஊறப்போட்டு எடுத்துக் கொள்ளவும்.
அஞ்சனக் கல்– புளியாரைச் சாற்றில் ஒருநாள் உறவைத்து எடுத்துக் கொள்ளவும்.
கல்நார் – கோங்கிலவம் பட்டை சாற்றில் ஒருநாள் உர்ரவைத்து எடுத்துக் கொள்ளவும்.
படிகம் – தினமு புதிய புதிய பசும் பாலில் முறையே ஏழு நாள் ஊறவைத்து எடுத்துக் கொள்ளவும்.
கல்மதம்– செங்கழுநீர் சாற்றில் இரண்டு நாள் உறவைத்து எடுத்துக் கொள்ளவும்.
வெள்ளை அப்பிரேகம்– இதை கறி நெருப்பில் வைத்து பழுத்த பின் எடுத்து பாலில் போட்டு ஆறியபின் எடுத்து இதழ் இதழாக பிரித்து சிறுகீரைச் சாற்றில் ஒருநாள் ஊறவைத்து எடுத்துக் கொள்ளவும்.
கபரி, கல்கபரி– கோ நீரில் ஊறவைத்து எடுத்துக் கொள்ளவும்.
துருசு, துத்தம், பால்துத்தம்– இவகைகளை தயிரில் அரைத்து அடைதட்டி ஓட்டில் இட்டு காய்ச்சி எடுத்துக் கொள்ளவும்.
கிருஷ்ணா அப்ரகம்– இதை காடி விட்டு அரைத்து பின் தெளிவை நீக்கி பின் கழுநீரில் கழுவி அதனுடன் பத்தில் ஒரு பங்கு கொடி வேலிவேர் கூட்டி அரைத்து குடுவையில் போட்டு வாய் மூடிச் சீலைமண் செய்து காயவைத்து கனபுடம் போட்டு எடுத்துக் கொள்ளவும்.
கற்பூர சிலாசத்து– இதை கற்றாழைச் சாற்றில் மூன்று மணி நேரம் அரைத்து வெய்யிலி உலர்த்தி எடுத்துக் கொள்ளவும்.
காந்தம் ---இதை வரகு வைக்கோலில் சுருட்டி எரித்து எடுத்துக் கொள்ளவும்.
சாஸ்திர பேதி -- சீலையில் முடிந்து நெருப்பினில் சுட்டு எடுக்கவும்.
மயிர் – இதை நரை நீக்கி சிகைக்காய் நீரில் கொதிப்பித்து கசக்கி அலம்பவும்.
ஆமை ஓடு– இதை தீயினால் சுட்டு எடுக்கவும்.
மரகதம் – சிறு பீளை சாற்றில் அரைத்து வில்லை தட்டி உலர்த்தி பின் அதே வேரின் விழுதில் மூசை செய்து அதிலிட்டு சீலை செய்து பத்து எருவில் புடமிட்டு எடுத்துக் கொள்ளவும். இவ்விதம் ஏழு முறை புடம் போடவும்.
நீலம் – இதைக் கழுதை மூத்திரத்தில் ஒரு நாள் ஊறவிட்டு வெய்யிலில் உலர்த்தவும்.
மாணிக்கம் – இதை ஓட்டில் வைத்து நெருப்பில் பழுக்க வைத்து வெள்ளாட்டு பாலில் ஏழுமுறை சாய்க்கவும்.
அன்னபேதி – இதை புது ஓட்டில் போட்டுச் சிவக்க வறுக்கவும்
உவர்மண் – சுத்த நீரில் கரைத்துத் தெளிவை எடுத்துக் காய்ச்சி வெய்யிலில் வைத்து உலர்த்தவும்.
கடல் நுரை– இதை கிளிஞ்சல் சுண்ணாம்பில் வைத்து நீர் ஊற்றி கொதித்து அடங்கிய பின் எடுத்துக் கொள்ளவும்.
பவளப் புற்று– இதை பசுவின் பாலில் ஒரு சாமம் கொதிக்க வைத்து எடுத்துக் கொள்ளவும்.
காவிக்கல் – இளநீரில் கரைத்து வடித்து பீங்கான் தட்டில் விட்டு வெய்யிலில் வைத்து உலர்த்தி எடுத்துக் கொள்ளவும்.
மயிலிறகு – இதை சட்டியில் இட்டு கருகி எடுத்துக் கொள்ளவும்.
பலகறை– இதை நெருப்பனலில் சுட்டு எடுத்துக் கொள்ளவும்.
கிளிஞ்சல்– இதை உவர் மண் கரைசலில் ஆறு மணி நேரம் கொதிக்கவைத்து எடுத்துக் கொள்ளவும்.
குறிப்பு :-- உவர்மண், பூநீர், உபயோகப்படுத்தி சுத்தி செய்யும் முறைகளில் அதற்குப் பதில் வாசிங் சோடா ( சோடியம் கார்பனேட் ) உபயோகிக்கவும். மேற்கண்ட இரண்டிலும் இருப்பது இப்பொருளே.
பாடனங்கள் :--
வீரம்– இதை ஓட்டில்வைத்து நெருப்பில் வைத்து முட்டை வெண்கருவால் சுருக்கிட்டு எடுத்துக் கொள்ளவும். அல்லது சூடம் மிளகு இரண்டையும் பொடித்து அதை ஒரு குடுவையில் போட்டு அதில் வீரத்தை கட்டி தொங்க விட்டு கலவை சுண்டி எரியுமாறு செய்து எடுத்துக் கொள்ளவும்.
பூரம் – இதை முலைப்பால் அல்லது மிளகு விழுது கலந்த வெற்றிலைச் சார் சுருக்கு கொடுத்து எடுத்துக் கொள்ளவும். அல்லது முலைப்பாலில் பத்து நாள் ஊறவிட்டு எடுத்துக் கொள்ளவும்.
இலிங்கம்—இதை முலைப் பால், குப்பைமேனிசார், எலுமிச்சம்பழச் சார் இவை சமனளவு கூட்டி ஆறு மணிநேரம் முன் போல் சுருக்கு கொடுக்கவும். அல்லது முலைப்பாலில் அல்லது எலுமிச்சம் பலச் சாற்றில் பத்து நாள் ஊறவிட்டு எடுத்துக் கொள்ளவும்.
இரசம்– இதை குழிக்கல்லில் விட்டு நாலு பங்கு செங்கல் தூள் ஒரு மணி நேரம் அரைத்து ஊதி எடுத்துக் கொண்டு பின் மறுபடி ஒட்டடை, உப்பு, வெள்ளம், மஞ்சள்தூள், திரிகடுகு தூள் இவற்றில் தனித்தனியாக நாலு மணிநேரம் அரைத்து பின் கழுவி எடுத்துக் கொள்ளவும்.
வெண் பாடனம்– இதை ஒரு பலம் (35-gram ) மிளகின் விழுது கலந்த ஒருபடி அமுரி, அல்லது பூநீரும் சுண்ணமும்,கலந்த சிறுநீரில், அல்லது மிதி பாகல் சாறு இவற்றில் ஒன்றில் கொதிக்க வைத்து எடுத்துக் கொள்ளவும்.
இரச செந்தூரம்– இதை முலைப்பாலில் பதினைந்து மணி நேரம் ஊறவைத்து எடுத்துக் கொள்ளவும்.
கெளரி– இதை பன்றி நெய்யில் மூன்று மணிநேரம் சுருக்கிடவும் அல்லது அமுரியி மூன்று நாள் ஊற விட்டு எடுத்துக் கொள்ளவும்.
குதிரைப்பல்– உமுறிச்சாற்றில் ஊற விட்டுப் பின் அதே சாற்றில் சுருக்கிடவும்.
எலி பாடணம்– தேனில் காய்ச்சவும்
தொட்டி பாடனம்– இதைத் தூள் ஆக்கி துணியில் முடிந்து கோநீரில் பணிரண்டு மணி நேரம் எரித்து எடுத்துக் கொள்ளவும். இப்படி மூன்று முறை செய்யவும்.
கந்தகம் – இதை நெய் விட்டு தீப்பற்றாமல் எரித்து உருக்கி பசுவின் பாலில் ஏழுமுறை ஊற்றி எடுத்துக் கொள்ளவும்.
மனோசிலை– காடி, பழச்சார், ஆட்டுநீர் இவற்றில் கொதிப்பித்தோ அல்லது இஞ்சிச் சாற்றில் ஒருமணி நேரம் அறைத்தோ உலர்த்தவும்.
தாளகம் – கழுதை மூத்திரம், கற்சுன்னம், உவர்மண் கலவையில் தோலாந்திரமாக கட்டி தொங்க விட்டு சுண்ட எரித்து எடுத்துக் கொள்ளவும்.
நாபி – நாயின் சிறு நீரில் ஊறவிட்டு பின் கழுவி எடுத்துக் கொள்ளவும்.
மிருதார்சிங்கி– வெள்ளாட்டு மூத்திரத்தில் கொதிப்பித்து பின் வெள்ளாட்டு பால், முலைப்பால் ஒவ்வொரு நாள் ஊறப்போட்டு கழுவி எடுத்துக் கொள்ளவும்.
கெருடப்பச்சை – துண்டுகளாக தட்டி கற்றாழை சோற்றில் கடுக்காய் தூளை போட்டு பிசைவதால் வரும் நீரில் போட்டு கொதிப்பித்து கழுவி எடுத்துக் கொள்ளவும்.
எல்லா பாடனங்களுக்கும் பொதுவான சுத்தி முறை – ஒரு படி சிறுகீரை சாறு எடுத்து அதில் முப்பத்திஐந்து கிராம் மிளகைபொடிசெய்து போட்டு அதில் சுத்தி செய்ய வேண்டிய பாடனங்களை சிறு துண்டு களாகச் செய்து தோலந்திரமாககட்டி சாறு சுண்ட எரித்து எடுத்துக்கொள்ளவும்.
வேறு – குப்பைமேனி, கரிசலாங்கண்ணி, மிளகு தக்காளி, எலுமிச்சம் பழம், ஊமத்தை இவற்றின் சார் காடி, அமுரி ஆகியவை வகைக்கு ஒரு படி கூட்டி அதில் படிக்காரம், வெடியுப்பு, பூநீறு, கறியுப்பு இவற்றின் சுண்ணம் வகைக்கு ஒரு பலம் கூட்டி அதில் சுத்திக் குரிய பாடனங்க்களை தோலாந்திரமாகக் கட்டிப் போட்டு ஒரு மண்டலம் சென்று எடுக்க சகலமும் சுத்தியாகும்.
No comments:
Post a Comment