ஆண்டிமோனியம்
க்ரூடம்.
Antimonium crudum.
வெண்மையான,கனமான மாசு நாக்கில்
படித்திருந்தால்.அதிகமாக
கொழுப்புச் சத்துள்ள உணவுகளை உண்டதனால் ஏற்பட்ட கோளாறுகள்;குமட்டல்.நசுக்கப்பட்ட விரல் நகங்கள் பிரிந்து பாலுண்ணிகள் போல வளருதல்.உள்ளங்கால்களில்
குழிகளும் காய்ப்புகளும் வலி கடுமையாயிருக்கும். நடக்க சிரமம்.வயதானவர்களிடையே மாறி மாறி ஏற்படும் மலச்சிக்கலும் வயிற்றுப் போக்கும்.குழந்தைகள் சிடுமூஞ்சிகளாக இருப்பர். குழந்தைகள் தங்களைப் பிறர் பார்ப்பதையோ தொடுவதையோ
விரும்பமாட்டார்கள்.இரவில்
காய்ச்சல்.
தலைவலி..
ஆறுகளில் குளித்த பிறகு.குளிரினால்.
சாராயம் குடித்ததால், அஜீரணத்தால், புளிப்புள்ள பானங்கள் அருந்துவதால், சருமக் கோளாறுகள் அமுக்கப்பட்டதால்.
இரைப்பையில் வேலை செய்யக்கூடிய முக்கிய மருந்துகளில் இதுவும் ஒன்று.அதிகமாக ஆகாரங்களை உண்டு அதனால் ஏற்பட்ட இரைப்பை கோளாறுகளில் குமட்டல் சங்கடம் இம்
மருந்திற்கே விசேஷமான
நாக்கு. ஏப்பம் வரும்போது
உண்ட ஆகாரத்தின் வாசனை வருதல்.தான் உண்டதை உடனே வாந்தி
எடுக்காவிட்டால் தனக்கு
சௌகரியம் ஏற்படாதென்று
நினைத்தல். கோடை காலங்களில் ஏற்படும் வயிற்றுப்
போக்கு. மூலவியாதியில்
மிகுந்த சளிப்போக்கு. அபானத்திலிருந்து விடாமல் சளி போன்ற கழிவு ஒழுகிக்
கொண்டே இருக்கும்.
வருடக் கணக்கில் ஏப்பமும் அபான வாயுவும் மேலும் கீழும் பிரிந்து கொண்டே இருக்கும். இடைவிடாமல்
அபான வாயு வெளி வந்து
கொண்டிருக்கும்.தாகம் இல்லாமல் வரும் குமட்டல்.எந்த மருந்தாலும் குணப்படுத்த
முடியாத கடுமையான வாந்தியையும் ஆண்டிம் குரூடம் குணமாக்கும். விரல்
மூட்டு வேக்காடு மற்றும் கால்களில் கீழ் வாயு வீக்கத்திற்கும் பயன்படும்.வயிரும் குடலும் உப்பி வலிக்கு மானால் அதையும் குணப்படுத்தும். பாதத்திலும் குதிக்காலிலும் மிருதுவான தன்மையுடன் வலி எடுக்கும் போது இந்த மருந்து பயன்படும்.
கோடைகால வயிற்றுப்
போக்கு.குளிர்ந்த நீரில் குளிப்பதால் மாதவிடாய் அமுக்கப்படும்.மூக்கு துவாரங்களில் புண்களும்
வெடிப்பும்.வாயின் ஓரங்களில் வெடிப்பு. தசைகளில்
வீக்கம் வேக்காடு. ஊறுகாயிலும்
புளித்த உணவிலும் விருப்பம்.பற்கள் அழுகிய நிலையில் வலி.கண் இமைகளில் வேக்காடும் அரிப்பும். எரியும் நெருப்பை பார்த்தாலே இருமல். வயோதிக காலத்தில் உடல் பருமனாகிவிடுதல் .இவையாவும் ஆண்டிம் குரூடத்தால் குணமாகும்.
குறிப்பு ; பூர்த்தி செய்யும் மருந்துகள்
சல்பர்,சிலிகான்.
நன்றி ; ராமலிங்கம் ஐயா..
No comments:
Post a Comment