கிரகங்களின் பெயர்கள்
சூரியன்
சந்திரன்
புதன்
சுக்கிரன்
செவ்வாய்
குரு
சனி
ராகு
கேது
ராசிகளின் அதிபதிகள்
மேசம் -செவ்வாய்
ரிஷபம் - சுக்கிரன்
மிதுனம் -புதன்
கடகம் -சந்திரன்
சிம்மம்-சூரியன்
கன்னி - புதன்
துலாம் - சுக்கிரன்
விருச்சிகம் - செவ்வாய்
தனுசு -குரு
மகரம் -சனி
கும்பம் - சனி
மீனம் -குரு
அதாவது ஒரு ஜாதகத்தில்
1 ஆட்சி பெற்ற கிரகம்
2 ஆட்சி ராசிக்கு ஏழாவது ராசியில் உள்ள கிரகம்
3 உச்ச கிரகம்
4 நீசமான கிரகம்
5. வக்ரமான கிரகம்
6. பரிவர்த்தனை பெற்ற கிரகம்
விதி எண் 7 மேற்கண்ட விதிகள் அடிப்படையில் எதாவது ஒரு கிரகம் இருந்து அதோடு ஒரே ராசியில் இணைந்த கிரகமும் அதிகாரம்
இவைகள் முக்கியத்துவம் வாய்ந்தது அதாவது அதிகார கிரகங்கள்.
சனி நற்பலன்கள்:
, பொதுப் பணியில் ஆர்வம், அடுத்தவர் வேலையை இழுத்துப் போட்டுக் கொண்டு செய்வார், ஜாதகர் எல்லா விசயங்களையும் ஓரளவுக்கு தெரிந்து வைத்து இருப்பதால் அனைத்து வேலைகளையும் செய்வார், அருவறுப்பு இல்லாமை, எதையும் செய்யும் துணிச்சல் மிகுந்தவர், பின் சிந்தனை இல்லாமல் எதையும் நேர்த்தியாக செய்ய வேண்டும் என்று ஈடுபாட்டுடன் செய்வார், வித்தை கர்வம் உடையவர், தனது குணம் செயல் வேலை பற்றி யாராவது உயர்வாக பேசினால் எதை வேண்டுமானாலும் விட்டுக் கொடுத்துவிடுவார், எந்த சூழலிலும் ஒத்துப் போவது, நடுநிலை பஞ்சாயத்துகளில் ஆர்வம் காட்டுவது இவரது இயல்பு, அதேசமயம், பிறருக்கு தயவு தாட்சன்யம் பாராதவர், பழையன மறந்து விட்டு உறவாடும் குணம் உடையவர், அடிமையாக இருந்தாலும் அதிலும் தலைமை பொறுப்புகளை அடைவார், வாதங்கள் செய்தலில் கெட்டிக் காரர், கடினமான மனம் படைத்தவர் உதாரணமாக எதாவது விபத்து நடந்த இடத்தில் விபத்துக் குள்ளானவர் எந்த நிலையில் இருந்தாலும் கொஞ்சம் கூட யோசிக்காமல் இரத்தம் சதை என எதையும் பாராமல் சடாரென உதவுவார், குடும்பத்தில் சிலர் தீர்க்காயுள் உடையவர்கள் தாத்தாவோ பாட்டியோ 90 வயதிற்கும் மேல் இருப்பார்கள், ஜாதகர் அரிய நூல்கள் பொக்கிசங்கள், குடும்ப தொழில் கருவிகளை போன்றவற்றை பத்திரபடுத்தி வைப்பார் அதன் மூலம் நிம்மதியும் பெருமையும் அடைவார், எவ்வளவு தடை வந்தாலும் சளைக்காமல் எதையும் செய்து முடிக்கவல்ல நெஞ்சுரம் படைத்தவர், எதற்கும் அஞ்சாதவர், தான சிந்தனை உடையவர், கடின உழைப்பாளி, சமூக சிந்தனை உடையவர்,
குரு நற்பலன்கள்:
ஜாதகர் கௌரவத்தை அதிகமாக விரும்புவார், தங்க நகை சேர்ப்பதில் ஆர்வம் நிறந்தவர், சேர்த்தவற்றை பாதுகாக்க அதிக கவனம் செலுத்துவார், ஜாதகர் தனது சுற்றத்தில் பிரபல்யமாக இருப்பார், சுய அடையாளத்தை தக்க வைப்பதில் போராட்டம் அதிகம் இருக்கும், தூய்மை விரும்பி, சமூகத்தில் உயர் நிலையை அடைவார், புத்திசாலித் தனமானவர், பலருக்கும் இவரை பற்றி சொன்னால் தெரிந்து இருக்கும் அவரது சூழலில் அவர் பிரபலமானவர்,
சுக்கிரன் நற்பலன்கள்:
இவரது தாத்தா பாட்டிகளுக்கு தீர்க்கஅயுள், பால் சோற்றில் விருப்பம் உடையவர், திருமணம் முன்பே தெரிந்தவருடன் நடக்க அதிகமான வாய்ப்புகள் உண்டு, தன்னை பொலிவாக காட்டிக் கொள்ள விரும்புவார், பணப் புழக்கம் அதிகம் உண்டு, பெண்கள் இவரிடம் பிரியமாக பழகுவர், திருமணத்திற்கு பிறகு மேன்மை உண்டாகும், உபரி வருமானம் அதிகம், உறவில் பெண் இருந்தால் அவருடன் விருப்பம் ஏற்படும், ஆடம்பரமாக வாழ வேண்டும் என நினைப்பார்,
புதன் நற்பலன்:
சுறுசுறுப்பானவர், கல்வியில் நல்ல நிலையை அடைவார், வாழ்க்கை முழுவதும் எதாவது கற்றுக் கொண்டே இருப்பார், மகள் மீது அதீத அன்பு கொண்டவர், இவர் சமயோசிதம் நிறைந்தவர், எந்த சூழலுடனும் ஒன்றிப் போகும் தன்மையுடன் இருப்பார், சுருட்டை மயிரும் இளமையான தோற்றமும் உடையவர், எதிர் பாலினத்தை ஈர்க்கும் புன்னகையுடையவர், நன்றி பெருக்கு உடையவர் எத்தனை ஆண்டுகளானாலும் நினைவில் வைத்து பிரதி உபகாரம் செய்யும் குணம் கொண்டவர், உடலில் பச்சை நரம்புகள் தெரியும், தாளமிடுதல், நடனமாடுதல், இசை போன்றவற்றில் பிரியம் கொண்டவர், மிகவும் தெளிவானவர், அனைவரிடமும் லாவகமாக பழகுதல், நுண்ணறிவு, எதையும் கற்கும் ஆர்வம் அதிகம் நிறைந்தவர் என்பதால் கல்வியில் நல்ல நிலையடைவார், நேரம் தவறாமை போன்றவற்றை பிறருக்கு கூறினாலும், உற்சாகமுடையவர், சாமர்த்தியசாலி, இவருக்கு பெண் குழந்தை பிறக்கும், மத்தியஸ்தம் செய்வது, இடயில் ன்டுனிலை ன்இலயில்லிருப்பதில் வல்லவர், சிறுபிள்ளைதனமான குணங்கள் உண்டு.
செவ்வாய் நற்பலன்கள்:
எதனையும் வீரத்துடன் எதிர் கொள்ளும் துணிச்சல் மிக்கவர், கூட்டுத்தொழில் அர்வமுடையவர், அஜானுபகுவான உடற்வலிமை மிகுந்து காணப்படுவார், சிலர் எலும்பாக இருப்பினும் வலிமை மிக்கவர்களாக இருக்கிறார்கள், உடற்பயிற்சி ஆர்வமுடையவர், உடல் நலனில் அக்கறை உடையவர், கணவன் மீது எதிர்பார்ப்பு இருக்கும், கணவனும் முக்கியமான நபராக இருப்பார், ஜாதகர் சுற்றி உள்ளவர்களை அடக்கி ஆளுதல் மற்றும் முரட்டு சுபாவம் மிகுந்தவராக இருப்பார் ஊரில் அல்லது உறவில் முக்கியமான நபராக இருப்பார், ஜாதகர் இயங்கிக் கொண்டே இருக்கும் ஆற்றல் கொண்டவர், மேல்த் தீனி எனும் நொறுக்கி தீனி பிரியர், புகழுக்கு அடிமையானவர்.
சந்திரன் நற்பலன்கள்;
தாய்மை உணர்வுடனும் பாச பிணைப்பும் கொண்டவர்கள், ஜாதகர் கற்பனை வளமிக்கவர், அடுத்தவர்களுடைய நலன் குறித்து சிந்திப்பவர், தாயின் மீது மிகுந்த அக்கறையுடனும் அவ்வப்போது சிறுசிறு விளையாட்டு போன்ற சண்டைகளும் செய்வார், பல மனிதர்களை சந்திப்பார், அனைவருடனும் எளிதில் பழகும் குணம் கொண்டவர், மனதிற்குள் எதையும் வைத்துக் கொள்ளாமல் வெளிப்படயாக பேசுவார், பிறர் என்ன சொல்வார்கள் என்பது பற்றி கவலைப் படாமல் செய்துவிட்டு அனைவரிடமும் நற்பெயர் வாங்க சமாளித்து பேசுவார், அடிக்கடி மனம் குறித்து பலருக்கு புத்தி மதி சொல்லுவார், உணவு பிரியர், அனைவருடனும் பழக வேண்டும் என்று சிந்தனை உடையவர், கட்டுபாடுகளற்ற ரசனை உடையவர், அடிக்கடி பயணம் செய்ய வேண்டும் என சிந்திப்பவர்,
சூரியன் நற்பலன்கள்:
ஜாதகர் யாருக்கும் அடிமையாக இருக்கமாட்டார், தனது தனித்துவத்தை ஆளுமையுடன் வெளிக்காட்டுவார், தலைமை பன்புகள் நிறைந்தவர், ஜாதகரின் குடும்பத்தில் அரசுப்பணி அல்லது சொந்த தொழில் அல்லது தந்தையின் தொழில் செய்பவர்கள் உண்டு, இவரது தந்தையும் மிகவும் முக்கியமான நிலையில் இருப்பார், இவர் சில காலங்களில் அரசியல் ஈடுபாடு கொள்வார், எந்த ஒரு செயலானாலும் சாதூர்யமாக அனுகக் கூடியவர், அரசுவழி ஆதாயம் இருக்கும், சுத்தமாக இருக்கும் இடங்களை விரும்புவார், தான் கொடுத்த வாக்கை காப்பாற்றும் சிந்தனை அதிகம் நிறைந்து இருக்கும், வெளிகாட்டிக் கொள்ளாத அமைதியும் கம்பீரமும் கண்ணியமும் கொண்டவர், சுயமாக எதையும் உருவாக்கி தானகவே தலைமை ஏற்கும் பன்பு கொண்டவர், விடா முயற்சியுடன் இருப்பார்,
ஒரு ஜாதகத்தில்
சூரியன் அதிகாரம் ஆனால்
தந்தை மகன் ஆளுமை தலை அரசு சொந்த தொழில் இவைகளை பற்றி பலன் கூறலாம்
சந்திரன் அதிகாரம் ஆனால்
தாய் மனம் வீடு நிம்மதி வெளிநாட்டு வேலைவாய்ப்பு உணவுபணி மருத்துவம் வாகனம் போக்குவரத்து சிறுநீரக சளி பற்றி பேசலாம்
செவ்வாய் ஆனால் நட்பு கணவன் உடல்நலம் கடன் பாதுகாப்பு காவல் பொறியியல் மருத்துவம் துரோகம் பங்கு பற்றி பேசலாம்
புதன்
காதல் கல்வி சகோதரி சொந்து தோல் வங்கி எலெக்ட்ரானிக்ஸ் புரோக்கர் ஆசிரியர் பற்றி பேசலாம்
சுக்கிரன்
திருமணம் மனைவி செல்வம் பணம் ஆடம்பரம் வட்டி வரவு செலவு பற்றி
குரு
அவருடைய ஒழுக்கம் அவமானம் கௌரவ விசயம் பற்றி
சனி
வருமானம். அவருடைய அடையாளம் வம்சம் குலம் பயம் மரபு வழி பற்றி பேசலாம்
சந்திரன் அதிகாரம் ஆனால் ;
சளி, சைனஸ், மனநோய், இடதுகண் கோளாறு, வயிறு மற்றும் செரிமான உபாதைகள், மார்பகம் கட்டி, இதயம், நீரிழிவு, சிறு நீர் தொற்று, மாதவிடாய் கோளாறுகள், கொம்புள்ள மிருகங்கள் தாக்குதல், உணவு குழாய் தொடர்பான நோய்கள், நீரின் வழியாக ஆபத்து, பெண் போகநோய், தோல் நோய், மண்ணீரல், நுரையீரல் குறைபாடு, சோம்பல், தாய் வழி நோய்கள், திடீர் தொற்று நோய்கள், வயிற்றுபோக்கு, வாந்தி, கபம், காற்றின் ஈரப்பதம் தொடர்பான தோல் நோய்கள், விரைவீக்கம், தூக்கமின்மையால் வரும் நோய்கள், ஆசை தொடர்பால் வரும் நோய்கள், நீர் கட்டிகள் மேற்கண்ட நோய்கள் இவருக்கு அல்லது இவரை சுற்றியுள்ளோருக்கு ஏற்படும், முன்னெச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தலாம்.
சனி தொழில்கள்;
இரும்பு, இன்சூரன்ஸ், ஏசி, நீதித்துறை, சிறை காவலர் பணி, ஆயில் கிரீஸ் தொழில்கள், இரும்பு தொழில்கள், ஆடுமாடு வளர்ப்பு, ஆட்டோ மொபைல் தொழில்கள், டயர், மர வேலை, பஞ்சாயத்து, நகராட்சி, உள்ளாட்சி அரசியல் மற்றும் பணிகள், துப்புரவு, சத்தம் வரும் இடங்களில் பணி, கூலிவேலை, பழைய பொருள் வியாபாரம், எடுபிடி வேலை, பலநாள் செய்து முடிக்கும் பணிகள், கல் மற்றும் மண் வியாபாரம், திருட்டு தொழில்கள், துப்புரவு பணி, சுரங்க தொழில்கள், தாது பொருள் விற்பனை, அடிமை தொழில், கால்நடை வளர்ப்பு, முடி வியாபாரம், கம்பளி தொழில்கள் அடிமைகளை வைத்து வேலை வாங்குதல், கழிவுத் தொழில், முடி திருத்துபவர், தோல் தொழில்கள், ரியல் எஸ்டேட், சூது தொழில்கள், அயல் நாட்டு பணிகள், மேற்கண்ட தொழிலில் ஜாதகர் இருப்பார், மேலும் அவரது குடும்பத்தில் உள்ளவர்களும் இது தொடர்பான பணி மற்றும் தொழில்களையே செய்வார்கள்,
குரு தொழில்கள்;
ஆசிரியர், நீதித்துறை, பொன் வியாபாரம், ட்ராவல் ஏஜென்சீஸ், வாடகை வருமானம், ஆன்மீகப் பயிற்சி, தர்ம ஆசிரியர், நிதி துறை, ஞான உபாசகர்கள், கெளரவப்பணியாளர்கள், உயர்பதவிகள், யாத்திரை தொழில்கள், ப்ரோகிதம், பொதுப் பணிகள், பக்தி மார்க்கம், அறிவுரை மற்றும் ஆலோசனை பணிகள், சேவை நிறுவனங்கள், தர்மகர்த்தா, அறநிலையத் துறை, தலைவர் பொறுப்பு, உயர்கல்வி நிறுவனங்கள், பாதுகாப்பு துறை , திருப் பணிகள் மேற்கண்ட தொழிலில் ஜாதகர் இருப்பார், மேலும் அவரது குடும்பத்தில் உள்ளவர்களும் இது தொடர்பான பணி மற்றும் தொழில்களையே செய்வார்கள்,
சுக்கிரன் தொழில்கள்;
வங்கிப்பணி, சொகுசுவாகன உற்பத்தி மற்றும் வியாபாரம், ஆடை, ஆபரனம், ஏலசீட்டு, மகளீர் குழு, கலை, பூ, பெயிண்ட், இனிப்பு, பேன்சி, பொன் வியாபரம், பழவியாபாரம், வட்டித்தொழில், மது, விடுதி, சிற்பம், தனிக்கையாளர், முதலீடு, வீடு விற்பனை, திருமணம் சார்ந்த தொழில்கள், மீடியா, மார்கெட்டிங், அயல்நாட்டுப் பணி, விலை உயர்ந்த கால்நடை விற்பனை, பணப்பயிர் வியாபாரம், நட்சத்திர ஹோட்டல் மற்றும் விடுதிகள், கருவூலம், அலங்கார பொருட்கள் விற்பனை, பர்னிச்சர், கண்ணாடி தொழிற்சாலை பணி, அழகு நிலையம், நறுமணப் பொருட்கள் விற்பனை உற்பத்தி, இரத்தின வியாபாரி, நடிகன், அரச விருந்தினர், மருந்து விற்பனை, ஆப்டிகல்ஸ், பட்டு விற்பனை, தொலைக்காட்சி, நடனம், விளம்பர பணிகள், நுகர்வோர் தொடர்பு பணிகள், வேசி, இசை கருவிகள் உற்பத்தி மற்றும் விற்பனை,, நவீன புதுமையான தொழில்கள், சலவையகம், பெண்தொழிலாளர்களை கொண்டு செய்யும் தொழில்கள், வேற்று மொழி கற்பித்தல், வசந்தகால பயிர்கள், மேற்கண்ட தொழிலில் ஜாதகர் இருப்பார், மேலும் அவரது குடும்பத்தில் உள்ளவர்களும் இது தொடர்பான பணி மற்றும் தொழில்களையே செய்வார்கள்,
புதன் தொழில்கள்;
கல்வி, கணக்கு, கமிசன், தபால் துறை, டெக்ஸ்டைல்ஸ், கட்டிடப் பணி, வீட்டு உபயோகப் பொருள் விற்பனை, நிதி, பிரிண்ட், ஸ்டிக்கர், செய்தி, நடிப்பு, மடிக்கும் பொருட்கள், கலை, மேஜிக், புத்தக எழுத்தாளர், கணக்குபிள்ளை, பதிவுதுறை, தொலை தொடர்பு மற்றும் தூதரக பணிகள், செல்போன், எலெக்ட்ரிக், வரைகலை, மேடைபேச்சாளர், சில்லரை வியாபாரம், கணித புலமை, அனைத்து வியாபாரங்களும், சட்டத்துறை, சிற்ப தொழில், தரகு, செய்தித் துறை, புத்தகக் கடை, ஸ்டேசனரி, தரகு, சூதாட்டம், மீடியா, ஐடி, கேமரா, நவீன தொழில் நுட்பம், மேற்கண்ட தொழிலில் ஜாதகர் இருப்பார், மேலும் அவரது குடும்பத்தில் உள்ளவர்களும் இது தொடர்பான பணி மற்றும் தொழில்களையே செய்வார்கள்,
செவ்வாய் தொழில்கள்;
மோட்டார்வாகனம் தொழில்கள், மருத்துவம், சமையல், டூல்ஸ், பொறியியல், லேத், தொழிற்சாலை பணிகள், மருந்து உற்பத்தி, வெல்டிங், லேப், மருத்துவ உபகரணம் உற்பத்தி மற்றும் விற்பனை, விளையாட்டு, செங்கல் சூலை, மெக்கானிக், இராணுவம், உடற்பயிற்சி, வெப்ப உலை, இயங்கிக் கொண்டே இருக்கும் பணிகள், எலெக்ட்ரிக்கல் சார்ந்த தொழில்கள், கட்டிட துறை பொருட்கள் விற்பனை, போர் தளவாட உற்பத்தி, மண்பாண்ட உற்பத்தி, மந்திரம், இயந்திர உற்பத்தி, விவசாயப் பொறியியல், சண்டை தொழில்கள், சுரங்க பணிகள், ஆயுதம் தயாரிப்பு, தீயணைப்பு துறை, ரசாயன தொழில், சமையல் பாத்திரம் உற்பத்தி மற்றும் விற்பனை, , சிற்ப பணிகள் மேற்கண்ட தொழிலில் ஜாதகர் இருப்பார், மேலும் அவரது குடும்பத்தில் உள்ளவர்களும் இது தொடர்பான பணி மற்றும் தொழில்களையே செய்வார்கள்,
சந்திரன் தொழில்கள்;
ஜாதகர் உணவு, கணினி வழி ஐடி துறை, நீர் தொடர்பான தொழில், ஸ்வீட், போக்குவரத்து, அயல்நாட்டுப்பணி, மளிகை, கட்டிடத்துறை, கிரில், எண்ணெய், ஆடியோ மற்றும் வீடியோ விஷன், விசா, செல்போன், வேளாண்மை, கப்பல் பணி, செவிலியர், மருத்துவம், போக்குவரத்து தொழில், வாகனம், சுற்றுலாத்துறை, குழந்தை பேறு மருத்துவம், ரயில்வே பணிகள், விமான நிலைய பணிகள், கலைகள், ஜோதிடம், அரிசி வியாபரம், பூ மற்றும் பழவியாபாரம், இலக்கியம், ஓவியம், ஏமாற்றுத் தொழில், ஏற்றுமதி, இறக்குமதி, வாகன உற்பத்தி, கலை சார்ந்த கல்வி, பேச்சாளர், சலவை, ஆடு மாடு வளர்ப்பு, மீன் வளர்ப்பு, நடிப்பு, எழுத்தாளர், சேவை நிறுவனம், தோட்ட வேலை, மேற்கண்ட தொழிலில் ஜாதகர் இருப்பார், மேலும் அவரது குடும்பத்தில் உள்ளவர்களும் இது தொடர்பான பணி மற்றும் தொழில்களையே செய்வார்கள்,
சூரியன் தொழில்கள்;
அரசுப்பணி, அரசு உதவி பெரும் தொழில்கள், தந்தை தொழில், பூர்வீகம், அரசியல், பல் மருத்துவம், மருத்துவர், அறுவை சிகிச்சை, மகன் தொழிலில் உதவி, அனுபவ தொழில், புரோகிதம், பொன் வியாபாரம், மரம் வேலை, ஆசாரி , நூற்புதொழில், தலைமை நிர்வாகம், காவல், இராணுவம், இரத்தின வியாபாரம், துப்பறிதல், நீதிபதி, தலைமை, சமூகசேவகர், மந்திரி, ஆராய்ச்சி பணிகள், பேச்சாளர் மேற்கண்ட தொழிலில் ஜாதகர் இருப்பார், மேலும் அவரது குடும்பத்தில் உள்ளவர்களும் இது தொடர்பான பணி மற்றும் தொழில்களையே செய்வார்கள்,
சனி பலன்;
தேவையற்ற வழக்குகளில் சிக்கிக் கொள்வது, எதிர்பாராத இழப்புகளை சந்தித்தல், எல்லா திட்டங்களிலும் சுனக்கம், ஏன் நமக்கு மட்டும் இப்படி நடக்கிறது என ஆய்ந்து பார்த்தாலும் உணர முடியாத தொல்லைகள், எல்லா பணிகளிலும் அதீத உழைப்பு, ஆனால் பயன் குறைவு, ஜாதரின் திறமை யாராலும் நினைக்க முடியாத அளவுக்கு இருந்தாலும் அவருக்கு அங்கீகாரம் கிடைக்காது, அனைவரும் வேலை முடியும் வரை பயன் படுத்தி விட்டு பிறகு மறந்து விடுவார்கள், பொதுப் பணியில் ஆர்வம், அடுத்தவர் வேலையை இழுத்துப் போட்டுக் கொண்டு செய்வார் பிறகு யாரும் மதிக்கவில்லை என சலித்துக் கொள்வார், ஜாதகர் எல்லா விசயங்களையும் ஓரளவுக்கு தெரிந்து வைத்து இருப்பதால் அனைத்து வேலைகளையும் செய்வார், அருவறுப்பு இல்லாமை, எதையும் செய்யும் துணிச்சல் மிகுந்தவர், பின் சிந்தனை இல்லாமல் எதையும் நேர்த்தியாக செய்ய வேண்டும் என்று ஈடுபாட்டுடன் செய்வார், வித்தை கர்வம் உடையவர், தனது குணம் செயல் வேலை பற்றி யாராவது உயர்வாக பேசினால் எதை வேண்டுமானாலும் விட்டுக் கொடுத்துவிடுவார், எந்த சூழலிலும் ஒத்துப் போவது, நடுநிலை பஞ்சாயத்துகளில் ஆர்வம் காட்டுவது இவரது இயல்பு, அதேசமயம், பிறருக்கு தயவு தாட்சன்யம் பாராதவர், பழையன மறந்து விட்டு உறவாடும் குணம் உடையவர், மரபு சார்ந்த தொடர் நோய் மற்றும் எதாவது குழப்பம் ஏற்படும், அடிமையாக இருந்தாலும் அதிலும் தலைமை பொறுப்புகளை அடைவார், வாதங்கள் செய்தலில் கெட்டிக் காரர், கடினமான மனம் படைத்தவர் உதாரணமாக எதாவது விபத்து நடந்த இடத்தில் விபத்துக் குள்ளானவர் எந்த நிலையில் இருந்தாலும் கொஞ்சம் கூட யோசிக்காமல் இரத்தம் சதை என எதையும் பாராமல் சடாரென உதவுவார், இவருக்கு குழப்பத்தை உண்டாக்கும் அல்லது புரிதலை குலைக்கும் சாதுர்ய பேச்சு உண்டு, இவரை பஞ்சாயத்துகளில் பேச அழைத்து போனால் எதிராளியை குழப்பி விடுவார், இவரது பூர்வீக குடும்பம் பிரிந்து போகும் நிலை ஏற்படலாம், இவரது பூர்வீகத்தில் சொத்துக்களை சகோதரிக்கு தராமல் ஏமாற்றுதல் நடந்து இருக்கும், இவரது குடும்ப சொத்துகள் அடையாளம் தெரியாமல் சிதைந்து போகுதல் மெதுமெதுவாக நடக்கும், குடும்பத்தில் சிலர் தீர்க்காயுள் உடையவர்கள் தாத்தாவோ பாட்டியோ 90 வயதிற்கும் மேல் இருப்பார்கள், சிலர் அற்பாயுள் சிறு வயதில் இறந்து போவார்கள், ஜாதகர் அரிய நூல்கள் பொக்கிசங்கள், குடும்ப தொழில் கருவிகளை போன்றவற்றை பத்திரபடுத்தி வைப்பார் அதன் மூலம் நிம்மதியும் பெருமையும் அடைவார், எவ்வளவு தடை வந்தாலும் சளைக்காமல் எதையும் செய்து முடிக்கவல்ல நெஞ்சுரம் படைத்தவர், எதற்கும் அஞ்சாதவர், தனது காரியத்தை நிறைவேற்ற குள்ளனரி தந்திரம் செய்வதில் கெட்டிக்காரர், தான சிந்தனை உடையவர், திடீரென அதிகாலையில் எழுந்து உழைப்பர், சில காலங்களில் மதியம் வரை தூங்குவார்,
குரு பலன்;
ஜாதகர் கௌரவத்தை அதிகமாக விரும்புவார், ஆனால் அதே சமயம் சிறு சிறு அவமானங்களுக்கு கூட சோர்ந்து விடுவார், பல இடங்களில் இவராகவே போய் பெயரை கெடுத்துக் கொள்வார், பிறருக்கு கூறும் உபதேசங்கள் தனக்கு ஒரு நாளும் உதவாது, தேவையற்ற விரயம், பணம் சீட்டு வட்டி வரவு வழியாக வருமானம் இருப்பினும் ஏமாற்றம் அதிகமாக இருக்கு, சதா புகழுக்கு ஏங்கிக் கொண்டே இருப்பார், பணத்தை சேமிப்பதில் தடைகள் இருப்பினும் அதை சமாளிப்பார், தங்க நகை சேர்ப்பதில் ஆர்வம் நிறந்தவர், சேர்த்தவற்றை பாதுகாக்க அதிக கவனம் செலுத்துவார், பிறருக்கு மட்டுமே அறிவுறை கூறுவார் ஆனால் தான் அதை கடைபிடிப்பதில் கோட்டை விடுவார், உணர்ச்சி வசப்பட்டு தன்னை கட்டுபடுத்த இயலாமல் குற்ற காரியங்களை செய்து விட்டு வருந்துவார், தன் உணர்வில் கவனம் குறைவானவர், சமூகத்தின் கட்டுபாடுகளில் நம்பிக்கையில்லாமல் அதிலிருந்து ஒதுங்கி நடப்பார், ஜாதகர் தனது சுற்றத்தில் பிரபல்யமாக இருப்பார், சுய அடையாளத்தை தக்க வைப்பதில் போராட்டம் அதிகம் இருக்கும், தூய்மை விரும்பி, சமூகத்தில் உயர் நிலையை அடைவார், புத்திசாலித் தனமானவர்,
சுக்கிரன் பலன்;
ஜாதகர் ஆண் எனில் திருமணம் தாமதமாகும் அல்லது குழப்பமான திருமணம் நடக்கும் அல்லது திருமண வாழ்க்கை மிகுந்த சிரமம் மிகுந்ததாகவும் சச்சரவானதாகவும் இருக்கும், ஜாதகர் பணம், வட்டி போன்ற வகையில் வருமானம் ஈட்ட ஆசைபட்டு பிறகு அதில் சிக்கலை உண்டாக்கிக் கொண்டு தேவையில்லாத இழப்புக்கு ஆளாவார், ஜாதகர் பண விசயத்தில் ஏமாற்றம் அடைவார், வீண் டம்பம், பெருமைக்காக அதிகம் கவனம் செலுத்துவார், பால் சோற்றில் விருப்பம் உடையவர், சதா மோகம் நிறைந்தவர், எப்போதும் அதீத காமம் மிகுந்து காணப்படுவதால் இவர் தனது துணையை நச்சரித்துக் கொண்டே இருப்பார், திருமணம் முன்பே தெரிந்தவருடன் நடக்க அதிகமான வாய்ப்புகள் உண்டு ,
புதன் பலன்;
ஜாதகர் நிலம் சார்ந்த சிக்கலை சந்திப்பார், பூர்வீக நிலம் தொடர்பான மன கசப்புகளுக்கு ஆளாவார், மகள் மீது அதீத அன்பு கொண்டவர், அதே சமயம் இவரது மகளுடன் திடீரென கருத்து வேறுபாடு உண்டாகும், குடும்ப பிரச்சனை காரணமாக சகோதரி உடன் விவகாரம் இருக்கும், சொத்து தொடர்பான வழக்கு ஏற்படும், இவர் சமயோசிதம் நிறைந்தவர், எந்த சூழலுடனும் ஒன்றிப்போகும் தன்மையுடன் இருப்பார், இருந்தாலும் இவர் பிறரை தவறாக புரிந்து கொள்ளுதல் அல்லது இவரை பிறர் தவறாக புரிந்து கொள்ளுதல் போன்ற சிக்கல்கள் ஏற்படும், சுருட்டை மயிரும் இளமையான தோற்றமும் உடையவர், எதிர் பாலினத்தை ஈர்க்கும் புன்னகையுடையவர், நன்றி பெருக்கு உடையவர் எத்தனை ஆண்டுகளானாலும் நினைவில் வைத்து பிரதி உபகாரம் செய்யும் குணம் கொண்டவர், உடலில் பச்சை நரம்புகள் தெரியும், தாளமிடுதல், நடனமாடுதல், இசை போன்றவற்றில் பிரியம் கொண்டவர், மிகவும் தெளிவானவர், காதல் போன்றவற்றில் சிக்கிக் கொள்வார், அனைவரிடமும் லாவகமாக பழகுதல், நுண்ணறிவு, எதையும் கற்கும் ஆர்வம் அதிகம் நிறைந்தவர் என்பதால் கல்வியில் நல்ல நிலையடைவார், நேரம் தவறாமை போன்றவற்றை பிறருக்கு கூறினாலும் இவர் அதை சரியாக கடைபிடிக்க மாட்டார், உற்சாகமுடையவர், சாமர்த்தியசாலி,
செவ்வாய் பலன்;
ஜாதகர் கடன் போன்ற சிக்கல்களில் சிக்கிக் கொள்வார், உடல்நலம் குறித்த பிரச்சனை அவ்வப்போது ஏற்படும், குறிப்பாக ஜாதகர் பெண்ணாக இருந்தால் அவரது உடல் நலம் மற்றும் திருமண வாழ்க்கையில் தடை மற்றும் தாமதம் உண்டாகும், மேலும் கணவனுடன் சிக்கல், சதா குடும்பத்தில் சண்டை உண்டாகும், இருப்பினும் கணவன் மீது எதிர்பார்ப்பு இருக்கும் கணவனும் முக்கியமான நபராக இருப்பார், ஜாதகர் சுற்றி உள்ளவர்களை அடக்கி ஆளுதல் மற்றும் முரட்டு சுபாவம் மிகுந்தவராக இருப்பார், தேவையற்ற வழக்கு, நம்பிக்கை துரோகம், நட்பு வழி ஏமாற்றம் ஏற்படும், இவரது செயல்களில் வேகம் இருக்கும் அதே சமயம் அவசர கதியில் எதையாவது செய்து விட்டு பிறரின் எரிச்சலுக்கு உள்ளாவார், கடுமயான வார்த்தைகளை உபயோகிப்பார், ஊரில் அல்லது உறவில் முக்கியமான நபராக இருப்பார், ஜாதகர் இயங்கிக் கொண்டே இருக்கும் ஆற்றல் கொண்டவர், தேவையற்ற சண்டை சச்சரவு, வீண் வம்புகளை வரவழைத்துக் கொள்வார், இவர் பங்கு வர்த்தகம், பங்கு தாரர் தொழில் கடன் கொடுத்தல் வாங்குதலில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும் முடிந்தால் தவிர்ப்பது நலம், ஜாதகர் நாய் வளர்க்கும் ஆசை கொண்டவர், சில சமயங்களில் நாயினால் கடி படுவார், மேல்த் தீனி எனும் நொறுக்கி தீனி பிரியர், புகழுக்கு அடிமையானவர்,
சந்திரன் பலன்;
உணர்ச்சி வசப்படக் கூடியவர், பயந்த சுபாவம் உடையவர், ஜாதகர் வீடு கட்டுதல் தொடர்பான சிந்தனை மற்றும் வீடு கட்டியவுடன் அதில் உள்ள சிக்கல் தொடர்பாக சதா சிரமபட்டுக் கொண்டே இருப்பார், ஜாதகருக்கு நிம்மதி இல்லாதது போலவே எப்போதும் பேசுவார், கற்பனையாக தனக்கு தவறு நடந்து விட்டது போல உணர்வார், புத்தி குழப்பம் மிக்கவர், கிளர்ச்சிக்கு அடிமையாதல், தனக்கு ஒரு வேலை ஆகவேண்டும் என்றால் சமயத்திற்க்கு ஏற்ப பொய்யும் பேசும் குணமுடையவர், எந்த ஒரு விசயத்தையும் நீட்டி சுவாரஸ்யமாக பேசுவார்கள், திடீரென ஒருவரை புகழ்வதும் பிறகு அவரிடம் இருந்து காரணமே இல்லாமல் விலகுவதும் செய்வர், அடுத்தவர் வாழ்க்கையில் இவர்களாகவே முக்கியத்துவம் எடுத்துக் கொண்டு செய்வார்கள் பிறகு பகையும் உண்டாக்கிக் கொள்வார்கள், அனைவரின் மீதும் சந்தேகம், தூக்கம் தொடர்பான பிரச்சனை, திடீர் திடீரென சிந்தனை மாற்றம், எதன் மீதும் கவனமின்மை, மற்றவருக்கு உழைத்தல் பிறகு அதை சொல்லி காட்டி அவருடன் விவாதம் செய்யும் போகுடையவர், மாறி மாறி பேசுபவர், பிறரை குறை கூறுதல், சதா பொழம்பல் நிறைந்தவர், ஜாதகரின் தாய் குடும்பத்தில் மிகவும் முக்கியமான நபராக இருப்பார், அவர்தான் குடும்ப பொறுப்புகளை முன்னெடுத்து செய்வார், இருப்பினும் தாயுடன் சுமூகமான சூழல் இருக்காது கருத்து வேறுபாடு இருந்து கொண்டே இருக்கும், துணைவருடன் கருத்து வேறுபாடு, அவரையும் அவரது குடும்பத்தினரையும் எப்போதுமே குறை கூறுதல் ஆகிய குணங்களுடன் இருப்பார், முதலில் ஆண் அடுத்து பெண் குழந்தை,
சூரியன் பலன்
இவர் டென்சன் நிறைந்து காணப்படுவார், குழந்தை தாமதம் போன்ற பிரச்சனைகள் இருக்கும், தந்தை இவரது குடும்பத்திற்கு மிக முக்கியத் துவமானவராக இருப்பினும் தந்தையின் அனுகூலம் இவருக்கு குறைவாகவே இருக்கும், தந்தையுடன் இணக்கமற்ற நபராக இருப்பார், சுத்தமாக இருக்கும் இடங்களை விரும்புவார், எப்போதும் குழந்தைகள் பற்றிய கவலை இருந்து கொண்டே இருக்கும், எந்த ஒரு செயலானாலும் சாதூர்யமாக அனுகக் கூடியவர், அரசுவழி ஆதாயம் இருக்கும், அரசினால் தொல்லைகளும் இருக்கும், தான் கொடுத்த வாக்கை காப்பாற்றும் சிந்தனை அதிகம் நிறைந்து இருக்கும், அதே சமயம் அதை நிறைவேற்றுவதிலும் சிக்கல் இருக்கும், இவரும் குடும்பத்தில் மிக முக்கியமானவராக இருப்பார் இருப்பினும் அதற்கு இடையூறுகள் ஏற்படும், மகனுடன் கருத்து வேறுபாடுகள் உண்டு, மகனும் சுய கௌரவத்திற்காக இவருடன் பேசுவதில் சிக்கல் ஏற்படும், வெளிகாட்டிக் கொள்ளாத அமைதியும் கம்பீரமும் கண்ணியமும் கொண்டவர்,
super
ReplyDelete