Showing posts with label ஆன்மிகம். Show all posts
Showing posts with label ஆன்மிகம். Show all posts

Tuesday, 16 October 2018

2,500 ஆண்டுகள் பழமையான சுக்ரீஸ்வரர் கோவில்

2,500 ஆண்டுகள் பழமையான சுக்ரீஸ்வரர் கோவில்*
திருப்பூரிலிருந்து ஊத்துக்குளி செல்லும் சாலையில் 8 கிலோ மீட்டர் தொலைவில் சர்க்கார் பெரியபாளையத்தில் சுக்ரீஸ்வரர் கோவில் உள்ளது.
ராமாயண காலத்தில் ஸ்ரீராமருக்கு உதவியாக இருந்த சுக்ரீவன், இங்கு ஈஸ்வரனை பிரதிஷ்டை செய்து வழிபட்டதால் மூலவருக்கு சுக்ரீஸ்வரர் என்று பெயர் வந்ததாக தல புராணம் கூறுகிறது.
இதற்கு சான்றாக ஆலயத்தில் அர்த்த மண்டப சுவரில், சுக்ரீவன் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யும் புடைப்புச் சிற்பம் உள்ளது.
இத்தல இறைவன் குரக்குத்தளி ஆடுடைய நாயனார் என்றும் அழைக்கப்படுகிறார்.தற்போது இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் இக்கோவில் சமயக்குரவர்களுள் ஒருவரான சுந்தரர் பாடல் பெற்ற தலமாகும்.
ஆகையால் இது 8–ம் நூற்றாண்டைச் சேர்ந்த கோவிலாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
ஆனால் கி.பி. 1220–ம் ஆண்டை சேர்ந்த ஒரு கல்வெட்டுதான் இங்கு காணப்படுகிறது.
பிரமிக்க வைக்கும் வகையில் கட்டப்பட்டுள்ள இக்கோவிலில், மூலவர் சுக்ரீஸ்வரர், லிங்கம் வடிவில் எழுந்தருளியுள்ளார்.
வலதுபுறம் ஆவுடை நாயகியாக அம்மன் கோவில் கொண்டுள்ளார்.
சுற்றுப் பிரகாரங்களில், கன்னி மூல விநாயகர், தட்சிணா மூர்த்தி, சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர், பைரவர் கோவில்களும், எந்த சிவன் கோவில்களிலும் இல்லாத சிறப்பாக, கருவறைக்கு நேர் எதிரே, பத்ரகாளியம்மனும் உள்ளார்.
நீர், நிலம், காற்று, நெருப்பு, ஆகாயம் என பஞ்ச பூதங்களை குறிக்கும் வகையில், பஞ்சலிங்கங்கள் இக்கோவிலில் அமைந்துள்ளன.
மூலவராக, அக்னி லிங்கம், மீதம் மூன்று லிங்கங்கள் கோவிலை சுற்றிலும் அமைந்துள்ளன.
சிவனுக்கு பிடித்த வில்வ மரத்தின் கீழ், ஐந்தாவதாக, ஆகாச லிங்கம், அமைந்துள்ளதாக கோவில் வரலாறு சுட்டிக்காட்டுகிறது.
இக்கோவில் 2,500 ஆண்டுகளுக்கு முந்தையது என தொல்லியல் துறை கூறினாலும், 17.28 லட்சம் ஆண்டுகளை கொண்ட கிரதாயுகத்தில், காவல் தெய்வமாகவும், 12.96 லட்சம் ஆண்டுகளை கொண்ட திரேதாயுகத்தில் சுக்ரீவனாலும், 8.64 லட்சம் ஆண்டுகளை கொண்ட துவாபரயுகத்தில், இந்திரனின் வாகனமாக ஐராவதத்தாலும், வணங்கப்பட்டது எனவும், 4.32 லட்சம் ஆண்டுகளை கொண்ட, கலியுகத்தில், தேவர்களாலும், அரசர்களாலும் வணங்கப்பட்டு, நான்கு யுகங்களை கண்ட கோவில் என்ற வரலாறும், அதற்கான சான்றுகளும் கோவிலில் உள்ளன.
வழக்கமாக, சிவன் கோவில்கள் கிழக்கு பார்த்து அமைந்திருக்கும். இக்கோவிலில், தெற்கு, வடக்கு பகுதியில் மட்டும் வாசல் அமைந்துள்ளது.
மற்ற கோவில்களை போல், மூலவரை, நேரடியாக, எதிரே வந்து தரிசிக்க முடியாது. தெற்கு வாசல் வழியாக மட்டுமே வர முடியும். அதேபோல், மூலவர் சன்னதிக்கு எதிரே வழியே இல்லை.
தொல்லியல் துறை 1952ம் ஆண்டு, தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து ஆய்வு செய்தது. மீண்டும் புனரமைக்கும் வகையில், அஸ்திவாரத்தை பலப்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுத்தது.
கோவில் கற்களை பிரித்து, பார்த்த போது, அதிர்ச்சியடைந்தனர். தற்போதுள்ள கோவிலை போலவே, பூமிக்கடியிலும், இதே கட்டுமானத்தில் ஒரு கற்கோவில் அமைந்துள்ளது.
இதனால்தான், பல ஆயிரம் ஆண்டுகளானாலும், கோவில் பூமியில் இறங்காமல், கட்டியபடியேயும், வயது முதிர்ச்சி கூட தெரியாத அளவுக்கு கல் கோவில் கட்டுமானங்கள் அப்படியே உள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
சிதம்பரம், பேரூர் கோவிலுக்கு அடுத்து, சிறப்பான வேலைப்பாடுகளுடன், சக்தி வாய்ந்ததாக, சுக்ரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.
கோவிலுக்கு என 450 ஏக்கர் நஞ்சராயன்குளம், கோவிலை சுற்றிலும் தண்ணீர் தேங்கும் அகழி, தெப்பக்குளம், இப்பகுதியில் அமைந்திருந்த முகுந்த பட்டணத்தில் இருந்து, மூலவருக்கு அருகே வெளியே வரும் வகையில் அமைந்துள்ள குகை, சிறப்பான வேலைப்பாடுகளுடன் கூடிய கருவறை கோபுரம் என தெரியாத விஷயங்கள் பல உள்ளன.
*இரண்டு நந்தி*
இக்கோவிலில் இரண்டு நந்திகள் உள்ளன. முதலில் உள்ள நந்திக்கு கொம்பு, காது இருக்காது.
கோவில் நந்தி, அருகிலுள்ள விவசாய நிலத்துக்கு சென்று மேய்ந்துள்ளது. ஆத்திரமடைந்த விவசாயி, இடுப்பில் இருந்த கத்தியை எடுத்து, மாட்டின் காதையும், கொம்பையும் அறுத்துள்ளார்.
மறுநாள் கோவிலுக்கு வந்து பார்த்த போது, கற்சிலையான நந்தியின் காதிலிருந்து ரத்தம் வழிந்துள்ளது.
அதிர்ச்சியடைந்த விவசாயி, தனது தோட்டத்துக்கு வந்தது நந்தி என உணர்ந்து, தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டு, வணங்கியுள்ளார்.
பின், தவறுக்கு பிராயசித்தமாக, மற்றொரு நந்தி சிலை செய்து, புதிய நந்தியை பிரதிஷ்டை செய்துள்ளார்.
பழைய நந்தியை அகற்ற முயற்சித்து முடியாமல் விட்டுள்ளார். மறுநாள் வந்து பார்த்த போது, பழைய நந்தி முன்பும், புதிய நந்தி பின்னாலும் மாறி இருந்துள்ளது.
சிவன் கனவில் வந்து, உறுப்புகள் இல்லை என்றாலும், அதுவும் உயிர்தான் எனவும், பழைய நந்தி முன்னால் இருக்க வேண்டும்; மற்றது பின்னால்தான் என கூறியுள்ளார்.
அதன் அடிப்படையில், இன்றும் இரண்டு நந்திகள் அமைந்துள்ளன. பிரதோஷ காலங்களில், இரண்டு சிலைக்கும் பூஜை நடத்தப்படுகிறது.

Sunday, 14 October 2018

கோயில் சிற்பங்கள் ஏன் ஆபாச சிலைகள் இருக்கிறது ?

கோயில் சிற்பங்கள் ஏன் ஆபாச  சிலைகள் இருக்கிறது ?
01. கோவில்களில் உடலுறவுக் காட்சிகளை சித்தரிக்கும் சிலைகள் அமைந்து இருப்பது மிக மிக வியப்பையும், குழப்பத்தையும் தருகிறது.
இதன் மூலம் என்ன தெரிவிக்கிறார்கள்?
02. கோவிலுக்கு வரும் பொழுது அந்த மாதிரி சிற்பங்களைப் பார்த்தா மனம் அலைபாயும் இல்லீங்களா?
03. பிறகு எப்பிடி முழு மனமும்
தெய்வீகத்துல போகும். ஒரு வேளை காமமும் தெய்வீகம்னு சொல்ல வராங்களா?
04. அப்பிடி இருந்தாலும், ரெண்டு
பொண்ணுங்க மூணு ஆண்கள்னு இருக்கற சிற்பங்கள், அது எதை விளக்க வருது?
05. ஏதோ ஒரு மிகப் பெரிய மர்மம் இந்தக் காமத்துக்கும் நம்ம தெய்வீக நம்பிக்கைகளுக்கும் இடையில் இருக்கற மாதிரி இருக்கு. நீங்க என்ன நினைக்கிறீங்க?
==============================
=================
பொதுவாக எல்லோரும் கூறும் விடயம்
எல்லாம் வல்ல இறைவனை காண வேண்டும் என்றால் "காம என்னம் தடையாகயிருக்கும். அத்தகைய காமத்தை, காம என்னத்தை, குரோதம் (பலி பீடம்) கடந்து வந்தாலே இறைவனை அடையலாம்" என்பார்கள். இதனை சற்று விவாதிப்போம் வாருங்கள் கோபுரத்தை ஊருக்கு வெளியிலிருந்தே பார்க்கும்போது கண்ணில் படுவது,
வானளாவிய கோபுரம் அது ரொம்ப
அழகாயிருக்க்கிறது என்று தோன்றும். அதை பார்க்க அருகில் போவோம். கோபுரத்தை அண்ணாந்து பார்க்கிறோம். அதில் அடுக்கடுக்காக பல பொம்மைகள். கீழ் வரிசையில் உள்ள உருவங்களில் சில ஆபாச சிலைகள் காணப்படுகிறது.
ஆனால் அவற்றுடன் கூடவே யோகியரும், முனிவர்களும், உழவர்களும், குறவர்களும், அவதாரங்களும், கர்ப்பிணி பெண்டிரும், நாகதேவதைகளும், யட்சணிகளும், கந்தர்வர்களும், அரசரும், வீரகாதைகளும் காட்டப்படுகின்றன
அவற்றில் ஆபாசமான தன்மை இல்லை
வாழ்க்கையின் ஒட்டுமொத்தத்தைக் காட்டும் பலவகையான சிலைகள் உள்ளன, அவற்றில் உடலுறவுச்சிலைகளை மட்டும் தவிர்ப்பது
இந்து மதத்தின் வழக்கம் அல்ல. வாழ்க்கையின்எல்லா அம்சங்களையும் கணக்கில் கொண்டு ஒரு முழுமையை உருவகிக்கவே அது முயல்கிறது. ஆகவே துறவுக்கு இருக்கும் அதே முக்கியத்துவம் காமத்துக்கும் இருக்கின்றது.
இது ஆலயங்கள் நமக்குக் கற்றுத் தரும் முதல் பாடம். "நீ உன் மனதைக் கட்டுப் படுத்தினால் உயர்வாய்" என்பதை போதிக்கிறது.
நம் மனத்திலே சிறிதளவும் தெய்வ நம்பிக்கை இல்லை என வைத்துக் கொள்வோம். நம் மனதிலே தோன்றுவது என்ன?
ஓகோ இந்தக் கோவிலுக்குள் சென்று
பார்த்தால் இன்னும் பல ஆபாசமான
காட்சிகளையும் காண முடியுமோ?
என்னும் எண்ணம். உள்ளே செல்கிறோம்.
அங்கு காண்பது என்ன?
நூற்றுக்கால், ஆயிரங்கால் மண்டபம் என பெரிய பெரிய மண்டபங்கள். இவற்றில் மக்கள் கூடி வேத மந்திரங்களைக் கற்கவோ, ஆன்மீக
சொற் பொழிவுகளைக் கேட்கவோ, இசை,
நடனம், நாடகம் போன்றவற்றைக் கேட்டு,
பார்த்து ரசிக்கவோ வசதிகள். சொல்லப்
போனால் இலவச பாடசாலைகள் தான்
கோயில்கள். வெளிப் பிராகாரம், நடுப் பிராகாரம், உள் பிராகாரம் என ஒவ்வொன்றையும் சுற்றி
வருகிறோம். நல்ல வெளிச்சமாக இருந்த
வெளிப் பிராகாரத்தில் இருந்து உள்ளே செல்லச் செல்ல வெளிச்சம் குறைந்து கொண்டே வந்து கடைசியில் இறைவன் சிலைகள் உள்ள கருவறையில் வழிபட்டு. அங்கு எண்ணெய் விளக்கின் ஒளியில் இறைவனின் உருவம் மங்கலாகத் தெரிகிறது. பூஜை செய்பவர் ஒரு
தட்டில் கற்பூரத்தை ஏற்றி இறைவனின்
சிலைக்கு முன்னே சுற்றிக் காட்டுகிறார்.
இப்போது இறைவனின் முகம் நன்றாகத்
தெரிகிறது. ஆனால் நாம் என்ன செய்கிறோம்?
அடுத்த வினாடி கண்களை இறுக்க மூடிக்
கொண்டு ஆண்டவனை நினைக்கிறோம். நம் மனக் கண்ணில் தெறிவது ஆண்டவனின் உருவம்.
"உன்னுள்ளே உற்றுப் பார். என்னைக் காண்பாய்" என்ற உன்னத தத்துவத்தை அல்லவா நமக்குவெகு எளிதாக போதித்து விட்டது ஆலயம். இந்த உலக வாழ்க்கையில் உள்ள எல்லா விஷயங்களுமே புனிதமானவை தான். எதையும் தவறாகச் செய்யும் போது அதன் புனிதம் போய் ஆபாசமாகி விடுகிறது. உதாரணமாக, நல்ல விஷயங்களைப் பேசினால் அது அர்த்தமுள்ள பேச்சு. அப்பேச்சுடன் தீய வார்த்தைகளை உபயோகித்துப் பேசினால் அதுவே ஆபாச பேச்சாகி விடுகிறது. ஒரு கலங்கிய மனதிலிருந்து எழும் வக்கிர விகாரமாக காமத்தைக் காட்டும் சிலைகள் தமிழரின் கோவில்களில் அமைந்திடவில்லை. ஆபாச சிலை தோற்றமானது சூரியனை வழிபடும் "சௌர மதத்தில்" காமத்தைக்
காட்டும் சிலைகள் பெருமளவு இருந்தன.
பின்னர் சௌரம் வைணவத்தில் கலந்த போது அச்சிலைகள் விஷ்ணு ஆலயத்திலும் இடம்பெற்றன. அதில் இருந்து பின் படிப்படியாக மற்றைய கோயில்களுக்கும் பரவியது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
காமத்தை மனிதனின் இயற்கையான ஆற்றலாக எண்ணுபவை இந்துமதம். அந்த ஆற்றலை அறிவதும் அறிவதன் மூலம் கடந்து செல்வதுமே மானுட உண்மையின் உச்சநிலையை அறிய உதவும் வழி என அவை நினைத்தன. ஆகவே அவை காமத்தை அறிவின்
வழியாகக் கண்டன. அந்த இந்துமத மரபும் பாலியல் சிற்பங்களை உருவாக்கியது. இந்து மதம் நீங்கள் மன ஒருமை கொண்டு கற்போடு வாழ்வதற்காகத் திட்டமிட்டு
உருவாக்கப்பட்ட ஒரு நன்னெறி தொகுப்பு அல்ல. அது வரலாற்றில் பல்வேறு வழிபாட்டு மரபுகளும் சிந்தனைகளும் பின்னிக்கலந்து
உருவாகி வந்த ஒரு பெரும் ஞானத்தொகை. அந்த ஞானத்தை முறையாக அறிவதும் அந்த
அறிவின் அடிப்படையில் வாழ்க்கையை
உருவாக்கிக் கொள்வதுமே ஓர் இந்துவின் கடமை.
புனிதமான தாம்பத்ய உறவு
இல்லையென்றால் குழந்தைகள் எப்படிப் பிறக்கும்? உலக இயக்கம் எப்படி நடக்கும்?
உலக வாழ்க்கையில் மனிதன், மிருகம், செடி, கொடி, மரம்.. இப்படி உயிருள்ள எல்லாமே இனப்பெருக்கம் செய்ய வேண்டியது அவசியம். இந்த நோக்கில் பார்த்தால் தாம்பத்ய உறவு என்பது திருக்கோயில் சிலையாக வடிக்கக் கூடிய அளவிற்குப் புனிதத்தன்மை வாய்ந்தது.
சினிமா, நாடகம், டிவி போன்றவை வந்து,
இந்தப்புனிதத்தை ஆபாசமாக்குவதற்க
முன்பு, கோயில் சிற்பங்களில், இதனைக் கண்டு புனிதமாக வாழும் நெறியை மனித இனம் உணர்ந்து கொள்ளவே இப்படிப்பட்ட சிற்பங்களை வடித்தார்கள். மேற்கொண்டு ஆராய்ந்து இதனை ஆபாசமாக்க கூடாது.
இந்து கோவில்களில் ஆபாசம் எதற்கு?
இதற்கான காரணம் மனிதனின் எண்ணத்தில் இருந்து ஆரம்பம் ஆகிறது.
காமம் இயற்கையின் இனவிருத்திற்கு
முக்கியமான ஒன்று. அக்காமம் ஒவ்வொரு உயிரினத்திர்கும்
ஒவ்வொரு விதமான தன்மையில் மாறுபடும். மனிதனின் வாழ்நாளில் சிறுபகுதியே காமம் அக்காமம் புனிதமானது. அதுவே நாளின் அனைத்து பொழுதிலும் மனித தன்மைக்கு அப்பாற்பட்டு மிருகத்தின் நிலையில் ஆகும் பொழுது அக்காமம் வக்கிர
காமம் ஆகிறது. இதையே வக்கிர புத்தி என்றார்கள். மனிதனின் எண்ணத்திற்குக்கும் கண்களினால்
எழும் ஒளிக்கதிர்கும் சம்பந்தங்கள் உள்ளது. கண்களினால் எழும் ஒளிக்கதிர் எண்ணும் எண்ணத்திற்கு ஏற்றார்போல் நன்மையாகவும், தீமையாகவும் விளைகின்றது.
இதையே முன்னோர்கள் நல்லதையே நினை நல்லது நடக்கும் என்றார்கள்.
"ஊன் பற்றி நின்ற உணர்புற மந்திரம்
தான் பற்றி நிற்கும் தலைபடும் தாமே"
என்ற திருமந்திர திருபதிகம் மூலமும்
உடலால் பற்றிய பற்றுகளால் நன்மை,தீமை தானே விளையும் என அறியலாம். இனி கோவிலின் அமைப்பை பார்ப்போம். கோவிலின் முகப்பு கோபுரம் ஏன் இவ்வளவு உயரமாக அமைத்தார்கள். நவதானியங்கள் எனப்படும் மனிதனுக்கு
அத்தியாவசியமான நெல், கோதுமை,பாசிப்பயறு, துவரை, மொச்சை, எள், கொள்ளு, உளுந்து, கடலை முதலானவைகளை இயற்கை சீற்றத்திலுருந்து காக்கவே உயரமான கோபுரத்தை அமைத்து அதில் கலசம் எனும் சிறப்பு பாத்திரத்திலே வைத்தனர். கலசத்தின் வடிவம் மேற்கூறை கூர்மையானதாக காற்று புகாத வண்ணம்அமைத்தனர். இக் கலசம் கோவிலின் இடிமின்னல்களை
தாங்கும் சக்தியும் கொண்டது.
கலசத்தின் உள்இருக்கும் தானியங்கள் 12 வருடம் விதையின் தன்மை மாறாமல்
உயிருடன் இருக்கும். இயற்கை சீற்றத்தினால் விதைகள்
அழிவுற்றால் இக்கலசத்தில் இருந்து எடுத்து விவசாயம் செய்யலாம் என்பதே
முன்னோர்களின் நோக்கம்.
இத்தானிய கலசத்தை வக்கிரபுத்தி
கொண்ட ஒருவன் கண்டால் அவன் கெட்ட எண்ணத்தாலே அத்தானியங்களின் ஆயுள்
குறையும். இவர்களால் யாதொரு நன்மையும் இல்லை தீமையே அதிகம்.
முள்ளை முள்ளால் எடுப்பது போல
வக்கிரத்தை வக்கிரத்தால் அழித்தனர்.
கண்ணில் தென்படும் விதத்தில் வக்கிர
சிலைகளை வடிவமைத்தனர்.
வக்கிரவாதி கண்கள் தனக்கு தேவையான வெறும் சிலைகளை ரசித்தது. தானியகலசம் இவன் எண்னத்திற்கும் எட்டாமல் போயிற்று.
கோவிலின் உள்ளே ஏன் வக்கிர சிலைகள் அமைத்தார்கள்?
வெளி பிரகாரத்திலே கெட்ட எண்ணம்
கொண்டவர் நிற்க. கருவறையில் நல்ல எண்ணம் கொண்டவர் நிற்க என பிரிப்பார் இல்லாமலேயே
வகைபடுத்தி புறம்தள்ளினார்கள்.
நல்ல எண்ணம் கொண்டவர்கள் வக்கிரத்தை தாண்டி மூலத்தை அடைகிறார்கள்.
"வக்கிரம் என்றுமே வெளியில் இருக்கும்
அடிமையாக" எண்ணத்தின் அதிர்வலைகளின் குவியலே பிரார்தனை அப்பிரார்தனையில் தீய எண்ணங்களின்
அதிர்வுகள் கலக்காமல் இருக்கவும் இது
போன்ற சூட்சம வழிமுறைகளை வகுத்தனர் முன்னோர்கள்.
முன்னோர்கள் செயல் காரணம் இல்லாமல் இல்லை. செயல் அறியாத சிலரே குறை கூறுகின்றார்கள்
இக்கேள்விக்கு ஆயிரம் காரணங்கள் அறிஞர்கள்சொல்லியிருக்கிறார்கள்.
ஓம் நமோ நாராயணாய நமஹ .

Friday, 12 October 2018

நவாக்கரி சக்கரம் , மந்திர பிரயோகம் . திருமூலர் பெருமான் உலகுக்கு சொன்ன உயர்ந்த_மந்த்ர ரகசியம்

நவாக்கரி சக்கரம் , மந்திர பிரயோகம்*
***************************************
( *திருமூலர் பெருமான் உலகுக்கு சொன்ன_உயர்ந்த_மந்த்ர ரகசியம்* )
நவாக்கரி சக்கரம் நான் உரை செய்யின் நவாக்கரி ஒன்று நவாக்கரி ஆக
நவாக்கரி எண்பத்து ஒருவகையாக நவாக்கரி அக் கிலீ சௌ முதல் ஈறே.
சௌமுதல் அவ்வொடு ஹௌஉடன் அம் க்ரீம் கௌவுகளும் ஐயுளும் கலந்து ஹ்ரீம் ஸ்ரீம்
என்று ஒவ்வில் எழும் க்லீம் மந்திர பாதமாச் செவ்வுள் எழுந்து சிவாயநம என்னே.
நவ அட்சரிம் என்பது தமிழில் மருவி நவாக்கரி ஆனது. ஒன்பது சக்திகளின் அட்சர மந்திரம். ஒவ்வொன்றையும் முதலாக்கிக்கூற 81 அட்சரங்கள் ஆகும். முதல் வரிசையில் க்லீம் முதல் சௌம் வரை. அட்சரங்கள் இடம் மாறும்போது ஒளியும் நிறமும் மாறும்.
ஒன்பது வரிசையில் ஒவ்வொரு வரிசையும் மேலிருந்து கீழாகவும் கீழிருந்து மேலாகவும் கூறியபின் ஓம் சிவாயநம என முடிக்கவும்.
மேலிருந்து கீழாக கூறுதல்
க்லீம்
ஸ்ரீம்
ஹ்ரீம்
ஐம்
கௌம்
க்ரீம்
ஹௌம்
ஔம்
சௌம்
கீழிருந்து மேலாக கூறுதல் முடிக்கும்போது ஓம் சிவாய நம என முடிக்கவும்.
நவாக்கரியாவது நானறிவித்தை நவாக்கரி உளெழு நன்மைகள் எல்லாம்
நவாக்கரி மந்திர நாவுளே ஓத நவாக்கரி சக்தி நலம்தரும் தானே.
நலந்தரு கல்வியும் ஞானமும் எல்லாம் உரம்தரும்வல்வினை உம்மை விட்டோடிச்
சிரம் தரு தீவினை செய்வது அகற்றி வரம்தரு சோதியும் வந்திடும் காணே.
நான் அனுபவித்த மந்திரம் வித்தை இது.நாவுக்குள் மௌனமாக இதை ஓதினால் நன்மைகள் தரும். நவாக்கரி என்பது உள் எழு நன்மை என்பதால் உடம்பிற்குள் சார்த்தி சொல்லல் ஆகும். இந்திரயோனி- உள்நாக்கு, பிரம்மநாளம்- தலைஉச்சி. நவாக்கரி சக்கரம் ஓதுவதால் கல்வி ஞானம் முதலிய செல்வமும் வலிய வினை நீக்கமும் தீவினைகள் வராமல் செய்வதும் ஆகிய வரம் தரும் உள் ஒளி உண்டாகும்.
நவாக்கரி அட்சரம் உடல் உள்ளே சார்த்துமிடம்.
க்லீம்- மூலாதாரம்
ஸ்ரீம்- சுவாதிட்டானம்
ஹ்ரீம் - மணிப்பூரகம்
ஐம்- அநாகதம்
கௌம் - விசுத்தி
க்ரீம்- இந்திரயோனி
ஹௌம்- ஆக்ஞா
ஔம்- நெற்றி உச்சி
சௌம்- பிரம்ம நாளம்
மேலிருந்து சொல்லி கீழிருந்து மேல்வரை சொல்லுவது ஒரு முறையாகும்
நினைந்திடும் அச்சிறீம் அக்கிலீம் ஈறா நினைந்திடும் சக்கரம் ஆதியும் ஈறும்
நினைந்திடும் நெல்லொடு புல்லினை உள்ளே நினைந்திடும் அர்ச்சனை நேர்தருவாளே
ஸ்ரீம் என்பதை முதலாகவும் க்லீம் என்பதை இறுதியாகவும் இச்சக்கரம் ஓதி நெல்லும் அருகம்புல்லும் தூவி அர்ச்சனை செய்க பராசக்தி அருள் புரிவாள். முதலில் இருந்த க்லீம் இதில் இறுதியானது. இரண்டாவதாக இருந்த ஸ்ரீம் முதலாவதானது. இதுபோல் ஒன்பது ஒலிகளும் முதலும் ஈறும் ஆகும்.
ஹ்ரீம் முதலாகவும் ஸ்ரீம் இறுதியாகவும் சொல்வதால் நாடாளும் அரசரும் வசமாவர்.
ஐம் முதலாகவும் ஹ்ரீம் இறுதியாகவும் சொல்வதால் நால்வகை வாக்கைன் சக்தியை அடியலாம். மேலும் வேதம் ஆகமம் ஆகியன பயிலாம்.
கௌம் முதலாகவும் ஐம் இறுதியாகவும் சொல்வதால் பகையை வெல்லலாம் ஓதிய்வர்களை பல உயிர்களும் வணங்கும்.
க்ரீம் முதலாகவும் கௌம் இறுதியாகவும் சொல்வதால் தெய்வ உறவாகி மழையும் செல்வமும் தரும்.
ஹௌம் முதலாகவும் க்ரீம் இறுதியாகவும் சொல்வதால் திருஐந்து எழுத்து ஓதி பயன் பெறுவர். மனோன்மணியின் அருள் கிடைக்கும்.
ஔம் முதலாகவும் ஹௌம் இறுதியாகவும் சொல்வதால் சுழுமுனை நாடியை வசம் செய்யும் அமுதேச்வரியின் அருள் கிடைக்கும்.
சௌம் முதலாகவும் ஔம் இறுதியாகவும் சொல்வதால் தலையில் சோதி விளக்காக பராசக்தி தெரிவாள்.
ஏய்ந்த மர உரி தன்னில் எழுதிநீ வாய்ந்த இப்பெண் எண்பத்தொன்றில் நிறைந்தபின்
காய்ந்த அவிநெய் எள்கலந்து உடன் ஓமமும் ஆம்தலத்து ஆம் உயிர் ஆகுதி பண்ணே
மர உரியில் ஒன்பது பீஜங்களையும் ஒன்பது வகையாக எழுதி ஓமத் தீயில் நெய்யும் எள்ளும் வார்த்து உயிரையே நெய்யாகத் தருவதாய் எண்ணி ஆகுதி செய்க. காய்ந்த வாழை மரப்பட்டையில் நெய்யில் குங்குமம் கரைத்து நவாக்கரிச் சக்கரம் 9வகை 81 வருமாறு வரிசையில் தனித்தனியே எழுது. தீ வளர்த்து ஓமகுண்டத்தில் ஒன்பதுவகை சமித்துக்களும் எரிய விட்டு நெய்யும் எள்ளும் தெளித்து எரியச் செய்து ஒவ்வொரு வகைச் சக்கரமாகத் தீயில் இடு. செம்பு, வெள்ளி தங்கத்தில் எழுதினால் குங்குமம் சந்தனம் கஸ்தூரி சவ்வாது புனுகு நெய் ஆகிய திருமஞ்சனம் அர்ச்சனை செய்க. யாகம் செய்த பலன் தரும். சிவன் போல் மேனி உண்டாகும்.
க்லீம்
ஸ்ரீம்
ஹ்ரீம்
ஐம்
கௌம்
க்ரீம்
ஹௌம்
ஔம்
சௌம்
ஸ்ரீம்
ஹ்ரீம்
ஐம்
கௌம்
க்ரீம்
ஹௌம்
ஔம்
சௌம்
க்லீம்
ஹ்ரீம்
ஐம்
கௌம்
க்ரீம்
ஹௌம்
ஔம்
சௌம்
க்லீம்
ஸ்ரீம்
ஐம்
கௌம்
க்ரீம்
ஹௌம்
ஔம்
சௌம்
க்லீம்
ஸ்ரீம்
ஹ்ரீம்
கௌம்
க்ரீம்
ஹௌம்
ஔம்
சௌம்
க்லீம்
ஸ்ரீம்
ஹ்ரீம்
ஐம்
க்ரீம்
ஹௌம்
ஔம்
சௌம்
க்லீம்
ஸ்ரீம்
ஹ்ரீம்
ஐம்
கௌம்
ஹௌம்
ஔம்
சௌம்
க்லீம்
ஸ்ரீம்
ஹ்ரீம்
ஐம்
கௌம்
க்ரீம்
ஔம்
சௌம்
க்லீம்
ஸ்ரீம்
ஹ்ரீம்
ஐம்
கௌம்
க்ரீம்
ஹௌம்
சௌம்
க்லீம்
ஸ்ரீம்
ஹ்ரீம்
ஐம்
கௌம்
க்ரீம்
ஹௌம்
ஔம்
யாகத்தில் இதை ஆஹுதி செய்யும்போது ஒன்பது உடல் உள் உருப்புக்களிலும் இந்த ஒலிகலைச் சொல்லி செய்யவும். ஒன்பது வரிசைகள் ஒவ்வொன்றையும் மேலிருந்து கீழாகவும் கீழிருந்து மேலாகவும் ஓதி ஓமம் செய்க.
*யோகம் செய்யும் முறை*
***************************
நெறிவழியே சென்று நேர்மையுள் ஒன்றி தறி இருந்தாற் போலத் தம்மை இருத்திச்
சொறியினும் தாக்கினும் தூண் என்று உணராக் குறிஅறிவாளர்க்கு கூடலும் ஆமே.
கம்பம்போல் உடல் ஆடாமல் அசையாமல் மூலாதாரம் முதல் தலை உச்சியாகிய சகஸ்ராரம் வரை மேல்நோக்கி உள் உணர்வைச் செலுத்த வேண்டும். உடலைப் பிறர் கீறினாலும் தாக்கினாலும் திடுக்கிட்டு உணர்வு கலையாமல் குறிக்கோளாகிய சிவத்தையே அடையும் முயற்சிய விடாதவர்க்கு யோகம் கைகூடும்.
பேணிற் பிறவா உலகருள் செய்திடும் காணில் தனது கல்வியுளே நிற்கும்
நாணில் நரகநெறிக்கே வழிசெயும் ஊனில் சுடும் அங்கி உத்தமன் தானே.
இயற்கையிலேயே எல்லா உடலிலும் மயிர்க்காம்பு தோறும், அணுக்கள், திசுக்கள் தோறும் நெருப்பு மேல் நோக்கிப் போகிறது. மூச்சுக்காற்று இரத்தத்தின் மூலம் எல்லா அணுக்களிலும் சென்று அங்கே எரிகிறது, உண்ட உணவு செரிமானத்திற்காக எரிகிறது, இதற்கு மூலமான ஒளியே குண்டலினிதான். அவ்வப்போது மின் காந்த அலைகள் உடம்பிற்குள் புகுவதாலும் நிறைய ஒளித்துகள்கள் நம் உடல் முழுவதும் உள்ளன. இதனால் நம் உடம்பு சுடுகிறது. எனவே உடலில் உள்ள தீயும் பிரபஞ்சத்தில் உள்ள தீயும் ஒன்றே ஆகும். இதனால் உடம்பு தீயை வைச்வாநரன் எனலாம். விசுவமாகிய பிரபஞ்சம் முழுவதும் நரன் உடம்பிலும் உள்ள அக்னி என்பதாகும். தீயின் இயல்பு மேல் நோக்கிப் போவது. யோகமும் மேல்நோக்கி போகும்போது நெருப்பின் வேகம் கூடும். ஓரிடத்தில் திரண்டு செல்லும். இப்படி திரட்டி ஒரே ஒழுங்காக அக்னியை எழுப்பினால் யோகம் சித்தியாகும். நினைவினால் உண்டாகும் தீயும் மந்திர ஒலிமூலம் உண்டாகும் தீயும் முன்பே உடலில் மேல் நோக்கிப்போகும் தீயும் ஆகிய முத்தீ தட்சிணாக்னி, ஆகவநீயம், காருகபத்தியம் ஆகும். இதுவே சந்திர சூரிய அக்னி மண்டலங்களாகும். உடம்பைச் சுடும் அந்த நெருப்பு சிவமாகிய நெருப்பே. உலகின் எல்லா ஒளிக்கும் சிவமே காரணம்.
யோகச் சமாதியின் உள்ளே அகலிடம் யோகச் சமாதியின் உள்ளே உளர் ஒளி
யோகச் சமாதியின் உள்ளே உளசக்தி யோகச் சமாதி உகந்தவர் சித்தரே.
சமாதி யோகம் செய்பவர் உள்ளே பிரபஞ்சம் முழுவதும் அடக்கம். சிவ ஒளியைக் காண்பர். பராசக்தியை உணர்வர். யோகச் சமாதியை மகிழ்ந்து ஏற்பவர் சித்தர்களே.
தாங்குமின் எட்டுத் திசைக்கும் தலைமகன் பூங்கமழ் கோதைப் புரிகுழலாளொடும்
ஆங்கது சேரும் அறிவுடையார்கட்குத் தூங்கொளி நீலம் தொடர்தலும் ஆமே.
எந்த ஆதாரத்திலும் நிற்காமல் தனித்து தொங்குவது போல் நீல ஒளி தொடர்ந்து உயர்ந்து யோகியர்க்கு சகஸ்ராரத்தில் நீலச் சுடர் ஒளியாய் பராசக்தி காட்சி தருவாள்
நாகமும் ஒன்று படர் ஐந்து நால்-அது போகமும், புற்றில் பொருந்தி நிறைந்தது
ஆகம் இரண்டும் படம் விரித்து ஆட்டு ஒழிந்து ஏகபடம் செய்து உடம்பு இடல் ஆமே.
தூல உடல் சூக்கும உடல் என்ற இருவகை உடலாக செயல்படும். தூல உடலில் குண்டலினி சக்தி ஐந்து விதமான பொறிகள், புலன்கள், அனுபவங்கள் ஆகியவற்றைப் படம்போல் விரித்து ஆடிப்பாடிச் செய்வது சராசரியான வாழ்வு. சூக்கும உடலில் அதே குண்டலினி படம் எடுத்து புலன் அனுபவம் எதுவும் கொள்ளாமல் தூல உடம்பையே மறந்து யோகம் செய்து வாழ்வது இன்னொருவகை. நான்கு என்பது அந்தக்கரணங்கள். ஐந்தலைப்பாம்பு என்பது குண்டலினியையும் புலன் நுகர்ச்சி அனுபவம் ஆகியவையாம். அவை சுருங்கும்போது யோக சித்தி கிட்டும்.
ஆறு அந்தமும் கூடி ஆடும் உடம்பினில் கூறிய ஆதாரம் ஆறும் குறிக்கொள்மின்
ஆறிய அக்கரம் ஐம்பதின் மேலாக ஊறிய ஆதாரத்து ஓர் எழுத்தாமே.
ஆகும் உடம்பும் அழிகின்ற அவ்வுடல் போகும் உடம்பும் பொருந்தியவாறுதான்
ஆகிய அக்கரம் ஐம்பது தத்துவம் ஆகும் உடம்புக்கும் ஆறந்தமாமே.
ஆறு அத்துவாக்களால் உடம்பில் செறிந்துள்ள ஆறு ஆதாரங்களையும் குறித்து அவற்றில் 51 அட்சரங்களையும் சொல்லவும். அது ஓம் எனும் மந்திரப் பொருளை அதிகமாக்கும். மந்திரம் பதம் வன்னம் முதலிய அத்துவாக்கள் ஆறு. அத்துவா என்பது வழி எனப்படும். இந்தவழி மூலம் நாம் செய்யும் யோகம் வெற்றி அடையும். 51 அட்சரங்களின் தனி ஒளி நிறம் ஆகியவை ஓம் எனும் மந்திரத்தில் பதிந்து வலுப்பெறும்.
ஆயும் மலரின் அணிமலர் மேலதும் ஆய இதழும் பதினாறும் அங்கு உள
தூய அறிவு சிவானந்தமாகிப்போய் மேய அறிவாய் விளைந்தது தானே
இலிங்கம் அது ஆகுவது ஆரும் அறியார் இலிங்கம் அது ஆகுவ எண்திசை எல்லாம்
இலிங்கம் அது ஆகுவ எணெண் கலையும் இலிங்கம் அது ஆகஎடுத்து உலகே
ஆய் செய்யும் மலர் அநாகதம் ஆகிய இதயத்திற்கும் மேலுள்ள 16 இதழ்த் தாமரை என்பது விசுத்தி-இந்த இடத்தில் ஐம்பெருங்கலைகளில் நான்காம் கலையாகிய சாந்திகலை இங்கு தொடங்குகிறது. எளிய அறிவு சிவானந்தம் உண்ரும் சிவஞானமாகிப்போய் சிவமே ஆக்கும் சாந்தியாதீத கலையாக மாறும். அண்ட லிங்கம் என்பது எது. எட்டு திசைகளும் 64 கலைகளும் வழங்கும் உலகமே ஒரு லிங்கம். அதில் உள்ள எல்லாவற்றையும் சக்தி, சக்தியற்றபொருள், உயிர் உடம்புகள், நடப்பன, இருப்பன முதலிய எல்லாவற்றையும் ஒன்று திரட்டி உணர்வதே அண்ட லிங்கம்.
தரையுற்ற சக்தி தனிலிங்கம் விண்ணாம் திரைபொரு நீரது மஞ்சன சாலை
வரைதவழ் மஞ்சுநீர், வான்உடு மாலை கறையற்ற நந்தி கலையுந்திக்கு ஆமே.
மானுடர் ஆக்கை வடிவு சிவலிங்கம் மானுடர் ஆக்கை வடிவு சிதம்பரம்
மானுடர் ஆக்கை வடிவு சதாசிவம் மானுடர் ஆக்கை வடிவு திருக்கூத்தே
தரையாகிய நிலமே ஆவுடையாராகிய சக்தி, பாணலிங்கம் ஆகாயம், கடல் திருமஞ்சனசாலை, மேகநீர் மஞ்சனநீர். வானின் நட்சத்திரங்கள் மாலைகள் திக்குகள் எட்டும் ஆடையாகும் என அண்டலிங்கத்தை பாவிக்கும் முறையாகும். மனித உடலின் அமைப்பே லிங்க வடிவாகும். சிதம்பரமாகிய சிதாகாசம் மார்பு நடுவில் உள்ளது. சக்தியும் சிவமும் ஆகிய சதாசிவம் புருவ நடுவில் தலையில் உள்ளது. இறைவன் திருக்கூத்தாகிய ஒளிச்சுடரையும் மனித உடலியே காணலாம். எனவே சிவலிங்கம் எனப்பட்டது. பத்மாசனம் இட்டு அமர்ந்திருந்தால் உடல் வடிவம் லிங்க வடிவாவது தெரியும்.
உலந்திலர் பின்னும் உளர் என் நிற்பர் நிலம்தரு நீர்தெளி உள்ளவை செய்யப்
புலம்தரு பூதங்கள் ஐந்தும் ஒன்றாக வலம்தரு தேவரை வந்தி செய்யீரே.
மரணமிலாப் பெருவாழ்வுக்குரிய ஒரு வழி. உடலில் உள்ள ஐந்து பூதங்களின் பகுதிகள் புலனுக்கும் அறிவுக்கும் தொடர்புடையவை. அவற்றை உடம்பில் உணர்ந்து இவைகளுக்குக் காரணமான ஒரு பொருளையும் உணர்ந்து அப்பொருள் தெய்வமென வந்தனை செய்தால் பயன் கிடைக்கும்.
கோயில் கொண்ட அன்றே குடிகொண்டது ஐவரும்
வாயில் கொண்டு ஆங்கே வழிநின்று அருளுவர்
தாய் இல்கொண்டாற்போல் தலைவன் என்னுள்புக
வாயில் கொண்டு ஈசனும் ஆளவந்தானே.
ஆன்மா உடலாகிய கோவிலுக்குள் வரும்போது அந்த ஐந்து பூதங்களும் இவ்வுடம்பில் மரணமில்லா இடம் பெற்று இருக்கின்றனர். ஐந்து பொறிபுலன்களை உருவாக்கி ஆன்மாவிற்கு இவ்வுலக் வாழ்வுக்கான அறிவைத் தந்து வருகின்றன். தாய் சேய்க்கு பால் தருவதுபோல் இறைவன் இந்த உடம்பாகிய வீட்டிற்கு வந்து ஞானமாகிய பாலை வழங்குவான்.
உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம் வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுரவாசல்
தெள்ளத்தெளிந்தார்க்குச் சிவன் சிவலிங்கம் கள்ளப் புலனைந்தும் காளாமணி விளக்கே
மானுடர் உடல் சிவலிங்கம், யோகியார் உள்ளமே கருவறை. உடம்பே திருக்கோயில்கள் பகுதியாம். திருநாமத்தை ஓதும் அவர் வாய் கோபுர வாசல். நுணுகி அறிந்தோர்க்கு உயிரே சிவலிங்கம். மயங்கி நின்ற புலன்கள் ஐந்து மாணிக்க ஒளிவிளக்காகும். காளம் என்றால் நஞ்சு. அது உறைந்து நாகரத்தினம் ஆவதுபோல் ஐந்தலைநாகமாக ஐந்து புலன்களும் குண்டலினியை மேம்படுத்தும்.
படமடக் கோவில் பரமற்கு ஒன்று ஈயின் நடமாடு அக்கோயில் நம்பற்கு ஒன்று ஆகா
நடமாடு அக்கோயில் நம்பற்கு ஒன்று ஈயின் படமாடு அக்கோயில் பரமற்கு அது ஆமே.
தண்டு அறு சிந்தை தபோதனர் தாம் மகிழ்ந்து உண்டது மூன்று புவனமும் உண்டது
கொண்டது மூன்று புவனமும் கொண்டதுதென்று எண்திசை நந்தி எடுத்துரைத் தானே.
கோயிலில் அமர்ந்த இறைவனுக்கு ஒன்றைச் செய்வார்களே அல்லாமல் இறைவனை நெஞ்சில் நிறுத்திய அடியார்க்கு எதையும் செய்யார்கள். அடியார்களுக்கு ஒன்று செய்தால் அதுவே இறைவனுக்கும் செய்வது ஆகும். இறைவன் விரும்பி இருக்கும் இடமடியர் மனமே. தவம் செய்வோர் தாம் மனம் மகிழ்ந்து ஒன்றை உண்டால் அது மூன்று உலகங்களும் மகிழ்ந்து உண்டதற்குச் சமம். அதுபோல் அவர்களுக்கு ஒன்று கொடுக்க அவர்கள் அதை ஏற்றுக் கொண்டால் அதுவும் மூன்று உலகமும் ஏற்றுக்கொண்டதேயாகும்.
வித்தகமாகிய வேடத்தர் உண்ட ஊன் அத்தன் அயன்மால் அருந்திய வண்ணமாம்
சித்தம் தெளிந்தவர் சேடம் பருகிடின் முத்தியாம் என்று நம்மூலன் மொழிந்ததே
சித்தம் சிவமாகத் தெளிந்தஞானியர் உண்டது போக எஞ்சியதைப் பருகினால் மூத்தியடைந்ததேயாகும். எல்லாவற்றிற்கும் மூலகாரணமான கடவுள்.
என்தாயோடு என் அப்பன் ஏழ் ஏழ் பிறவியும் அன்றே சிவனுக்கு எழுதிய ஆவணம்
ஒன்றாய் உலகம் படைத்தான் எழுதினான் நின்றான் முகில்வண்ணாண் நேர் எழுத்தாயே.
ஏதோ ஒரு பிறவியில் என்தாய் தந்தை இருவரும் ஏழ் பிறவியிலும் சிவனுக்கு நான் அடிமை என்று அன்றே ஆவணம் எழுதி விட்டனர். பிரம்மா ஆவணம் தயாரித்தவன் திருமால் சாட்சிக் கையெழுத்திட்டவன் ஆவர்.
வாக்கு மனமும் இரண்டும் மவுனமாம் வாக்கு மவுனத்து வந்தாலும் மூங்கையாம்
வாக்கு மனமும் மவுனமாம் சுத்தரே ஆக்கும் அச்சுத்தத்தை யார் அறிவார்களே.
மவுன விரதம் என்பது வாக்கும் மனமும் அடங்குவதே. மவுனத்தில் பேசுவதால் ஊமையானது. சிலர் மவுனத்தின்போது பார்வையாலும் சைகையாலும் எழுதிக் காட்டுவதாலும் சில குறிப்புக்கலைப் புலப்படுத்துவர். அது மவுனமாகாது. குறைந்த ஒளியுள்ள தனி அறையில் கண்கலையும் மூடியபடி இறைவன் நாமத்தை மட்டும் நினைத்தவராய் இருப்பதே மவுனத்தில் சிறந்தது.
சீவன் எனச் சிவனார் என்ன வேறு இல்லை சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின் சீவனார் சிவன் ஆயிட்டு இருப்பாரே.
ஆன்மாவும் சிவனும் வேறல்ல. சிவனைச் சீவன் அறியும் போது சீவனே சிவனாகிவிடும்.
அஞ்சும் அடக்கு அடக்கு என்பர் அறிவிலார் அஞ்சும் அடக்கும் அமரரும் அங்கு இல்லை
அஞ்சும் அடக்கில் அசேதனமாம் என்றிட்டு அஞ்சும் அடக்கா அறிவு அறிந்தேனே.
புலன்கள் ஐந்தும் அடக்கு அடக்கு என்பர். தேவர்கள் கூட ஐந்தும் அடக்கி இருப்பதில்லை. ஐந்து புலன்களையும் அடக்கினால் உயிருக்கு அறிவு வரும் வாயில்கள் அடைபட்டு அறியாமை உண்டாகும் என்பதால் ஐந்தையும் அடக்கிப் பழகாமல் அறிவை அறிந்தேன். மனம் அடக்க அடக்க வலிமையாகி நம்மை மீறும். நம் சக்தி வீணாகும். எனவே எப்போதும் பரந்து விரிவதை இயற்கையாகக் கொண்ட மனத்தை பிரபஞ்சம் அளவுக்கு விரியச் செய்து கொண்டே போனால் நமக்கு நல்ல அறிவு வரும்.
முழக்கி எழுவன மும்மத வேழம் அடக்க அறிவென்னும் கோட்டையை வைத்தேன்
பிழைத்தன ஓடிப் பெருங்கேடு மண்டிக் கொழுத்தன வேழம் குலைக்கின்றவாறே.
ஐந்து புலன்களை ஒடுக்க அறிவு எனும் கோட்டையைக் கட்டினேன். அந்தக் கோட்டையையே மும்மதம் கொண்ட களிறுகள் கடந்து வந்து கரும்புக் காட்டை நாசமாக்கின. மூன்று மதங்கல், மும்மலம், மூன்று மாயை இவைகளுக்கு கட்டுப்பட்டது மனம்.
ஐந்தில் ஒடுங்கில் அகலிடம் ஆவது ஐந்தில் ஒடுங்கில் அரும்தவம் ஆவது
ஐந்தில் ஒடுங்கில் அவன்பதம் ஆவது ஐந்தில் ஒடுங்கில் அருள் உடையாரே.
ஐந்து புலன்களை அடக்குவதற்குப் பதில் ஒடுக்கினால் அதாவது நம் வழியே அதை நடக்கச் செய்தால் அது பிரபஞ்சம் முழுவதும் கருதியது ஆகும். அதுவே தவம், திருவடி ஆகும் அது செய்வோர் இறையருள் பெறுவர்.
பெருக்கப் பிதற்றின் என் பேய்த்தேர் நினைந்து என்
விரித்த பொருட்கு எலாம் வித்து ஆவது உள்ளம்
பெருக்கின் பெருக்கும், சுருக்கின் சுருக்கும்
அருத்தமும் அத்தனை, ஆய்ந்து கொள்வார்க்கே.
கானல்நீர் போல் மாயையாகிய உலகக் காட்சிகளை நினைத்து ஒரு பயனும் இல்லை. பிரபஞ்சம் முழுவதும் விரிந்த பொருள்கள் எல்லாவற்றையும் நம் உள்ளம் உற்று அறிவது ஆகும். உள்ளத்தைப் பிரபஞ்சம் அளவு பெருகச் செய்தால் பெருகும். சுருங்கச் செய்தால் சுருங்கும். மனதில் கற்பித்துக் கூறிய ஒருசொல் நினைவு பிரபஞ்சத்தில் எங்கேயோ உள்ள ஒரு பொருளைச் சென்று அடையும். அப்பொருளுக்கு மனமே விதையாகும்.
நடக்கின்ற நந்தியை நாடோறுமுன்னிப் படர்கின்ற சிந்தையைப் பைய ஒடுக்கிக்
குறிக்கொண்ட சிந்தை குறிவழி நோக்கில் வடக்கொடு தெற்கு மனக் கோயிலாமே.
எல்லா உயிர்களிலும் இயங்கும் சக்தியாக உள்ள இறைவனை நாள்தோறும் நினைத்துப் பழகவேண்டும். அப்போது மனம் பல இடங்களிலும் பரந்து செல்லும். அதை மெலிதாக ஒடுக்கி ஆறு ஆதாரம் சுழுமுனைநாடி ஆகிய குறிக்கோள் தானங்களில் செலுத்துமாறு நினைத்தால் தெற்காகிய மூலாதாரமும் வடக்காகிய சகஸ்ராரமும் ஒன்றுபட்டு மனத்தால் அமைந்த கோயிலாகும். ஆகாயத்திலிருந்து காற்றும், காற்றில் இருந்து நெருப்பும், நெருப்பில் இருந்து நீரும், நீரில் இருந்து நிலமும் உண்டாகின. கீழ் இருந்து மேல் நோக்க பிரிந்தது தன் கரணத்தில் ஒடுங்கும். ஆறு ஆதாரங்களின் இடமறிந்து கீழிருந்து மேலாக பெயர் மந்திர எழுத்துடன் சொல்லி நினைத்தால் உணர்வு அசைவது தெரியும்.
போற்றிசைத்தும் புனிதன் திருமேனியே போற்றிசெய் மீண்டே புலனைந்தும் புத்தி ஆம்
நால்திசைக்கும் பின்னை ஆற்றுக்கும் நாதனை ஊற்றுகை உள்ளத்து ஒடுங்கலும் ஆமே
இறைவன் திருமேனியை நினைத்து அவன் திருமேனியாக நாம மந்திரத்தை அடிக்கடி சொல்லி வந்தால் புலன்கள் ஒடுங்கி புத்தியாக மாறும். திரு ஐந்தெழுத்து முதலான மந்திரங்களே இறைவன் திருமேனி மந்திரங்கல் ஆகும். எட்டெழுத்து திருமாலுக்கும் ஆறு எழுத்து முருகனுக்கும் பதினைந்து எழுத்து பராசக்திக்கும் உரியது. உடலின் நான்கு புறமும் உள்ள நாடிகளுக்கும் நடுவே உள்ள ஆறு போன்ற சுழுமுனை நாடிக்கும் இறைவனே தலைவன். அவன் பெயரை உள்ளத்தில் ஊற்று எடுக்க வைத்தால் உள்ளம் அவனுடன் ஒடுங்கி நிற்கும். எல்லா நாடிகளுக்கும் ஆறுபோல் இணைப்பானது. அது அமுதம் வரும் வழியாகும்.
கைவிடல் ஆவது ஒன்று இல்லை கருத்தினுள் எய்தியவனை இயல்பினால் ஏத்துமின் ஐவருடைய அவாவினில் தோன்றிய பொய்வருடு ஐய புலன்களும் ஐந்தே.
புலன் ஒடுக்கத்திற்காக எதையும் கைவிட்டு ஓட வேண்டாம். கருத்தில் வந்துள்ள இறைவனின் இயல்புகளைப் புகழ்ந்துரைப்பீராக. ஐந்து பொறிகளின் விருப்பத்தால் பொய்யான மாய புலன்கள் ஐந்து உள்ளன. பொய்யானவற்றை நீக்கி மெய்யான இறைவனை துதித்தால் மனம் ஒடுங்கும்.
நேயத்தே நிற்கும் நிமலன் மலம் அற்ற நேயத்தை நல்க வல்லோன் நித்தன் சுத்தனே
ஆயத்தவர் தத்துவம் உணர்ந்தாங்கு அற்ற நேயர்க்கு அளிப்பவன் நீடும் குரவனே
பரிசன வேதி பரிசித்தது எல்லாம் வரிசை தரும்பொன் வகையாகு மாபோல்
குருபரி சித்த குவலயம் எல்லாம் திரிமலம் தீர்ந்து சிவன் அவன் ஆமே
அன்பில் நிறைந்து நிற்பவன் இறைவன் மலமில்லாத அன்பை அவன் அருள்வான். தத்துவம் 36ம் உணர்ந்து அவற்றின் மாயையில் சிக்காது நீங்கி வாழ்பவர்க்கு வீடுபேறு அளிக்கும் குருவாக இறைவனே வருவான். அவன் சுத்தனாகவும் நித்தனாகவும் இருப்பதால் அவன் மீது கொண்ட அன்பும் அந்த இயல்பு உடையதாகும்.
உலோகங்கள் எல்லாவற்றையும் பரிசத்தால் பொன்னாக்கும் ஒரு மருந்து பரிசனவேதி எனும் ரசாயனம். இது எல்லாவற்றையும் பொன் ஆக்குவதுபோல் குருவின் பரிசம் பட்ட உலகம் சிவனாக இருக்கும்.
உள்ளிடும் ஐம்மலம் பாச உணர்வினால் பற்ரு அற நாதன் அடியில் பணிதலால்
சுற்றிய பேதம் துரியம் மூன்றால் வாட்டி தற்பரம் மேவுவோன் சாதகனாமே.
ஐந்து மலம் பந்தபாசம் ஆகியவற்றை உணர்வினால் நீக்கி இறைவன் திருவடியில் பணியும்போது மூன்று விதத்துரியம் காட்டி பிறகு சிவமாகவே நிற்பவே சாதகன். ஐந்து மலமான ஆணவம், கன்மம், மாயை, மாயேயம், திரோதயி.என்பன.
உயிர் அது வேறா உணர்வு எங்கும் ஆகும். உயிரை அறிவியல் உணர்வு அறிவு ஆகும்,
உயிர் அன்று, உடலை விழுங்கும் உணர்வை அயரும் பெரும் பொருள் ஆங்கு அறியாரே
உயிரும் உயிருக்குக் காரண்மானவைக்கு வேறாக உணர்வு என்பதும் உடல் முழுவதும் பரவி உள்ளது. உயிரையும் அதற்கு காரணமானவற்றையும் பிரித்து அறியும்போது உணர்வு என்பது உடலில் தனித்து இயங்குவதையும் உணரலாம்.உயிருக்கு அப்பால் உடலை முழுவதும் உணர்ச்சிவயமாக்கும் ஒரு பெரிய பொருளைப் பலர் அறிவதில்லை. பெரிய பொருள் கடவுள்.
ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் நன்றே நினைமின் நமன் இல்லை நாணாமே
சென்றே புகுங்கதி இல்லைநும் சித்தத்து நின்றே நிலைபெற நீர் நினைந் துய்மினே.
உயிர்குலம் யாவும் ஒன்றே. கடவுள் எல்லா உயிர்க்கும் ஒருவனே என உணர்ந்து பேதமில்லா அன்பில் ஊன்றி நின்றவர்கலுக்கு யம பயமில்லை. மரணமில்லாது வாழலாம். பேதங்களால் வெறுப்பு, பகை முதலிய தீய உணர்வுகள் தோன்றும். மேற்கண்டவாறு நினைத்தால் நல்ல உணர்வே தோன்றும் என்பதால் நன்றே நினையுங்கள்.
காயப்பை ஒன்று சரக்குப் பலவுள மாயப்பை ஒன்று உண்டு மற்றுமோர் பையுண்டு
காயப்பைக்கு உள்நின்ற கள்ளன் புறப்பட்டால் மாயப்பை மண்ணாய் மயங்கியவாறே.
சென்ற பிறவியில் செய்த விணைகள் இப்பிறவியின் உடலுக்குக் காராணமாகி நம் வடிவமைப்பு வாழ்வு முதலியவற்றைத் தீர்மானிக்கும் காரண உடல், கண்ணுக்குத் தெரியாப் பல உறுப்புகளுடன் இருக்கும் சூக்கும உடல், கண்ணுக்குத் தெரியும் தூல உடல் என்ற மூன்று உடல்கள் பைகளுக்குள் பை இட்டது போல் செறிந்து நமக்குள் உள்ளன. யாவற்றுக்கும் காரணமான இறைவன் இவ்வுடலாகிய பையிலிருந்து வெளியேறிவிட்டால் மற்ற பைகளும் உடலும் மண்ணாகி அழியும். காயப்பை- தூல உடல், மாயப்பை- நுண் உடல், மற்றுமோர்பை- காரண உடல். திசுக்களில் உள்ள குரோமோசோம் (43) ஒவ்வொன்றும் உடலின் செயலையும் வாழ்வையும் வடிவையும் தீர்மானிக்கும். அது காரண உடம்பின் பிரதிநிதி.
- சித்தர்களின்_குரல்

தெரிந்துக்கொள்வோம் ஐந்தின் அருமை

தெரிந்துக்கொள்வோம் ஐந்து ஐந்து ஐந்து !!
1.பஞ்ச கன்னியர்
அகலிகை, சீதை, தாரை, திரெளபதி, மண்டோதரி.
2.பஞ்சவாசம்
இலவங்கம், ஏலம், கற்பூரம், சாதிக்காய், தக்கோலம்.
3.பஞ்சாமிர்தம்
சர்க்கரை, தயிர், தேன், நெய், பால்.
4.பஞ்சபாண்டவர்
தருமன், பீமன், அர்ஜுனன், நகுலன், சகாதேவன்.
5.பஞ்சசீலம்
கொல்லாமை, பொய்யாமை, கல்லாமை, காமமின்மை, இரவாமை.
6.பஞ்சதிராவிடர்
தெலுங்கர், திராவிடர், கன்னடர், மகாராஷ்டிரர், கூர்ஜரர்.
7.பஞ்சபட்சி
வல்லூறு, ஆந்தை, காகம், கோழி, மயில்.
8.பஞ்சபுராணம்
தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரியபுராணம்.
9.பஞ்சரத்தினம்
வைரம், முத்து, மாணிக்கம், நீலம், மரகதம்.
10.பஞ்சவர்ணம்
வெண்மை, கருமை, செம்மை, பொன்மை, பசுமை.
11.பஞ்சாங்கம்
கரணம், திதி, நட்சத்திரம், யோகம், வாரம்.
12.பஞ்சமூலம்
செவ்வியம், சித்திரமூலம், கண்டுபாரங்கி, பேரரத்தை, சுக்கு.
13.பஞ்சபாதகம்
பொய், களவு, கள்ளுண்ணல், குருநிந்தை, கொலை.
14.பஞ்சபாணம்
முல்லை, அசோகு, வனசம், சூதம், நீலம்.
15.பஞ்சாயுதம்
சங்கு, சக்கரம், கதை, கத்தி, வில்.
16.பஞ்சபரமோட்டி
அருகர்,சித்தர்,உபாத்தியாயர்,ஆசிரியர்,சாதுக்கள்.
17.பஞ்சசிகை
தலை, உச்சி, கண், புருவம், முழங்கை.
18.பஞ்சதேவர்
பிரம்மா, விஷ்ணு, உருத்திரன், மகேசுரன், சதாசிவன்.
19.பஞ்சஸ்தலம்
காசி, சோமநாத், பூரி, ராமேஸ்வரம், வைத்தியநாத்.
20. பஞ்ச பூதங்கள்
நீர், நிலம், காற்று, நெருப்பு, ஆகாயம்...!!!

நவகிரகங்களின் முழு விவரங்கள் (பயோடேட்டா)

நவகிரகங்களின் பயோடேட்டா
1.#சூரியன்.
காசியப முனிவரின் குமாரர். ஒளிப்பிழம்பானவர். நவக்ரகங்களில் முதன்மை ஸ்தானம் பெற்றவர்.
சிம்மராசிக்கு அதிபதி. நவகிரகங்களில் நடுவில் அமர்ந்திருப்பவர்.
திக்கு - கிழக்கு
அதிதேவதை - அக்னி
ப்ரத்யதி தேவதை - ருத்திரன்
தலம் - சூரியனார் கோவில்
நிறம் - சிவப்பு
வாகனம் - ஏழு குதிரைகள் பூட்டிய ரதம்
தானியம் - கோதுமை
மலர் - செந்தாமரை , எருக்கு
வஸ்திரம் - சிவப்பு
ரத்தினம் - மாணிக்கம்
அன்னம் - கோதுமை, ரவா, சர்க்கரைப் பொங்கல்
2.#சந்திரன்.
பாற்கடலில் தோன்றியவர். தண்ணொளி உடையவர் . வளர்பிறையில் சுபராகவும், தேய்பிறையில் பாபராகவும் விளங்குபவர்.
கடக ராசிக்கு அதிபதி.
திக்கு -தென்கிழக்கு
அதிதேவதை - ஜலம்
ப்ரத்யதி தேவதை - கௌரி
தலம் - திருப்பதி
நிறம் - வெள்ளை
வாகனம் - வெள்ளைக் குதிரை
தானியம் - நெல்
மலர் - வெள்ளை அரளி
வஸ்திரம் - வெள்ளாடை
ரத்தினம் - முத்து
அன்னம் - தயிர் சாதம்
3 . #அங்காரகன் (செவ்வாய்)
இவர் வீரபத்திரர் அம்சம். சுப்ரமணியரை தெய்வமாகக் கொண்ட இவர், பாவ பலனைக் கொடுக்கும் குரூரர்.
மேஷம் , விருச்சிக ராசிகளுக்கு அதிபதி.
திக்கு -தெற்கு
அதிதேவதை - நிலமகள்
ப்ரத்யதி தேவதை - க்ஷேத்திரபாலகர்
தலம் - வைத்தீசுவரன் கோவில்
நிறம் - சிவப்பு
வாகனம் - ஆட்டுக்கிடா
தானியம் - துவரை
மலர் - செண்பகப்பூ, சிவப்பு அரளி
வஸ்திரம் - சிவப்பு ஆடை
ரத்தினம் - பவளம்
அன்னம் - துவரம் பருப்பு பொடி சாதம்
4.#புதன்.
இவர் சந்திரனுடைய குமாரர். தீய கிரகங்கள் விளைவிக்கும் பீடைகளை அழிக்கும் ஆற்றல் இவருக்கு உண்டு.
மிதுனம், கன்னி ராசிகளுக்கு அதிபதி
திக்கு - வட கிழக்கு
அதிதேவதை - விஷ்ணு
ப்ரத்யதி தேவதை - நாராயணன்
தலம் - மதுரை
நிறம் - வெளிர் பச்சை
வாகனம் - குதிரை
தானியம் - பச்சைப் பயறு
மலர் - வெண்காந்தள்
வஸ்திரம் - வெண்ணிற ஆடை
ரத்தினம் - மரகதம்
அன்னம் - பாசிப்பருப்பு பொடி சாதம்
5.#குரு.
இவர் தேவ குரு என்னும் பட்டத்தை உடையவர். இவருடைய பார்வையால், தோஷங்கள் அனைத்தும் நீங்கும். பூரண சுபர்.
தனுசு , மீன ராசிகளுக்கு அதிபதி.
திக்கு - வடக்கு
அதிதேவதை - பிரம்மா
ப்ரத்யதி தேவதை - இந்திரன்
தலம் - திருச்செந்தூர்
நிறம் - மஞ்சள்
வாகனம் - மீனம்
தானியம் - கடலை
வஸ்திரம் - மஞ்சள் நிற ஆடை
ரத்தினம் - புஷ்பராகம்
அன்னம் - கடலைப் பொடி சாதம் , சுண்டல்.
6.#சுக்கிரன்.
இவர் அசுர குரு. இவரை மழைக்கோள் என்றும் அழைப்பர். சுபர். ரிஷபம்,
துலாம் ராசிகளுக்கு அதிபதி.
திக்கு - கிழக்கு
அதிதேவதை - இந்திராணி
ப்ரத்யதி தேவதை - இந்திர மருத்துவன்
தலம் - ஸ்ரீரங்கம்
வாகனம் - முதலை
தானியம் - மொச்சை
மலர் - வெண் தாமரை
வஸ்திரம் - வெள்ளாடை
ரத்தினம் - வைரம்
அன்னம் - மொச்சைப் பொடி சாதம் .
7.#சனி
இவர் சூரியனுடைய குமாரர். பாவ பலன் தருவதில் ஈசுவர பட்டம் பெற்றவர். சனியைப் போல கெடுப்பாரும் இல்லை, கொடுப்பாரும் இல்லை என்பது பழமொழியாகும்.
மகரம் , கும்பம் ராசிகளுக்கு அதிபதி.
திக்கு - மேற்கு
அதிதேவதை - யமன்
ப்ரத்யதி தேவதை - பிரஜாபதி
தலம் - திருநள்ளாறு
நிறம் - கருமை
வாகனம் - காகம்
தானியம் - எள்
மலர் - கருங்குவளை, வன்னி
வஸ்திரம் - கருப்பு நிற ஆடை
ரத்தினம் - நீலம்
அன்னம் - எள்ளுப்பொடி சாதம்
8.#ராகு
இவர் அசுரத்தலையும் , நாக உடலும் உடையவர். மிக்க வீரம் உடையவர். கருநாகம் என்று அழைக்கப் படுபவர்.
திக்கு - தென் மேற்கு
அதிதேவதை - பசு
ப்ரத்யதி தேவதை - பாம்பு
தலம் - காளத்தி
நிறம் - கருமை
வாகனம் - நீல சிம்மம்
தானியம் - உளுந்து
மலர் - மந்தாரை
வஸ்திரம் - கருப்பு நிற ஆடை
ரத்தினம் - கோமேதகம்
அன்னம் - உளுத்தம்பருப்புப்பொடி சாதம்
9.#கேது
இவர் நாகத்தலையும் அசுர உடலும் உடையவர். சிகி என்றும் , செந்நாகம் என்றும் அழைக்கப்படுபவர்.
திக்கு - வட மேற்கு
அதிதேவதை - சித்திரகுப்தன்
ப்ரத்யதி தேவதை - பிரமன்
தலம் - காளத்தி
நிறம் - செம்மை
வாகனம் - கழுகு
தானியம் - கொள்ளு
மலர் - செவ்வல்லி
வஸ்திரம் - பல நிற ஆடை
ரத்தினம் - வைடூரியம்
அன்னம் - கொள்ளுப்பொடி சாதம்
நவகிரக தோசம் போக்கும் சில பொதுவான வழிமுறைகளும் உள்ளன.
இவ்வழிமுறைகள் எளிதானதும் எல்லாராலும் கடைப்பிடிக்கக் கூடியதுமாகும். அவற்றை இங்கு காண்போம்.
காய்ச்சாத பசும்பாலை ஏதேனும் ஒரு கோவிலுக்கு 15 நாட்கள் கொடுத்தல்: வெள்ளி டம்ளர்களை நீர் அருந்தப் பயன்படுத்துதல் சுக்கிரனை பலப்படுத்தும்.
*நீலம் மற்றும் பச்சை ஆடைகளை தவிர்த்தல் சனி, புதன் பாதிப்பிலிருந்து விலக்கும்.
*தினமும் நெற்றியில் மஞ்சள் திலகம் அணிதல் குருவருள் கிடைக்க வழி செய்யும்.
*கண் தெரியாதவர்களுக்கு இனிப்புகள் வழங்குதல் சனியை ப்ரீத்தி அடையச் செய்யும்.
*கைப்பிடி அரிசியை நதி அல்லது ஏரியில் போடவும். இது சந்திரனின் பலத்தை கூட்டும்.
*தோலில் செய்த மணிபர்சில் பணம் வைக்க வேண்டாம். சனி கெட்டிருப்பவர்களின் கெடு பலனைக் குறைக்கும்;.
* வாகனத்தை எப்போதும் நல்ல நிலையில் சீராக வைத்திருக்க வேண்டும். சனி பலம் நன்றாக அமையும். (ஜாதகத்தில் சனி கெட்டு, அவரது தசை நடந்தால் வாகனத்தில் அதிக பராமரிப்பு செலவு ஏற்படும் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும்.)
*வீட்டில் சூரியனுக்குரிய யாகங்கள் செய்வதும் தினமும் சூரியனுக்கு நீர் படைப்பதும் சூரிய பலத்தை அதிகரிக்கச் செய்யும்.
*தினமும் சரஸ்வதி மந்திரம் ஜெபிப்பது புதன் பலத்தைக் கூட்டும்: பிள்ளைகளின் கல்வியை மேம்படுத்தும்.
*வியாழக்கிழமைகளில் கோவில்களில் லட்டு வழங்குவது குரு பலத்தை அதிகரிக்கும். அதுபோல் வியாழக்கிழமைகளில் பூண்டு, வெங்காயம் தவிர்ப்பது நல்லது.
*பசுவின் கோமியத்தை வீட்டில் அவ்வப்போது தெளித்தால் வீட்டிலுள்ள பீடைகள் அகலும்.
*16 நாட்கள் கோவிலில் கொள்ளு தானம் செய்வது கேது ப்ரீத்திக்கு உகந்தது.
*பையில் சிறிய வெள்ளிக்கட்டி வைத்திருப்பதும்; கையில் வெள்ளி வளையம் அணிவதும் சுக்கிரனுக்கு நல்லது.
*அனுமனை அனுதினமும் வணங்கினால் சனியினால் ஏற்படும் சங்கடங்கள் அகலும்.
*சர்க்கரை, கடலைப் பருப்பு, நெய், அரிசி ஆகியவற்றை மாதப்பிறப்பன்று தானமளித்தால், வீட்டில் அன்னபூரணியின் கடாட்சம் கிட்டும்.
*இரவில் ஒரு கைப்பிடியளவு பச்சைப் பயிறை நீரிலிட்டு, மறுநாள் அதனை புறாக்களுக்கு உணவாக அளித்தால் புதனால் ஏற்படும் தோசம் நீங்கும்.
*வெள்ளிக்கிழமைகளில் பசுக்களுக்கு புல் அளித்தால் சுக்கிரனின் அனுக்கிரகம் கிடைக்கும்
*நவக்கிரங்களின் காயத்ரீ மந்திரங்கள்.*
1.) ஸ்ரீ சூரியன் காயத்ரீ:-ஓம் அஸ்வ த்வஜாய வித்மஹே: பாச ஹஸ்தாய தீமஹிதன்னோ சூர்ய ப்ரயோதயாத்.
2.) ஸ்ரீ சந்திரன் காயத்ரீ:- ஓம் பத்ம த்வஜாய வித்மஹே: ஹேம ரூபாய தீமஹி தன்னோ ஸோம ப்ரயோதயாத்.
3.) ஸ்ரீ செவ்வாய் காயத்ரீ:- ஓம் வீர த்வஜாய வித்மஹே: விக்ன ஹஸ்தாய தீமஹி தன்னோ பௌம ப்ரயோதயாத்.
4.) ஸ்ரீ புதன் காயத்ரீ:- ஓம் கஜ த்வஜாய வித்மஹே: சுக ஹஸ்தாய தீமஹி தன்னோ புத ப்ரயோதயாத்.
5.) ஸ்ரீ குரு காயத்ரீ:- ஓம் விருஷப த்வஜாய வித்மஹே: க்ருணி ஹஸ்தாய தீமஹி தன்னோ குரு ப்ரயோதயாத்.
6). ஸ்ரீ சுக்கிரன் காயத்ரீ:- ஓம் அஸ்வ த்வஜாய வித்மஹே: தநுர் ஹஸ்தாய தீமஹி தன்னோ சுக்கிர ப்ரயோதயாத்.
7.) ஸ்ரீ சனீஸ்வரர் காயத்ரீ:- ஓம் காக த்வஜாய வித்மஹே: கட்க ஹஸ்தாய தீமஹி தன்னோ மந்த ப்ரயோதயாத்.
8.) ஸ்ரீ ராகு காயத்ரீ:- ஓம் நாக த்வஜாய வித்மஹே: பத்ம ஹஸ்தாய தீமஹி தன்னோ ராகு ப்ரயோதயாத்.
9.) ஸ்ரீ கேது காயத்ரீ:- ஓம் அஸ்வ த்வஜாய வித்மஹே: சூல ஹஸ்தாய தீமஹி தன்னோ கேது ப்ரயோதயாத். என்றும் அன்புடன் உங்கள் ஆச்சார்யா பாபாஜி

உடலின் எந்த ஒரு பாகத்தில் பாதிப்பு ஏற்பட்டாலும், கைவிரல்களுக்கு பயிற்சி அளித்தே சரி செய்யலாம் .

உடலின் எந்த ஒரு பாகத்தில் பாதிப்பு ஏற்பட்டாலும், கைவிரல்களுக்கு பயிற்சி அளித்தே சரி செய்யலாம் .
கட்டை விரல்.
***************
உங்கள் கட்டை விரலுக்கு அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வதால், மன அழுத்தம் குறைய, மனநிலையை கட்டுப்படுத்த முடியும், நல்ல உறக்கம் பெறலாம். மேலும் இது உடற்சக்தியை மேம்படுத்தவும் உதவுகிறது.கட்டை விரலானது, மண்ணீரல் மற்றும் வயிறு பகுதியுடன் இணைப்புள்ளது ஆகும். இது வெள்ளை மற்றும் சிவப்பு இரத்த செல்களை ஊக்குவித்து செரிமானத்தை சீராக்குகிறது.
ஆள்காட்டி விரல்.
*******************
உங்கள் பலவீனம் மற்றும் பயத்தை குறைக்க கூடியது ஆள்காட்டி விரல். மேலும், ஆள்காட்டி விரலுக்கு அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வது உங்களிடம் இருக்கும் அடிமைத்தனத்தினை குறைக்கவல்லது.உங்கள் ஆள்காட்டி விரல் சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பையுடன் இணைப்புக் கொண்டுள்ளது. சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகாமல் இருக்கவும், நீர்வறட்சி ஏற்படாமல் இருக்கவும் பயனளிக்கிறது.
நடுவிரல்.
***********
நடுவிரலுக்கு அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வது உங்களது கோபத்தை குறைக்க உதவும். தலை பகுதியில் இரத்த ஓட்டத்தை சீராக்கி தலைவலி ஏற்படாமல் இருக்கவும் இது உதவுகிறது.நடுவிரலானது, கல்லீரல் மற்றும் பித்தப்பையுடன் இணைப்புடையது. இது இந்த பாகங்களின் வலிமையை மேம்படுத்துகிறது மற்றும் உடற்சக்தியை ஊக்குவிக்கிறது.
மோதிரவிரல்.
***************
ஏறத்தாழ கட்டைவிரலுடன் ஒத்துப் போவது தான் இந்த மோதிர விரலும். உங்களில் இருக்கும் எதிர்மறை எண்ணங்கள் மற்றும் தீய எண்ணத்தை குறைக்க நீங்கள் மோதிர விரலுக்கு அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்யலாம்.
மேலும், மோதிர விரல் நுரையீரலுடன் இணைப்பு கொண்டுள்ளது. இது சுவாசக் கோளாறுகளை போக்கவல்லது. மேலும், நரம்பு மண்டலம், தசைகளுக்கு வலிமை அளிக்கிறது. இதனால், உங்கள் உடற்சக்தி மேம்படும்.
சிறுவிரல்.
************
சிறுவிரலுக்கு அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வது இதயம் மற்றும் இரத்த ஓட்டத்திற்கு நல்லது. இது இரத்த ஓட்டத்தை சீராக்கி இதர உடல் பாகங்களின் செயற்திறனை ஊக்குவிக்கிறது.
மேலும் இது மூளையின் செயல்திறனையும் மேம்படுத்துகிறது, இதனால் உங்கள் எண்ணம், சிந்தனை, கவனம் போன்றவையும் மேம்படும்.
உள்ளங்கை.
**************
மன அழுத்தம் தான் அனைவருக்கும் ஏற்படும் கொடிய நோய். இது ஒட்டுமொத்தமாக மனதையும், உடலையும் பாதிக்கக் கூடியது. உள்ளங்கையில் அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வது நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்க உதவுகிறது.
மேலும், இது உடல் மற்றும் மனதில் ஏற்படும் சோர்வில் இருந்து விரைவாக விடுபட்டு வெளிவரவும் பயனளிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

9 என்ற எண்ணின் பெருமை

சீனர்களின் சொர்க்க கோபுரம்,
ஒன்பது வளையங்களால் சூழப்பட்டுள்ளது..!!
எகிப்து, ஐரோப்பா, கிரீக் முதலான நாடுகளும் 9-ஆம் எண்ணை விசேஷமாகப் பயன்படுத்திப் போற்றுகின்றன.
புத்த மதத்தில், மிக முக்கியமான சடங்குகள் யாவும் ஒன்பது துறவிகளைக் கொண்டே நடைபெறும். தங்கள், வெள்ளி மற்றும் பிளாட்டினத்தின் சுத்தத்தை 999 என்று மதிப்பிடுவார்கள்.
பெண்களின் கர்ப்பம், பூரணமாவது ஒன்பதாம் மாத நிறைவில்தான்! பரத கண்டத்தில், நம் இந்தியாவில் ஒன்பது எனும் எண் இன்னும் மகத்துவங்கள் கொண்டது. ஒன்பது என்ற எண்ணுக்கு வடமொழியில் நவம் என்று பெயர்.
நவ என்ற சொல் புதிய, புதுமை எனும் பொருள் உடையது.
நவ சக்திகள் - வாமை, ஜேஷ்டை, ரவுத்ரி, காளி, கலவிகரணி, பலவிகரணி, பலப்பிரமதனி, சர்வபூததமனி, மனோன்மணி
நவ தீர்த்தங்கள்: கங்கை, யமுனை, சரஸ்வதி, கோதாவரி, சரயு, நர்மதை, காவிரி, பாலாறு, குமரி
நவ வீரர்கள் - வீரவாகுதேவர், வீரகேசரி, வீரமகேந்திரன், வீரமகேசன், வீரபுரந்திரன், வீரராக்ஷசன், வீரமார்த்தாண்டன், வீரராந்தகன், வீரதீரன்
நவ அபிஷேகங்கள்: மஞ்சள், பஞ்சாமிர்தம், பால், நெய், தேன், தயிர், சர்க்கரை, சந்தனம், விபூதி.
நவ ரசம்: இன்பம், நகை, கருணை, கோபம், வீரம், பயம், அருவருப்பு, அற்புதம், சாந்தம் ஆகியன நவரசங்கள் ஆகும்.
நவக்கிரகங்கள் - சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது
நவமணிகள் - கோமேதகம், நீலம், வைரம், பவளம், புட்பராகம், மரகதம், மாணிக்கம், முத்து, வைடூரியம்
நவ திரவியங்கள் - பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம், காலம், திக்கு, ஆன்மா, மனம்
நவலோகம் (தாது): பொன், வெள்ளி, செம்பு, பித்தளை, ஈயம், வெண்கலம், இரும்பு, தரா, துத்தநாகம்
நவ தானியங்கள் - நெல், கோதுமை, பாசிப்பயறு, துவரை, மொச்சை, எள், கொள்ளு, உளுந்து, வேர்க்கடலை
சிவ விரதங்கள் ஒன்பது: சோமவார விரதம், திருவாதிரை விரதம், உமாகேச்வர விரதம், சிவராத்ரி விரதம், பிரதோஷ விரதம், கேதார விரதம், ரிஷப விரதம், கல்யாணசுந்தர விரதம், சூல விரதம்
நவசந்தி தாளங்கள் - அரிதாளம், அருமதாளம், சமதாளம், சயதாளம், சித்திரதாளம், துருவதாளம், நிவர்த்திதாளம், படிமதாளம், விடதாளம்
அடியார்களின் பண்புகள்: எதிர்கொள்ளல், பணிதல், ஆசனம் (இருக்கை) தருதல், கால் கழுவுதல், அருச்சித்தல், தூபம் இடல், தீபம் சாட்டல், புகழ்தல், அமுது அளித்தல்
நவரத்னங்கள் - தன்வந்த்ரி, க்ஷணபகர், அமரஸிம்ஹர், சங்கு, வேதாலபட்டர், கடகர்ப்பரர், காளிதாசர், வராகமிஹிரர், வரருசி (விக்ரமார்க்கனின் சபையிலிருந்த 9 புலவர்கள்; நவரத்னங்கள் எனச் சிறப்பிக்கப்படுவர்)
அடியார்களின் நவகுணங்கள்: அன்பு, இனிமை, உண்மை, நன்மை, மென்மை, சிந்தனை, காலம், சபை, மவுனம்.
நவ நிதிகள் - சங்கம், பதுமம், மகாபதுமம், மகரம், கச்சபம், முகுந்தம், குந்தம், நீலம், வரம்
நவ குண்டங்கள்:
யாகசாலையில் அமைக்கப்படும் ஒன்பது வகையிலான யாக குண்ட
அமைப்புக்கள்:
சதுரம், யோனி, அர்த்த சந்திரன், திரிகோணம், விருத்தம் (வட்டம்), அறுகோணம், பத்மம், எண்கோணம், பிரதான விருத்தம்.
நவவித பக்தி : சிரவணம், கீர்த்தனம், ஸ்மரணம்,
பாத சேவனம், அர்ச்சனம், வந்தனம், தாஸ்யம், சக்கியம், ஆத்ம நிவேதனம்
நவ பிரம்மாக்கள் : குமார பிரம்மன், அர்க்க பிரம்மன், வீர பிரம்மன், பால பிரம்மன், சுவர்க்க பிரம்மன், கருட பிரம்மன், விஸ்வ பிரம்மன், பத்ம பிரம்மன், தராக பிரம்மன்
நவக்கிரக தலங்கள் -
சூரியனார் கோயிவில், திங்களூர்,
வைத்தீஸ்வரன் கோவில், திருவெண்காடு,
ஆலங்குடி,
கஞ்சனூர்,
திருநள்ளாறு, திருநாகேஸ்வரம், கீழ்ப்பெரும்பள்ளம்
நவபாஷாணம் -
வீரம், பூரம், ரசம், ஜாதிலிங்கம், கண்டகம், கவுரி பாஷாணம், வெள்ளை பாஷாணம், ம்ருதர்சிங், சிலாஷத்
நவதுர்க்கா -
ஸித்திதத்ரி,
கஷ்முந்தா,
பிரம்மாச்சாரினி,
ஷைலபுத்ரி,
மகா கவுரி,
சந்திரகாந்தா,
ஸ்கந்தமாதா,
மகிஷாசுரமர்த்தினி,
காளராத்ரி
நவ சக்கரங்கள் -
த்ரைலோக்ய மோகன சக்கரம்,
சர்வசாபுரக சக்கரம்,
சர்வ சம்மோகன சக்கரம்,
சர்வ சவுபாக்ய சக்கரம்,
சர்வார்த்த சாதக சக்கரம்,
சர்வ ரக்ஷõகர சக்கரம்,
சர்வ ரோஹ ஹர சக்கரம்,
சர்வ ஸித்தி ப்ரத சக்கரம்,
சர்வனந்தமைய சக்கரம்.
நவநாதர்கள் -
ஆதிநாதர், உதய நாதர்,
சத்ய நாதர், சந்தோஷ நாதர், ஆச்சாள் அசாம்பயநாதர், கஜ்வேலி கஜ்கண்டர் நாதர், சித்த சொவ்றங்கி நாதர், மச்சேந்திர நாதர், குரு கோரக்க நாதர்
உடலின் நவ துவாரங்கள் :
இரண்டு கண்கள்,
இரண்டு காதுகள்,
இரண்டு மூக்குத்துவாரங்கள்,
ஒரு வாய்,
இரண்டு மலஜல துவாரங்கள்
உடலின் ஒன்பது சக்கரங்கள் :
தோல், ரத்தம், மாமிசம், மேதஸ், எலும்பு, மஜ்ஜை, சுக்கிலம், தேஜஸ், ரோமம்
18 புராணங்கள், 18 படிகள் என அனைத்தும் 9-ன் மூலமாக தான் உள்ளன.
காயத்ரி மந்திரத்தை 108 முறை ஜபிக்க வேண்டும். எல்லா தெய்வத்தின் நாமாவளியும் ஜப மாலையின் எண்ணிக்கையும் இதை அடிப்படையாகக் கொண்டதுதான்! புத்த மதத்தினர் 108 முறை மணியடித்து, புது வருடத்தை வரவேற்றுக் கொண்டாடுகின்றனர். சீனாவில், 36 மணிகளை மூன்று பிரிவாகக் கொண்டு, சு ஸூ எனப்படும் மாலையைக் கொண்டு ஜபம் செய்வார்கள். ஸ்ரீகிருஷ்ணருக்குப் பிரியமான மாதம்... மார்கழி. இது வருடத்தின் 9-வது மாதம்! மனிதராகப் பிறந்தவன் எப்படி வாழ வேண்டும் என வாழ்ந்து காட்டிய ஸ்ரீராமபிரான் பிறந்தது,
9-ஆம் திதியான நவமி நாளில்தான்.
9 என்ற எண்ணை கேலிக்கையாக எண்ணாமல் புராணங்களிலும், நடைமுறையிலும் சிறப்பிடம் பெற்றுள்ளது என்பதை போற்றுவோம்.