Thursday, 8 June 2017

நுணா (மஞ்சணத்தி) நாடி நடை உடல் வெப்பம் மிகுக்கும்.

நுணா (மஞ்சணத்தி)
நாடி நடை உடல் வெப்பம் மிகுக்கும்.
1. இலையை அரைத்துப் பற்றிடப் புண், சிரங்கு , ஆகியவை ஆறும், இடுப்பு வலி தீரும்.
2. நுணா இலைச் சாறு 1 பங்கும், உத்தாமணி, நொச்சி, பொடுதலை ஆகிய மூன்றின் சாறும்1 பங்கும் கலந்து 3, 4, வேளை கொடுத்து வரச் சகல மாந்தமும் தீரும்.
3 . நுணாத் தளிர் , இலை, பழுப்பு , சமன் சேர்த்து 35 கிராம் காட்டுச் சீரகத் துடன் 1 தேங்காய் அளவு அரைத்து . 1. லிட்டர் நல்லெண்ணெயில் மெழுகுபத முறக் காய்ச்சி எண்ணெயைப் பிரிந்து ப் பக்குவப்படுத்தவும். கல்கத்தை சுண்டையளவு காலை, மாலை, பாலுடன் கலந்து கொடுக்க வயிற்றுக் கோளாறு தீரும். எண்ணெயை வெண்மேகத்தில் தடவத் தீரும்.
4. நுணாக்காயையும் , உப்பையும் சமன் அரைத்து அடை தட்டி உலர வைத்துப் புடமிட்டு அரைத்துப் பற்பொடியாகப் பயண்படுத்த பற்கள் பலமடையும்.
5. நுணா வேரைக் கஷாயமிட்டுக் குடிக்கக் சுகப் பேதியாகும், கெடுதலில்லாமல் மலச்சிக்கல் தீரும்
https://www.facebook.com/photo.php?fbid=1860013094323072&set=pcb.1372967476101831&type=3
Image may contain: one or more people and close-upImage may contain: plant and nature

No comments:

Post a Comment