Thursday, 27 June 2019

புதன் பற்றிய அரிய சூட்சுமம்

புதன் பற்றிய அரிய சூட்சுமம்
=========================
தேய்பிறை சந்திரன் அஷ்டமியிலிருந்து திரயோதசி வரை கொடும் பாவியாகிறார். அதனால்தான் தேய்பிறை அஷ்டமியிலிருந்து திரயோதசி வரை, நமது மனம் எதிர்மறை எண்ணங்களை தவிர்க்க பல தெய்வ வழிபாடுகளை முன்னோர்கள் முன்னெடுத்தனர். உதாரணமாக தேய்பிறை அஷ்டமி, ஏகாதேதி, பிரதோசம் (திரயோதசி), சிவராத்திரி என்ற வழிபாடுகள் சனாதனதர்மம் சொல்கிறது.
சந்திரனின் மகன் புதன். ஆகவே புதன் தனித்து செயல்படாமல் எப்போதும் சந்திரனின் நிலை சார்ந்து செய்படும் சார்புநிலை கிரகம். அதனால் மேற்கண்ட தேய்பிறை திதியில் பிறந்தவர்களுக்கு புதன் சற்று சுப மற்றும் அசுப தன்மை கலந்து செயல்படும். ஆதாவது அஷ்டமி, நவமி, தசமி, ஏகாதேசி, துவாதசி மற்றும் திரோயதசி திதியில் பிறந்த நபர்களின் ஜாதகத்தில் உள்ள புதன், அசுபதன்மை அதிகம் செயல்படுத்தும், அதாவது பொய் சொல்லுதல், சூழச்சி செய்தல், நண்பர்களை சுயநலத்திற்கு உபயோகம் செய்தல், நடித்தல், மோகம் அதிகம் செய்தல், சபலம், பிறர் துன்பத்தில் இன்பம் பெறுதல், நம்பி ஏமாறுதல், நம்ப வைத்து ஏமாற்றுதல், கூட்டு சதி செய்தல், மறைமுக வணிபம் செய்தல், பாலியல் வன்புணர்பு, ஓரினசேர்க்கை, காதல் தோல்வி போன்றவை தரும். பெரும்பாலும் முகநூலில் இருக்கும் FAKE ID இவர்கள் தான். ஒருவேளை இந்த புதன் மேல் குரு பார்வை அல்லது சேர்க்கை மேற்கண்ட அசுப தாக்கத்தை குறைக்குமே ஒழிய இல்லாமல் செய்யாது.
மேலும் புதன் வக்கிரம், உச்சம் அல்லது வக்ர அஸ்தங்கம், மஹா அஸ்தங்கமாகிவிட்டால், நிச்சயம் புதனின் உயிர் காரகத்துவங்களான நரம்பு, தோல், நாக்கு மற்றும் தாய்மாமனை பாதிக்கும். ஆனால் இத்தகைய ஜாதகர்கள் சிறந்த அறிவாளியாக, சிறந்த பேச்சாளர்களாகவும், அதீத சமயோஜித புத்தி, வாத திறமை, புதிய புதிய விசயங்களை சிந்தித்தல், பிரமாண்ட உபதேசம், பக்தி, கொள்கை பிடிப்பாகவும் காணப்படுவர்.
சுருக்கமாக சொல்ல, தேய்பிறை சந்திரனாகி புதன் பலம் பெற, அவர்கள் HACKERS போன்றவர்கள். அதீத அறிவாளிகள், சமயோஜித புத்தி கொண்டவர்கள், ஆனால் தன் அறிவை சூழச்சி செய்ய அதிகம் உபயோகிப்பார்.
இதற்கு உதாரணமாக மஹாபாரத கதாபாத்திரம் கிருஷ்ணனை கூறலாம், தேய்பிறை அஷ்டமியில் பிறந்த கிருஷ்ணன் செய்த பல சூழ்ச்சிகளை அறியலாம். அவருக்கு புதன் பலம் என்பதால் கீதை பற்றிய உபதேசமும் நமக்கு கிடைத்தது.
இந்த அஷ்டமி, நவமி, தசமி, ஏகாதேசி, துவாதசி மற்றும் திரோயதசி திதியில் பிறந்த நபர்கள், உணவு குறைவாக எடுத்துக்கொண்டு முன்னோர்கள் சொல்லி இருக்கும் காலபைரவ வழிபாடு, பிரதோச வழிபாடு மற்றும் சிவராத்திரி விரதம் கடைபிடித்தல் மிகவும் சிறப்பு.

No comments:

Post a Comment