Cryptocoryne spiralis:கிரந்தி தகரம்,ஆற்று அதிவிடயம், തകരം;
இந்த கிரந்தி தகரம் மூலிகையை பல நாட்களாக தேடிக்கொண்டிருந்தேன்;மூலிகை கழஞ்சியம் என்ற புஸ்தகத்திலிருந்துகிடைத்த ஒரே ஒரு குறிப்பு ,இது ஆற்று ஓரங்களில் காணப்படும் என்பதாகும்;மற்றபடி இதன் தாவரவில் பெயரோ,படமோ எதும் கிடைக்க வில்லை;இறுதியாக சித்தா வைத்தியர் கந்த ரூபன் ஐய்யா அவர்களின் உதவி மூலம் கண்டுபிடிக்க முடிந்தது;அவர்களுக்கு நன்றி;

கிரந்தி தகரம் ஆற்றின் கரையோரங்களில் அல்ல ,ஆற்றின் உள்ளே பாறை இடுக்குகளில் வளரும் மூலிகை ஆகும்;பார்ப்பதற்கு புல்போல் காணப்படும்;பிடுங்கி பார்த்தால் நிலப்பனை கிழங்கு போல் சிறு சிறு கிழங்குகள் காணப்படும்;இந்த வேர்கிழங்குகள் தான் வெட்டு மருந்து கடைகளில் விற்க்கப்படுகிறது;பச்சை கிழங்கை மென்றால் வாயில் பயங்க ஊரல் உண்டாகும்;
மருத்துவ குணங்கள்:
மருத்துவ குணங்கள்:
1)கிரந்தி தகரத்தால் பயித்திய ரோகம்,சுவாச ரோகம்,வட்ட வட்டமாக எழும் படைகள்,புண்கள் ஒழியும்;
2)இதன் இலைகளுக்கு படை,ஊரல் இவைகளை குணப்படுத்தும் பண்பு உள்ளது;
3)இதன் வேர் கிழங்கு அல்லது கிழங்கின் சாறு இருமல்,காய்ச்சல்,வயிற்றுவலி,வயறு சம்பந்தப்பட்ட நோய்கள்,குமட்டல், குழந்தைக்கு ஏற்படும் வாந்தி முதலியவைகளை குணப்படுத்துகிறது.
4)மேலும் இது குறைந்த இரத்த அழுத்த நோயையும் சரிசெய்கிறது.
5)படர்தாமரைக்கு கிரந்தி தகரம், கடுக்காய் தோல்,இந்துப்பு,அறுகன்புல், கஞ்சாங்கோரை ஆகியவற்றை சம அளவு எடுத்து மோர் விட்டு அரைத்து பூச குணமாகும். Courtesy
Satheesh Krishna
Satheesh Krishna
No comments:
Post a Comment