பஞ்சகல்ப குளியல் சூரணம்:
இந்த பஞ்சகல்பம் சித்தர்களால் புகழப்பட்டது.
இதை உபயோகித்தால் முடி தும்பி போலாகும்.கண்கள் ஒளி பெறும். பகலில் கூட நட்சத்திரம் காணலாமென்று சித்தர்கள் புகழ்ந்துள்ளனர்.இதை உபயோகித்து சரும வியாதிகளும் குணமானதுண்டு.மேக வியாதிகள் குணமாகுமென்று சித்தர்கள் சொல்கின்றனர்.
இந்த பஞ்ச கல்பம் சிறப்பாக #பீனிசம் எனப்படும் சைனஸ் வியாதியை முற்றிலும் குணப்படுத்த உபயோகிக்கப்படுகிறது.
மேலும் இது தலைவலி, தலைபாரம், தலையில் நீர் கோர்த்தல்,தலைமுடி கொட்டுவது, இளநரை, தலையில் வரும் புற்று, தலைமூளை நோய்கள், கண் நோய்கள், காது சீழ், காது இரைச்சல், காது மந்தம், மூக்கு நீர் வடிதல், மூக்கு சதை வளர்ச்சி, தொண்டை சதை வளர்ச்சி, மார்புச்சளி போன்ற எண்ணற்ற நோய்களை ஓட ஓட விரட்டும் ஓர் அருமருந்து இந்த கல்பம் ஆகும்.
மருந்து செய்முறை:
"பூநெல்லி நீர்மிளகு பொற்கடுக்காய் வான்மஞ்சள்
கானகத்து வேம்பரிசி காரிகையே- மானங்கேள்
ஒன்றரை யொன்றேகால் ஒன்று றுதிமுக்கால்
கன்றரைக் கையான் நீறிற் றேய்"
1.நெல்லிக்காய் - 300கிராம்
2.வெள்ளை மிளகு. -250 ,,
3.கடுக்காய். -200 ,,
4.கஸ்தூரி மஞ்சள். - 150 ,,
5.வேப்பமுத்து. - 100 ,,
இந்த அளவுப் படி எடுத்து அரைத்து சூரணித்து நன்கு கலந்து வைக்கவும்.
பயன்படுத்தும் முறை:
இந்த பஞ்ச கல்ப சூரணத்தை தேவையான அளவு எடுத்து கரிசாலைச் சாறில் கரைத்து அல்லது பால் விட்டு கொதிக்க வைத்து இளஞ்சூட்டுடன் தலையில் தேய்த்து அரைமணி நேரம் வைத்திருந்து பின் வெந்நீரில் குளித்து வந்தால் மேற்கண்ட நோய்கள் அனைத்தும் சூரியனைக் கண்ட பனி போல் விலகும் என்பது நிச்சயம்.
No comments:
Post a Comment