Sunday, 20 June 2021

வெற்றிலை மருத்துவ பயன்கள்

வெற்றிலை மருத்துவ பயன்கள்..

Eugenol கெட்டசாதி வெஷம்... முழுங்குனோம்னா ... பாத்துக்கங்க ... lever ஐ damage பண்ணி உட்டுடும்.

oxalic acid கெட்டபய அமிலமுங்க ... acetic acid விட strong. உள்ளே முழுங்குனோம்னா வச்சிக்குங்க ... வயித்தையே பொத்தல் போட்டு உட்டுடும்....

 Xtracal ங்கறது ஒரு calcium, vitamin D , Magnesium எல்லாம் சேர்ந்த கலவை..

இதையெல்லாம் முழுங்கினா ... பரலோகத்துக்கு பாஸ்போர்ட் எடுத்ததா அர்த்தம்.. போயே சேர்ந்துடுவோம் ...

 ஆனாலும் என்ன ... முழுங்கறோமே ... தனியா பொட்டி ஒன்னு வச்சிக்கிட்டு ... அதுக்குள்ள இதை போட்டுக்கிட்டு... எங்க போறோமோ ... அங்கெல்லாம் இதையும் தூக்கிகிட்டு ... திவ்யமா முழுங்கறோமே ...

நாம பரவாயில்ல ... அந்த கால ராஜாவெல்லாம் ... இந்த மாதிரி ஒரு பொட்டிய set பண்ணிகிட்டு ... பொட்டிக்குள்ள இருக்கறதை ... எடுத்துக் குடுக்கறத்துக்குனே ... அமைச்சர் அந்தஸ்துல இருக்கற ஒருத்தற ... கூடவே எப்போதும் வச்சிருப்பாராம்...  இவரோட designation 'அடப்பகாரர்'.

நம்ம மதுரை நாயக்கரு ... ஆரம்பத்துல கிருஷ்ணதேவராயருகிட்ட ... முதன்முதலா ... அடப்பக்காரராதான் appoint ஆனாராம்...

சரி இப்ப என்னத்த இப்பிடி வளைச்சி வளைச்சி சொல்லிக்கிட்டு இருக்கேன்? ...

வெத்தலை ...

 வெத்தலையத்தான் சொல்லிக்கிட்டு இருக்கேன்.

தனி வெத்தலைக்குதான் ... இந்த கொடுமையா கொணமெல்லாம் ... பாக்கு, சுண்ணாம்பு சேத்துப்புட்டா ஜபர்தஸ்த்தா ஆயிடும்.

வேற சிலதை சேர்த்தா மருந்தா மாறிடும்...

எதிரி வீட்டுல போயி சாப்புட போனா ... ரெண்டு வெத்தலையும் எட்டு மிளகும் ... சாப்டோடனே தின்னம்னா ... நம்மாளு ... எதிரி sir ... சோத்துல வெஷம் வச்சிருந்தா கூட ... முறிச்சி உட்டுடும் ... ஒன்னும் பன்னாது.

இதை எப்பிடியெல்லாம் கூப்புடுவாங்கங்கறத்துக்கு ஒரு பட்டியலே இருக்கு ...தாம்பூலம், தாம்பூலவள்ளி, திரையல், நாகவல்லி, மெல்லிலை, வெள்ளிலை, மெல்லடகு ... இப்பிடி பல பேரு

இந்த piper betle இருக்கே ... அதாங்க அந்த வெத்தலை . அதை அந்தகாலத்துல பாகவதர்ல யாருமே ...  'தரிக்காதவங்க' இல்லை. எல்லோருமே .. வாயில போட்டு கொதப்பிக்கிட்டு வர பயபுள்ளைங்கதான்... ஏன்னா ... குரல்வளம் நல்லா வரும்... அதனால...

வெளியே வேலைக்கு  போயிட்டு வர ஆம்பளைங்களுக்கு ... அந்த காலத்துல பொழுது போக்கு ... (சரி அப்ப என்ன டிவி, செல்போன் இருந்திச்சா என்ன?) ... பொழுது போகாம .. கைய கால ... நீட்டிவுட்டு (!!!) ...  ஏற்கனவே நாலு பெத்தாச்சி ... ஏன் தொல்லைனு நெனைச்சா ... வெத்தலை வேரோட கூட மிளகு 50:50 விகிதாச்சாரத்துல அரைச்சி 40 நாளைக்கு பொம்பளைங்க சாப்டாங்கன்னா... ஆம்பளை எதுவோ பண்ணிட்டு போவட்டும்னு உட்டுடலாம்... எளிய கருத்தடை மருந்து...

ரெண்டு வெத்தலையோட 20 மிளகை சேத்துக்கிட்டு ... நற, நற'னு மென்னு தின்னுபுட்டுமுன்னா ... பாம்பு கடிச்ச வெஷம் போயே போயிடும் ... அத்தோட கொஞ்சம் தேங்காய் பத்தைய தின்னுட்டோமுன்னா தேளு கடி வெஷம் முறிஞ்சிடும்.

வெற்றிலை இல்லாத .. எந்த தமிழர் வீட்டு கடவுள் வழிபாடு இல்லவே இல்லை... இதை ரங்கநாதன் பேரை தனக்கு வச்சிக்கிட்டு ... ரங்கநாதசாமியை ஒதுக்குபவர்கள் கூட ஒத்துக் கொள்வார்கள்.

கொழந்தேயளுக்கு சளி புடிச்சா உடவே மாட்டேங்குதா? வெத்தலை ... இலைய மட்டும் கசக்கி உட்டு வர சாறை ... தேன் கலந்து கொடுத்தா சரியா போயிடும்.

பெரியவங்களுக்கு தீராத சளியா? ... கூட காய்ச்சலும் சேந்துகிச்சா ... அதுக்கும் வெத்தலைத்தான் .. 
2 வெத்தலை, 5 துளசி, 3 தூதுவேளை, 1 ஸ்பூன் தேன், கொஞ்சம் மிளகு, சீரகம், 1 துண்டு சுக்கு... அதிமதுரம், சித்தரத்தை ... 2 ஸ்பூன் பனங்கற்கண்டு .. 2 டம்ளர் தண்ணி ஊத்தி அது அரை டமளர் அளவுக்கு சுண்டி கொறைஞ்ச பிறகு ... இறக்கி ஆற வச்சி ... வெறும் வயித்துல ... காலை மாலை குடிச்சு வந்தோமுன்னா ... பெரியவங்களுக்கு சளி போயிடும் ... திரும்ப வந்து தொந்தரவு குடுக்காது ... எது? சளிதான்.
 
தலைல தண்ணி கோத்துக்கிட்டு ... கார்ப்பொரேஷன் பைப்பு மாதிரி மூக்கு ஒழுகிகிட்டே கெடக்குதா? வெத்தலைய சாறு புழிஞ்சி மூக்கில ஊத்துங்க ... சரியாபூடும்.

கட்டி வந்து நாளாயிடுத்து ... ஒடைய மாட்டேங்குது ... வலிச்சி தொலைக்குதா? வெத்தலையில ஆமணக்கு எண்ணெய வச்சி தடவி உட்டுட்டு ... லேசா தனலுல வாட்டி ... அந்த சூட்டோடவே ... கட்டி மேல வச்சி நல்ல துணிய வச்சி கட்டி வச்சிப்புட்டா ... பெறவு கட்டி ஒடைஞ்ச பின்ன அவுத்துடலாம் ... ரெண்டு நாளுல சரியாபூடும்.. 

diabetics இருக்கா ... இரண்டு வெத்தலை ... ஒரு புடிச்சபுடி வேப்பிலை ... ஒரு புடிச்சபுடி அளவு அருகம்புல் ... அரை லிட்டரு தண்ணி உட்டு ... அது கால் லிட்டர் மூலிகைத் தண்ணியா ஆக்கிப்புட்டு ... தெனம் மூனு வேளை சோத்துக்கு முன்னாடி குடிச்சிக்கிட்டு வந்தோமுன்னா ... மதுமேகம் சரியாயிடும்..

ensemble போயி பாட்டுபாடி கலக்குனுமா? சுக்கு, மிளகு, திப்பிலி ... (இதுக்கு பேருதான் திரிகடுகம்) சம அளவு கலந்துகிட்டு ... இத்தோட வெத்தலை சாறு, தேன் கலந்து தினமும் காலேல சாப்பிட்டு வந்தோமுன்னா ... குரல் வளம் நல்லா வரும்... என்னா அர்த்தம் ... குரல் நாளங்களில் இருக்குற சளியை ... தொடைச்சி வெளியே தள்ளிடும் ... பாடும்போது குரல் பிசிறில்லாம பாடலாம்...

வெத்தலைய பாத்து பாத்துதான் ... நம்ம வூட்டு பக்கம் வர ஜக்கம்மா குறி சொல்லும்...

வெத்தலையில கருப்பு மைய தேச்சு உட்டுதான் ... நம்மூரு மஸ்தான் ... காணாப்போன பொருளை கண்டுபிடிச்சித் தரேன்னுட்டு ... காசு புடிங்கிப்பார் ... காக்கா ஒக்காற பனம்பழம் உழுந்தாலும்  ... உழும்!

வயாகரா இல்லாம வசீகரா ஆகணுமா ? நெதமும் மதிய சாப்பாட்டோட ... நாக்கு செவக்க வச்சிகிடுங்க!!!
-------------------------
நூல் ; செப்படுவித்தை..

No comments:

Post a Comment