ஆறாத புண்களுக்கு
திரு வோட்டு எண்ணெய்
சர்க்கரை நோயினாலோ வெரி கோஸ் வெயின் என்ற நோயினாலோ , காலில் ரத்த ஓட்டத்தில் ஏற்பட்ட தடைகளினாலோ புண்கள் ஏற்பட்டால் விரைவில் ஆறாது
எந்த வகையான புண்களையும் தேங்காய் ஓட்டை மூலப்பொருளாகக் கொண்டு தயார் செய்யப்படும் எண்னெய் குணப்படுத்தும்.
தேவைப்படும் பொருட்கள்
ஆடு தின்னாப் பாளை சாறு 500 ML
நார் நீக்கி சுத்தம் செய்யப்பட்ட தேங்காய் ஓட்டு துண்டுகள் 300 கிராம்
மஞ்சள் தூள் 50 கிராம்
பச்சை கற்பூரம் 30 கிராம்
சுத்தமான தேங்காய் எண்ணெய் 600 ML
ஒரு பாத்திரத்தில் ஆடு தின்னா பாளை சாறு
தேங்காய் ஓட்டு துண்டுகள் மஞ்சள் தூள் தேங்காய் எண்ணெய் இவைகளைப் போட்டு அடுப்பேற்றி சிறு தீயாக எரித்து வரவும் சாறு சுண்டி மணல் பதம் வந்ததும் இன்னொரு பாத்திரத்தில் பச்சைக் கற்பூரத்தை பொடித்துப் போட்டு அதில் எண்ணெயை வடிக்கவும் சூடு ஆறின பின் பத்திரப்படுத்தவும்
இது மருத்துவர்களுக்கான செய்முறை.
பொதுமக்களுக்கு ஆடு தின்னாப் பாளை சாறு கிடைக்காது அதனால் சாறு இல்லாமலும் தயார் செய்யலாம்
ஒரு பாத்திரத்தில் எண்ணெயை ஊற்றி அதில் தேங்காய் ஓட்டு துண்டுகள் மஞ்சத்தூள் இவைப் போட்டு 24 மணி நேரம் ஊற வைக்கவும் பின்பு அதனை அடுப்பேற்றி சிறு தீயாக எரித்து எண்ணெய் புகை வர ஆரம்பித்ததும் இன்னொரு பாத்திரத்தில் பச்சைக் கற்பூரத்தை பொடித்துப் போட்டு துணியால் வேடு கட்டி எண்ணெயை வடிகட்டவும்
எண்ணெய் ஆறின பின்பு பத்திரப் படுத்தவும்.
புண்களை கழுவும் முறை
புளியன் இலைகசாயத்தினாலோ வேப்பன் இலைகசாயத்தினாலோ அல்லது படிகாரம் கரைத்த வெதுவெதுப்பான நீரிலோ புண்களை கழுவ வேண்டும்
அதன் பின் ஈரமில்லாமல் துடைத்து மேலே செய்த எண்ணெயை காலை மாலை தடவி வர வேண்டும்'
இந்த எண்ணெய் எல்லா வகை புண்களையும் ஆற்றி குணப்படுத்தும் குழிப் புண்கள் ஆற சற்று தாமதமாகும் ஆனால் கண்டிப்பாக குணமாகும்
இதனை தோல் நோய்களுக்கும் வெளிப்பூச்சாகபூசி வர நல்ல குணம் கிடைக்கும்
ரத்த ஓட்டத்தில் ஏற்படும் தடைகளினாலேயே கால்கள் கறுப் படித்து புண்கள் ஏற்பட்டால் குணமாவது நீண்ட நாட்களாகும்
ரத்த ஓட்டத்தில் ஏற்பட்ட தடைகள் நீங்க தேங்காய் ஒட்டு கசாயம் நன்கு பலன் தரும் தொடர்ந்து கசாயத்தை சாப்பிட்டு வர தடைகள் கரைந்து குணமாகும்
ரத்த ஓட்டம் சீரானால் கால்கள் இயல்பான நிறத்திற்கு மாறும்
தகவல் தொடர்புக்கு
KKE அக்பர்ஜி
ஜீவசக்தி ஹெர்பல் கிளினிக்
145 மாணிக்கவாசகர் காலணி
ஈரோடு 2
No comments:
Post a Comment