Sunday, 25 July 2021

குழந்தைகளுக்கான சித்தா தடுப்பூசி 🔱*

*குழந்தைகளுக்கான சித்தா தடுப்பூசி 🔱*
--------------------------------------------------------

*கட்டுரை வெளியிட்ட தேதி : 25.07.2021*

*வெளியிட்ட நேரம் : 9:15 Pm*

*பிறந்த குழந்தை முதல் 5 வயது குழந்தைகள் வரை கொரோனா தடுப்பு சித்த மருத்துவ முறைகள்*

*உங்கள் குழந்தைகளை கொரோனாவில் இருந்து காக்க போகும் ஐந்து மருந்துகள் இதோ*
 
*1 - உரை மாத்திரை 🌿* 

*2 - சண்முக சூரணம் மாத்திரை 🌿*

*3 - நெல்லிக்காய் இலேகியம் 🌿*

*4 - கடுக்காய் சூரண கசாயம் 🌿* 

*5 - உச்சி பொடி 🌿*

*இந்த ஐந்து மருந்துகளை ஒன்றாக பயன்படுத்தும் முறை*

*உரை மாத்திரை - தினம்*

*1 வது நாள் : சண்முகசூரணம் மாத்திரை* 

*2 வது நாள் : இடைவேளை* 

*3 வது நாள் : நெல்லிக்காய் இலேகியம்* 

*4 வது நாள் : இடைவேளை* 

*5 வது நாள் : கடுக்காய் சூரண கசாயம்*

*6 வது நாள் : இடைவேளை*

*7 வது நாள் : சண்முகசூரணம் மாத்திரை* 

*இப்படி சண்முகச்சூரண மாத்திரை, நெல்லிக்காய் இலேகியம், கடுக்காய் சூரண கசாயத்தை ஒரு நாள் விட்டு ஒரு நாள் என தொடரலாம், உரை மாத்திரை தினம் எடுக்க வேண்டும்* 

*உச்சி பொடி (வெளிமருந்து) - தலைக்கு குளித்த பின் உச்சந்தலையில் ஒரு சிட்டிகை பொடி லேசாக தேய்த்துவிட வேண்டும்*

*மருந்துகள் செய்முறை மற்றும் பயன்படுத்தும் முறை 💓* 
-----------------------------------------------------------

*உரை மருந்து 🔱* 
--------------------------------

*தேவையான பொருட்கள்*

*வசம்பு             - 10 கிராம்* 
*அதிமதுரம்     - 10 கிராம்*
*அக்ரகாரம்      - 10 கிராம்*
*மாசிக்காய்      - 10 கிராம்*
*சாதிக்காய்      - 10 கிராம்*
*பெருங்காயம்  - 10 கிராம்*
*சித்தரத்தை      - 10 கிராம்*
*வெள்ளைப் பூண்டு - 10 கிராம்*

*செய்முறை 🌿*
-----------------------------

*அனைத்தையும் சுத்தி செய்து பொடி செய்து கலந்தால் உரை மருந்து தயார்*

*பயன்படுத்தும் முறை 🌿*
-----------------------------------------------

*200 மிலி கிராம் அளவு, மாத்திரைகளாக நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்*

*பிறந்த குழந்தை முதல் 5 வயது குழந்தைகள் வரை தினம் எடுக்க வேண்டும்*

*200 mg உரை மாத்திரை பயன்படுத்தும் முறை*

*பிறந்த குழந்தை முதல் 3 மாத அளவு : 1 மாத்திரை*

*வேளை : 1 வேளை* 

*3 மாத குழந்தை முதல் 1 வயது அளவு : 2 மாத்திரை*

*வேளை : 1 வேளை* 

*1 வயது முதல் 3 வயது வரை : 2 மாத்திரை*

*வேளை : 2 வேளை* 

*3 முதல் 5 வயது வரை : 3 மாத்திரை* 

*வேளை : 2 வேளை* 

*அனுபானம் : தாய் பால்*

*தாய்ப்பால் குடிக்காத குழந்தைகளுக்கு மாத்திரையை பொடித்து தேனில் கலந்து கொடுக்கலாம், நாட்டு பசும் பாலில் கொடுக்கலாம், வெந்நீரில் கொடுக்கலாம்*

*சாப்பிட்ட பின் கொடுக்கவும்*

*உரைமாத்திரை கொரோனா வராமல் தடுக்கும் என்று ஆய்வு முடிவுகள் வெளியாகி உள்ளது*

*இதோ ஆய்வு முடிவுகள் link*

The Multi-faceted role of Urai Mathirai – The Immune pill of Siddha - This was published in the 'Asian Journal of Pharmaceutical and Clinical Research'. 

https://www.researchgate.net/publication/314238918_The_Multi-faceted_role_of_Urai_Mathirai_-_The_Immune_pill_of_Siddha

*தீரும் நோய்கள் 🌿*
-------------------------------------

*கொரோனா வராமல் தடுக்கிறது, பசியின்மை, மாந்தம், மலச்சிக்கல், தூக்கமின்மை, குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது*

*சண்முகச் சூரணம் 🔱*
-------------------------------------------

*தேவையான பொருட்கள்*

*நூல் ஆதாரம் : அகத்தியர் பரிபூரணம்*

*1 - சுக்கு*
*2 - மிளகு*
*3 - வால்மிளகு*
*4 - திப்பிலி*
*5 - ஆனை திப்பிலி*
*6 - சீரகம்*
*7 - கருஞ்சீரகம்*
*8 - நெல்லிமுள்ளி*
*9 - கடுக்காய்*
*10 - தான்றிக்காய்*
*11 - ஓமம்*
*12 - சுருள்பட்டை*
*13 - கிராம்பு*
*14 - கோஸ்டம்*
*15 - கோரைக்கிழங்கு*
*16 - பற்படாகம்*
*17 - தாளிசபத்திரி*
*18 - அகில் பட்டை*
*19 - அமுக்ரா*
*20 - சித்தரத்தை*
*21 - அதிமதுரம்*
*22 - ஏலரிசி*
*23 - கருங்காலி தூள்*
*24 - மஞ்சள்*
*25 - கஸ்தூரி மஞ்சள்*
*26 - தனியா*
*27 - சிறுநாகப்பூ*

*மேற்கண்ட சரக்குகள் அனைத்தும் 1பலம்(35கிராம்)*

*28 - தூதுவேளை*
*29 - ஆடாதொடை*
*30 - கருந்துளசி*
*31 - விஷ்ணுகிராந்தி*
*32 - ஓரிதழ் தாமரை*
*33 - நிலவேம்பு*
*34 - கரிசாலை*
*35 - கீழாநெல்லி*

*மேற்கண்ட மூலிகைகள் அனைத்தும் 70 கிராம்*

*செய்முறை 🌿*
-----------------------------

*அனைத்தையும் பொடிசெய்து கொள்ளவும், மொத்தம் 1 கிலோ சூரணம் வருகிறது என்றால் ஒரு லிட்டரிற்கு சற்று அதிகமாக நாட்டு பசும்பால் எடுத்துக்கொள்ளவும்*

*ஒரு இட்லி பாத்திரத்தில் நாட்டு பசும் பால் ஊற்றி இட்லி தட்டு வைத்து அதில் துணி விரித்து இந்த சூரணத்தை வைத்துத்து மூடி*

*அந்த ஒரு லிட்டர் பால் முழுவதும் சுண்டிய பின்னர் சூரணம் தயார் என்று அர்த்தம்*

*பின்னர் இந்த சண்முக சூரணத்தை சேகரித்து வைக்கவும்*

*இதை பாலில் பிட்டு அவியல் இடுதல், பாலேற்றம் செய்தல் என சொல்வார்கள். இதன் பலன்கள் பிட்டு அவியல் செய்தால் சூரணத்தின் ஆயுட்காலம் 1 வருடம், செய்யாவிட்டால் 6 மாதம், மேலும் பிட்டு அவியல் செய்தால் சுரணத்தின் சக்தி அதிகரிக்கிறது, இதில் உள்ள குற்றங்கள் நீங்குகிறது*

*பயன்படுத்தும் முறை 🌿*
------------------------------------------------

*இம்மருந்தை 1 வயது முதல் தரலாம்* 

*மாத்திரை அளவு : 200 மிலி கிராம்*

*1 வயதிற்கு மேல் 3 வயது அளவு : 1 மாத்திரை*

*வேளை : 1 வேளை சாப்பிட்ட பின்*

*3 வயதிற்கு மேல் 5 வயது அளவு : 1 மாத்திரை*

*வேளை : 2 வேளை சாப்பிட்ட பின்*

*தடுப்பு மருந்தாக செயல்பட* 

*அனுபானம் : தாய்ப்பால், நாட்டுப்பசும்பால், பச்சை தண்ணீர்*

*சாப்பிட்ட பின்*

*காய்ச்சலை சரி செய்ய* 

*அனுபானம் : தாய்ப்பால், தேன், வெந்நீர்*

*சாப்பிட்ட பின்*

*தீரும் நோய்கள் 🌿*
-------------------------------------

*அனைத்து கொரோனா symptoms, கபம் தொடர்பான அனைத்து பிரச்சனைகள், தொற்று காய்ச்சல், கொரோனா*

*நெல்லிக்காய் இலேகியம் 🔱*
---------------------------------------------------------

*தேவையான பொருட்கள்*

*நெல்லி வற்றல்                 - 3500 கிராம்*
*சுக்கு                                    - 35 கிராம்* 
*ஓமம்                                    - 35 கிராம்*
*திப்பிலி                               - 35 கிராம்*
*கிராம்பு                                - 35 கிராம்*
*தக்கோலம்                          - 35 கிராம்*
*ஏலம்                                      - 35 கிராம்*
*வெண்குங்கிலியம்            - 35 கிராம்*
*பூனைக்கண் குங்கிலியம் - 35 கிராம்*
*வாய்விடங்கம்                      - 35 கிராம்*
*சீரகம்                                     - 35 கிராம்*
*கொத்தமல்லி                       - 35 கிராம்*
*அதிமதுரம்                             - 35 கிராம்*
*கூகைநீரு                               - 35 கிராம்*  
*பனங்கற்கண்டு                    - 350 கிராம்*
*நெய்                                        - 1400 மி.லிட்டர்*

*செய்முறை 🌿*
-----------------------------

*அனைத்தையும் பொடி செய்து நெய்யில் சிறுதீயில் கிளரவும், இலேகிய பதம் வந்ததும் அடுப்பை அனைத்து ஆற வைத்து கண்ணாடி பாட்டலில் சேகரிக்கலாம்* 

*பயன்படுத்தும் முறை 🌿*
------------------------------------------------

*இம்மருந்தை 2 வயது முதல் தரலாம்* 

*அனுபானம் : நாட்டு பசும்பால், வெந்நீர், தேன்*

*2 வயது - 0.5 கிராம்* 

*3 வயது - 1 கிராம்*

*4 வயது - 2 கிராம்* 

*5 வயது - 3 கிராம்*

*வேளை : 1 வேளை சா.பின்*

*அப்படியே சாப்பிடும் குழந்தைகளுக்கு அப்படியே கொடுக்கலாம்* 

*அப்படியே சாப்பிடாத குழந்தைகளுக்கு நாட்டுப்பசும் பாலில் கலந்து கொடுக்கலாம்* 

*மேலும் வெந்நீரில் அல்லது தேனிலும் கலந்து கொடுக்கலாம்*

*தீரும் நோய்கள் 🌿*
-------------------------------------

*நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், மேகம், கிராணி, அஸ்திசுரம், பொருமல், காந்தல், இருமல், கபம், ஈளை, சிலேற்பனம்*

*கடுக்காய் சூரணம் 🔱*
--------------------------------------------

*தேவையான பொருட்கள்*

*கடுக்காய் பொடி          - 20 கிராம்*
*நிலாவாரை சூரணம்  - 20 கிராம்* 
*திப்பிலி பொடி              - 5 கிராம்* 

*செய்முறை 🌿* 
-----------------------------

*மூன்று பொடிகளையும் கலந்து சேகரிக்கவும்*

*பயன்படுத்தும் முறை 🌿*
------------------------------------------------

*5 கிராம் கடுக்காய் சூரண பொடியை 200 ml தண்ணீரில் கொதிக்க வைத்து 100 மிலி ஆன பின் பருத்தி துணியில் வடித்து ஆற வைத்து தரலாம்**

*இம்மருந்தை 6 மாதம் முதலே தரலாம்*

*6 மாதம் முதல் 1 வயது வரை - 5 மில்லி*

*1 வயதிற்கு மேல் 2 வயது வரை - 10 மில்லி*

*2 வயதிற்கு மேல் 5 வயது வரை - 15 மில்லி*

*கொரோனா Symptoms உள்ள பெரியவர்கள் இதே மருந்து 100 ml வரை எடுக்கலாம்* 

*தீரும் நோய்கள் 🌿*
-------------------------------------

*ஆக்சிஜன் பற்றாக்குறை, மூச்சு திணறல், கோழை, தொண்டை கரகரப்பு, மார்பு சளி, தீராத இருமல்*

*உச்சி பொடி 🔱*
-----------------------------

*நாட்டு மருந்து கடைகளில் நீங்கள் பெற்றுக்கொள்ளலாம்*

*பயன்படுத்தும் முறை 🌿*
-------------------------------------------------

*6 மாத குழந்தைகள் முதல் தினம் பயன்படுத்தலாம்*

*தலைக்கு குளித்த பின் 1 சிட்டிகை உச்சந்தலையில் லேசாக தேய்த்துவிடலாம்*

*பிறந்த குழந்தை முதல் 6 மாத குழந்தை வரை தலைக்கு குளித்த பின் கற்பூரவள்ளி இலை சாறு மட்டும் ஒரு துளி உச்சியில் வைத்து விடலாம்*

*தீரும் நோய்கள் 🌿*
--------------------------------------

*சளி பிடிக்காது, வீசிங், மூச்சுத்தினறல், ஆஸ்துமா வராமல் தடுக்கும் (உடலில் சளி தங்காது)* 

*குறிப்பு : இந்த அளவுகள் மற்றும் மருந்து எடுக்கும் முறைகள் தடுப்பு மருந்தாக எடுப்பதற்கு மட்டுமே, பிரச்சனைகள் உள்ள குழந்தைகளுக்கு சித்த மருத்துவரை ஆலோசித்து அவர்கள் கூறும் அளவுகளை தரலாம்*

*சித்தா தடுப்பு மருந்துகளை உங்கள் குழந்தைகளுக்கு கொடுத்திடுங்கள் 🌿*

*அனைத்து வகை கொரோனாவில் இருந்து குழந்தைகளை காத்திடுங்கள் 💓*

*நன்றி*

*இரா.மதிவாணன்*

🔱🔥🔱🔥🔱🔥🔱🔥🔱🔥🔱🔥
🙏🏽🌹🙏🏽🌹🙏🏽🌹🙏🏽🌹🙏🏽🌹🙏🏽🌹

No comments:

Post a Comment