அஷ்ட கர்மம் - சல்லிய முனிவர் விவரித்தது.
**********************************
அஷ்ட கர்மம் என்பது மாந்திரீகத்தின் எட்டு
அங்கங்களை
குறிக்கும். அவை
1) வசியம்
2) மோகனம்
3) தம்பனம்
4) உச்சாடனம்
5) ஆக்ருஷணம்
6) பேதனம்
7) வித்துவேஷணம்
8)மாரணம் என்பனவாகும்.
இவற்றை முறைப்படி கற்று தேர்ந்தவர்க்கே
இது சித்தியாகும்.
அப்படி முறையாக கற்றவரே உண்மையான
மாந்திரீகவாதியாவார்.
அப்படி அஷ்ட கர்மங்களை முறையாக
கற்றுத்தேர்வதற்குரிய
முறைகளை சித்தர் பெருமக்கள் நமக்காக
அருளியுள்ளனர்.
அவ்வகையில் சல்லிய முனிவர் அருளிய
சல்லியம் என்னும்
மாந்திரீக நூலில் அஷ்ட கர்மங்களுக்குரிய
நாள், திசை, உடுப்பு,
உலோகம்,எண்ணை, அதிதேவதை, மலர்,
ஆசனம் இவைகள்
பற்றிய தகவல்களை தந்துள்ளார்.
அதைப்பற்றி
இன்றைய
பதிவில்
தெளிவாக பார்ப்போம்.
அஷ்டகர்மத்திற்குரிய நாட்கள்:
*********************************
ஞாயிறு - வசியம்
திங்கள் - மோகனம்
செவ்வாய் - வித்துவேஷணம்
புதன் - தம்பனம்
வியாழன் - உச்சாடனம்
வெள்ளி - ஆக்ருஷணம்
சனி - மாரணம் இந்நாட்களில் அக்கர்மங்கள்
செய்ய அது
சித்தியாகும்.
இதில் குறிப்பாக வியாழக்கிழமையில் எந்த
வேலைகளைச்
செய்தாலும் அது பச்சை மரத்தில்
ஆணிஏறுவது போல
உடனுக்குடன் பலிக்கும் என்கிறார் சல்லிய
முனிவர்.
திசைகள்:
************
கிழக்கு - வசியம்
தெற்கு - மோகனம்,மாரணம்
மேற்கு - உச்சாடனம்
வட்க்கு - பேதனம்
தென்மேற்கு - வித்துவேஷ்ணம்
தென்கிழக்கு - தம்பனம்
வடமேற்கு - ஆக்ருஷணம்
வடகிழக்கு - சகல கர்மத்திற்கும் உகந்த
திசையாகும்.
உடுப்புகள்:
*************
சிவந்த வஸ்திரம் - வசியம்
மஞ்சள்வஸ்திரம் - மோகனம்
பச்சை வஸ்திரம் - தம்பனம்
வெள்ளை வஸ்திரம் - பேதனம்
பச்சைப்பட்டு - உச்சாடனம்
கருப்பு வஸ்திரம் - மாரணம்
செம்பட்டு-சகல கர்மத்திற்கும் உகந்த
உடுப்புகளாகும்.
உலோகங்கள்:
****************
காரீயம் - வசியம்
வங்கம் - மோகனம்
பொன் - ஆக்ருஷணம்
செம்பு - தம்பனம்
வெள்ளீயம் - உச்சாடனம்
குருத்தோலை - வித்துவேஷணம்
இரும்பு - பேதனம்
வெள்ளி - மாரணத்திற்கும் உகந்த
உலோகங்களாகும்.
எண்ணைகள்:
*****************
பசு நெய் - வசியம்
நல்லெண்ணை - மோகனம்
வேப்பெண்ணை - மாரணம்
புங்கெண்ணை - உச்சாடணம்
புன்னை எண்ணை - பேதனம்
ஆதளை எண்ணை - தம்பனம்
கழுதை,ஆடு,பன்றிகளின் நெய் -
வித்துவேஷணம்
வன்னி,ஆல்,விளா,இவைகள் -
சுபகர்மத்திற்கும்
கள்ளி,எருக்கு,எட்டி
அத்தி,இச்சி,விடத்தலை
இவைகள்} - அசுபகர்மத்திற்கும் உகந்த
எண்ணை வகைகளாகும்.
அதிதேவதைகள்:
********************
ஈசன் - வசியம்
அக்கினி - மோகனம்
இந்திரன் - தம்பனம்
நிருதி - உச்சாடனம்
வருணன் - ஆக்ரூஷணம்
வாயுதேவன் - வித்துவேஷனம்
குபேரன் - பேதனம்
எமன் - மாரணம் முதலியன
அஷ்டகர்மத்திற்குரிய
அதிதேவதைகளாகும்.
மலர்கள்:
**********
மல்லிகை - வசியம்
முல்லை - மோகனம்
தாமரை - தம்பனம்
தும்பை - உச்சாடனம்
அரளி - ஆக்ரூஷணம்
காக்கண மலர் - வித்துவேஷணம்
ஊமத்தம் - பேதனம்
கடலை மலர் - மாரணம் முதலியன
அஷ்டகர்மத்திற்குரிய
மலர்களாகும்.
ஆசனங்கள்:
**************
வில்வப்பலகை - வசியம்
மாம்பலகை - மோகனம்
பலாப்பலகை - தம்பனம்
நீலக்கம்பளம் - உச்சாடனம்
வெள்ளாட்டுத்தோல் - ஆக்ருசணம்
எட்டிப்பலகை - வித்துவேஷனம்
மரத்தோலாடை -பேதனம்
அத்திப்பலகை - மாரணம் முதலியன
அஷ்டகர்மத்திற்குரிய
ஆசனங்களாகும்.
அஷ்டமாசித்துக்கள்
**********************
* அணிமா:
பெரிய ஒரு பொருளை தோற்றத்தில்
சிறியதாகக் காட்டுவது/ஆக்குவது.
பிருங்கி முனிவர் முத்தேவர்களை மட்டும்
வலம் வருவதற்காக சிறு வண்டாக
உருமாறினார் என்ற செய்தி அணிமா என்ற
சித்தைக் குறிக்கும்.
* மஹிமா:
சிறிய பொருளைப் பெரிய பொருளாக்குவது.
வாமன அவதாரத்தில் திருமால் இரண்டடியால்
மூவுலகை அளந்ததும், கிருஷ்ண பரமாத்மா
அர்ஜூனனுக்கு விஸ்வ ரூப தரிசனம் காட்டி
உலகமே தன்னுள் அடக்கம் என்று
காட்டியதும் மஹிமா என்னும் சித்தாகும்.
* லஹிமா:
கனமான பொருளை இலேசான பொருளாக
ஆக்குவது.
திருநாவுக்கரசரை சமயப் பகை காரணமாக
கல்லில் கட்டி கடலில் போட்டபோது கல்
மிதவையாகி கடலில் மிதந்தது லஹிமா
ஆகும்.
*கரிமா:
இலேசான பொருளை மிகவும் கனமான
பொருளாக ஆக்குவது.
அமர்நீதி நாயனாரிடம் கோவணம்
பெறுவதற்காக இறைவன் வந்தபோது, ஒரு
கோவணத்தின் எடைக்கு தன்னிடமுள்ள
எல்லா பொருட்களை வைத்தும் தராசுத்
தட்டு சரியாகாமல் கடைசியாக தானும் தன்
மனைவியும் ஏறி அமர்ந்து சரி செய்த சித்தி
கரிமா.
*பிராத்தி:
எவ்விடத்திலும் தடையின்றி சஞ்சாரம்
செய்வது.
திருவிளையாடற்புராணத்தில் "எல்லாம்வல்ல
சித்தரான படலம்" என்னும் பகுதியில் சிவன்
ஒரே சமயத்தில் நான்கு திசைகளிலும்
காட்சியளித்ததாக வரும் சித்தி பிராத்தி.
*பிரகாமியம்:
வேண்டிய உடலை எடுத்து
நினைத்தவரிடத்தில் அப்போதே தோன்றுதல்.
அவ்வையார் இளவயதிலேயே முதுமை
வடிவத்தைப் பெற்றதும், காரைக்கால்
அம்மையார் தன்னுடைய அழகான
பெண்வடிவத்தை மாற்றி பேய் வடிவம்
பெற்றதும் பிரகாமியம் என்னும் சித்தாகும்.
*ஈசத்துவம்:
ஐந்து தொழில்களை நடத்துதல்.
திருஞானசம்பந்தர் பூம்பாவைக்கு உயிர்
கொடுத்து எழுப்பியமை ஈசத்துவம் எனும்
சித்தாகும்.
*வசித்துவம்:
ஏழுவகைத் தோற்றமாகிய தேவ, மானிட, நரக,
மிருக, பறப்பன, ஊர்வன, மரம்
முதலியவற்றைத் தம்வசப் படுத்துதல்.
திருநாவுக்கரசர் தம்மைக் கொல்வதற்காக
வந்த யானையை நிறுத்தியதும், ராமர்
ஆலமரத்திலிருந்து ஒலி செய்து
கொண்டிருந்த பறவைகளின் ஓசையை
நிறுத்தியதும் வசித்துவம் எனும் சித்தாகும்.
- நன்றி shiva shangar
No comments:
Post a Comment