Saturday, 24 October 2015

சாம்பிராணி தூப பொடி தயாரிக்க தேவையான மூலிகைகள்

மூலிகை தூப பொடி (கணபதி,நவகிரக ஹோமம் செய்த பலனை கொடுக்கும்)

சதுரகிரிக்கு சென்று வருகிறீர்களே,சாம்பிராணி ,குங்கிலியம் போன்ற பொருள்கள் தரக்கூடாத என்று நண்பர்கள் பலர் கேட்ட போது,அடுத்த முறை சதுரகிரி மலையில் சிவனடியார் ஒருவர் 18 மூலிகைகளை கூறி,இதை கொண்டு தூபம் போட்டால் கணபதி,நவகிரக ஹோமம் செய்த பலனை கொடுக்கும்,தினமும் போடலாம் இல்லை என்றால் செவ்வாய்,வியாழன்,ஞாயிறு செய்தால் சிறப்பாக இருக்கும் என்றார். தற்போது பெரும்பான்மையான மக்கள் விறகு அடுப்பு உபயோகிப்பது இல்லை இதனால் கரிதனல், மேலும் தூபக்கால் கிடைப்பதும் கடினம் ,நாம் சாம்பிராணி ,குங்கிலியம் போன்றவற்றை வாங்கி வைத்தாலும்,உபயோக படுத்த மக்கள் தயாராக இல்லை என்பதால் அதை குறித்து வைத்ததோடு விட்டுவிட்டோம்,

இதில் கலந்துள்ள மூலிகைகள்
1.சாம்பிராணி
2.விலாமிச்சை வேர்
3.தும்பை
4.தேவதாறு
5.அருகம்புல்
6.குங்கிலியம்
7.வேப்ப இலை 
8.நொச்சி இலை 
9.வில்வ இலை 
10.வெண்கடுகு 
11.கருங்காலி
12.நன்னாரி
13.வெட்டிவேர்
14.நாய்க்கடுகு
15.ஆலங்குச்சி
16.அரசங்குச்சி
17.நாவல் குச்சி 
18.மருதாணி விதை

போன்ற 18 வகையான மூலிகைகளை தனித்தனியாக பொடித்து சம அளவு எடுத்து கலந்து காற்று புகாத பாத்திரத்தில் சேமித்து வைத்து உபயோகபடுத்தலாம்.
இந்த மூலிகை கலவையை கொண்டு தூபம் போடுவதால் கிடைக்கும் நன்மைகள் (சிவனடியார் கூறியது,சோதித்து பார்க்கப்பட்டது மேலும் பரிசோதனைக்கு உட்பட்டது)
1.கணபதி மற்றும் நவ கிரக ஹோமம் செய்த பலனை எளிமையாக பெறலாம்(தடைகள் விலகும்,எடுத்த காரியங்களில் ஜெயம் உண்டாகும்,ஏவல்,பில்லி சூனியம் போன்ற தடைகள் நீங்கும்,நவ கிரக தோஷங்கள் நீங்கிவிடும் ,எதிரிகள் தொல்லை,இறந்தவர்களின் சாபம் போன்றவை போய் விடும்)
2.கடை மட்டும் தொழில் நிலையங்களில் உபயோக படுத்த வியாபாரம் பெருகும்,எதிரிகள் தொல்லை விலகும்.
3.வீட்டில் நல்ல சக்திகள் நிலை பெரும்,வீண் சண்டை ,அமைதி இன்மை ,தூக்கமின்மை போன்றவை அகலும்.
4.நோய் தொல்லை நீங்கும் ,எந்த விஷ கிருமிகள் மற்றும் விஷ ஜந்துக்கள் வீட்டில் தங்காது.
பொதுவாக அறிவியல் ரீதியாக சாம்பிராணி தூபம் போடுவதால்,வீடு மட்டும் கடைகளில் உள்ள அனைத்து இடங்களில் உள்ள கெட்ட காற்றை அகற்றும் மேலும் விஷ ஜந்துக்களை அண்ட விடாமல் வெளியேற்றும் ,எதிர்மறை எண்ணங்களை குறைக்கும்.மழை காலங்களில் நோய் எதிர்ப்பு சக்தியை குறையாமல் அதிகரிக்கும்.

No comments:

Post a Comment