குமட்டலை சரிசெய்யும் ஆல்பக்கோடா !
வாந்தி, குமட்டலை சரிசெய்ய கூடியதும், அஜீரணத்தை போக்கவல்லதும், உடலுக்கு பலத்தை கொடுக்க கூடிய தன்மை கொண்டதும், மலச்சிக்கலை தீர்க்க கூடியதும், கொழுப்பை குறைக்க வல்லதுமான ஆல்பக்கோடா பழம் குறித்து இன்று நாம் பார்ப்போம். ஆல்பக்கோடா உடல் தேற்றியாகவும், பலத்தை தரக்க கூடிய தன்மை கொண்டது. மலக்கட்டுவை சரி செய்கிறது. ஆல்பக்கோடாவில் இரும்பு சத்து அதிகமாக இருப்பதால், ரத்த ஓட்டத்தை சீராக்கும். ரத்த சிவப்பு அணுக்களை அதிகரிக்கும். இதில், வைட்டமின் சி சத்து அதிகமாக இருப்பதால் எலும்புகளுக்கு பலம் கொடுக்க கூடியது. உடலில் இருக்கும் நச்சுக்களை வெளித்தள்ளக் கூடியது. இனிப்பு மற்றும் புளிப்பு சுவை கொண்ட இந்த ஆல்பக்கோடாவை குமட்டல் வரும்போது வாயில் அடக்கி வைத்தால் குமட்டல் சரியாகும். நோயாளிகள் தினமும் சாப்பிடுவதால் நல்ல பலனை தரும். உடலுக்கு பலத்தை தரும். ஆல்பக்கோடா நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். பிளம்ஸ் பழவகையை சேர்ந்தது.
ஆல்பக்கோடாவை பயன்படுத்தி அஜீரணம், பசியின்மை, வயிறு உப்புசம், வாந்தி, குமட்டலுக்கான மருந்து தயாரிக்கலாம்.3 ஆல்பக்கோடா பழம், 2 துண்டு இஞ்சி, சிறிது பனங்கற்கண்டுடன் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி குடித்தால் குமட்டல் சரியாகும். கொழுப்பு சத்தை குறைக்கும்.வைட்டமின்கள் நிறைந்த இந்த பழம் புத்துணர்வை தரக்கூடியது. சோர்ந்துபோன உடலுக்கு தெம்பை தரக்கூடியது. நோய்வாய்ப்பட்டவர்களின் பசியின்மையை போக்கும். குமட்டலுக்கு மருந்தாவதுடன், வாந்தியை தடுத்து நிறுத்தும் தன்மையை கொண்டுள்ளது. வயிற்று புண்களை ஆற்றும். நார்ச்சத்து அதிகம் இருப்பதால் மலச்சிக்கலை தடுக்கிறது. ரத்த அழுத்தம் சீராகும். ரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்பு சரியாகும்.
பதப்படுத்தப்பட்ட பிளம்ஸ் பழங்கள்தான் ஆல்பக்கோடா. நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ள இந்த பழத்தை பயன்படுத்தி மலச்சிக்கலுக்கான மருந்து தயாரிக்கலாம்.4 ஆல்பக்கோடா பழம், ஒரு ஸ்பூன் சோம்பு, அரை ஸ்பூன் பனங்கற்கண்டுடன் ஒரு டம்ளர் நீர் சேர்த்து கொதிக்கவைக்கவும். குழந்தைகளுக்கு 2 பழம், அரை ஸ்பூன் சோம்பு சேர்த்தால் போதும். இதை வடிக்கட்டி குடித்தால் மலச்சிக்கல் சரியாகும். செரிமான குறைபாடுகள் இல்லாமல் போகும். வயிறு சுத்தமாகி மலச்சிக்கல் சரியாகும். ஆல்பக்கோடாவை பயன்படுத்தி கொழுப்பை குறைக்க கூடிய மருந்து தயாரிக்கலாம். ஆல்பக்கோடா பழம், கொள்ளு, தேன் எடுத்துக்கொள்ளவும். 4 பழத்தை நீர்விட்டு ஊறவைத்து, அதே நீருடன் எடுத்துக்கொள்ளவும். அதனுடன் ஒரு ஸ்பூன் கொள்ளுப்பொடி, நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி தேன் சேர்க்கவும்.
இதை குடித்தால் உடல் எடை குறையும். பசியை அடக்கும் தன்மை கொண்டது. ரத்த நாளங்களில் கொழுப்பு படிந்தால் ரத்த அழுத்தம் அதிகமாகும். உடல் எடை கூடும். இந்நிலையில், கொழுப்பு சத்தை குறைக்க கூடியதாக ஆல்பக்கோடா உள்ளது. பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட இந்த பழத்தில் வைட்டமின், மினரல், நார்ச்சத்து உள்ளது. உடலுக்கு தீங்கில்லாதது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இதை எடுத்துக்கொள்ளலாம்.
No comments:
Post a Comment