Monday, 5 October 2015

டெங்கு காய்ச்சலில் இருந்து எவ்வாறு நம்மை பாதுகாத்துக் கொள்வது?

டெங்கு காய்ச்சலில் இருந்து எவ்வாறு நம்மை பாதுகாத்துக் கொள்வது?

- ஹீலர்.அ.உமர் பாரூக் -
Dengue_0

டெங்குக் காய்ச்சல் மட்டுமல்ல; பறவைக்காய்ச்சல், பன்றிக்காய்ச்சல், சிக்கன்குனியா..என பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் எந்தக் காய்ச்சலாக இருந்தாலும் அவற்றிலிருந்து நம்மை எளிதாகப் பாதுகாத்துக் கொள்ள முடியும். காய்ச்சல் என்பது நோய் அல்ல. நம் உடலில் தேவையற்ற கழிவுகளை வெளியேற்ற உடலின் எதிர்ப்புசக்தி செய்யும் பாதுகாப்பு ஏற்பாடுதான் காய்ச்சல். நாம் காய்ச்சலைப் பார்த்து பயப்பட வேண்டியதில்லை. அது ஏற்படக்காரணமான கழிவுகள் நம் உடலில் தேங்குவதை தவிர்ப்பதுதான் முக்கியமானது.டெங்கு காய்ச்சலுக்கு காரணமாகச் சொல்லப்படும் கிருமிக்கு எதிராக, நம் உடலைக் காப்பதற்காக ”இன்டெர்பெரோன்” என்ற புரதத்தை நம் எதிர்ப்புசக்தி சுரக்கிறது. இந்த சுரப்பை ஏற்படுத்தவும், கழிவுத் தேக்க பாதிப்பைக் கட்டுப்படுத்தவும்தான் நம் உடலில் டெங்கு காய்ச்சல் ஏற்படுகிறது. ஆக, காய்ச்சல் என்பது பீதியடைய வேண்டிய, பயப்படக்கூடிய விஷயம் இல்லை.கிருமியால் பரவுவதாகச் சொல்லப்படும் எல்லாவிதமான நோய்களும் எல்லா மனிதர்களையும் பாதிப்பதில்லை. ஆட்கொல்லி நோயாகக் கூறப்படும் எய்ட்ஸ் வைரஸ் கூட எல்லா நபர்களையும் பாதித்து விட முடியாது என்று மருத்துவ அறிவியல் கூறுகிறது. எதிர்ப்பு சக்தி வலிமையாகவும், முழு ஆரோக்கியத்தோடும் இருக்கிற நபர்களை எந்த வைரஸ் நோயும் தாக்குவதில்லை என்பது அறிவியல் உண்மை. அது போலவே டெங்கு என்று சொல்லப்படும் காய்ச்சலும் எல்லா நபர்களுக்கும் வருவதில்லை. எனவே முதலில் டெங்கு பரவி மனித குலத்தை அழித்துவிடும் என்ற பயத்தில் ஒவ்வொரு தனிமனிதனும் சிக்க வேண்டிய அவசியமில்லை. உளவியல் ரீதியாக டெங்கு காய்ச்சலிற்குக் காரணமாகக் கூறப்படும் வைரஸ் பரவுவதை விட, அது பற்றிய பயம் பரவுவது ஆபத்தானது. மனதில் ஏற்படும் மாறுபாடுகளும், பயமும் உடல்நிலையையும், அதன் ஆரோக்கியத்தையும் சீர்குலைக்கும்.கி.பி.265 இல் டெங்கு என்று கூறப்படும் இதே அறிகுறிகளுடைய காய்ச்சல் சீனாவிலும், 1779 களில் ஐரோப்பிய நாடுகளிலும் இருந்துவந்துள்ளது.1789 இல் இந்த அறிகுறிகளுடைய காய்ச்சலுக்கு அமெரிக்காவில் டெங்கு என்று பெயரிடப்பட்டது. இதே அறிகுறிகளை உடைய காய்ச்சல் என்பது இப்போதுதான் கண்டுபிடிக்கப்பட்ட புதிய நோய் அல்ல. காலம் காலமாக உலகம் முழுக்க உள்ள சாதாரணமான காய்ச்சல்தான் என்பதை நாம் புரிந்து கொள்வது அவசியமானது.சிக்கன்குனியா, மலேரியா, டெங்கு..என பல நோய்களுக்குக் காரணமாகக் கூறப்படும் ஏடிஸ் வகை கொசுக்களை அழிப்பதற்கு என்ன விதமான நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ள முடியும்? இருநூறு வருடங்களுக்கும் மேலாக உள்ள மலேரியா, டெங்கு என்று பெயரிடப்பட்ட காய்ச்சல்களும், அதை உருவாக்குவதாகக் கூறப்படும் கொசுக்களும் இருக்கின்றன. இந்த இருநூறு வருடங்களில் உலகநாடுகள், உலக சுகாதார நிறுவனம் என அனைவரும் கொசுக்களை ஒழிக்க வருடம் தோறும் பட்ஜெட்களைப் போட்டுக்கொண்டிருக்கிறார்கள். உண்மையில் இருநூறு வருட கொசு ஒழிப்புத் திட்டங்களில் கொசு ஒழிந்திருக்கிறதா? அல்லது கூடுதாலாகி இருக்கிறதா? இதற்கு பதிலாக எல்லாக் காலங்களிலும் ஆரோக்கியமாகவும், நோய் எதிர்ப்பு சக்தியோடும் வாழ்வதற்கான வழிகளை நாம் முன்வைத்திருந்தால் இந்தவகை சீசன் பீதிகளை கிளப்ப வேண்டிய அவசியம் இருந்திருக்காது.ஆங்கில மருத்துவத்தில் டெங்கு காய்ச்சலுக்கு என்று எந்த விதமான தடுப்பு மருந்தோ, குணமாக்கும் மருந்தோ இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த நிலையில் நம் முன் இரண்டு கேள்விகள் நிற்கின்றன. அவற்றுக்கு விடைகாண்பது காலத்தின் கடமையாக இருக்கிறது.காய்ச்சல் வந்த நபருக்கு எந்த விதமான உதவிகள் செய்யலாம்?# முதலில் காய்ச்சல் வருவதைக் கண்டு பயப்படத்தேவையில்லை. ஏனென்றால் எல்லா காய்ச்சல்களுமே உடலில் பாதிப்பை ஏற்படுத்தும் பொருட்களுக்கு எதிராக நம் எதிர்ப்பு சக்தி ஏற்படுத்தும் பாதுகாப்பு ஏற்பாடுதான்.# காய்ச்சல் ஏற்பட்ட நபருக்கு செரிமான சக்தி குறைந்து போயிருக்கும். ஏனென்றால் உடலின் முழு சக்தியும் திரட்டப்பட்டு நோயெதிர்ப்பு வேலையில் ஈடுபட்டிருக்கும். அதனால் பசி இருக்காது. காய்ச்சல் முழுமையாக குறையும் வரை எந்த உணவையும் கட்டாயப்படுத்தி கொடுக்கக்கூடாது.# தேவையான போது தண்ணீர் கொடுக்கலாம். தண்ணீர் அருந்தும் போது குமட்டல், வாந்தி இருந்தால் வாயை நனைக்கும் அளவு தண்ணீர் கொடுத்தால் போதும்.# உதடுகள் வறண்டு காணப்படும் போது தண்ணீரால் உதடுகளை நனைத்துவிடலாம்.# வெப்பம் அதிகரித்துக் காணப்படும் போது அடி வயிற்றிலும், நெற்றியிலும் ஈரத்துணியை இடலாம்.# முழு ஓய்வு அவசியம்.# தாகம் முழுமையாக ஏற்பட்ட பின்பு மெதுவாக பசியுணர்வு தெரிய ஆரம்பிக்கும். அதுவரை உணவையோ, காபி,டீ போன்றவைகளையோ தரக்கூடாது.# பசி ஏற்பட்ட பின்பு நீர்த்த உணவுகளில் துவங்கி, அடுத்தடுத்த வேலைகளில் படிப்படியாக திட உணவுகளுக்கு வரலாம்.….இம்முறையை குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் பின்பற்றலாம். ஒவ்வொரு முறையும் காய்ச்சல் ஏற்படும் போது இவற்றைக் கடைபிடித்தால் ஆரோக்கியம் நிலையானதாக மாறும். நோய் என்ற பயத்திற்கே இடமில்லை.எல்லா வகை பீதிகளில் இருந்தும் நம்மைக் காப்பாற்றும் எதிர்ப்பு சக்தியை சரியாக வைத்துக் கொள்வது எப்படி?# பசியை உணர்ந்து, பசி ஏற்படும் போதுதான் சாப்பிடவேண்டும். பசி இல்லாத போது நேரத்தைப் பார்த்து சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.# பசிக்கிற அளவிற்குத் தகுந்தவாறு உண்ணுகிற உணவின் அளவை மாற்றிக் கொள்ள வேண்டும். ஒரே மாதிரியான பசி எப்போதும் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.# தூக்கம் என்பது அவசியமானது. இரவு 11 மணியில் இருந்து அதிகாலை 3 மணி வரைக்கும் தூங்க வேண்டிய அவசியமான நேரமாகும். இந்த நேரத்தில் தான் உடலில் எதிர்ப்பு சக்தி நோயெதிர்ப்பு வேலையை முழு வீச்சில் மேற்கொள்கிறது.# இரவில் தூங்குவதற்கு பதிலாக பகலில் தூங்கி கணக்கை சரிசெய்து கொள்ள முடியாது. ஏனென்றால் உடலின் நச்சுத்தன்மையை அகற்றும் வேலையும், ஒவ்வொரு உள்ளுறுப்பையும் சீரமைக்கும் வேலையும், ஒவ்வொரு உயிரணுவும் வளர்ச்சியடையும் வேலையும் இரவுகளில்தான் முழுமையாக நடைபெறுகின்றன. எனவே இரவுகளில் தூங்குவது ஆரோக்கியத்தின் அடிப்படைத் தேவை.ஒவ்வொரு நோயும் பரவுவதாக நாம் கேள்விப்படும் போது மட்டும்தான் நாம் ஆரோக்கியம் பற்றி சிந்திப்பவர்களாக இருக்கிறோம். இதற்கு மாறாக நாம் ஆரோக்கியமாக இருக்கும் போதே அதனை எப்படி நிலையானதாக மாற்றிக் கொள்வது என்று யோசித்தால் எந்த விதமான சீசன் பீதிகளுக்கும் நாம் ஆளாக வேண்டியதில்லை. மேற்கண்ட வழிமுறைகளைக் கடைபிடிப்பதன் மூலம் நோயெதிர்ப்பு சக்தியை உடல் பெறவும், பயத்திலிருந்து விடுபடும் வலிமையை மனம் பெறவும் உதவ முடியும்.

No comments:

Post a Comment