Sunday, 11 October 2015

எலும்புகள் பலம் பெற.

கொய்யாப்பழம்
கொய்யாப்பழத்தை தினசரி குழந்தைகளுக்கு சாப்பிட கொடுத்து வந்தால் எலும்புகளுக்கு பலம் உண்டாகும்.
கோபுரம் தாங்கி செடி  
கோபுரம் தாங்கி செடி ,கற்கண்டு, நெய்
கோபுரம் தாங்கி செடி வேரை நிழலில் உலர்த்தி இடித்து பொடி செய்து கற்கண்டுடன் சேர்த்து காலை, மாலை நெய்யில் கலந்து சாப்பிட்டு வந்தால் எலும்புகள, வலுப்பெறும்.
முசுமுசுக்கை இலை தூதுவளை இலை
முசுமுசுக்கை இலை, தூதுவளை இலை

முசுமுசுக்கை இலை, தூதுவளை இலை இரண்டையும் நன்கு காயவைத்து இடித்து சலித்த சூரணத்தை இரண்டு கிராம் எடுத்து சாப்பிட்டு வந்தால் எலும்பு சம்பந்தமான நோய்கள் குறையும்.
அசோகமரம்
அசோகமரபட்டையை தண்ணீர் விட்டு நன்கு அரைத்து எலும்பு முறிந்த பகுதியில் வைத்து கட்டி வந்தால் முறிந்த எலும்பு ஒன்று கூடும்.
பிரண்டை
பிரண்டை வேரை எடுத்து நன்கு உலர்த்தி இடித்து பொடி செய்து ஒரு கிராம் வீதம் காலையில் குடித்து வந்தால் முறிந்த எலும்பு பலம் பெறும்.

No comments:

Post a Comment