Thursday, 14 February 2019

நோய்கள் போக்க மெல்லிசை"- கேட்போம்

(S.Harinarayanan)
"நோய்கள் போக்க மெல்லிசை"- கேட்போம்
பல நோய்களை குணமாக்கும் சக்தி இசைக்கு இருப்பதது பல நேர‌ங்க‌ளி‌ல் ‌நிரூ‌பி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது. கர்நாடக இசையில் குறிப்பிட்ட சில ராகங்களையும் அது தொடர்பான இசைக்கோர்வைகளை கேட்பதன் மூலம் நோய்களை குணமாக்க முடியும் என்று தமிழகத்தில் நடைபெற்ற ஆய்வுகள் தெரிவித்தன.
இத்தாலி நாட்டு விஞ்ஞானிகளும் இதை தங்களது ஆய்வுகள் மூலம் உறுதி செய்துள்ளனர். இ‌த்தா‌லி‌யி‌ன் பாவியா நகரில் உள்ள பல்கலைக்கழகத்தில் மருந்துகள் பிரிவு பேராசிரியர் லுசியானோ பெர்னார்டி தலைமையில் இது தொடர்பான ஆய்வுகள் நடைபெற்றது.
இசை கேட்கும் போது இருதய நோய் படிப்படியாக குணம் ஆகிறது. குறிப்பாக மாரடைப்புக்கு பிறகு நோயாளி குணமாக மெல்லிசை பெரிதும் உதவுகிறது. இரத்த அழுத்தமும் குறைகிறது.
மன அழு‌த்தமு‌ம், ‌விர‌க்‌தி‌யி‌ல் இரு‌ப்பவ‌ர்களு‌ம் ‌சில ரா‌க‌ங்களை‌‌ கே‌ட்பத‌ன் மூல‌ம் நாளடை‌வி‌ல் அவ‌ர்களது மனம் அமைதி பெற வழி ஏ‌ற்படுவதாகவு‌ம் கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.
சுகமான, இதமான இசையைக் கேட்டதன் மூலம் நரம்பு சம்பந்தமான கோளாறுகள், நரம்பு தளர்ச்சி, சோகமான நிகழ்வில் ஏற்படும் அதிர்ச்சிகள் என இவைகளை இசை ஒரு கட்டுக்குள் கொண்டு வருகின்றன. ஒரு நபர் இசைக்கும் வயலின் இசையைக் கேட்டாலே கொடிய தலைவலியும் போய்விடும் என்கின்றனர். ஹிஸ்டீரியா என்ற நோயை நரம்புக் கருவிகளின் இசை குணமாக்கி விடுகிறதாம். அமெரிக்காவில் ஒரு பல் மருத்துவர் மயக்க மருந்தோ அல்லது வலி குறைப்பு மருந்தோ இல்லாமல், மெல்லிய இசையை எழுப்பியே நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துள்ளார்.
சுக பிரசவத்திற்கும் இசை:
இந்திய மருத்துவத்துறையில் குறிப்பிடத்தக்க மைல் கல் இசைமருத்துவம் ஆகும். அதாவது கர்ப்பிணிகளுக்கு இனிய இசை வாயிலாக சுகப்பிரசவம் நிகழுகின்ற அதிசயம் நிகழ்த்தப்பட்டு வருகிறது. கர்ப்பிணிப் பெண்கள் தினமும் காலை, மாலை வேளையில் குறைந்தபட்சம் அரைமணி நேரம் நல்ல ராகமுள்ள பாடலைப் பாடி வந்தால் அல்லது இனிய இசையைக் கேட்டு வந்தால் அவர்களுக்கு நிச்சயம் சுகப்பிரசவம் ஏற்படுகிறதாம். இந்த முறை இந்தியாவில் தமிழகத்தில் தான் முதலாவதாக அமலுக்கு வந்திருக்கிறது என்பது தமிழ்ப் பெண்களுக்குக் கிடைத்த வரப்பிரசாதம் ஆகும்.
மனச்சோர்வை குறைக்கிறது:
இசை நமது ஹார்மோன்களில் நேரடி விளைவை ஏற்படுத்துவதால் , இது மனச்சோர்வை போக்க இயற்கையாகவே உதவுகிறது. சில ராகங்கள் மூளையில் செரோட்டின் மற்றும் டோபமின்களை வெளியேற்றுகிறது. இதனால் மகிழ்ச்சி மற்றும் நல் வாழ்வை ஏற்படுத்தும் உணர்வுகள் உண்டாகின்றன . அதிகமாக கிளாசிக்கல் மற்றும் மனதை வருடும் இசையை கேட்பதனால் மனச்சோர்வு மற்றும் தூக்கமின்மையால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறைகிறது மற்றும் அவர்கள் மனநிலை நேர்மறையாக மாறுகிறது என்று ஆய்வுகள் கூறுகிறது . பிடித்த இசையை கேட்கும்போது, ஒருவரது மூளை "டோபமைன்" என்ற வேதிப்பொருளை வெளியிடுகிறது. இது ஒரு நரம்பியல் கடத்தி.இதன் மூலம் சந்தோசம், உற்சாகம் மற்றும் மகிழ்ச்சி அதிகரிக்கிறது.
இசை தூக்கத்தை மேம்படுத்தும் :
இன்று பலர் தூக்கமின்மை எனும் இன்சோம்னியாவால் (Insomnia) பாதிக்கப்படுகின்றனர். தூங்க செல்லும் 1 மணி நேரம் முன், ஏதேனும் ஒரு மனதை வருடும் இசை கேட்பவர்களுக்கு ஆழ்ந்த தூக்கம் கிடைக்கிறது என்று ஒரு ஆய்வு குறிப்பிடுகிறது.

No comments:

Post a Comment