Thursday 14 February 2019

ஆண்களின் தாடி மீசையில் ஏற்படும் புழுவெட்டை போக்கும் கலிங்காதி தைலம்

ஆண்களின் தாடி மீசையில் ஏற்படும் புழுவெட்டை போக்கும் கலிங்காதி தைலம் :
கலிங்காதி தைலம் மகளிர் நோய்களான சூதகக்கட்டு,சூதகத் தடை,சூதகக் கிருமிகளுக்கு உள்ளுக்கு வழங்கப்படும் தைலமாக பலகாலமாக பயன்பாட்டில் உள்ளதாகும்.
அதில் சேரும் சரக்குகளான வெங்காயச்சாறு, வெள்ளைப்பூண்டுச்சாறு, மலைவேம்புச்சாறு, எலுமிச்சைச்சாறு, வரிக்குமட்டிச்சாறு போன்ற அனைத்துச் சரக்குகளுமே புழுவெட்டிற்காக வெளிப்புறமாக பூசுவதற்கென தனத்தனியாக நூற்களில் கூறப்பட்டிருக்கிறது.
நாட்டு மருந்துகடைகளில் கிடைக்கும் இந்த தைலத்தை வெளிபிரயோகமாக,புழுவெட்டால் பாதிக்கப்பட்டட மீசை,தாடி,தலை,கண்புருவத்தில் தினசரி தடவிவந்தால் ஒருமாதத்தில் மீண்டும் முடி செழித்து வளரும்.

No comments:

Post a Comment