புழுவெட்டிற்கு குணபாடம் மூலிகை நூல் கைவைத்தியம் :
புழுவெட்டிற்கு மருந்தாக கைவைத்தியமாக குணபாடம் மூலிகை நூலில் கூறியபடி, சிறிய வெங்காயம் - இரண்டு, மிளகு - இரண்டு, கல்லுப்பு - ஒரு சிட்டிகை மூன்றையும் அம்மியில் அரைத்து புழுவெட்டு பாதித்த இடத்தில் தடவி வர, இரண்டுநாட்களில் வழுவழுவென இருந்த தோல் சொரசொரப்பாக மாறும். அந்நிலையில் மேற்கண்ட கலவையை பூசவதை ஒருநாள் நிறுத்திவிட்டு மறுநாள் முதல் மீண்டும் பூசவும்.
முடி முளைக்கும் வரை மேற்கண்ட கலவையை பூசுவதும் சொரசொரப்பு வந்தவுடன் நிறுத்திப் பின் மறுநாள் பூசுவதையும் தொடரவேண்டும். ஐந்தாறு நாட்களில் முடி முளைக்கத் தொடங்கும். முதலில் பூனைமுடி போல முளைக்கத் தொடங்கி பின் இயல்பான முடியாக சில வாரங்களில் முளைத்து விடும்.
முடி முளைக்கத் தாமதப்படும்போது அவ்விடத்தில் கரிசாலை மடக்குத் தைலம் தேய்த்து வந்தால் விரைவில் குணம் கிடைக்கும்.அதே போன்று மிக அதிகமாக பாதிப்புக்குள்ளாகி இருந்தால் உள் மருந்தாக இரசகந்தி மெழுகை காலை மாலை ஒரு மாதம் உண்டுவர விரைவில் நலம் பெறலாம்.
No comments:
Post a Comment