Thursday, 14 February 2019

சிவசூத்திரத்தின் முதல் யுக்தியுடன் தியானம்

சிவசூத்திரத்தின் முதல் யுக்தியுடன் தியானம்
"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்
.
சிவசூத்திரத்தின் முதல் யுக்தியுடன் தியானம் ஆரம்பம் ஆகிறது.
முதல் யுக்தி : ஒளி வீசுபவளே, இந்த. அனுபவம் இரண்டு. மூச்சுக்களுக்கிடையில் கிடைக்கலாம். மூச்சு உள்ளே வந்து - அதாவது இறங்கி - பின் திரும்புவற்குச்சற்றுமுன் - கிடைக்கப் பெற்றவர் ஆகலாம்."
.
இந்த இரண்டு புள்ளிகளுக்கிடையே விழிப்புணர்வுவோடு இரு..... அப்போது நிகழ்கிறது. உனது மூச்சு உள்ளே வரும் போது, கவனி. அது திரும்புவதற்குச் சற்றுமுன், அது வெளியேறத் துவங்குவதற்குச் சற்றுமுன், ( ஒரு கண. நேரம். அல்லது ஆயிரத்தில் ஒரு பங்கு கண நேரத்திற்கு, மூச்சு. அங்கில்லை ). ஒரு மூச்சு உள்ளே வருகிறது; பின் ஒரு குறிப்பிட்ட புள்ளியில் மூச்சு நிற்கிறது. அதன்பின் மூச்சு வெளியேறுகிறது. மூச்சு வெளியேறிய பின், மறுபடியும் ஒரு கண நேரத்திற்கு அல்லது கணத்தின் ஒரு பங்கு நேரத்திற்கு, மூச்சு நிற்கிறது. அதன்பின் மூச்சு உள்ளே வருகிறது.
.
மூச்சு உள்ளே வருவதற்கு முன்பு அல்லது வெளியேறுவதற்கு முன்பு, மூச்சு நின்றுவிடுகிற ஒரு கணம் உள்ளது. அந்தக் கணத்தில் அது நிகழ்வது சாத்தியம். ஏனெனில் நீ சுவாசிக்காத போது நீ இறந்துவிட்டாய்; நீ இன்னும் இருக்கிறாய், ஆனால் இறந்துபோனவனாக. ஆனால் இந்த கணம் நீ அதை ஒருபோதும் கவனிக்க முடியாத அளவு மிகச் சிறியதாக இருக்கிறது.
.
தந்த்ராவிற்கு, ஒவ்வொரு வெளிச்செல்லும் மூச்சும் இறப்பு, ஒவ்வொரு உள் வரும் மூச்சும் மறுபிறப்பு. உள்ளே வரும் மூச்சு மறுபிறப்பு; வெளிச்செல்லும் மூச்சு இறப்பு. வெளியே செல்லும் மூச்சு இறப்பை ஒத்தது. உள்ளே வரும் மூச்சு வாழ்வை ஒத்தது. ஆகவே ஒவ்வொரு மூச்சோடும் நீ இறக்கிறாய், மீண்டும் பிறக்கிறாய். இந்த இரண்டுக்கும் இடையிலுள்ள இடைவெளி மிகவும் குறைவானது. ஆனால் உன்னிப்பான, கவனமாக, ஆழ்ந்த பார்வை மூலம் நீ அந்த இடைவெளியை உணர்ந்துவிட்டால், சிவா சொல்கிறார், 'கிடைக்கப் பெற்றவராகலாம்' . பின் வேறு எதுவும் தேவையில்லை. நீ ஆசீர்வதிக்கப்பட்டவன், நீ அறிந்து கொண்டாய், அது நிகழ்ந்துவிட்டது.
.
நீ மூச்சுக்குப் பயிற்சி கொடுக்க வேண்டியதில்லை. அதை அப்படியே விட்டுவிட்டு. ஏன் இவ்வளவு சுலபமான யுக்தி ? இது மிகவும் எளிதாக தெரிகிறது. சத்தியத்தை அறிய இவ்வளவு எளிமையான வழியா ? சத்தியத்தை அறிவது என்பதன் அர்த்தம், பிறப்பு இறப்பு இல்லாததை அறிவது, எப்பொழுதும் அழிவற்ற இருப்பை அறிவது. உனக்கு வெளியே போகும் மூச்சு தெரியும், உள்ளே வரும் மூச்சு தெரியும். ஆனால் நீ இரண்டிற்கும் இடையே உள்ள இடைவெளியை ஒருபோதும் அறிந்ததில்லை.
.
முயற்சி செய். திடீரென்று நீ அந்த புள்ளியை உணர்வாய் உன்னால் அடைய முடியக்கூடியதே அது; அது ஏற்கனவே அங்குள்ளது. உன்னிடத்தில் அல்லது உனது கட்டமைப்பில் சேர்க்க வேண்டியது எதுவுமில்லை, அது ஏற்கனவே அங்கிருக்கிறது. ஒரு குறிப்பிட்ட விழிப்புணர்வைத் தவிர எல்லாமே ஏற்கனவே அங்குள்ளது. இதை எப்படிச் செய்வது? ,முதலில், உள்ளே வரும் மூச்சைப் பற்றிய விழிப்புணர்வு கொள். அதைக் கவனி. எல்லாவற்றையும் மறந்துவிடு, மூச்சு உள்ளே வருவதை மட்டும் பார்- அதன் பாதையைப் பார்.
.
மூச்சு உன் மூக்கு நுனியைத் தொடும்போது, அதை அங்கே உணரு. பிறகு மூச்சு உள்ளே போகட்டும். முழு உணர்வோடு அந்த மூச்சோடு நீயும் நகரு. நீ மூச்சோடு கீழே போகும்போது, கீழே கீழே போகும்போது, மூச்சைத் தவறவிட்டு விடாதே. அதற்கு முன்னால் போகாதே, அதைத் தவறவிட்டு விடாதே. அதற்கு முன்னால் போகாதே, அதைத் தொடர்ந்து போகாதே, அதோடு கூடவே போ, நினைவில் கொள்: அதை முந்திப் போகாதே, அதற்கு பின்னால் அதன் நிழலைப் போலப் போகாதே அதோடு ஒன்றாக போ.
.
மூச்சும் உன் உணர்வும் ஒன்றாக வேண்டும். மூச்சு உள்ளே போகிறது - நீ உள்ளே போகிறாய். அப்போது மட்டுமே இரண்டு மூச்சுகளுக்கு இடையிலுல்ல புள்ளியை அடைய சாத்தியம் இருக்கிறது. இது சுலபமல்ல. மூச்சோடு உள்ளே நகரு, பிறகு மூச்சோடு வெளியே நகரு: உள்ளே- வெளியே, உள்ளே- வெளியே.
.
குறிப்பாக இந்த முறையை புத்தர் முயற்சி செய்தார்; ஆகவேஇது புத்தமதத்தினரின் முறையாக ஆகிவிட்டது. புத்தமதச் சொற்களில் இது 'அனபனசதி யோகா' என்று அழைக்கப்படுகிறது. புத்தர் ஞானமடைந்தது இந்த யுக்தியின் அடிப்படையில்தான்- இதனால் மட்டுமே.
உலகத்திலுள்ள எல்லா மதங்களும், உலகத்திலுள்ள எல்லா சாதகர்களும் , ஏதோ ஒரு யுக்தியின் மூலமாகவே அடைந்திருக்கிறார்கள், அந்த எல்லா யுக்திகளும் இந்த நூற்றிப் பன்னிரண்டு யுக்திகளில் உள்ளன, இந்த முதலாவது யுக்தி புத்த மதத்தினுடையது. உலகத்தில் இது புத்தமத யுக்தியாக அறியப்படுகிறது, ஏனெனில் கௌதம புத்தர் இந்த யுக்தியின் மூலமாக ஞானமடைந்தார்.
.
புத்தர் சொன்னார், உன் மூச்சு இயல்பாக உள்ளே வருவதையும், வெளியே போவதையும் பற்றிய விழிப்புணர்வு கொள்- உள்ளே வருவது, வெளியே போவது. " அவர் ஒருபோதும் இடைவெளியைக் குறிப்பிடவில்லை. ஏனெனில் அதற்கு தேவையில்லை. நீ இடைவெளியின் மேல், இரண்டு மூச்சுக்களுக்கு இடையே இருக்கும் இடைவெளியின் மேல் அக்கறை கொண்டால், அந்த அக்கறை உன் விழிப்புணர்வைப் பாதிக்கும் என்று புத்தர் உணர்ந்து கொண்டார். ஆகவே அவர், "விழிப்புணர்வு கொள். மூச்சு. உள்ளே புகும் பொழுது அதோடு நகரு, மூச்சு வெளியே போகும்போது அதோடு நகரு. இதை மட்டும் செய் : உள்ளே நுழைவது, வெளியே போவது, மூச்சோடு. " அவர்யுக்தியின் அடுத்த பகுதியைப் பற்றி ஒருபோதும் எதுவும் சொல்லவில்லை.
.
அதன் காரணம், புத்தர் மிகவும் சாதாரண மனிதர்களிடம் பேசிக் கொண்டிருந்தார். ஆகவே. இதுவே கூட அந்த இடைவெளியை அடைய வேண்டும் என்ற. ஆசையை உருவாக்கி விடலாம். பின் அந்த இடைவெளியை அடைய வேண்டும் என்ற ஆசையே விழிப்புணர்வுக்கு தடையாக மாறலாம். ஏனெனில். இடைவெளியை அடைய . வேண்டும் என்ற ஆசைப்பட்டு விட்டால் நீ. மூச்சை முந்திக் கொண்டு. போவாய். மூச்சு. உள்ளே புகுந்து கொண்டிருக்கும். ஆனால் நீ அதற்கு முன்னால் நகருவாய். ஏனெனில் நீ வரப்போகிற இடைவெளியின் மீதே ஆர்வம் கொண்டிருக்கிறாய். ஆனால் அது எதிர்காலத்திலேயே வரப் போகிறது. புத்தர் ஒருபோதும் இதை குறிப்பிடவில்லை. ஆகவே புத்தரின் யுக்தி இதில் பாதிதான்.
.
ஆனால் மறுபாதி தானகவே பின் தொடரும். நீ தொடர்ந்து மூச்சை முழு உணர்வுக்கு, விழிப்புணர்வுக்கு, கொண்டுவரும் பயிற்சியைச் செய்து வந்தால், திடீரென்று ஒருநாள், உன்னை அறியாமல், நீ அந்த இடைவெளியை அடைவாய். ஏனெனில் உனது விழிப்புணர்வு துல்லியமானதாக, ஆழமானதாக, வலிவுள்ளதாக ஆகும்பொழுது, உனது விழிப்புணர்வு ஒரு குறிப்பிட்ட அடைப்பிற்கு வெளியே என்றாகிவிடுகிறது; உன் மூச்சு உள்ளே வருவது அல்லது வெளியே போவது மட்டுமே உன் உலகம், உன் முழு உணரவிலும் இதுவே நிறைந்திருக்கிறது- திடீரென்று நீ அந்த இடைவெளியை, மூச்சு இல்லாத அந்த இடைவெளியை, கண்டிப்பாக உணருவாய்.
.
நீ உன் மூச்சோடு நுட்பமாக நகர்ந்து கொண்டிருக்கையில், மூச்சு இல்லாத இடத்தை எப்படி நீ உணராமல் போக முடியும்? மூச்சு வெளியே போகவுமில்லை, உள்ளே வரவுமில்லை என்பதை நீ உணரும் ஒரு கணம் வரும். மூச்சு சுத்தமாக நின்று விட்டது. அந்த நின்றுவிட்ட நிலையில்- 'கிடைக்கப் பெற்றவர் ஆகலாம்!'
.
இந்த ஒரு யுக்தியே லட்சக்கணக்கானவர்களுக்குப் போதும். முழு ஆசிய கண்டமும் பலபல நூற்றாண்டுகளாக இந்த யுக்தியின் முயற்சியில் வாழ்ந்து கொண்டிருக்கிறது. திபெத், சைனா, ஜப்பான், பர்மா, தாய்லாந்து, இலங்கை- இந்தியாவைத் தவிர்த்து மற்ற முழு ஆசியாவும் இந்த யுக்தியை முயற்சித்தன. இந்த ஒரே ஒரு யுக்தியின் மூலம் ஆயிரம் ஆயிரம் பேர் ஞானமடைந்தார்கள். இது வெறும் முதல் யுக்தியே.
ஆனால் துரதிஷ்டவசமாக, இந்த யுக்தி புத்தரின் பெயருடன் சம்பந்தப்பட்டு விட்டதால், இந்துக்கள் இதை ஒதுக்கவே முயற்சித்து வந்துள்ளனர். இது மேன்மேலும் புத்தரினுடைய முறையாக அறிப்பட்டதால், இந்துக்கள் இதைச் சுத்தமாக மறந்துவிட்டனர். அது மட்டமல்ல, மற்றொரு காரணத்திற்காகவும் அவர்கள் இதை ஒதுக்க முயற்சித்தனர். அது என்னவென்றால், இந்த யுக்தியே சிவா குறிப்பிடும் முதல் யுக்தியாக இருப்பதால், பல புத்த மதத்தினர் இந்த 'விஞ்ஞான் பைரவ் தந்த்ரா' என்ற இந்த புத்தகமே ஒரு புத்த மதப் புத்தகம்தான், இந்து புத்தகம் அல்ல என்று உரிமை கொண்டாடினர்.
.
ஏற்கனவே இருந்த இந்த யுக்தியால் கௌதமர் புத்தரானார்,இந்த யுக்தியால் ஞானமடைந்தார்.ஆனால் இந்த யுக்தி புத்தருக்கு முந்தையது; யுக்தி ஏற்கனவே இருந்தது. முயற்சி செய். இது ஒரு மிகவும் எளிய யுக்தி- உனக்கு எளியது என்று நான் சொல்ல வரவில்லை, மற்ற யுக்திகளோடு ஒப்பிட்டுப் பார்த்து சொல்கிறேன். மற்ற யுக்திகள் இதைவிடக் கடினமாயிருக்கும்.
ஓஷோ

No comments:

Post a Comment