ஹோமியோபதியின் தந்தை என்று போற்றப்படும் டாக்டர் ஹானிமன்க்கு பிறகு ஜெர்மனியில் வாழ்ந்த schuessler என்பவர் புதியதொரு மருத்துவ முறையை கண்டுபிடித்தார். அந்த வைத்தியத்தை தான் பயோ கெமிஸ்ட்ரி என்பதாகும். இந்த வைத்திய முறையை அவர் கண்டுபிடித்ததும் தற்செயலாகத்தான் (ஹோமியோபதியை ஹானிமன் கண்டுபிடித்த விதமும் அவ்வாறுதான்)
இந்த வைத்திய முறையை டாக்டர் schuessler 1872 ஆண்டில் கண்டுபிடித்தார் டாக்டர் ஹானிமன் போலவே இவரும் ஜெர்மனியில் பிறந்தவர். அவர் பிறந்ததும் 66 வருடம் கழித்து அவர் காலத்திலேயே பிறந்தார்.
அவரைப்போலவே அதாவது ஹானிமன் போலவே நன்கு படித்து பல பட்டங்கள் பெற்றார் ஹோமியோபதியில் நாட்டம் ஏற்பட்டது அதை பயின்றார் நல்ல முறையில் வைத்தியம் செய்து வந்தார்.
Schuessler இவருக்கு குழந்தை இல்லாததினால் அவர் ஒரு குழந்தையை தத்து எடுத்து வளர்த்து வந்தார் அந்தக் குழந்தை நோய்வாய்ப்பட்ட பொழுது அந்த குழந்தைக்கு எல்லா வைத்தியமும் செய்து பார்த்தும் அந்த குழந்தையை காப்பாற்ற முடியவில்லை.
அதனால் மனம் வேதனைப்பட்டு schuessler எதனால் குழந்தை இறந்திருக்கக் கூடும் என்பதை அறிந்து கொள்ளும் ஆவலினால் குழந்தையை தகனம் செய்த பின்பு எஞ்சியிருந்த சாம்பலை ஆராய்ந்து பார்த்தார்.
அப்பொழுது அந்த சாம்பலில் 12 விதமான தாது உப்புக்கள் உள்ளதை அறிந்தார் ஆராய்ச்சியை முடித்தார். மேற்படி தாது உப்புக்கள் சரியான அளவில் இல்லாததே கண்டு அவர் மனம் ஆச்சரியம் அடைந்தது.
தன் குழந்தையின் நோய்க்கு இந்த தாதுஉப்புக்கள் சரியான அளவு இல்லாதது தான் காரணம் என்று முடிவு செய்தாள் ஆராய்ச்சியை முடித்தார்.
அதிலிருந்து எந்தெந்த உப்புக்கள் உடலில் குறைந்தால் எந்தெந்த நோய்கள் தோன்றுகின்றன என்பதை கண்டறிந்து அந்த உப்பை நுண்ணிய அளவில் கொடுக்கும்போது உடல் அந்த உப்பை கிரகித்து நோயைப் போக்கிக் கொள்ளுவதை தன் ஆராய்ச்சியின் மூலமாக அவர் கண்டறிந்தார்
பயோ வைத்திய முறையை பிறந்து இன்று வரை இந்த தாது உப்புக்களை ஹோமியோபதி முறையில் பின்பற்றி அவற்றை வெளிப்படுத்தி மருந்தாக்கி மக்களுக்கு அளித்தார்
ஆகவே ஹோமியோபதி மருந்துகளைப் போலவே பயோ மருந்துகளும் சிறப்பாக வேலை செய்யும் தகுதி பெற்றவை. முக்கியமாக வியாதியின் ஆரம்பக் கட்டத்தில் நோய் குணமாகி பிறகும் தேறி வரும் நிலையிலும் பயோ மருந்துகள் வேலை சிறப்பானதும்.
ஹோமியோபதி மருத்துவத்திற்கு நிகராக, பயோ வைத்தியமும் மாற்றுவழி மருத்துவ வைத்தியத்திற்கு துணைசெய்யும் முறையில் இந்த வைத்தியமும் அமைந்திருப்பதை இயற்கை நமக்கு கொடுத்த வரப்பிரசாதம்.
பயோ சால்ட் வைத்திய முறை மிகவும் எளிமையானது அதை தெரிந்து கொண்டால் சுலபமாக வைத்தியம் செய்த நோயை குணப்படுத்திக் கொள்ள முடியும்.
1.இவர் பிறந்த ஆண்டு 1821 இல் 21ஆம் தேதி ஆகஸ்ட் மாதம் ஜெர்மனியில் பிறந்தார்.
2. இவரும் ஹானிமன் போலவே பல மொழிகளை கற்றுத் தேர்ந்த ஒரு மாமேதை.
3. இவர் 1873 இல் ஒரு ஹோமியோபதி பத்திரிக்கையில் தான் கண்டுபிடித்த இந்த சத்துக்களை பற்றி முதலில் வெளியிட்ட பொழுது அதனை ஆய்வு படுத்திய ஆய்வாளர்கள் வியந்து போனார்கள்.
4. இவரது இந்த கண்டுபிடிப்பை பல ஹோமியோபதி மருத்துவர்கள் அங்கீகரித்து பயன்படுத்தி துணை மருந்தாக கொடுத்தார்கள் நல்ல நோய்களை குணமாக்கும் முறையை கண்டறிந்தார்கள்.
5. கடந்த 1898 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 30ஆம் தேதி இவர் இந்த மண் உலகத்தை விட்டு இயற்கை எய்தினார்.
உடல் அமைப்பும், இதிலுள்ள தாது உப்புக்களும், இவற்றை உபயோகிக்கும் விதமும்.
உடலில் ரத்தத்திலும் திசுக்களிலும்(Tissues) 70% சதவீதம் நீர்(water), 25% இந்திரிய உப்புக்களும் (organic matter) 5% சதவீதமும் அணிந்திரிய உப்புக்களும் (Inorganic matter)
இந்திரிய உப்புக்களான சர்க்கரை, கொழுப்பு, ஆல்புமின் முதலியவை.
அணிந்திரிய உப்புக்கள் ஆனவை அறம், கந்தகம், பாஸ்பேட், கால்சியம், சுண்ணாம்பு, இன்னும் சில....
ரத்தத்தில் குறைவாக 5% சதவீதம் மாத்திரமே, உள்ள organic salt அனிந்திரிய உப்புக்கள் தான் உடல் வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்திற்கும் அத்தியாவசியமானவை என்று டாக்டர் schuessler கண்டுபிடித்தார்.
மனித உடலை எரித்து சாம்பலை ஆராய்ச்சி செய்து அதில் உள்ள உப்புக்களை கண்டுபிடித்தார் அவைதான் பயோகெமிஸ்ட்ரி வைத்திய முறையில் உள்ள 12 தாது உப்புக்கள் அவை
🎖1. Calcarea Fluoricum _ Calc Flur
🎖2. Calcarea Phosphoricum _ Calc Phos.
🎖3. Calcarea Sulphuricum_ Calc Sulp
🎖4. Ferrum Phosphoricum _ Fer Phos
🎖5. Kali Muriaticum _ Kali Mur
🎖6. Kali Phosphoricum _ Kali Phos
🎖7. Kali Sulphuricum _ Kali sulp
🎖8. Magnesium Phosphoricum _ Mag Phos
🎖9. Natrum Muriaticum _ Nat Mur
🎖10. Natrum Phosphoricum _ Nat Phos.
🎖11. Natrum Sulphuricum _ Nat Sulp
🎖12. Silicea
இவற்றில் ஒன்று கூடுதல் ஆனாலும் குறைவு ஆனாலும் உடலில் வியாதி ஏற்படுகிறது அதன் குறிகளைக் கொண்டு அந்த உப்பை அதாவது மருந்தை கண்டுபிடித்துக் கொடுத்தால் வியாதி நிவர்த்தியாகிறது என்று schuessler கண்டுபிடித்தார்
இவருக்கு முன்பிருந்தே இந்த 12 தாது உப்புகளும் ஓமியோபதியில் இருக்கின்றன ஹோமியோபதி மருந்துகளை தயாரிப்பது போலவே இவற்றையும் தயாரிக்கிறார்கள்.
மருந்தை தயாரிக்கும் முறை பற்றிய விவரங்கள்
ஓமியோபதியில் மருத்து தயாரித்தல் அதனின் வீரியப்படுத்தும் முறைகளைப் பற்றி இங்கு நாம் பார்ப்போம்.
மற்ற வைத்திய முறையில் உபயோகிக்கப்படும் மருந்துச் சரக்குகள் தான் ஹோமியோபதி முறையிலும் உபயோகப்படுத்தப்படுகின்றன அதனால் அவைகளை தயாரிப்பதில் தான் வித்தியாசம் உண்டு.
நாயுருவி, குப்பைமேனி ஆடாதோடா, செவ்வந்தி, எட்டிக்கொட்டை, கடுகு, முதலிய தாவர வர்க்கத்திலிருந்து.
வெள்ளை பாஷாணம், நேற்றிக் ஆசிட், கந்தகம், பாதரசம், வெடியுப்பு, முதலிய ரசாயன பொருள்களிலும் இருந்தும்.
தங்கம் வெள்ளி செம்பு இரும்பு முதலிய உலோக பொருள்களில் இருந்தும்.
மருந்துகள் தயார் செய்யப்படுகின்றன.
ஹோமியோபதி மருந்துகள் தயார் செய்வதற்கு உபயோகிக்கும் பொருட்களில் கல்வங்கள், சீஷாக்கள் முதலியவை பரிசுத்தமாக இருக்க வேண்டும்.
1 ஒரு பங்கு தாது உப்பு 9 பங்கு பால் சக்கரை மாவு போட்டு பல மணி நேரம் அரைத்து எடுக்க வேண்டும் இது 1X.
இதில் 1X ஒரு பங்கு எடுத்து ஒன்பது பங்கு பால் சர்க்கரை மாவு போட்டு பல மணி நேரம் அரைத்தால் 2X
அதைப் போலவே தேவையான பிரியங்கள் வரை செய்து கொள்ளலாம் 3X, 6X, 12X.
12X வீரியம் விதை போதுமானவை நல்ல பலனைத் தரும் முற்றிலுமாக அந்த உறுப்பு கெட்டு பழுதடைந்து விட்டது என்றால் உயர்ந்த வீரியமான 30X மற்றும் 200X பயன்படுத்தலாம்.
மருந்தைக் கொடுக்கும் பொது விதிகள்.
1. தவறாக மருந்து கொடுத்தாலும் பக்க விளைவு இல்லாதது உதாரணத்திற்கு மலர் மருத்துவம் போல...
2. சிறு குழந்தைகளுக்கும் எடுத்துக்காட்டு பிறந்த குழந்தை முதல் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு 6X மூன்று வேளை உணவுக்குப் பின்பு நான்கு மாத்திரை சப்பி சாப்பிட சொல்ல வேண்டும்.
15 வயது முதல் பெரியவர்களுக்கு 12X வீரிய படுத்தப்பட்ட மாத்திரையை சாப்பிட சொல்லலாம் உணவுக்குப் பின்பு மூன்றுவேளை.
3. ஒரு நோய்க்குறிகள் உதாரணத்திற்கு காய்ச்சல் Fever
இதற்கு ஒரு குவளையில் சுடுநீர் 50 அல்லது 100 ml எடுத்துக்கொண்டு உதாரண மாத்திரை Fer phos, Calc phos ஒரு பத்து பத்து மாத்திரையை எடுத்து தண்ணீரில் கலக்கி அரை மணி நேரத்திற்கு அல்லது ஒரு மணி நேரத்திற்கு 10ml கொடுக்கலாம்.
4. ஹோமியோபதி மருத்துவத்தில் ஒரு மருந்து அல்லது இரண்டு மருந்து ஒரு மணி நேரம் அல்லது ஒரு நாளைக்கு காலை மாலை என இரு மருந்துகளை மட்டுமே பரிந்துரைக்க வேண்டும் என்று அனுபவமுள்ள மேதைகள் கூறியுள்ளார்கள் ஆனால் பயோ சால்ட் முறையில் ஐந்து மாத்திரைகளை ஒன்றாக கலக்கி காம்பினேஷன் combination செய்து கொடுக்கலாம் என்ற ஒரு முக்கியத்துவமான முறை உள்ளது.
மேலும் இவைகளைப் பற்றி ஒவ்வொன்றாக ஒவ்வொரு நாளாக பார்க்க இருக்கிறோம் இதனுடைய மருத்துவ குணபாடம்
Materia medica மற்றும் பல மேதைகள் சொன்ன அனுபவ முறைகள்.
🦋Bio Chemistry 🦋
🎖🎖🎖 Calcarea Fluoricum 🎖🎖🎖
இதை சுருக்கமாக Calc Fulr அல்லது C F என்று அழைக்கலாம்.
இந்த உப்பு எலும்பின் மேல் மூச்சிலும் பற்களின் மேல் பூச்சு காண எனாமேலும், நீண்டு சுருங்கும் தசை நார்களும் மேல் தோல்களிலும் நிறைந்திருக்கின்றது.
இது குறைந்தால் எலும்புகளில் கரடு, முரடு, கோணல் மாடல், ரணம் வலி ஏற்படும் அடிபட்டு எலும்புகளில் வலித்தால், கோளங்களில் வீக்கம், கல் போன்ற வீக்கங்கள், ரத்தம் தாரையில் வீக்கம் ஏற்படுதல், இதனால் ரத்த அழுத்தம் தடைபட்டு ரத்தக் கொதிப்பு (Blood Pressure) வியாதி ஏற்படும் இருதயம் வீக்கம், மூல வியாதி ஏற்படும்.
கல் போன்ற கழலை கட்டிகளையும் கரைக்கும். புற்று வியாதியில் தசை இறுகி கடினமாகி இருப்பதையும் இம்மருந்து கரைக்கும்.
மனம் Mind😇:
சோர்வு, கவலை, பயம், காரணமில்லாத பயம், தீர்மானிக்க முடியாமை, முடிவெடுக்க முடியாத நிலை.
தலை Head😡:
மயக்கம் மந்தமான தலைவலி மலச்சிக்கல் எதனால் ஏற்படுகின்ற தலைவலி மலச்சிக்கல்.
கண்கள் Eye👁:
தொடர்ந்து பார்த்துக் கொண்டிருப்பதால் ஏற்படும் தலைவலிகள். சிறிது நேரம் கண்ணை மூடிக் கொண்டு இருந்த நாள் மறைந்து விடும். கண் விழிகள் வெண்படலம்(Catatact) இமைகளில் கழலை கட்டிகள்.
மூக்கு Nose👃:
மூக்கின் எலும்புகள் கோலங்கள் கெட்டுப் போய் இருத்தல், மூக்கில் சதை வளர்ச்சிகளை சரி செய்தல். கும்பலுடன் ரத்தமும் சளியும் வெளியாகும் தன்மையில் இந்த மருந்து குணம் தரும்.
முகம் Face👩🦱:
தாடை எலும்புகளில் வீக்கம் உதடுகளில் வெடிப்புகள்.
பல் Teeth🦷:
பற்கள் உடைந்ததால் அல்லது எனாமல் தேய்ந்து போய் போனதனாலே பற்கள் கூசும் பொழுது இந்த மருந்து கொடுத்தால் எனாமல் வளர்ச்சி செய்து கூச்சத்தை நிறுத்திவிடும். பற்கள் ஆடுவதற்கு இது ஒரு நல்ல மருந்து. ஈறுகளில் ரத்தம் வந்தால் இது சரி செய்யும்.
நாக்கு Tongue👅:
நாக்கில் வெடிப்புகள் நாக்கில் தரித்த தன்மை நாக்கில் புண் சரி செய்யும் மருந்து.
தொண்டை Thorat🗣:
தொண்டையில் வீக்கம், வலி, எரிச்சல், அருவுதல், குத்துதல், இதனால் இருமல், கெட்டியான சளி, வெளியேறுதல். இரவில் குளிர்பானத்தை கொடுப்பதினால் வரும் தொண்டை பிரச்சனை. தொண்டையில் ஏதோ சிக்கியிருப்பது போன்ற உணர்ச்சி, அதனால் அடிக்கடி விழுங்க நேரிடும், ஆனால் இந்த வீக்கம், வலி, தொண்டையில் இருந்து சுவாசக்குழாய் வரை பரவினால் ஆஸ்துமா ஏற்படும் சுவாசிக்க கஷ்டமா இருக்கும் ஆபத்தான வியாதிகள் உண்டாகும் இதற்கு இது ஒரு நல்ல மருந்து.
மலச்சிக்கல் constipation 😔:
பூச்சிகள் ஆசனத்தில் அரிப்பு ஏற்பட்டு இரவில் தூக்கம் கலையும் ஆசனத்தில் வெடிப்புகள் மலச்சிக்கல் ரத்தம் கொட்டும் மூலவியாதி லேசான தலைவலியுடன் மயக்கத்துடன் மலச்சிக்கல்.
பிறப்புறப்பு:
மர்ம ஸ்தானங்களில் வெடிப்பு மற்றும் புண்கள் விரைவாதம் விதைகளில் கெட்டியான வீக்கம் மர்ம ஸ்தானங்களில் ஏற்படக்கூடிய கோலங்கள் வீக்கம் உள்ளுறுப்புகளில் ஏற்படக்கூடிய புண்கள் பெண்களுக்கு கர்ப்பப்பை கீழிறங்குதல் மாதவிடாய் அதிக போக்கு இவை அனைத்தையும் கேட்கும் ஒரு நல்ல மருந்து.
இருதயம் heart❤:
இதயம் பெருத்திருத்தல், ரத்த தாரையில் வீக்கம், அடைப்பு, இதனால் ரத்தக் கொதிப்பு.
கழுத்து, முதுகு, கை, கால்கள்:
சிறு சிறு மூட்டுகளில் வலி பச்சை நரம்புகள் சுரண்டுதல் (varicose veins) எலும்புகள் தாறுமாறாக வளர்ந்து இருத்தல் உடைத்தல் எலும்புகளில் சீழ்.
🔽🔽🔽🔽🔽🔽🔽🔽🔽🔽🔽🔽🔽🔽🔽
Bio Chemistry (Salt)
🎖🎖2. Calcarea Phosphoricum 🎖🎖
இதை சுருக்கமாக Calc Phos அல்லது C P என்று அழைக்கலாம் இந்த உப்பு எலும்புகளிலும், பற்களிலும், இணைப்பு தசைநார் களிலும், திசுக்களிலும், இருக்கின்றது. இது எலும்புகளில் 57 சதவீதம் இருக்கிறது.
உடல் வளர்ச்சிக்கு இது முக்கியமான மருந்து. முக்கியமாக குழந்தை வளரும் காலத்தில் வளர்ச்சிக்கு இது முக்கியமான மருந்து. இது குறைவதால் உடல் மெலிந்து, எலும்பும் தோலுமாக இருப்பார்கள், மெலிந்தவருக்கு இழுப்பு, வலிப்பு ஏற்பட்டால் இந்த மருந்தை கொடுக்க வேண்டும் பொதுவாக இழப்புகளுக்கு Mag Phos மற்றும் kali Phos கொடுப்பது வழக்கம். இவை கொடுத்து வலிப்பு நிற்கவில்லை என்றால் Calc Phos நிறுத்தும் திரும்ப வராமல் இருக்கவும் செய்யும்.
ரத்தசோகை, எலும்புருக்கி நோய், போன்றவைக்கு இது ஒரு நல்ல மருந்து. பலன் அளிக்கக்கூடிய மருந்து. காய்ச்சல், அழைச்சல், போன்ற வியாதிகளுக்கு பிறகு உடலை தேற்ற இதை கொடுத்து வரலாம் டானிக் போன்று வேலை செய்யும்
மணம்😇
காதல் நிறைவேறாததால், வியாபாரநஷ்டத்தால்லும், கோபத்தாலும், கவலையாலும், ஏற்படும் நோய்கள் வியாதிகள்.
தனியாக இருக்க விரும்பும் குணம். மனதிற்கு வேலை செய்ய சிரமம், ஞாபக மறதி, ஞாபக சக்தி இன்மை.
தலை😡
தலைவலி, மனம் வேலை செய்தால் வரக்கூடிய தலைவலி, குளிர்ந்த நீரால் குளிப்பதால் ஏற்படும் தலைவலி, மயக்கம், குழந்தைகளுக்கு மண்டை ஓடு மூடாத தன்மை, தலை முடி கொட்டுதல்.
கண்கள்👁
கண்களில் உஷ்ண உணர்ச்சி, கண் விழியில் வெண்படலம், வெளிச்சத்தைப் பார்க்கக் கூச்சம்.
காது👂
காது எலும்புகளில் வலி, கொப்புளங்கள், வீக்கங்கள், இது ஒரு நல்ல மருந்து.
மூக்கு👃
கண்ணீருடன் தும்மல், அடிக்கடி சளி பிடித்தல், நோஞ்சான் பிள்ளைக்கு நீடித்த முக்கில் சளி பிடித்தல், மூக்கில் சதை வளர்ச்சிகளை அடினாய்டு என்று கூறப்படும் சதை கட்டிகளை கரைக்கும்.
முகம்🧑🦰
வெளுத்த முகம், எண்ணெய் வடியும் முகம், வாலிப பெண்களுக்கு, வாலிப ஆண்களுக்கு, நிறைய முகப்பருக்கள், முகத்தில் வலி, நரம்புகளில் வலி, மேல் தாடை எலும்புகளில் வலி, வலது பக்கத்தில் இருந்து இடது புறமாக மாறும் வழிகள், வாயில் பாலுண்ணிகள்.
பற்கள்🦷
பல் மறைப்பதால் ஏற்படும் எல்லா கோளாறுகளுக்கும் இதை கொடுத்தால் சரிசெய்யும் முக்கியமாக குழந்தைகளுக்கு பல் வளர வில்லை என்றால் இந்த மருந்து சிறப்பாக வேலை செய்யும். பல் வலி இரவில் காற்று பட்டாலே புதிதாக பல் முளைக்கும் சமயத்தில் இருந்தாலும் அதில் அலைச்சல் இருந்தாலோ இந்த மருந்து சரி செய்யும் பல் சொத்தை ஏற்பட்டால் இந்த மருந்து அதை சீர் செய்ய முக்கியமான மருந்தாகும் ஈறுகளில் ஏற்படக்கூடிய வலி வீக்கத்திற்கு சிறந்த மருந்து
வாய்🤐
கசப்பு ருசி, நாக்கில் முனையில் கொப்பளங்கள், விழுங்கும்போது நாக்கில் வலி, வாயில் வரட்சி, ஆனால் தாகம் இன்மை. ஜலதோஷத்தின் போது வாயில் எச்சில் ஊறுதல், போன்ற அறிகுறிகளுக்கு இது ஒரு நல்ல மருந்து.
தொண்டை🗣
தொண்டையில் புண் எரிச்சல் விழுங்கும் சமயத்தில் சிரமம் ஆனால் இரும்பல் குடிக்கும் போது தொண்டையில் வலி ஏற்படுதல் தொண்டையில் சதை வளர்ச்சி அதாவது டான்சில்ஸ் தொண்டையில் உள்ள சதையை இருக்க படுத்தி வரக்கூடிய நோய்.
கை கால்களில் 💪🦵🦶
சலிப்புடன் இரும்பல் நீடித்த இருமல் கக்குவான் இரும்பல் மஞ்சள் சளி வெளியேறுதல் பாசி நோய்க்கு இது ஒரு துணை மருந்தாக பயன்படுத்தலாம்
இருதயம்🫀
பலவீனத்தின் ஆல் இருதய படபடப்பு வேகமான நாடி கழுத்து பகுதியில் வலித்தல் நாடி அதிகமாக குடிப்பதால் ஏற்படும் தொந்தரவு
வயிறு திணிப்பை🧑🍳
பசியின்மை, தாறுமாறான பசி, வயிறு உப்பசம் கொழுப்பு உணவுகளையும் கொழுப்பு சார்ந்த எண்ணெய் சார்ந்த உணவுகளையும் உண்ண அதிக விருப்பம். ஆனால் உண்ட பின்பு தொந்தரவு. மாலை 4 மணிக்கு பசி உண்ட பிறகு வயிறு உப்பசம். சிலசமயங்களில் குமட்டல், மலச்சிக்கல், அடிக்கடி மலம் கழித்தல், இது ஒரு நல்ல மருந்து தொப்புள் ஏற்படக்கூடிய ஹெரநீயா இது நல்ல மருந்து.
சிறுநீர்🚽
மஞ்சளான மூத்திரம், அடிக்கடி அவசரமாக சிறுநீர் கழித்தல், நீரழிவு நோய் உள்ளவர்களுக்கான, சிறுநீர் பிரச்சனை, சிறுநீர் கழிக்கும் சமயத்தில் கற்கள் வெளியேறுதல், சிறுவர்கள் படுக்கையில் சிறுநீர் கழிப்பார்கள் இது ஒரு நல்ல மருந்து.
பெண்கள்🧕
மெலிந்த வாலிப பெண்களுக்கு ஏற்படக்கூடிய அனைத்து தொந்தரவுக்கு இது ஒரு துணை மருந்தாக பயன்படுத்தலாம் தாமதமான மாதவிடாய் ஒல்லியாக உள்ள பெண் குழந்தைக்கு பல் முளைக்க வில்லை என்றால் பெண் பிள்ளை பால் குடிக்க மறுத்தால் பெண்களுக்கு ஏற்படக்கூடிய நரம்புவலி.
நோய்க்குறி களுக்கான தன்மை கூடுதலான விவரங்கள்
வீயாதியை நினைக்கும்போது இரவில், ஈழப் பருவத்திலும், பருவ மாற்றத்திலும், தண்ணீரில் நினைக்கும்போது, அசையும்போது, கூடுதலாகும்.
நோய்க்குறிகள் தணிந்து ஆரோக்கியமாக வெளிப்படும் சூடான, பருவத்தில் சூடான, அறையில் படுத்திருக்கும், பொழுது நல்ல சுகமாகத் தோன்றும்.
🔽🔽🔽🔽🔽🔽🔽🔽🔽🔽🔽
Bio Chemistry (Salt)
🎖🎖 3. Calcarea Sulphuricum 🎖🎖
இதனை சுருக்கமாக Calc Sulp CS என்றும் அழைக்கப்படுகிறது.
இந்த உப்பு குறைந்தவர்களுக்கு தோலில் சர்ம நோயான சிரங்கு நோய், அரிப்பு நோய், கட்டிகள் சடுதியில் ஆறாது. பொதுவாக இந்த மருந்து ஒரு வியாதி பெரும்பாலான நோயாக மாறிய கட்டிகளை குணப்படுத்த பயன்படுத்தும்.
பெண்களுக்கு மாதவிடாய் தாமதத்தின் நீடித்து இருக்கும் சமயத்தில் தலைவலி களைப்பு உடல் சோர்வு போன்ற பிரச்சனைகளுக்கு ஏற்ற மருந்து கெட்டியான மஞ்சளான வெள்ளைப்பாடு மர்ம ஸ்தானங்களில் வீக்கம் வலி நல்ல மருந்து.
தலை
சிவந்த கண்களுடன் வயிற்றில் வலியுடனும் தலைவலி இருந்தால் இந்த மருந்து பயன்தரும். நெற்றியில் தலை வலி, மாதவிடாயின் போது தலை வலி, நடக்கும்போது தலை சுற்றல், தலையில் பொடுகு, வலியுள்ள சிரங்குகள், கொப்புளங்கள்.
கண்கள்
சிவந்த கண்கள் கண்களில் பிடித்தது போன்ற உள்ள தன்மைக்கு கண்களை கசக்கிக் கொள்வார்கள்.
காதுகள்
காது கோலங்களில் வீக்கம், பின்புறம் வீக்கம், காதுகளில் படைகள், காதிலிருந்து சீழ் வடிதல், செவிடு, போன்ற பிரச்சனைகளுக்கு இந்த மருந்து ஏற்ற பொருள்.
மூக்கு
கெட்டியான சளி காரமான அரிப்பைத் தரும் நீர் ஒழுகுதல்.
பற்கள்
பல் வலி, ஈறு வீக்கம், சீழ் பிடித்தல், பற்களில் வேர்கள் ஆடுதல், கெட்டுப்போகும் தன்மை.
வாய்
வாயில் கசப்பு சுவை, புளிப்பு சுவையும் சேர்ந்து காணப்படும். அல்லது தனித்தே காணப்படும். நாக்கில் வீக்கம், மஞ்சள் நிறம், அல்லது சிவப்பு கோடுகள்.
நுரையீரல் சுவாச கருவிகள்
இலேசான காய்ச்சலுடன் ஆஸ்துமா, வரண்ட வாயுடன் மூச்சடைப்பு, கஷ்டப்படுத்தும் சுவாச கோளாறுகள். நாள்பட்ட இரும்பல் இந்த மருந்து ஏற்ற ஒரு நல்ல தீர்வை கொடுக்கும்.
வயிறு
சாப்பிட்ட பிறகு குமட்டல், உடன் தலைவலி மயக்கம், திணிப்பையில் இருந்து வலி ஆரம்பித்து கல்லீரல் பக்கம் போகும் குடல்களில் புண், மலச்சிக்கல்.
வயிற்றுப்போக்கு
இரத்தம் கலந்த சீழ் போன்ற கழிச்சல். மூல வியாதி, ஆசன துருவங்களில் கட்டி, மலக்குடலில் வெடிப்பு மற்றும் புண்கள்.
ஆண் /பெண்
நீடித்த மூத்திரக்காய் வியாதிகள் சிவந்த மூத்திரம் ரத்தம் கலந்த மூத்திரம் நீடித்த பல நாள் பட்ட வியாதிகள் வெள்ளைப்பாடு நாட்பட்ட முறையில் இருக்கும் வியாதிகள் அரையாப்பு கட்டிகள் அடிக்கடி இந்திர தனங்களில் ஏற்படுகின்ற புண் அலைச்சலுக்கு.
முக்கிய குறிப்புகள்
கை கால்கள் விரல்கள் காலையில் வலி தோன்றுகின்றது என்றால் இந்த மருந்து பொருந்தும் பகலில் தூக்கம் வருகிறது இரவில் தூக்கம் வரவில்லை என்றால் இந்த மருந்து பொருந்தும் செதில் செதிலாக உள்ள தோல் வியாதிகள் கட்டிகளுக்கு இந்த மருந்து உறுதுணையாக உதவும் சிவந்த நிறத்தில் ரத்தம் வெளியேறுகின்ற பாதை உள்ள தன்மைக்கு இந்த மருந்து துணை மருந்தாக பொருந்தும்
எந்த ஒரு பிரச்சனையை நனைவதாலும், குளிப்பதாலும் வியாதி தோன்றும் அல்லது அதிகரிக்கும்.
திறந்தவெளி காற்றோட்டமான உள்ள இடங்களில் வியாதிகள் குணமடையும்.
🔽🔽🔽🔽🔽🔽🔽🔽🔽🔽🔽🔽
Bio Chemistry (Salt)
🎖🎖04. Ferrum Phosphoricum 🎖🎖
இதனை சுருக்கமாக Fer Phos FP என்று அழைக்கப்படும்
எந்த ஜீவராசியும் உயிர் வாழ பிராணவாயு அதிமுக்கியமானது என்று எல்லோருக்கும் தெரிந்த ஒரு விஷயம்.
ஒரு உயிர் போய்விட்டது என்றாள் பிராணன் போய் விட்டது என்கிறோம், அல்லவா பிராண வாய்வு இல்லை என்றால் இந்த உடல் சக்தியை கிரகிக்கும் ஆற்றல் இல்லை என்று அர்த்தம்.
இந்த பிராண வாயுவை கிரகிக்கும் சக்தி இரும்புக்கு அதிகமுண்டு இந்த ஐயம் ரத்தத்தில் சிவப்பு அணுக்களில் நிறைய காணப்படுகிறது Fer phos என்ற இந்த உப்பு குறைந்தால் ரத்தத்தில் சிவப்பு அணுக்கள் குறையும், தசைகள் தளர்ச்சி அடையும், ரத்த தேக்கம், ஜுரம், வலி, ரத்தப்போக்கு, போன்ற உபாதைகள் ஏற்படும் உடம்பில் இந்த உப்பு குறையும் தன்மையில் Fer phos கொடுத்து மேற்கண்ட அனைத்து வியாதிகள் நீக்கிக் கொண்டு உடல் பலமடையும்.
காயப்பட்டும் சமயங்களில் அந்த காயம் பட்ட இடத்தில் ஏற்பட்ட ரத்தக்கட்டு, ரத்தப்போக்கு, வலி போன்ற இடங்களில் உள்ளுக்கும், வெளிக்கும், இந்த மருந்தை பயன்படுத்தலாம்.
மூக்கு, காது, வாய், நீர்த்தாரை, ஆசனத்துவாரம் போன்ற எந்த துவாரத்திலிருந்து ரத்தம் வரும் அது பிரகாசமாக சிவந்த நிறத்தில் இருந்தால் இந்த மருந்தை பயன்படுத்தினால் உடனடி தீர்வு கிடைக்கும்.
மனம்
அதிகமாகப் பேசிக் கொண்டே இருக்கும் தன்மை கொண்ட நபர்கள்..... கோபப்படும் நபர்கள்.... மனதை கட்டுப்படுத்த முடியவில்லை என்று சொல்லும் நபர்கள்....ஞாபக சக்தி இன்மை அவை பெயர்களையும், காரியங்களையும், உடனடியாக மறந்து விடும் தன்மை... தைரியம் இன்மை நம்பிக்கை இன்மை.
தூக்கம்
இரவிலே தூங்காமல் பகலில் தூங்குன போன்ற உணர்வு கொண்டவர்களுக்கு இந்த மருந்து ஒரு வரப்பிரசாதம்... பகல் நேரத்தில் சோர்வாய் இருக்கிறது, படுத்துவது போன்ற உணர்வு... ஒரு வீரியத்துடன் செயல்படுத்த முடியாமல்.... சோம்பேறித்தனம் போல இருக்கிறது என்ற உணர்வு.... தூக்கத்தில் கனவுகள் மூலம் கலைகின்ற தூக்கம் அல்லது கனவில் திடீரென்று எழுந்து ஓடும் தன்மை கொண்ட இவர்களுக்கெல்லாம் உயர்ந்த வீரியமான Fer phos 30x or 200X மருந்துகளைக் கொடுக்க வேண்டும்.
தலை
தலைவலி அதிக ரத்தம் ஏறுவதால் வருகின்ற தலைவலி.... அழுத்துவது போன்ற வெடித்து விடுவது போன்ற இருக்கும் தலைவலி..... தலையை அசைக்க முடியாத அளவுக்கு அல்லது தொட்டாலும் வலிக்கும் தன்மை கொண்ட தலைவலி...... முகம் சிவந்த நிலையில் இருக்கும் மூக்கில் ரத்தம் வெளியேறும் தன்மை இருக்கும், குளிர்ந்த ஒத்தடம் வலி குறையும்.... வெயிலில் போனால் வலி அதிகமாக வரலாம், சூடு ஒத்தடம் கொடுத்தால் அதிகமாக வலி தென்படலாம். அஜீரணத்தால் ஏற்படும் தலைவலி.
கண்கள்
அழற்சி, சிவந்த வீக்கம், மணல் உறுத்துவது போன்ற உணர்வு.... பல் முளைக்கும் குழந்தைக்கு ஏற்படுகின்ற கண் அழற்சிக்கு கண்ணில் அடிபட்டு விடும் தன்மை இருந்தால் இந்த மருந்து உடனடி சரி செய்யும்....
மூக்கு
ஜலதோஷம் தும்மல் ஆரம்பகட்டத்தில் இந்த மருந்து நன்றாக வேலை செய்யும் இது ஒரு துணை மருந்தாக பயன்படுத்தலாம்.
பற்கள்
பல் வலி, அசைவினால் ஏற்படக்கூடிய வலி, சூடான பானங்கள் குடிப்பதினால் ஏற்படக்கூடிய வலி, பற்களில் சிவந்த தன்மையுடனும் வீக்கத்துடன் இருக்கும் தன்மை கொண்ட வலி.
தொண்டை
டான்சில்ஸ் வீக்கம் தொண்டையில் ஏற்படக் கூடிய சிவந்த தன்மைகொண்ட வறண்ட புண் போன்ற வலிகளுக்கும், வீக்கத்திற்கும், பாடல் பாடுகின்ற நபர்கள் தொண்டைக்கம்மல் ஏற்படாத வகையில் பாதுகாத்துக் கொள்ள இந்த மருந்தை பயன்படுத்தலாம்.
இரும்பல்
எல்லாம் ஜலதோஷத்தை எலும்புகளிலும் இது ஒரு துணை மருந்தாக பயன்படுத்தி சப்தத்துடன் ஏற்படக்கூடிய இருமலுக்கும் வாந்தியுடன் ஏற்படக்கூடிய தொந்தரவுக்கும் நல்ல மருந்து.
சுவாச கோலங்கள்
நிமோனியா, ரத்தத்துடன் சேர்ந்து வரக்கூடிய சளி ஆரம்பகட்ட காய்ச்சல் இரும்பும் அடுத்து வரக்கூடிய இரத்தச் சளி தொண்டையில் புண் மூச்சுத்திணறல் அனைத்தும் சீராகும் ஆஸ்துமா கக்குவான் இருமல் நுரையீரல் கவசம் போல இந்த மருந்து வேலை செய்யும்.
மலம்
ஜீரணமாகாத மலம் வெளியேறும், கழிச்சல், சீதபேதி காலராவில் முதல் கட்டத்தில் கொடுக்க பயன்படுத்தும் ரத்தக்கசிவு ஏற்படக்கூடிய சீதபேதி போன்ற மலக்குடல் வெளியேறும் தன்மைக்கு முக்கிய மருந்து.
மூத்திரம்
தாரை வழியாக ரத்தம் வருதல், மூத்திரம் வருவதற்கு முன்பு வலி, வரும்போது வலி, எரிச்சல், மூத்திரம் அடக்க முடியாத தன்மை, அடிக்கடி சிறுநீர் கழிக்கத் தூண்டுதல், படுக்கையில் சிறுநீர் கழிக்கும் தன்மை, மூத்திரப்பையை தாங்கமுடியாத வலி.
ஆண்களுக்கு
விந்து அடிக்கடி வெளியேறுதல் உயிரணு குறைபாடு உள்ள போஸ்டட் வீக்கத்திற்கு நல்ல மருந்து..
பெண்கள்
வலியுடன் கூடிய மாதவிடாய் உதிரம் சிவப்பாக இருக்கும் தன்மையின் போது அஜீரணம் தலைவலி வாந்தி வயிற்றுப் போக்கு வயிற்று வலி இவர்களுக்கு துணை மருந்தாக பயன்படுத்தலாம்..
🔽🔽🔽🔽🔽🔽🔽🔽🔽🔽🔽
Bio Chemistry (Salt)
🎖🎖5.Kali Muriaticum 🎖🎖
இதனை சுருக்கமாக Kali Mur KM என்று அழைக்கப்படும்.
உப்பு ரத்தத்திலும் மூளை நியூரான்கள் இணைப்பதற்கு மற்றும் மூளை சதைகளில் உள்ள நரம்புகளில் காணப்படும்.
இது குறைந்தால் புதிய மூளை கேபிள்கள் நியூரான்கள் உற்பத்தி ஆகாது. இதனால் ஞாபக சக்தி குறையும், கவலை ஏற்படும், மூளை கலைப்பு, சருமத்தில் அரிப்பு, எரிச்சல், கொப்புளங்கள் ஏற்படும். இவற்றிலிருந்து வெள்ளையாக குழ குழப்பான சீழ் வெளியேறும்....இரத்தம் விஷத்தன்மை அடையும்...
இதன் முக்கிய குறிகள் நாக்கு வெண்மையாய் இருக்கும், சருமத்தில் வெண்மையாக தோல் உரியும், கழிவுகள் வெண்மையாகவும், தடித்து இருக்கும், கோளங்களில் வீக்கம் சளி, ஜுரம், கொப்பளங்கள்.... மற்றும் உபத்திரவங்கள் அசைவதாலும் தொடர்ந்து அசைவது அதிகமாகும்.
மனம்
மூளை பலவீனம், கவலை, கவலை தரும் கனவுகள், ஞாபக சக்தி குறையும், எளிதில் எதையும் புரிந்துகொள்ள முடியாத நிலை....
தலை
கல்லீரலில் சோர்வால் ஏற்படும் தலைவலி. மலச்சிக்கலால் ஏற்படும் தலைவலி. இடது பக்கத்திலும் பின்புறத்தில் வரும் தலைவலி, தலையில் ரத்தம் தேங்கும் நிலை தேகப்பயிற்சி செய்யும் பொழுது ஏற்படும் தலைச்சுற்றல், தலையில் செதில்கள் உதிர்தல் அதாவது தோல் உரிதல்.
கண்கள்
கண்களில் சகல கோளாறுகளுக்கு இது ஒரு பயன்தரக்கூடிய முக்கிய மருந்து. கழிவு வெள்ளையாய் இருக்கும், மஞ்சளாக இருந்தால் இது உடன் Kali Sulp மாற்றி மாற்றிக் கொடுக்கலாம், கண்ணில் மணல் இருப்பது போன்ற உணர்ச்சி.... கண் இமைகளில் கட்டி.... வெளிச்சத்தை கண்டால் பயம்... வெளிச்சத்தைப் பார்க்க முடியாமை... கேட்ராக்ட் எனப்படும் கண் சதை வளர்ச்சிக்கு இது ஒரு முக்கிய மருந்து.
காதுகள்
காது கோளங்களில் வீக்கம். Mumps எனப்படும் பொண்ணுக்கு வீங்கிய வியாதியில் இது நன்கு பயன்படும் மருந்து... காதிலிருந்து சீழ், அத்துடன் மணல் போன்ற வஸ்து வெளியேறுதல்.... காது சவ்வு தடித்து விடுவதாலும், தொண்டை கோளாறுகளாலும் ஏற்படும் செவடுகள் இது ஒரு நல்ல மருந்து.
மூக்கு
தும்பல், ஜலதோஷம், வெள்ளை சளி, பகலிலும் இரவிலும் மூக்கிலிருந்து ரத்தம் வருதல்.... பலத்தினாலும் மூக்கிலிருந்து நிறைய சளி வெளியேறி விட்டதால் ஜலதோஷம் குறையும்.... மூக்கின் வேர்கள் அரிப்பு இது ஒரு நல்ல மருந்து
பற்கள்
பொதுவாக இதற்கு CF மற்றும் KM சேர்த்து சாப்பிட்டாலே அனைத்து பிரச்சினைக்கும் தீர்வு கிடைக்கும். சொத்தை, ஈறு வீக்கம், கட்டிகள், நீரில் வீங்கி வலிக்கும் பொழுது ஏற்படக்கூடிய பிரச்சனைகளுக்கு இது ஒரு அற்புதமான மருந்து, நன்றாக வேலை செய்யும்.... சீழ் பிடித்த இடத்தில் சில சமயங்களில் silica கொடுக்க நேரிடும் மிக அற்புதமாக வேலை செய்யும்.
வாய், தொண்டை
வெள்ளையாக மாசுபடிந்த நாக்கு புளிப்பான...அதிக எச்சில்.... கண்ணங்களில் உட்புறத்திலும், உதடுகளிலும், நாக்கிலும் புண் போன்ற நிலையும் தன்மையிலும் இது நன்றாக வேலை செய்யும் மருந்து.
தொண்டையில் வீக்கம் புண்கள் டிப்ரியா இந்த சமயங்களில் FP சேர்த்து சாப்பிட வேண்டும் இரண்டாவது கட்டத்தில் இருந்தாலும் இது நல்ல மருந்து டான்சில் வீக்கத்துக்கு இது ஒரு நல்ல மருந்து.
சுவாசக் கருவிகள் (நுரையீரல்)
நிமோனியா ஆஸ்துமா மற்றும் சுவாச கழிவுகளில் உள்ள எல்லா கோளாறுகளுக்கும் இது கொடுக்கப்படுகின்ற துணை மருந்தாக வேலை செய்யும் இரும்பல் நாய் குறைப்பது போன்ற ஓசையுடன் இருந்தாள் மூச்சடைக்கும் இருமலாக இருந்தால் ரத்தம் வரும் இருமலாக இருந்தால் இந்த மருந்து ஒரு நல்ல மருந்து....
இருதயம்
சுவாசம் கருவிகளில் கோளாறுகளால் இருதயம் அழுத்தப்படுவதால் அதனால் இருதயம் படபடப்பு பலவீனமான நாடி இருதயம் உள்ள சலிப்பு தன்மையான தொந்தரவுகளுக்கு இது ஒரு நல்ல மருந்து
வயிறு
பசியின்மை கல்லீரல் கோளாறுகள் பசியின்மை சாப்பிட்ட பிறகு வயிற்று வலி கொழுப்பான ஆகாரங்கள் ஒத்துக் கொள்ளாத தன்மை புளித்த ஏப்பம் மாலையில் விக்கல் வயிறில் காலியான உணர்வு வலது புறத்தில் கல்லீரல் பக்கம் கனத்த தன்மை வீக்கம் மஞ்சள் காமாலை நோய்களுக்கு இது ஒரு நல்ல மருந்து நாக்குப்பூச்சி நாடா பூச்சி வயிற்றில் உள்ள பூச்சிகளை அந்தப் பூச்சிகளை அழிப்பதற்கு இது பயன்படும்
மலம்
கல்லீரல் பலவீனத்தால் மலச்சிக்கல், மலம் வெளுத்து மஞ்சள் ஆயிருக்கும், வெள்ளை கயிறு போன்ற சீத மலத்துடன் இருக்கும்... ஆசனத்தில் அரிப்பு வலி.... சாப்பிட்ட உடனே வயிற்றுப்போக்கு.... வெள்ளையாகவும் இருக்கும். டைபாய்டு ஜுரத்தில் ஏற்படும் வயிற்றுப்போக்கு, ரத்த போக்கு, சீதபேதி, வலியுடன் கூடிய மலச்சிக்கல், வலியுடன் கூடிய மலம் அவசர அவசரமாக மலம் கழிக்க வேண்டும் என்ற ஒரு உந்துதல்.... உள்ள நிலையில் இந்த மருந்து ஒரு நல்ல தீர்வை கொடுக்கும்.
🔽🔽🔽🔽🔽🔽🔽🔽🔽🔽🔽🔽🔽
No comments:
Post a Comment