நக்ஸ் வாமிகா... nux vomica ஹோமியோபதி மருந்தின் குணங்கள்.
இம்மருந்து பல வகையான உடல் உபாதைகளுக்கு அடிக்கடி பயன்படக்கூடிய
ஒரு மருந்து. உடல் உழைப்பில்லாமல் உட்கார்ந்தே வேலை பார்ப்போருக்கு
ஏற்றது.மிக அதிக மன உழைப்பு, முறையற்ற உணவுப் பழக்கம், முறையற்ற தூக்கம், பல்வேறு விதமான மருந்துகளை முறையற்று எடுப்பவர்களுக்கு நக்ஸை எடுக்க குணமேற்படும்.பொறாமை, கோபத்துடன் எரிந்து விழுதல்,மிகுந்த
முன் கோபம்,பதற்றம்,கவலை,மது அபினி காபி மற்றும் மசாலா உணவுகளை கண்ட நேரங்களில் உண்பது போன்ற பழக்கம் உள்ளவர்களுக்கு ஏற்றது.மலச்சிக்கல், ஜீரணக் கோளாறுகள்
வயிற்றை அமுக்கினால் வேதனை வலி. சிறிது சாப்
பிட்டாலும் வயிறு நிரம்பிய
உணர்ச்சி.இரவில் தூக்க
மின்றி அதிகாலையில் ஆழ்ந்த தூக்கம் தூங்குதல்.
சுய நினைவுடன் வரும் வலிப்பு, சிறு அசைவினாலும் வலிப்பு.நோயாளி நடக்கும் சமயம் பாதங்களை தேய்த்தே நடப்பார்.மலச் சிக்கலில் தூண்டுதல்
அடிக்கடி இருந்தாலும் ஒவ்வொரு முறையும் சிறிதளவே மலம் வெளியேறும்.மலம் கழித்த பின் உபாதைகள் சமனம்.
நக்ஸ் வாமிகா.
பயனற்ற பிரசவவலியினால் பிரசவ
சமயம் சிரமப்படும்;
இந்த பயனற்ற வலி மலப்பை, சிறுநீர்ப் பைக்குத் தாவி அடிக்கடி மலம் சிறுநீர்
போகத்தூண்டுதல்.உடல் குறிகள் வாந்தி எடுப்பதாலும்,
மலம் கழிப்பதாலும் தணியும்.சாப்பிட்ட 1 அல்லது 2 மணிக்குப் பிறகு வயிற்றில்
கல் போன்ற கடினத் தன்மை வாயில் கசப்பு சுவை.
தீவிரமான குமட்டல்.தீவிரமான விக்கல்.வாந்தி கருப்பு நிறமாக வெளிப்படுதல்.
மலேரியா காய்ச்சலில் குளிர்,சூடு,வியர்வை ஆகிய மூன்று நிலைகளிலும் படுத்து கொண்டே இருக்க விரும்புதல்.மாதவிலக்கு போக்கு வழக்கத்திற்கு முன்பே வெளிப்படும்;நீண்ட
நாள் நீடித்து அதிகமாகப்
போகும்.கெண்டைக்காலில்
இழுத்துப் பிடிக்கும் கடுமையான வலி.இடது பக்க குடல்
பிதுக்கம்.சுய இன்பம் கண்டதால் வரும் பின் விளைவுகள். மலட்டுத்தன்மை.சிறுநீர்பை பாரிசவாதத்தில் சிறு
நீர் சொட்டுச் சொட்டாக வருதால்.போதிய அளவு ஆண்
குறி விறைக்காமலிருத்தல்.
திக்குவாய்.இடது பக்க பாரிச வாதம்.
நக்ஸ் வாமிகா.
ஆத்திரத்துடன் பிறரை அடிக்கவே கூட
சென்று விடுவார் தீய எண்ணம், பொறாமை,குரோதம்,தற்கொலை செய்து கொள்ள கடுமையான உந்தல்; ஆனால் சாவு பயம்.
பிறர் சொல்லும் மாறுபட்ட
கருத்து இவருக்கு எரிச்சலைத்
தூண்டும்;உடனே கோபப்
படுவார். கெட்டியான வாசனையையும், துர்நாற்ற பெட்டியையும், பிரகாசமான வெளிச்சத்தையும்,பலமான சப்தத்தையும் இவர் தாங்கிக் கொள்ளமாட்டார்.கூட்டமாய் இருப்பதில் வெறுப்பு.
பிறரிடம் குற்றம் கண்டுபிடிக்கும் குணம்.பொறுமையின்மை,வலியை தாங்க
இயலாது.
பின்மண்டை மற்றும் கண்களின் மேல் வலியுடன் தலை சுற்றல்.ஒருவினாடி
நினைவின்றி மயக்க நிலையுடன் தலை சுற்றல்
உச்சந் தலையில் ஆணி அடிப்பது போன்ற அமுக்கும்
வலி. காலையிலும், மதிய
உணவிற்கு பின்பும் தலை
சுற்றல்.மண்டைத்தோலில்
உணர்ச்சிகள் அதிகரித்த
நிலை.நெற்றியில் கடுமையான வலியுடன் நெற்றியை
ஏதாவது ஒரு பொருளின் மீது அழுத்திக்கொள்வார்.
மூல உபாதையுடன் தலையில் இரத்தத் தேக்கத்துடன்
வலி.சூரிய ஒளியில் தலை
வலி.தலை உடலை விட பெரிதாக இருப்பது போன்ற
மாய எண்ணம்.தலைச்சுற்றல் பக்க வாட்டில் தள்ளும்.
கண்கள் வெளிச்சத்தைப்
பார்த்தால் கூசும்.இமைகளின் உட்பக்கம் வறட்சி.
கண்குழியின் கீழ் உட்பகுதியில் நரம்பு வலியுடன் கண்ணீர் வடிதல்.கண் தசைகளில் பாரிச வாதம். கண் முழுமையிலும் ஏற்படும் துல்லல் பின் மண்டைக்குத்தாவும்.
காது நடுச் செவிக்குழல் வழியாக அரிப்பு.வறட்சி. உணர்ச்சிகள் அதிகரித்த நிலை.காது வலி.பலமான
சப்தம் வலி எரிச்சலை உண்டாக்கும்.
அடைபட்ட மூக்கு.இரவில் வறண்ட குளிர்ந்த சூழலில் சிக்குவதால் மூக்கடைப்புடன் சளி பிடித்தல் .சூடான
அறையில் அதிக சிரமம்.வாசனையால் மயக்கம்.
நக்ஸ் வாமிகா.
மூத்திரம் அடிக்கடியும் அவசரமாகவும் வரும். ஆனால் குறைவாகவே வரும்.சிறிது நேரம் முயற்சிக்க வேண்டும்.
வலியுடன் சில சொட்டுக்களே கழிதல்,முக்கியமாக வயதானவர்களிடத்தில். மூத்திரப்பை சக்தியிழத்தல்,மூத்திரக் காய்களில் வலி வலது தொடைக்குத் தாவும்.மூலத்தின் இரத்தப் போக்கு அல்லது மாதவிடாய் தடைப்பட்ட பிறகு, மூத்திரத்தாரை வழியாக இரத்தப் போக்கு.
காமக்கனவுகளுடன் இந்திரிய ஸ்கலிதம்,அதனால் காலையில் இடுப்புவலி, தலைவலி. மித மிஞ்சிய சிற்றின்பநுகர்ச்சியினாலும், முஷ்டி மைதுனத்தாலும் ஏற்பட்ட கோளாறுகள். ஹெர்னியா
எனப்படும் குடலிறக்கம்.
மாதவிடாய் முன்னதாகவும்
குறைவாகவும்,அதிகமாகவும்,நீடித்தும்,ஒழுங்கற்றும்
கருப்பாகவும் இருக்கும். மாதவிடாய்க்கு முன் குளிர்,குமட்
டல், விடாய்க்குப் பிறகு மஞ்சள் நிறமான வெள்ளைப்பாடு.கனமான சுமையைத்
தூக்கியதால் யோனி வெளித் தள்ளுதல்.பிரசவ வலிதாறு மாறாயிருத்தல், பிடிப்பு வலிகள்
நடுநிசியிலிருந்து காலை
வரை வறண்ட இருமல்.
இருமும் போது தலையிலும்
வயிற்றிலும் வலி.அதிகமா
க சாப்பிட்டாலும்,அஜீரணத்
தாலும் இருமல்.கஷ்ட சுவாசம்.
குளிர் தாக்கியதால் கழுத்தில் பிடிப்பு. தோள் பட்டைகளுக்கு நடுவில் எரிச்சலும் பிடிப்பு வலிகளும் இடுப்பில்
கடுமையான பிடிப்பு வலி.
நக்ஸ் வாமிகா..
பகலில் ஒழுகும் ஜலதோசம்.இரவில் மூக்கடைப்பு.மூக்கு துவாரங்கள் மாறி மாறி அடைத்துக் கொள்ளுதல். மூக்கிலிருந்து
காலையில் இரத்தப் போக்கு மூக்கடைத்த உணர்வுடன்
காரமான கழிவு மூக்கிலிருந்து வெளியேறுதல்.
தாடை சுருங்குதல். ஈறுகள்
வெளுத்து வீங்கி இரத்தம்
கசிதல்.மேல் தொண்டையில் உமிழ் நீர் சுரத்தல்.வாய் வறண்டு புண்ணுடன்
இரத்தம் தோய்ந்த உமிழ்நீர்.
தொண்டை வறண்ட உணர்வு. முன் தொண்டையில் நெருக்கும் உணர்வு.உள் நாக்கு வீங்கி விடுதல். விழுங்கும் சமயம் தொண்டையிலிருந்து காதுகளுக்கு தைக்கும் வலிகள் தாவும்.
இரைப்பை புளிப்புச் சுவையுடன் காலையில் குமட்டலும் வாந்தியும்.சாப்பிட்ட 2
மணிக்குப்பிறகு வலியும்
கனத்த உணர்வும்.உப்பி விடுதல் .ஓக்காளத்துடன் குமட்டலும் வாந்தியும்.அஜீரண உபாதை தோன்றுவதற்கு முதல் நாள் அகோரப்பசி.
காரமான மசாலா உணவில்
விருப்பம்.கொழுப்பு உணவை விரும்பி உண்பார்.நன்கு ஜீரணமாகும்.வாயு சேர்ந்து கடுமையாய் வயிறு உப்பி விடும்.கடுமையாய் புளிப்பு வாந்தி. நெஞ்சுக் கரிப்பு.வயிற்றிலிருந்து புளிப்பு நீர் தொண்டைக்கு ஏறுதல்.
வாந்தி எடுத்தால்தான் சௌகரியமாயிருக்கும்.
இருமுவதாலும் படியிறங்குவதாலும் அதிக வலி. வயிற்றில்விட்டு விட்டு
வலியுடன் வாயு சேர்ந்து உப்பிவிடுதல். கல்லீரல் விரிவடைந்து தைப்பது போன்றவலியும் புண்போன்ற வலி
யும், பித்த கற்களால் வலியும் தாக்குதல்.வயிற்றைச்
சுற்றிலும் வட்டமான பகுதியில் பலவீனம்.இரத்த ஓட்டம் தடைபட்டு குடல்கள் இறுக்கப்பட்ட நிலையில் உள்ள குடல் இறக்கம். குழந்தைகளின் தொப்புள் பகுதி குடல் இறக்கம்.இடது பக்க குடல் இறக்கம்.அதிக மது
அருந்தியதால் கல்லீரல் வீக்கம்.
மலச்சிக்கல். மலம் கழிக்க
அடிக்கடி தூண்டுதல்.சிறிதளவே மலம் வெளிப்படும். மலம் கழிப்பதில் திருப்தியற்ற நிலை.மலம் கழிக்க
சிறிதும் தூண்டுதல் இல்லாதவர்களுக்கு நக்ஸ் பயன்
படாது.
நக்ஸ் வாமிகா.
கைகால் துவண்டுவிடு விடுதல்.கால்களில் மரத்ததன்மை.
பாரிசவாதம் வந்தது போன்ற நிலை.கெண்டைக்காலிலும் பாதத்திலும் இழுத்துப் பிடிக்கும் வலி. கடுமையான உழைப்பு மற்றும் நீரில்நனைந்து விடுவதால் சில உறுப்புகளில் மட்டும் வரும் பாரிச வாதம்.அசைவதால் முழங்கால்
மூட்டில் வெடிக்கும் ஒலி.
கால் மூட்டு வீக்கத்தில் நடக்கும் சமயம் கால்களை இழுத்து இழுத்தே நடப்பார்.பலவீனமும் பாரிசவாதமும்
வலிப்பும் தசைகளில் விறைப்பும்.
அதிகாலை 3 மணிக்கு மேல் காலை வரை தூக்கமின்மை.விடியும் சமயம்
தூங்கினால் புத்துணர்வின்மை.சாப்பிட்டபின் தூக்கக்கலக்கம்.பரபரப்பான கனவுடன் தூக்கம்.
உடம்பில் சூடான எரிச்சல்.குறிப்பாக முகத்தில் சூடான
எரிச்சல்.இருப்பினும் நோயாளி உடம்பை போர்த்திக்
கொள்வார். வயிற்று உபாதைகளுடன் கடுமையான சரும அரிப்பு.சிவந்த முகப்பரு.நெற்றியில் வலியுடன் வீக்கம்.
காய்ச்சலில் குளிர்ந்த நிலைமேலோங்கி, அதிக குளிர் நடுக்கத்துடன்,விரல்
நகங்களில் நீலம் பாரித்தல்.
உடலின் ஒரு பக்கம் மட்டும்
புளிப்பான வியர்வை.
வலிப்புடன் டெடனஸ் போன்று அனைத்து தசைகளிலும் விறைப்பு.
தாடை விறைத்து மூடிக்
கொள்ளுதல்.தலைவலி
சூடான அறையிலும் அமைதியாக உட்கார்ந்திருந்தாதும்,படுத்திருந்தாலும் தலை வலி குறையும்.காலை
10 அல்லது11 மணிக்கு குளிர் தாக்கும்.
No comments:
Post a Comment