Wednesday, 16 February 2022

பல்சடில்லா palsatilla ஹோமியோபதி மருந்து குணம் பயன்


பல்சடில்லா.
Pulsatilla.

அடிக்கடி மாறும் குறிகளுள்ள மருந்து
வலிகள் ஒருமூட்டிலிருந்து
வேறு மூட்டுக்குச் சென்று கொண்டே இருக்கும்.இரத்த பெருக்கு எடுப்பதும் நிற்பதுமாக இருக்கும்.மலம் ஒவ்வொரு முறையும் ஒவ்வொருவிதமாக இருக்கும்.சுரத்தில் குளிர் ஒவ்வொரு தடவை ஒவ்வொரு விதமாக
இருக்கும்.குறிகள் முன்பின்
தொடர்பற்றுக்  குழம்பியிருத்தல் .வாயில் கெட்ட ருசி.
தாகமே இருப்பதில்லை.ஜீரணம் அடிக்கடி கெட்டுவிடும்.
பல வியாதிகளில் அடிக்கடி
பயன்படும் மருந்து.

பெரும்பாலும் பெண்களுக்கே ஏற்றது.பருவம் அடையும் காலப் பெண்களுக்கு ஏற்படும் உபாதைகள்.நோயாளியின் இரத்தம் சூடாக இருக்கும்.தாகம் சிறிதும்
இல்லாமையும்,வாயில் கசப்பு சுவையும் பல்சடில்லாவின் முத்திரைக் குறிகள்.
வாய் வறண்டு இருக்கும்.
ஆனால் தாகம் சிறிதும் இருக்காது.குளிரும் உணர்ச்சி
இருக்கும்.

உடலில் கனத்த உணர்வு.மரத்துப் போதல்.அஜீரணம்.
கொழுப்புச் சத்துள்ள உணவு மற்றும் எண்ணெய் பலகாரங்களினால் வயிற்றுஉபாதைகள் மிக அதிகமடையும் .வயிற்றில் கல் போன்ற கடினத்தன்மை
ஏற்படுதல்.வாயின் ருசி அறியும் தன்மை குறைந்து
வருதல்.ருசியே தெரியாத
நிலை.வாயின் உமிழ்நீர் இனிப்பாக இருத்தல்.
                      

குளிராலும், மேகவெட்டை அமுக்கப்பட்டதாலும் வரும் விரைவேக்காடு. வயிற்றிலிருந்து வலி விரைகளுக்கு தாவுதல்.மேகவெட்டையில் கெட்டியான, பசு மஞ்சள் நிற போக்கு வெளியேறுதல்.சிறுநீர் சொட்டு சொட்டாக வெளியேறுதல். சிறுநீர்வெளியேறும் சமயம் தடைபட்டு
வரும். இத்துடன் சிறுநீர் புற
வழியில் சுருக்கும் மற்றும்
நெருக்கும் உணர்வு.சுக்கில
சுரப்பியில் வரும் திடீர் வேக்காடு. சிறுநீர் கழிக்கும் சமயம் முக்கல். முனகல். வலியுடன் முதுகுப் பக்கம் படுத்தால் வேதனை. தாடை அம்மைநோய் அமுங்கி,
நோய் இடம் மாறி விரைகளைத் தாக்கும். இம்மாதிரிதாக்குதலால் மலட்டுத் தன்மை ஏற்பட வாய்ப்புகள்
உண்டு.விரையும்,விந்து நாளமும் வீங்கி வலித்தல்.விரை வேக்காட்டுடன் வலது விரைப்பை வீக்கம்.சுக்கில
சுரப்பி பெருத்து விடுதல்.
குரல் இல்லாமை; நிலையற்று வந்து வந்து போகும் மார்பில் அமுக்கும் உணர்வும் புண் போன்ற வலியும்.வரண்ட இருமல்.இருமினால்
வயிற்றில் புண்போன்ற வலி .இருமலுடன் சிறுநீர்
வெளிப்படுதல். சளி காரமற்ற தன்மையாய், கெட்டியாக
பச்சை நிறமாய், கசப்புச் சுவையுடன் வெளிப்படும்.பயத்துடன் குட்டையான சுவாசம்.இடது பக்கம் படுப்பதால்
பட படப்பு.இரவிலும் மாலையிலும் வறண்ட இருமல்;படுக்கையிலிருந்து எழுந்து அமர்ந்தால் இருமல் சமனம்.
காலையில் தளர்ந்த இருமல்.ஆரம்ப கால காச நோய் மார்புக் கிளைக் குழல் வேக்காடு.சூடான அறையில் சுவாசிக்க சிரமப்படுதல்.
                         ‌‌
       
வறண்ட வாயுடன் தாகம் சிறிதும் இல்லாமை.உதட்டை அடிக்கடி நாக்கால் நக்கி ஈரமாக்கி கொள்ளுதல்.நீர் அருந்துவதில்லை. கீழ் உதட்டின் நடுவில் வெடிப்பு.மாலையிலிருந்து நள்ளிரவு வரை பல்வலி. பல்வலி குளிர்ந்த நீரை வாயில் வைத்திருந்தால் குறையும். சூடான உணவாலும் அறையின் சூட்டினாலும் பல் வலி
அதிகமாகும். துர் நாற்றம்.
வாயில் கசப்பு சுவை.எந்த
உணவுமே வாய்க்கு சுவையாய் தெரியாது.இனிப்பான உமிழ்நீர் ஊறுதல்.சுவையின் மாறுபாடுகள்.கசப்பு,
உப்பு சுவை,பித்த சுவை,துர்நாற்ற சுவை ஆகியவை
போன்று தென்படுதல்.நாக்கில் கெட்டியான வெள்ளை
நிற அல்லது மஞ்சள் நிறப்
படிவங்கள் தெரிதல். அனைத்து உபாதைகளுடன் தாகமின்மை. காய்ச்சலுடன் தாகமின்மை.

தொண்டையில் உணவு தடைபட்டு தேங்குதல்.உண்ட உணவின் சுவை அதிகநேரம் தொடர்ந்து காணப்படுதல். ஏப்பம்.உணவில் வெறுப்புடன் குமட்டல்.எதிர்க்கழித்தல்.நெஞ்சுக் கரிப்புடன் புளித்த நீர் மேலேறி வருதல்
தாகம் சிறிதுமின்மை.சாப்பிட்ட உணவு வெகு நேரத்திற்குப் பிறகு வாந்தியாதல்
சாப்பிட்ட பின்பு வயிற்றில்
இறுக்கமான உணர்வுடன்
வயிற்றில் வலி. வயிற்றில்
கல் போன்ற கனத்த அமுக்கும் உணர்வு.வயிறு வலியுடன் உப்பி விடும். வயிற்றில் சப்தத்துடன் அலசல். குறிப்பாக மாலையில் திருகு வலி. அஜீரணத்தால் வரும் தலை வலி. இரைப்பை குழியில் துடிப்புக்கள். இரைப்பை இயக்கம் பாதித்து கனத்த தன்மையாக உணர்தல்.


இரண்டு முறை கழிக்கும் மலம் வெவ்வேறு தன்மையானதாய் இருக்கும் ,பழங்கள் உண்ட
பின்பு மலம் கழித்தல். இரத்தப் போக்கற்ற மூலம்.அரிப்புடன் மற்றும் தைக்கும் வலி. தினசரி இரண்டு அல்லது மூன்று முறை இயல்பாகவே சாதாரணமான மலம் கழித்தல். பசுமஞ்சள் நிறமான மெலிந்த மாறும்
தன்மையுடன் கூடிய பித்தம்
போன்ற மலம். வலியுடன்
 துருத்தியுள்ள மூலம். துர்நாற்றமான, அரிக்கும் தன்மையான வெண்மை
மற்றும் இரத்தமான சளிச்
சவ்வுகள் கலந்த மலம் வெளிப்படும்.

சிறுநீர் கழித்த பின் சிறுநீர்
பையில் விட்டு விட்டு வலி
தாக்கும். இருமும் சமயம் இச்சையின்றி தானாகவே சிறுநீர் வெளிப்படுதல். தவிர்க்கவே முடியாத மாதிரி
நடக்கும் சமயமும் இவ்வாறு
இச்சையின்றி சிறுநீர் வெளிப்படும்.வெட்டும் வலியுடன் அடிக்கடி சிறுநீர் கழிக்க
பலன் அளிக்காத தூண்டுதல். படுத்திருக்கும் சமயம்
சிறுநீர் கழிக்க அதிக தூண்டல். சிறுநீர் புறவழியில் சிறுநீர் கழிக்கும் சமயமும் பிறகும் எரிச்சல்.

மாதவிலக்கு தாமதப்படுதல்
குறைவாகப் போதல்.அமுக்கப்பட்ட தடைபட்ட மாதவிடாய்.
கால்களை ஈரத்தில்
நனைப்பதால் மாதலக்கு தடைபடுதல்.மாதவிலக்கு கறுப்பு கட்டிகளாக, மாறும் தன்மைகளுடனும் விட்டு விட்டு வலியுடன் வெளியேறுதல்; போக்கின் சமயம் உடலில் குளிர்ச்சி.குமட்டல்,கீழ்
நோக்கிய அழுத்தம். எரிச்சலான காரத்தன்மையான பாலாடை போன்று வெளிப்படும் வெள்ளைப்பாடு. பல
வீனத்துடன் முதுகுவலி. மாத விலக்கு சமயத்திலும் பிறகும் வயிற்றுப் போக்கு. பெண்களின் பருவமடையும்
கால இரத்த சோகை. அமுக்கப் பட்ட மாதவிலக்கால் வரும் தலைவலி. தாடையம்மை நோய் அமுங்கி இடம்மாறி முலைகளைத் தாக்குதல்.பெண்கள் பருவமடைய
வேண்டிய வயதில் வரும் முதல் மாதவிலக்கு தாமதப்படுதல். முலைப்பால் அமுக்கப்பட்டு குறைவாக உள்ள நிலை.கருப்பை கீழ் இறக்கம். பகலில் மட்டும் வெளிப்படும் மாதவிலக்கு. முறையற்ற, மந்தமான, குறைபாடான பிரசவ வலி.
  
     
காது வேக்காடு.வேக்காடு நீடித்து காதிலிருந்து கழிவுகள் வெளியேறும். காதிலிருந்து வலியுடன்
சீழ் வெளியேருதல்; கெட்டியாக, காரணமில்லாமல்,துர்நாற்றமாக, பசு மஞ்சள் நிறமாயிருக்கும். இரவில் காது
வலி.பல்வலியும் காது வலியும் சேர்ந்தே இருக்கும்.காது அடைத்தது போன்று கேட்கும் ஆற்றல் குறையும்.செவிடு வெளிக்காது வீங்கி சிவந்துவிடும். இரைச்சலுடன் பலவித ஓசைகள் கேட்கும்.

கண்ணில் அரிப்புடன் கண்
ணீர் வடிதல். கண் மேல் இமையில்வரும் கட்டிகள்.
இமையில் வேக்காடு.காலையில் இமைகள் வீங்கி
காரமற்ற மஞ்சள் நிற கழிவுடனும்,அரிப்புடனும்
உறுத்தலுடன் வேக்காடு.
கண்புரை,கண்இமை வேக்காடடைந்து ஒட்டிக்கொள்ளும்.பிரசவ சமயம்
நோய்த் தொற்றால் குழந்தைகளுக்கு ஏற்படும் கண்வேக்காடு.

முகம் வெளுத்து தலையில்
நெற்றியில் வலி. கீழ் உதட்டின் மையத்தில் வீக்கத்துடன் வெடிப்பு .மாலையிலிருந்து இரவு வரை விட்டு விட்டு தாக்கும் முக நரம்புவலி. மிக அதிகமாக கண்ணீர் பெருக்குடன் வலதுபக்க நரம்பு வலி. தாடையம்மை . உமிழ்நீர் சுரப்பி வேக்காடு.

சளிவேக்காட்டுடன் வாசனை அறியும் சக்தியையும், ருசியையும் இழந்துவிடும். மூக்கடைப்பு. சளி முற்றிய நிலை.மூக்கு இதழில் வறட்சி. பச்சையும் மஞ்சளுமான
சளி வெளியேறும்.சளி தும்மலில் முடியும்.மூக்கு துவாரங்களில் புண் போன்ற வலி.

        
இடது பக்கம் படுத்தால் அதிக வேதனை.அதிக உணவு
உண்டால் இதயப் பட படப்பு.
மாலையில் இதயத்தில் அமுக்குவது போன்ற மற்றும் நிறைந்த உணர்வுடன்
கவலை.இதயத்தின் வலது
பக்க உபாதைகள்.

புத்துணர்ச்சி அளிக்காத தூக்கம்.மாலையில் தூங்க
தவிர்க்க இயலாத உந்தலுடன் தூங்குதல்.இரவின் முன் பகுதியில் தூங்க முடியாது.காலையில் நேரம் கழித்து தூங்குதல்.பகலில்
தூக்கக் கலக்கத்துடனேயே
இருத்தல்.

தோள்பட்டைகளுக்கு இடை
யில் பாயும் வலி.பிடரி மற்றும் முதுகிலும் பரவும் வலி.

கைகால்கள் குளிர்ச்சி.நிலை கொள்ளாமையுடன் கீழ் கால் மற்றும் தொடை பகுதியில் இழுக்கும் வலி.
கை காலின் வலிகள் இடம்
மாறும்.முழங்கையைச் சுற்றிலும் மரத்துப் போய் விடுதல்.இடுப்பு மூட்டு வலி. முழங்கால் வீக்கத்துடன் வலி.குதிக்கால் வலி. பாதிப்படைந்த கை மற்றும் கால்களைத் தொங்கப் போடுவதால் அதிக வேதனை.கை
கால்களின் அசுத்த இரத்தக்
குழாய்களில் வீக்கம்.பாதம்
சிவந்து வேக்காட்டுடன் வீங்கிக் கொள்ளுதல்.கால்களில் கணத்த உணர்வும் களைப்பும்.
                             

தோலில் எரிச்சலுடன் அரிப்பு.
தட்டம்மை.மணல்வாரி அம்மை.அசுத்த இரத்தக் குழாய்களில் வீக்கம். பருவமடையும் காலப் பெண்களின் முகப் பரு.கடுமையான அரிப்பு.சூடான அறையில் உள்ள போது உடலில் குளிர்ச்சி தாக்குதல்.

மாலையிலும் இரவிலும் தாகமின்மையுடன் பொறுக்க முடியாத வறண்ட எரிச்சலான சூடு தாக்குதல். இத்துடன் கைகளில் எரிச்சல் குறியுடன் நோயாளி குளிர்ச்சியான இடங்களை விரும்புவார்.குளிரும் உணர்வு; இருப்பினும் சூட்டில் வெறுப்பு.
சூடான அறையிலும் கூட குளிரும் உணர்வும்,தாகமின்மையும். மாலை 4 மணிக்கு குளிர் தாக்குதல்.ஒரு பக்கமாய் வியர்த்தல்.வெளிச்சூட்டைத் தாங்கமுடியாது. காய்ச்சலில் முணு முணுத்தல்,உளறுதல்.

கருவுற்ற பெண்களுக்கு பல்சடில்லா கொடுக்கக் கூடாது.பிரசவ சமயத்தில்
உயர்ந்த வீரியத்தில் கொடுக்க சுகப்பிரசவம் ஏற்படும்
குழந்தை நிலை மாறிப்
போய் குறுக்கே திரும்பிக் கொண்டு ஆபத்தான நிலை
யில் பல்சடில்லா 1M இரண்டு அல்லது மூன்று முறை அடிக்கடி தர குழந்தை சரியான நிலைக்கு மாறி,தலை வெளியே வந்து, சுகப்பிரசவம் ஏற்படும். 



அம்மை நோய்க்கு பல்சடில்லாவை தவிர சிறந்த மருந்து வேறு எதுவுமில்லை. அம்மைநோயின் பின் விளைவுகளையும் சரி செய்யும். மேகவெட்டை எனும் கொனேரியா நோய் அமுக்கப்பட்டதால் வரும் பின் விளைவுகளுக்கும் நன்கு பயன்படும்.
                              

             

நன்றி ; ராமலிங்கம் ஐயா.                      

No comments:

Post a Comment