Tuesday 22 May 2018

சைவ சித்தாந்தத்தின் 36 தத்துவங்கள்

சைவ சித்தாந்தத்தின் 36 தத்துவங்கள்*
*******************************************
பாசத்தில் மாயையினால் உண்டாகிற பொருளகளைக் குறிப்பிடு்கின்ற பொழுது, 36 தத்துவங்களும் மறுமையைக் காரணமாகக் கொண்டு உண்டாகின்றன என்பது சைவ சித்தாந்த மரபாகும்.
' மூன்று முப்பத்தாறினொடு மூன்று மூன்று மாயமாம்' எனப்படும் மூவகைப்பட்ட உயிர்கள், (விஞ்ஞானகலர், பிரளயாகலர், சகலர்) முப்பத்தாறு தத்துவங்களோடு மூன்று உலகங்களோடு (விண், மண், பாதாளம்) திகழுகின்றன என்பது குறிப்பாகப் பெறப்படுகின்றது. 36 தத்துவங்கள் என்பன,
நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம். - 5
மெய், வாய், கண், மூக்கு, செவி. -5
சுவை,ஒளி,ஊறு, ஓசை, நாற்றம். -5
வாய், கால், கை, எருவாய், கருவாய். -5
மனம், புத்தி, சித்தம், அகங்காரம். -4
ஆக ஆன்மத் தத்துவங்கள். (24)
காலம், நியதி, கலை, வித்தை, அராகம், புருடன், மாயை. - ஆகிய 7 ம், வித்தியா தத்துவங்கள்.
சிவம், சத்தி, சதாக்கியம், ஈஸ்வரம், சுத்தவித்தை - இவை ஐந்தும் சுத்த தத்துவங்கள்.
ஆக, இந்த 36 (24+7+5) தத்துவங்கள் சைவ சித்தாந்த தத்துவத்தில் பேசப்படுவன ஆகும்.
*திருச்சிற்றம்பலம்*

No comments:

Post a Comment