எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்க மந்திரம்*
***************************************************
***************************************************
பொதுவாக ஒரு செயலை தொடங்கு முன் அந்த காரியம் வெற்றி பெற ஏதாவது ஒரு தெய்வத்தை வணங்கி பின் அந்த காரியத்தை தொடங்குவோம் சில சமயங்களில் அது தோல்வியில் முடியலாம் ஆனால் பின் வரும் மந்திரத்தை மூன்று முறை கூறி தொடங்கினால் நிச்சயம் 80 சதவீதம் வெற்றி கிடைக்கிறது.
இது நடைமுறையில் உள்ள ஒரு வித்தை .
குறிப்பு :
*********
*********
செயல் நல்லதாக இருக்க வேண்டும் தீய செயலுக்கு பயன்படுத்த வேண்டாம்.மேலும் ரோமரிஷி அருளியுள்ள காப்பு பாடலையும் மூன்று முறை கட்டாயம் கூற வேண்டும், சத்தியமாக செயல் வெற்றியில் முடிந்திருக்கிறது.ஒரு சிலருக்கு மட்டுமே தோல்வியடைந்துள்ளது அதுவும் அன்று அவர்களுக்கு சந்திராஷ்டமம்,படுபட்சி நாளாக உள்ளதால் மட்டுமே,வாசகர்கள் அனைவரும் இதை முயற்சி செய்து பாருங்கள்.
ரோமரிஷி காப்புப் பாடல் :
---------------------------------------------
---------------------------------------------
காப்பான கருவூரார் போகநாதர் கருணையுள்ள அகத்தீசர் சட்டைநாதர்
மூப்பன கொங்கணரும் பிரமசித்தர் முக்கியமாய் மச்சமுனி நந்தி தேவர்
கோப்பான கோரக்கர் பதஞ்சலியார் கூர்மையுள்ள இடைக்காடர் சண்டிகேசர்
வாப்பன வாதத்திற்கு ஆதியான வாசமுனி கமலமுனி காப்புத் தானே
மூப்பன கொங்கணரும் பிரமசித்தர் முக்கியமாய் மச்சமுனி நந்தி தேவர்
கோப்பான கோரக்கர் பதஞ்சலியார் கூர்மையுள்ள இடைக்காடர் சண்டிகேசர்
வாப்பன வாதத்திற்கு ஆதியான வாசமுனி கமலமுனி காப்புத் தானே
ஓம் என்பதே பிரபஞ்ச பூட்டின் சாவி
மகா மந்திரம் இதை சுழுமுனை சித்தர் கூறினார்..
ஓம் ஓம் ஓம்
ஓம் ஓம் ஓம்
ஓம் ஓம் ஓம்
ஓம் ஓம் ஓம்
ஓம் ஓம் ஓம்
இதில் ஒன்பது ஓம் உள்ளது. இதை கூறும் முறை ரகசியமாக வைத்துள்ளனர்.அதை நாம் குருவின் அருளால் மறைக்காமல் கூறுகிறோம். மொத்தம் ஒன்பது ஓம்.ஓம் என்று ஆரபித்து ஓம் என்று முடிக்க வேண்டும்.முதலில் ஒம்ம்ம்ம்ம் என்று கூறி ம் மை அழுத்தி கூறி பின் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் என்று கூறி பின் கடைசி ஓம் மை ம்ம்ம்ம்ம் என்று ம் யில் முடிக்க வேண்டும். இதே போன்று மூன்று முறை கூற வேண்டும்
குறிப்பு: மந்திரம் மனதில் செபிக்க வேண்டும்,ஒரு விரிப்பை விரித்து அதன் மீது அமர்ந்து செபிக்க வேண்டும்,புலால் உணவை கட்டாயம் தவிர்க்க வேண்டும்
ரோமரிஷி காப்பு பாடல் மூன்று முறை பாடவேண்டும் (இது கட்டாயம் மந்திரம் முடித்து கூற வேண்டும்)
No comments:
Post a Comment