Tuesday, 22 May 2018

மருந்தில்லா மருத்துவம்

*மருந்தில்லா மருத்துவம்*
*****************************
எறும்புகள் போன்ற பல்வேறு பூச்சிகள் கடித்து வலி, வீக்கம் போன்றவை ஏற்பட்டால் வெங்காயத்தை நறுக்கி அந்த இடத்தில் தேய்க்கவும்.
கொழுகொழுவென குண்டாக இருப்பவனுக்கு, உடல் இறுகி மெலிய, கொள்ளுப் பயறு (Horsegram) கொடுக்க வேண்டும்.
வாழைத்தண்டுச் சாறு, பூசணிச்சாறு, அருகம்புல் சாறு இவற்றுள் ஏதேனும் ஒன்றை தொடர்ந்து சாப்பிட்டு வர சதை போடுவதைத் தடுக்கலாம்.
எள்ளில் இருந்து வரும் நல்லெண்ணெய்யைக் கொடுக்க உடல் இளைந்துக் காணப்படுபவர்கள் தேறி, உடல் எடை அதிகரிக்கும்.
கற்கண்டை வெண்ணெயுடன் சேர்த்து நாற்பது நாட்கள் சாப்பிட மெலிந்த உடல் பருக்கும்.
கடுகை அரைத்து வலியுள்ள பகுதியில் போட்டால் வலி குறைந்து விடும்.
தினமும் குடிநீரைக் காய்ச்சும் போது ஒரு கைப்பிடி சுக்கைத் தட்டிப் போடலாம். தேவைப்பட்டால் குடிநீரை வடிகட்டிக் கொள்ளலாம். மருத்துவ குணங்களைக் கொண்ட இப்பொருள், ஜீரணத்துக்கு உதவும், வாயுவை அகற்றும், மலச்சிக்கல் இருக்காது. தண்ணீரும் குடிக்கச் சுவையாக இருக்கும்.
ஒரு கப் சாதம் வடித்த நீரில், கால் கரண்டி மஞ்சள் பொடியைக் கலந்து குடிக்க வயிற்று உப்புசம், அஜீரணம் மாறும்.
வசம்பை எடுத்துச் சுட்டுக் கரியாக்கி அதனுடன் நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் ஆகிய மூன்றையும் கலந்து அடிவயிற்றில் பூசினால் வயிற்றுப் பொருமல் நீங்கும்.
வெள்ளைப் பூசனிக்காயை பூந்துருவலாக துருவி, உப்பு சேர்த்து இஞ்சி, பச்சை மிளகாய், கொத்துமல்லி, கருவேப்பிலை, கடுகு, தாளித்து தயிரில் கலந்து தயிர்ப் பச்சடியாக சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். பூசணிக்காய் இரத்தக்கொதிப்பு, கொலஸ்ட்ரால், தலைசுற்றல் எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும்.
பச்சை கொத்துமல்லித் தழைகளை அரைத்து தினமும் காலையில் எழுந்தவுடன் குடித்துவர தலைவலி நீங்கும்.
சுக்கை அரைத்து நெற்றியில் பற்று வைக்க தலைவலி குணமாகும்.
ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.
புதினா கீரையை நீரில் போட்டு கொதிக்க வைத்து குடித்தால் சளியால் வரும் காய்ச்சல் குணமாகும்.
வால்மிளகின் தூளை சீசாவில் பத்திரப்படுத்தி வேளைக்கு ஒரு சிட்டிகை தேனில் குழப்பிச் சாப்பிட கபம் நீங்கும்.
மிளகாயுடன் பத்து துளசி இலைகளை சேர்த்து சாப்பிட சளி போகும்.
வெறும் வயிற்றில் இஞ்சி சாறில் தேன் கலந்து பருகினால் சோர்வு நீங்கும், மார்புச் சளி அகலும்.
பூண்டை தோல் உரித்து நசுக்கி, தக்காளி, உப்பு, தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து சூப் செய்து குடித்தால் நெஞ்சு சளி சீக்கிரம் குணமாகும்.
தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ நெஞ்சு சளி குணமாகும்
வெள்ளைப் பூண்டு, இஞ்சி சாறு இரண்டையும் சேர்த்து அரைத்து இதனுடன் தேன் கலந்து காலை மாலை உணவுக்கு முன் சாப்பிட்டால் டான்சில் கரையும்.
சிறிது கசகசாவுடன் நாட்டுச் சர்க்கரையை சேர்த்து வாயில் போட்டு சாப்பிடவும். இது போல் வெறும் வயிற்றில் காலை மட்டும் சாப்பிட்டு வந்தால் மூன்று நாளில் வயிற்றுப் போக்கு குணமாகும்.
தொடர் வயிற்றுப்போக்கு உள்ளவர்கள் பப்பாளிப்பழம் சாப்பிட குணமாகும்.
நார்த்தங்காய் ஊறுகாய் மலச்சிக்கலைப் போக்கி நல்ல ஜீரண சக்தியைக் கொடுக்கும்.
சாப்பிடும் முன் இளநீர் அருந்தினால் பசிக்காது. சாப்பிட்டபின் அருந்தினால் பித்தம் நீங்கும், மலச்சிக்கல் தீரும். நாள்பட்ட இளநீரை குடித்தால் சளி ஏற்படும்.
மிளகைப் பொடி செய்து பெருங்காய பவுடர் சேர்த்து தினமும் சுடுநீரில் கலந்து ஒரு தேக்கரண்டி சாப்பிட்டால் வாயுக் கோளாறு நீங்கும்.
பாலில் பூண்டைப் போட்டு காய்ச்சிக் குடித்தால் இருமல், ஜலதோஷம், தொண்டைக் கரகரப்பு போகும்.
சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.
வாய்ப் புண்ணுக்கு கொப்பரைத் தேங்காயை கசகசாவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் குணமாகும்.
சட்டியில் படிகாரம் போட்டு காய்ச்சி ஆறவைத்து அதனை ஒரு நாளைக்கு மூன்றுவேளை வாய் கொப்பளித்து வந்தால் வாய்நாற்றம் போகும்.
கரும்பு சக்கையை எடுத்து எரித்து சாம்பலாக்கி, அதனுடன் வெண்ணெய் கலந்து உதட்டில் தடவி வர உதட்டு வெடிப்பு குணமாகும்.
காலையில் வெறும் வயிற்றில் 30 மில்லி அளவு கீழாநெல்லிச் சாறு குடித்து வந்தால் கல்லீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும்.
துளசிச்சாற்றை தினமும் குடித்து வந்தால் கல்லீரல், மண்ணீரல் நோய்களை தடுக்கலாம்.
பருப்பு கீரை, கீழா நெல்லி இரண்டையும் சம அளவில் எடுத்து மஞ்சள் சேர்த்து அரைத்து சாப்பிட்டால் கல்லீரல் வீக்கம் வற்றும்
பொன்னாங்கண்ணிக் கீரையை பருப்பு போட்டு கடைந்து சாப்பிட்டு வந்தால் கல்லீரல் நோய் குணமாகும்.
நெல்லிக்காய் வற்றல் 50 கிராம், சீரகம் 50 கிராம் – இந்த இரண்டையும் பொடி செய்து ஒரு வாரத்துக்கு காலை, மாலை இரண்டு வேளையும் சாப்பிட்டு வந்தால் மஞ்சள் காமாலை குணமாகும்.
பூவரசு மரத்தின் கொழுந்து இலைகளுடன் 6 மிளகு சேர்த்து அரைத்து, அதை மோரில் சுண்டைக்காய் அளவு கலந்து மூன்று வேளை குடித்து வந்தால் மஞ்சள் காமாலை குணமாகும்.
தோலில் உள்ள கரும்புள்ளிகளின் மேல் தக்காளிப் பழத்தைத் துண்டாக்கிக் தேயுங்கள். அதில் உள்ள அமிலம் கரும்புள்ளிகளைக் கரைத்துவிடும்.
கறிவேப்பிலை, கிராம்பு, பூண்டு சேர்த்துத் துவையல் செய்து சாப்பிட்டு வர தோல் நோய்கள் குணமாகும்.
தயிரை உடம்பில் தேய்த்துக் குளித்தால் வேர்குருவை விரட்டி அடிக்கலாம்.
பச்சைக் கற்பூரத்துடன் புதினா இலைச் சாறை கலந்து மூட்டு வலி உள்ள இடத்தில் தடவி வர மூட்டு வலி குணமாகும்.
சுக்கை நீர் விட்டு அரைத்து கொதிக்கவைத்து மூட்டுகளில் தடவ மூட்டுவலி குறையும்
கருவுற்ற மகளிர் நெல்லிக்காய், முருங்கைக் கீரை, முள்ளங்கி ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொண்டால் கை, கால், முகம், பாதம் வீக்கம் வராது. குழந்தைப் பேறு எளிதாக அமையும்.
தக்காளி, கோஸ், கேரட் ஆகியவற்றை சாப்பிட்டால் முக சுருக்கம் நீங்கும்.
கசகசாவை நைசாக அரைத்து குழந்தையின் தொப்புள் சுற்றி தடவினால் குழந்தையின் அழுகை நின்றுவிடும்.
தொண்டை கட்டிக்கொண்டு குரல் எழாமல் சிரமப்படுபவர்கள் கற்பூர வல்லியை சாறெடுத்து பனங்கற்கண்டு சேர்த்துப் பருக சரியாகும்.
வெள்ளை வெங்காயத்தை நெய்யில் வதக்கி, பனங்கற்கண்டு சேர்த்து காலை, மாலை ஒரு தேக்கரண்டி சாப்பிட, வயிற்றின் சுற்றளவு குறையும்.
நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்
துவரம் பருப்பை வேகவைத்த தண்ணீரை டம்ளர் எடுத்து, சிறிது வெல்லம் சேர்த்து ஏழு நாட்கள் சாப்பிட வயிற்றுப் பூச்சிகள் வெளியேறும்.
கருணைக் கிழங்கை தொடர்ந்து வாரம் இருமுறை உணவுடன் சேர்த்து சாப்பிட மூலம் தீரும்.
இஞ்சி எலுமிச்சை சாற்றை தண்ணிரில் கலந்து காலையில் அருந்த காலரா குணமாகும். எலுமிச்சை சாறைத் தினமும் பருகி வந்தால் காலரா அண்டாது.
ஒரு டம்ளர் கொதிநீரில் 1 மேசைக்கரண்டி தேனைக் கலந்து குடித்தால் 1/4 மணி நேரத்தில் வயிற்றுவலி பறந்துவிடும்.
முருங்கை இலை ஈர்க்குகளை நறுக்கி மிளகு ரசத்தில் போட்டுக் கொதிக்க வைத்து உணவுடன் சேர்த்துக் கொண்டால் உடல் அசதி குணமாகும்.
காய்ச்சிய வேப்ப எண்ணெய் தடவி வர சேற்றுப்புண் குணமாகும்.
வில்வபழம் சாப்பிட மூளை தொடர்பான நோய்கள் தீரும்.
வெண்ணீரில் தேன் கலந்து தினமும் காலையில் சாப்பிட்டு வர ஞாபகசக்தி பெருகும்.
யானைக்கால் நோய் குணமாக வல்லாரை கீரை தொடர்ந்து சாப்பிடலாம்.
பாதாம் பருப்பு வறுத்து அடிக்கடி உண்டு வர கண் பார்வை தெளிவு பெறும்.
வேப்பம் பூவுடன் மிளகு, சீரகம் சேர்த்து உண்டுவர பித்தப்பை நோய் குணமாகும்.
சப்போட்டா பழம் தினமும் பகல் பொழுதில் உண்டுவர இரவில் நன்றாக தூக்கம் வரும்.
காய்ந்த நெல்லிக்காயை பொடியாக்கி தேங்காய் எண்ணெயுடன் கலந்து சுட வைத்து வடிகட்டி தேய்த்துவர முடி கருமையாகும்; முடி உதிர்வது நிற்கும்.
எருக்கஞ் இலையின் பின்புறம் விளக்கெண்ணெய் தடவி தணலில் காட்டி கட்டிகள் மீது வைத்துக் கட்டினால் கட்டி பழுத்து உடையும்.
இலந்தை மரத்தின் இலையை மைய அரைத்து காயத்தின் மீது போட்டு வர வெட்டுக்காயம் குணமாகும்.
இருமல் குறைய
******************
1. முளைக்கீரை, அதிமதுரம் (ஒரு துண்டு) மஞ்சள் (3 சிட்டிகை) மூன்றையும் சேர்த்து கஷாயமாகச் செய்து சாப்பிட்டால் எப்படிப்பட்ட இருமலும் குணமாகும்.
2. புளிச்சக்கீரையை அரைத்து நெல்லிக்காய் அளவு சாப்பிட்டால் இருமல் குணமாகும்.
3. வெந்தயக் கீரையுடன், உலர்ந்த திராட்சை (10), சீரகம் அரை கரண்டி இரண்டையும் சேர்த்து கஷாயமாக்கிச் சாப்பிட்டால் எப்படிப்பட்ட இருமலும் குணமாகும்.
4. கரிசலாங்கண்ணிக் கீரைச் சாறில் அதிமதுரத்தை ஊற வைத்து உலர்த்திப் பொடியாக்கி, தினமும் காலை மாலை இரு வேளையும் 2 கிராம் அளவு தேனில் குழைத்துச் சாப்பிட்டால் இருமல், புகைச்சல் ஆகியவை சரியாகும்.
5. தூதுவளைக் கீரையுடன் அதிமதுரம், தனியா, உலர்ந்த திராட்சை ஆகியவற்றைச் சேர்த்துக் காய்ச்சி கஷாயமாக்கி வடிகட்டிச் சாப்பிட்டால், இருமல், விடாத தும்மல், புகைச்சல் போன்றவை குணமாகும்.
6. முசுமுசுக்கைக் கீரைச் சாறில் அதிமதுரத்தை ஊற வைத்து உலர்த்திப் பொடியாக்கி, 2 கிராம் அளவுப் பொடியை தேனில் குழைத்துச் சாப்பிட்டால், இருமல், புகைச்சல் போன்றவை குணமாகும்.
7. பண்ணைக் கீரைச் சாறில் அதிமதுரத் தூளை கலந்து சாப்பிட்டால், எப்படிப்பட்ட இருமலும் குணமாகும்.
8. வங்கார வள்ளைக் கீரை, கற்பூரவல்லி இலை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்துச் சாப்பிட்டால் இருமல், சளி, ஆஸ்துமா குணமாகும்.
9. மணலிக் கீரைச் சாறில் உலர்ந்த திராட்சையைச் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் வறட்டு இருமல் குணமாகும்.
10 காய்ச்சிய பசும்பாலில் மஞ்சள், மிளகுப் பொடி பனங்கற்கண்டு சேர்த்து இரவில் அருந்தினால் இருமல் குணமாகும். கற்கண்டுடன் சீரகம் சேர்த்து சாப்பிட்டு வந்தாலும் குணம் தெரியும்.

No comments:

Post a Comment