Tuesday, 28 July 2020

எது தியானம்? யோகி என்பவர் யார்?

"இருட்டுலே பிடிச்ச கொழுக்கட்டேய்"னு யாராச்சும் சொன்னாக்க ... நாம போய் கையைக் கட்டிக்கிட்டு 

" சொல்லுங்க எஜமான்" னு கேட்டாவணும்.

ஏன்'னா  ... நாம எல்லோருமே இருட்டுல புடிச்ச கொழுக்கட்டைங்க தான் !

துளியூண்டு வெளிச்சம்கூட இல்லாம  ... நாம இருக்கற மலம், மூத்திரத்திலேயே மெதந்துக்கிட்டு ... அம்மாக்காரியோட இரத்த நாத்தத்துக்கு நடுவாப்புல கேடு கெட்டு கெடந்த நமக்கு ...

அங்கே இருக்கற ஜூவாலை'லே வெளிச்சம் இல்லே. இல்லாட்டினாலும் ... இருட்டு நமக்கு தெரிய ஆரம்பிச்சிடுது. 

இருட்டுலே இருக்கற பொருள் தெரிய ஆரம்பிச்சிடுது'னு சொல்லவில்லை ! இருட்டே தெரிய ஆரம்பிச்சிடுது !! Darkness visible !!!

வெளியே வந்து ... வெளிச்சத்தைக் கண்டு, நல்ல காத்தை சுவாசிச்சி ... மல ஜலத்திலே இருந்து விடுவிச்சிக் கிட்டு அம்மா கர்ப்பத்துல இருந்து வெளியே வந்த ... இருட்டுல புடிச்ச கொழுக்கட்டை, நாத்த பயலுகளுக்கு ...

துளிர் உட்டுப் போச்சி !!!

ஒம்போது மாசம் இருட்டு நாத்தத்துலே கெடந்தாலும் ... உசுரோடத்தான் இருந்திருக்கோம். இயற்கையோட நேரடி தொடர்புலே இருந்திருக்கோம். இறைத் தொடர்புலே இருந்திருக்கோம். ஆமாம் !

வெளியே வந்தோடனே என்னாச்சி ? மொத்தமா அத்துக் கிட்டோம். இறைத் தொடர்பை அத்துக்கிட்டோம்.

It is in the absence of light that the spirits work their greatest magic. It is in the light-absent womb that they do the necessary work to prepare the soul for its journey into life on planet Earth.

சும்மா இல்லை. அந்த ஒம்போது மாசத்துல ... நம்ம ஒட்டு மொத்த வாழ்க்கைக்கான சகலத்தையும் கத்துக் குடுத்துடிச்சி இறை !

வெளியே கண்ணை கூசற வெளிச்சத்துக்கு வந்த உடனே ... சகலத்தையும் மறந்துட்டோம். இங்கே உள்ள இத்தியாதி ஒவ்வொன்னுலேயும் கவனத்தை செலுத்தி ... பலதை ஈர்த்துக்கிட்டு ... சிலதுக்கு பிரதிபலித்து ... இந்த வெளாட்டிலேயே மூழ்கி போயிட்டோம்.

ஆனாலும் என்ன? 

தெனத்துக்கும் அந்த இருட்டோட ருசியை அனுபவிச்சிக் கிட்டுதான் இருக்கோம். 

என்ன அந்த இருட்டோட ருசிங்கறது ? எது அந்த கருவறை இருட்டோட தொடர்ச்சி ?

தூக்கம் !

தூக்கம்'ங்கறது கருவறை இருட்டின் தொடர்ச்சி. தொடர்பு விட்டு போயிடக் கூடாது'னு இயற்கை நமக்களித்த நிவந்தம், தூக்கம் !

சூரிய வெளிச்சத்துலே என்னா மறைஞ்சி கெடந்ததோ ... அதை திரும்பி நினைவு படுத்திக்கறத்துக்கு ... இயற்கை தந்த சந்தர்ப்பம் தூக்கம்.

தாங்க முடியாத துயரமோ, நோயோ  வந்துச்சி'னா ... ஒரு பொட்டு வெளிச்சம் கூட இல்லாத குகைக்கோ, வேறெங்கேயோ போயி இருந்து, அந்த இருட்டைப் பழக்கப் படுத்திக்கிட்டு ... கொஞ்சம் உள்முகம் திரும்பினோம்'னா ... நோயும், கலக்கமும் தன்னாலக்கா விடை பெறும். நமக்கு நோய் வந்திச்சினா ... கொட்ட கொட்ட முழிச்சிக்கிட்டு கெடந்தோம்'னா சொஸ்தம் ஆவாது. கண்ணை மூடி தூங்கி இருட்டைக் கொண்டு வந்த பிறகுதான், குணப்படுத்தும் வேலையை உடல் செய்ய ஆரம்பிக்குது !

ஆக, தூக்கம் வர்றதுலே சொணக்கத்தை வரவழைச்சிக் கிட்டோம்'னா ... நமக்கு பெரிய பாதகத்தை உருவாக்கி கிட்டு வர்றோம்'னு அர்த்தம்.

எப்புடி நாம பொறக்கறத்துக்கு முன்னாடி  கொஞ்ச நாள் கருவறை இருட்டுக் குள்ளே கெடந்தோமோ ... அப்புடிதான், இந்த பிரபஞ்சம் பொறக்கறத்துக்கு முன்னாடி கருங்'கும்' இருட்டுலே சூன்யமாக் கெடந்துச்சு. அதுதான் பூரணம் ! 

சூன்யம்தான், பூரணந்தான் ... இருட்டுத்தான் !

விடியற்காலை துலங்கு வெளிச்சம்போல் கொஞ்சம் கொஞ்சமாக வெளிச்சம் ஏற்பட்டு ... இந்த ஒலகம் பொறந்திச்சி ... 

மனுஷனுக்கு தூக்கம் போல ... ஒலகத்துக்கு இரவு ! அந்த இரவுலேத்தான் ஒலகம் தன்னைத் தானே புதுப்பித்துக் கொள்கிறது.

ஒரு பரீட்சைக்காக, கண்ணை மூடிக்கிட்டு  கருங்'கும்' இருட்டுக்குப் போனோம்'னா ... இருட்டுலே மூனு பேரு வருவாங்க.

விமர்சனம் பண்றவரு மொதல்ல வருவாரு ...

" ஒனக்கு இது தேவையா? நீயே ஒன்னே இந்த நெலமைக்கு ஆளாக்கிக்கறே ? உருப்படவே மாட்டே "

இது அந்த விமர்சகர் சொல்றது.

அடுத்த து ... அப்பாவோ அம்மாவோ போல ஒரு பாத்திரம் வரும்.

" அவனை அவன் இஷ்டத்துக்கு போக விடு. என்னாத்தே தப்பு பண்றான்? உள்ளே போறான் அவ்ளோதானே? போகட்டும் ... நல்ல பாடம் கத்துக்கிட்டு வெளியே வருவான்"

இது பெற்றோர் கேரக்டர் சொல்றது.

அடுத்ததாக வருவது ... விஞ்ஞானி role.

நல்லது கெட்டதுகளை ஆராய்ந்து ... கடைசியா நமக்கு கெடைக்க வேண்டியதை தர வரைக்கும் ... ஒரே வாக்குவாதம் பண்ணிக்கிட்டு போயிடும்.

இந்த விமர்சகர், பெற்றோர், விஞ்ஞானி ... மூனு கேரக்டரும் நாமேதான் !

எவ்ளோ நாள் இருட்டுலே தன்னைத் தானே புடம் போட்டுக்கறோமோ ... அத்தனை நாளும் இந்த மூனு கேரக்டரும் வந்துகிட்டே இருப்பாங்க. மூனு பேரும் ஒரே வரிசைக் கிரமத்துலே வருவாங்க'னு சொல்ல முடியாது. ஆனா வந்துகிட்டே இருப்பாங்க.

தனியா பயங்கர கருப்பாகவோ, கருப்பா பயங்கரமாகவோ ... போயி ஒக்காந்து சுய பரீட்சை செய்யறதுக்கு பேரு என்னாது ?

தியானம்!

தியானத்தில் ... 

ஆழ்ந்த தூக்கத்தில் ... 

கருங்'கும்' இருட்டில் ...

நாம் மிக உயரிய நிலையை அடைய இயலும்.

ஏன்'னா அந்த இருட்டுதான் பரிபூரண சுத்த நிலை.

அந்த 'dark'ness ல்தான் en'lighten'ment அடைய முடியும்.

அந்த இருட்டிலேதான் நல்வழி தோன்றும்.

இனி இல்லதற்கு தோற்றம் இன்மையின் உள்ளதற்குச் செய்வோர் இன்றிச் செய்வினை இன்மையின் ஒடுங்கின சங்காரத்தின் அல்லது உற்பத்தி இல்லை

- சிவஞான போதம்

இல்லாத ஒன்று எப்போதுமே தோன்றுவதில்லை. தோன்றிய ஒன்று எப்போதுமே இல்லாமல் இருந்ததில்லை; இருந்தே தீரும்.

அது வெறும் எண்ணத்தில் தோன்றியதாக இருந்தால் கூட ... முழு உருவெடுக்கும் தன்மையானது.

அதனாலத்தான் நேர்மறை எண்ணங்களையே எண்ணலிட வேண்டும் என சொல்வது.

பொருள் ஒன்று மற்றொரு பொருளில் மறைந்து நிற்பதை சிரமப்பட்டு தெரிந்து கொள்ளாத எவரும் ... அப்பொருள் இல்லை என்ற முடிவுக்கு வருதல் கூடாது. 

தோன்றும் காலம் தோற்றாக் காலம் என்ற இருவித காலங்களுண்டு. பகலில் நட்சத்திரங்கள் கண்ணில் படுவதில்லை என்ற காரணத்தால் நட்சத்திரங்களே இல்லை என்ற முடிவுக்கு வருதல் கூடாது. பகலிலும் நட்சத்திரம் உண்டு.

உடலிலேயே ஓங்கார வடிவத்தைக் காணமுடியும். 

ஓங்காரத்துள்ளே உதித்த பூதம் ஐம்பூதம்,
ஓங்காரத்துள்ளே உதித்த சராசரம்,
ஓங்கா தீதத்துயிர் மூன்றும் உதித்த
ஓங்காரசஞ்சீல பரசிவரூபமே

 - திருமூலர். 

எந்தக் கருவிலும் எந்த சிருஷ்டியும் முதலில் அந்த வடிவத்தையே பெறுகிறது.

உண்மையை இருள் மறைத்து நிற்கிறது. 

மனித உருவத்தில் மூலக் கனலுக்கும் கபாலத்திடையே தோன்றும் ஜோதிக்குமிடையே இருள் பரவி நிற்கிறது. இந்த இருளைப் படிப்படியான சாதனைகளின் மூலம் அகற்றிவிட்ட பின்னர் யோகிகளுக்கு யோகக் கலை புறப்பட்டு உடலில் சஞ்சரிப்பதையே நாதசஞ்சாரம் என்று கூறுவர். அந்நிலை அடையாத எவரும் இருளைக் கடந்தவனாக மாட்டார்.

தியானம் செய்து உயர்நிலை எய்துவோர் பெயர் யோகி.

"இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்"

மூலக்கனல் புகைந்து நிற்கின்றது. நெற்றியில் ஜோதி சொரூபத்தில் ஒரு விளக்கு இருக்கின்றது. இந்த மூலக்கனல் படிப்படியாகச் சென்றேறி அந்த ஜோதியைத் தொட்டால் ஜோதி இறங்கி வெளிச்சத்தைத் தருகின்றது.

வீட்டுக்குச் சென்று குத்துவிளக்கு ஏற்றி அந்த எரிகிற விளக்கில் மற்றொரு திரியை பற்ற வைத்து சிறிது நேரம் எரிந்தபின் அணைத்துவிட்டு அந்த எரிகிற திரிக்கு நேராக இந்த அணைந்த திரியைக் கீழே வைத்து இந்தப் புகையை ... அசையாமல் எரிகிற திரியில் போய்ப்படும்படி பிடித்தால் அந்த புகை எரியும் !

ஒளியில் பட்டவுடன் அச்சுடர் புகை வழியாகக் கீழே இறங்கி கீழே இருக்கும் திரியும் எரியும். 

அந்நிலையை யோகி தன் சரீரத்திலேயே காண்கின்றான். அவனுக்கு கபாலத்துள்ளேயுள்ள ஒளியானது மூலாதாரத்திற்கு இறங்குகின்றது. அப்பொழுது கபாலத்திற்கும் மூலாதாரத்திற்கும் இடையிலிருந்த இருள் ஒளியாக மாறுகிறது. அந்த நிலையை அடைந்தவனைத்தான்

"இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்" (பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு)

என்று குறள் சுட்டிக் காட்டுகிறது. 

யோகியர் தம் உடலில் கண்டு அனுபவிக்கும் நாத சஞ்சாரத்தையே புல்லாங்குழல் நாதஸ்வரம் போன்ற கருவிகளின் மூலம் உலகில் ஏனையோரும் அனுபவிக்கட்டும் என்று எடுத்துக் காட்டியிருக்கின்றனர். 

யோகியர் உடலில் ஏற்படும் இந்த நாத சஞ்சாரத்தின் முடிவிலேயே போதம் உண்டாகிறது. யோகாநந்தத்தின் முடிவு கலானந்தம். கலானந்தத்தின் முடிவு நாதாந்தம். நாதாந்தம் என்பவை பத்துவித நாதங்கள். அவை கடலிரைச்சல், சங்கின் தொனி, கண்டாமணியோசை, நாதஸ்வரம் புல்லாங்குழல், பேரிகை போன்ற பலதரப்பட்டவை. இவை அத்தனை சப்தத்தையும் பிரம்ம மந்திரத்தில் குண்டலிபுகும் காலத்தில் யோகி கேட்கிறான். கேட்கும் காலத்தில் மனதில் சாந்தம் நிலவுகின்றது. இதைக் கண்ட யோகிதான் வெளியில் மற்றையோரும் இம்மாதிரி நாதத்தை கேட்டு மனச் சாந்தியும் மகிழ்ச்சியும் அடையும் பொருட்டு கருவிகளை அமைத்து மக்களைக் கையாளச் செய்தான்.

"சுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின்
வகை தெரிவான்கட்டே உலகு”

- திருக்குறள்

இத்தகைய தெளிந்த நிலையில் தன்னுள்ளே பரம்பொருளைக் கண்டு பின்னர் வீடு என்ற நிலையை அடைவதையே சித்தாந்தம் கூறுகிறது. 

இன்பமும் வீடும் வேறல்ல. அதைத்தான் “பெற்ற சின்றின்பமே பேரின்பமாய் அங்கே முற்றவரும் பரிசு உந்தீ பற-முனையாது மாய்கையின் உந்தீபற” 

என்று சொல்லியிருக்கின்றார்கள்.

காமங்கடந்த இல்லறமும் காட்டினுள் புகுந்த துறவறமும் வித்தியாசப்பட்டதல்ல. அதைத்தான்,

“சன்னியாசி ஆனதிலும் மூடருண்டு
சம்சாரி ஆனதிலும் ஞானியுண்டு”

என்று சொல்லப் படுகிறது. 

“நீட்டலும் மழித்தலும் வேண்டாம் உலகம்
பழித்தது ஒழித்து விடின்”

- திருக்குறள்

“கண்ணுளின் போகார் இமைப்பின் பருகுவரா
நுண்ணுயிர்எம் காத லவர்”

என்று சொல்கிறது காமத்துப்பால் ...

அதே கருத்துதான் ஆன்மீகத்தைக் கூறும்போதும் ... வருகிறது.

“கண்மணியில்’ ஆகாச நிழல் கலந்தாற்போல்,
புன்மையினை நீ உண்டென றுனையுணர்த்தி
துண்ணெனவே பார்த்திருந்த சித்த நம்போற் பார்த்தானை நாம்பாவி
தோத்திரஞ் செய்யாப் பிறவிச் சொல்”

- ஒழிவிலொடுக்கும் / திருஞான சம்பந்தர்
-----------
நூல் ; செப்படு வித்தை-2
-----------

என்ன லக்னம் எந்த தொழில் செய்யலாம்.

லக்னமும் தொழில் அமைப்பும்

மேஷம் லக்னமும் தொழில் அமைப்பும்
மேஷ லக்னத்தில் பிறந்தவர்களுக்கு ஜீவன ஸ்தானாதிபதி சனி பகவானாவார். பொதுவாக, தொழில் காரகன் என வர்ணிக்கப்படக்கூடிய சனி பகவான் இந்த லக்னத்திற்கு 10ம் அதிபதி என்பதால் அவர் சுக்கிரன், புதன், குரு போன்றகிரகங்களின் சேர்க்கை பெற்று பலமாக அமையப் பெற்றால்,சொந்தத் தொழில்  செய்து அதன் மூலம் சம்பாதிக்கக்கூடிய யோகம் உண்டாகும்.

மேஷ லக்னத்தில் பிறந்தவர்களுக்கு ஜீவனாதிபதி சனியே பாதகாதிபதியாகவும் இருப்பதால், வேலையாட்களிடமும் ஸ்பெகுலேஷன் சார்ந்த தொழில்  விஷயங்களிலும் முதலீடு செய்கின்ற போது முன்னெச்சரிக்கையுடன் இருந்து நிலையான விஷயங்களில் மட்டும் முதலீடு செய்தால், லாபங்களை அடைய முடியும். 10ம் அதிபதி சனி பலமாக அமையப் பெற்று சுபர் பார்வையுடனிருந்தால் இரும்பு, எந்திரங்கள், வண்டி,வாகனங்களில்  மூலம் அனுகூலங்கள், பழைய பொருட்களை விற்பனை செய்யும் தொழில், கடின உடல் உழைப்பு சார்ந்த தொழில்கள் போன்றவற்றை செய்ய நேரிடும்.

சனி சுக்கிரனுடன் புதனும் இருந்தால் ஒன்றுக்கும் மேற்பட்ட தொழில் யோகம், பலரை நிர்வாகம் செய்து சொந்த தொழில் செய்யக்கூடிய யோகம் உண்டாகும். அதுமட்டுமின்றி வணிகம்,வியாபாரம், ஏஜென்ஸி கமிஷன் தொடர்புடைய தொழில்களும்ஏற்றத்தை ஏற்படுத்தும். சனி பகவானுடன் குரு சேர்க்கைப் பெற்று பலமாக இருந்தால் வெளியூர், வெளிநாட்டு தொடர்புடையவைகளாலும், கொடுக்கல், வாங்கல், ஏஜென்ஸி கமிஷன் போன்ற வற்றாலும் சம்பாதிக்கும் வாய்ப்பு உண்டாகும். இது மட்டுமின்றி மற்றவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கும் துறை, வக்கீல் பணி, நீதித்துறை, இன்சூரன்ஸ் போன்றவைகளில் சம்பாதிக்கும் வாய்ப்பு உண்டாகும். குருபகவானுக்கு 10ம்  வீடு நீச ஸ்தானம் என்பதனால் குரு வக்ரம் பெற்றிருந்தாலோ, உடன் சனி அமைந்திருந்தாலோ மட்டும்தான் கௌரவமான பணிகள்செய்யக்கூடிய வாய்ப்பு உண்டாகும். மேற்கூறியவாறு குரு அமையப் பெற்று புதனுடன் இணைந்திருந்தால் பள்ளிகல்லூரிகளில் ஆசிரியர், பேராசிரியர்களாகபணியுரியக்கூடிய வாய்ப்பு, மற்றவர்களுக்கு ஆலோசனைகள் வழங்குவதில் வல்லவராக விளங்கக்கூடிய வாய்ப்பு, வங்கி பணி போன்றவற்றின் மூலம் சம்பாதிக்க முடியும்.

மேஷ லக்னத்திற்கு லக்னாதிபதியான செவ்வாய்க்கு 10ம் வீடு உச்ச ஸ்தானமாகும். செவ்வாய் 10ல் அமைந்து உச்சம், திக் பலம் பெற்று இருந்தால், மிகச் சிறந்த நிர்வாகியாக விளங்கக்கூடிய அமைப்பு, போலீஸ், இராணுவம் போன்ற துறைகளில்பணிபுரியக்கூடிய வாய்ப்பு, பேருந்து, ரயில்வே துறை போன்றவற்றில் உயர் பதவிகளை வகிக்கும் அமைப்பு,அதிகாரமிக்க பதவிகளை அடையும் வாய்ப்பு உண்டாகும். செவ்வாய் சூரியன் சேர்க்கைப் பெற்றிருந்தால் அரசு, அரசு சார்ந்ததுறைகளில்  சம்பாதிக்கும் அமைப்பைக் கொடுக்கும். உடன் சனியும் பலம் பெற்றிருந்தால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உயர் பதவிகள் தேடிவரும். 10ல் செவ்வாய் அல்லது சூரியன் அமையப் பெற்று உடன் சந்திரன் ராகு அல்லது கேது சேர்க்கை பெற்றால் மருத்துவத் துறையில் பணிபுரியக்கூடிய வாய்ப்புஉண்டாகும். சூரியன் செவ்வாயுடன் குரு சேர்க்கை அல்லது பார்வையிலிருந்தால் கௌரவமான உத்தியோகம் கிடைக்கும்.

சனி பகவான் ராகு அல்லது கேது சேர்க்கைப் பெற்றால் வாழ்வில் பல்வேறு வகையில் சோதனைகள், சட்ட சிக்கல்கள் நிறைந்த துறைகளில் பணிபுரியக்கூடிய வாய்ப்பு உண்டாகும். அதிலும் சுபர் பார்வையின்றி இருந்தால் மற்றவர்களை ஏமாற்றிப்பிழைக்கும் அவலநிலை உண்டாகும். சனி பகவான் பலமிழந்திருந்தால் நிலையான வேலை, நல்ல வருமானம் இல்லாமல் பல்வேறு துறைகளில் கடைநிலை ஊழியராக பணிபுரியும் நிலை, அடிமைத் தொழில் செய்யக்கூடிய சூழ்நிலை உண்டாகும்.

ரிஷபம் லக்னமும் தொழில் அமைப்பும்
ரிஷப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு ஜீவன ஸ்தானாதிபதி சனி பகவானாவார். சனி 9,10 க்கு அதிபதியாகி தர்மகர்மாதிபதி என்பதாலும், லக்னாதிபதி சுக்கிரனுக்கு நட்புக் கிரகம் என்பதாலும் மிகச்சிறந்த யோககாரகனாவார். ரிஷப லக்னகாரர்களுக்கு சனி ஆட்சி உச்சம் பெற்றோ, திரிகோண ஸ்தானங்களில்அமையப்பெற்றோ, திரிகோண ஸ்தானங்களில் அமையப்பெற்றோ இருந்தால், கொரவமான பதவிகளை  வகிக்கும் யோகம், அதன் மூலம் நிலையான வருமானம் உண்டாகும். சனி பலம் பெற்று சுக்கிரன், புதன் போன்ற நட்புக் கிரகங்களின்சேர்க்கையுடனிருந்தால் சொந்தத் தொழில்  செய்யக்கூடிய யோகம், நிலையான வருமானம், ஒரு சிறந்த முதலாளியாகி பலருக்கு வேலை கொடுக்கும் யோகம் உண்டாகும்.

மேற்கூறிய கிரகங்களில் ஏதாவது ஒரு கிரகத்தின் திசை நடைபெற்றால் எண்ணிப்பார்க்க முடியாத அளவிற்கு சம்பாதிக்கும் வாய்ப்பு, சுகமான வாழ்க்கை வாழக்கூடிய யோகமும் உண்டாகும். 10ம் அதிபதி சனி என்பதனால் இரும்புசம்பந்தப்பட்ட தொழில், எந்திரங்கள், வேலையாட்களை வைத்து தொழில்  செய்யும் அமைப்பு, பழைய பொருட்களை வாங்கி விற்பதன் மூலம் அனுகூலங்கள் உண்டாகும்.

சனி பகவான் சுக்கிரனின் சேர்க்கையைப் பெற்றால் வண்டி வாகனங்கள் மூலமும், டிராவல்ஸ் போன்றவற்றிலும், பெண்கள் உபயோகிக்கும் அழகு சாதனப் பொருட்கள் விற்பனை, கட்டிடத் துறைகளில் சாதிக்கும் அமைப்பு உண்டாகும். ரிஷப லக்னாதிபதி சுக்கிரன் சந்திரனின் சேர்க்கை பெற்று இந்த இரு கிரகங்களில் ஒரு கிரகம் ஆட்சிப் பெற்றாலும் பரிவர்த்தனை பெற்றாலும் கலை, இசை, சங்கீதம், சினிமா போன்ற துறைகளில் தங்களை ஈடுபடுத்தி சாதிக்கக்கூடிய அமைப்பு உண்டாகும்.  நல்ல வருவாய் அமையும்.

சனி பகவான் புதன் சேர்க்கைப் பெற்றிருந்தால் சொந்தமாக வியாபாரம் செய்யக்கூடிய அமைப்பு, சிறந்த வியாபாரியாக செயல்பட்டு வாழ்வில் முன்னுக்கு வரக்கூடியவாய்ப்பு உண்டாகும். இது மட்டுமின்றி கணிதம், கம்ப்யூட்டர், பங்குச் சந்தை போன்ற துறைகளிலும் ஈடுபாடு உண்டாகும். புதன் 10 ல் அமையப் பெற்று குரு சேர்க்கை பெற்றால் சிறந்த அறிவாளியாக விளங்கி, மற்றவர்களை வழி நடத்துவது, ஆலோசனை கூறுவது,தாங்கள் கற்றதை பிறருக்கு கற்றுக் கொடுக்கும் தொழில் போன்றவற்றின் மூலம் சம்பாதிக்கும் வாய்ப்பு அமையும். சனி பகவான் குரு சேர்க்கையுடனிருந்தால் ஏஜென்ஸி, கமிஷன் சார்ந்த வியாபாரம், கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் ஈடுபட்டு, சம்பாதிக்கும் யோகம் உண்டாகும்.

சனி பகவான் செவ்வாய் சேர்க்கையுடனிருந்தால் கூட்டுத் தொழில் செய்யும் அமைப்பு, பூமி, மனை போன்றவற்றால் சம்பாதிக்கும் வாய்ப்பு, அதிலும் சுக்கிரனுடன் இருந்தால் கட்டிடங்களை கட்டி விற்கும் துறை, கட்டிட வல்லுநராகவிளங்கக்கூடிய வாய்ப்பு உண்டாகும். சனி, செவ்வாய் இணைந்து உடன் சந்திரன் அல்லது  ராகு இருந்தாலும் அல்லது ரிஷப லக்னத்திற்கு 9,12 ல் ராகு பகவான் அமையப் பெற்றாலும் வெளியூர், வெளிநாட்டு தொடர்புடைய தொழில், கடல் கடந்துஅயல்நாடுகளுக்குச் சென்று சம்பாதிக்கும் வாய்ப்பு உண்டாகும். சனி பகவான் ராகு சேர்க்கை பெற்று சாதகமான ஸ்தானங்களில் அமையப் பெற்றால், எதிர்பாராத திடீர் யோகங்கள் அதிலும் குறிப்பாக பல்வேறு மறைமுகத் தொழில்களில்  ஈடுபட்டு கோடி கோடியாக சம்பாதிக்கும் யோகம் உண்டாகும். அதுவே பலஹீனமாக அமைந்து விட்டால் ஒரு நிலையான வருமானம் இல்லாமல் கஷ்டப்பட வேண்டியிருக்கும். அடிமையாக வேலை செய்யக்கூடிய அனுகூலமற்ற சூழ்நிலை உண்டாகும்.

பத்தாம் அதிபதி சனி பகவானுக்கு சூரியன், செவ்வாய் போன்றோர் பகை கிரகங்கள் என்பதனால் அரசுத்துறை யில் சம்பாதிக்கக்கூடிய வாய்ப்புகள் குறைவாகவே இருக்கும். கும்பராசியில் (10 ம் வீடு) அமையும் சூரியன்,  செவ்வாய், ராகுவின் நட்சத்திரமான சதயத்தில் அமைந்து விடாமல்  செவ்வாயின் நட்சத்திரமான அவிட்டத்திலோ, குருவின் நட்சத்திரமான பூராட்டத்திலோ அமைந்து இருந்தால் அரசு, அரசு சார்ந்த துறைகளில் பணிபுரியக்கூடிய அமைப்பு, அதிலும் குருபார்வையுடன் அமைந்து இருந்தால் உயர் பதவிகள், அரசு துறையில் பதவி வகிக்கும் யோகம் உண்டாகும். சூரியன்,செவ்வாய், சனியுடன் சேர்க்கை பெற்று கேந்திர திரிகோண ஸ்தானங்களில் இருந்தாலும் அரசு வழியில் நல்ல பணியினை அடைய முடியும். சூரியன், செவ்வாய் பலம் பெற்று உடன் சந்திரனோ, ராகுவோ இருந்தால் மருத்துவத்துறையில் சாதிக்கும் வாய்ப்பு உண்டாகும்.

மிதுனம் லக்னமும் தொழில் அமைப்பும்
மிதுன லக்னத்தில் பிறந்தவர்களுக்கு ஜீவன ஸ்தானாதிபதி குரு பகவானாவார். குரு பகவான் ஆட்சி பெற்று வலுப்பெற்றால் செல்வம், செல்வாக்கு, உயர் பதவிகளை வகிக்க்கூடிய யோகம் மற்றும் மற்றவர்களை வழி நடத்துவதிலும் ஆலோசனைகூறுவதிலும் கைதேர்ந்தவர்களாக விளங்கக்கூடிய அமைப்பும் உண்டாகும். வங்கியில் பணிபுரியும் அமைப்பு, மக்களுக்கு சேவை செய்யக்கூடிய இடங்களில் பணிபுரியக்கூடிய வாய்ப்பு உண்டாகும். தனக்காரகன் குரு என்றாலும் மிதுன லக்னத்திற்கு குரு பாதகாதிபதி என்பதால் கொடுக்கல், வாங்கல் விஷயத்தில்கவனத்துடன் இருப்பது நல்லது.

இது மட்டுமின்றி கூட்டுத் தொழிலில் ஈடுபடாமல் தனித்து செயல்பட்டால்தான் லாபத்தை பெற முடியும். 10ம் அதிபதி குரு பகவான், சூரியன், செவ்வாய் சேர்க்கைப் பெற்றாலும் 10ல் சூரியன். செவ்வாய் அமையப் பெற்று திக் பலம் பெற்றாலும் அரசு, அரசு சார்ந்த துறைகளில் கௌரவமானப் பதவிக¬ள் வகிக்கக்கூடியயோகம், சிறந்த நிர்வாகியாக விளங்கி பலரை வழி நடத்தும் அமைப்பு உண்டாகும். சனி பகவானும் பலம் பெற்றிருந்தால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உயர் பதவிகளை வகிக்கும் உன்னத அமைப்பு உண்டாகும். 10ல் அமையக்கூடிய சூரியன்,செவ்வாயுடன் புதன் சேர்க்கைப் பெற்றால் பொறியியல் துறைகளில் பணிபுரியும் வாய்ப்பு கம்ப்யூட்டர் துறைகளில் சிறந்து விளங்கக்கூடிய அமைப்பு உண்டாகும்.

குரு பகவான் செவ்வாய் சேர்க்கை பெற்று பலமாக இருந்தால் பூமி மனை, ரியல் எஸ்டேட் துறைகளில் அனுகூலங்கள் உண்டாகி சம்பாதிக்கும் வாய்ப்பு உண்டாகும். அதிகாரமிக்க பதவிகளை அடையும் வாய்ப்பும் உண்டாகும். குரு சந்திரனுடன்சேர்க்கைப் பெற்றால் ஏஜென்ஸி, கமிஷன், உணவு வகைகள், ஜல தொடர்புடைய தொழில்களில் பணிபுரியும் வாய்ப்பு ஏற்படும். குருவுடன் சந்திரன் இணைந்து உடன் புதன் அல்லது செவ்வாய் இருந்தால் கடல் சார்ந்த துறைகளில் பணிபுரியும் வாய்ப்பு,உணவகம் நடத்தும் வாய்ப்பு அமையும்.

குரு பகவான் புதனுடன் சேர்க்கை பெற்று பலமாக இருந்தால் சிறந்த அறிவாற்றலுடன் பள்ளி, கல்லூரிகளில் பணிபுரியக்கூடிய வாய்ப்பு, மற்றவர்களை வழி நடத்தக்கூடிய உன்னத திறன்,வழக்கறிஞராகக் கூடிய அமைப்பு, பத்திரிகை துறை, எழுத்துத் துறைகளில் பணியாற்றும் வாய்ப்பு உண்டாகும்.

குரு சுக்கிரனுடன் சேர்க்கை பெற்று 10ல் இருந்தால் ஆடை,ஆபரணத்தொழில்கள், கலை சம்பந்தப்பட்ட பொருட்களை வியாபாரம் செய்வது, பெண்கள்  உபயோகிக்கக்கூடிய பொருட்கள் விற்பனை போன்றவற்றின் மூலம் சம்பாதிக்கக்கூடிய வாய்ப்புஉண்டாகும். குரு சுக்கிரனுடன் சனியும் சேர்க்கை பெற்றால் வண்டி, வாகனங்கள், டிராவல்ஸ் தொடர்புடைய தொழில்,வெளியூர்,  வெளிநாட்டு தொடர்புடைய தொழில்களால் அனுகூலங்கள் உண்டாகும். குரு சுக்கிரனுடன் புதன் அல்லதுசந்திரனும் சேர்க்கைப் பெற்றால் கலைத்துறை, சினிமாத்துறை,சினிமா சார்ந்த  உட்பிரிவுத் துறைகளில் பணிபுரியும் வாய்ப்பு,ஒன்றுக்கும் மேற்பட்ட தொழில்கள் செய்து அதன் மூலம் சம்பாதிக்கக்கூடிய வாய்ப்பு உண்டாகும். வீடு, பங்களாக்களை கட்டி விற்பனை செய்யும் வாய்ப்பு உண்டாகும். செவ்வாய், ராகுஅல்லது கேது சேர்க்கைப் பெற்றால் நவீனகரமான பொருட்களை வியாபாரம் செய்வது, தகவல் தொடர்புத்துறை, மருந்து கெமிக்கல்,இராசாயணம் தொடர்புடைய தொழில்களில் சம்பாதிக்கும் வாய்ப்பு உண்டாகும்.

குரு பகவான் பலவீனமாக இருந்து சனி, ராகு போன்ற பாவகிரகங்களின் சேர்க்கை பெற்றால் நிலையான வருமானங்களை அடையக்கூடிய தொழில்கள் அமையாமல் கஷ்ட ஜீவனம் அடைய நேரிடும். சனி ராகு சேர்க்கை 10ம் வீட்டில் அமைந்து சுபர் பார்வையின்றி இருந்தால் சட்ட சிக்கல்கள் நிறைந்த தொழில்கள் மூலம் சம்பாதிக்க நேரிடும்.

கடகம் லக்னமும் தொழில் அமைப்பும்
கடக லக்னத்திற்கு ஜீவனாதிபதி செவ்வாயாவார். ஜீவன ஸ்தானத்திற்கு அதிபதியான செவ்வாய் ஐந்தாம் அதிபதியாகவும் விளங்குகிறார். கேந்திர திரிகோணத்திற்கு அதிபதியான செவ்வாய் லக்னாதிபதி சந்திரனுக்கு நட்புக் கிரகம் என்பதால், இந்தலக்னத்திற்கு மிகச்சிறந்த யோக காரகனாவார். செவ்வாய் நிர்வாக காரகன் என்பதினால், பொதுவாகவே கடக லக்னத்தில் பிறந்தவர்கள் சிறந்த நிர்வாகத் திறமை கொண்டவர்களாகவும் அதிகார குணம் மிக்கவர்களாகவும் இருப்பார்கள். அரசு, அரசுசார்ந்த துறைகளுக்கு காரகனாக சூரியன், கடக லக்னத்திற்கு 10ம் வீடான மேஷத்தில் உச்சம் பெற்று உடன் செவ்வாய் சேர்க்கை பெற்றால் அரசு, அரசு சார்ந்த துறைகளில் உயர் பதவிகளை வகிக்கக்கூடிய யோகம் உண்டாகும்.

சூரியன், செவ்வாய் இணைந்து குரு பார்வைப் பெற்றால் அரசுத் துறையில் சிறந்த நிர்வாகியாக விளங்கும் அமைப்பு, போலீஸ்,ராணுவம், பாதுகாப்புத் துறைகளில் பணிபுரியும் அமைப்பு,பலருக்கு உதவி செய்யும் பண்பு உண்டாகும். சூரியன், செவ்வாய்10 ல் அமையப் பெற்று சனி பகவானும் பலம் பெற்றிருந்தால் மக்களால் தேர்ந்தெடுக்கப்படக்கூடிய உயர் பதவிகளை வகிக்கக்கூடிய யோகம் உண்டாகும். சூரியன், செவ்வாய் உடன் இணைந்து சந்திரன், ராகு அல்லது கேது சேர்க்கையோ, சாரமோ பெற்றால் மருத்துவத்துறையில் அறுவை சிகிச்சை நிபுணராக விளங்கக்கூடிய அமைப்பு உண்டாகும். சூரியன், செவ்வாய், புதன் சேர்க்கைப் பெற்றிருந்தால் கட்டிடப் பொறியாளர் கம்ப்யூட்டர் பொறியாளராக விளங்கக்கூடும்.

செவ்வாய், சந்திரன், ராகு அல்லது கேது சேர்க்கைப் பெற்றால் மருந்து, கெமிக்கல் ரசாயன தொடர்புடையத் துறை, வேளாண்மை,உணவு வகைகள், ஓட்டல் எனவும், மேற்கண்டவற்றுடன் இணைந்து குரு பார்வையும் பெற்றால் அரசுத் துறையில்கௌரவமான பதவிகளை  வகிக்கக்கூடிய யோகம் உண்டாகும். பொதுவாகவே செவ்வாய் தனக்கு நட்பு கிரகங்களான சூரியன்,சந்திரன், குரு போன்றவர்களின் சேர்க்கை பெற்று பலம் பெற்றிருந்தால் செய்யும் தொழில் உத்தியோக ரீதியாகஉயர்வுகளையும், அரசு வழியில் உதவிகளையும் சிறப்பாகப் பெற முடியும்.

செவ்வாய், குரு, புதன் சேர்க்கைப் பெற்று வலுவாக அமையப் பெற்றால் ஒன்றுக்கும் மேற்பட்ட தொழில் செய்யும் யோகம்,வங்கிப் பணிகள், வெளியூர், வெளிநாடு தொடர்புடைய தொழில்,பணம் கொடுக்கல் வாங்கல், பங்குச் சந்தை மற்றும் ஏஜென்ஸி,கமிஷன் போன்றவற்றின் மூலமாக லாபங்கள் உண்டாகும். குரு,புதன் போன்றவர்கள் 10ல் அமையப் பெற்றால் சிறந்த அறிவாளியாக விளங்கி மற்றவர்களை வழி நடத்தக்கூடிய யோகம், பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியர், பேராசிரியர்களாக விளங்கக்கூடிய அமைப்பு உண்டாகும்.

குரு புதனுடன் சனியும் பலம் பெற்றால் வக்கீல் பணி,நீதித்துறையில் பணிபுரியக்கூடிய வாய்ப்பு உண்டாகும். செவ்வாய், சனி இணைந்தோ, பரிவர்த்தனை பெற்றோ அமையப் பெற்றால் கூட்டுத் தொழில் மூலமாக அனுகூலம், கட்டிடக்கலைரியல் எஸ்டேட் போன்றவற்றில் சம்பாதிக்க முடியும். செவ்வாய்,சுக்கிரன் சேர்க்கை பெற்று உடன் சந்திரனும் இருந்தால் கலை,இசை சம்பந்தப்பட்ட துறைகளில் நல்ல வருமானம் அமையும்,

செவ்வாய் சுக்கிரனுடன் புதன் அல்லது சனி சேர்க்கை பெற்றால் சொந்தத் தொழில் செய்யக்கூடிய யோகம், ஒன்றுக்கும் மேற்பட்ட தொழில்களில் வருமானம் ஈட்டக்வடிய அமைப்பு உண்டாகும். செவ்வாய், சனி, ராகு சேர்க்கைப் பெற்று சுபர் பார்வையின்றி இருந்தால் சட்ட சிக்கல்கள் நிறைந்த தொழில் உண்டாகும். 10ம் வீட்டில் சனி நீசம் பெறுவதால் சனி 10ல் அமைந்து உடன் ராகு அல்லது கேதுவின் சேர்க்கைப் பெற்றால் அடிமைத் தொழில்,நிலையான வருமானமற்ற நிலை  ஏற்படும். செவ்வாய் புதனுடன் சேர்க்கை பெற்று பலமாக இருந்தால் கணக்கு, கம்ப்யூட்டர்போன்ற துறைகளில் அனுகூலங்கள், சம்பாதிக்கக்கூடிய வாய்ப்பும், கடக லக்னத்தில் பிறந்தவர்களுக்கு பூமி, மனை மூலமும், உடன் பிறந்தவர்களின் ஒத்துழைப்புடன் சம்பாதிக்கும் யோகமும் உண்டாகும்.

சிம்ம லக்கினமும் தொழில் உத்தியோக அமைப்பும்
சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களுக்கு ஜீவனாதிபதி சுக்கிர பகவானாவார். சுக்கிரன் சுக காரகன் என்பதால் அவர் கேந்திர திரிகோண ஸ்தானங்களில் அமையப் பெற்று தனக்கு நட்பு கிரகங்களான சனி, புதன் போன்றவர்களின் சேர்க்கையுடன், சுபர் பார்வையும் பெற்றிருந்தால் நல்ல நிலையான ஜீவனம் செய்துசம்பாதிக்கக்கூடிய வாய்ப்பு, அதன் மூலம் சுக வாழ்வு, சொகுசு வாழ்வு வாழக்கூடிய யோகம் உண்டாகும். அதிலும் இப்படி சேர்க்கைப் பெற்று பலம் பெற்ற புதன், சனி, சுக்கிரன் போன்ற கிரகங்களின் தசா புக்தி காலங்களில் சிறப்பான வருமானமும்,கூட்டுத் தொழில், சொந்த தொழில் செய்து சம்பாதித்து மிகப் பெரிய அளவில் செல்வந்தராகக்கூடிய  அற்புதமான அமைப்பும் உண்டாகும்.
சிம்ம லக்னத்திற்கு 10ம் அதிபதி சுக்கிரன் கலை காரகன் என்பதாலும், சுக்கிரனே 3ம் வீட்டிற்கு அதிபதியாக இருப்பதாலும் இந்த லக்னத்தில் பிறந்தவர்களுக்கு  கலை, இசை சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஈடுபாடு அதிகம் இருக்கும். சுக்கிரன் பலமாக அமைந்து சுபர் பார்வையுடனிருந்தால் ஆடை, ஆபரணங்கள்,பெண்கள் உபயோகப்படுத்தக்கூடிய பொருட்களைக் கொண்ட தொழிலில சம்பாதிக்க முடியும். சுக்கிரன் தன லாப அதிபதியான புதனின் சேர்க்கை பெற்றிருந்தால் மற்றவர்களை வழி நடத்தும் திறன், அறிவாற்றல், பேச்சாற்றல், எழுத்தாற்றல், கதை, கவிதை எழுதக்கூடிய கற்பனை ஆற்றல், சினிமாத் துறைகளில் உள்ள உட்பிரிவுகளில் பணிபுரியக்கூடிய வாய்ப்பு அமையும். அதிலும்10ல்  புதன் பலம் பெறும் போது சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களுக்கு பத்திரிகைத் துறை, புத்தக பதிப்பு, சொந்தமாக தொழில் செய்து சம்பாதிக்கக்கூடிய வாய்ப்பு உண்டாகும். சுக்கிரன் புதன், குருவுடன் சேர்க்கைப் பெற்றிருந்தால் ஆசிரியர் பணி,மற்றவர்களுக்கு ஆலோசனை வழங்கக்கூடிய பணி, தனது அறிவாற்றலால் முன்னேறும் வாய்ப்பு, பள்ளி கல்லூரிகளில் பணிபுரியக்கூடிய வாய்ப்பு உண்டாகும்.
லக்னாதிபதி சூரியன் 10ம் வீட்டில் பலம் பெற்று செவ்வாய் சேர்க்கைப் பெற்றிருந்தால் நல்ல நிர்வாகத் திறமை, கௌரவமான பதவிகள் தேடி வரக்கூடிய வாய்ப்பு, உயர் பதவிகளை வகிக்கும் யோகம் உண்டாகும். செவ்வாய் பலமாக அமைந்திருந்தால் நல்ல நிர்வாகியாக பணிபுரிந்து எந்தத் துறையில் செயல்பட்டாலும்,அதில் மற்றவர்களை வழி நடத்துவதில் வல்லவராக விளங்கமுடியும். சுக்கிரன், சூரியன், செவ்வாய் சேர்க்கை பெற்றால் அரசு,அரசு சார்ந்த துறைகளில் நல்ல வேலை அமையும். 10 ல் சூரியன்,குரு சேர்க்கை பார்வையுடனிருந்தால் நல்ல வேலை அமைந்து அதன் மூலம் சம்பாதித்து வாழ்வில் முன்னேற்றமடைய முடியும்.
சுக்கிரன் சனி சேர்க்கை பெற்றிருந்தால் கூட்டுத் தொழிலில் சம்பாதிக்கும் அமைப்பு, வண்டி வாகனங்கள் மற்றும் டிராவல்ஸ் மூலம் சம்பாதிக்கும் அமைப்பு உண்டாகும்.  நல்ல வேலையாட்களும் கிடைக்கப்பெற்று அவர்களாலும் முன்னேற்றமான பலன்கள் அமையும்.
சுக்கிரன் சந்திரன் சேர்க்கை பெற்று 9,12 ல் ராகு அமையப் பெற்றால் வெளியூர், வெளிநாடு சம்மந்தமுடைய தொழில்கள் மூலம் முன்னேற்றம் உண்டாகும்.  இதுமட்டுமின்றி சந்திரன் 10ல் உச்சம் பெற்று அமைந்திருந்தால், கடல் சார்ந்த பணிகளில் பணிபுரியும் அமைப்பு, ஜல சம்பந்தப்பட்ட தொழில், உணவு வகைகள் சம்பந்தப்பட்ட தொழில், உணவகம் நடத்தும் வாய்ப்பு உண்டாகும். சுக்கிரன், செவ்வாயுடன் இணைந்து பலமாக அமையப் பெற்றிருந்தால், மனை, பூமி, கட்டிடத்துறை, ரியல் எஸ்டேட் தொடர்புடைய தொடர்புடைய  தொழில்களில் பணிபுரிய நேரிடும். சந்திரன் சேது சேர்க்கை பெற்றால் மருந்து, கெமிக்கல்,ரசாயன தொடர்புடைய தொழிலில் யோகம் உண்டாகும். சுக்கிர பகவான் கேந்திர திரிகோண ஸ்தானங்களில் பலமாக அமையப் பெற்று சனி, புதனுடன் இணைந்திருந்தால் சொந்தத் தொழில் மூலம் சம்பாதிக்கும் யோகம் அமையும்.
அதுவே சுக்கிரன் மறைவு ஸ்தானங்களிலிருந்தாலோ சிம்ம லக்னத்திற்கு பாதக ஸ்தானமான 9ம் வீட்டில் இருந்தாலோ உத்தியோகம் செய்யக்கூடிய வாய்ப்பே அமையும். அதிலும் குறிப்பாக சுக்கிரன் பலமிழந்து சனி, ராகு சேர்க்கை பெற்று பகை வீடுகளில் அமைந்தால் நிலையான ஜீவனம் இல்லாமல அடிமைத் தொழில் செய்யக்கூடிய அமைப்பு, சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபடக்கூடிய சூழ்நிலை உண்டாகும்.

கன்னிலக்கினமும் தொழில் உத்தியோக அமைப்பும்
கன்னி லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 10 ம் அதிபதி புதன் பகவானாவார். லக்னாதிபதி புதன் பகவானே ஜீவனாதிபதியாகவும் இருப்பது மிகவும் அற்புதமான அமைப்பாகும். பொதுவாகவே,கன்னி லக்னத்தில் பிறந்தவர்கள் சிறந்த அறிவாளியாகவும் எதிலும் சிந்தித்து செயல்படுபவர்களாகவும் இருப்பார்கள். கன்னி லக்னத்தில் பிறந்தவர்களுக்கு புதன் ஆட்சி உச்சம் பெற்று தனக்கு நட்பு கிரகங்களான சுக்கிரன், சனி போன்றவர்களின் சேர்க்கை பெற்று, குரு போன்ற சுபகிரகங்களின் பார்வைப் பெற்றால் சமுதாயத்தில் சிறப்பான உயர் நிலையினைஅடைவார்கள். அதிகாரமிக்க பதவிகளை அடையக்கூடிய வாய்ப்பும் உண்டாகும். புதன் வலுப்பெறுவது மட்டுமின்றி உடன் செவ்வாய் சூரியன் சேர்க்கை உண்டானால் அரசு, அரசு சார்ந்த துறைகளில் உயர்வான பதவிகளை அடைய கூடிய யோகம் அமையும். இத்துடன் சனியும் பலம் பெற்று அமைந்து விடுமாயின் மக்களால் தேர்ந்தெடுக்கக்கூடிய உயர் பதவிகள் ஜாதகரைத் தேடி வரும். இது மட்டுமின்றி புதன் கேந்திர திரிகோணங்களில் சூரியன் சேர்க்கை பெற்று சந்திரனும் பலமாகஅமைந்த குரு பார்வை செய்தாலும் அரசு, அரசு சார்ந்த துறைகளில் பணிபுரியக்கூடிய வாய்ப்பும் அதன் மூலம் பொருளாதார மேன்மைகளும் பெற்று வாழ்வில்  உயர்வு உண்டாகும்.

புதன் பகவான் சுக்கிரன், சனி போன்ற நட்பு கிரக சேர்க்கைப் பெற்று வலுவாக அமையப் பெற்றால் சொந்தத்தொழில் செய்யும் யோகம், வியாபாரத்தில் கொடி கட்டி பறக்கும் அற்புத நிலை உண்டாகும். புதனுடன் சுக்கிரன், சந்திரன் சேர்க்கை உண்டாகி 9,12ல் ராகு பகவான் அமையப் பெற்றால் ஜாதகர் கடல் கடந்து வெளிநாடு சென்று சம்பாதிக்கும் வாய்ப்பு உண்டாகும்.

புதனுடன் சந்திரன் அமைந்து சுக்கிரனும் சேர்க்கை பெற்றால்,பயிர் தொழிலில் செய்யக்கூடிய அமைப்பு, புதனுடன் செவ்வாய் சேர்க்கைப் பெற்றால் பூமி, வேளாண்மை, விவசாய தொடர்புடைய பணிகள் அமையும். புதன், சுக்கிரன் சேர்க்கைப் பெற்று வலுப்பெற்றிருந்தால் கலை, இலக்கியம், சங்கீத துறையில் புகழ் பெறும் அமைப்பு உண்டாகும்.
புதன், சுக்கிரன் சேர்க்கை பெற்று, கேந்திர திரிகோணங்களில் அமையப் பெற்று, உடன் குரு பார்வையும் இருந்தால் பெண்கள் வழியிலும், பெண்கள் சம்பந்தப்பட்ட தொழில்களிலும் சம்பாதிக்கக்கூடிய (பெண்கள் உபயோகிக்கும் பொருட்கள் )வாய்ப்பு அமையும். இது மட்டுமின்றி கணிதம், கம்ப்யூட்டர் துறையில் வல்லவராகத் திகழ்வார். புதன் தனித்து பலம் பெற்று குரு போன்ற சுபகிரகங்களின் பார்வை இருந்தால் ஆசிரியர் பணி,பதிப்பகம், பத்திரிகைத் தொழில், புத்தகம் வெளியிடும் பணி,வக்கீல் தொழில், வாக்கால் பேச்சால், முன்னேறக்கூடிய தொழில் போன்றவற்றில் அனுகூலங்கள் உண்டாகும். புதன் தனக்கு நட்பு கிரகங்களான  சுக்கிரன், சனி சேர்க்கை பெறுவதும், சுக்கிரன், சனிவீடுகளில் அமைவதும் கல்விக்கு சம்பந்தமில்லாத துறைகளில் முன்னேற்றத்தை கொடுக்கும்.
சனி, புதன் சேர்க்கை பெற்று வலு இழந்திருந்தால் அடிமைத்தொழில் அமைப்பு, சனி, ராகு அல்லது கேது சேர்க்கை பெற்றிருந்தால் இழிவான வேலைகளைச் செய்யக்கூடிய அமைப்பு உண்டாகும். புதனுக்கு 7ல் சனி, செவ்வாய், ராகு கேது போன்ற பாவிகள் இருந்தால், எவ்வளவு திறமை இருந்தாலும் வாழ்வில் மேன்மை அடைய இடையூறுகள் உண்டாகும். அது போல புதனுக்கு இருபுறமும் பாவிகள் இருந்தாலும் வாழ்வில் முன்னேற்றம் உண்டாக தடை ஏற்படும். கன்னி லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 7ம் இடம் பாதக ஸ்தானம் என்பதால் முடிந்தவரை கூட்டு சேர்ந்து தொழில் செய்வதை தவிர்த்து எதிலும் தனித்து செயல்படுவதும், பிறரை சார்ந்து உத்தியோகம் செய்வதும் நல்லது-.

துலாம் லக்கினமும் தொழில் உத்தியோக அமைப்பும்
துலாம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு ஜீவன ஸ்தானாதிபதி சந்திர பகவானாவார். இவர் ஒரு வீட்டு ஆதிபத்யம் கொண்டவர். சந்திரன் ஆட்சி உச்சம் பெற்று குரு போன்ற சுபகிரக சேர்க்கையுடன், நட்பு கிரக வீடுகளில் அமையப் பெறுவாரேயானால், அந்த ஜாதகருக்கு சமுதாயத்தில் கௌரவத்துடன் வாழக்கூடிய அற்புதமான அமைப்பு, தொழில் ரீதியாக கை நிறைய சம்பாதித்து சுக வாழ்க்கை வாழக்கூடிய யோகம் உண்டாகும்.

 சந்திரன் ஜல காரகன் என்பதால், அவர் துலாம் லக்னத்திற்கு 9,12க்கு அதிபதியாக விளங்கக்கூடிய புதன் பகவானின் சேர்க்கை பெற்று 9 அல்லது 12 ல் அமையப் பெறுவாரேயானால், அந்த ஜாதகர் கடல் கடந்து அந்நிய நாடுகளுக்குச் சென்று தொழில்,உத்தியோகம் செய்து சம்பாதிக்கக்கூடிய வாய்ப்பும், அந்தியநாட்டவர்களால் அனுகூலங்களும் உண்டாகும்.  குரு, சந்ஙதிரன் ஆட்சி உச்சம் பெற்று 10 ம் வீட்டில் பலமாக அமையப் பெற்றிருந்தால் அரசு, அரசு சார்ந்த  பணிகளில் உயர் பதவிகள் வகிக்கக்கூடிய யோகம் உண்டாகும். குரு சந்திரன் பலம் பெற்று சனி, புதன் வீட்டில் இருந்தாலும், துலாம் லக்னத்திற்கு கேந்திரதிரிகோணாதிபதியாகி யோக காரகனாகிய சனி பலம் பெற்று அமைந்திருந்தாலும், அரசாங்க அதிகாரியாகவும், அரசுத் துறையில் பணிபுரிபவராகவும் இருக்கக்கூட வாய்ப்பு உண்டாகும். அதுபோல சந்திரனுக்கு நட்பு கிரகங்களாகிய சூரியனும் குருவும் பலம் பெற்று அமைந்தாலும் அரசுத் துறையில் பணியுரியக்கூடியவாய்ப்பு அமையும். 
துலாம் லக்னத்திற்கு ஜீவன ஸ்தானத்தில் அந்த வீட்டதிபதியான சந்திரன் தனித்து ஆட்சிப் பெற்று பலமாக அமைந்திருந்தால் ஜல சம்பந்தப்பட்ட தொழில், உணவு சம்பந்தப்பட்ட தொழில்,ஹோட்டல் தொழில் போன்றவற்ல் நல்ல லாபம் அமையும். மேலே குறிப்பிட்டது போல சந்திரன் ஜல காரகன் என்பதால்,கடல் சார்ந்த துறைகளில் கூட பணி புரியக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும்.  சூரியன், செவ்வாய் 10ல் பலம் பெறுகின்றபோது அரசு துறைகளில் பணிபுரியும் அமைப்பு, நல்ல நிர்வாகத் திறன்உண்டாகும். குரு 10ல் பலம் பெற்றிருந்தால் சிறந்த ஆலோசகராக விளங்கக்கூடிய வாய்ப்பு, தொழில் ரீதியாக முன்னேற்றம், வாக்கால் பேச்சால் சம்பாதிக்கக்கூடிய யோகம்,வக்கில் பணி, ஆசிரியர் பணி போன்றவை உண்டாகும்.  சுக்கிரன் பலம் பெற்று உடன் சந்திரன் 10ல் அமையப் பெற்றால் கலை,இசை, சினிமாத்துறை போன்றவற்றின் மூலம் சம்பாதிக்கக்கூடிய யோகம் உண்டாகும்.  சந்திரன், செவ்வாய் பலம் பெற்று 10ல் அமையப் பெற்றால் கலை, இசை, சினிமாத்துறை போன்றவற்றின் மூலம் சம்பாதிக்கக்கூடிய யோகம் உண்டாகும்.
சந்திரன், செவ்வாய் பலம் பெற்று 10ல்  அமைந்தால் பூமி, மனை சம்பந்தப்பட்ட தொழிலில் சம்பாதிக்கக்கூடிய வாய்ப்பு உண்டாகும்.
புதன் பலம் பெற்று 10ல் அமைந்து குரு பார்வை இருக்குமேயானால் கணக்கு, கம்ப்யூட்டர், தொழில் மற்றும் வணிக தொடர்புடைய தொழிலில் சம்பாதிக்க முடியும். புதன்,சந்திரன் சேர்க்கை பெற்று 10ல் கேது சந்திரன் சேர்க்கைபெற்றால் மருந்து, கெமிக்கல் தொடர்புடைய தொழில் வருமானம் ஈட்டக்கூடிய வாய்ப்பு உண்டாகும். சந்திரன் ஆட்சி உச்சம் பெற்று சுபர்சேர்க்கையுடன் அமைந்து 10ம் வீட்டிற்கும் குரு பார்வை இருந்தால் நிலையான வருமானம் உண்டாகும். அதுவே சந்திரன் பலமிழந்து சனி 10 ம் வீட்டில் அமைந்தாலும் சனி, ராகு போன்ற பாவகிரகங்கள் 10ம் வீட்டில் அமையப் பெற்றாலும் அடிமைத் தொழில்  செய்யக்கூடிய நிலை, சில சட்டத்திற்கு விரோதமான தொழில்கள் செய்து சம்பாதிக்கக்கூடிய சூழ்நிலை உண்டாகும். சனி பார்வை 10 ம் வீட்டிற்கு இருந்தாலும், சந்திரனுக்கு இருந்தாலும் தொழில்  ரீதியாக நிறைய போரட்டங்களைச் சந்திக்க நேரிடும். குறிப்பாக சந்திரன் தேய்பிறை சந்திரனாகஇருந்து சனி, ராகு போன்ற பாவ கிரகங்களின் சேர்க்கைப் பெற்றால் நிலையான தொழில் என்பது அமையாமல் வாழ்க்கையானது போராட்டகரமாகவே இருக்கும்.

விருச்சிகம் லக்கினமும் தொழில் உத்தியோக அமைப்பும்

விருச்சிக லக்னத்தில் பிறந்தவர்களுக்கு நவகிரகங்களில் முதன்மை கிரகமாக விளங்கக்கூடிய சூரிய பகவான் 10ம் அதிபதியாவார். 10ம் அதிபதி சூரியனானவர் ஒரு வீட்டு அதிபத்யம் கொண்டவர். நவகிரகங்களுக்கெல்லாம் அரசனாகவிளங்கக்கூடிய  சூரிய பகவானை ஜீவன ஸ்தானாதிபதியாக பெற்ற பெருமை விருச்சிக லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மட்டுமே உண்டு.

சூரியன் ஆட்சி உச்சம் பெற்று லக்னாதிபதி செவ்வாயின் சேர்க்கையுடன் குரு பார்வை பெற்றிருந்தாலும், தனக்கு நட்பு கிரகங்களான செவ்வாய், சந்திரன் குரு போன்றவற்றின் வீடுகளில் அமைந்திருந்தாலும் சமுதாயத்தில் கௌரவமான பதவிகளை  வகிக்கக்கூடிய யோகம், அரசு, அரசு சார்ந்த துறைகளில் அதிகாரமிக்க பதவிகளை வகிக்கக்கூடிய வாய்ப்பு சிறப்பாக அமையும். சூரிய பகவான் குரு, செவ்வாய்சேர்க்கையுடன் கேந்திர திரிகோண ஸ்தானங்களில் பலம் பெற்று அமைந்திருந்தாலும் மேற்கூறிய நற்பலன்களை அடைய முடியும். 10ம்  வீட்டில் சுக்கிரன், சந்திரன் இணைந்திருந்தாலும் சூரியன், சுக்கிரன், சந்திரன் போனற் கிரக சேர்க்கைகள் 9,10,12 ம் வீடுகளில் அமையப்பெற்றிருந்தாலும் கடல் கடந்து அந்நியநாடுகளுக்குச் சென்று சம்பாதிக்கக்கூடிய  வாய்ப்பு அமையும்.
சூரியன் சுக்கிரன் சேர்க்கைப் பெற்று 10ல் அமைந்து குரு பார்வை பெற்றால் கூட்டுத் தொழில் முலம் சம்பாதிக்கும் வாய்ப்பு அமையும். சுக்கிரன் 10ல் அமையப் பெற்றால் ஆடை, ஆபரணம்,கலைத்துறை, பெண்கள் உபயோகிக்கும் பொருட்கள்போன்றவற்றால் சம்பாதிக்கும் வாய்ப்பு உண்டாகும்.
சூரியன் , புதன் சேர்க்கையுடன் குரு பார்வை பெற்று 10ல் அமையப் பெற்றால் கணக்கு வழக்கு தொடர்புடைய தொழில்,வணிக  தொழிலில் ஏற்றம் ஏற்படும்.
சூரியன், செவ்வாய் சேர்க்கைப் பெற்று பலம் பெற்றால் நிர்வாகத் தொடர்புடைய தொழில், அதிகார பதவி, பூமி,மனை, ரியல் எஸ்டேட் போன்ற துறைகளில் ஏற்றம் உண்டாகும். சூரியன்,செவ்வாய் பலமாக சேர்க்கை பெறுவதுடன் சனி பகவானும்ஆட்சி உச்சம் பெறுவாரேயானால் மக்களால் தேர்ந்தெடுக்கக்கூடிய உயர் பதவி தேடி வரும். சூரியன், சந்திரன்,செவ்வாய், கேது போன்ற நட்பு கிரக சேர்க்கை பெற்றிருந்தால் மருத்துவத்துறையில் பல சாதனைகள் செய்யக்கூடிய அமைப்புஏற்ஙபடும்.
குரு, புதன் இணைந்து 10ம் வீட்டில் அமையப் பெறுமேயானால் வாக்கால், பேச்சால் சம்பாதிக்கக்கூடிய வாய்ப்பு அமையும். 10 ம் வீட்டில் சந்திரன், ராகு அல்லது சந்திரன் கேது சேர்க்கை பெற்றிருந்தால் மருந்து, கெமிக்கல் போன்ற துறைகளில் சம்பாதிக்கக்கூடிய வாய்ப்பு உண்டாகும்.
விருச்சிக லக்னத்திற்கு ஜீவனாதிபதியாகிய சூரியன் கேந்திர திரிகோணங்களில் அமைந்து சுபர் பார்வையுடனிருந்ஙதால் சமுதாயத்தில் கௌரவமான நிலை, கை நிறையசம்பாதிக்கக்கூடிய யோகம்  உண்டாகும்.
அதுவே 10ம் அதிபதி சூரியன் தனக்கு பகை கிரகங்களான சனி,ராகு சேர்க்கைப் பெற்றால் சட்டத்திற்கு புறம்பான தொழில் செய்யும் அமைப்பு, அதிலும் சுபர் பார்வையின்றி இருந்து விட்டால் சட்டத்திற்கு விரோதமான வகையில் சம்பாதிக்கக்கூடிய சூழ்நிலை உண்டாகும். சனி, ராகு சேர்க்கையுடன் சூரியன் 8,12ஆகிய மறைவு ஸ்தானங்களில் அமைந்தாலும் ஜாதகருக்கு நிலையான வருமானமில்லாமல் கஷ்ட ஜீவனம் நடத்தக்கூடிய சூழ்நிலை உண்டாகும்.

தனுசுலக்கினமும் தொழில் உத்தியோக அமைப்பும்

தனுசு லக்னத்தில் பிறந்தவர்களுக்கு புதன் 10ம் அதிபதியாவார். பொதுவாகவே ஒருவர் ஜாதகத்தில் புதன் ஆட்சி உச்சம் பெற்று சுபர் பார்வையுடன் பலமாக அமைந்திருந்தால் அவருக்கு நல்ல அறிவாற்றல், நினைவாற்றல், எதிலும் சிந்தித்து  செயல்படக்கூடிய திறன்போன்ற யாவும் சிறப்பாக இருக்கும். புதனேஜீவனாதிபதியாக விளங்குவதால் அவர் பலம் பெற்றிருந்தால் செய்யும் தொழில், உத்தியோக ரீதியாக சிறப்பான உயர்வினை அடைய முடியும். புதன் பகவான் தனக்கு நட்பு கிரகமான சுக்கிரன், சனி சேர்க்கையுடன் லக்னாதிபதி குருவின் பார்வையும் பெற்று அமைவாரேயானால் அவருக்கு நிலையான தொழிலும்,சமுதாயத்தில் ஓர் உன்னதமான நிலையும் உண்டாகும். புதன் பலம் பெற்று சூரியன், செவ்வாய் 10 ல் அமையப் பெற்றால் அரசு,அரசு சார்ந்த துறைகளில் உயர் பதவிகளை வகித்து சிறப்பான வருமானத்தை ஈட்ட முடியும். மக்கள் செல்வாக்கு  காரகன் எனவர்ணிக்கக்கூடிய  சனி வலிமை பெற்று, 10 ல் சூரியன் செவ்வாய் இருந்தால் அரசாங்கத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கக்கூடிய கௌரவமானப் பதவிகள் தேடி வரும். அதிகாரமிக்க பதவிகள் அமையும். மக்களிடம் செல்வம், செல்வாக்கு உயரும். 10ல் சூரியன் செவ்வாய் இருந்தாலும் புதன் சூரியன், செவ்வாய்சேர்க்கை பெற்றாலும் அரசு, அரசு சார்ந்த துறைகளில் பணிபுரியக்கூடிய வாய்ப்பு உண்டாகும்.
புதனுடன் 9,12 க்கு அதிபதிகளான சூரியன், செவ்வாய் இணைந்து9,12 ல் சந்திரன், ராகு போன்ற கிரகங்கள் அமையப் பெற்றால்,கடல் கடந்து அந்நிய நாடுகளுக்குச் சென்று சம்பாதிக்கக்கூடிய அற்புத அமைப்பு உண்டாகும். அதுபோல புதன் பலம் பெற்று உடன் சனி, சுக்கிரன் சேர்க்கையுடன் வலிமையாக அமையப்பெற்றால், சொந்தத் தொழில் செய்யக்கூடிய யோகம்,வியாபாரத்தில் லட்ச லட்சமாக சம்பாதித்து கொடி கட்டி பறக்கும் யோகம் உண்டாகும்.
புதன், செவ்வாய் சேர்க்கை பெற்றால் பூமி, வேளாண்மை,விவசாய தொடர்புடைய தொழில், பாதுகாப்பு சம்பந்தப்பட்ட துறைகளில் பணிபுரியக்கூடிய வாய்ப்பு உண்டாகும். 10ல்  புதன் சந்திரன் சேர்க்கை பெற்று  பலம் பெற்றால் ஜல தொடர்புடைய தொழில் செய்யக்கூடும்.
புதனுடன் சனி சேர்க்கைப் பெற்றால் இரும்பு சம்பந்தப்பட்ட தொழில் செய்யக்கூடிய வாய்ப்பும், சனி பலமிழந்திருந்தால் அடிமைத் தொழில் செய்யக்கூடிய சூழ்நிலையும் உண்டாகும். புதன், குரு சேர்க்கை பெற்றால் வக்கீல் தொழிலில் அரசாங்க ஜீவனம் உண்டாகும். புதன் சுக்கிரன் சேர்க்கை பெற்று கேந்திர திரிகோணங்களில் அமையப் பெற்று குரு பார்த்தால் பெண்கள்வழியில் முன்னேற்றம், நல்ல தன லாபத்தை அடையக்கூடிய வாய்ப்பு உண்டாகும. புதன், சுக்கிரன், சந்திரன் இணைந்து ரிஷபம்,கடகம், துலாமில் அமையப் பெற்றால் கலை, இசை,இலக்கியத்துறைகளில் புகழ்பெறக்கூடிய வாய்ப்பு உண்டாகும். 
புதன் அதிபலம் பெற்றால் கம்ப்யூட்டர், கணிதம், வங்கிப் பணி,பங்குச் சந்தை போன்றவற்றில் அனுகூலமும்,  குரு போன்ற சுபர் பார்வை பெற்றால் நூல் ஆசிரியர், பதிப்பகம், பத்திரிகைத் துறை,புத்தக வெளியீடு, ஆசிரியர் பணி போன்ற துறைகளில் புகழ் பெறக்கூடிய யோகமும் அமையும். ஆகவே, புதன் பகவான்பலமிழந்தாலும் பாவிகளுக்கிடையே அமையப் பெற்றாலும்,புதனுக்கு 7ல் சனி, செவ்வாய், ராகு, கேது போன்ற பாவிகள் இருந்தாலும் வாழ்வில் மேன்மையடைய இடையூறுகள் உண்டாகும். ராகு, கேது போன்ற பாவிகளின் சேர்க்கைப் பெற்றால் சட்டத்திற்கு புறம்பான தொழிலில் ஈடுபடக்கூடிய அவலநிலை ஏற்படும்.
தனுசு லக்னம் உபய லக்னம் என்பதாலும், புதன் 10ம் அதிபதி மட்டுமின்றி 7ம் அதிபதியாகவும் இருப்பதாலும், உபய லக்னத்திற்கு 7ம் அதிபதி பாதகாதிபதி என்பதாலும்,திரிகோணங்களில் அமைந்தால் மட்டும் கூட்டால் நற்பலனைபெறமுடியும். தனுசு லக்னத்திற்கு 7ம் இடம் பாதக ஸ்தானம் என்பதால், கூட்டுத் தொழில் செசய்வதைத் தவிர்த்து, எதிலும் தனித்து செயல்படுவது, உத்தியோகம் செய்வது உத்தமம்.

மகரம்லக்கினமும் தொழில் உத்தியோக அமைப்பும்
மகர லக்னததில் பிறந்தவர்களுக்கு ஜீவன ஸ்தானாதிபதி சுக்கிரனாவார். 10ம் வீட்டிற்கு  அதிபதியான சுக்கிரபகவானே 5ம் வீட்டிற்கும் அதிபதியாகி, லக்னாதிபதி சனிக்கும் நட்பு கிரகமாக விளங்குவது அற்புதமான அமைப்பாகும்.  10ம் அதிபதி சுக்கிரன் தனக்கு நட்பு கிரகங்களான புதன், சனி சேர்க்கை பெற்று உடன் ராகும் இணைந்து இருந்தால் ஜாதகருக்கு செல்வம், செல்வாக்கு,தொழில் ரீதியாக உயர்வுகள், பெயர், புகழ் போன்ற யாவும் சிறப்பாக அமைந்து சுகவாழ்க்கை வாழக்கூடிய யோகம் உண்டாகும். சனி, புதன், சுக்கிரன் சேர்க்கையோ, சுக்கிரன், புதன் இணைந்து குரு பார்வையோ அமைந்து சுக்கிரன், புதன், சனி போன்றவற்றில் ஏதாவது ஒரு  கிரகத்தின் திசை நடந்தால்,ஜாதகர் சொந்தமாக தொழில் செய்து, மிகச் சிறந்த செல்வந்தராக வாழக்கூடிய யோகம் உண்டாகும். பொருளாதார ரீதியாக உயர்வும், சமுதாயத்தில் ஓர் கௌரவமான நிலையும் கிட்டும். அரசு, அரசு சம்பந்தப்பட்ட துறைகளுக்கு காரகனான சூரியன் மகரலக்னத்திற்கு 10ம் வீடான துலாமில் நீசம் பெறுவதால் இந்த லக்னத்தில் பிறந்தவர்களுக்கு அரசுத் துறையைவிட தனியார் துறைகளிலும், சுய தொழில்களிலும் சம்பாதிக்க கூடிய வாய்ப்பே அதிகமாக இருக்கும். 10ல் சூரியன் நீசம் பெற்றாலும் உடன் சுக்கிரன் ஆட்சிப் பெற்று அமைந்து நீசபங்க ராஜயோகம்உண்டானால் அரசு சம்பந்தப்பட்ட துறைகளில் ஓரளவுக்கு அனுகூலத்தை அடைய முடியும். சூரியன், செவ்வாய் சேர்க்கைப் பெற்று உடன் சுக்கிரனும் 10ல் இருந்தால் அரசு பணி அமையக்கூடிய வாய்ப்புகள் அமையும். சனி புதன், சுக்கிரன்,சேர்க்கை பெற்று 10 ல் அமைந்தால் ஒன்றுக்கும் மேற்பட்டதொழில்கள் செய்து அபரிமிதமான செல்வ சேர்க்கையினை பெறக்கூடிய அமைப்பு உண்டாகும். சந்திரன், சுக்கிரன் சேர்க்கைப் பெற்றால் கூட்டுத் தொழில், கலை, இசை போன்றவற்றின் மூலமாக அனுகூலங்கள், சுக்கிரன் சந்திரனுடன், புதனும் குருவும் சேர்க்கை பெற்றால் வெளியூர், வெளிநாடுகள் மூலம் தொழில்செய்யக்கூடிய வாய்ப்பு, சுக்கிரன, புதன் சேர்க்கைப் பெற்றால் கணக்கு, கம்ப்யூட்டர் சம்பந்தப்பட்ட துறை, எழுத்துத் துறை போன்றவற்றில் சம்பாதிக்கும் யோகம், சுக்கிரன் குரு சேர்க்கைப் பெற்றால் மற்றவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கக்கூடிய துறைகளில் உயர்வான அந்தஸ்து அமையும். சுக்கிரன் வலுவாக அமையப் பெற்றால் ஆடை, ஆபரணங்கள், பெண்கள் உபயோகப்படுத்தும் பொருட்கள் போன்றவற்றின் மூலம் சம்பாதிக்கக்கூடிய  வாய்ப்பு உண்டாகும். மகர லக்னத்திற்கு 10ல் மக்கள் செல்வாக்கு காரகனாகிய சனி பகவான் உச்சம்பெறுவதால்  ஒருவரின் ஜாதகத்தில் சனி உச்சம் பெற்று சூரியனும், செவ்வாயும் பலமாக அமைந்திருந்தால் மக்களால் தேர்ந்தெடுக்கக்கூடிய உயர் பதவிகள் தேடி வரும். சந்திரன், செவ்வாய், சூரியன் சேர்க்கை பெற்று 10ல் இருந்தால்மருத்துவத்துறையில் சாதனை செய்ய முடியும். சந்திரன், ராகு சேர்க்கைப் பெற்றிருந்தால் மருந்து, கெமிக்கல் துறையில் வல்லுனராக முடியும். 10ம் வீட்டில் குரு, புதன் இணைந்திருந்தால் வாக்கல், பேச்சால் சம்பாதிக்கும் யோகம், ஆசிரியர் பணி, வக்கீல் தொழில் அமையும்.
அதுவே, சுக்கிரன் வலு இழந்து சனி, ராகு சேர்க்கை பெற்று சுபர் பார்வையின்றியிருந்தால் சட்டத்திற்குப் புறம்பான செயல்களில் சம்பாதிக்கக்கூடிய சூழ்நிலை, சுக்கிரன், பலமிழந்து செவ்வாய் ராகு, கேது சேர்க்கை பெற்றால் அடிமைத் தொழில் செய்யும் நிலை, சுக்கிரன் பலமிழந்து சனி, செவ்வாய், ராகு, கேது சேர்க்கைப் பெற்றால் தவறான பழக்க வழக்கங்களுக்கு ஆளாகி பொய் சொல்லக்கூடிய சூழ்நிலையால் தொழிலில் நிறைய இழப்புகளை சந்திக்க நேரிடும். 10ல் பாவிகள் அமையப் பெற்று சுபர் பார்வையின்றி இருந்தால் பொய் பித்தலாட்டம் செய்துசம்பாதிக்கக்கூடிய அவல நிலை உண்டாகும்.

கும்பம்லக்கினமும் தொழில் உத்தியோக அமைப்பும்

கும்ப லக்னத்திற்கு ஜீவன ஸ்தானாதிபதி செவ்வாயாவார். செவ்வாய் பகவான் ஆட்சி உச்சம் பெற்று குரு போன்ற சுப கிரகங்களில் பார்வை பெற்றால் சமுதாயத்தில் ஓர் கௌரவமான நிலையினை அடையக்கூடிய யோகம் உண்டாகும். நவகிரகங்களில் நிர்வாகத்திற்கு காரகனான செவ்வாய் சிறந்த நிர்வாகத் திறமைக்கும, போலீஸ் இராணுவம் பாதுகாப்பு போன்ற துறைகளில் உயர் பதவிகள் வகிப்பதற்கும் காரண காத்தாவாக விளங்குகிறார். செவ்வயர் பலமாக அமைந்து சூரியன் சேர்க்கை பெற்று சுபர் பார்வையுடன் அமையப் பெற்றால் அரசு, அரசு சம்பந்தப்பட்ட துறைகளில் உயர் பதவிகளை வகிக்கும் யோகம்,உடன் குருவும் சேர்க்கை பெற்றால் அரசாங்க அதிகாரியாகும் யோகம், பலரை வழி நடத்திச் செல்லக்கூடிய  அமைப்பு உண்டாகும். குறிப்பாக செவ்வாய், சூரியன், குரு சந்திரன் போன்ற நட்பு கிரகங்களின் சேர்க்கை பெற்று பலமாக இருந்தால் சமுதாயத்தில் மற்றவரால் மதிக்கப்படக்கூடிய அளவில் பதவிகளை வகிக்கும் யோகம் உண்டாகும்.
  செவ்வாய், சூரியன் சேர்க்கைப் பெற்று உடன் சந்திரன் ராகுவும் அமையப் பெற்றால் மருத்துவத்துறையில் சாதனை செய்யக்கூடிய அமைப்பு, சிறந்த அறுவை சிகிச்சை நிபுணராக விளங்கக்கூடிய வாய்ப்பு உண்டாகும். செவ்வாய், சந்திரன், ராகு அல்லது கேது சேர்க்கை பெற்றிருந்தால் மருந்து கெமிக்கல்,இராசாயனம் தொடர்புடைய துறைகளிலும், வெளியூர், வெளிநாட்டு தொடர்புடைய தொழில்களிலும் சம்பாதிக்கும் யோகத்தை கொடுக்கும்.
செவ்வாய் பலமாக அமைந்தவர்களுக்கு இயற்கையிலேயே அதிகாரமிக்க குணம் இருக்கும் என்பதால் செவ்வாய், சந்திரன்,குரு சேர்க்கை பெற்றிருந்தாலும், ஒருவருக்கொருவர் கேந்திர திரிகோணங்களில் அமையப்பெற்றாலும் அதிகாரமிக்க உயர்பதவிகளை வகிக்கக்கூடிய அற்புத யோகம் உண்டாகும்.
செவ்வாய், சூரியன், புதன் சேர்க்கைப் பெற்றிருந்தால் சிறந்த பொறியாளராகும் யோகம், கம்ப்யூட்டர் துறைகளில் சாதனை செய்யக்கூடிய திறன் உண்டாகும். செவ்வாய், சுக்கிரன் சேர்க்கை பெற்று கேந்திர திரிகோணங்களில் பலமாக அமையப் பெற்றால் கலை, வியாபாரம், சொந்தத் தொழில் மூலம் சம்பாதிக்கும் யோகமும், செவ்வாய் சுக்கிரனுடன், சந்திரன் சேர்க்கை பெற்றால் வெளியூர் வெளிநாடுகளில் மூலம் சம்பாதிக்கக்கூடிய வாய்ப்பும், 10 ல்  குரு அமைந்து உடன் புதன் சேர்க்கையும் ஏற்படுமேயானால் மற்றவர்களுக்கு உபதேசம் செய்யும் வாய்ப்பு, பள்ளி,கல்லூரிகளில் பணி புரியும் வாய்ப்பு உண்டாகும்.
அதுவே செவ்வாய், ராகு, கேது போன்ற பாவிகள் சேர்க்கை பெற்று சுபர் பார்வையின்றி இருந்தாலும், செவ்வாய் பலமிழந்திருந்தாலும் சனி பார்வை 10ம் வீட்டிற்கு இருந்தாலும் வாழ்வில் ஒரு நிலையான தொழில் இல்லாமல் எதிலும்எதிர்நீச்சல் போட்டே முன்னேற வேண்டி இருக்கும். 10ல் ராகு அமைந்து உடன் சனி இருந்து சுபர் பார்வையின்றி இருந்தால் சட்டத்திற்குப் புறம்பான தொழில் செய்து சம்பாதிக்க வேண்டியிருக்கும்.

மீனம்லக்கினமும் தொழில் உத்தியோக அமைப்பும்
மீன லக்னத்தில் பிறந்தவர்களுக்கு லக்னாதிபதி குரு பகவானே பத்தாம் அதிபதியாகவும் இருப்பது சிறப்பாகும். 10ம் அதிபதி குரு பகவான் ஆட்சி உச்சம் பெற்று பலமாக அமைந்து விட்டால் செல்வம், செல்வாக்கு, சமுதாயத்தில் கௌரவமான பதவியினை அடையும் யோகம் உண்டாகும். அது மட்டுமின்றி மற்றவர்களுக்கு ஆலோசனை கூறுவதில் வல்லவராகவும் வழி நடத்துவதில் கைதேர்ந்தவர்களாகவும் இருப்பார்கள். பேச்சால்,வாக்கால் சம்பாதிக்கும் யோகம், ஆசிரியர் பணி, கல்வி நிறுவனங்களில் பணபுரியக்கூடிய வாய்ப்பு, வங்கிப் பணி போன்றவை சிறப்பாக அமையும். 10ல் குரு, புதன் சேர்க்கை பெற்றாலும் மேற்கூறிய பலன்களே உண்டாகும்.

10ம் அதிபதி குரு பகவான் தனக்கு நட்பு கிரகங்களான சூரியன்,செவ்வாய் சேர்க்கை பெற்றாலும் 10ல் சூரியன், செவ்வாய் திக் பலம் பெற்று அமைந்திருந்தாலும் அதிகாரமிக்க பதவிகளை அடையும் வாய்ப்பு, அரசு அரசு சார்ந்த துறைகளில் பணிபுரியக்கூடிய வாய்ப்பு உண்டாகும்.  அதுபோல சூரியன்,செவ்வாய் சேர்க்கை பெற்று கேந்திர திரிகோண ஸ்தானங்களில் அமையப் பெற்றால் கௌரவமான பதவிகள் தேடி வரும். குரு,சனி, செவ்வாய் சேர்க்கை பெற்றிருந்தாலும் குரு, சனி, செவ்வாய் சேர்க்கை பெற்றிருந்தாலும் குரு, சனி, சந்திரன் சேர்க்கை பெற்றிருந்தாலும் பிறந்த ஊரை, விட வெளியூர், வெளிநாடுகள் மூலம் அனுகூலங்கள், பயணங்கள் மூலம் சம்பாதிக்கக்கூடிய யோகம் உண்டாகும்.

குரு, சந்திரன், கேது சேர்க்கை பெற்று 10 ல் இருந்தாலும் திரிகோண ஸ்தானங்களில் இருந்தாலும் சமூக நலப் பணிகளில் ஈடுபாடு, மற்றவர்களுக்கு உதவி செய்யக்கூடிய பணிகள் செய்யும் அமைப்பு, ஆன்மீக, தெய்வீக காரியங்களில் ஈடுபட்டு பணிபுரியும் வாய்ப்பு உண்டாகும்.

மக்கள் தொடர்புக்கு காரகனான சனி பகவான் 10ல் அமையப் பெற்று குரு, சூரியனும் பலம் பெற்றால் மக்களால் தேர்ந்தெடுக்கப்படக்கூடிய அளவிற்கு உயர்ந்த பதவிகளை அடைய முடியும். இது மட்டுமின்றி சொந்த தொழில் செய்யக் கூடிய  வாய்ப்பு, இரும்பு, விவசாயம், எண்ணெய், தொடர்புடைய தொழில், பல வேலையாட்களை வைத்து வேலை வாங்கக்கூடிய வாய்ப்பு உண்டாகும்.

சூரியன் 10ல் அமைந்தால் அரசு சார்ந்த துறைகளிலும், செவ்வாய்10 ல் அமைந்தால் நிர்வாகத் தொடர்புடையத் துறைகளிலும் மற்றும் பூமி, மனை, ரியல் எஸ்டேட், போன்றவற்றிலும் சம்பாதிக்கும் வாய்ப்பு உண்டாகும். சுக்கிரன் 10ல் அமைந்தால் குருவுக்கு சுக்ஙகிரன் பகை கிரகம் என்றாலும் ஆடை, ஆபரணம்,கலை, இசை துறைகளிலும், பெண்கள் உபயோகிக்கக்வடிய பொருட்கள், டிராவல்ஸ் போன்றவற்றின் மூலமாகவும் சம்பாதிக்கும் வாய்ப்பு அமையும்.  ராகு 10ல் இருந்தால் மருந்து,கெமிக்கல் தொடர்புடையவற்றிலும்  10 ல் சந்திரனுடன் ராகுஅல்லது கேது சேர்க்கைப் பெற்றிருந்தால் மருத்துவத் துறையிலும் முன்ன«ற்றம் கொடுக்கும். 10 ல் புதன் அமைந்தால் கணக்கு, கம்ப்யூட்டர் தொடர்புடைய துறைகளிலும் சம்பாதிக்கும் யோகம் உண்டாகும்.

10 ல் புதன் அமைந்தால் புதன் 7ம் அதிபதி என்பதால் நெருங்கியவர்களுடன் கூட்டு சேர்ந்து தொழில் செய்வது அல்லது உத்தியோகம் செய்வது நல்லது. குறிப்பாக மீன லக்னம் உபய லக்னம் என்பதால் கூட்டுத் தொழில் செய்வதைத் தவிர்ப்பது நல்லது. அப்படியே செய்ய வேண்டியிருந்தாலும் மேலே கூறியது போல மனைவி மற்றும் மிக நெருங்கியவர்களுடன் கூட்டு சேர்ந்து தொழில் செய்வது உத்தமம். அதுவே, குரு பகவான் பகை நீசம் பெற்று பாவ கிரக சேர்க்கையுடன் பலமிழந்திருந்தாலும்,அஸ்தங்கம் பெற்றிருந்தாலும், 6,8,12 ல் மறைந்திருந்தாலும் நிலையான வருமானம் இல்லாமல் கஷ்ட ஜீவனம் செய்யவேண்டியிருக்கும். அதிலும் குறிப்பாக 10ம் வீட்டையோ 10ம் அதிபதி குருவையோ சனி பார்வை செய்தால் தகுதிக்கு குறைவான வேலை கிடைக்கப் பெற்று வாழ்க்கையில் பல சிரமங்களை எதிர்கொள்ள நேரிடும்.

நன்றி ; விக்ரம்

Monday, 27 July 2020

விதுரர் நீதி

#வாழ்க்கைக்கு #வழி #காட்டும் #விதுர #நீதி !
விதுர_நீதி
@@@@@@

ஒன்று வந்தால் மற்றொன்று போய்விடுமாம்…!!
@@@@@@@@@@@@@@

எது வந்தால் எது போகும்?
####################

1. முதுமை வந்தால் அழகு போகும்.
2. பொறாமை வந்தால் தர்ம மார்க்கம் போய்விடும்.
3. கோபம் வந்தால் செல்வம் போய்விடும்.
4. பேராசை வந்தால் தைரியம் போய்விடும்.
5. கெட்டவர்கள் சவகாசம் வந்தால் நமது ஒழுக்கம் போகும்

1. முதுமை வந்தால் அழகு போகும்.
இளமையில் இருக்கும் உடல் அழகு முதுமை வந்து விட்டால் போய்விடும்.. இது இயற்கை..
ஆனால் ....இயற்கை அல்லாது ..நம்மிடையே…

2. பொறாமை வந்தால் தர்ம மார்க்கம் போய்விடும்.
நமக்கு அடுத்தவரைப் பார்த்து பொறாமை வராதவரை நாம் தர்ம மார்கத்தில் இருப்போம்.எப்போது பொறாமை வருகிறதோ , உடனே நாமும் அவர் போல் இருக்க வேண்டும் என ஆசைப்படுவோம். அவ்வாறு இருக்க குறுக்கு வழிகளை உபயோகிப்போம் . எனவே பொறாமை தர்ம மார்க்கத்தைப் பறித்து விடும்.

3. கோபம் வந்தால் செல்வம் போய்விடும்.
விசுவா மித்திரருக்கு அவரது தவ வலிமையே செல்வமாகும்.அவருக்கு கோபம் வந்தவுடன் எவ்வாறு அவர் தவவலிமை குறைந்து விட்டதோ, அது போல நமக்கு கோபம் வந்தால் நம்மிடம் உள்ள செல்வம் சென்று விடும்.

4. பேராசை வந்தால் தைரியம் போய்விடும்.
நம்மிடம் அளவுக்கு அதிக பணமோ பொருளோ நகையோ இருந்து, அதன் மீது ஆசையும் இருந்தால், பகைவரோ பங்காளியோ, கள்வரோ, அரசோ ( அரசு என்றால் வரியாக சொத்துக் குவிப்பாக) அபகரித்து விடுவார்களோ என்ற எண்ணம் வரும். அந்த எண்ணமே நமது தைரியத்தை பறித்துவிடும்.

5. கெட்டவர்கள் சவகாசம் வந்தால் நமது ஒழுக்கம் போகும்.
சுய லாபத்திற்காக ஒரு கெட்டவனுக்கு தொண்டு புரிந்தால் நமது ஒழுக்கம் பறி போய்விடும்.

மேல் சொன்னவைகள் எதாவது ஒன்று வந்தால் ஒன்று போய் விடும்.ஆனால் ...
அஹங்காரம் வந்து விட்டால் அத்தனையும் தொலைந்துபோகும்.

பொறாமை
கோபம்
அதிக ஆசை
கெட்டவர்கள் சவகாசம் 
அஹங்காரம்

இவைகள் அற வழிக்குப் பொருந்தாவையாகும். ஆகவே இவை தவிர்க்கப்பட வேண்டும் என்று அழகாக விதுரர் எடுத்துரைக்கிறார்.

######$$#$$$$$$#&&&&&

#விதுரநீதிபதிவு – 1
================
விதுரர்  பிறந்த கதை 
+++++++++++++++++
               மகா பாரதத்திற்கு முந்தைய காலத்தில்   ஆணி மாண்டவ்யர் என்ற  முனிவர் தனது ஆசிரமத்திற்கு அருகில் உள்ள மரத்தினடியில் அமர்ந்து பேசா நோன்பு (மௌன விரதம்) மேற்கொண்டு இருந்தார் . அந்த நேரத்தில், காவலர்களால் துரத்தப்பட்ட திருடர்கள், தாங்கள் கொள்ளையடித்த பொருட்களை மாண்டவ்யரின் ஆசிரமத்தில் மறைத்து வைத்து, தாங்களும் அங்கேயே மறைந்து கொண்டனர். காவலர்கள் ஆசிரமத்தை அடைந்து, திருடர்களைப் பற்றியும், அவர்களின் கொள்ளைப் பொருட்களைப் பற்றியும் மாண்டவியரிடம் கேட்டனர்.

               மாண்டவ்யர் மௌன விரதத்தில் இருந்ததால், காவலர்களுக்கு மறுமொழி சொல்லவில்லை. எனவே காவலர்கள் ஆசிரமத்தில் நுழைந்து அங்கு மறைந்திருந்த திருடர்களையும், கொள்ளையடித்த பொருட்களையும், முனிவரையும் இழுத்துக் கொண்டுபோய் மன்னன் முன் நிறுத்தினர். மன்னனின் ஆணைப்படி, திருடர்களுடன் சேர்த்து முனிவரும் கழு மரத்தில் ஏற்றப்பட்டார். 

       முனிவர் கழுவிலேற்றப்பட்ட பிறகும், சாகாமல் உயிருடன் இருப்பதைக் காவலர்கள் மூலம் அறிந்த மன்னவன் மாண்டவிய முனிவரிடம் மன்னிப்பு கோரினார்.மன்னனின் ஆணைப்படி, மாண்டவ்யரின உடலுக்கு வெளியே உள்ள கழு மரத்தின் பகுதிகளை மட்டும் வெட்டி எடுத்தனர். கழுவின் ஒரு பகுதியை உடலுடன் தாங்கிக் கொண்டே பயணித்த மாண்டவிய முனிவர் ஆணி மாண்டவ்யர் என்ற பெயரால் அறியப்பட்டார்.

        பின்னர் ஆணி மாண்டவியர், தர்ம தேவனிடம்  ஒரு தவறும் செய்யாத தன்னைக் கழுவில் ஏற்றித் தண்டனை அடைய காரணம் கேட்டார். அதற்கு தர்ம தேவன் , முற்பிறவியில் நீங்கள் சிறுவனாக இருந்த போது, புல்லைக் கொண்டு ஒரு பூச்சியின் பின்புறத்தைத் துளைத்த செயலே, இப்பிறவியில் கழுவில் ஏற்றப்படக் காரணமாயிற்று என்றார்.
குழந்தைகள் செய்யும் தவறுகளைச், சாத்திரங்கள் பாவமாக கொள்ளாது என்று கூறுகையில், சிறு குற்றத்திற்காக என்னைக் கொடுமையாக தண்டித்தபடியால், மனிதர்களில் கீழ்க் குடியில் பிறப்பாய் என தர்ம தேவனுக்கு சாபமிட்டார் ஆணி மாண்டவ்யர். தர்ம தேவனும் அடுத்த பிறவியில் விதுரனாகப் பிறந்தார்.

            காசி மன்னனின் மகள்கள்  அம்பிகா , அம்பா, அம்பாலிகா ஆகியோர் தங்களுடைய சுயம்வரத்தின்போது அஸ்தினாபுரத்து மன்னன்  சாந்தனு மகன் விசித்திர வீரியனுக்கு மணம் செய்வதற்காக   பீஷ்மரால் வலுக்கட்டாயமாக கொண்டு செல்லப்பட்டனர். பீஷ்மர் இவர்களில் இருவரை விசித்திரவீரியனுக்கு மணம் முடித்து வைத்தார்.விசித்திரவீரியன் இறந்து விட்டதால் அரசுக்கு வாரிசு வேண்டி சத்யவதி தனது முதல் மகனான (கிருஷ்ண த்வைபாயனன்) வியாசரிடம் அம்பிகா மற்றும்  அம்பாலிகாவை அனுப்பி வைத்தார். அப்போது அச்சத்தினால் அம்பிகா தனது கண்களை மூடிக்கொண்டதால் அவர்களுக்கு பிறந்த திருதராஷ்டிரன் குருடனாகப் பிறந்தார். இவரின் புதல்வர்களே கௌரவர்கள் எனப்படுகின்றனர்.
அம்பாலிகாவுக்கு பாண்டு பிறந்தார்.இவரின் புதல்வர்களே பாண்டவர்கள்  எனப்பட்டனர்

       திருதராஷ்டிரன் குருடனாக பிறந்ததால் இரண்டாம்முறை செல்லுமாறு சத்தியவதி கேட்டுக்கொண்டாள்.இரண்டாம் முறை அம்பிகா செல்லாமல் தனது வேலைக்காரியை அனுப்பினாள். அவர்களுக்கு பிறந்தவரே விதுரன் ஆவார்.
மஹா பாரதத்தில் விதுரர் திருதராட்டிரன், பாண்டு ஆகியவர்களின் இளைய சகோதரன். பணிப்பெண்ணுக்குப் பிறந்தவன் என்பதனாலேயே அரச பதவிக்கு அருகதை அற்றவனாகி இருந்தாலும் அரச குடும்பத்தில் எல்லோருடைய மதிப்புக்கும் மரியாதைக்கும் உரியவனாக இருந்தான். 

     தர்மதேவன்  மறு உருவமான விதுரர் எப்போது எதற்கு  திருதராஷ்டிரனுக்கு சமூக நீதி கருத்துக்களை அறிவுரை கூறுகிறான்? அது எவ்வாறு விதுர நீதியாக உருவெடுக்கிறது ?
 நாளை பார்க்கலாம்.

விதுர நீதி பகுதி-2

- - - - - - - - - - - - - - - - - - - - - - -
கீதா விதுரநீதிச்ச தர்மா :
    சாந்த நவேரிதா : |
ந ச்ருதா பாரதே யேந
    தஸ்ய ஜந்ம நிரர்தகம் ||

விதுரர் கூறும் தர்ம நீதிகள்
- - - - - - - - - - - - - - - - - - - - -

பொதுவான தர்மங்கள்

 அடுத்தவர்களுக்கு கொடுக்காமல்,
  யார் சிறப்புடைய உணவினை
  உண்கிறார்களோ,
சிறந்த துணிமணிகளை தான்
  மட்டுமே உடுத்தவேண்டும் என்று
  நினைக்கிறார்களோ,
அவனை விட கொடியவன் வேறு
ஒருவனும் இருக்கமாட்டார்கள்.

ஒருவன்  பாவங்களை செய்கிறான்.
அந்த பாவத்தால் மக்கள் துன்பம்
அடைகிறார்கள்.
இதில் துன்பப்பட்ட மக்களுக்கு,
  தோஷத்தினால் வரும்
  பாபத்திலிருந்து விடுபடுகிறார்கள்.
ஆனால் செய்தவன் தோஷத்தினால்
  வரும் பாபத்திலிருந்து
  விடுபடுவதில்லை

வில்லிலிருந்து  புறப்பட்ட அம்பு
ஒருவனை தாக்கும், அல்லது
தாக்காமலும், இருக்கலாம்.
நன்மை தீமைகளை அறிந்து  
 சொல்லப்படும் சொல்லுக்கு,  
 - நல்லதும் நடக்கும்,
 - கெட்டதும் நடக்கும்.
ஆகவே
நட்பு,-=பகை, -=தேவையற்றது,=
என்ற நிலைகளை கருத்தில்கொண்டு,  

= நயமான சொல்,
= பாராட்டு செய்தல்,
= ஒப்பீடு செய்தல்,
= அடக்குமுறை செய்தல்,
போன்ற நான்கு முறையிலும்,
செயல்படுத்தி வெற்றி அடைய
வேண்டும்.

ஐந்து  இந்திரியங்களை
(மெய் - வாய் -கண் - மூக்கு - செவி)
வெற்றி கொண்டு,

ஆறு வகையான வழிபாட்டு
முறைகளை அறிந்து,  

ஏழு கெட்டவைகள்
(-பெண் மோகம், -சூதாட்டம்,
-வேட்டை,-மதுபானம்,
-கடுஞ்சொல், -கடுந்தண்டனை,
-ஊதாரித்தனம்)
ஆகிய பழக்கங்களை வெறுத்து,
மேன்மையை அடைய
வேண்டும்.  

 விஷம் யாரிடம் சேர்கிறதோ
  அவன் மரணமடைகிறான்.
ஆயுதமும் யாரிடம் சேர்கிறதோ
  அவன் மரணமடைகிறான்.

அதனால், தவறான ஆலோசனைகள்,
தேசத்தை,
தேசமக்களை,
அரசனையையே,
கொன்று விடும்.

விதுர நீதி பகுதி - 2
===========

திருதிராஷ்ட்ரர்: விதுரா! நீ மாபெரும் அறிஞன். இதுவரை கூறியதைப் போன்ற மேலும் பல நல்ல அறிவுரைகளை எனக்கு விளக்கிச் சொல்வாயாக. உன் சொற்கள் நற்பண்புகளை வலியுறுத்துகின்றன. உலக நன்மைக்கான விஷயங்களால் நிரம்பி விளங்குகின்றன. அவை அழகு ததும்பும் உண்மைகலாக வெளிப்படுகின்றன. என் மனம் திருப்தியுறாமல் மேலும் கேக விழைகிறது. 

விதுரர் கூறலானார்: "மன்னா! மனிதர்களில் முதல் தரமான மனிதன் உலகிலுள்ள அனைவரும், அனைத்தும் சௌக்கியமாக வாழ வேண்டுமென ஆசைப்படுவான். அத்தகைய நிலைக்கு எதிரான எதையும் என்றும் அவன் ஆதரிக்க மாட்டான். அவன் உண்மையையே பேசுவான். கனிவுடன் பழகுவான். உடல்-மன உணர்ச்சிகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பான்.

நடுத்தரமான மனிதன் வாக்குறுதிகள் கொடுப்பான். அவற்ரை நிறைவேற்றியும் தருவான். எதுவும் கொடுப்பதாக வாக்களித்தால் அவ்வாறே கொடுட்தும் விடுவான். பிறரிடம் குற்றம் கண்டுபிடித்த வண்ணம் இருப்பான்.

மனிதர்களில் கீழானவர்கள் யாருக்கும் அடங்க மாட்டார்கள். எப்போதும் ஆவேசமாக இருப்பார்கள். பாவச் செயல்களில் ஈடுபடுவார்கள். பயங்கரமாகக் கோபப்படுவார்கள். நன்றி கெட்டவர்களாக இருப்பார்கள். அவர்கள் யாருக்கும் நண்பர்கள் அல்லர். சில சமயம் நல்லவர்கள் போல் பழகினாலும் அவர்கள் கொடிய மனம் உடையவர்களே.

கீழ்தரமானவன் பெரியவர்கள் கூறும் நல்ல ஆலோசனைகளின் படி நடந்து கொள்ள மாட்டான். அந்த ஆலோசனைகளால் நன்மை விளையுமென அவன் நம்புவதில்லை. அவன் தன்னையே சந்தேகப்படுபவனாக இருப்பான். தன்னுடைய நண்பர்களைக் கூடக் காட்டிக்கொடுத்துவிடுவான்.

பொறாமை கொள்ளாதிருத்தல், நேர்மையான பேச்சு, உள்ளத் தூய்மை, போதுமென்ற மனத்திருப்தி, எரிச்சலூட்டாத இனிய பேச்சு, மனக்கட்டுப்பாடு, வாய்மை, மனவுறுதி இம்மாதிரியான நற்பண்புகளைத் தீயவர்களிடம் எதிர்பாக்க முடியாது.

வாழ்க்கையில் வளம் பெற்று முன்னேற விரும்புகிறவன் மேற்கூறிய மூவகை மனிதர்களில் உத்தமமான மனிதர்களை மட்டும் அணுக வேண்டும். தவிர்க்க இயலாத சூழ்நிலைகளில் நடுத்தரமான மனிதர்களை அணுகலாம். ஆனால் ஒரு போதும் கீழ்த்தரமான மனிதர்களைச் சார்ந்திருக்கக் கூடாது.

விதுரர் நீதி - 3 - 
========
செயல்கள் மூலம் உயர்ந்து நில்!
==============


தன் மகன் துரியோதனது நடவடிக்கையினால் வருந்தி கையறுநிலையில் இருக்கும் திருதிராஷ்டிரனிடம் விதுரர் இவ்வாறு கூறுகிறார்.

பிறரால் தக்கப்பட்டுக் காயமடைந்தவனும், தனது நெருங்கிய நண்பனுக்குத் துரோகம் செய்தவனும், தன் சொத்து-சுகத்தையெல்லாம் இழந்தவனும் இரவு நேரத்தில் தூங்க முடியாமல் புலம்பிக்கொண்டே இருப்பார்கள். அது போலவே ஒருவன் தான் அறிந்த உண்மையைத் துணிச்சலாக வெளியிடாவிடில் தன் வாழ்நாள் முழுவதையும் துயருடன் கழிப்பான்.

ஒருவன் தனது வளர்ப்பு பிராணிக்காக பொய் சொன்னால் அவனுடைய முன்னோர்களில் ஐந்து பேர் நரகத்தில் தள்ளப்படுவர். தனது பசுவிற்காகப் பொய் சொன்னால் பத்து முன்னோர்களும், தனது குதிரைக்காகப் பொய் உரைத்தால் நூறு முன்னோர்களும் நரகத்தில் தள்ளப்படுவர். தனக்கு வேண்டிய மனிதனுக்காகப் பொய் கூறினால் அவனையும் சேர்த்து ஆயிரம் முன்னோர்கள் நரகத்தை அடைவார்கள்.

தங்கம் பெறுவதற்காகப் பொய் கூறுபவன், தன் குடும்பத்தினர் அனைவருக்கும், எதிர்காலத்தில் தன் குடும்பத்தில் பிறக்கப் போகிறவர்களுக்கும் அழிவு ஏற்படச் செய்கிறான். நிலம் சம்பந்தமாகப் பொய் கூறுபவன் தன்னிடம் உள்ளவையும் தன்னைச் சார்ந்தவையும் எதுவும் மிஞ்சாமல் அழிந்துவிடும். ஆகவே ஒருபொழுதும் நிலம் பற்றிப் பொய் கூறக்கூடாது.

முதுமைத் தளர்ச்சி நமது அழகையும், ஆசை பொறுமையையும் சீர்குலைக்கும். சாவு உயிர் முச்சை நிறுத்தி விடும். பொறாமை நன்னெறியில் செல்வதைத் தடுக்கும். கோபம் செல்வச் செழிப்பையும், தீயோர் நட்பு நமது நன்னடத்தையையும் பாதிக்கும். காமம் மான-அவமான உணர்வை மரத்துப் போகச் செய்யும். கர்வமோ நம்மிடமுள்ள அனைத்தையும் அழித்தொழித்துவிடும்.

இரவு நேரத்தில் தீகுச்சியைக் கொளுத்தினால் பொருட்கள் கண்ணுக்குத் தெரியும். அதுபோலவே ஒருவன் செய்கின்ற செயல் மூலம் அவன் எவ்வளவு உயர்ந்தவன் என அறியலாம்.

ஆகவே மன்னா, தங்கள் புதல்வர்களை அவர்களின் செயல்களின் மூலம் உயர்ந்தவர்களாக இருக்கச் செய்யுங்கள்!
🌸🌸🌸🌸
விதுர நீதி -----
--------------------------------------------------
பேசுவதைவிட மவுனமாக இருப்பது சிறந்தது .
பேசவேண்டிய அவசியம் ஏர்ப்படும்போது ,
உண்மையாக பேச வேண்டும் .அவ்வாறு  நாம் 
பேசும் உண்மை ,பிறருக்கு நன்மை செய்வதாக ,
அமைய வேண்டும் .நாம் நன்மையளிக்கும் வகையில் பேசுவது ,
அறநெறிக்கு ஏற்றதகவும் இருக்கவேண்டும் .

சூத குலத்தில் பிறந்து தர்மத்தில் உயர்ந்த மகா புருஷர் "விதுரர்",தர்மத்தை நன்குணர்ந்து மாபாரதத்தை வழிநடத்தி "விதுர நீதி"யை வழங்கியவர்.

அசுர குலத்தில் உதித்த விபீஷணன் சுர தர்மத்தை அனுஷ்டித்து பகவானிடம் சரணடையும் பாக்கியத்தை பெற்றவர்.
இவைகளை அறிந்து கொள்ள செய்தது"பரந்தாமன்"கருணை.

விதுர நீதி 

பதிவு-4

திருதராஷ்டிரனுக்கு சஞ்சையன் கூறிய அறிவுரை .

                     கிருஷ்ணர் அவையை விட்டு வெளியேறவும் , விதுரர் தான் போரில் கலந்து கொள்ளாது இருக்க தன வில்லை உடைத்து விட்டு வெளியேறுகிறார். போர் உறுதியான நிலையில் பாண்டவர்கள் என்ன மன நிலையில் இருக்கிறார்கள் என்பதை அறிய விரும்பினார் .அதனால் சஞ்சயனை பாண்டவர்கள் இருப்பிடம் சென்று விசாரித்து
 வர திருதராஷ்டிரன்  கூறுகிறார் .அதனை ஏற்று சஞ்சையன் பாண்டவர்கள் இருப்பிடம் சென்று சந்தித்து  தகவல்களை பெற்று கொண்டு  மீண்டும் திருதராஷ்டிரனை சந்திக்க ஹஸ்தினாபுரம் திரும்புகிறார்.
                 
சஞ்சையன் திருதராஷ்டிரனை சந்தித்தல்
    
                      ஹஸ்தினாபுரத்தை அடைந்த அவர்,அரண்மனையின் வாயில் காப்போனிடம், “ஓ! வாயில்காவலனே, பாண்டுவின் மகன்களை சந்தித்து தகவல் பெற்று  சஞ்சயன்  திரும்பி வந்திருக்கிறான் என்று  சொல். தாமதிக்காதே. மன்னர் விழித்திருந்தால் மட்டும் அவரிடம் சொல். அவரிடம் முதலில் தெரிவித்த பிறகே நான் உள்ளே நுழைய விரும்புகிறேன் ” என்றார்.

              இதைக் கேட்ட வாயில்காவலன், திருதராஷ்டிரனிடம்  சென்று, “ மன்னர் மன்னா , நான் உம்மை வணங்குகிறேன். உம்மைக் காண விரும்பி சஞ்சயன் நமது அரண்மனை வாயிலில் காத்திருக்கிறார். அவர், பாண்டவர்களின் செய்தியைத் தாங்கி வந்திருக்கிறார். தங்களை சந்திக்க வேண்டும் என்று தங்கள் அனுமதி வேண்டி நிற்கிறார் . உள்ளே அனுமதிக்கலாமா? ” என்றான்.

                     அதற்கு மன்னன் வாயில் காவலனிடம், “நான் மகிழ்ச்சியாகவும், நலமாகவும் இருக்கிறேன் என்று சஞ்சயனிடம் சொல். சஞ்சயனை வரவேற்பாயாக. நான் அவனை வரவேற்க எப்போதும் தயாராக இருக்கிறேன். அனுமதி தடை அவனுக்கு எப்போதுமில்லை எனும்போது, ஏன் அவன் வெளியே இருக்க வேண்டும்? . உடன் வரச்சொல் என்று அனுமதி தந்தார்.

               பின்னர் மன்னனின் அனுமதியுடன், கூப்பிய கரங்களுடன், அந்த அகன்ற அறைக்குள் நுழைந்த சஞ்சயன் நேராக திருதராஸ்டிரன் முன் சென்று அவரை வணங்கி நின்றான்.

              தொடர்ந்து கூறுகிறார் .வணக்கம் மன்னா , இங்கிருந்து சென்ற நான், பாண்டு மகன்களைக் கண்டேன். உமக்கான வணக்கங்களைத் தெரிவித்த பாண்டுவின் மகனான புத்திக்கூர்மையுடைய யுதிஷ்டிரன், உம்மையும்  உமது மகன்களையும் நலம் விசாரித்தான். நீர் உமது மகன்களுடனும், பேரர்களுடனும், நண்பர்களுடனும், ஆலோசகர்களிடமும், உம்மை நம்பியிருக்கும் அனைவரிடமும் மகிழ்ச்சியாக இருக்கிறீரா என வினவினான்” என்றார் .

பதிலுக்கு யுதிஷ்டிரனது நலனை திருதராஷ்டிரன் விசாரித்தான் .

சஞ்சயன் பார்வையில் யுதிஷ்டிரன்
 
               சஞ்சயன் திருதராஷ்டிரனிடம், “பாண்டுவின் மகன் யுதிஷ்டிரன்,  தனது ஆலோசகர்களுடன் நலமாக இருக்கிறான். ஏற்கனவே தனக்குச் சொந்தமாக இருந்த உடைமைகளை, அவன் அடைய விரும்புகிறான். புத்திக்கூர்மையும், பரந்துப்பட்ட கல்வியும் கொண்டிருக்கும் அவன் , அதையும் தவிரத் தொலைநோக்குடனும், அற்புத மனநிலையுடனும், கண்டிக்கத்தக்க எதையும் செய்யாமல், அறத்தையும், செல்வத்தையும் அடைய முயற்சிக்கிறான். அந்தப் பாண்டுவின் மகனுக்கு {யுதிஷ்டிரனுக்கு}, அறத்தைவிட ஊறிழையாமை {அஹிம்சை} இன்னும் அதிக மேன்மையானது, செல்வம் குவிப்பதை விட உயர்ந்தது அறம்.  வாழ்வின் உயர்ந்த நோக்கத்திற்கும், அறத்திற்கும் உகந்த நடைமுறையிலும், மகிழ்ச்சியிலும், இன்பத்திலும், அவனது மனம் எப்போதும் உள்ளது.

    தன் சக்தியால் அல்லாமல், நூலால் இப்படியும் அப்படியும் இழுக்கப்படும் பொம்மையென (இவ்வுலகில்) மனிதன் வாழ்கிறான் . யுதிஷ்டிரனின் துன்பங்களைக் கண்ட பிறகு, விதியின் சக்தி, மனித முயற்சியின் விளைவுகளைவிட மேன்மையானது என்றே நான் கருதுகிறேன். நிச்சயம் துன்பத்தில் அழியப்போவதும், பாவகரமானதும், பேசக்கூடாததுமான உமது தகாத செயல்களைக் கண்டால், தகுந்த எதிரி கொடுக்கும் காலம் வரைதான் உமது பதவி காலம் , நீதியின் வழி நின்று ஜெயித்து உங்கள் பாராட்டை அவர்கள் வெல்லக்கூடும் என்றே எனக்குத் தோன்றுகிறது.

சஞ்சயன் திருதராஷ்டிரனிடம் அவன் நிலையை எடுத்துரைத்தல் 

              பாவங்கள் அனைத்தையும் விடுத்து, இனியும் வைத்துக் கொள்ள முடியாத தேய்ந்து போன சட்டையை ஒரு பாம்பு கழற்றி விடுவதைப் போல, நீரே தாங்கிக் கொள்ளும் வகையில் {உம்மால் அவனுக்கு இழைக்கப்பட்ட} பாவ மூட்டைகளை விடும் வீரனான யுதிஷ்டிரன, தனது இயற்கையான நிறைநிலையால் ஒளிர்ந்து கொண்டிருக்கிறான்.

ஓ! மன்னா, அறம் மற்றும் பொருள் ஆகிய இரண்டுக்கும் முரணான உமது நடவடிக்கைகளையும், நீதிமான்களின் நடத்தையையும் கொஞ்சம் யோசித்து பாருங்கள் .. ஓ! மன்னா , இவ்வுலகில் கெடுபுகழ் பெற்ற நீர், உயிர் விட்டு நீங்கி செல்லும் போது மறு உலகில் துன்பங்களையே அறுவடை செய்வீர்.

உமது மகனின் ஆலோசனைகளுக்குக் கீழ்ப்படிந்திருக்கும் நீர், பாண்டவர்களை விலக்கி வைத்துவிட்டு, அவர்களுக்குரிய சொத்தை அனுபவிக்க நினைக்கிறீர். அநீதியான இந்தச் செயல், உலகத்தில் கொடுஞ்செயலாக  பேசப்படுகிறது.  இந்த உமது செயல் உமக்குத் தகுந்ததன்று. 

        ஞானமற்றவன், பிறப்பால் தாழ்ந்தவன், கொடூரன், நீண்ட நாள் பகை கொள்பவன், க்ஷத்திரிய அறங்களில் உறுதியாக நிலைத்து நிற்காதவன், சக்தியற்றவன், தீய மனநிலை கொண்டவன் ஆகியோரையும், உண்மையில், இது போன்ற குறிகளைத் தன்னிடம் கொண்டவனையும் பெருந்துன்பமே பின்தொடர்கிறது.அவனது இறுதி காலம் அன்பான துறையற்ற தனிமையில் கொடுந்துயரில் கழியும் .அந்நிலை பெற விரும்புகிறீர்களா ? மன்னா !!

       ஒருவன் நல்ல குலத்தில் பிறப்பதும், பலவானாவதும், புகழ்பெறுவதும், பல்வேறு கதைகளை அறிவதும், வாழ்வின் சுகங்களை அனுபவிப்பதும், புலன்களைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் பெறுவதும், எப்போதும் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ள அறம் மறம் ஆகியவற்றின் தெரிவுமுறை அறிவதும் ஒரு மனிதன் பின்பற்றும் அறத்தினாலேயே நிகழ்கிறது.

              புத்திக்கூர்மையும், துன்ப காலங்களின் அறம் மற்றும் மறம் ஆகியவற்றைத் தெரிவு செய்யும் முறையையும், அறத்தின் சடங்குகளையும் அறிந்த ஆலோசகர்களில் முதன்மையானவர்களால் கவனிக்கப்படும் எந்த ஒரு மனிதனும் , தன் துறைகள் அனைத்தின் பயன்பாடுகளையும் தக்க வைத்துக் கொள்ளும் , தீய செயல்களையா  ஆற்ற முடியும்?

      உமது வேலையில் என்றும் அர்ப்பணிப்புடன் இருக்கும் இந்த ஆலோசகர்கள் {அமைச்சர்கள்}, இங்கே ஒற்றுமையாகக் காத்திருக்கின்றனர். பாண்டவர்கள் தங்கள் பங்கைத் திரும்பப் பெறப் போவதில்லை என்பதே  உங்கள் மக்களின்  உறுதியான தீர்மானமாக இருக்கிறது. எனவே, சூழ்நிலையின் சக்தியால் நீங்கள் எடுத்த தவறான முடிவால் குருக்களின் அழிவு நேரப்போகிறது என்பது உறுதி. குற்றங்களால் தூண்டப்பட்டால், யுதிஷ்டிரன் உங்களுக்குத் தீமையை வேண்டி, தன் பாவங்கள் அனைத்தையும் உங்களுக்குக் கொடுத்து, குருக்களை முன்கூட்டியே அழித்துவிடுவான். அந்தச் செயலின் பழி இவ்வுலகில் உமதே ஆகும்.

உண்மையில், பிருதையின் {குந்தியின்} மகனான அர்ஜுனன் இவ்வுலகத்தை விட்டு சொர்க்கத்துக்கே உயர்ந்து, அங்கே பெரிதாக மதிக்கப்பட்டான் என்றால், இது தேவர்களின் விருப்பத்தைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும்? தனிப்பட்டவரின் முயற்சியால் ஆவது ஒன்றுமில்லை என்பதையே இது நிறுவுகிறது. இந்தக் காரியத்தில் எந்த ஐயமும் இல்லை.

              உயர்பிறப்பு, வீரம் ஆகிய குணங்களைக் கண்டு, வளர்ச்சியையோ செயல்பாடுகளையோ நம்பி, (மனிதர்களிடம் உள்ள) வளமை, வறுமை, உறுதி, உறுதியற்ற தன்மை .ஆகியன வருவதில்லை . மன்னன் பலி {மஹாபலி}, இதன் காரணங்களைத் தேடி, (முற்பிறவிகளில் இருந்து ஒன்றன் பின் ஒன்றாக அமைந்த பிறவிகளுடைய சங்கிலித்தொடரின்) தொடக்கத்தைக் கண்டடையத் தவறி, காலமே அனைத்துக்கும் காரணம் என்று கருதினான்.

 கண், காது, மூக்கு, தீண்டல் {தோல்}, நாக்கு ஆகியனவே {ஐம்பொறிகளே} ஒரு மனிதனின் ஞானத்துக்கான கதவுகள். ஆசை ஒடுங்கினால், இவை தங்களையே திருப்தி செய்து கொள்ளும். எனவே, மகிழ்ச்சியாகவும், அலட்டிக் கொள்ளாமலும் ஒருவன் தன் உணர்வுகளைக் கட்டுப்படுத்த வேண்டும். இதில் வேறு விதமாக நினைப்பவர்களும் இருக்கிறார்கள். சரியாகச் செய்யப்பட்டால், ஒரு மனிதனின் செயல்கள், அவை விரும்பிய விளைவை நிச்சயம் ஏற்படுத்தும் என்று சொல்கிறார்கள். இப்படியே தாய் மற்றும் தந்தையின் செயலால் பிறந்த குழந்தை, உணவும், நீரும் கொடுத்து முறையாகப் பராமரிக்கப்படும்போது வளர்கிறது. மனிதர்கள் இவ்வுலகில், அன்பு, வெறுப்பு, இன்பம், வலி, புகழ், பழி ஆகியவற்றுக்கு ஆட்படுகிறார்கள். ஒரு மனிதன் நேர்மையாக நடந்து கொள்ளும்போது புகழப்படுகிறான்.

          கணக்கிலடங்கா உயிர்களின் அழிவை நிச்சயம் கொண்டு வரப்போகும் பாரதர்களின் மன வேறுபாடுகளுக்கு (அதற்கு நீரே வேர் என்பதால்), உம்மையே நான் குற்றஞ்சாட்டுவேன். அமைதி தீர்மானிக்கப்படவில்லையென்றால், {அந்த} உமது தவறால், காய்ந்த புற்குவியலை {வைக்கோலை} எரிக்கும் சுடர்மிகும் நெருப்பைப் போல அர்ஜுனன் குருக்களை எரித்துவிடுவான்.

       ஓ! திருதராஷ்டிரரே, எந்தத் தடையையும் ஏற்காத உமது மகன் சொல் கேட்டு, பகடையாட்டத்தின் போது சச்சரவைத் தவிர்க்காமல், வெற்றி மகுடம் தரிக்கப்பட்டதாகக் கருதிக் கொள்பவர் அனைத்து உலகிலும் நீர் ஒருவர் மட்டுமே .. இப்போது அதன் பலனைப் பாரும், நன்றிமிக்க ஆலோசகர்களை {விதுரர் போன்றோரை} மறுத்து, நம்பத்தகாதவர்களை {சகுனி, கர்ணன் போன்றோரை} ஏற்ற உமது பலவீனத்தின் காரணமாக, இந்தப் பரந்த செழிப்பான பேரரசை உம்மால் தக்கவைத்துக் கொள்ள இயலவில்லை. உன் அனைத்து சொந்தங்களும் உன் கண் முன்னே ஆணவத்திற்கும் , பேராசைக்கும் சிக்கி அழிந்து போவதை கண் முன்னே காண்பாய் ? . எது சந்தோசம் என நீ நினைக்கிறாயோ அதனால் சந்தோசம் இல்லை என்றார் 

எனது விரைந்த பயணத்தினால் களைப்பும் சோர்வும் அடைந்திருக்கும் நான், படுக்கைக்குச் செல்ல உமது அனுமதியைக் கேட்கிறேன். என்று அனுமதி கேட்டு உறங்க சென்று விடுகிறார் , சஞ்சையன் வார்த்தைகளில் உள்ள தர்மம் உணர்ந்த திருதராஷ்டிரன் மனம் நொந்து விரக்தியடைகிறார் . இதிலிருந்து மீள என்ன வழி என யோசிக்கும் பொது ஆலோசனை வேண்டி விதுரரை அழைக்கிறார் .

விதுரர் வந்தாரா ?  ஆலோசனை தந்தார ? நாளைய பதிவில் பார்க்கலாம் ? என்றும் அன்புடன் உங்கள் ஆச்சார்யா பாபாஜி

விதுர நீதி - பகுதி 5 - 

அகங்காரத்தால் அழியாதே!

பாண்டவர்களும் கௌரவர்களும் போரில் இறப்பார்களே என்ற துயரத்தின் உச்சத்தில் ஆழ்ந்த திருதிராஷ்ட்டிரன் விதுரரிடம் கேட்கிறார்!

திருதிராஷ்ட்டிரன்: விதுரா! மனிதனுக்கு ஆயுள் நூறாண்டு காலம் என்று எல்லா வேதங்களும் சொல்கின்றன. அப்படி இருந்தும், மனிதன் நூறு ஆண்டுகளும் உலகில் இருப்பதில்லையே, அது ஏன்?

விதுரர்: மாமன்னா! மனிதர்களை எமன் கொல்வதில்லை. அவர்களின் ஆயுளை ஆறு கூர்மையான ஆயுதங்கள் அறுக்கின்றன. அவைகளைச் சொல்கிறேன் கேளுங்கள்.

1. மிதமிஞ்சிய அகங்காரம்
2. அதிகமான பேச்சு
3. குற்றங்களை மிகுதியாகச் செய்வது.
4. அதிகமான கோபம்
5. தன்னை மட்டும் காத்துக் கொள்வதில் ஆசை
6. நண்பர்களுக்குத் துரோகம் செய்வது.

என்கிற இவைகளே அந்தக் கூர்மையான ஆயுதங்கள். ஆகவே மன்னா! இந்தத் தீய குணங்களை ஒழித்து நீங்களும் உங்கள் பிள்ளைகளும் சுகமாக வாழ வேண்டும் என்பதே என் விருப்பம்!

சூத குலத்தில் பிறந்து தர்மத்தில் உயர்ந்த மகா புருஷர் "விதுரர்",தர்மத்தை நன்குணர்ந்து மாபாரதத்தை வழிநடத்தி "விதுர நீதி"யை வழங்கியவர்.

அசுர குலத்தில் உதித்த விபீஷணன் சுர தர்மத்தை அனுஷ்டித்து பகவானிடம் சரணடையும் பாக்கியத்தை பெற்றவர்.
இவைகளை அறிந்து கொள்ள செய்தது"பரந்தாமன்"கருணை
 வாழ்க்கையில் எப்போதுமே சந்தோஷமாக இருப்பது  ஒரு கலை...  ஆனால்  அதை யாரிடமும்  கற்றுக்கொள்ள முடியாது...

வாழ்க்கையில் எப்போதுமே சந்தோஷமாக இருப்பது  ஒரு கலை...  ஆனால்  அதை யாரிடமும்  கற்றுக்கொள்ள முடியாது...
 விதுர நீதி கதை:-

 தர்மதேவன் உரைத்த நீதி!

மாண்டவ்யர் என்பவர் மிகப்பெரிய மகரிஷி; தபஸ்வி. காட்டின் நடுவே பர்ணசாலை அமைத்து வாழ்ந்து வந்தார். பர்ணசாலைக்கு எதிரே பிரம்மாண்டமான அரச மரத்தின்கீழ் அமர்ந்து கடுந்தவம் புரிவார். அப்படி ஒருசமயம் பகவானை நினைத்து தவம்புரிந்து சமாதி நிலையில் இருந்தார். அப்போது அந்நாட்டு அரசியின் நகைகளை சில கொள்ளையர்கள் திருடிக்கொண்டு போகும்போது, அரண்மனைச் சேவகர்கள் பார்த்துவிட்டார்கள். காவலர்கள் குதிரை மீதேறி துரத்த, கொள்ளையர்களும் படுவேகமாய் குதிரையில் பறந்தார்கள். நடுக்காட்டை அடைந்த கொள்ளையர்கள் சமாதி நிலையிலிருந்த மாண்டவ்ய ரிஷியின் முன்னால் திருடிய நகைகளைப் போட்டுவிட்டு தப்பிவிட்டார்கள். நகைகளோடு மாண்டவ்யரைப் பார்த்த காவலர்கள், இந்த ஆசாமி கொள்ளையர் தலைவனாக இருக்கலாம். அதனால்தான் நகைகளை இவனருகில் போட்டுவிட்டு ஓடிவிட்டார்கள். இவனும் ஒன்றும் தெரியாதவன்போல் கண்களை மூடிக்கொண்டு நடிக்கிறான்.. என நினைத்துக்கொண்டு அரசனிடம் சென்று முறையிட்டனர். இதைக் கேட்ட அரசன் கோபமடைந்து, நகைகளை மீட்டு அரசியிடம் கொடுங்கள். அந்தத் திருடனை கழுவிலேற்றிக் கொல்லுங்கள் என்று உத்தரவிட்டான். கழுமரம் தயாரானது.
கழுமரம் என்றால் என்னவென்று இந்தகாலத்தில் பலருக்குத் தெரிவதில்லை. அது புராண காலத்திய மரண தண்டனை. ஒரு நீளமான -கனமான கம்பை ஆழமாக பூமியில் நடுவார்கள். அதனுடைய மேல் முனை பென்சில்போல கூராகச் சீவப்பட்டிருக்கும். அந்த மரக்கொம்புமீது ஆமணக்கெண்ணெயை (விளக்கெண்ணெய்) வழுவழுப்பாகத் தடவியிருப்பார்கள். அரசனால் கடுமையான மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களை அந்தக் கொம்பின் உச்சியில் ஆசனவாய் பதியும்படி உட்கார வைப்பார்கள். அந்தக் கூரிய முனை உடலினுள் நுழைந்து உடம்பை இரண்டாகப் பிளந்துவிடும். இது அந்தக் காலத்திய மரண தண்டனை. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் பட்டினத்தாருக்குக்கூட உஜ்ஜயினி நகர அரசன் இந்தத் தண்டனையை விதித்தான். இறைவன் அருளால் கழுமரம் எரிந்து சாம்பலானாது. அப்படிப்பட்ட கழுமரம் தயாரானதும் மாண்டவ்ய மகரிஷியை அதன்மீது உட்கார வைத்தான் அரசன். ஆனால் மாண்டவ்யர் சமாதி நிலையில் இருந்ததால் அவருக்கு எந்த ஆபத்தும் நேரவில்லை. மாண்டவ்யருக்கு இப்படி ஒரு தண்டனையா என்று மற்ற ரிஷிகளும் தபஸ்விகளும் ஓடிவந்து, இவர் எப்பேர்ப்பட்ட மகான்! இவரையா கழுவிலேற்றுவது? என்று அவர்கள் மன்னனிடம் முறையிட, மன்னன் மாண்டவ்யரை விடுவித்தான். அப்போது மாண்டவ்யர் சமாதி நிலை கலைந்து, தனது ஞானதிருஷ்டியால் நடந்ததை அறிந்தார். மன்னனும் மற்றவர்களும் அவரிடம் மன்னிப்புக் கோரினர். அவர் ஒன்றும் நடவாததுபோல் மீண்டும் காட்டிற்கே சென்றுவிட்டார். சென்றவர் தர்மதேவனை அழைத்தார். தர்மதேவனும் அவர் எதிரே தோன்றி வணங்கி நின்றான்.
தர்மதேவனே.. நான் என்ன பாவம் செய்தேன்? என்னை ஏன் கழுமரத்தில் ஏற்றினார்கள்? என்று கேட்டார் மாண்டவ்ய மகரிஷி. ஐயனே.. தாங்கள் ஐந்து வயதுச் சிறுவனாக இருந்தபோது, ஒரு தும்பியைப் பிடித்து அதன் இறக்கைகளைப் பிடுங்கி, ஒரு முள்ளில் அதைக் குத்தி, அது துடிப்பதைப் பார்த்து ஆனந்தப்பட்டீர்கள். அதனால்தான் தங்களுக்கு இந்த தண்டனை என தர்மதேவன் கூற, கோபமுற்றார் மாண்டவ்யர். தர்மதேவா.... ஐந்து வயது என்பது ஏதுமறியா விளையாட்டுப் பருவம். தர்மம் - அதர்மம்; நீதி-அநீதி; பாவம்-புண்ணியம்; நல்லது -கெட்டது என்பதை அறியாத வயதில் நான் ஒரு தும்பியை துன்புறுத்தினேன் என்பதற்காகவா, இந்த வயதில் இப்படி ஒரு தண்டனையை எனக்குத் தருவது? நியாயம் தெரிந்த நீயே இதற்கு சரியான பதிலைக் கொடுப்பாயாக... என்றார். தர்மதேவன் தலைகுனிந்து நின்றான். அவனால் பதில் சொல்ல முடியவில்லை. மேலும் சினமுற்ற மாண்டவ்யர், தர்மதேவனே... நீ பூமியில் மனிதனாகப் பிறந்து நீதி, தர்மம் என்றால் என்ன என்பதை பூலோக வாசிகளுக்குப் புரியும்படி உணர்த்துவாயாக... என சாபமிட்டார். தர்மதேவன் பூமியில் துவாரபரயுகத்தின் முடிவில் பிறந்தான். அவனே விதுரன்!
சந்திர குலத்தைச் சேர்ந்தவன் சந்தனு என்னும் அரசன். சந்தனுவிற்கும், கங்காதேவிக்கும் மகனாகப் பிறந்தவர் பீஷ்மர். பீஷ்மர் பிறந்ததும் கங்கை சந்தனு மன்னனைப் பிரிந்து சென்றுவிட்டாள். அதன்பின் சத்தியவதி என்னும் பேரழகியான மீனவப் பெண்ணை மணந்துகொண்டான் சந்தனு. இதற்குமுன் சத்தியவதியின் அழகில் மயங்கினார் பராசரர் எனும் முனிவர். அவரது பார்வை பட்ட மாத்திரத்திலேயே அவள் கர்ப்பமுற்று ஓர் ஆண் மகவைப் பெற்றாள். அந்தக் குழந்தைதான் பின்னாளில் வியாச மகரிஷியாக விளங்கினார். இது சத்தியவதி கன்னிப் பெண்ணாக இருக்கும் போது நடந்த நிகழ்ச்சி.
(இதைத்தான் பீஷ்மர் அவரது கடைசிக் காலத்தில் விஷ்ணு சஹஸ்ரநாமம் சொல்லும்போது,

பராசராத்மஜம் வந்தே சுகதாதம் தபோ நிதிம்
என்று பராசர முனிவரை வணங்குகிறார். ஏனெனில் கங்கைக்குத் தான் பிறக்கும் முன்னே, தன்னுடைய இரண்டாவது தாயான சரஸ்வதிக்கு மகனாக, பராசர முனிவரின் தவவலிமையால் வியாசர் பிறந்திருப்பதை பீஷ்மர் அறிந்திருக்கிறார். ஆகவே பீஷ்மருக்கு வியாசர் அண்ணன் முறையாகிறார். அதனால் அவரையும், வியாசரின் தந்தையான பராசர முனிவரையும் வணங்குகிறார் பீஷ்மர்.) பின்னர் சந்தனுவிற்கும் சத்தியவதிக்கும் இரண்டு ஆண் குழந்தைகள் பிறக்கின்றன. அதில் ஒரு மகன் கொல்லப்படுகிறான். இதைத் தொடர்ந்து பீஷ்மர், தனக்கு சகோதரன் முறையாகும் சத்தியவதியின் இன்னொரு மகனுக்கு அம்பிகை, அம்பாலிகை என்னும் இரு சகோதரிகளை மணம் முடிக்கிறார். கடைசியில் அந்த ஒரே சகோதரனும் மறைந்துவிட, வம்சம் பெருக வேண்டி பீஷ்மரும் சத்தியவதியும் அந்தச் சகோதரிகளை வியாசரிடம் அனுப்புகின்றனர்.
வியாசர் மூலமாக அம்பிகைக்கு திருதராஷ்டிரனும், அம்பாலிகைக்கு பாண்டுவும் பிறக்கின்றனர், திருதராஷ்டிரன் பார்வை இல்லாதவன்; பாண்டுவோ வெண்குஷ்ட நோயாளி. சத்தியவதி மறுபடியும் அம்பிகையை வியாசரிடம் அனுப்ப, அதற்கு உடன்படாத அம்பிகை தன் பணிப்பெண்களில் ஒருத்திக்கு தன்னைப் போலவே வேடமிட்டு வியாசரிடம் அனுப்புகிறாள். இதைத் தன் தவவலிமையால் உணர்ந்த வியாசர், அந்தப் பணிப்பெண்ணை வெறுமனே தொடுகிறார். அதன் வலிமையால் அப்பணிப் பெண் கர்ப்பமுற்று ஒரு குழந்தையைப் பெறுகிறாள். அக்குழந்தையே தர்மதேவனின் மறு அவதாரமான விதுரர். ஆக, திருதராஷ்டிரன், பாண்டு, விதுரர் மூவரும் சகோதரர்களாகிறார்கள்.
தர்மதேவனே விதுரனாகப் பிறந்ததால், துவாபரயுக இதிகாசமான மகாபாரதத்தில் எப்போதும் தர்மத்தையே உபதேசிக்கிறார் விதுரர். மகாபாரதக் கதாநாயகனான கிருஷ்ணன் மகாவிஷ்ணுவே என்பதை, ஆரம்பம் முதல் அறிந்தவர்கள் சிலரே. பீஷ்மர், கிருபர், துரோணாச்சாரியார், விதுரர் ஆகியவர்களே அவர்கள். பகவானாகிய ஸ்ரீகிருஷ்ணன் பாண்டவர்கள் பக்கம் இருக்கிறான் என்பதாலேயே விதுரர் பாண்டவர்களை ஆதரிக்கிறார். தன் அண்ணனாகிய திருதராஷ்டிரன், தனது நூறு பிள்ளைகளான துரியோதனாதியர்களிடம் வைத்த பாசத்தை, காலமாகிவிட்ட தன் தம்பி பாண்டுவின் பிள்ளைகளாகிய ஐந்து பேரிடமும் வைக்கவில்லையே என்று துடித்துப் போகிறார் விதுரர். அதனால் பாண்டுவின் மக்கள்மீது சித்தப்பா என்கிற முறையில் பாசம் வைத்து பல இக்கட்டுகளையும் சமாளித்துக் காக்கிறார் விதுரர். அண்ணன் திருதராஷ்டிரன், பாண்டவர்களை சூதிற்கு அழைக்கும்போதே அவருடைய நோக்கம் விதுரருக்குப் புரிந்துவிடுகிறது. தடுக்கப் பார்க்கிறார்; முடியவில்லை. சூதிற்கு அழைப்பு விடுத்தவர் மாமன்னர் திருதராஷ்டிரன்; சூதாடுவதோ துரியோதனன். அவனுக்கு உதவியாக சகுனி என்கிற மாமன் பின்னே நிற்கிறான். சகுனி சூதில் வல்லவன். தாயம் உருட்டும்போது நாம் இரண்டு என்கிற எண்ணைச் சொன்னால் நான்கை விழவைக்கும் தந்திரசாலி. அவனோடு சூதாடினால் தோற்பது உறுதி. இதைப் புரிந்துகொண்ட விதுரர் தருமனைத் தடுத்தும், தருமன் இது அரசரின் ஆணை என்று சூதாட வருகிறான். இதைக் கண்ட விதுரரின் அலறலை மகாகவி பாரதியின் பாஞ்சாலி சபதத்தில் காணலாம்.
போச்சுது போச்சுது பாரத நாடு
போச்சுது நல்லறம் போச்சுது வேதம்
ஆச்சரியக் கொடுங்கோலங்கள் காண்போம்
என்று விதுரர் அழுகிறார்.
குரு÷க்ஷத்திரத்தில் நடந்த போரை தனியொரு விதுரரால் தடுக்க முடியவில்லை; இந்த நிலையில் அவர்களைவிட்டு விலகிச் சென்றுவிடுகிறார் விதுரர். மிகப்பெரிய தேசத்தையும், உறவினர்களையும், திருதராஷ்டிரனாகிய கண் பார்வையற்ற அண்ணனையும் துறந்து விதுரர் நாட்டை விட்டுப் போனதற்கும், எவராலும் வெற்றிகொள்ள முடியாத தன்னுடைய வில்லை துரியோதனாதியர் முன் தூக்கி எறிந்துவிட்டு, இனி உங்களுக்காக வில்லைத் தொடேன் என்று விதுரர் சபதமிட்டுப் போனதற்கும் காரணம் துரியோதனனே! நல்லறம் பேசி, நல்வழி நடக்கச் சொன்னதால், தர்மதேவனின் மறு அவதாரமான விதுரரை சபை நடுவில் அவமானப்படுத்துகிறான் துரியோதனன். தன்னுடைய சிறிய தகப்பனார் என்கிற முறையில்கூட விதுரருக்கு மரியாதை தரவில்லை துரியோதனன். அதை பாரதி சொல்லும்போது,
நன்றி கெட்ட விதுரா - சிறிதும் நாணமற்ற விதுரா
தின்ற உப்பினுக்கே நாசம் தேடுகின்ற விதுரா
ஐவருக்கு நெஞ்சம் எங்கள் அரண்மனைக்கு வயிறும்
ஐவர் பக்கம் நின்றே எங்கள் அழிவைத் தேடுகின்றாய்
இன்பம் எங்கனுண்டோ அங்கே ஏகிடு என்றுரைத்தான்.
தர்மதேவனுக்கு எத்தனை பெரிய அவமானம்? தான் பார்த்து பிறந்த பிள்ளை தன்னைக் கேவலப்படுத்துவதை யார் பொறுப்பார்? இனி இந்த அரண்மனை வாசலை மிதிக்க மாட்டேன் என்று வெளியேறிவிட்டார். போருக்கு முதல் நாள் தன் இல்லம் வருமாறு, தன் தம்பியான விதுரரை அழைக்கிறார் திருதராஷ்டிரன். இந்த வாயிலை மிதிக்க மாட்டேன் என்று சபதமிட்ட விதுரர் அண்ணன் அழைக்கிறார் என்று சொன்னவுடன் மீண்டும் வரக் காரணம் - அண்ணன் என்பதால் அல்ல; அது அரசரின் ஆணை எனக் கருதினார். அரண்மனையில் நுழைந்து, மன்னரைக் காண விதுரர் உள்ளே செல்கிறார். மன்னா.. நான் விதுரன் வந்திருக்கிறேன் என்று வணங்கி நிற்கிறார். போரின் முடிவு எப்படியிருக்குமோ என்று பயந்த திருதராஷ்டிரன் விதுரரின் வரவால் மகிழ்ச்சியடைந்தார். பற்பல சுகபோகங்கள் இருந்தும் என்னால் உறங்க முடியவில்லை தம்பி... என்று சோகத்துடன் மன்னர் கூற, அங்குதான் விதுர நீதி ஆரம்பமாகிறது.
மன்னா! உங்களுக்கு இருக்கும் சுகபோகங்களுக்கு தூக்கம் வராமல் போனது அதிசயமே. ஆனால் தூக்கம் வராமல் தவிப்போரும் உளர். உணவு இல்லாதவன் தூங்கமாட்டான்; கெட்ட நடத்தை உள்ளவனுக்கு தூக்கம் வராது; திருடன் தூங்கமாட்டான்; ஏராளமான உணவு உண்டவனுக்கு தூக்கம் வராது; நோயுற்றவன் தூங்கமாட்டான்; தீயவனுக்கு தூக்கம் வராது. பிறர் மனைவியை அடைய முயற்சிப்பவனுக்கும் காமுகனுக்கும் தூக்கம் வராது; நல்லவர்களை விரோதித்துக் கொண்டவனுக்குத் தூக்கம் வராது; பண்பில்லாதவளை மனைவியாகக் கொண்டவனுக்குத் தூக்கம் வராது; கெட்ட எண்ணங்கள் கொண்டவனுக்குத் தூக்கம் வராது; நல்ல பிள்ளைகளைப் பெறாதவனுக்குத் தூக்கம் வராது.. இப்படி விதுரர் சொல்லிக்கொண்டே போக, திருதராஷ்டிரன் தன் தம்பியினுடைய பேச்சைக் கேட்டுக்கொண்டே, எப்படிப்பட்ட அறிஞனை - தர்மவானை நாம் துரத்திவிட்டோம் என்று வருந்துகிறார்.
விதுரரோ சொல்லிக்கொண்டே போகிறார். ஒரு மன்னரின் கடமை; அவருடைய தேசத்து மக்களின் நலன்; மக்களைத் துன்புறுத்தாமல் எப்படி மகிழ்ச்சியுடன் அவர்களை வாழவைப்பது... இப்படி 600-க்கும் மேற்பட்ட செய்யுட்களின் மூலம் திருதராஷ்டிரனுக்கு விளக்குகிறார். இதுவே விதுர நீதி என்பதாகும். ஐயாயிரம் ஆண்டுகட்குமுன் விதுரர் சொன்னதும், கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் கவுடில்யர் என்கிற சாணக்கியர் எழுதிய அர்த்த சாஸ்திரமும், கி.மு. முதல் நூற்றாண்டில் வள்ளுவப் பெருந்தகை எழுதிய திருக்குறளும் நல்லாட்சி நடத்த உபதேசித்த வேதங்களேயாகும். ஆட்சிக்கு வருகிறவர்கள் இம் மூன்றில் ஒன்றைப் படித்தாலும் நல்லாட்சி தருவர்.
 மகாபாரதத்தில் ஒரு கதை உண்டு. "யுதிஷ்டிரரிடம் கேள்வி கேட்டார் விதுரர். காட்டில் நெருப்புப் பற்றி எரிந்தால் பாதுகாப்போடு இருந்து தப்பிப்பது எப்படி?"  யுதிஷ்டிரர் பதில் சொன்னார்: "தந்தையே! சுற்றித்திரிய கூடிய சிங்கம்.புலி.சிறுத்தை. யானைகள். மற்றும் வேகமாக ஓடக்கூடிய மான்கள். போன்ற அனைத்து காட்டு தீயில் எரிந்து சாம்பலாகிவிடும். ஆனால் வலை களில் வசிக்கும் எலிகள் மட்டும் தீ எரிந்து முடித்த பிறகு வெளியில் வந்து அமைதி நிறைந்த வாழ்க்கை வாழும். அப்படி நாம் இருந்து தால் தப்பித்து விடலாம். அபாய வேளைகளில் தனித்து வாழ வேண்டியதன் அவசியத்தை இதை விட பொருத்தமாக விளக்க முடியாது. "கொரோன"பயங்கர நெருப்புக்கு சமம்.தன் வீட்டுக்குள் யார் இருப்பார்களோ.அவர்கள் பாதுகாப்பாக வாழ்வார்கள். அவர்கள் எலிகள் அல்ல. அனல் அபாயம் தணிந்த பிறகு வெளியே வந்து மீண்டும் வாழ்வைச் சீரமைக்கத் தெரிந்த புலிகள்🐯. ஒரு நாளிதழில் வெளிவந்த கதை இது.
 தர்மம் மனிதனின் நிலைக்கு ஏற்ப மாறக் கூடியது... 

திறன் அற்றவர் ஆளும் ராஜ்யம் விரைவில் நிலை குலையும்... 

- விதுரர்

விதுர நீதி பகுதி 6 - 

சொர்கத்தை அடைய பத்து வழிகள்!

அறிவு, ஞானம், வயது, அனுபவம் முதலியவைகளில் பெரியவர்களானவர்கள், எந்தச் சபையில் இல்லையோ அது சபை ஆகாது.

யார் தர்மத்தைச் சொல்லவில்லையோ, அவர்கள் பெரியோர்களாக மாட்டார்கள்.

எதில் சத்தியம் இல்லையோ அது தர்மமாகாது. அந்தச் சத்தியமே கபடத்துடன்கூடி இருந்தால் அது சத்தியமாகாது.

சத்தியம், அடக்கம், சாஸ்திர ஞானம், தேவதை வழிபாடு, குலத்தை மேமைப் படுத்தும் காரியம், ஒழுக்கம், பலம், செல்வம், சூரத்தனம், சமத்காரமாகப் பேசுதல் என்னும் இந்தப் பத்தும், சொர்கத்தை அடையச் செய்யும் காரணங்கள் ஆகும்.

இரவில் சுகமாக வாழத்தேவையானவற்றைப் பகலில் தேடி வைத்துக் கொள்ள வேண்டும். மழைக்காலத்தில் சுகமாக வாழத் தேவையானவைகளை மற்ற எட்டு மாதங்களில், தயார் செய்து கொள்ல வேண்டும்.

அது போல, முதுமைக்காலத்தில் சுகமாக வாழ்வதற்கு வேண்டியவைகளை இளமைக்காலத்திலேயே தயார் செய்து கொள்ள வேண்டும். ஜன்மாந்திரத்தில், சுகமாக வாழத் தேவையான நற்செயல்கள், தர்மம், முதலியவைகளை உயிரோடு இருக்கும் வரை செய்ய வேண்டும்.

அதர்மத்தால் சம்பாதிக்கப்பட்ட செல்வத்தால் எந்த தோஷமானது தீர்க்கப்படுகிறதோ, அந்த் தோஷம் தீர்க்கப் படாததாகவே ஆகிறது. அதைத்தவிர இன்னொரு தோஷமும் சேருகிறது.

தர்மமே மிகச்சிறந்த நன்மையை அளிக்கக் கூடியது. பொறுமையே மிகச்சிறந்த அமைதியைக் கொடுக்கும். ஞானமே மிகச்சிறந்த திருப்தியை அளிக்கும். அஹிம்ஸை ஒன்றே எல்லா ஸுகங்களையும் கொடுக்கக் கூடியது.
🌸🌸🌸🌸🌸🌸

 #விதுரநீதிஉரைநடைத்தொடர்
                 {விதுர நீதி - 6

"உறக்கம், அயர்வு {தூக்கக் கலக்கம்}, அச்சம், கோபம், சோம்பல், காலதாமதம் "ஆகிய ஆறு குறைகளையும் செழிப்பை அடைய விரும்பும் மனிதன் தவிர்க்க வேண்டும்..!!

சாத்திரங்களுக்கு விளக்கமளிக்க இயலாத குரு, கல்லாத புரோகிதர், பாதுகாக்க இயலாத மன்னன், ஏற்கவியலா {இனிமையற்ற} வார்த்தைகள் பேசும் மனைவி, வயலுக்குச் செல்ல விரும்பா மாட்டு மந்தையாளன் {இடையன்},  காட்டுக்காக கிராமத்தை துறக்க விரும்பும் நாவிதர் ஆகிய அறுவரையும் உடைந்த படகை கடலில் தள்ளுவது போலத் துறக்க வேண்டும்....!!

உண்மை, ஈகை {தானமளித்தல்}, விடாமுயற்சி {தளர்விலா உழைப்பு}, இரக்கம், மன்னிக்கும் மனநிலை, பொறுமை ஆகிய ஆறு குணங்களையும் ஒரு மனிதன் ஒருபோதும் விடக்கூடாது...!! 

பசுக்கள், தொண்டு, உழவு {விவசாயம்}, மனைவி, கல்வி, சூத்திரனின் செல்வம் ஆகிய ஆறும் புறக்கணிக்கப்பட்டால் உடனே அழிந்து விடும்...!!

1.கல்வி கற்ற சீடர்கள் தங்கள் குருக்களையும்; 2.மணமானவர்கள் தங்கள் அன்னையரையும்; 3.விருப்பங்கள் ஈடேறியவர்கள், பெண்களையும்; 4.வெற்றியடைந்தவர்கள், உதவி செய்தவர்களையும்; 5.ஆற்றைக் கடந்தவர்கள், {தங்களைச் சுமந்த} படகையும், 6.பிணி குணமான நோயாளிகள், மருத்துவர்களையும் என இந்த ஆறு பேரும், தங்களுக்குக் கடமையாற்றியவர்களை மறந்து போவார்கள்....!!

உடல்நலன், கடன்படாநிலை, வீட்டில் வாழ்தல் {வெளிநாடு செல்லாமல் பிழைக்கக்கூடிய வாய்ப்பு உள்ள நிலை}, நன்மனிதர்களின் துணை, வாழ்வாதாரங்களுக்கான வழிகளில் உறுதி, அச்சமற்று இருத்தல் ஆகிய ஆறும், ஓ! மன்னா {#திருதராஷ்டிரரே}, ஒரு மனிதனுக்கு மகிழ்ச்சி அளிக்கின்றன.

பொறாமையுள்ளோர், அருவருப்புள்ளோர், மனநிறைவற்றோர், கோபமுள்ளோர், எப்போதும் சந்தேகமுள்ளோர், பிறரின் நற்பேறைச் சார்ந்து இருப்போர் ஆகிய அறுவரும் எப்போதும் பரிதாப நிலையிலேயே {#துக்கமாகவே} இருப்பர்.

ஓ! மன்னா {#திருதராஷ்டிரரே}, செல்வத்தை அடைதல், தடையற்ற உடல் நலன், இனிய பேச்சுடைய அன்பிற்குரிய மனைவி, கீழ்ப்படியும் மகன், இலாபகரமான அறிவு {செல்வம் ஈட்டக்கூடிய திறமை} ஆகிய ஆறையும் கொண்ட மனிதர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர்.

மனித இதயத்தில் எப்போதும் குடி கொண்டிருக்கும் {காமம், குரோதம், லோபம், மோஹம், மதம், மாத்ஸரியம் [அதாவது] ஆசை, கோபம், பேராசை,  மோகம், வெறி, பொறாமை ஆகிய} அந்த ஆறையும் அடக்கியவன், தனது புலன்களை {#பொறிகளை} வென்று, எந்தப் பாவத்தையும் இழைப்பதில்லை. எனவே, அவன் ஆபத்துகளுக்கு இடம் கொடுப்பதில்லை.

திருடர்கள், பொறுப்பற்றவர்களாலும், மருத்துவர்கள், நோயாளிகளாலும், பெண்கள், காமத்தால் பாதிக்கப்பட்டவர்களாலும், புரோகிதர்கள், வேள்வி செய்பவர்களாலும், மன்னன், சண்டையிடுபவர்களாலும், கடைசியாக, கற்றோர், கல்லாதோராலும் என இந்த அறுவரும் மற்ற அறுவரால் வாழ்கின்றனர்....!!
     {#ஏழானவை}

உறுதியாக நிறுவப்பட்ட ஏகாதிபதிகளுக்குக் கூட அழிவை ஏற்படுத்தக் கூடியவையும், துயரத்தைத் அளிக்கக்கூடியவையுமான,  1.பெண்கள், 2.பகடை, 
3.வேட்டை, 4.மது, 5.கடுஞ்சொல், 6.கடுந்தண்டனை, 7.செல்வத்தை வீணடித்தல், #ஆகியஏழுதீமைகளை ஒரு மன்னன் கைவிட வேண்டும்...!!

{#எட்டானவை}

1. அந்தணர்களை வெறுப்பது, 
2.அந்தணர்களுடன் சச்சரவு, 3.அந்தணர்களின் உடைமைகளைப் பறிமுதல் செய்வது, 
4.அந்தணனின் உயிரைப் பறிப்பது, 
5.அந்தணர்களை நிந்திப்பதில் இன்பம் கொள்வது, 6.அந்தணர்களின் புகழைக் கேட்டு வருந்துவது, 
7.{அறச்} சடங்குகளில் அவர்களை {அந்தணர்களை} மறப்பது, 
8.அவர்கள் {அந்தணர்கள்} எதையும் கேட்கும் போது, அவர்களைப் பழிவாங்குவது #ஆகியஎட்டும்_அழிவடைய #விதிக்கப்பட்ட_மனிதனின் #உடனடி_அறிகுறிகளாகும். அறிவுடைய மனிதன் இந்த வரம்புமீறல்களை அறிந்து கொண்டு, அவற்றைத் தவிர்க்க வேண்டும்....!!

ஓ! பாரதரே {#திருதராஷ்டரரே}, 1.நண்பர்களுடன் சந்திப்பு, 2.அபரிமிதமான செல்வத்தை அடைவது, 
3.மகனின் அணைப்பு, 
4.கல்வி, 
5.சரியான நேரங்களில் நண்பர்களுடன் உரையாடல், 6.தன் தரப்பைச் சார்ந்த மனிதரின் முன்னேற்றம் {மேன்மை}, 
7.எதிர்பார்ப்பை {விரும்பியதை} அடைவது, 8.சமூகத்தில் மரியாதை ஆகிய எட்டும் வாழ்வில் கிடைக்கக்கூடிய மகிழ்ச்சியின் சாரமேயாகும், இவை யாவையும் ஒருவனால் இங்கே {#இவ்வுலகில்} மட்டுமே அடைய முடியும்...!!

அறிவு, உயர்பிறப்பு, தன்னடக்கம், கல்வி, ஆற்றல், நிதானமான பேச்சு, தன் சக்திக்குத் தக்க கொடை, செய்நன்றி அறிதல் ஆகிய #எட்டு_குணங்களும்_ஒரு #மனிதனைப்_புகழடையச் செய்கின்றன....!!

     {#ஒன்பதானவை}

இந்த வீட்டுக்கு #ஒன்பது_வாயில்கள், 
#மூன்று_தூண்கள் மற்றும் #ஐந்து_சாட்சிகளாகும். அது ஆன்மாவால் நிரம்பியிருக்கிறது. இவையனைத்தையும் உண்மையில் அறிந்த ஞானமுள்ளவனே {கல்வி} கற்றவனாவான். [5]*

*[5] அதாவது, 
{#மூச்சுவிடும்செயல்பாடுகளான} 
"இடகலை" {இளை}, 
"பிங்கலை "{பிங்களை}, "சுழிமுனை" {சூஷுமனை} எனும்] #மூன்று_தூண்களில் நிற்கும் வீடான இந்த உடலுக்கு,

** [இரண்டு கண்கள், இரண்டு காதுகள், இரண்டு மூக்கு துவாரங்கள், ஒரு வாய், ஆசனவாய், குறி ஆகிய]** #ஒன்பது_ஓட்டைகள் என்ற வாயில்களும், 
#ஐம்பொறிகள் அந்த வீட்டில் வசித்து செயல்படுபவையாக - சாட்சிகளாக இருக்கின்றன. #உடலாகிய_அந்த_வீட்டில் #ஆன்மா_என்ற_தலைவன் வசிக்கிறான். அதை #உண்மையில்_அறிந்தவனே #கல்விமானாவான்_என்பதே #பொருள்}.
***********************


விதுர நீதி பகுதி - 7 

பொறுமை!

ஸஞ்ஜயன் திருதிராஷ்டிரரிடம், "பாண்டவர்களுக்கு ஒன்றுமே கொடுக்கப்படாவிட்டால் போரை இனி தடுக்க முடியாது" என்று கூறிச்செல்ல அதைக் கேட்ட திருதிராஷ்டிரர் மிகுந்த மனக்கவலை அடைந்தார்.

அவர் விதுரரை வரவழைத்து இவ்வாறு கூறினார் " விதுரரே!, உம்மைப் போன்று தர்மம் - அதர்மங்கள் பற்றி அறிந்தவர் யாருமில்லை. நான் மிகவும் மனக்கவலை அடைந்திருக்கிறேன்! இவையெல்லாம் ஏன் நடக்கிறது? என்னுடைய நன்மைக்குத் தகுந்த அறிவுரைகளைச் சொல்" என்றார்.

விதுரர் கூறினார், "மன்னா! ஆயுதத்தால் ஒரே ஒருவன் தான் கொல்லப்படுகிறான். ஆனால் கெட்ட எண்ணங்களால் பலருக்கு அழிவு ஏற்படுகிறது.

பொறுத்தருள்தல் மனிதனுக்கு மிகச்சிறந்த பலம். வலிமையற்றவர்களுக்குப் பொறுமை ஒரு நற்குணமாகும். திறமைசாலிகளுக்கு அது ஒரு அணிகலன்.

எவனுடைய கையில் பொருமை என்னும் வாள் இருக்கிறதோ, கெட்டவர்கள் அவனுக்கு எந்தக் கெடுதலையும் செய்ய முடியாது.

தர்மமே மிகச்சிறந்த நன்மையை அளிக்கக் கூடியது. பொறுமையே மிகச்சிறந்த அமைதியைக் கொடுக்கும். ஞானமே மிகச்சிறந்த திருப்தியை அளிக்கும். அஹிம்ஸை ஒன்றே எல்லா ஸுகங்களையும் கொடுக்கக் கூடியது.

அரசனாக இருக்கும் ஒருவன் போரைக் கண்டு அஞ்சினாலோ, அந்தணன் ஒருவன் வீட்டைத் துறக்க அஞ்சினாலோ அவனை பூமி விழுங்கி விடுகிறது.

திறமைசாலியிடமுள்ள பொறுமையும், ஏழையிடமுள்ள தானம் செய்யும் குணமும் மோஷத்தை உண்டு பண்ணக் கூடியவை. செல்வம் இருந்தும் எவன் தானம் செய்வதில்லையோ, வறியவனாயிருந்தும் எவன் தவம் செய்வதில்லையோ, கல்லைக் கட்டிக் கொண்டு நீருக்குள் மூழ்குவதற்குச் சமமானவர்கள்.

பணம் இரண்டு தகாத வழிகளில் செலவழியக் கூடும். ஒன்று தகுதியற்றவர்களுக்குக் கொடுத்தல், மற்றொன்று தகுதியுள்ளவருக்குக் கொடுக்காமலிருத்தல். யோகியான துறவி, போரில் முனைந்ததால் கொல்லப்படவிருக்கும் க்ஷத்ரியன் இவ்விருவரும் ப்ரம்மலோகத்திற்குச் செல்கிறார்கள்.
🌸🌸🌸🌸🌸🌸
விதுர நீதி உணர்த்தும்
பொறுமையின் பெருமை

⚜பொறுமை சாலியிடம் உள்ள ஓரே குறைபாடு
 " அவன் பலவீனம் ஆனவன் " என பிறர் எண்ணுவது.

ஆனால் பொறுமை ஓரு குறை அல்ல. வலிமை மிகுந்த ஓன்று தான்.  மற்றவர்கள் தாக்கினாலும் பழி வாங்காமல் இருப்பதே பொறுமை.

🌸பொறுமை என்ற வாளை ஏந்தியவன் எந்த விரோதியையும் வெல்ல முடியும்.

🌺புல்லற்ற தரை மீது விழும் தீ தானாகவே அணைந்து போய்விடும், அருகிலுள்ள  மற்ற பொருட்களை சேதம் செய்யாது. பொறுமையற்றவன் தான் அழிந்து போவதுடன் சுற்றி உள்ளவர்களையும் அழித்து விடுவான்.

🌺நேர்மை தான் தலைசிறந்த பண்பு ஆகும். முழுமையான அறிவே திருபதி ஆகும். பொறுமையே மகிழ்ச்சிக்கு வழியாகும்.

🍀பொறுமையின் பரீட்சை தாயின் கருவறையிலேயே ஆரம்பாகி விடுகிறது. கருவறையில் பத்து மாதம் பொறுமையாக  உள்ள குழந்தையே நிறை பிரசவமாகிறது. பொறுமையில்லாத குழந்தையே குறை பிரசவமாகிறது.

விதுர நீதி பகுதி - 8 - 

உத்தமரை நாடு!

திருதிராஷ்ட்ரர்: விதுரா! நீ மாபெரும் அறிஞன். இதுவரை கூறியதைப் போன்ற மேலும் பல நல்ல அறிவுரைகளை எனக்கு விளக்கிச் சொல்வாயாக. உன் சொற்கள் நற்பண்புகளை வலியுறுத்துகின்றன. உலக நன்மைக்கான விஷயங்களால் நிரம்பி விளங்குகின்றன. அவை அழகு ததும்பும் உண்மைகலாக வெளிப்படுகின்றன. என் மனம் திருப்தியுறாமல் மேலும் கேக விழைகிறது. 

விதுரர் கூறலானார்: "மன்னா! மனிதர்களில் முதல் தரமான மனிதன் உலகிலுள்ள அனைவரும், அனைத்தும் சௌக்கியமாக வாழ வேண்டுமென ஆசைப்படுவான். அத்தகைய நிலைக்கு எதிரான எதையும் என்றும் அவன் ஆதரிக்க மாட்டான். அவன் உண்மையையே பேசுவான். கனிவுடன் பழகுவான். உடல்-மன உணர்ச்சிகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பான்.

நடுத்தரமான மனிதன் வாக்குறுதிகள் கொடுப்பான். அவற்ரை நிறைவேற்றியும் தருவான். எதுவும் கொடுப்பதாக வாக்களித்தால் அவ்வாறே கொடுட்தும் விடுவான். பிறரிடம் குற்றம் கண்டுபிடித்த வண்ணம் இருப்பான்.

மனிதர்களில் கீழானவர்கள் யாருக்கும் அடங்க மாட்டார்கள். எப்போதும் ஆவேசமாக இருப்பார்கள். பாவச் செயல்களில் ஈடுபடுவார்கள். பயங்கரமாகக் கோபப்படுவார்கள். நன்றி கெட்டவர்களாக இருப்பார்கள். அவர்கள் யாருக்கும் நண்பர்கள் அல்லர். சில சமயம் நல்லவர்கள் போல் பழகினாலும் அவர்கள் கொடிய மனம் உடையவர்களே.

கீழ்தரமானவன் பெரியவர்கள் கூறும் நல்ல ஆலோசனைகளின் படி நடந்து கொள்ள மாட்டான். அந்த ஆலோசனைகளால் நன்மை விளையுமென அவன் நம்புவதில்லை. அவன் தன்னையே சந்தேகப்படுபவனாக இருப்பான். தன்னுடைய நண்பர்களைக் கூடக் காட்டிக்கொடுத்துவிடுவான்.

பொறாமை கொள்ளாதிருத்தல், நேர்மையான பேச்சு, உள்ளத் தூய்மை, போதுமென்ற மனத்திருப்தி, எரிச்சலூட்டாத இனிய பேச்சு, மனக்கட்டுப்பாடு, வாய்மை, மனவுறுதி இம்மாதிரியான நற்பண்புகளைத் தீயவர்களிடம் எதிர்பாக்க முடியாது.

வாழ்க்கையில் வளம் பெற்று முன்னேற விரும்புகிறவன் மேற்கூறிய மூவகை மனிதர்களில் உத்தமமான மனிதர்களை மட்டும் அணுக வேண்டும். தவிர்க்க இயலாத சூழ்நிலைகளில் நடுத்தரமான மனிதர்களை அணுகலாம். ஆனால் ஒரு போதும் கீழ்த்தரமான மனிதர்களைச் சார்ந்திருக்கக் கூடாது.
🌸🌸🌸🌸
மூடர்கள் & நல்லோர் பண்பு நலன்கள்
     
              நேர்மையற்றதனத்தை  மட்டுமே சார்ந்திருக்கும் வளமை,அழிக்கப்படும் என்றே விதிக்கப்பட்டிருக்கிறது. எனினும், வலிமை, மென்மை ஆகிய இரண்டையும் சார்ந்த வளம், ஒருவனின் மகன்கள் மற்றும் பேரர்களிடம் திறத்துடன் இறங்கிச் செல்கிறது. ஒருவர் செய்யும் தர்மமே ஏழேழு  பரம்பரைக்கும் காத்து நின்று குலம் காக்கும்.

             தங்கள்  குலம் கௌரவம் காக்க  வேண்டியே பாண்டவர்கள் சூதாட்டத்தில் கலந்து கொள்ள ஒத்துக் கொண்டனர்.அது தான்  உயர்ந்த குலத்தோர் பண்பு என்று விதுரர் கூறுகிறார். 

மேலும்  தொடர்கிறார்.

           “ ஓ! மன்னா, வெறும் வெளியில்  ஆகாயத்தைத் தனது முட்டியால் உடைக்க நினைப்பவர்களைப் போல், வானத்தில் இருக்கும் ஆவி நிரம்பிய இந்திரவில்லை {வானவில்லை} வளைக்க முயல்பவர்களைப் போல், சூரியனின் அருவக் கதிர்களைப் பிடிக்க விரும்புபவர்களைப் போல்  பதினேழு வகையான  முட்டாள் மனிதர்களைக் குறித்துச் சுயம்புவின் மகனான மனு சொல்லியிருக்கிறார்.

பதினேழு வகையான மூடர்கள்

1 . கட்டுப்படுத்தப்பட இயலாதவனைக் கட்டுப்படுத்த முயல்பவன்.

2 . சிறு லாபங்களால் மகிழ்ச்சியடைபவன்.

3 . எதிரிகளிடம் பணிவாகப் பணி செய்பவன்.

4 . பெண்களின் பலவீனத்தைப் பயன்படுத்தி {அவர்களைக்} கட்டுப்படுத்த முயல்பவன். 

5 . கேட்கக்கூடாதவனிடம் தானம் கேட்பவன்.

6 . எதையும் செய்யாமலே, தன்னைப் புகழ்ந்து கொள்பவன் {தற்பெருமை பேசிக் கொள்பவன்}.
7 . உயர்ந்த குடும்பத்தில் பிறந்திருப்பினும், முறையற்ற செய்கையைச் செய்பவன்.

8 . பலமற்றவனாக இருந்து கொண்டு, பலமானவனிடம் எப்போதும் பகை பாராட்டி வருபவன்.

9  . ஏளனமாகக் கேட்டுக் கொண்டிருப்பவனிடம் பேசுபவன்.

10 . அடைய முடியாததை அடைய விரும்புபவன்.

11 . மாமனாராக இருந்து கொண்டு, தனது மருமகளிடம் கேலி செய்பவன். தனது மருமகளால் தனது அச்சங்கள் அனைத்தும் விலகியதாகத் தற்பெருமை பேசுபவன்.

12 . தனது வித்துகளை வேறு நிலத்தில் சிதற விடுபவன். {பிறர் மனைவியரை பலவந்தமாய் அடைபவன்}.

13 . தன் மனைவியைக் குறித்து பிறரிடம் தவறாகப் பேசுபவன்.

14 .  பிறரிடம் இருந்து எதையும் பெற்றுக் கொண்டு, அது நினைவில்லையே என்று சொல்பவன்.

15 . புனித இடங்களில் தானமளித்துவிட்டு, வீட்டில் தன் வார்த்தைகளால் {அவற்றைச் சொல்லித்} தற்பெருமை பேசுபவன்.

16 . பொய்மையை உண்மை என்று நிறுவ முயல்பவன்

17 . பெண்களால் வரும் பொருளைக் கொண்டு பிழைப்பவன்.

ஆகியோரே அந்தப் பதினேழு வகையான மூடர்கள் ஆவர்.இவர்களால் எப்போதும் இவர்கள் உடன் இருப்பவர்களுக்கு ஆபத்து தான். கரங்களில் சுருக்குக் கயிறுகளோடு {பாசங்களோடு} வரும் யமனின் தூதர்கள், முதலில் அம்மனிதர்களை நரகத்திற்கு இழுத்துச் செல்வார்கள்.

அழிவை தரும் மூடர் நடத்தை 

 முதுமை, அழகைக் கொல்கிறது {அழிக்கிறது}; 

பொறுமை, நம்பிக்கையையும்; 

மரணம், வாழ்வையும்;

அறப்பயிற்சி, உலகம் சார்ந்த இன்பங்களையும்; 

காமம், தன்மானத்தையும் {அடக்கத்தையும்};
தீயோர் தோழமை, நன்னடத்தையையும்; கோபம், செழுமையையும்; 

செருக்கு அனைத்தையும் கொல்லும் {அழிக்கும்}” என்கிறார்  விதுரன்.

மரணத்தை துரிதப்படுத்தும் குணம்

          திருதராஷ்டிரன் விதுரனிடம் , “நூறு ஆண்டுகள் வாழ்நாள் {ஆயுள்} கொண்டவன் என்று மனிதன் வேதங்களில் பேசப்படுகிறான். அப்படி இருக்கையில், மனிதர்கள் அனைவரும் அந்தக் குறிப்பிட்ட வயதை அடைவதில்லை. ஏன் நூறு வயது வரை வாழ்வதில்லை? ” என்று கேட்டான்.

அதற்கு விதுரன்  “அதிகமான செருக்கு, அதிகமான பேச்சு, அதிகமாக உண்ணுதல், கோபம், இன்பத்தில் விருப்பம், உட்பகை ஆகிய ஆறும் மனித உயிரினங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஆயுள் காலத்தை அறுக்கும் {ஆறு} கூரிய வாட்களாகும். இவையே மனிதர்களைக் கொல்கின்றன; மரணம் அல்ல. மனிதர்கள் தங்கள் முறையற்ற நடத்தை மற்றும் வாழ்க்கை முறைகளாலேயே மரணத்தை விரைவில் தேடிக் கொள்கின்றனர். 

தனக்கென தரப்பட்ட ஆயுள் காலம் வரை வாழ யாருக்கு பரிகாரம் தேவை 

             தன் மேல் நம்பிக்கை கொண்ட ஒருவனுடைய மனைவியின் உறவை  நாடுபவன் {தன்னை நம்பியவனின் மனைவியை அடைபவன்}; 

              தனது ஆசானின் படுக்கையில் அத்துமீறி நடப்பவன் {குருவின் மனைவியை அடைபவன்}, 

         சூத்திரப் பெண்ணின் கணவனாகவோ, மது குடிப்பவனாகவோ உள்ள பிராமணன்; 

         அந்தணர்களை நிந்திப்பவன், அல்லது அவர்களுக்குத் தலைவனாக ஆகிற வேறு வர்ணத்தைச் சார்ந்தவன்  ( அல்லது) அவர்களுக்கு ஆதரவாக இருக்கும் {அந்தணர்களின் வாழ்வாதாரங்களாக இருக்கும்} நிலங்களை அபகரிப்பவன்;

              தன்னிடம் சரணடைந்தவர்களின் உயிரை எடுப்பவன் ஆகியோர் அனைவரும் அந்தணர்களைக் கொன்ற பாவத்தைச் செய்த குற்றவாளிகளாவர். 

          இது போன்ற மனிதர்களுடன் தொடர்பு ஏற்பட்டால் தொடர்பு கொண்டவர்கள் தனக்கென தரப்பட்ட ஆயுள் காலம் வரை வாழ  பரிகாரம் தேவை பரிகாரம் தேவை என்று வேதங்கள் கூறுகின்றன.

தனக்கென தரப்பட்ட ஆயுள் காலம் வரை வாழும்  யாருக்கு சொர்க்கம் கிடைக்கும்

               ஞானிகளின் கற்பித்தல்களை {போதனைகளை} ஏற்றுக் கொள்பவன்;
            அறநெறிகளின் விதிகளை அறிந்தவன்; பரந்த மனமுடையவன் {தானமளிக்கும் தயாளன்}; 

                  முதலில் தேவர்களுக்கும், பித்ருக்களுக்கும் உணவை அர்ப்பணித்த பிறகு உண்பவன்; 

               யார் மேலும் பொறாமை கொள்ளாதவன்; 

⚘                  பிறருக்குத் தீங்கை ஏற்படுத்தும் எதையும் செய்ய இயலாதவன்; 

            நன்றி, உண்மை, எளிமை, கல்வி ஆகியவற்றுடன் இருப்பவன் போன்ற நற்குணங்களை தன் வாழ்நாள் முழுவதும் பின்பற்றுபவர்களே  தனக்கென தரப்பட்ட ஆயுள் காலம் வரை வாழ்ந்து சொர்க்கத்தை அடைவதில் வெல்கிறார்கள். 

நல்லோர் எப்போது தியாகம் செய்யலாம்?

                        எப்போதுமே இனிமையான வார்த்தைகளைப் பேசும் நல்லோர்  பலர் உண்டு. எனினும், இனிமையற்ற, ஆனால் மருத்துவக் குணம் கொண்ட வார்த்தைகளைப் பேசுவோரும், கேட்போரும் கிடைப்பதரிது.

                 தனது தலைவனால் ஏற்கத்தக்கது, தகாதது எனக் கருதாமல், அறத்தை மட்டுமே கண்டறிந்து , கசப்பாக  இருப்பினும், மருந்தாக இருப்பவற்றைச் சொல்லும் நல்லோர்  எப்போதும்  அந்த  நாட்டுக்கும் நாட்டு மன்னனுக்குமே  பலத்தையே சேர்க்கிறான். நாட்டு மக்களுக்கு நன்மை தரக்கூடிய ஒரு விசயம் கிடைக்குமானால்

        ஒரு குடும்பத்துக்காக, அதன் உறுப்பினர் ஒருவரைத் தியாகம் செய்யலாம்; 

        ஒரு கிராமத்துக்காக, ஒரு குடும்பத்தைத் தியாகம் செய்யலாம்; 

          ஒரு நாட்டுக்காக ஒரு கிராமத்தைத் தியாகம் செய்யலாம்; 

            ஒருவனது ஆன்மாவுக்காக, முழுப் பூமியையும் கூடத் தியாகம் செய்யலாம்.

யாரார் எதை பாதுகாக்க வேண்டும்?

         தனக்கு {வருங்காலத்தில்} வரக்கூடிய துன்பங்களை நோக்கில் கொண்டு, ஒருவன் தனது செல்வத்தைப் பாதுகாக்க வேண்டும்; 

                  தனது செல்வத்தைக் கொண்டு ஒருவன் தனது மனைவிகளைப் பாதுகாக்க வேண்டும். 

         தனது செல்வம் மற்றும் மனைவிகளைக் கொண்டு ஒருவன் அவற்றினைக் கொண்டு தன்னை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

சூதாட்டம்

               சூதாட்டம் சண்டைகளைத் தூண்டி விடும் என்பது பழங்காலத்தில் இருந்தே காணப்படுகிறது. எனவே, ஞானமுள்ள ஒருவன், வேடிக்கைக்காகக் கூட  சூதாட்டத்தில் ஈடுபடக்கூடாது. 

 பாண்டவர்கள் கௌரவர்கள் இடையே நடந்த  சூதாட்டத்தின் போது, ஓ! மன்னா, நான் உம்மிடம், “இது சரியல்ல” என்று சொன்னேன்.நோயாளி மருந்தை விரும்பாதது போல, அப்போது எனது வார்த்தைகள் உமக்கு ஏற்புடையனவாக  இல்லை. 

                பலவண்ணத் தோகை கொண்ட மயில்களைப் போல ஒற்றுமையாக இருக்கும் பாண்டுவின் மகன்களை நீர் வீழ்த்த விரும்புகிறீர். உமது மகன்கள் அனைவருமோ வெறும் காக்கைகளாக இருக்கின்றனர். சிங்கங்களைக் கைவிட்டு, நரிகளைப் பாதுகாக்கிறீர்! ஓ! மன்னா, நேரம் வரும்போது, இவை அனைத்துக்காகவும் நீர் வருந்த வேண்டி வரும்” என்று எச்சரிக்கை செய்கிறார்.

            அவரது எச்சரிக்கையால் மனம் நொந்த திருதராஷ்டிரர் , " காக்கைகள் , சிங்கங்கள்  , நரிகள் என எதைக் கூறுகிறீர்கள்  ? " என கேட்கிறார்.

விதுர நீதி பகுதி - 9 - 

உயர் குடும்பங்கள் என்பது எவை?

திருதிராஷ்ட்டிரன்: விதுரா! உயர் குடும்பத்தில் பிறப்பதாலேயே ஒருவன் மதிப்புக்குரியவன் ஆகிவிடுவானா?

விதுரர்: இல்லை! ஒழுக்க நியாயமற்றவன் அவனுடைய பரம்பரையை மட்டும் வைத்து, மரியாதைக்குரியவன் ஆகிவிட மாட்டான்.

ஒருவனுடைய பிறப்பு எப்படிப்பட்டதாயியும், ஒழுக்கத்தை ஒட்டியே ஒருவனுக்கு மரியாதை கிட்டுகிறது.

ஏமாற்று வேலை மூலமாக வாழ்க்கை நடத்தும் மோசக்காரனை அறிவு காப்பாற்றி விடாது. கூட்டை விட்டு பறந்து செல்லும் பறவைகளைப் போல, அறிவு அவனை விட்டு விரைந்து ஓடுகின்றன.

திருதிராஷ்டிரர் கேட்டார்: 'நன் குணத்தையும், உலக நன்மையையும் போற்றும் கடவுள்கள் உயர் குடும்பங்களில் பிறந்தவர்கள் பால் அக்கறை காட்டுகிறார்கள். விதுரா! உயர் குடும்பங்கள் என்பதுதான் எவை?

விதுரர் சொல்கிறார்: 'சுய கட்டுப்பாடு, பொறுமை, தியாகம், அன்னதானம், தூய்மையான திருமணங்கள், தவம், பிரம்மத்தை உணர்ந்த தன்மை, மற்றவர்களைத் திருப்தி செய்யும் குணம் - இந்த எட்டு குணங்கள் எந்தக் குடும்பங்களில் எப்போதும் நிலவுகின்றனவோ, அவை உயர் குடும்பங்கள் ஆகும்.

பசுக்களும், செல்வமும் மிகுந்திருந்தாலும், நன்னடத்தையும் நற்குணமும் இல்லாத குடும்பங்கள், உயர்ந்த குடும்பங்கள் ஆக மாட்டா!"

🌸🌸🌸🌸

உயர்ந்தோர்கள் குண நலன்கள்🌺

             அவதூறுகளையும் நிந்தனைகளை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்றும்; கடுஞ்சொற்களைத் தவிர்க்க வேண்டும் என்றும்;  மௌனம் மற்றும் உண்மையின் சிறப்பையும்,  விதுரர் திருதராஷ்டிரருக்கு ஆத்ரேயருக்கும் சாத்யர்களுக்கும் இடையில் நடந்த உரையாடல் மூலமாக எடுத்து கூறுகிறார். 

                       அப்போது ஆத்ரேயர் சாத்யர்களிடம்  , “தீயவன், தன் பலத்தாலும், தொடர் முயற்சியாலும், புத்திகூர்மையாலும், ஆற்றலாலும் செல்வம் ஈட்டுவான் என்பது உண்மையே, ஆனால், அவனால் நேர்மையான புகழை வெல்லவே முடியாது. அதே போல, அவன் எக்குலத்தில் பிறந்திருந்தாலும் அவனால், சமூகத்தில் உயர் குலத்தில் பிறந்த  நல் மனிதருக்குரிய பேரையும் புகழையும் பெற்று நல்ல  நடத்தைகளையோ அறங்களையோ  அடையவே முடியாது”  என்கிறார்.

அப்போது
         “அறம், பொருள் ஆகிய இரண்டிலும் இருந்து வழுவாமல், அந்த இரண்டையும் மதிப்போரும், பெரும் கல்வியறிவு உடையோரும், தேவர்களும் கூட உயர் குலத்தில் பிறந்த  நல் மனிதருக்குரிய பேரையும் புகழையும் பெற்று நல்ல  நடத்தைகளையோ அறங்களையோ தாங்கள் விரும்புவதாகவே வெளிப்படுத்துகின்றனர் . அதே சமயம் எது உயர்ந்த குலமாக கருதபடுகிறது ” என ஆத்ரேயரிடம் சாத்யர்கள் கேட்கின்றனர் . 

                  அதற்க்கு ஆத்ரேயர் என்ன பதில் அளித்தார் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

💠  உயர்ந்த குடும்பங்கள், நட்பு, துயரம் ஆகியவற்றின் இலக்கணங்கள்
💠 எவை உயர்ந்த குடும்பங்கள் 
💠எவை இழிந்த குடும்பங்கள்
💠உயர்ந்த குடும்பங்கள் எப்படி வீழ்ச்சியடைகின்றன
💠வீழ்ச்சியடையாமல் இருக்க எதைப் பேண வேண்டும்
 💠அறிவு எப்படிப் புலன்கள் வழியாக அழிவடைகிறது? என்பதை சாத்யர்கள் கேட்ட கேள்விக்கு ஆத்ரேயர் பதிலாக கூறுகிறார்.

உயர்ந்த குடும்பங்கள் 

            “அறம், பொருள் ஆகிய இரண்டிலும் இருந்து வழுவாமல், அந்த இரண்டையும் மதிப்போரும், பெரும் கல்வியறிவு உடையோரும், தேவர்களும் கூட உயர்ந்த குடும்பங்களைத் தாங்கள் விரும்புவதாகவே வெளிப்படுத்துகின்றனர். 

              “தவம்,  புலனடக்கம், வேத அறிவு, பொறுமை வேள்விகள், தூயத் திருமணங்கள், அன்ன தானங்கள் ஆகிய ஏழும்  உயர் குடும்பங்களில் இருக்கும்; அந்த உயர் குடும்பங்களில் அவை முறையாகப் பயிலப்பட்டு, உயர்வாக மதிக்கப்படுகின்றன. 

               எவை சரியான பாதையில் இருந்து வழுவாமல் இருக்கின்றனவோ, எவற்றில் இருந்த உயிர்நீத்த மூதாதையர் தங்கள் வழித்தோன்றல்கள் தவறுகள் இழைப்பதைக் கண்டு வலிக்கு உள்ளாவதில்லையோ, எவை அனைத்து அறங்களையும் உற்சாகமாகப் பயில்கின்றனவோ, எவற்றில் பிறந்தோர் தாங்கள் பிறந்த குலத்தின் தூய புகழை மேம்படுத்த விரும்பி, எந்த வகையான பொய்மையையும் தவிர்க்கின்றனரோ அவையே உயர்ந்த குடும்பங்களாகும் 

🌻உயர்ந்த நிலையில் இருந்து வீழ்ந்து இழிவடையும் குடும்பங்கள்🌻

           வேள்விகள் செய்யாமை, தூய்மையற்ற திருமணங்கள், வேதங்களைப் புறக்கணித்தல், அந்தணர்களை அவமதித்தல் ஆகியவற்றைச் செய்யும் குடும்பங்கள் தங்கள் உயர்ந்த இடத்தில் இருந்து கீழே விழுந்து இழிந்தவை ஆகின்றன.

                இழிந்த குடும்பங்களின் உறுப்பினர்கள், அந்தணர்களைப் பற்றி அவதூறு பேசி, அவர்களை அவமதிப்பதாலோ,  அந்தணர்களிடம் உள்ளவற்றை மோசடி செய்து பறிப்பதாலோ அக்குடும்பங்கள் வீழ்ந்து இழிந்தவையாகின்றன. 

                 குடும்ப உறுப்பினர்களும், செல்வமும், பசுக்களும் கொண்டிருந்தாலும், நன்னடத்தை இல்லாவிட்டால் அவை குடும்பங்களாகக் கருதத்தக்கவையல்ல. அதே வேளையில், செல்வமற்றிருந்தாலும், தனித்துவக் குணங்களும், நன்னடத்தையும் கொண்ட குடும்பங்களே, குடும்பங்கள் என்று கருதப்பட்டுப் பெரும் புகழை வெல்கின்றன. 

               எனவே, நல்ல குணங்களையும், நல்ல நடத்தையையும் கவனத்துடன் பேண வேண்டும். செல்வத்தைப் பொறுத்தவரை, செல்வம் இன்று வரும், நாளை போகும். அதனால் நன்னடத்தையையே எப்போதும் பேண வேண்டும்.அதுவே என்றும் அழியாத சொத்து.உயர் குலத்தோர் பேணிக்காக்க வேண்டிய விசயங்களாக கருதப்படுகிறது.

                 செல்வமில்லாதவன் உண்மையில் குறைந்தவனல்ல. ஆனால், குணமோ, நடத்தையோ இல்லாதவன் உண்மையில் ஒன்றும் இல்லாதவனே. பசுக்களும், கால்நடைகளும், உழவு உற்பத்தியும் நிறைந்து இருந்தாலும், நல்ல குணங்களும் நடத்தையும் இல்லாதிருந்தால், உண்மையில் அக்குடும்பங்கள் மதிப்புக்கும், புகழுக்கும் தகுந்தவை அல்ல.

           சண்டைகளுக்கு வித்திடுபவனாகவோ, மன்னனுக்கு அமைச்சனாகவோ, பிறர் செல்வத்தைத் திருடுபவனாகவோ, குடும்பப் பகையைத் தூண்டுபவனாகவோ, ஏமாற்றுக்காரனாகவோ, பொய் நடத்தை கொண்டவனாகவோ, முனிவர்கள், தேவர்கள் மற்றும் விருந்தினர் ஆகியோரைச் உபசரிப்பதற்கு முன்பு உண்பவனாகவோ இருப்பவன் இழிந்த குலத்தவன் ஆவான்..

               அந்தணர்களைக் கொல்பவனோ, அவர்களிடம் வெறுப்பை ஊக்குவிப்பவனாகவோ, உழவைத் தடுப்பவனாகவோ, அதற்குத் தீங்கு விளைவிப்பவனாகவோ இருக்கும் ஒருவன் இழிந்த குலத்தவன் ஆவான்.

            இருக்கைக்கு புல்லும், அமர்வதற்குத் தரையும், பாதம் மற்றும் முகம் கழுவ நீரும், நான்காவதாக இனிய சொற்களும் நல்லோர் வீடுகளில் குறைவில்லாது இருக்கும். நீதிமிக்கச் செயல்களைப் பயில்வதில் அர்ப்பணிப்போடு இருக்கும் அறம்சார்ந்த மனிதர்கள், மரியாதையுடன் கொடுத்து விருந்தினர்களை உபசரிக்க விரும்பி, பாய், தரை, நீர், இனிய சொல் ஆகியவற்றை எப்போதும் தயாராக வைத்திருப்பார்கள். 

            சந்தன மரம் மெலிதாக இருந்தாலும், மிகத் தடிமனான பிற மரங்கள் தாங்க முடியாத பாரத்தைத் தாங்குவது போல, உயர் குடும்பங்களில் உள்ளோர், சாதாராண மனிதர்களால் இயலாத காரியமான, பெரும் சுமையைச் சுமக்க இயன்றவர்களாக எப்போதும் தயாராக இருக்கிறார்கள்.

உயர்ந்தோர்கள் நட்பு 

                   எவனுடைய கோபம் பயத்தைக் கொடுக்கிறதோ, எவன் மீது கொண்ட பயத்தால் அவனுக்காக ஒருவன் காத்திருக்கிறானோ அவன் நண்பனல்ல. ஆனால், எவனிடம் ஒரு தந்தையிடம் கிடைக்கும் ஆறுதலை ஒருவன் பெறுகிறானோ, அவனே அவனுக்கு உண்மையான நண்பனாவான். பிற நட்புகள் சாதாரணத் தொடர்புகளே. பிறப்பால் இரத்தத் தொடர்பு இல்லாமல் இருந்தாலும், உண்மையான ஆதரவளிப்பவனாகவும், பாதுகாப்பாளனாகவும் இருப்பவனே ஒருவனுக்கு உண்மையான நண்பனாக இருக்க முடியும். நிலையற்ற இதயம் கொண்டவனோ, பெரியோருக்காகக் காத்திருக்காதவனோ, மனநிலையில் உறுதியற்றவனோ நண்பர்களைப் பெறவே முடியாது.

                 நீர்வற்றிய குளங்களைக் கைவிடும் அன்னங்களைப் போல, நிலையற்ற இதயம் கொண்டவனையோ, மனதைக் கட்டுக்குள் வைக்காதவனையோ, புலன்களுக்கு அடிமையானவனையோ, வெற்றிக் கைவிடுகிறது. மனதளவில் பலமற்றவர்களே திடீரெனக் கோபத்தையோ, போதுமான காரணமே இல்லாமல் மனநிறைவையோ அடைகிறார்கள்; அவர்கள் நிலையற்ற மேகங்களைப் போன்றவர்களாவர்.

                   நண்பர்களால் உபசரிக்கப்பட்டும், அவர்களால் ஆதாயமடைந்தும்கூட, அவர்களிடம் நன்றி மறந்து இருப்பவர்களின் பிணங்களை, இரை தேடித் திரியும் பறவைகள் கூடத் தவிர்க்கின்றன. 

      நீர் ஏழையாக இருந்தாலும், செல்வந்தனாக இருந்தாலும் உமது நண்பர்களை மதிப்பீராக. ஏதாவதொரு சேவை {உதவி} கேட்கப்படும் வரை, நண்பர்களின் நேர்மையையும், நேர்மையற்ற தன்மையையும் அறிய முடியாது.

உயர்ந்தோர்கள் துயரம்

                   உண்மையில் உயர்ந்தோர்கள் சோகம் அழகைக் கொல்கிறது . சோகம் பலத்தைக் கொல்கிறது; சோகம் புரிதலைக் கொல்கிறது; மேலும் சோகம் நோயைக் கொடுக்கிறது. துயரம் என்பது, ஒருவனின் நோக்கத்தை அடைய உதவாமல்,  உடலை வற்ற செய்து, எதிரிகளை மகிழ்ச்சியடையச் செய்கிறது. எனவே, துயரத்திற்கு எப்போதும் நீங்கள் இடம் கொடுக்காதீர் 

           மனிதர்கள் இறந்து மீண்டும் பிறப்பது அடிக்கடி நிகழ்கிறது; அவர்கள் அடிக்கடி வளர்ந்து உதிர்கின்றனர். அடிக்கடி அவர்கள் பிறர் உதவியைக் கேட்கிறார்கள், அவர்களது உதவியும் பிறரால் கேட்கப்படுகிறது; அடிக்கடி அவர்கள் மற்றவர்களிடம் புலம்புகிறார்கள், அவர்களிடமும் மற்றவர்கள் புலம்புகிறார்கள். மகிழ்ச்சி மற்றும் துயரம், நிறை மற்றும் குறை, ஆதாயம் மற்றும் இழப்பு {இலாபம் மற்றும் நஷ்டம்}, வாழ்வு மற்றும் மரணம், ஆகியவை முறையான வரிசையில் அனைவராலும் அனுபவிக்கப்படுகின்றன. எனவே, தற்கட்டுப்பாடு கொண்ட  உயர்ந்த குலத்தில் பிறந்த ஒருவன் இன்பத்தில் மகிழ்ச்சியடையவும், துன்பத்தில் துயரடையவும் கூடாது.

               சாதாரண மனிதர்கள் அவற்றை கட்டுப்படுத்த தெரியாமல். அவர்கள் 
மனத்துடன் கூடிய ஐம்பொறிகளுடன் எப்போதும் அமைதியற்றே இருக்கின்றனர். பானையின் ஓட்டைகளின் வழியாக ஒழுகும் நீரைப் போல, அவற்றில் ஆறு புலன்களில் முக்கியமான ஒன்றின் வழியாக, சுய தட்டுப்பாடின்றி விலகி செல்வதால்  கொண்ட பலத்துக்குத் தக்க வகையில் அறிவு அழிவடைகிறது .உயர்ந்தோர்கள் தன் துயரங்களுக்குள் தங்களை சிக்க வைத்து கொள்வதில்லை . ”என்று ஆத்ரேயர் தேவர்களிடம் கூறியதாக விதுரர் திருதராஷ்டிரனுக்கு விளக்குகிறார்.

        அப்போது திருதராஷ்டிரன் விதுரரிடம்,  
 “ துயரங்களுக்குள் தங்களை சிக்க வைத்து கொண்டு எல்லாரும் அறிவற்ற மூடர்களை, அவர்கள் உயர்குலத்தோர் அல்லர் என்பதை நாம் எப்படி அடையாளம் காண்பது ? ” என்று கேட்கிறார் .

விதுர நீதி! -பகுதி 10

திருதிராஷ்டிரர் விதுரரிடம் கேட்கிறார் :

கவலை மிகுதியால் எனக்கு உறக்கம் வரவில்லை. உன்னைப் போன்று தர்மம், அதர்மம் பற்றி அறிந்தவர் யாருமில்லை. என்னுடைய நன்மைக்குரிய அறிவுரைகள் சொல்! 

விதுரர்: சாதாரண மனிதர்களுக்கு உறக்கம் வராததற்கு பலவிதமான காரணங்கள் உள்ளன.  

பலமுள்ள ஒருவனின் ஆதிக்கத்திற்க்கு ஒருவர் ஆளாகும் போது, ஒருவருக்குச் சொந்தமான சொத்தெல்லாம் கவரப்படும் போதும் உறக்கம் வராது, 

மேலும், காமமுள்ளவனுக்கும், திருடனுக்கும் உறக்கம் வராது.  

மாற்றானின் செல்வத்தைக் கவர்ந்து கொள்ள விரும்புகிறவனுக்கும் உறக்கம் வராது, இவ்விதமான எந்தக் குற்றமும் உங்களிடத்தில் இல்லாமல் இருந்தால் உங்களால் நன்றாக உறங்க முடியும் இவ்வாறு விதுரர் பதிலளித்தார்.

விட்டுவிட வேண்டிய குணங்கள்:

அதிகமாக உறங்குவது, உடல் அசதி, அச்சம், கோபம், சோம்பேறித்தனம், பின்பு செய்து கொள்ளலாம் என்ற எண்ணம் இந்த‌ ஆறு குணங்களையும் நாம் கட்டாயம் விட்டுவிட வேண்டும்.

விடக்கூடாத குணங்கள்:

உண்மை, தானம், கவனம், அன்பு, பொறுமை, தைரியம் இந்த ஆறு நற்குணங்களையும் எப்போதும் விட்டுவிடக்கூடாது.

தொடரும்
🌸🌸🌸

 உண்மையான தர்மம் எது என்பதை விதுரர் திருதராஷ்டிரனுக்கு அரசரான சூதன்வானுக்கும் அந்தணனான    விரோசனனுக்கும் இடையில் நடைபெற்ற ஒரு உரையாடல் மூலம் விளக்குகிறார். அதற்கு முன் சூதன்வான், வீரோசனன் இருவரும் யாரென தெரிந்து கொள்ளலாம்.

🌺சூதன்வான், வீரோசனன் பற்றி ஒரு அறிமுகம்🌺
      
                    உலகின் தோற்றத்தில் கல்ப காலத்தில் பிரம்மனுக்கு ஆறு   மகன்கள் இருந்தனர். அவர்கள் மரிச்சி, அத்ரி, அங்கிரஸ், புலஸ்தியர், புலஹர், கிரது ஆகியோர் ஆவர்.

                  மரிச்சி முனிவரின் மகன் காசியபர் ஆவார். காசியபரிடமிருந்தே அனைத்து உயிர்களும் தோன்றின.

                  தக்ஷனுக்கு (பிராஜாபதிகளில் ஒருவர்) நற்பேறு பெற்ற பதிமூன்று {13} மகள்கள் இருந்தனர். {காசியபரே இந்த தக்ஷனின் 13 மகள்களுக்கும் கணவராவார்.} 

                 அந்த தக்ஷனின் மகள்களின் பெயர்கள் பின்வருமாறு: அதிதி, திதி,தனு,  கலா, தனயு, சின்ஹிகா, குரோதா, பிராதா, விஸ்வா*, வினதை, கபிலா, முனி மற்றும் கத்ரு ஆவர். 

                   திதிக்கு ஹிரண்ய கசிபு என்று அழைக்கப்பட்ட ஒரு மகன் இருந்தான். அந்த சிறப்புமிகுந்த ஹிரண்யகசிபுவுக்கு உலகம் போற்றும் ஐந்து மகன்கள் இருந்தனர். எல்லோருக்கும் மூத்தவனின் பெயர் பிரஹலாதன், அடுத்தவன் ஸாஹ்ரதன், மூன்றாமவன் அனுராதா, அவனுக்கு அடுத்தவர்கள் சிபியும், வஷ்கலாவும் ஆவர். 

                      அந்த பிரஹலாதனுக்கு மூன்று மகன்கள் இருந்தனர் என்பது எல்லோரும் அறிந்த ஒன்று. அவர்கள் விரோசனா, கும்பா மற்றும் நிகும்பா ஆவர். 
  
              விரோசனா மணக்க ஆசைப்பட்ட கேசினி என்னும் திருமகள் மணக்க ஆசைப்பட்ட அந்தணன் சூதன்வான். வீரோசனன் அசுர குலம். சூதன்வான் அந்தணர் குலம். இருவரும் கேசினியை மணப்பதற்காக அவரவர் குல தர்மங்களை விவாதிக்கிறார்கள். அவர்கள் தரப்பு நியாயமான கருத்துக்களை மேற்கோள் காட்டி உண்மையான தர்மம் எது என்று விதுரர் கூறுகிறார்.

          🌺🌼   எல்லோரிடமும் சமமாக  அன்பு செலுத்துதல் பற்றி     திருதராஷ்டிரனுக்கு விதுரர்  கூறிய தர்மம்.🌼🌺

                தன்னை தானே அறிந்து வாழும் மனிதர்கள் மற்றும் மன்னர்கள் பற்றி அறிந்த திருதராஷ்டிரன் விதுரனிடம்  “ அறத்திற்கும் பொருளுக்கும் ஏற்புடைய இத்தகு வார்த்தைகளை எனக்கு மீண்டும் அறிவுறுத்துவாயாக. அவற்றைக் கேட்கும் தாகம் எனக்கு அடங்கவில்லை. நீ சொல்வது அழகாக இருக்கிறது. உலக தர்மம் பற்றி எனக்கு விளக்கமாக கூறு, ” வேண்டினார்.

                      விதுரன் திருதராஷ்டிரனிடம் , “புனித இடங்கள் அனைத்திலும் நீராடுவதும், அனைத்து உயிரினங்களிடத்தும் அன்பு காட்டுவதுமாகிய இரண்டும் சமமே. அனைத்து உயிரினங்களிடமும் அன்பு காட்டுவது புனித இடங்களில் நீராடுவதை விட ஒரு வேளை விஞ்சியதாக இருக்கலாம். திருதராஷ்டிரரே நீங்கள் உமது மகன்கள் அனைவரிடமும் அன்பைக் காட்டுவீராக. அதனால், இவ்வுலகில் பெரும் புகழை வெல்வீர், அதனால் இவ்வுலகில் தங்கள் காலத்திற்கு  பிறகு நீர் சொர்க்கத்தை அடைவீர்.

        ஒரு மனிதனின் நற்செயல்கள் எவ்வளவு காலம் இவ்வுலகில் பேசப்படுமோ, அவ்வளவு காலம் அவன் சொர்க்கத்தில் மகிமைப் படுத்தப்படுகிறான். 

              அதனை தங்களுக்கு புரிய வைக்க ஒரு கதை கூறுகிறேன், ”என்று கூறி விட்டு அசுரனான சூதன்வானுக்கும் அந்தணனான    விரோசனனுக்கும் இடையே.நடந்த நிகழ்வை கூறுகிறார்.

🌻கேசினியின் சுயம்வரம் 🌻

            ஒரு காலத்தில், ஒப்பற்ற அழகுடன் கூடிய கன்னிகை ஒருத்தி, கேசினி என்ற பெயரில் இருந்தாள். ஒரு நல்ல கணவனை அடையும் விருப்பத்தால் உந்தப்பட்ட கேசினி சுயம்வரத்தில் தனது தலைவனைத் தேர்ந்தெடுக்கத் தீர்மானித்தாள்.

                அப்போது திதியின் மகன்களில் {அசுரர்களில்} ஒருவனான விரோசனன் அந்தக் கன்னிகையை {கேசினியை} அடைய விரும்பி, சுயம்வர  இடத்திற்குச் சென்றான். தைத்தியர்களின் தலைவரான  விரோசனனை கண்ட கேசினி, அவனிடம் 

                “ஓ! விரோசனரே, அந்தணர்கள் மேன்மையானவர்களா? திதியின் மகன்கள் {அசுரர்கள்} மேன்மையானவர்களா? 
அந்தணர்கள் மேன்மையானவர்கள் எனில் நான் விரும்பும் சூதன்வான் ஏன் என்  மஞ்சத்தில் அமரக்கூடாது?” என்று கேட்டாள்.

              அதற்கு விரோசனன் கேசினியிடம், “பிரஜாபதியிடம் இருந்து எழுந்த அசுரர்களாகிய  நாங்களே சிறந்தவர்கள்.  நாங்களே அனைத்து உயிர்களுக்கும் மேலானவர்கள், இவ்வுலகம் எங்களுடையது என்பதில் ஐயமில்லை. அதற்கு முன் தேவர்கள் யார்? பிராமணர்கள் யார்? என்பதற்கு விளக்கம் கொடு ” என்று கேட்டான். 

                     அதற்குக் கேசினி விரோசனரிடம், “ நாம் இவ்விடத்திலேயே இருப்போமாக. நாளை இங்கே சூதன்வான் வருவார். அவரிடமே இதற்கு பதில் கேளுங்கள். அப்போது  நீங்கள் இருவரும் ஒன்றாக அமர்ந்திருப்பதைக் காண என்னை அனுமதிப்பீராக” என்றாள்.

             அதற்கு விரோசனன் {கேசினியிடம்}, “ஓ இனியவளே, அச்சமுடைய பெண்ணே {கேசினி}, நீ சொல்வதை நான் செய்வேன். காலையில் நானும் சூதன்வானும் இருவரும் ஒன்றாக அமர்ந்திருப்பதை நீ காண்பாய்” என்றான்

          “இரவு கடந்து, சூரிய ஒளி எழுந்ததும் பொழுது விடிந்தது.மறு நாள் தொடர்ந்தது , 
மறுநாள் சுயம்வர மண்டபத்தில், கேசினியுடன் விரோசனன் காத்திருந்த  இடத்திற்கு, சூதன்வான் வந்தான். அங்கே விரோசனனையும், கேசினியையும் தனக்காக சுயம்வர மண்டபத்தில் காத்திருக்க கண்டான். சூதன்வான் அங்கே வந்ததைக் கண்ட கேசினி,  தனது இருக்கையில் இருந்து எழுந்து அவனுக்கு ஓர் இருக்கையை அளித்து, கால் கழுவ நீரும், ஆர்க்கியாவும் கொடுத்தாள். பின் அவளே சூதன்வானை வரவேற்று உரிய வரவேற்பும் அளித்தாள்.

🌺வீரோசனன் சூதன்வான் வாதம் 🌺

                    அப்போது விரோசனன் தனது இருக்கையைப் பகிர்ந்து கொள்ளும்படி கேட்க, சூதன்வானோ  விரோசனனிடம் , “ஓ! விரோசனா, நான் உனது அற்புதமான தங்க இருக்கையைத் தொட்டாலும், உனக்குச் சமமாக என்னைக் கருதிக் கொண்டு, உன்னுடன் அதில் அமர மாட்டேன்” என்றான். 

             அதற்கு விரோசனன் “ஒரு பலகைத் துண்டு, ஒரு விலங்கின் தோல், புல்லாலோ வைக்கோலாலோ ஆன பாய், ஆகியவை மட்டுமே, உமக்குப் பொருத்தமானவை. எனினும், ஒரே இருக்கையை என்னுடன் பகிர்ந்து கொள்ளும் தகுதி உமக்கு இல்லை.என்றாலும் கேசினியின் வேண்டுகோளுக்காகவே ஒரே இருக்கையில் ஒன்றாக அமர சம்மதித்தேன் ” என்று நகைச்சுவையாக பதில் கூறினான்.

          அதற்குச் சூதன்வான் விரோசனனிடம், “தந்தை மற்றும் மகன், ஒரே வயதும், சமமான கல்வியும் கொண்ட பிராமணர்கள், இரு க்ஷத்திரியர்கள், இரு வைசியர்கள், இரு சூத்திரர்கள் ஆகியோர் ஓர் இருக்கையில் ஒன்றாக அமரலாம். இவர்களைத் தவிர வேறு யாரும் ஒன்றாக அமரக்கூடாது. 

               நான் அமர்ந்ததைவிடத் தாழ்ந்த இருக்கையில் அமர்ந்து கொண்டு, உன் தந்தையான பிரஹலாதன் எனக்கு மரியாதை செலுத்தி என்னோடு உரையாடுவது  வழக்கம். நீயோ எல்லா ஆடம்பரங்களுடனும் வீட்டில் வளர்க்கப்பட்ட குழந்தை என்பதால், சமூக பழக்க வழக்கம் எதையும் உன்னால் புரிந்து கொள்ள முடியவில்லை” என்றான்.

       அதற்கு விரோசனன் சூதன்வானிடம் , “அசுரர்கள் மத்தியில் இருக்கும் எல்லாத் தங்கத்தையும், பசுக்களையும், குதிரைகளையும், பிற வகைச் செல்வங்களையும் நான் பந்தயமாக வைக்கிறேன். இந்தக் கேள்விக்குத் தகுந்த பதிலை அளிக்க வல்லவர்களிடம் சென்று நாம் கேட்போம். வாரும்” என்றான். 

                    அதற்குச் சூதன்வான், “உனது தங்கம், பசுக்கள், வீரர்கள் ஆகியவற்றை விடு, ஓ! விரோசனா, நமது உயிர்களை இழக்கும்படி பந்தயம் வைத்து, இக்கேள்விக்குத் தகுந்த பதிலளிக்க வல்லோரிடம் கேட்போம்” என்றான். 
  
                 விரோசனன், “நமது உயிர்களைப் பிணை வைத்து, நாம் எவ்விடம் செல்வோம்? தேவர்கள் முன்னிலையிலோ, மனிதர்களில் எவர் மத்தியிலோ நான் நிற்க மாட்டேன்” என்றான். 

           அதற்குச் சூதன்வான் விரோசனனிடம், “நமது உயிர்களைப் பிணையாக வைக்கும் நாம், உனது தந்தை பிரகலாதனை அணுகுவோம். பிரஹலாதன், தன் மகனுக்காகக் கூடப் பொய்மையை ஒருபோதும் சொல்ல மாட்டான்” என்றான்.

            இப்படிப்பட்ட பந்தயத்தை ஏற்றுக் கொண்ட விரோசனன் மற்றும் சூதன்வான் ஆகிய இருவரும் கோபத்தால் உந்தப்பட்டு, பிரஹலாதன் இருக்குமிடத்திற்குச் சென்றனர். அவர்கள் இருவரையும் ஒன்றாகக் கண்ட பிரஹலாதன், “முன்பு ஒருபோதும் சேர்ந்து காணப்படாதவர்கள், இப்போது கோபம்கொண்ட இரு பாம்புகள் போல ஒரே சாலையில் ஒன்றாக வருகின்றனரே” என்று நினைத்து, “எப்போதும் சேராத நீங்கள், இப்போது சேர்ந்துவிட்டீர்களா? ஓ! விரோசனா,நான் உன்னைக் கேட்கிறேன். உனக்கும் சூதன்வானுக்கும் இடையில் நட்பேற்பட்டதா?” என்று கேட்டான் பிரகலாதன் .

             அதற்கு விரோசனன் பிரகலாதனிடம், “எனக்கும் சூதன்வானுக்கும் இடையில் எந்த நட்பும் கிடையாது. மறுபுறம் நாங்கள் எங்கள் உயிர்களைப் பந்தயமாக வைத்துள்ளோம்.  தந்தையே, நான் உம்மை ஒரு கேள்வி கேட்பேன், அதற்குப் பொய்யாகப் பதிலளிக்காதீர்!” என்றான். 

       ""அதற்குப் பிரஹலாதன்,“மதிப்பிற்குரிய சூதன்வான் இளைப்பாற நீரும், தேனும், தயிர்க்கடைசலும் சூதன்வானுக்குக் கொண்டுவரப்படட்டும்.என தன் சேடிகளுக்கு கட்டளையிட்டார்.

          பின் சூதன்வானிடம் , “ ஓ! அந்தணா, நீ எங்களது வழிபாட்டுக்குத் தகுந்தவன். உனக்கு அளிப்பதற்காக பருத்த ஒரு வெண்பசு உனக்குத் தயாராக இருக்கிறது” என்றான் பிரகலாதன்.

  🌺 தீர்ப்பு கூறுபவனின் சங்கடம்🌺

        அதற்குச் சூதன்வான் பிரஹலாதனிடம் , “ தங்கள் அன்புக்கு நன்றி மகாராஜா . நீர், தேன் மற்றும் தயிர்க்கடைசல் ஆகியவை, இங்கே வரும் வழியிலேயே எனக்கு வழங்கப்பட்டன. நான் உங்களிடம் ஒரு கேள்வியைக் கேட்கிறேன்., அதற்கு உண்மையான பதிலளிக்க வேண்டுகிறேன்! பிராமணர்கள் மேன்மையானவர்களா? அசுரர்கள்  மேன்மையானவர்களா ?” என்று கேட்டான். 

       அதற்குப் பிரஹலாதன்,“ஓ!சுதன்வானா, இவன் எனது ஒரே மகன். நீயும் இங்கே இருக்கிறாய். பிரச்சனையில் சம்பந்தப்பட்டவர்களும், நான் அறிந்தவர்களும், எனது அன்பிற்குரியவர்களுமான நீங்கள் இருவரும் இங்கே இருக்கும்போது, என்னால் எப்படி இதற்கு தக்க  பதிலளிக்க முடியும்?” என்று கேட்டான்.

               சூதன்வான் பிரஹலாதனிடம் , “உன்னிடம் இருக்கும் உன் பசுக்களையும் பிற விலைமதிப்பற்ற செல்வங்களையும் உனது மகனுக்குக் கொடு. ஆனால், ஓ! ஞானம் கொண்டவனே பிரகலாதா, இருவர் சர்ச்சை செய்து வரும்போது, அரசரான நீயே அதில் உண்மையைத் தீர்மானிக்க வேண்டியவன் ” என்றான். 

🌺பொய் கூறுபவனின் குலம் எப்படி பாதிக்கப்படுகிறது? 🌺

                   அதற்குப் பிரஹலாதன், “ஓ! சூதன்வான், தன்னிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு உண்மையில்லாமல் பொய்யைச் சொல்லி, தனது நாவைத் தவறாகப் பயன்படுத்துபவன் எப்படிப்பட்ட பாதிப்படைவான்?  இதை நானே உன்னிடம் கேட்கிறேன். பதில் கூறும் ” என்றான்.

          அதற்குச் சூதன்வான் பிரகலாதனிடம் ,  

💧“இரவு நேரத்தில், தன் சக்களத்தின் கரங்களில் துயிலும் தனது கணவனைக் காணும் ஒரு கணவனைப் பிரிந்த மனைவி ஏங்குவதைப் போலவும், 
💧சூதாட்டத்தில் பகடையில் தோற்ற ஒரு மனிதன் மனம் வேதனைப்படுவது போலவும், 
💧சுமக்க முடியாத பெரும் துன்பச் சுமையால் தாங்க முடியாமல் கீழே விழுபவன் போலவும்,  நாவைத் தவறாகப் பயன்படுத்துபவன் பாதிக்கப்படுவான். 

         அப்படிப்பட்ட மனிதன், நகரத்தின் வாயில்களைக் கடந்து உள்ளே செல்ல தடை செய்யப்பட்டு நகரத்தின் வாயில்களுக்கு வெளியே பட்டினியுடன் தங்க வேண்டியிருக்கும். போலி சாட்சிகளைக் கொடுப்பவன், உண்மையில், எதிரிகளையே எப்போதும் கண்டடையும்படி வாழ விதிக்கப்படுகிறான்.

        ஒரு விலங்கின் காரணமாகப் பொய் பேசுபவனது தலைமுறையினரில் 
ஏறுமுக வரிசையில் ஐந்து மூதாதையர் வானரசில் {சொர்க்கத்தில்} இருந்து கீழே தள்ளப்படுகின்றனர். 

            ஒரு பசுவின் காரணமாகப் பொய் பேசுபவனது பத்து மூதாதையர் சொர்க்கத்தில் இருந்து கீழே தள்ளப்படுகின்றனர். 

             ஒரு குதிரையின் காரணமாகப் பொய் சொன்னால் நூறு மூதாதையரின் {சொர்க்கத்தில் இருந்து தள்ளப்படும்} வீழ்ச்சிக்கும், 

         ஒரு மனிதனின் காரணமாகப் பொய்சொன்னால், தனக்கு முன் ஏறு வரிசையில் ஆயிரம் மூதாதையரின் {சொர்க்கத்தில் இருந்து தள்ளப்படும்} வீழ்ச்சிக்கும் காரணமாக இருப்பான். 

      தங்கத்தின் காரணமாகச் சொல்லப்படும் பொய்யால், தனது குலத்தில் பிறந்த, பிறக்காத அனைத்து உறுப்பினர்களும் அழிவுக்குள்ளாகிறார்கள்.

         நிலத்தின் காரணமாகச் சொல்லப்படும் பொய்யால் {ஒருவனுடைய} அனைத்தையும் அவன் பாழாக்கிக் கொள்கிறான். எனவே, எந்த சூழ்நிலையிலும் ஒருபோதும் பொய் பேச கூடாது” என்றான் சூதன்வான்.

🌺சூதன்வான் விளக்கம் கேட்ட பிரஹலாதன் தந்த தீர்ப்பும் , சூதன்வான் முடிவும் 🌺

       பிரஹலாதன் தன் மகன் விரோசனனிடம், “விரோசனா, அங்கிரஸ் என்னைக் காட்டிலும் மேன்மையானவர், அதே போல, சூதன்வான் உன்னைக் காட்டிலும் மேன்மையானவன். சூதன்வானின் தாய் உன் தாயைக் காட்டிலும் மேன்மையானவள். எனவே, ஓ! விரோசனா, நீ சூதன்வானால் வீழ்த்தப்பட்டாய். இந்தச் சூதன்வானே இப்போது உனது உயிருக்குத் தலைவனாவான் . ஆனால், ஓ! விரோசனா, நீ சூதன்வானுக்காக உனது உயிரைக் கொடுக்க வேண்டும் எனவே நான் விரும்புகிறேன்” என்றான் 

      அதற்குச் சூதன்வான் பிரஹலாதனிடம், “ஓ! பிரஹலாதா, அறத்தைத் தேர்ந்தெடுத்து, மோகத்தால் நீ பொய் சொல்லாதிருந்ததால், நான் உன் அன்பிற்குரிய மகனின் உயிரை அவனுக்கே அளிக்கிறேன். என்னால் உனக்கு மீட்டளிக்கப்பட்ட உனது மகன் இதோ இருக்கிறான். எனினும், அவன், கன்னிகை கேசினியின் முன்னிலையில் எனது காலைக் கழுவி தனக்குரிய மரியாதை செலுத்த வேண்டும்” என்றான் .வீரோசனனும் அதனை ஏற்றுக் கொண்டு  சுதன் அவனுக்கு உரிய மரியாதை அளிக்கிறான்.

      🌺திருதராஷ்டிரனது இறுதி காலம் பற்றி விதுரர் தந்த எச்சரிக்கை🌺

தொடர்ந்து விதுரர் திருதராஷ்டிரனுக்கு கூறுகிறார்

             “இக்காரணங்களுக்காக,  நிலத்தின் மீது கொண்ட ஆசையின் காரணமாகப் பொய்மை பேசுவது பின்னரே உமக்குத் தகாது. உமது மகனின் மீது கொண்ட பாசத்தால் பொய் சொன்னால், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உமது பிள்ளைகள், அமைச்சர்கள் ஆகிய அனைவருக்கும் அழிவு விரைந்து வரும். மாடு மேய்ப்பவர்களைப் போலக் கையில் தடிகளைக் கொண்டு மனிதர்களை தீமையிலிருந்து தேவர்கள் பாதுகாப்பதில்லை; ஆனால், பாதுகாக்கப்பட வேண்டும் என்று தாங்கள் விரும்புவோருக்கு, அவர்கள் நல்ல புத்தியை அளிக்கின்றனர்.

              ஒருவன் நீதி மற்றும் அறநெறிகள் ஆகியவற்றில் கொண்டுள்ள கவனத்தின் விகிதத்தின் படியே ஒருவன் தனது நோக்கங்களில் வெற்றியடைகிறான் என்பதில் ஐயமில்லை. பொய்மையில் வாழும் ஏமாற்றுகர மனிதனை, வேதங்கள், பாவத்தில் இருந்து மீட்பதே இல்லை.

             புதிதாய் சிறகு படைத்த பறவைகள் தங்கள் கூடுகளைக் கைவிடுவதைப் போல, ஏமாற்றுகர மனிதன் மரணப்படுக்கையில் கிடக்கையில், அவன் கற்றறிந்த கல்வியும்  வேதங்களும் அவனைக் கைவிடுகின்றன.

              குடிப்பழக்கம், சண்டை, அதிக எண்ணிக்கையிலான மனிதர்களிடம் பகை, திருமணம் தொடர்பான அனைத்து மோதல்கள், கணவன் மனைவிக்கு இடையேயான உறவின் முறிவு, உட்பகை, மன்னனுக்குத் துரோகம் ஆகியவை ஏமாற்றுகர மனிதனின் செயலாகும். அவர்களது இறுதிக் காலம் யாருமற்ற தனிமையில் நரக வேதனையில் கழியும். அத்தகைய நிலைக்கு நீங்கள் ஆட்படக் கூடாது என்பதற்காகவே அழைத்ததும் ஓடி வந்தேன் என்றார் விதுரர்.

விதுர நீதி பதிவு - 11

நல் மனிதனின் குணங்களும் அவை காட்டும்  அறமும் 

    பாவம் செய்பவர்கள்  குணங்கள் 

                 குடிப்பழக்கம், சண்டை, அதிக எண்ணிக்கையிலான மனிதர்களிடம் பகை, திருமணம் தொடர்பான அனைத்து மோதல்கள், கணவன் மனைவிக்கு இடையேயான உறவின் முறிவு, உட்பகை, மன்னனுக்குத் துரோகம் ஆகியவை அனைத்தும் பாவிகளின் செயலாகும். இவை தவிர்க்கப்பட வேண்டும்.

                 கைரேகை பார்க்கும் ஒருவன், வணிகராக மாறிய திருடன், வேடன், யோகி வேடம் பூண்ட மருத்துவன், எதிரி, நண்பன், இழிந்த தன்மை கொண்டவன் ஆகிய ஏழு பேரும் சாட்சி அளிக்கத் தகுதியற்றவர்கள் ஆவர். 

                       செருக்கின் காரணமாகச் செய்யப்படும் அக்னிஹோத்ரம், அதே போன்ற நோக்கத்துக்காக நோற்கப்படும் பேசாநிலை மௌன விரதம் , அதே நோக்கத்திற்காகச் செய்யப்படும் அக்னி ஹோத்ரம், பேசாநோன்பு, கல்வி, வேள்வி ஆகியவை நான்கையும்  நான்கின் நோக்கத்தையும்  அறியாமல், தேவையில்லாமல் அல்லது அளவுக்கு அதிகமாக செய்தால் அவை தீங்கையே தரும்.
அந்தணர்களைக் கொன்ற பாவம் செய்பவர்கள் 

            வீட்டைக் கொளுத்துபவன், 
நஞ்சைக் கையாள்பவன், பரத்தமைத் தரகன்  , சோமச் சாறு , விற்பனையாளன், அம்புகளைச் செய்பவன், கணியன், நண்பர்களுக்குத் தீங்கிழைப்பவன், பிறன்மனை நயப்பவன் , கருக்கலைப்பு செய்பவன், தனது ஆசானின் படுக்கையை மீறுபவன், மதுவுக்கு அடிமையான பிராமணன், கூரிய சொல் கொண்டவன், பழைய புண்ணைக் கிளறுபவன், நாத்திகவாதி, வேதங்களைத் தூற்றுபவன், இலஞ்சம் பெறுபவன், பரிந்துரைக்கப்பட்ட வயதைத் தாண்டி  உபநயனம் செய்து கொள்பவன், சுய நலத்துக்காக கமுக்கமாகக் கால்நடைகளைக் கொல்பவன் , பாதுகாப்பு வேண்டுபவனைக் கொல்வபவன் ஆகிய தார்மீக அடிப்படையில் இழிகுணம் கொண்ட இந்த அனைவரும், அந்தணர்களைக் கொன்றவர்களாகவே கருதப்படுவர்.

நல்மனிதர்கள் சந்திக்கும் சோதனைகள்       தங்கம் நெருப்பால் சோதிக்கப்படுகிறது; நல்ல பிறப்பு பிறந்தவன் தனது ஒழுக்கத்தாலும், நேர்மையானவன் தனது நடத்தையாலும் சோதிக்கப்படுகிறான். துணிச்சலுள்ளவன், அச்சம் நிறைந்த காலத்திலும்; தன்னடக்கம் உள்ளவன், வறுமையான காலத்திலும்; நண்பர்களும் எதிரிகளும் துயரம் மற்றும் ஆபத்தான காலங்களிலும் சோதிக்கப்படுகின்றனர். முதுமை அழகை அழிக்கும், 
இலக்கில்  நம்பிக்கை பொறுமையை  அழிக்கும், 
மரணம் வாழ்வை அழிக்கும், 
பொறாமை நீதியை அழிக்கும், 
கோபம் செழிப்பை அழிக்கும்,
தாழ்ந்தவருடனான  சேர்க்கை நன்னடத்தையை அழிக்கும், 
காமம் பணிவை  அழிக்கும்,
செருக்கு அனைத்தையும் அழித்து விடும்.

மிளிர்வைத் தருகின்ற நற் குணங்கள் 

          நற்செயல்களில் செழிப்புப் பிறக்கிறது, செயல்பாட்டின் விளைவாக அது வளர்கிறது, திறனின் விளைவாக அஃது ஆழமாக வேர்விடுகிறது, தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்வதால் அஃது உறுதி பெறுகிறது. அறிவு, நல்ல குலத்தில் பிறப்பு, சுயக்கட்டுப்பாடு ,  சாத்திரங்களின் அறிவு, ஆற்றல், வம்பளப்பு இல்லாமை , மிதமான பேச்சு, சக்திக்குத்தக்கபடி தானம், நன்றியறிதல் ஆகிய எட்டு குணங்களும் அதைக் கடைப்பிடிப்பவனை மிளிரச் செய்கின்றன. இந்தக் குணங்கள் அனைத்தையும் ஒன்றுபடச்செய்யக் கூடிய அறக்கொடை ஒன்று மட்டுமே உள்ளது. உண்மையில், ஒரு மன்னன் தன்னிடம் உதவி கேட்கும்  மனிதனை மதிக்கும்போது, அந்த அரச உதவி, இந்தப் பண்புகள் அனைத்தையும் உதவி பெற்றவனிடம் மிளிரச் செய்யும். அந்த நற் பண்பே மனிதர்களின் உலகில், அவர்கள்  எட்டும்,  சொர்க்கத்தைக் குறிப்பதாகும்.

          நன்மையுடன் பிரிக்கமுடியாதபடி பிணைக்கப்பட்டுள்ள செயல்கள்  வேள்வி, கொடை, கல்வி மற்றும் தவம் ஆகியன ஆகும். அதேவேளையில், தன்னடக்கம், உண்மை, எளிமை, எவருக்கும் ஊறிழையாமை {அஹிம்சை} ஆகிய மற்ற நான்கும் எப்போதும் நல்லவர்களால் பின்பற்றப்படுகின்றன.

நீதியின் எட்டு வெவ்வேறு பாதைகள்

வேள்வி, கல்வி, ஈகை, தவம், உண்மை, மன்னிக்கும் மனநிலை ,பொறுமை,  {கருணை}, மனநிறைவு ஆகியன நீதியில் உள்ளடங்கிய எட்டு வெவ்வேறு பாதைகளாகும். இவற்றில் முதல் நான்கு பெருமைக்காக கூறப்படலாம், ஆனால் கடைசி நான்கும் உண்மையில் உன்னதமானவர்களிடம் மட்டுமே இருக்கும்.

சபை
பெரியோரில்லாத சபையேதும் இல்லை  அறநெறி எது என்ற தர்மத்தைச் சொல்லாதவர் பெரியோரல்ல}. உண்மையில் இருந்து பிரிந்து இருப்பது அறநெறியல்ல  வஞ்சனை நிறைந்தது உண்மையல்ல  உண்மை, அழகு, சாத்திரம் அறிதல், அறிவு, உயர்பிறப்பு, நன்னடத்தை , ஒழுக்கம் , வலிமை, செல்வம், துணிச்சல், பல்வேறு பேச்சுத்திறன்கள் ஆகிய பத்தும் சொர்க்கத்திற்கான காரணங்களாகும்.

பாவம் எது

               பாவத்தை இழைக்கும் ஒரு பாவி, அனைத்து தீய விளைவுகளாலும் தாக்கப்படுகிறான். அறம் பயிலும்  நல்லவன், பெரும் மகிழ்ச்சியை அறுவடை செய்கிறான். எனவே, ஒரு மனிதன்,  கடும் விரதத்துடன் பாவத்தில் இருந்து விலக வேண்டும், மீண்டும் மீண்டும் இழைக்கப்படும் பாவம், அறிவை அழிக்கிறது; அறிவை இழந்த மனிதன் மீண்டும் மீண்டும் பாவத்தைச் செய்கிறான்.

🌲தர்மம் 🌲

        மீண்டும் மீண்டும் பயிலப்படும் தர்மம் அறிவை மேம்படுத்துகிறது; அறிவு வளர்ந்த மனிதன் மீண்டும் மீண்டும் தர்மத்தை  பயில்கிறான். அறத்தைப் பயிலும் அறவோன் அருள் நிறைந்த உலகங்களுக்குச் செல்கிறான். எனவே, ஒரு மனிதன் அறம் பயில உறுதியான தீர்மானம் எடுக்க வேண்டும். 
     
                பொறாமையுள்ளவன், பிறரை ஆழமாகக் காயப்படுத்துபவன், கொடூரன், தொடர்ச்சியாகச் சண்டையிடுபவன், வஞ்சகன் ஆகியோர் இந்தப் பாவங்களைப் பயில்வதால் விரைவில் பெருந்துன்பத்தைச் சந்திக்கின்றனர்.
            பொறாமையில்லாதவனும், அறிவுடையவனும், எப்போதும் நன்மையைச் செய்வதால், பெருந்துன்பத்தை அவன் சந்திப்பதே இல்லை; மறுபுறம் அவன் எங்கும் ஒளிர்கிறான். ஞானிகளிடமிருந்து ஞானத்தைப் பெறுபவனே உண்மையில் கற்றவனும், ஞானியுமாவான். அறம், பொருள் ஆகிய இரண்டையும் கவனித்து, மகிழ்ச்சியை அடைவதில் வென்றவனே ஞானியாவான்.

எதை எப்போது செய்ய வேண்டும் 

                       இரவை மகிழ்ச்சியாகக் கடத்த நம்மை தகுந்தவராக்கும் காரியத்தைப் பகலில் செய்ய வேண்டும் . 

               மழைக் காலங்களை மகிழ்ச்சியாகக் கடத்த நம்மை  தகுந்தவராக்கும் காரியங்களை வருடத்தின் எட்டு மாதங்களில் செய்ய வேண்டும் .

                 முதிர்ந்த வயதில் மகிழ்ச்சிக்கு எது உத்தரவாதம் அளிக்குமோ அதை இளமையில் செய்ய வேண்டும் ; 

               மறுமையில் மகிழ்ச்சியாக வாழத் தகுந்தவனாக்கும் எதையும் முழு வாழ்விலும் செய்ய வேண்டும் .

எளிதாகச் செரிக்கும் உணவையும், 
இளமை கடந்த மனைவியையும், 
வெற்றி பெற்ற வீரனையும், 
முயற்சிகளில் வெற்றி மகுடம் பெற்ற துறவியையும் ஞானிகள் எப்போதும் புகழ்கின்றனர்.

யார் யாரை கட்டுப்படுத்துகிறார்கள்     அநீதியாக அடைந்த செல்வத்தால் ஏற்பட்ட இடைவெளி அடைபடாமலேயே நீடிக்கிறது. அதேவேளையில் புதியவற்றால் அடைபடாத இடைவெளிகள் தோன்று கின்றன. 
 தங்கள் ஆன்மாக்களைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்போரை ஆசான் கட்டுப்படுத்துகிறார்; 
தீயோரை மன்னன் கட்டுப்படுத்துகிறான்; அதே வேளையில்,  பிறரது சுய நலத்தால்   பாவமிழைப்போரை, விவஸ்வத்தின் மகனான யமன் கட்டுப்படுத்துகிறான்.
முனிவர்கள், நதிகள், நதிக்கரைகள், உயர் ஆன்ம மனிதர்கள் ஆகியவற்றின் பெருமைகளையும் பெண்களின் தீய குணங்களுக்கான காரணங்களையும் உறுதியாகச் சொல்ல முடியாது அல்லது அவற்றின் மூலத்தை அறிய முடியாது .

உலகை எப்போதும் ஆள்பவர்கள் யார்?

 அந்தணர்களின் வழிபாட்டில் அர்ப்பணிப்புடன் இருப்பவனும், 

தானம் அளிப்பவனும், 

தன் உறவினர்களிடம் நீதியுடன் நடந்து கொள்பவனும், 

உன்னதமாக நடந்து கொள்ளும் க்ஷத்திரியனும் எப்போதும் உலகை ஆள்வான். 

              துணிச்சல் உள்ளவனும், கல்வி உள்ளவனும், பிறரைப் பாதுகாப்பது எப்படி என்பதை அறிந்தவனும் ஆகிய மூவரும், உலகத்தில் இருந்து தங்க மலர்களைச் சேகரிக்க எப்போதும் இயன்றவர்கள் ஆவார்கள்.

              அறிவால் சாதிக்கப்பட்ட செயல்களே முதன்மையானவை . 

          கரங்களால் சாதிக்கப்பட்டவை இரண்டாம் தரம்; 
தொடைகளாலும், தலையில் பாரஞ்சுமந்து செய்யப்பட்ட செயல்கள் மிக இழிந்தவை.  அறிவாலும்,  கரங்களாலும்   செயல்களை  சாதிக்கத்  தகுந்தவர்களே  நாட்டை ஆளும்  தகுதி கொண்டவர்கள்.

விதுரரின் சிந்தனைகள்:

மகாபாரதத்தில் விதுரர் மதிநுட்பம் மிகுந்த அமைச்சராக தனது அண்ண‍ன் திருதராஷ்டர‌ரின் அவையில் இருந்தவரும் பீஷ்மரின் நம்பிக்கைக்கு பாத்திரமானவருமாவார். அத்தகைய பெருமை மிக்க விதுரர் 15 வகையான மூடர்களை பட்டியலிடுகிறார்.

1. தனக்கு கிடைக்கும் சிறு சிறு லாபங்களால் மகிழ்ச்சியடைபவன்.

2. தன்னிடம் கட்டுப்படாதவனைக் கட்டுப்படுத்த முயற்சிப்ப‍வன்.

3. பொய்யை உண்மை என்று நிறுவ முயற்சிப்ப‍வன்.

4. உயர்ந்த குடும்பத்தில் பிறந்து முறையற்ற செயலை செய்பவன்.

5. தானத்தைக் கேட்கக்கூடாதவனிடம் கேட்பவன்.

6. எதையும் செய்யாமல் தன்னைத் தானே புகழ்ந்து தற்பெருமை பேசுபவன்.

7. பெண்களின் பலவீனத்தைக் கொண்டு அவர்களைக் கட்டுப்படுத்தி அவர்கள் மூலமாக பணம் பொருளைக் கொண்டு பிழைப்பவன்.

8. பலமில்லாத‌வனாக இருந்துகொண்டு பலமுள்ள‍வனோடு எப்போதும் பகைமை பாராட்டுபவன்.

9. பிறரிடம் இருந்து உதவியோ அல்ல‍து பொருளையோ பெற்றுக்கொண்டு பின் அது தனது நினைவில் இல்லையே என்று சொல்பவன்.

11. தனது மனைவியைக் குறித்து பிறரிடம் தவறாகப் பேசுபவன்.

12. அடைய முடியாது என்று தெரிந்தும் அதை அடைய விரும்புபவன்.

13. தனது பேச்சினை ஏளனமாகக் கேட்டுக் கொண்டிருப்பவனிடம் தொடர்ந்து பேசுபவன்.

14. புனித இடங்களில் தானம் அளித்துவிட்டு வீட்டிற்கு வந்து அதை தானே சொல்லித்தற்பெருமை பேசுபவன்.

15. எதிரிகளிடம் சரண்டைந்து அவனுக்கு வேண்டிய பணிகளைப் பணிவாகச் செய்பவன்.

-
விதுர நீதி பகுதி 12
..
செழிப்பின் வேர்
...
1.முயற்சி, 
2.சுயக்கட்டுப்பாடு, 
3.திறன், 
4.கவனம், 
5.உறுதி, 
6.ஞாபக சக்தி, 
7.முதிர்ச்சியுடன் தீர்மானித்த செயல்களின் துவக்கம் 
ஆகியவையே செழிப்பின் வேர் என அறிவீராக.
...
பலம்
...
தவங்களே துறவிகளின் பலம்;
வேதங்களே அதை அறிந்தவர்களின் பலம்; 
பொறாமையே தீயவர்களின் பலம்; 
அதே போல, மன்னிக்கும் தன்மையே அறம்சார்ந்தவர்களின் பலமாகும்.
...
நோன்பை அழிக்காதவை
..
1.நீர், 
2.கிழங்குகள், 
3.பழங்கள், 
4.பால், 
5.தெளிந்த நெய், 
6.அந்தணரின் விருப்பம், 
7.ஆசானின் உத்தரவு, 
8.மருந்து  
ஆகிய எட்டும் நோன்பை அழிக்காதவையாகும்.
(நோன்பு காலங்களிலும் பயன்படுத்தலாம்)
...
அறம்
..
எது தனக்குக் கெடுதலாக இருக்கிறதோ, அதை அவன் வேறு ஒருவனுக்குச் செய்யக்கூடாது. சுருக்கமாக, இதுவே அறம் எனப்படுவதாகும். 
பிற வகை அறங்களும் இருக்கின்றன. ஆனால், அவை உறுதியற்றவை. 
..
கோபத்தை- மன்னிக்கும் தன்மையால்  வெல்ல வேண்டும்; 
தீயவர்களை- நேர்மையால் வெல்ல வேண்டும்; 
கஞ்சனைக் -கொடையாலும், 
பொய்யை- உண்மையாலும் வெல்ல வேண்டும்.
...
நம்பக்கூடாது
..
1.பெண்கள், 
2.ஏமாற்றுக்காரன், 
3.சோம்பேறி, 
4.கோழை, 
5.மூர்க்கன், 
6.பலத்தில் செருக்குடையவன், 
7.திருடன், 
8.நன்றிமறந்தவன், 
9.இறைமறுப்பாளன் {நாத்திகவாதி} 
ஆகியோரை ஒருபோதும் நம்பக்கூடாது.
...
பெரியோரை மரியாதையாக வணங்கி, முதிர்ந்தவர்களுக்குப் பணிவிடை செய்பவனின் 
1.சாதனைகள், 
2.ஆயுளின் அளவு, 
3.புகழ், 
4.சக்தி ஆகிய நான்கும் எப்போதுமே பெருகுகிறது.
..
1.வலிநிறைந்த முயற்சியல்லால் அடைய முடியாத பொருட்களிலோ {இலவசமாகக் கிடைக்கும் விலை உயர்ந்த பொருளிலிலோ}, 
2.நீதியைத் தியாகம் செய்வதிலோ, 
3.எதிரியிடம் தலைவணங்குவதிலோ உமது இதயத்தைச் செலுத்தாதீர்.
...
இரக்கப்படத் தக்கவன்
...
1.அறிவில்லாத மனிதன் இரக்கப்படத்தக்கவன்; 
2.கனியற்ற கலவி இரக்கப்படத்தக்கது(குழந்தை பிறக்க வாய்பில்லாதவர்களின் உடல்உறவு); 
3.ஒரு நாட்டில் உணவற்று இருக்கும் மக்கள் இரக்கப்படத்தக்கவர்கள்; 
4.மன்னன் இல்லாத நாடு இரக்கப்படத்தக்கது. 
..
உடல் கொண்ட உயிரினங்களின் வலிக்கும், பலவீனத்திற்கும் தோற்றுவாய்களாகும் இவை.
...
1.குன்றுகள் மற்றும் மலைகளுக்குச் சிதைவை உண்டாக்கும் மழை; 
2.பெண்களுக்கு வேதனையை உண்டாக்கும் இன்பமின்மை; 
3.இதயத்திற்குக் கணையாகும் கடுஞ்சொற்கள். 
4.வேதங்களின் களங்கமான கல்லாமை; 
5.அந்தணர்களின் நோன்பின்மை; 
6.மனிதர்களின்  பொய்மை;
7.அரிய பொருட்களின் மீது கற்புடைய பெண்களின் ஆர்வம்; 
8.பெண்கள் வீட்டை விட்டு வெளியேறுதல் களங்கம். 
9.தங்கத்தின் களங்கம் வெள்ளி; 
10.வெள்ளிக்கு ஈயம்; 
11.ஈயத்திற்குக் காரீயம்; 
12.காரீயத்துக்கு பயனற்ற கசடுகள் களங்கம்
ஆகியவை ஒவ்வொன்றுக்கும் பலவீனத்தையும் வலியையும் தரும்.
...
ஒரு மனிதனால் வெல்ல முடியாததவை
...
படுப்பதால் உறக்கத்தை
ஆசையால் பெண்களை(ஆசையுள்ளவள் பெண்களை அருகில் வைத்துக்கொண்டிருந்தால் ஆசையை வெல்ல முடியாது)
விறகினால் நெருப்பை, 
குடிப்பதால் மதுவை 
...
நண்பனை தானத்தாலும், 
எதிரிகளைப் போரினாலும், 
மனைவியை உணவு மற்றும் பானங்களாலும் வென்றவனுக்கு வாழ்வு பயனுள்ளதே. 
ஆயிரம் உள்ளவர்களும் வாழ்கிறார்கள்; நூறு உள்ளவர்களும் வாழவே செய்கிறார்கள்.
...
ஓ! திருதராஷ்டிரரே ஆசையைத் துறப்பீராக. 
ஏதாவதொரு வழியில் தங்கள் வாழ்வைப் பராமரிக்க முடியாதவர்கள் என்று யாரும் இல்லை. 
இந்தப் பூமியில் இருக்கும் உமது நெல், கோதுமை, தங்கம், கால்நடைகள், பெண்கள் ஆகிய அனைத்தும் ஒரு மனிதனைக் கூட மனநிறைவு கொள்ளச் செய்யாது…
..
இதை நினைவில் கொண்டே, அறிவாளிகள் உலகளாவிய ஆளுகை இல்லை என்பதற்காக எப்போதுமே வருந்துவதில்லை.(உலகத்தையே ஆள முடியவில்லையே என்று வருந்துவதில்லை)
...
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, 
நான் மீண்டும் உமக்குச் சொல்கிறேன். 
பாண்டுவின் மகன்கள் மற்றும் உமது மகன்கள் ஆகிய உமது பிள்ளைகளின் மீது சமமான நடத்தையைக் கடைப்பிடிப்பீராக. அவர்களுக்குள் பாரபட்சம் பாராமல் இருப்பீராக.” என்றான் {விதுரன்}.
..
விதுரன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான் 
“நல்லவர்களால் வழிபடப்பட்டு, செருக்கைக் கைவிட்ட நல்ல மனிதன் ஒருவன், 
தனது சக்திக்கு மீறாமல், தனது நோக்கங்களைத் தொடர்ந்து சென்றால், 
அவன் விரைவில் புகழை வெல்வான். 
ஏனெனில், ஒரு மனிதனிடம் மனநிறைவு கொண்ட நல்லவர்கள், நிச்சயம் அவனுக்கு மகிழ்ச்சியை அளிப்பார்கள். 
...
அநீதி நிறைந்த ஒரு பெரும் பொருளை, தன் சொந்த விருப்பத்தின் பேரில் கைவிடும் ஒருவன், 
சட்டையை உரித்து வெளியேறும் பாம்பு போல, அனைத்து எதிரிகளையும் கைவிட்டு மகிழ்ச்சியாக வாழ்வான். 
..
1.பொய்மையால் ஈட்டப்பட்ட வெற்றி, 
2.மன்னனிடம் ஏமாற்றுகரமான நடத்தையுள்ள அலுவலர்கள், 
3. நேர்மையற்ற உணர்வுகளை ஆசான் முன்பு வெளிப்படுத்தல் 
ஆகிய மூன்றும் பிராமணனைக் கொன்ற பாவத்திற்கு நிகரானவை ஆகும்.
அறிஞர்களின் லக்ஷணம் :-

கோபம், இன்பம், கர்வம் மற்றும் பேராசை போன்றவற்றால் மனம் தடுமாறமாட்டான். விருப்பு, வெறுப்பு, பலம், ஆசை, செல்வம், வறுமை ஆகியவற்றால் தன் செயல்களை தடுக்க இடம் அளிக்க மாட்டான். அழிந்து போனதை எண்ணி வருந்தமாட்டான். துன்பம் நேருகின்ற போது அதை எண்ணி மதி மயங்க மாட்டான். 

அறச் செயல்களையே செய்வான். அறத்திற்கு புறம்பான செயல்களை எக்காரணம் கொண்டும் செய்யமாட்டான்.  அறிந்து கொள்ள வேண்டிய நல்ல விஷயங்களை விரைவில் அறிவான். அவன் செய்யும் காரியங்களை அவை முடிவதற்கு முன் அறிய முடியாது. சான்றோர்களிடமிருந்து பல நல்ல விஷயங்களை கேட்டு தெரிந்து கொள்வான். இறைவனிடம் முழுமையான நம்பிக்கை உடையவனாக இருப்பான்.
                                                     : விதுர நீதி
 ஏற்றம் பெற எட்டு குணங்கள்
--------------------------------------------
1.விவேகம்,
2.பெற்றோருக்கு பெருமை சேர்த்தல்,
3.சுயக்கட்டுப்பாடு,
4.புனித நுால்களில் பயிற்சி,
5.வீரம்,
6.அளவான பேச்சு,
7.சகதிககுட்பட்டு தான தருமம் செய்தல்,
8.நன்றி மறவாமை.
       இந்த 8 குணங்களும் ஒருவருக்கு ஏற்றமும்,புகழும் தரும்
                                                         
                                                      
விதுர நீதி பகுதி 13

ஒருவனுக்கு பக்தி வர வேண்டுமானால் கீழ் கண்ட ஏழு குணங்களும்/சாதனங்களும் இருந்தாக வேண்டும் என்று கூறுகிறார் விதுரர்.

1. தேக சுத்தி - உடம்பு சுத்தமாக இருக்க வேண்டும்.  ஆகார சுத்தம் வேண்டும். அதாவது சத்துவ குணங்களை வளர்க்கும் உணவுகளையே உட்கொள்ள வேண்டும். தமோ குணம் மற்றும் ரஜோ குணங்களை வளர்க்கும் உணவுகளை உட்கொண்டால் பக்தி வராது.

2. அதீத ஆசை கூடாது. - காண்பது, கேட்பது, உண்பது போன்ற அனைத்து விஷயங்களிலும் மிக அதிகமான ஆசை கூடாது.

3. அப்பியாசம் - திரும்ப  திரும்ப செய்யும் சக்தி. அதாவது பகவானின் திருமேனியை நினைத்து, நினைத்து மனதில் நிறுத்த வேண்டும். பகவத் கீதை, விஷ்ணு சகஸ்ர நாமம் போன்றவற்றை திரும்ப திரும்ப அலுப்பு தட்டாமல் படிக்கும் சக்தி, பெரியோர்களிடம் இவற்றை திரும்ப திரும்ப கேட்கும் சக்தி வேண்டும்.

4. நல்ல  குணங்கள் இருக்க வேண்டும் - அதாவது தயா இருக்க வேண்டும். இல்லாதவனை பார்த்தால் கொடுக்க வேண்டும் என்ற தயை வர வேண்டும். எப்போதும் சத்யம் சொல்ல வேண்டும். 

5. அதிக துன்பம் கூடாது -  தேச, கால மாறுபட்டினால் வருத்தப்படாமல் இருக்க வேண்டும். அதாவது வேறு இடம் சென்று விட்டால் அங்கு ஏற்படும் கஷ்டங்களை தாங்கிக் கொள்ளும் சக்தி வேண்டும். தட்ப வெப்ப மாறுபாட்டை தாங்கிக் கொள்ளும் சக்தி வேண்டும். தண்ணீர், ஆகார மாறுபாட்டினால் துன்பப்படக் கூடாது. 

6. அதிக மகிழ்ச்சி கூடாது - நமக்கு சுகம் தரும் விஷயங்கள் நடந்தால் அதற்காக அதிக மகிழ்ச்சி கூடாது.

7. கிரியா - கிரஹச்தினர் அனைவரும் பஞ்ச மஹா யக்கியம் தினமும் செய்யவேண்டும்.
விதுரன்...
மஹாபாரதத்தில் மிக மிக உயர்ந்த நிலையில் இருந்த புண்யாத்மா விதுரர். காரணம் அவர் தர்மதேவனின் அம்சம். வியாச பகவானின் அருட்கொடை.

இப்படிட்பட்ட புண்யாத்மா விதுரரை ஸ்ரீ கிருஷ்ணபகவான் ஒரு இக்கட்டான சூழலில் இருந்து காப்பாற்றிய சம்பவம் ஒன்று உள்ளது!

பாண்டு காணகத்தில் மரித்து விட்டதால் - பாண்டவர்களின் கல்யாண குணங்களால் ஈர்க்கப்பட்ட விதுரர் பல சூழல்களில் பாண்டவர்களுக்கு சாதகமாக பேசி கெளரவர்களால் சபையிலேயே இகழப்பட்டதும் நமக்கு நன்கு தெரியும்...

இப்படிப்பட்ட விதுரரை ஸ்ரீ கிருஷ்ணன் அணுகி தகப்பனில்லாத பாண்டவர்களுக்கு திருதராஷ்டிரன் ஸ்தானத்தில் விதுரர் இருந்து வழிநடத்த குறைந்த பட்சம் ஆயுதம் ஏந்தாது அரசனாக / தகப்பனாகவாவது வழிநடத்த கேட்டிருந்தால் விதுரர் நிச்சியமாக சம்மதித்து இருப்பார். காரணம் துரியோதனாதிகள் அவரை அத்துணை அவமரியாதை செய்தது அத்தனையும் பதிவுகள்.

ஆணால், தர்மாத்மாக்கள் பீஷ்மர் - துரோணர் - கிருபர் - அஸ்வத்தாமன் (இவர் உயிரிழக்கவில்லை) கர்ணன் போன்றவர்களே செஞ்சோற்றுக் கடன் / ராஜ நீதி என்ற பெயரில் கெளரவர்களோடு துணை நின்று உயிர்விட்டனர்.

விதுரரும் இதைச் செய்திருக்கலாம். ஆனால் போரின் முடிவு பாண்டவர்க்கே அணுகூலம் என்பது பரமதயாபரனுக்கு நன்கு தெரியும்.  தர்மம் அறிந்த பீஷ்மர் இஷ்டா ம்ருத்யு வரம் பெற்றவர். ஆனால் தர்மம் அறிந்த விதுரர் தர்மத்தை உலகுக்குச் சொல்ல / விதுர நீதியாக பதிவு செய்ய / வெற்றி பெறப்போகும் பாண்டவர்களுக்கு வழிகாட்ட வெகுகாலம் உயிரோடு இருக்க வேண்டியவர். 

அணி மாறினால் துரோகமாகி இன்னும் அதிககாலம் இகழப்பட்டு இருப்பார் - அல்லது ஆயுதமெடுத்து போரில் உயிர்விட்ட (எந்த அணியில் இருந்தாலும்) உயிர்விட்டு இருப்பார்.

ஆக, குருக்க்ஷேத்திர போருக்குப் பின், பாண்டவர்களுக்கு உடனிருந்து வழிகாட்ட பீஷ்மரைப் போல ராஜ தர்ம நீதி தெரிந்த மற்றும்  ரத்த சம்பந்தமுள்ள விதுரரை பாதுகாக்கும் பொருட்டு கிருஷ்ணர் ஆடிய நாடகம் தூதனாகச் சென்று விதுரரோடு தங்கி - அதை காரணமாக வைத்து ஆயுதம் தொடேன் என விதுரரை சபதமிடவைத்ததும் ஸ்ரீ கிருஷ்ணனின் நாமறிந்திராத திருவிளையாடல்களில் ஒன்று.

இதில் இன்னும் ஒரு சூக்ஷ்மம் உள்ளது.

கிருஷ்ணன் தர்மத்தின் உருவம் (கீதாசார்யனை விட பெரிய தர்மவான் யார்?). தர்மவான்கள் கையில் ஆயுதம் ஏந்தினால் அவர்களை ஒருக்காலும் வெல்லவே முடியாது. இதற்குச் சிறந்த உதாரணம் பரசுராம பீஷ்ம யுத்தம். இருவருமே வெல்லப்படாமல் போர் தொடர்ந்து கொண்டே போக, கடைசியில் தேவர்களின் முயற்ச்சியால் சமாதானமடைகிறது. பீஷ்மரும் தர்மத்தின் திரு உருவமே ஆனால் குருக்ஷேத்திர போரில் பீஷ்மர் அதர்மத்தின் பக்கமிருந்தார் அதனால் வீழ்ந்தார்.

தர்மத்தின் திரு உருவான கண்ணன் ஆயுதம் தொடேன் எனச் சொல்லி பாண்டவர் பக்கமிருந்தான்.  

இந்த நிலையில் தர்மவானாகிய விதுரர் பீஷ்மர் போல யுத்த ராஜ நீதி வழியில் கெளரவர்களுக்காக ஆயுதமேந்தி இருந்தால் போரில் வெற்றி கெளரவர் பக்கமிருந்திருக்கும் என்பதே அந்த ரகசியம்.

-
விதுர நீதி பகுதி 14
...
{நான்கானவை} நான்கு நான்கானவை
...
ஒரு மன்னன் சக்திமிக்கவனாக இருப்பினும், 
...
[1]சிறுபுத்தி கொண்டோர், 
[2]காலந்தாழ்த்துவோர், 
[3]சோம்பேறி, 
[4] முகத்துதி செய்வோர் ஆகிய நான்கு பேரிடம் ஒருபோதும் ஆலோசனை செய்யக்கூடாது. 
-
சிறுபுத்தி கொண்டவன்,தனக்கு வேண்டியவர்கள் நன்மைபெறும்படியான ஆலோசனைகளைக்கூறுவான்
காலம் தாழ்த்துபவன் உரிய நேரத்தில் ஆலோசனைகளைச் சொல்லாமல் இழுத்தடிப்பான்
சோம்பேரி யோசிக்காமல் ஏதாவது ஒன்றைக்கூறுவான்
முகத்துதி செய்பவன் மன்னன் என்ன கூறினாலும் சரி என்பான்
-
ஓ! அய்யா {திருதராஷ்டிரரே}, செழிப்பால் மகுடம்சூட்டப்பட்டு இல்லற வாழ்வு வாழ்பவனான உம்மிடம், 
[1]இரத்த உறவு கொண்ட முதியவர்கள், 
[2]உறவினர்கள், 
[3]வறுமையில் விழுந்த உயர் பிறப்பாளர்கள், 
[4]ஏழை நண்பர்கள் மற்றும் பிள்ளையற்ற சகோதரிகள் ஆகிய நால்வரையும் வசிக்கச் செய்வீராக.
..
இல்லறத்தான் கூட்டுக்குடும்பமாக வாழவேண்டும். அதில் சிலர் மட்டுமே சம்பாதிப்பார்கள்.மற்றவர்கள் ஓய்வில் இருப்பார்கள்.
அப்படி சம்பாதிக்க இயலாமல் இருப்பவர்களில் நான்கு வகையினர் எப்போதும் இருக்க வேண்டும்
இரத்த உறவு கொண்ட பெரியப்பா போன்ற வயதில் மூத்தவர்கள் வீட்டுக்காவலாகவும்,ஆலோசனை கூறுபவர்களாகவும் இருப்பார்கள்
உறவினர்கள் இல்லாமல் தனிக்குடித்தனமாக வாழக்கூடாது
உயர்ந்த ஜாதியை சேர்ந்த ஒருவர் நல்லவராக இருந்தால்,வறுமையோடு இருந்தால் அவரையும் வைத்துக்கொள்ள வேண்டும்.உயர்ந்த ஆன்மீக கருத்துக்களை அவரிடமிருந்து அறிந்துகொள்ளலாம்
ஏழை நண்பர்கள்,பிள்ளையற்ற சகோதரிகள் அனைத்து வேலைகளிலும் உதவியாக இருப்பார்கள்.
-
அச்சத்தை விலக்கவல்லவைகளான 
[1]அக்னி ஹோத்ரம், 
[2]பேசாநோன்பு {மௌன விரதம்}, 
[3]கல்வி மற்றும் 
[4] வேள்வி ஆகிய நான்கும், 
முறையற்ற வகையில் செய்யப்பட்டால், அவை அச்சத்தையே தரும்.
-
தீயவர்கள்,அசுர இயல்பு கொண்டவர்கள் மேலே உள்ள நான்கையும் செய்து,அதனால் கிடைக்கும் சக்தியை தீய வழியில் பயன்படுத்துவார்கள்.
-
அக்னி ஹோத்திரம் என்பது வீட்டின் ஒரு பகுதியில், சிறு அக்னி குண்டம் அமைத்து, அக்னி வளர்த்து அதனை அணையாமல் காத்து, நாள்தோறும் காலை மற்றும் மாலை வேளையில் (சூரியோதயம் மற்றும் சூரிய அஸ்தமனம்) ஒரு இல்லறத்தான், காயத்ரி மந்திரம் ஓதி செய்யும் வேதகால சிறு வேள்வியாகும். 

இவ்வேள்வியை யார் உதவியின்றி தனிமனிதன் செய்ய வேண்டியது.

அக்னி ஹோத்திரம் செய்ய வேண்டிய பொருட்கள்: 
சிறு அக்னி குண்டம், சாண வறாட்டிகள், பசு நெய் மற்றும் முனை உடையாத பச்சரிசி.

அக்னி ஹோத்திரம் வேள்வியை செய்பவருக்கு ”அக்னி ஹோத்திரி” எனும் சிறப்பு பெயரிட்டு அழைக்கின்றனர். அக்னி ஹோத்திரி இறப்பின், அவன் அக்னி ஹோத்திரத்திற்காக வளர்த்த அக்னி குண்டத்திலிருந்து நெருப்பு எடுத்து அவனின் சவ உடலை எரிப்பர். பின்னர் அவன் வளர்த்த அக்னி குண்டத்தின் நெருப்பு அணைக்கப்பட்டுவிடும்.

தற்போது அக்னி ஹோத்திரம் எனும் வேள்வி மிகச் சிலரால் மட்டுமே செய்யப்படுகிறது.

பெண்களைப்பொறுத்தவரை திருமணமான பெண் புகுந்தவீடு செல்லும்போது விளக்கேற்றுகிறாள். 
பூஜையறையில் அந்த விளக்கு அணையாமல் சுடர்விட்டுக் கொண்டுகொண்டிருக்கும்
அவளது கடைசி காலம்வரை அந்த விளக்கு அணையாமல் பாதுகாக்கப்படும்.
தினமும் அந்த விளக்கின் முன்னால் அமர்ந்து பூஜை,தியானம்,ஜபம் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும்.
-..
{ஐந்தானவை} ஐந்து ஐந்தானவை
...
ஓ! பாரத குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, 
1.தந்தை, 
2.தாய், 
3.அக்னி(வழிபாட்டிற்குரிய அக்னி அல்லது வழிபாட்டிற்குரிய தெய்வம்), 
4.ஆன்மா, 
5.குரு ஆகிய 
ஐந்துபேரும் ஒரு மனிதனால் மரியாதையுடன் வழிபடப்பட வேண்டியவை.
-
1.தேவர்கள்(மேல் உலகில் வாழும் தெய்வங்கள்), 
2.பித்ருக்கள்(முன்னோர்), 
3.மனிதர்கள்(நல்லவர்கள்), 
4.பிச்சைக்காரர்கள்(சந்நியாசிகள்), 
5.விருந்தினர்கள்(தொலைதூர இடங்களுக்கு புனிதப்பயணம் மேற்கொள்பவர்) 
ஆகிய ஐவருக்குச் சேவையாற்றுவதால் ஒரு மனிதன் இவ்வுலகில் பெரும்புகழை அடைகிறான்.
...
1.நண்பர்கள், 
2.எதிரிகள், 
3.பாகுபாடற்றவர்கள்(நீதிமான்கள்), 
4.உம்மை சார்ந்து  இருப்பவர்கள்(அடைக்கலமாக வந்திருப்பவர்), 
5.உரிமையுள்ளவர்கள் (உறவினர்)
ஆகிய ஐயவர், நீர் எங்கே சென்றாலும் உம்மைத் தொடர்வார்கள்.

{1.கண், 2.காது, 3.மூக்கு, 4.நாக்கு, 5.உடல் [தோல்] ஆகிய} ஐம்பொறிகளில் 
ஒரு பொறி பற்றுடையதானால்கூட, 
தோலால் செய்யப்பட்ட ஓட்டைப் பாத்திரத்தில் இருந்து நீர் ஒழுகுவது போல, 
ஒருவனுடைய ஞானம் அந்தப் பொறியின் குறைபாடு கரணமாக அதன் வழியாக வெளியே நழுவிவிடும்.
ஞானம் அவனிடம் தங்காது.
...
உயர்வானவன் : 
(விதுர நீதி)

தன்னைத்தவிர வேறு யாருக்கும் தனது குற்றங்கள் அறியப்படாமல் இருந்தாலும், அதற்காக {அக்குற்றங்களுக்காக} வெட்கப்படுபவன்
அனைத்து மனிதர்களுக்கும் மத்தியில் உயர்வாக மதிக்கப்படுகிறான்.
***சிற்றின்பத்திற்கும் பேரின்பத்திற்கும்  வித்தியாசம் ?***

***சிற்றின்பம் - இது நிலையற்றது***

***பேரின்பம் - இது நிலையானது***

**இந்த இரண்டிற்கும் உள்ள வேறுபாடுகள் பற்றிப் பார்ப்போம்**

**1. படைப்பினால் ஈர்க்கப் பட்டால் சிற்றின்பம்.**

**படைத்தவனால் ஈர்க்கப் பட்டால் பேரின்பம்.**

**2. படைப்புகளை அனுபவித்தால் சிற்றின்பம்.**

**படைப்புகளை ஆராதித்தால் பேரின்பம்.**

**3. படைப்புகளை படைப்புகளாய் கண்டால் சிற்றின்பம்.**

**படைப்புகளில் படைத்தவனைக் கண்டால் பேரின்பம்.**

**4. என்னால் தான் இந்த வாழ்க்கை எனில் சிற்றின்பம்.**

**இறைவனால் தான் இந்த வாழ்க்கை எனில் பேரின்பம்.**

**5. நான் இந்த உடல் என எண்ணினால் சிற்றின்பம்.**

**நான் இந்த உயிர் என எண்ணினால் பேரின்பம்.**

**6. அமைதி ஆனந்தம் சிறிதே பெற்று பின் இழந்தால் சிற்றின்பம்.**

**அமைதி ஆனந்தத்தை நித்தியமாகப் பெற்றால் பேரின்பம்.**

**7. செய்வதெல்லாம் தனக்காக என்றால் சிற்றின்பம்.**

**செய்வதெல்லாம் இறைவனுக்காக என்றால் பேரின்பம்.**

**8. செய்வது நான் என எண்ணினால் சிற்றின்பம்.**

**செய்வது இறைவன் என எண்ணினால் பேரின்பம்.**

**9. புறப் பொருட்களில் நிகழ்வில் சுகமுறுவது சிற்றின்பம்.**

**அகத்திலேயே நித்திய சுகம் பெறுவது பேரின்பம்.**

**10. இன்பத்தை அடைந்தாலும் மீண்டும் வேண்டுவது திருப்திஅடையாதது சிற்றின்பம்.**

**வேறு எதனையும் விரும்பாதது பூரணமானது பேரின்பம்.**

**11. நிரந்தர பேரின்பத்தை மறைப்பது சிற்றின்பம்.**

**நிலையற்ற சிற்றின்பத்திற்கு அப்பாற்பட்டது பேரின்பம்.**

**12. உடலோடு மனதை தொடர்புப் படுத்துவது சிற்றின்பம்.**

**உயிரோடு மனதை இணைப்பது பேரின்பம்.**

**13. இன்பம் என்கிற வடிவிலிருக்கும் துன்பமே சிற்றின்பம்.**

**துன்பம் போல் அறியப்பட்டு இன்பமாவது பேரின்பம்.**

**14. எங்கோ இருக்கிறான் இறைவன் எனில் சிற்றின்பம்.**

**எங்கும் இருக்கிறான் இறைவன் எனில் பேரின்பம்.**

**15. பலவீனம், நோய், துன்பம், மரணம் தருவது சிற்றின்பம்.**

**மரணமிலாப் பெருவாழ்வைத் தருவது பேரின்பம்.**

**16. பயம், சஞ்சலம், சந்தேகம், குற்ற உணர்வு தருவது சிற்றின்பம்.**

**பயமறியாதது, ஸ்திரமானது, தூய்மையானது பேரின்பம்.**

**17. சிறு உணர்ச்சிகளில் இன்பம் அடைவது சிற்றின்பம்.**

**எல்லையற்ற பிரம்மத்தில் கலப்பது பேரின்பம்.**

**18. பிறரை தனக்காக பயன்படுத்துவது சிற்றின்பம்.**

**தன்னை பிறருக்காக அர்ப்பணிப்பது பேரின்பம்.**

**19. அளவுடையது, முடிவுடையது சிற்றின்பம்.**

**அளவற்றது, முடிவிலாதது பேரின்பம்.**

**20. அறிவை மழுங்கடிப்பது சிற்றின்பம்.**

**அறிவைப் பிரகாசிக்கச் செய்வது பேரின்பம்.**

**21. அழகை மட்டும் ஆராதித்தால் சிற்றின்பம்.**

**அழகற்றதும் அழகும் ஒன்றானால் பேரின்பம்.**

**22. பயன் கருதி செயல் புரிந்தால் சிற்றின்பம்.**

**பயன் கருதாது செயல் புரிந்தால் பேரின்பம்.**

**23. முதலில் இனித்து பின் கசப்பது சிற்றின்பம்.**

**முதலில் கசந்து பின் என்றும் இனிப்பது பேரின்பம்.**

**24. இரக்கமற்றது, ஒழுக்கமற்றது சிற்றின்பம்.**

**கருணையுடையது, தர்மமானது பேரின்பம்.**

**25. உடலாய் அனைத்தையும் கண்டால் சிற்றின்பம்.**

**உயிராய் அனைத்தையும் கண்டால் பேரின்பம்.**

**26. புலன்களில் இன்பம் துய்ப்பது சிற்றின்பம்.**

**புலன்களுக்கு அப்பால் சென்றால் பேரின்பம்.**

**27. மனம் உலகில் அலைந்தால் சிற்றின்பம்.**

**மனம் இறைவனில் ஒடுங்கினால் பேரின்பம்.**

**28. மரண பயம் ஏற்படுத்துவது சிற்றின்பம்.**

**மரணத்தையும் வெல்வது பேரின்பம்.**

**29. மனமாய் இருந்தால் சிற்றின்பம்.**

**மனதைக் கடந்தால் பேரின்பம்.**

**30. வேறு வேறாய்க் கண்டால் சிற்றின்பம்.**

**எல்லாம் ஒன்றெனக் கண்டால் பேரின்பம்.**

**31. பகுதியாய்க் கண்டால் சிற்றின்பம்.**

**மொத்தமாய் கண்டால் பேரின்பம்.**

**32. அகங்காரம் கொண்டால் சிற்றின்பம்.**

**அகங்காரம் துறந்தால் பேரின்பம்.**

**33. தசையில் சுகம் பெறுவது சிற்றின்பம்.**

**அன்பில் தன்னை இழப்பது பேரின்பம்.**

**34. ஆண் பெண்ணில் இன்புறுவது சிற்றின்பம்.**

**ஆண் பெண்ணை வணங்குவது பேரின்பம்.**

**35. துய்க்கும் நேரத்தில் மட்டும் இருப்பது சிற்றின்பம்.**

**துய்த்து விட்டால் நீங்காதது பேரின்பம்.**

**36. ஜீவராசிகளால் தர முடிந்தது சிற்றின்பம்.**

**இறைவனால் தரப் படுவது பேரின்பம்.**

**37. உலகைப் பற்றினால் சிற்றின்பம்.**

**இறைவனைப் பற்றினால் பேரின்பம்.**

**38. பிறர் நலனைக் காணாதது சிற்றின்பம்.**

**தன் நலம் கொள்ளாதது பேரின்பம்.**

**39. இன்பம் இல்லாத இன்பம் சிற்றின்பம்.**

**இன்பமான இன்பமே பேரின்பம்.**

**40. அஞ்ஞானம் விரும்புவது சிற்றின்பம்.**

**ஞானம் விரும்புவது பேரின்பம்.**

**41. பெற்று மகிழ்வது சிற்றின்பம்.**

**கொடுத்து மகிழ்வது பேரின்பம்.**

**42. சக்தியை இழப்பது சிற்றின்பம்.**

**சக்தியாய் மாறுவது பேரின்பம்.**

**43. பற்றுக் கொள்வது சிற்றின்பம்.**

**பற்றற்று இருப்பது பேரின்பம்.**

**44. மாறுவது, தாவுவது சிற்றின்பம்.**

**மாறாதது நிலைத்தது பேரின்பம்.**

**45. நிலையற்றது சிற்றின்பம்.**

**நிரந்தரமானது பேரின்பம்.**

**46. உலக வாழ்க்கை வாழ்வது நிலையற்ற சிற்றின்பம்**

**இறைவன் திருவடியை அடைவது நிலையான பேரின்பம்**

**47. இல்லற வாழ்க்கை வாழ்வது சிற்றின்பம்**

**இல்லறத்தில் இருந்து கொண்டு பரம் பொருளை நினைத்து வாழ்வது பேரின்பம்.**

**பரமத்துமா ஆனந்தமயமானவன். அவனை தெரிந்து கொண்டால் துன்ப கலப்புடன் அவ்வப்பொழுது நாம் அனுபவிக்கும் சிற்றின்பங்களை வாழ்வு முழுதும் நீடிக்கும் பேரின்பமாக மாற்றிக்கொள்ள முடியும்.**!**


விதுர நீதி பகுதி 15

நம் மகாபாரத புராணத்தில் நீதிக்கு பெயர் பெற்றவர் யார் தெரியுமா?

#விதுரர்.

அதனால்தான் பாண்டவ தூதன் கிருஷ்ணன் ..பாண்டவர்க்காக துரியோதனனிடம் 
தூது சென்ற போது  விதுரர் மாளிகையில் தங்கினார்..
வில்லுக்கு விதுரன்..
விஜயனை விட சிறந்த வில்லாளி விதுரர்..
தர்மம் மனிதனின் நிலைக்கு ஏற்ப மாறக் கூடியது... 

திறன் அற்றவர் ஆளும் ராஜ்யம் விரைவில் நிலை குலையும்... 
      விதுரர்
கேட்பார் பேச்சு கேட்டால் என்ன விபரீதம் நடக்கும் என்பதற்கு திருதராஷ்டிரன் ஒரு தக்க உதாரணம். துரியோதனன் மேல் உள்ள கண்மூடித்தனமாக பாசம், சகுனி, கர்ணன் துச்சாதனன் என்று பல கெடுமதியாளர்கள் திருதராஷ்டிரன்  மனதில் இருந்த கொஞ்சநஞ்சம் நேர்மை, நீதி, நியாயம் எல்லாவற்றையும் அழித்து சஞ்சயனை பாண்டவர்களிடம் அனுப்பி ஹஸ்தினாபுரம் மாளிகைக்கு அழைக்கிறான். சஞ்சயன் பாண்டவர்கள் பதிலோடு வந்துவிட்டான் நாளை  அரசவையில் யுதிஷ்டிரன் பதில் படிக்கப்படும்.  

சஞ்சயன் வெற்றியோடு வந்தால் துரியோதனன் திட்டம் பலிக்கும், யுதிஷ்டிரன் நிராகரித்தால்?  எப்படி துரியோதனனை சமாளிப்பது.  மனம் வியாகூலம் அடைந்து  கண்ணற்ற திருதராஷ்டிரன் நீதிமான் தர்மவான் விதுரனை அழைத்து அவன் அறிவுரை கேட்பது தான்  விதுர நீதி: ; 

 
'திருதராஷ்ட்ர மஹாராஜா,   யுதிஷ்டிரன்  நேர்மையானவன், நியாயவான், தர்மவான், இன்னும் என்ன  தகுதி வேண்டும் ஒரு அரசனுக்கு மொன்று லோகங்களையும் ஆள.   இருந்தபோதிலும்,  உன்னோடு இது;தகைய சிறந்த அரசனை அருகில் வைத்துக்கொண்டு பயன் பெறாமல்  நீங்கள் அவனை இங்கிருந்து வெளியே அனுப்பிவிட்டீர்கள். ''  என்றான் விதுரன். உண்மையைச் சொல்லவேண்டுமானால் யுதிஷ்டிரனிடம் இருக்கும்  குணாதிசயங்கள் தங்களிடம் இருப்பதற்கு நேர் மாறானவை.  உங்களை எடுத்துக்கொண்டால்  நீங்கள் உரிமையுள்ளவர், நியாயமாக இந்த நாட்டின் அரசராக இருக்க தகுதி கொண்டவர்,  எனினும் கண் பார்வை இழந்தவராதலால் உங்களுக்கும் ஆளும் உரிமை இல்லாமல் போய்விட்டது. மற்றவரிடம் பொறுப்பை தரவேண்டி ஆகிவிட்டது.

யுதிஷ்டிரன் யாரையும் எதிர்க்காதவன். கருணை உள்ளம் கொண்டவன். நேர்மையானவன். சத்தியத்தை தர்மத்தை  மதிப்பவன், சக்திமான், உங்கள் மேல் மதிப்பும் மரியாதையும் உள்ளவன்,  இதனால் எத்தனையோ தீங்குகள் இழைத்தாலும் தவறுகள் நடந்தாலும் பொறுமையாக ஏற்றுக்கொள்பவன்.

நீங்கள் துரியோதனன், சகுனியிடம், கர்ணனிடம், துச்சாதனனிடம் பொறுப்பை அளித்துவிட்டு, ராஜ்யபாரம் அவர்கள் நடத்த செய்தால்  சுபிக்ஷம் எங்கிருந்து பெறமுடியும்?
 

எவன் அறிவாளி என்றால் எவன் தனது ஆத்மஞானத்தை உணர்ந்தவனாக, பொறுமையை, நேர்மையை, தர்மத்தை விடாமல் மேற்கொண்டு வாழ்க்கையின் உயர்ந்த லட்சியங்களை கடைப்பிடிக்கிறானோ அவன் தான்.

''மஹாராஜா, இதெல்லாம்  ஒரு புத்திசாலியின் குணங்கள்.  செய்யவேண்டியதை க்ரமமாக செய்வது, புகழ்  போற்றுதலும் பெரும்படியாக செயல்படுவது, பிறர் குறைகாணமுடியாமல் நடப்பது.  தவறுகளை அணுகவிடாமல் இருப்பது. எல்லோர் நம்பிக்கையும் மரியாதையும் பெறுவது. ஒட்டுமொத்தமாக  இது யுதிஷ்டிரன் குணம்.

'எவனை  கோபமோ, சந்தோஷமோ, கர்வமோ, டம்பமோ, வீண்  ஆடம்பரமோ, ஜம்பமோ, ,அணுகமுடியாதோ, , அவனுடைய  உயர்ந்த கோட்பாடுகளை அசைக்கமுடியாதோ, அவன் தான் புத்திமான் என்று புரிந்துகொள்ளுங்கள்.

எவனுடைய செயல்கள் எந்தவிதத்திலும் சீதம், உஷ்ணம், பயம், பாசம், வளமை ஏழ்மை இவற்றால் பாதிக்கப்படாமல் உள்ளதோ அவனே அறிஞன்

கிட்டாததை எட்டிப்பிடிக்க முயற்சிக்காமல், கடந்தை நடந்ததை பற்றி கவலை கொள்ளாமல், தனது ஐம்புலன்களை உணர்ச்சிகளை கட்டுப்பாட்டில் கொண்டு எதிர் வரும் தடங்கல்களை, துன்பங்களை எவன் சந்திக்கிறானோ அவன் தான் பலவான், தைரிய சாலி. புத்திமான். 
               

திரதராஷ்டிரா, உண்மையில் ஒரு மனிதனுக்கு ஆபரணம் அழகு எது தெரியுமா, புத்தி கூர்மை, உயர்ந்த பண்புள்ள குலம், புலனடக்கம், ஆழ்ந்த கல்வியறிவு, தைரியம், ''தைர்யம் புருஷ லக்ஷ்ணம்'' என்பார்களே. நாவடக்கம். இயன்றவரை தான தர்மம், நன்றி உணர்வு, இது தான் அப்பா அவனுக்கு வைர வைடூர்ய நவரத்தினங்கள் போன்ற ஆபரணங்கள்

ஹே ராஜன், வார்த்தைகளை அளந்து பேசுவதற்கு இணையான மிகவும் கஷ்டமான செயல் வேறு எதுவும் இல்லை. இதை ஒருவன் தனது ஆளுமைக்கு கொண்டுவந்தால் அவன் தான் பலவான். சொற்களை அழகாக பொருத்தமான வார்த்தைகளால் சித்தரித்து அர்த்தம் பொதிந்ததாக அழகாக ஜனரஞ்சகமாக பேசுவதோ எழுதுவதோ எல்லோருக்கும் முடியாது.

சொல்கிறேன் கேள் திருதராஷ்டிரா, எவன் ஒருவன் தனது புலன்களையும் புத்தியையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறானோ, தவறுசெயகிறவர்களை தண்டிக்கிறானோ,
எவன் தனது செயல்களை அவற்றின் பலாபலன்களை ஆராய்ந்து திட சித்தத்தோடு செயல்படுகிறானோ, அவனிடத்தில் மஹா லட்சுமி வாசம் செயகிறாள்.

ஹே ராஜன், புரியும்படியாக சொல்கிறேன் கேள். நமது தேகம் ஒரு தேர். புத்தி தான்தேரோட்டி. ஐம்புலன்கள் வேகமாக ஓடும் குதிரைகள். இந்த குதிரைகளை எவன் தேரோட்டி போல அடக்கி ஒழுங்கான பாதையில் செலுத்துகிறானோ, அவன் தான் சிறந்த தேரோட்டி.. புரிகிறதா

கட்டுப்பாடில்லாத குதிரைகள் ஒவ்வொன்றும் தேரை அங்கும் இங்கும் வேகமாக இழுத்து சென்றால் தேர் அச்சு முறியும், தேரோட்டி உருட்டி தள்ளப்படுவான். சர்வ நாசம். இல்லையா?

தர்மத்தை புறக்கணித்துவிட்டு, உலக சாதனைகளை தேடி அலைந்து, தனது புலன்களுக்கு அடிமையாகி கட்டுப்பாடின்றி இருந்தால், அவனது சக்தி, செல்வம், குடும்பம், அவன் தன்மை, அழகு எல்லாமே சர்வ நாசமாகி அழிவான்.

ஆகவே தான் சொல்கிறேன், மனதை கட்டுப்பாட்டில் வை. புலன்களை அடக்கு. தெளிந்த அலைபாயாத மனம் ஆத்மாவின் நண்பன். தாவி தாவி குதிக்கும் மனது ஆத்மாவின் முதல் எதிரி.

ஐந்து பேரை நாம் விடாமல் பக்தியோடு வழிபடவேண்டும். தெய்வம், பெற்றோர், பித்ருக்கள், முற்றும் துறந்த துறவிகள், நல்ல ஆத்மார்த்தமான அதிதிகள் , விருந்தினர். மனப்பூர்வ ஆசீர்வாதங்கள் வாழ்த்துக்கள் அவர்களிடமிருந்து கொட்டும்போது ஆனந்த மழையில் நனைவாய். பெரும் புகழ் மதிப்பு தானாக கூடும்.


விதுர நீதி பகுதி 16
...
{ஆசையும் கோபமும்}

அதனால்தான் பாண்டவ தூதன் கிருஷ்ணன் ..பாண்டவர்க்காக துரியோதனனிடம் 
தூது சென்ற போது  விதுரர் மாளிகையில் தங்கினார்..
வில்லுக்கு விதுரன்..
விஜயனை விட சிறந்த வில்லாளி விதுரர்..

விதுர நீதி...👇👇

ஓ! மன்னாஈ {திருதராஷ்டிரரே}, 

பெரிய மீன் ஒன்று வலையின் மெல்லிய கயிறுகளை அறுப்பது போல, 
ஆசையும் கோபமும் ஞானத்தை அறுக்கும். 
..
அறத்தையும் பொருளையும் இவ்வுலகில் மதித்து வெற்றியின் வழிவகைகளை அடைய முயல்பவன், 
தான் வேண்டுவது அனைத்தையும் அடைந்து மகிழ்ச்சியை வெல்கிறான்.
...
 மனம்சார்ந்த தனது ஐந்து எதிரிகளைக் கட்டுப்படுத்தாத ஒருவன், 
பிற புற எதிரிகளை வீழ்த்த விரும்பினால், உண்மையில் அவற்றால் {அந்த ஐந்து எதிரிகளால்} வீழ்த்தப்படுகிறான். தங்கள் புலன்களைக் கட்டுப்படுத்தாத தீய மனம் கொண்ட மன்னர்கள், நாடாசையின் காரணமாகத் தங்கள் செயல்களாலேயே அழிவடைகிறார்கள் என்பதை நாம் பார்க்கிறோம்.
...
{தீயோருடன் நட்பு}
..
ஈரவிறகு, காய்ந்த விறகோடு எரிவது போல, பாவிகளோடு நிலைத்த தொடர்புடைய பாவமற்ற மனிதனும் தண்டிக்கப்படுகிறான். எனவே, பாவிகளோடு ஏற்படக்கூடிய நட்பைத் தவிர்க்க வேண்டும்.
...
அறியாமையில் இருப்பவன், பேராசை கொண்ட தனது ஐந்து எதிரிகளைக்(ஐம்புலன்கள்) கட்டுப்படுத்த தவறி, 
ஐந்து தனித்துவமான பொருட்களைக் கொண்டு பேரழிவில் மூழ்குகிறான். 
..
1.கபடமற்ற தன்மை, 
2.எளிமை, 
3.தூய்மை, 
4.மனநிறைவு, 
5.இனிமையான பேச்சு, 
6.சுய கட்டுப்பாடு, 
7.உண்மை, 
8.உறுதி 
ஆகியன எப்போதும் தீயவர்களிடம் இருக்காது
...
1.தன்னறிவு {ஆத்மஞானம்},
2.உறுதி, 
3.பொறுமை, 
4.அறத்தில் அர்ப்பணிப்பு, 
5.ஆலோசனைகளைக் கமுக்கமாக வைத்துக் கொள்வது, 
6.ஈகை ஆகியவை 
ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, 
இழிந்த மனிதர்களிடம் இருப்பதில்லை.
....
போலிக் குற்றச்சாட்டுகள், தீய உரைகள் மூலம் மூடர்கள் ஞானிகளுக்குத் தீங்கிழைக்கின்றனர். 
இதன் விளைவாக ஞானிகளால் செய்யப்பட்ட பாவங்களை அந்த மூடர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள். 
ஞானிகள் தங்கள் பாவங்களில் இருந்து விடுபட்டு இப்படியே மன்னிக்கப்படுகின்றனர். 
...
தீய குணத்தாலேயே தீயவர்கள் பலம் பெறுகிறார்கள்; 
குற்றவியல் சட்டத்திலும், 
பலமற்றவர்களையும் பெண்களையும் கவனமாகப் பார்த்துக் கொள்வதிலுமே மன்னர்களின் பலம் இருக்கிறது. மன்னிக்கும் தன்மையிலேயே {பொறுமையிலேயே} அறம்சார்ந்தவர்களின் பலம் இருக்கிறது.
(மன்னிப்பதனால் பலம் அதிகரிக்கிறது)
..
{பேச்சு [உரை]}
...
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, 
பேச்சைக் கட்டுப்படுத்தவதே மிகவும் கடினமானது என்று சொல்லப்படுகிறது. 
பொருள் நிறைந்த வார்த்தைகளுடன் கேட்பவர்களுக்கு இனிமையாக நீண்ட உரையை ஆற்றுவது என்பது எளிதானதல்ல. 
நன்கு பேசப்பட்ட பேச்சு, பல நல்ல விளைவுகளை ஏற்படுத்தும்; 
தீமையாகப் பேசப்பட்ட பேச்சு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தீமைகளுக்குக் காரணமாக இருக்கும். 
..
கணைகளால் துளைக்கப்பட்ட அல்லது கோடரியால் வெட்டப்பட்ட காடு மீண்டும் வளரலாம், 
ஆனால் காயப்படுத்தும் வகையில் தீய வார்த்தைகளால் நிந்திக்கப்பட்டுக் காயமடைந்த இதயம் மீண்டெழுவதில்லை {ஆறுவதில்லை}.
...
கணைகள், குண்டுகள், பராசங்கள் ஆகிய ஆயுதங்களை உடலில் இருந்து எளிதில் எடுத்துவிடலாம், 
ஆனால், இதயத்தின் ஆழத்தில் குத்தப்பட்ட வார்த்தைகளாலான குறுவாளை வெளி உருவி எடுப்பது இயலாதது. 
..
வார்த்தைக் கணைகள் வாயில் இருந்து அடிக்கப்படுகின்றன. அதனால் தாக்குண்ட ஒருவன் அல்லும் பகலும் வருந்துகிறான். பிறரது உயிரையே அது தொட்டுவிடுவதால், கற்ற மனிதன் அத்தகு கணைகளை அடிக்கக்கூடாது.
...
விதுர நீதி

உண்மையான தர்மம் எது ?
         
       இன்றைய பதிவில் உண்மையான தர்மம் எது என்பதை விதுரர் திருதராஷ்டிரனுக்கு அரசரான சூதன்வானுக்கும் அந்தணனான    விரோசனனுக்கும் இடையில் நடைபெற்ற ஒரு உரையாடல் மூலம் விளக்குகிறார். அதற்கு முன் சூதன்வான், வீரோசனன் இருவரும் யாரென தெரிந்து கொள்ளலாம்.

சூதன்வான், வீரோசனன் பற்றி ஒரு அறிமுகம்
      
                    உலகின் தோற்றத்தில் கல்ப காலத்தில் பிரம்மனுக்கு ஆறு   மகன்கள் இருந்தனர். அவர்கள் மரிச்சி, அத்ரி, அங்கிரஸ், புலஸ்தியர், புலஹர், கிரது ஆகியோர் ஆவர்.

                  மரிச்சி முனிவரின் மகன் காசியபர் ஆவார். காசியபரிடமிருந்தே அனைத்து உயிர்களும் தோன்றின.

                  தக்ஷனுக்கு (பிராஜாபதிகளில் ஒருவர்) நற்பேறு பெற்ற பதிமூன்று {13} மகள்கள் இருந்தனர். {காசியபரே இந்த தக்ஷனின் 13 மகள்களுக்கும் கணவராவார்.} 

                 அந்த தக்ஷனின் மகள்களின் பெயர்கள் பின்வருமாறு: அதிதி, திதி,தனு,  கலா, தனயு, சின்ஹிகா, குரோதா, பிராதா, விஸ்வா*, வினதை, கபிலா, முனி மற்றும் கத்ரு ஆவர். 

                   திதிக்கு ஹிரண்ய கசிபு என்று அழைக்கப்பட்ட ஒரு மகன் இருந்தான். அந்த சிறப்புமிகுந்த ஹிரண்யகசிபுவுக்கு உலகம் போற்றும் ஐந்து மகன்கள் இருந்தனர். எல்லோருக்கும் மூத்தவனின் பெயர் பிரஹலாதன், அடுத்தவன் ஸாஹ்ரதன், மூன்றாமவன் அனுராதா, அவனுக்கு அடுத்தவர்கள் சிபியும், வஷ்கலாவும் ஆவர். 

                      அந்த பிரஹலாதனுக்கு மூன்று மகன்கள் இருந்தனர் என்பது எல்லோரும் அறிந்த ஒன்று. அவர்கள் விரோசனா, கும்பா மற்றும் நிகும்பா ஆவர். 
  
              விரோசனா மணக்க ஆசைப்பட்ட கேசினி என்னும் திருமகள் மணக்க ஆசைப்பட்ட அந்தணன் சூதன்வான். வீரோசனன் அசுர குலம். சூதன்வான் அந்தணர் குலம். இருவரும் கேசினியை மணப்பதற்காக அவரவர் குல தர்மங்களை விவாதிக்கிறார்கள். அவர்கள் தரப்பு நியாயமான கருத்துக்களை மேற்கோள் காட்டி உண்மையான தர்மம் எது என்று விதுரர் கூறுகிறார்.

           எல்லோரிடமும் சமமாக  அன்பு செலுத்துதல் பற்றி     திருதராஷ்டிரனுக்கு விதுரர்  கூறிய தர்மம்.

                தன்னை தானே அறிந்து வாழும் மனிதர்கள் மற்றும் மன்னர்கள் பற்றி அறிந்த திருதராஷ்டிரன் விதுரனிடம்  “ அறத்திற்கும் பொருளுக்கும் ஏற்புடைய இத்தகு வார்த்தைகளை எனக்கு மீண்டும் அறிவுறுத்துவாயாக. அவற்றைக் கேட்கும் தாகம் எனக்கு அடங்கவில்லை. நீ சொல்வது அழகாக இருக்கிறது. உலக தர்மம் பற்றி எனக்கு விளக்கமாக கூறு, ” வேண்டினார்.

                      விதுரன் திருதராஷ்டிரனிடம் , “புனித இடங்கள் அனைத்திலும் நீராடுவதும், அனைத்து உயிரினங்களிடத்தும் அன்பு காட்டுவதுமாகிய இரண்டும் சமமே. அனைத்து உயிரினங்களிடமும் அன்பு காட்டுவது புனித இடங்களில் நீராடுவதை விட ஒரு வேளை விஞ்சியதாக இருக்கலாம். திருதராஷ்டிரரே நீங்கள் உமது மகன்கள் அனைவரிடமும் அன்பைக் காட்டுவீராக. அதனால், இவ்வுலகில் பெரும் புகழை வெல்வீர், அதனால் இவ்வுலகில் தங்கள் காலத்திற்கு  பிறகு நீர் சொர்க்கத்தை அடைவீர்.

        ஒரு மனிதனின் நற்செயல்கள் எவ்வளவு காலம் இவ்வுலகில் பேசப்படுமோ, அவ்வளவு காலம் அவன் சொர்க்கத்தில் மகிமைப் படுத்தப்படுகிறான். 

              அதனை தங்களுக்கு புரிய வைக்க ஒரு கதை கூறுகிறேன், ”என்று கூறி விட்டு அசுரனான சூதன்வானுக்கும் அந்தணனான    விரோசனனுக்கும் இடையே.நடந்த நிகழ்வை கூறுகிறார்.

கேசினியின் சுயம்வரம்

            ஒரு காலத்தில், ஒப்பற்ற அழகுடன் கூடிய கன்னிகை ஒருத்தி, கேசினி என்ற பெயரில் இருந்தாள். ஒரு நல்ல கணவனை அடையும் விருப்பத்தால் உந்தப்பட்ட கேசினி சுயம்வரத்தில் தனது தலைவனைத் தேர்ந்தெடுக்கத் தீர்மானித்தாள்.

                அப்போது திதியின் மகன்களில் {அசுரர்களில்} ஒருவனான விரோசனன் அந்தக் கன்னிகையை {கேசினியை} அடைய விரும்பி, சுயம்வர  இடத்திற்குச் சென்றான். தைத்தியர்களின் தலைவரான  விரோசனனை கண்ட கேசினி, அவனிடம் 

                “ஓ! விரோசனரே, அந்தணர்கள் மேன்மையானவர்களா? திதியின் மகன்கள் {அசுரர்கள்} மேன்மையானவர்களா? 
அந்தணர்கள் மேன்மையானவர்கள் எனில் நான் விரும்பும் சூதன்வான் ஏன் என்  மஞ்சத்தில் அமரக்கூடாது?” என்று கேட்டாள்.

              அதற்கு விரோசனன் கேசினியிடம், “பிரஜாபதியிடம் இருந்து எழுந்த அசுரர்களாகிய  நாங்களே சிறந்தவர்கள்.  நாங்களே அனைத்து உயிர்களுக்கும் மேலானவர்கள், இவ்வுலகம் எங்களுடையது என்பதில் ஐயமில்லை. அதற்கு முன் தேவர்கள் யார்? பிராமணர்கள் யார்? என்பதற்கு விளக்கம் கொடு ” என்று கேட்டான். 

                     அதற்குக் கேசினி விரோசனரிடம், “ நாம் இவ்விடத்திலேயே இருப்போமாக. நாளை இங்கே சூதன்வான் வருவார். அவரிடமே இதற்கு பதில் கேளுங்கள். அப்போது  நீங்கள் இருவரும் ஒன்றாக அமர்ந்திருப்பதைக் காண என்னை அனுமதிப்பீராக” என்றாள்.

             அதற்கு விரோசனன் {கேசினியிடம்}, “ஓ இனியவளே, அச்சமுடைய பெண்ணே {கேசினி}, நீ சொல்வதை நான் செய்வேன். காலையில் நானும் சூதன்வானும் இருவரும் ஒன்றாக அமர்ந்திருப்பதை நீ காண்பாய்” என்றான்

          “இரவு கடந்து, சூரிய ஒளி எழுந்ததும் பொழுது விடிந்தது.மறு நாள் தொடர்ந்தது , 
மறுநாள் சுயம்வர மண்டபத்தில், கேசினியுடன் விரோசனன் காத்திருந்த  இடத்திற்கு, சூதன்வான் வந்தான். அங்கே விரோசனனையும், கேசினியையும் தனக்காக சுயம்வர மண்டபத்தில் காத்திருக்க கண்டான். சூதன்வான் அங்கே வந்ததைக் கண்ட கேசினி,  தனது இருக்கையில் இருந்து எழுந்து அவனுக்கு ஓர் இருக்கையை அளித்து, கால் கழுவ நீரும், ஆர்க்கியாவும் கொடுத்தாள். பின் அவளே சூதன்வானை வரவேற்று உரிய வரவேற்பும் அளித்தாள்.
வீரோசனன் சூதன்வான் வாதம் 

                    அப்போது விரோசனன் தனது இருக்கையைப் பகிர்ந்து கொள்ளும்படி கேட்க, சூதன்வானோ  விரோசனனிடம் , “ஓ! விரோசனா, நான் உனது அற்புதமான தங்க இருக்கையைத் தொட்டாலும், உனக்குச் சமமாக என்னைக் கருதிக் கொண்டு, உன்னுடன் அதில் அமர மாட்டேன்” என்றான். 

             அதற்கு விரோசனன் “ஒரு பலகைத் துண்டு, ஒரு விலங்கின் தோல், புல்லாலோ வைக்கோலாலோ ஆன பாய், ஆகியவை மட்டுமே, உமக்குப் பொருத்தமானவை. எனினும், ஒரே இருக்கையை என்னுடன் பகிர்ந்து கொள்ளும் தகுதி உமக்கு இல்லை.என்றாலும் கேசினியின் வேண்டுகோளுக்காகவே ஒரே இருக்கையில் ஒன்றாக அமர சம்மதித்தேன் ” என்று நகைச்சுவையாக பதில் கூறினான்.

          அதற்குச் சூதன்வான் விரோசனனிடம், “தந்தை மற்றும் மகன், ஒரே வயதும், சமமான கல்வியும் கொண்ட பிராமணர்கள், இரு க்ஷத்திரியர்கள், இரு வைசியர்கள், இரு சூத்திரர்கள் ஆகியோர் ஓர் இருக்கையில் ஒன்றாக அமரலாம். இவர்களைத் தவிர வேறு யாரும் ஒன்றாக அமரக்கூடாது. 

               நான் அமர்ந்ததைவிடத் தாழ்ந்த இருக்கையில் அமர்ந்து கொண்டு, உன் தந்தையான பிரஹலாதன் எனக்கு மரியாதை செலுத்தி என்னோடு உரையாடுவது  வழக்கம். நீயோ எல்லா ஆடம்பரங்களுடனும் வீட்டில் வளர்க்கப்பட்ட குழந்தை என்பதால், சமூக பழக்க வழக்கம் எதையும் உன்னால் புரிந்து கொள்ள முடியவில்லை” என்றான்.

       அதற்கு விரோசனன் சூதன்வானிடம் , “அசுரர்கள் மத்தியில் இருக்கும் எல்லாத் தங்கத்தையும், பசுக்களையும், குதிரைகளையும், பிற வகைச் செல்வங்களையும் நான் பந்தயமாக வைக்கிறேன். இந்தக் கேள்விக்குத் தகுந்த பதிலை அளிக்க வல்லவர்களிடம் சென்று நாம் கேட்போம். வாரும்” என்றான். 

                    அதற்குச் சூதன்வான், “உனது தங்கம், பசுக்கள், வீரர்கள் ஆகியவற்றை விடு, ஓ! விரோசனா, நமது உயிர்களை இழக்கும்படி பந்தயம் வைத்து, இக்கேள்விக்குத் தகுந்த பதிலளிக்க வல்லோரிடம் கேட்போம்” என்றான். 
  
                 விரோசனன், “நமது உயிர்களைப் பிணை வைத்து, நாம் எவ்விடம் செல்வோம்? தேவர்கள் முன்னிலையிலோ, மனிதர்களில் எவர் மத்தியிலோ நான் நிற்க மாட்டேன்” என்றான். 

           அதற்குச் சூதன்வான் விரோசனனிடம், “நமது உயிர்களைப் பிணையாக வைக்கும் நாம், உனது தந்தை பிரகலாதனை அணுகுவோம். பிரஹலாதன், தன் மகனுக்காகக் கூடப் பொய்மையை ஒருபோதும் சொல்ல மாட்டான்” என்றான்.

            இப்படிப்பட்ட பந்தயத்தை ஏற்றுக் கொண்ட விரோசனன் மற்றும் சூதன்வான் ஆகிய இருவரும் கோபத்தால் உந்தப்பட்டு, பிரஹலாதன் இருக்குமிடத்திற்குச் சென்றனர். அவர்கள் இருவரையும் ஒன்றாகக் கண்ட பிரஹலாதன், “முன்பு ஒருபோதும் சேர்ந்து காணப்படாதவர்கள், இப்போது கோபம்கொண்ட இரு பாம்புகள் போல ஒரே சாலையில் ஒன்றாக வருகின்றனரே” என்று நினைத்து, “எப்போதும் சேராத நீங்கள், இப்போது சேர்ந்துவிட்டீர்களா? ஓ! விரோசனா,நான் உன்னைக் கேட்கிறேன். உனக்கும் சூதன்வானுக்கும் இடையில் நட்பேற்பட்டதா?” என்று கேட்டான் பிரகலாதன் .

             அதற்கு விரோசனன் பிரகலாதனிடம், “எனக்கும் சூதன்வானுக்கும் இடையில் எந்த நட்பும் கிடையாது. மறுபுறம் நாங்கள் எங்கள் உயிர்களைப் பந்தயமாக வைத்துள்ளோம்.  தந்தையே, நான் உம்மை ஒரு கேள்வி கேட்பேன், அதற்குப் பொய்யாகப் பதிலளிக்காதீர்!” என்றான். 

       ""அதற்குப் பிரஹலாதன்,“மதிப்பிற்குரிய சூதன்வான் இளைப்பாற நீரும், தேனும், தயிர்க்கடைசலும் சூதன்வானுக்குக் கொண்டுவரப்படட்டும்.என தன் சேடிகளுக்கு கட்டளையிட்டார்.

          பின் சூதன்வானிடம் , “ ஓ! அந்தணா, நீ எங்களது வழிபாட்டுக்குத் தகுந்தவன். உனக்கு அளிப்பதற்காக பருத்த ஒரு வெண்பசு உனக்குத் தயாராக இருக்கிறது” என்றான் பிரகலாதன்.

 தீர்ப்பு கூறுபவனின் சங்கடம்

        அதற்குச் சூதன்வான் பிரஹலாதனிடம் , “ தங்கள் அன்புக்கு நன்றி மகாராஜா . நீர், தேன் மற்றும் தயிர்க்கடைசல் ஆகியவை, இங்கே வரும் வழியிலேயே எனக்கு வழங்கப்பட்டன. நான் உங்களிடம் ஒரு கேள்வியைக் கேட்கிறேன்., அதற்கு உண்மையான பதிலளிக்க வேண்டுகிறேன்! பிராமணர்கள் மேன்மையானவர்களா? அசுரர்கள்  மேன்மையானவர்களா ?” என்று கேட்டான். 

       அதற்குப் பிரஹலாதன்,“ஓ!சுதன்வானா, இவன் எனது ஒரே மகன். நீயும் இங்கே இருக்கிறாய். பிரச்சனையில் சம்பந்தப்பட்டவர்களும், நான் அறிந்தவர்களும், எனது அன்பிற்குரியவர்களுமான நீங்கள் இருவரும் இங்கே இருக்கும்போது, என்னால் எப்படி இதற்கு தக்க  பதிலளிக்க முடியும்?” என்று கேட்டான்.

               சூதன்வான் பிரஹலாதனிடம் , “உன்னிடம் இருக்கும் உன் பசுக்களையும் பிற விலைமதிப்பற்ற செல்வங்களையும் உனது மகனுக்குக் கொடு. ஆனால், ஓ! ஞானம் கொண்டவனே பிரகலாதா, இருவர் சர்ச்சை செய்து வரும்போது, அரசரான நீயே அதில் உண்மையைத் தீர்மானிக்க வேண்டியவன் ” என்றான். 

பொய் கூறுபவனின் குலம் எப்படி பாதிக்கப்படுகிறது? 

                   அதற்குப் பிரஹலாதன், “ஓ! சூதன்வான், தன்னிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு உண்மையில்லாமல் பொய்யைச் சொல்லி, தனது நாவைத் தவறாகப் பயன்படுத்துபவன் எப்படிப்பட்ட பாதிப்படைவான்?  இதை நானே உன்னிடம் கேட்கிறேன். பதில் கூறும் ” என்றான்.

          அதற்குச் சூதன்வான் பிரகலாதனிடம் ,  

இரவு நேரத்தில், தன் சக்களத்தின் கரங்களில் துயிலும் தனது கணவனைக் காணும் ஒரு கணவனைப் பிரிந்த மனைவி ஏங்குவதைப் போலவும், 
சூதாட்டத்தில் பகடையில் தோற்ற ஒரு மனிதன் மனம் வேதனைப்படுவது போலவும், 
💧சுமக்க முடியாத பெரும் துன்பச் சுமையால் தாங்க முடியாமல் கீழே விழுபவன் போலவும்,  நாவைத் தவறாகப் பயன்படுத்துபவன் பாதிக்கப்படுவான். 

         அப்படிப்பட்ட மனிதன், நகரத்தின் வாயில்களைக் கடந்து உள்ளே செல்ல தடை செய்யப்பட்டு நகரத்தின் வாயில்களுக்கு வெளியே பட்டினியுடன் தங்க வேண்டியிருக்கும். போலி சாட்சிகளைக் கொடுப்பவன், உண்மையில், எதிரிகளையே எப்போதும் கண்டடையும்படி வாழ விதிக்கப்படுகிறான்.

        ஒரு விலங்கின் காரணமாகப் பொய் பேசுபவனது தலைமுறையினரில் 
ஏறுமுக வரிசையில் ஐந்து மூதாதையர் வானரசில் {சொர்க்கத்தில்} இருந்து கீழே தள்ளப்படுகின்றனர். 

            ஒரு பசுவின் காரணமாகப் பொய் பேசுபவனது பத்து மூதாதையர் சொர்க்கத்தில் இருந்து கீழே தள்ளப்படுகின்றனர். 

             ஒரு குதிரையின் காரணமாகப் பொய் சொன்னால் நூறு மூதாதையரின் {சொர்க்கத்தில் இருந்து தள்ளப்படும்} வீழ்ச்சிக்கும், 

         ஒரு மனிதனின் காரணமாகப் பொய்சொன்னால், தனக்கு முன் ஏறு வரிசையில் ஆயிரம் மூதாதையரின் {சொர்க்கத்தில் இருந்து தள்ளப்படும்} வீழ்ச்சிக்கும் காரணமாக இருப்பான். 

      தங்கத்தின் காரணமாகச் சொல்லப்படும் பொய்யால், தனது குலத்தில் பிறந்த, பிறக்காத அனைத்து உறுப்பினர்களும் அழிவுக்குள்ளாகிறார்கள்.

         நிலத்தின் காரணமாகச் சொல்லப்படும் பொய்யால் {ஒருவனுடைய} அனைத்தையும் அவன் பாழாக்கிக் கொள்கிறான். எனவே, எந்த சூழ்நிலையிலும் ஒருபோதும் பொய் பேச கூடாது” என்றான் சூதன்வான்.

சூதன்வான் விளக்கம் கேட்ட பிரஹலாதன் தந்த தீர்ப்பும் , சூதன்வான் முடிவும் 

       பிரஹலாதன் தன் மகன் விரோசனனிடம், “விரோசனா, அங்கிரஸ் என்னைக் காட்டிலும் மேன்மையானவர், அதே போல, சூதன்வான் உன்னைக் காட்டிலும் மேன்மையானவன். சூதன்வானின் தாய் உன் தாயைக் காட்டிலும் மேன்மையானவள். எனவே, ஓ! விரோசனா, நீ சூதன்வானால் வீழ்த்தப்பட்டாய். இந்தச் சூதன்வானே இப்போது உனது உயிருக்குத் தலைவனாவான் . ஆனால், ஓ! விரோசனா, நீ சூதன்வானுக்காக உனது உயிரைக் கொடுக்க வேண்டும் எனவே நான் விரும்புகிறேன்” என்றான் 

      அதற்குச் சூதன்வான் பிரஹலாதனிடம், “ஓ! பிரஹலாதா, அறத்தைத் தேர்ந்தெடுத்து, மோகத்தால் நீ பொய் சொல்லாதிருந்ததால், நான் உன் அன்பிற்குரிய மகனின் உயிரை அவனுக்கே அளிக்கிறேன். என்னால் உனக்கு மீட்டளிக்கப்பட்ட உனது மகன் இதோ இருக்கிறான். எனினும், அவன், கன்னிகை கேசினியின் முன்னிலையில் எனது காலைக் கழுவி தனக்குரிய மரியாதை செலுத்த வேண்டும்” என்றான் .வீரோசனனும் அதனை ஏற்றுக் கொண்டு  சுதன் அவனுக்கு உரிய மரியாதை அளிக்கிறான்.

     திருதராஷ்டிரனது இறுதி காலம் பற்றி விதுரர் தந்த எச்சரிக்கை

தொடர்ந்து விதுரர் திருதராஷ்டிரனுக்கு கூறுகிறார்

             “இக்காரணங்களுக்காக,  நிலத்தின் மீது கொண்ட ஆசையின் காரணமாகப் பொய்மை பேசுவது பின்னரே உமக்குத் தகாது. உமது மகனின் மீது கொண்ட பாசத்தால் பொய் சொன்னால், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உமது பிள்ளைகள், அமைச்சர்கள் ஆகிய அனைவருக்கும் அழிவு விரைந்து வரும். மாடு மேய்ப்பவர்களைப் போலக் கையில் தடிகளைக் கொண்டு மனிதர்களை தீமையிலிருந்து தேவர்கள் பாதுகாப்பதில்லை; ஆனால், பாதுகாக்கப்பட வேண்டும் என்று தாங்கள் விரும்புவோருக்கு, அவர்கள் நல்ல புத்தியை அளிக்கின்றனர்.

              ஒருவன் நீதி மற்றும் அறநெறிகள் ஆகியவற்றில் கொண்டுள்ள கவனத்தின் விகிதத்தின் படியே ஒருவன் தனது நோக்கங்களில் வெற்றியடைகிறான் என்பதில் ஐயமில்லை. பொய்மையில் வாழும் ஏமாற்றுகர மனிதனை, வேதங்கள், பாவத்தில் இருந்து மீட்பதே இல்லை.

             புதிதாய் சிறகு படைத்த பறவைகள் தங்கள் கூடுகளைக் கைவிடுவதைப் போல, ஏமாற்றுகர மனிதன் மரணப்படுக்கையில் கிடக்கையில், அவன் கற்றறிந்த கல்வியும்  வேதங்களும் அவனைக் கைவிடுகின்றன.

              குடிப்பழக்கம், சண்டை, அதிக எண்ணிக்கையிலான மனிதர்களிடம் பகை, திருமணம் தொடர்பான அனைத்து மோதல்கள், கணவன் மனைவிக்கு இடையேயான உறவின் முறிவு, உட்பகை, மன்னனுக்குத் துரோகம் ஆகியவை ஏமாற்றுகர மனிதனின் செயலாகும். அவர்களது இறுதிக் காலம் யாருமற்ற தனிமையில் நரக வேதனையில் கழியும். அத்தகைய நிலைக்கு நீங்கள் ஆட்படக் கூடாது என்பதற்காகவே அழைத்ததும் ஓடி வந்தேன் என்றார் விதுரர்.

விதுர நீதி பகுதி 17

தீயவர்கள், மற்றவர்களிடம், 
என்னென்ன நல்ல குணங்கள் 
உள்ளன என்பதை அறிந்து 
கொள்வதில், ஆர்வம் காட்டுவதில்லை. 

மற்றவர்களிடம் என்னென்ன குறைகள் உள்ளன என்பதை கண்டுபிடிப்பதில் 
தான், அக்கறை செலுத்துகின்றனர்.
 சொர்க்கம் செல்பவர்கள் யார்?

*பெரியோர் உபதேசத்தை கேட்பவர்கள்*

*நீதி தெரிந்தவர்கள்*

*கொடுக்கும் குணம் உள்ளபவர்கள்*

*கடவுளுக்கு நைவேத்யம் செய்த பிரசாதங்களை உண்பவர்கள்*

*மற்றவருக்கு இம்சை தராதவர்கள்*

*பிறரை மனதாலோ உடம்பாலோ சொல்லாலோ காயப்படுத்தாமல் இருப்பவர்*

*உலகத்தில் ஒருவருக்கும் தீங்கு செய்யாதவர்*

*செய் நன்றி மறக்காதவர்*

*எந்த தருணத்திலும் சத்தியம் உண்மை பேசுபவர்*

இவர்கள் கண்டிப்பாக சொர்க்கம் செல்வார்கள்....

விருந்தினர்,யாசகர்,யோகியர் குண நலன்கள், நமது நம்பிக்கை தவறானால் ஒரு மனிதனின் நிலை

             கடந்த பதிவில் நல்ல ஊழியனுக்கும் முதலாளிக்குமான குண நலன்களை விளக்கிய விதுரர், அதன் அடிப்படையில் பாண்டவர்கள் மற்றும் கௌரவர்கள் நிலைமையை இவ்வாறு எடுத்துரைக்கிறார். “   மன்னா, திருதராஷ்டிரரே, உமது மகன் துரியோதனன் காட்டைப் போன்றவன். திருதராஷ்டிரரே, பாண்டவர்கள் அந்தக் காட்டின் சிம்மங்கள் என்று அறிந்து கொள்வீராக. அதன் சிங்கங்கள் இல்லாமல் அந்தக் காடு அழிக்கப்பட்டு விடும். அதே போல தங்கள் புகலிடமான காடு இல்லாமல் சிங்கங்களும் அழிவுக்குள்ளாகும்” ,என நடக்கப் போகும் நிகழ்வுகளை உணர்ந்து விதுரர், திருதராஷ்டிரனை எச்சரிக்கிறார்.

        அப்படியெனில் என் மக்களில் தகுதி வாய்ந்தவரை தேர்ந்தெடுத்து இந்த நிலையை மாற்றுவது எப்படி என்று திருதராஷ்டிரர் கேட்கிறார்?

         நல்ல பழக்க வழக்கங்களை பெற்றோரையும்,  குருவையும் பின்பற்றி அவர்களாக கற்றுக்  கொள்வதன் மூலமாகவே அதை பெற முடியும்  . தருமனும் அவன் சகோதரர்களும் அந்நிலையிலிருந்து ஒரு போதும் தவறியதில்லை   என்று கூறிய விதுரர் தொடர்ந்து  விருந்தினர்,யாசகர், யோகியர் குண நலன்களை பற்றியும்,   நமது நம்பிக்கை தவறானால் வாழ்க்கை எப்படி மாறிப் போகிறது என்பதையும், பற்றி கூறுகிறார் 

விருந்தினர் உபசரிப்பு 

           வயது முதிர்ந்த ஒரு மதிப்பிற்குரிய நபர், தனது இல்லத்திற்கு விருந்தினராக வரும்போது, ஓர் இளைஞனின் அவர் மீது மதிப்பு கொண்டு அவரை எதிர்கொண்டு அழைத்து), வணங்கிய பிறகே இல்லத்திற்குள் அழைத்து வர வேண்டும்.

               தற்கட்டுப்பாடுடைய ஒருவன் , விருந்தினருக்கு அமர தகுந்த இருக்கையை அளித்து, நீரைக் கொண்டு வந்து, அவரது காலைக் கழுவச் செய்து, வழக்கமான விசாரிப்புகளைச் செய்த பிறகே, தனது சொந்த விவகாரங்களைப் அவரிடம் பேச வேண்டும். அனைத்தையும் கருத்தில் கொண்ட பிறகு, அவருக்கு உணவு அளிக்க வேண்டும்.

            ஒருவன் மீது கொண்ட பயத்தினாலோ, அவனது கஞ்சத்தனத்தாலோ, அவனது விருப்பமின்மையாலோ, எவனுடைய வீட்டில், மந்திரங்கள் அறிந்த அந்தணர் ஒருவர் நீர், தேன், தயிர்க்கடைசல் மற்றும் பசுக்கள் ஆகிய தானங்களைப் பெறவில்லையோ, அவன் வீணாக வாழ்பவன் என்று ஞானிகள் கூறியுள்ளனர்.

       மருத்துவர், ஆயுதங்கள் செய்பவர், காலம் முடியும் முன்னரே பிரம்மச்சரிய நோன்பைக் கைவிடுபவன், திருடன், கோணல்புத்திக்காரன், மதுவுண்ணும் பிராமணன், கருச்சிதைவை ஏற்படுத்துபவன், படைக்குச் சேவை செய்து வாழ்பவன், வேதங்களை விற்பவன் ஆகியோர் விருந்தினராக வந்தாலும், அவன் என்னதான் நீர் கொடுக்கத் தகுதியற்றவனாக இருப்பினும், அந்த வீட்டின் உரிமையாளன்,  அவனை அன்பாக நடத்த வேண்டும். விருந்தினராக வருபவன் தகுதியற்றவனாக இருந்தாலும், அவர்களுக்கும் விருந்தளிப்பவனே உண்மையான உரிமையாளன். 

யோகி எப்படி இருக்க வேண்டும்? 

         உப்பு, சமைத்த உணவு, தயிர்க்கடைசல், பால், தேன், எண்ணெய், தெளிந்த நெய், எள் இறைச்சி, பழங்கள், கிழங்குகள், கீரைவகைகள், சாயமேற்றப்பட்ட துணிகள், அனைத்து வகைச் சந்தனக்கலவைகள் நறுமணப்பொருட்கள் மற்றும் வெல்லம் , பாகு ஆகியவற்றை விற்பனை செய்பவனாக  ஓர் அந்தணன் இருக்கக்கூடாது.

            கோப வசப்படாதவன், துயரத்தைக் கடந்தவன், எப்போதும் நட்போ சண்டையோ தேவைப்படாதவன், புகழ் மற்றும் பழி ஆகிய இரண்டையும் அலட்சியம் செய்பவன், விருப்பு மற்றும் வெறுப்பு இரண்டையும் விட்டு விலகி நிற்பவன், இவ்வுலகில் இருந்து முழுமையாக விடுபட்டவனாக இருப்பின், அவனே உண்மையான  யோகியாவான்.

             காட்டில் முளைக்கும் தினை 
 கம்பு, சோளம், கேழ்வரகு,வரகு அரிசி, குதிரைவாலி அரிசி, கிழங்குகள், கீரைகள் ஆகியவற்றைக் கொண்டு வாழ்ந்து, தன் ஆன்மாவை முழுக் கட்டுப்பாட்டுக்கள் வைத்து, தனது வழிபாட்டுக்குரிய நெருப்பைக் கவனமாக வைத்து, விருந்தினர்களை எப்போதும் மதிப்புடன் கருதி, காட்டில் வசிக்கும் அறம்சார்ந்த தவசியே, உண்மையில் சகோதரத்துவத்தில்  முதன்மையானவன் ஆவான்.

நம்பிக்கை

           ஒரு புத்திசாலி மனிதனுக்குத் தீங்கு இழைத்துவிட்டு, அந்தத் தீங்குக்கு உள்ளானவன் உண்மையில் தொலைவில் தான் வாழ்கிறான் என்று உறுதி செய்தாலும் ஒருவன்  சமாதானம் அடையக்கூடாது . புத்திசாலி மனிதர்களின் கரங்கள் நீளமானவை. அவற்றைக் கொண்டு அவர்கள் அந்தத் தீங்குக்கான பதில் தீங்கைத் திரும்பச் செய்ய முடியும்.

            நம்பத்தகாதவனிடம் ஒருவன் நம்பிக்கை கொள்ளக்கூடாது. அதே போல, நம்பத்தகுந்தவனிடமும் அதீத நம்பிக்கை கொள்ளலாகாது. நம்பிக்கையைப் பெற்றவனிடம் இருந்து எழும் ஆபத்து, ஒருவனது வேர்களையே அறுத்துவிடும்.

             ஒருவன், பொறாமையைக் கைவிட வேண்டும், தனது மனைவிகளைக் காக்க வேண்டும், பிறருக்கு உரியதைச் சரியாகக் கொடுக்க வேண்டும், பேச்சில் இனிமையுடையவனாகவும் இருக்க வேண்டும். தனது மனைவிகளைப் பொறுத்தவரை, ஒருவன், இனிய நாக்கும், பேச்சும் கொண்டவனாக இருக்க வேண்டும். ஆனால் அவன் அவர்களது அடிமையாக இருக்கக்கூடாது. உயர்ந்த அருள் கொண்டவர்களாவும், அறம் சார்ந்தவர்களாகவும், வழிபடத் தகுந்தவர்களாகவும், தங்கள் குடும்பத்தின் ஆபரணங்களாகவும் திகழும் மனைவிகளே ஒருவனது இல்லச் செழிப்பின் உருவகம்  என்று சொல்லப்படுகிறது. எனவே, அவர்கள் சிறப்பாகப் பாதுகாக்கப்பட வேண்டும்.

                   ஒரு மன்னன் தன் தந்தைக்கு அந்தப்புரத்தின் மேற்பார்வையை அளிக்கலாம். தாய்க்கு சமையலறையையும் , தன்னைப் போன்ற ஒருவனுக்குப் பசுக்களை மேற்பார்வையிடும் பொறுப்பையும் அளிக்கலாம். ஆனால்,  வேளாண்மையைப் பொறுத்தவை, தானே நேரடியாக அதை மேற்பார்வையிட வேண்டும்.

              வியாபாரம்  செய்ய வந்த விருந்தினர்களுக்குப் பணியாட்களைக் கொண்டும், அந்தண குலத்தைச் சேர்ந்தவருக்குத் தனது மகன்களைக் கொண்டும் பணிவிடை செய்ய வேண்டும்.

🍀மன்னன் ஆட்சித்திறம்🍀

          நெருப்பு அதன் தோற்றத்தை  நீரில் கொண்டுள்ளது; க்ஷத்திரியர்கள், தங்கள் தோற்றத்தை பிராமணர்களில் கொண்டுள்ளனர், இரும்பு தனது தோற்றத்தை கற்களில் கொண்டுள்ளது. தங்கள் முன்னோடிகளுடன் தொடர்பு ஏற்படும்போது, அனைத்தையும் பாதிப்படையச் செய்யும் நெருப்பு, க்ஷத்திரியர்கள் மற்றும் இரும்பு ஆகிய அவற்றின் சக்தி, விரைவில் சமநிலை அடைந்துவிடும்.

         ஒரு நெருப்புத் தன்னை வெளிக்காட்டிக் கொள்ளாமல் மரத்தில் மறைந்திருக்கிறது. நெருப்பு சக்தி கொண்டவர்களான நற்குடியில் பிறந்த நல்லவர்களும், மன்னிக்கும் இயல்பு கொண்ட பொறுமைசாலிகளும், அவர்களுக்குள் இருக்கும் நெருப்பு போன்ற சக்திகளை வெளிக்காட்டிக் கொள்ள மாட்டார்கள்.

          தன்னைச் சார்ந்தவர்களாலும், வெளியில் இருப்பவர்களாலும் தனது ஆலோசனைகள் அறியப்படாமல் இருக்கச் செய்யும் அதே வேளையில், பிறரின் ஆலோசனைகளை ஒற்றர்கள் மூலமாக எந்த மன்னன் அறிந்து கொள்கிறானோ, அவன் நீடித்த செழிப்பில் மகிழ்ச்சியாக இருக்கிறான்.

           தான் செய்ய நினைப்பதை ஒருவன் பேசக்கூடாது. அறம், பொருள், இன்ப வகைகளில் நீர் செய்யும் எதுவும், அது நிறைவடையும் வரை அறியப்படாமல் இருக்கட்டும். ஒரு காரியம் செய்யப்படும் வரை  ஆலோசனைகள் பலரால் அறியப்படாதிருக்கட்டும்.

          மலையின் உச்சிக்கோ, மாளிகையின் மேல்தளத்திற்கோ, மரங்களோ செடிகளோ அற்ற காட்டுப்பகுதிக்கோ சென்று, யாரும் அறியாது உமது ஆலோசனைகளில் தீருமானம் எடுக்க வேண்டும்.

           கல்வியறிவில்லாத நண்பன், கல்வியறிவுள்ள, ஆனால் புலனடக்கம் இல்லாத நண்பன் ஆகியோர், அரசாங்க இரகசியத்தின் காப்பாளனாக இருக்கத் தகுதிற்றவர்களாவர்.

           ஒரு மன்னனின் நிதிகள், அவனது ஆலோசனைகள் ஆகிய இரண்டையும் பாதுகாக்கும் பொறுப்பு ஓர் அமைச்சனுக்கு உரியது. எனவே, ஒரு மன்னன்  ஒருவனை நன்றாகச் சோதித்தறியாது  அவன் அமைச்சர்களில் ஒருவனாக ஒருபோதும் ஏற்றுக் கொள்ள கூடாது.

           எவனுடைய அமைச்சர்கள், அவன் செய்யும் அறம், பொருள், இன்பம் சார்ந்த செயல்களை, அவை நிறைவேறிய பிறகு அறிகிறார்களோ, அவர்களே அந்த மன்னனே ஆட்சியாளர்களில் முதன்மையானவன் ஆவான்.

              எந்த மன்னனின் ஆலோசனைகள் சந்தேகமில்லாமல் இரகசியமாக பேணப்படுகிறதோ, அந்த மன்னனே வெற்றியடைவான்.

              அறியாமையால் நிந்திக்கத்தக்க செயல்களைச் செய்பவன், அந்தச் செயல்களின் விளைவால் தனது  உயிரையே கூட இழக்கிறான்.

         புகழத்தக்க காரியங்களைச் செய்யும் போது, அஃது எப்போதும் சுகத்தையே அளிக்கும். அத்தகு செயல்களைச் செய்யாமல் இருப்பதே மனவருத்தத்திற்கு வழிவகுக்கும்.

          பித்ருக்களை மதிக்கும் வண்ணம் செய்யப்படும் சிரார்த்தங்களைச் செய்ய, வேதமறியாத பிராமணனுக்குத் தகுதியில்லாதது போல, நாட்டைப் பாதுகாக்கும் வழிகளைக் குறித்துக் அறியாதவன் அரசியல் கருத்தரங்குகளில்  பங்கு பெற தகுதியற்றவனாவான்.

              நாட்டைப் பாதுகாக்கும் வருவாய் அதிகரித்தல், குறைதல், உபரி ஆகியவற்றில் ஒரு கண் கொண்டு, நாட்டை பாதுகாக்கும் வழிகளை  அறிந்து, தனது நிலையை அறிந்து, மெச்சத்தகுந்த நடத்தை கொண்டிருக்கும் ஒருவன் முழு உலகத்தையும் தன் கட்டுக்குள் கொண்டு வருவான். விளைவை உண்டாக்கும் கோபத்தையும், மகிழ்ச்சியையும் கொண்டு, எது செய்யப்பட வேண்டுமோ அதை நேரடியாகக் கண்காணித்து, தனது கருவூலத்தைத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஒருவன் முழு உலகத்தையும் தன் கட்டுக்குள் கொண்டு வருவான்.
         

1. படை, 2. குடிமக்கள், 3. குறையாத வளம் {செல்வம்}, 4. அமைச்சன், 5. நட்பு {அண்டை நாட்டு நட்பு}, 6. அரண் {காவல்} ஆகிய ஆறு அங்கங்களைக் கொண்டவனே மன்னர்களில் சக்கரவர்த்தி ஆவான்.

        தனது தலைக்கு மேல் பிடிக்கப்படும் குடையையும், தான் வென்ற பெயரையும் கொண்டு ஒரு மன்னன் மனநிறைவு கொள்ள வேண்டும். தனக்கு ஊழியம் செய்வோருடன் தனது நாட்டின் செல்வத்தைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். எந்த ஒரு முடிவையும் தனியாக ஒரு மன்னன் தீர்மானிக்கக்கூடாது. 
   
           ஓர் அந்தணன், மற்றொரு அந்தணனை அறிவான், ஒரு கணவன், மனைவியைப் புரிந்து கொள்வான், ஒரு மன்னன் அமைச்சரை அறிவான், ஏகாதிபதிகளே ஏகாதிபதிகளை அறிவார்கள்.

மரணத்திற்குத் தகுந்தவர்கள்

                 மரணத்துக்குத் தகுந்த எதிரி ஒருவனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டவரப்படும்போது, அவனை விடுவிடக்கக்கூடாது. எதிரி மரணத்திற்கே தகுந்தவனென்றாலும், பலம்நிறைந்த எதிரியிடம், பலவீனமாக இருக்கும் ஒருவன் வணக்கத்துடன் நடந்து கொள்ள வேண்டும். ஆனால், பலத்தில் நிறைவடைந்தவுடனேயே, அவன், அந்த எதிரியைக் கொல்ல வேண்டும். அவன் கொல்லப்படவில்லையென்றால், அந்த எதிரியால் விரைவில் ஆபத்து எழும். தேவர்கள், மன்னர்கள், அந்தணர்கள், முதிர்ந்தோர், குழந்தைகள், ஆதரவற்றோர் ஆகியோருக்கு எதிரான கோபத்தை ஒருவன் முயற்சியுடன் அடக்க வேண்டும்.

                 முட்டாள்கள் ஈடுபடுவது போல, ஆதாயமற்ற சண்டைகளில் ஒரு ஞானி ஈடுபடக்கூடாது. அப்படிப்பட்ட சண்டைகளில் ஈடுபடாமல் இருப்பதால் அவன், இவ்வுலகில் பெரும் புகழை அடைந்து, ஆபத்து மற்றும் பெருந்துயரங்களைத் தவிர்க்கிறான். 
ஆண்மையற்றவனாக  இருக்கும் கணவனை விரும்பாத பெண்களைப் போல, பலனற்ற அருள், விளைவில்லாத கோபம் கொண்டோரைத் தலைவனாக ஏற்றுக் கொள்ள மக்கள் விரும்ப மாட்டார்கள்.

        செல்வத்தை அடைய புத்தி காரணமல்ல, அதே போல, வறுமைக்கு மூடத்தனம் காரணமல்ல; இவ்வுலகில் உள்ள வேறுபாடுகளின் காரணங்களை ஞானிகள் மட்டுமே அறிவர்; எல்லாராலும் அறிய முடியாது. 

          வயதில் மூத்தோரையும், நடத்தை, அறிவு, புத்திசாலித்தனம், செல்வம், குலமரபு ஆகியவற்றில் தலைமையாக இருப்போரையும் மூடன் எப்போதும் அவமதிப்பான்.

              தீய மனநிலை கொண்டோர், அறிவற்றவர்கள், பொறாமை கொண்டோர், பாவிகள், குற்றங்களையே பேசுபவர்கள், கோபமுடையவர்கள் ஆகியோர் விரைவில் துயரத்திற்கு உள்ளாகின்றனர்.

             ஏமாற்றுத்தனமில்லாமை சொல் தவறாமை, தானம், நிறுவப்பட்டுள்ள புணர்வு விதிகளை நோற்பது, நன்கு அடக்கப்பட்ட பேச்சு ஆகியவை அனைத்து உயிர்களையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும்.

           ஏமாற்றுத்தனமில்லாத, சுறுசுறுப்பான, நன்றியுணர்வு கொண்ட, புத்திசாலித்தனம் உள்ள, கபடமற்ற ஒருவனது கருவூலம் வெறுமையாக இருப்பினும், தனது செயலால் நண்பர்கள், ஆலோசகர்கள், பணியாட்கள் ஆகியோரை அவன் அடைகிறான்.

          புத்திக்கூர்மை, மன அமைதி, தற்கட்டுப்பாடு, தூய்மை, கடுஞ்சொல் பேசாமை, நண்பர்களுக்கு ஏற்பில்லாத எதையும் செய்யவிரும்பாமை நண்பர்களுக்குத் துரோகம் செய்யாமை ஆகிய ஏழும் ஒருவனுடைய செழிப்பு எனும் சுடருக்கு எரிபொருளாகக் கருதப்படுகின்றன.

         பிறருக்கு உரியதைக் கொடுக்காத இழிந்தவன், தீய ஆன்மா கொண்டவன், நன்றிமறந்தவன், வெட்கங்கெட்டவன் ஆகியோரைத் தவிர்க்க வேண்டும். 

          குற்றமற்ற அப்பாவியைப் பற்றி, அடுத்தவனிடம் தூண்டிவிடும் குற்றவாளி, ஒரே அறையில் பாம்புடன் இரவைக் கடத்தும் மனிதனைப் போல, இரவில் அமைதியாகத் தூங்க முடியாது.

         எவன் கோபம் அடைந்தால், ஒருவனின் உடமைகளும், பொருள் கொள்ளும் வழிகளும் ஆபத்துக்குள்ளாகுமோ, அவனை, தேவர்களை அமைதிப்படுத்துவது போல அமைதிப்படுத்த வேண்டும். பெண்கள், பொறுப்பற்றவர்கள், தங்கள் சாதிக்குரிய கடமைகளில் இருந்து விழுந்தவர்கள், தீய மனநிலை கொண்டவர்கள் ஆகியோரை நம்பியிருக்கும் நோக்கங்களின் வெற்றி சந்தேகத்திற்குரியதே. 

            பெண், ஏமாற்றுக்காரன், குழந்தை ஆகியோரைத் தனது வழிகாட்டியாகக் கொண்டிருப்பவன் ஓட்டை விழுந்த தோணியைப் போல ஆதரவற்று மூழ்குவான்.

               வேலையின் பொதுவான நெறிமுறைகளில் திறமையுள்ளவர்கள், அவ்வேலையின் குறிப்பிட்ட வகைகளை அறியாதிருந்தாலும், அந்தக் குறிப்பிட்ட வகை வேலைகள் துணை வேலைகளே என்பதால், அவர்கள் கற்றவர்கள் என்றும், அறிவுள்ளவர்கள் என்றும் மனிதர்களால் கருதப்படுகிறார்கள்.

              மோசடிக்காரர்கள், கூத்தாடிகள், கெடுபுகழ் கொண்ட மகளிர் வேசிகள் ஆகியோரால் புகழப்படும் மனிதன் உயிரோடிருந்தாலும் இறந்தவனாகவே கருதப்படுகிறான்.

        அளவிலா சக்தி கொண்ட பலமிக்க வில்லாளிகளான பாண்டவ புதல்வர்களை விட்டுவிட்டு, பலமிக்கப் பேரரசின் பொறுப்பை நீர் துரியோதனனிடம் அளித்திருக்கிறீர். எனவே,ஆணவத்தால் மூவலகங்களில் இருந்து விழுந்த மகாபலியைப் போலப் பரந்திருக்கும் இந்தச் செல்வச் செழிப்பு வீழ்ச்சியடைவதை விரைவில் நீர் காண்பீர்” என  விதுரன் ஒரு மன்னனுக்கு குணநலன்களை கூறி,  அதை கைக்கொள்ளாததால் திருதராஷ்டிரன் அரசு எவ்வாறு வீழும் என எச்சரிக்கிறார்.

அறம் பயில் : 

(விதுர நீதி )
..........................

பாவிகளாக இருப்பவர்கள், தங்கள் குறைகளை உறுதி செய்து கொள்ளாததைப் போலப் பிறருடைய நல்ல குணங்களையும் உறுதி செய்ய மாட்டார்கள். 

அனைத்துக் காரியங்களிலும் உயர்ந்த வெற்றியை விரும்பும் ஒருவன், தொடக்க நிலையில் இருந்தே அறம் பயில வேண்டும்.

விதுர நீதி பகுதி 18

சுருக்கமாகவும், தெளிவாகவும் 
வாழ்வின் தர்மத்தைப் பற்றி விதுர நீதி சொல்கிறது. 

அரசனுக்கு மட்டுமல்ல, சகலருக்கும் உரித்தானது ..

🌷“ திருதராஷ்டிரா, இத்தனையும் நான் பேசியதற்குக் காரணம், பாண்டு நந்தனர் யுதிஷ்டிரர் சத்திரிய தர்மத்தின்படி போருக்குத் தயாராகிறார். இதனால் பாதிக்கப்படப்போவது இருவருக்கும் நடுவே இருக்கின்ற நீங்கள் மட்டுமே. உங்கள் உடம்பு இரண்டாக பிரிந்து ஒரு பக்கத்தை ஒரு பக்கம் எதிர்த்தால் உங்கள் நிலை என்ன ஆகும். எந்தப் பக்கம் ஜெயிக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புவீர்கள். இதை யோசிக்க யோசிக்க நான் அதிர்ந்து போகிறேன். உங்களுக்கு என்ன உசிதம் என்றுத் தோன்றுகிறதோ அதைச் செய்யுங்கள் ”..

🌷 “ விதுரா, மிகப் பொறுமையாக எனக்கு நல்ல விஷயங்களை கூறினாய் .. பாண்டவர்களிடம் நான் பிரேமை வைத்திருக்கிறேன் என்றாலும் துரியோதனனை சந்தித்த பிறகு என் அறிவு மாறிவிடுகிறது. இது என் விதி விதுரா. விதியை மாற்றும் வலிவு எவருக்கும் இல்லை. இன்னும் ஏதேனும் எனக்கு சொல்ல வேண்டியிருப்பின் சொல் ”

🌷 மன்னா, இந்த விஷயத்தை இரண்டு விதமாக அணுகலாம். மரணம் உண்டு. அது கர்மத்தால் விலகுகிறது என்பது ஒரு கொள்கை. மரணம் என்பதே இல்லை என்பது இரண்டாவது கொள்கை. இவை இரண்டுமே சத்தியங்கள். இன்னும் சூட்சமமாக சொல்கிறேன்.

🌷 தவறே மரணம். தவறின்மையே அமிர்தம். தன்னை அறிந்து கொள்ளாததின் விளைவால் ஒரு மனிதன் மரணத்தை கற்பிதம் செய்து கொள்கிறான். தான் யார் என்ற கேள்விக்கு பெயரும், ஊரும், மதமும், ஜாதியும் சொல்கிறான்.மனம் என்பது இலையும், பூவும், கனியும், காயுமா, அதுதான் காணக் கிடைக்கிறது. ஆனால் அதனாலா வாழ்கிறது. வேர் காணக் கிடைப்பதில்லை. வேரின்றி மரம் இல்லவே இல்லை. கனியும் காயும் இலையும் பாழே. மனிதனுடைய ஆத்மாவை தரிசனம் செய்யாது தனக்குத்தானே அடையாளங்கள் ஏற்படுத்திக் கொண்டு நான் இன்ன வம்சம் இன்னாருடைய பிள்ளை என்கிற போது மிகப் பெரிய தவறு நேருகிறது. தவறே மரணம். தவறின்மை அமிர்தம்.

🌷 மனிதன் ஆசைவாய்ப்பட்டு மோகாவேசம் கொண்டு தனக்கு எதிர்படுகின்ற விஷயங்களோடு ஐக்கியமாகி தான் அதற்கு நட்போ எதிரியோ பிரிந்துபடுகிறான். உண்மையில் எவனும் எதற்கும் நட்புமில்லை எதிரியுமில்லை. அந்தராத்மாவில் லயிக்க தெரிந்து விட்டால் மனம் காணாமல் போகிறது. மனமற்ற இடத்தில் ஆசை வருவதில்லை. ஆசை இல்லாததால் மோகாவேசம் கொள்வதில்லை. மோகாவேசம் இல்லாததால் ஆத்திரம், ஆசூயை, கோபதாபம், வஞ்சனை, தற்புகழ்ச்சி, கள்ளம், கபடம், கெடுமனம், மித்ர துரோகம் போன்ற கேவலமான எண்ணங்கள் உண்டாவதில்லை. இந்த விஷயங்களில் சிக்கிக் கொண்டவன் புயற் கடலில் துரும்பென அலைகழிக்கப் படுகிறான். தன்னை சரீர சம்பந்தம் உள்ளவனாகவும் நினைத்துக் கொள்கிறான். இது தவறு. இது தவறான கற்பிதம். இதுவே மரணம்.

🌷 நீ சரீரமற்றவன் என்பதை உணர்ந்து விட்டால் இந்த உலக விஷயங்களில் எதிலும் எந்த நாட்டமும் இராது. இவைகளில் நீ செய்ததாகவோ செய்யாததாகவோ கருதமாட்டாய். இந்த நடுநிலையில் நல்லதும் கெட்டதும் வெளிவராது. வயலை விட்டு வீட்டிற்கு போவது போலவும், வீட்டை விட்டு வயலுக்கு போவது போலவும் , அரண்மனைக்கு போவது போலவும் ஒருவன் செய்தால் அது மரணமா. அல்லது மாற்றமா. மாற்றத்தை மரணம் என்று கொண்டிருக்கிறோமா. வயலை விட்டு வீட்டிற்கு வந்தவன் துக்கப்டுவதில்லையே. அரண்மனைக்கு வந்தவன் அழுவதில்லையே. ஆன்மாவின் இடம் மாற்றத்தை அறிந்து கொண்டால் மரணம் உண்டோ.

🌷 எனவே, மரணம் என்பது கற்பிதம். மனிதன் உருவாக்கிய விஷயம். அதற்குக் காரணம் தன்னை சரீரம் என கொள்ளுதல். சரீரத்தால் கிளர்ந்த ஆசை. அந்த ஆசை கொடுத்த மோகாவேசம். மோகாவேசத்தால் தோன்றிய அற்ப குணங்கள். இவை அனைத்தும் தவறு. இந்த தவறே மரணம். ஆத்மாவில் லயித்திருப்போருக்கு தவறின்மை என்ற அமிர்தம் கிடைக்கிறது.

🌷 கோமணத்தோடு வயலிலும், வேட்டியோடு வீட்டிலும், அலங்காரத்தோடு அரண்மனையிலும் இருப்பது போல ஒவ்வொரு லோகத்திலும் ஒரு நியதி உண்டு. எமனுடைய லோகம் பித்ரு லோகம். அங்கே ஆன்மாவிற்கு வேறுவிதமான இருப்பு.

🌷 மன்னா, இன்னும் இந்த விஷயத்தை சூட்சமமாக சொல்கிறறேன் கேள். இறந்த பிறகு மனிதனுடைய மனமும் புலன்களும் உயிரோடு உடன் செல்கின்றன. கனவில் நீ உண்ணுவதில்லையா, சுவையான பானம் குடிப்பதில்லையா, ஆனால் அவை அங்கு இல்லை. மனம் அந்த நினைவை சுமந்து செல்கிறது. இந்த நிலைமையே ஒரு லோகத்தில் வாழ்க்கை ஆகிவிடுகிறது. சரீரமாய் இருக்கும் போது உணவிலும், மதுவிலும், பெண் போகத்திலும், செல்வத்திலும், ராஜ்ஜியம் ஆளுவதிலும் ஆவல் கொண்ட மனிதன் நினைவு இறந்த பின்னும் அவனை ஆட்டிப் படைக்கிறது.

🌷 சரீரத்தோடு இருக்கும் போது ஆன்ம தரிசனம் பெற்று விட்டால், சரீரம் தாண்டி உள்ளே இருப்பது யார் என்று புரிந்து விட்டால் மரணத்திற்குப் பிறகு மனம் ஆன்மாவை சுற்றி இருக்காது. புலன்கள் உதிர்ந்து விடுகின்றன. புலன்களை வெல்லாத மனம் இறந்த பிறகும் சுக போகத்திற்கு அலைகிறது. புலன்களில் வசப்படுகிற போது ஆன்மாவை அறிகின்ற ஞான சக்தி அழிந்து விடுகிறது. மரணத்தை வெல்ல விரும்புவன் தன் ஆன்மாவை அறிய வேண்டும். ஆன்மாவை அறிவதற்குண்டான எளிய வழி சரீரம் உள்ள போதே பரமாத்மாவை சரணடைதல். பரமாத்மா தரிசனம் ஆன்மாவை இனம் காட்டுகிறது.

🌷 “மன்னா, மேலேறச் சொல்லி ஏணி சார்த்தப்பட்டிருக்கிறது. முயன்று படிகளில் ஏற வேண்டும். பூமியின் சம்பந்தம் அறும்வரை மேலே போக வேண்டும். நான் சொல்வது ஒரு உபமானம். அப்பொழுது பிறந்த இடமும், வளர்ந்த இடமும் இதனால் இதனிலிருந்து விடுபட்ட சரீர தன்மையும் அகங்காரம் கொண்ட மனிதனுக்குத் (மனதுக்கு) தெரியும். அந்த மனது அகங்காரத்தையும் விடுகிறது. முட்டையிலிருந்து குஞ்சு வந்த பிறகு சிறகு மீதுதான் பறவைக்கு எண்ணமே தவிர, அதுவரை காத்து வந்த முட்டையை கொண்டாடாது.”

🌷 “இதுவும் புரிகிறது.ஆனாலும் சிக்கலின் அடி ஆழம் புரியவில்லை. ”

🌷 மன்னன் கவலையோடு கேட்டான்.

“இந்த பூமி ஐம் பெரும் பூதங்களால் ஆனது. இங்கு சரீரம் எடுத்த ஆன்மாவை ஐந்து புலன்களால் சூழ்ந்து கொள்கிறது. ஐந்து பூதங்களும் ஐந்து புலன்களாகின்றன. இந்தப் புலன்களின் கூட்டால் மனம் என்கிற விஷயம் தோன்றுகிறது. இந்த மனம் தன் இருப்பை பலப்படுத்திக் கொள்ள புலன்களை தூண்டுகிறது. புலன்களின் ஆவேசத்தால் அல்லது ஆற்றலால் மனதின் இருப்பு பெரிதாகிறது. சரீரம் மனதை தான் என்று கொள்கிறது. மனம் சரீரத்திற்குள் அடக்கமாகிறது. ஒன்றை ஒன்று தோள் பற்றிக் கொண்டு பிரம்மாண்டமாகின்றன. ஆன்மா முற்றிலும் மறைக்கப்படுகிறது. ஆன்மா சரீரம் விட்டு நகரும் வரை இந்தக் கூத்து நடைபெறுகிறது. சரீரத்திலிருந்து இந்த மாயா விஷயங்கள் நகராது இருக்க, ஆன்மாவின் நகர்தலுக்கு எதிராக அதாவது மரணத்திற்கு எதிராக பெரும் வலியை கலவரத்தை இவைகள் ஏற்படுத்துகின்றன. வலிக்கும் தனிமைக்கும் பயந்து சரீரம் மன போஷாக்கு நடைபெறுகிறது. ஆனால் ஆன்மாவின் நகர்வை அதாவது மரணத்தை நிறுத்த முயலாது.

🌷 ஆன்மா ஏன் நகர்கிறது. ஏன் பிறக்கிறது என்று சொல்ல, மனிதனுக்கு பக்குவம் இல்லை. அதற்கான வார்த்தை இல்லை. அந்த வித்தை மொழி வசப்படவில்லை. சொல்லித்தரப்படவில்லை. உலக மொழி அறியாதவன் வாழ்வு பற்றி எப்படி விவரிக்க முடியாதோ பிரம்ம இரகசியத்தை அறியாதவன் பிறப்பு இறப்பு பற்றி ஏன் நடக்கிறது என்பது பற்றி அறிய இயலாதவனாகிறான்.

🌷 இந்தப் புவியில் ஆன்மாவின் இருப்பை உணர்வதே அதாவது மாயையிலிருந்து விடுபடுவதே அதாவது புலன்களும் புலன்களிலிருந்து உருவகிக்கப்படும் சரீரமும் என்ற உணர்வை தவிர்த்தலே முக்கியம். வெளிப் பார்வைக்கு சிக்கலெனத் தோன்றும். ஆராயப் புகுந்தால் எளிதாகப் பிரித்து விடலாம்.

🌷 ஆனால் மாயை தன் வலிமையை காட்டும். உணவாலும், மதுவாலும், பெண் போகத்தாலும், மற்றைய கர்வங்களாலும் ஆன்மாவை மறக்கும். மறைக்கப்பட்டாலும் வெளிச்சம் உள்ளே இருக்கிறது. அது மறையாத அகலாத வெளிச்சம். குறைபாடு வெளிச்சத்தில் இல்லை. மறைக்கப்பட்டது மறைக்கப்பட்ட வஸ்துக்களில் உள்ளது.

🌷 இன்னொரு சூட்சமம் சொல்கிறேன் கேள்.

இந்த பூமியில் பிறந்து சொர்க்கம் நரகம் என்பதை உணர்ந்து அதாவது சுகம் துக்கம் என்ற உணர்வுகளை அறிந்து அதற்கேற்ற செயல்களில் ஈடுபடுகிறான். சுகத்தின் போது சந்தோஷமும், இது நீண்டு தங்கவேண்டுமே என்கிற பயமும், துக்கம் வரவே கூடாது என்கிற பதட்டமும் அவனை அலைகழிக்கின்றன. பற்றற்ற மனமே இதை ஆராய்ந்து பார்க்கத் துவங்குகிறது. மனம் பற்றற்று இருப்பதற்கு ஒரு தர்மம் இருக்கிறது. (ஒரு நியதி) இந்த நியதி வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. இதனாலேயே வேதம் உயர்வென்று கருதப்படுகிறது.

🌷 வேதம் என்பது வாழ்வுக்கான வழிகாட்டி. வாழ்வுக்கப்பாலும் அதுவே வழிகாட்டி. எனவே, அது ஒருகாலும் புறக்கணிக்கக் கூடியது அல்ல.

🌷 ஒரே விதமான சரீர மன அமைப்புகளுடைய மனிதருக்கு நடுவே போட்டி ஏற்பட்டிருக்கிறது. இந்த போட்டியால் எப்படியும் மேன்மையடைய வேண்டும் என்ற எண்ணத்தில் தர்ம காரியங்களில் அந்தணர்கள் அதிகம் ஈடுபடுகிறார்கள். இங்கேயே இந்த விஷயத்தை தெளிந்து ஆன்ம தரிசனம் பெற்று தெளிவு என்கிற உன்னத லோகத்தை அடைகிறார்கள். தர்மத்தை பகீர் முகமாக பேசுபவன் உயர்ந்தவன் இல்லை. தர்மத்தை பேசியும், தான் இருப்பதாகச் சொல்லியும் வாழ்வதில் வெற்றி கிடைப்பதில்லை. மாறாக தர்மம் அந்தர்முகமாகி விட வேண்டும். அவனே தர்மமாகி விட வேண்டும். இது மிகப் பெரிய சாதனை. ஒரு அளவுக்கு மேல் இதைச் சொல்லித் தர முடியாது.

🌷 அப்படி தர்மத்தை அந்தர்முகமாக்கிக் கொண்டவனுக்கு அதுவாகவே வாழ்கின்றவனுக்கு மரணம் பயம் தருவதில்லை. அவனைத் தீண்டுவதே இல்லை. தன்னைப் பற்றிய பெருமையை வெளியே சொல்லி தன்னை மிக உத்தமன் என்று சொல்லிக் கொள்கிறவன் அப்படி வாழ்வது உண்மையாயினும் நாய்க்கு ஒப்பாவான். நாய் கக்கியதை மறுபடி தின்பது போல தான் வாழ்வதைச் சொல்லி அதனால் மறுபடியும் பிராபல்யம் அடைய முயற்சிக்கிறான். இவன் எப்பொழுது வேண்டுமானாலும் வீழ்ச்சியடைவான். எவன் தன் குடும்பத்து மக்களாலும் தன் பிரபாவத்தை மறைத்துக் கொள்கிறானோ தன்னை சாதாரணனாகக் காட்டி வலம் வருகிறானோ உலக குணங்கள் பார்த்து உள்ளே நகைத்தபடி இருக்கிறானோ அவனை மரணம் தீண்டுவதில்லை. அவனை காலம் நினைவில் கொள்கிறது. அவன் வாழ்பவனாக ஆகிறான். சரீரம் உகுத்தப் 
கௌரவிக்கப் படுகிறான். இருப்பதாக உணரப்படுகிறான். இவனை ஞானி என்றும் அழைக்கிறார்கள். இந்த ஞானிக்கு மரணம் இல்லையென்றும் சொல்கிறார்கள்.

🌷 எவன் இந்த ஒரு விஷயத்தை அடைய களைப்படைவதில்லையோ, எவன் இந்த விஷயத்தை வழங்க தானம் பெறுவதில்லையோ, எவன் நல்லோர்களால் மதிக்கப்படுகிறானோ, எவனால் இந்த பூமிக்கு உபத்திரவம் இல்லையோ, எவன் இந்த விஷயத்திற்கு சீடனாக இருக்கிறானோ அவனே பிராமணனாவான். பெரிய வித்வான் ஆவான். பிரம்ம வேதாவும் அவனே.

🌷 எவன் உலகப் பார்வையில் ஏழையாக இருந்தும் இந்த வித தெய்வ சம்பந்தம் கொள்கிறானோ, எவன் பூஜை உபாசனை முறைகளில் முழுமையாக இருக்கிறானோ, இந்த தத்துவத்திலிருந்து எவன் அசைக்க முடியாதவனாக இருக்கிறானோ, எவனை இந்த உலகம் அடக்க முடியாதோ அவன் பிரம்மத்தின் சாட்சாத் உருவம். உலகம் மதிப்பதால் எவன் கர்வப்படவில்லையோ அல்லது மதிக்கப்படும் மனிதனைப் பார்த்து எரிச்சலடைவதில்லையோ, எவன் இந்த வித ஆராய்சி செய்பவர்களால் மதிக்கப்படுகிறானோ அவன் கௌரவிக்கப்பட வேண்டியவன். கண்களைத் திறந்து மூடுவது போன்ற இயல்பான தன்மையோடு இந்த வித்வானை மதிக்க வேண்டும்.

🌷 கட்டளை இட்டா இமைகள் அசைகின்றன. தானாக நடைபெறவில்லையா. இத்தகைய வித்வானை கண்டதும் தானாக பணிவு வரவேண்டும். இதுவே பூமியில் நல்லது வளரும் விதம்.

🌷 ஆனால் இந்த உலகத்தில் அதர்மத்தில் நிபுணனும், ஏமாற்றுவதில் கபடத்தில் நிபுணனும் கெட்டிக்காரனும், மதிக்கத்தக்க மனிதனை வலிந்து அவமதிப்பவனும் இருக்கிறார்கள். மானமும் மௌனமும் ஒருபொழுதும் ஒன்றாக இருப்பதில்லை. மானம் இந்த உலக சுகத்தோடு சம்பந்தப்பட்டது. மௌனம் பரலோக சுகத்தோடு சம்பந்தப்பட்டது. இப்பூவுலகில் ஐஸ்வர்ய ரூபமுடன் இருக்கும் லட்சுமி சுகத்தின் இருப்பிடம். அவளே இடையூறுகளும் செய்வாள். ஆனால் பிரம்ம ஞானமயமான லட்சுமி மனிதனுக்கு கிடைத்ததற்கு அரியவளாவாள். வித்வான்கள் பிரம்ம ஞானமயமான லகூஷ்மியை அடைய பல வழிகளைக் கூறுகிறார்கள். இவற்றை பின்பற்ற கடினமானவை. அவற்றின் பெயர்கள் சத்தியம், எளிமை, வெட்கம், தவம், சௌசம், வித்தை என்பனவாகும்..
 
விதுரர் கூறும் விதுர நீதி 

அடுத்தவன்

அடுக்கிறவன்

நான் உன்னைச் சேர்ந்தவனாகிறேன் என்று கூறிச் சரணமடைகிறவன்

ஆகிய இம்மூவரையும் தனக்குக் கஷ்டம் நேரிட்ட காலத்திலும் கூடக் கைவிடக் கூடாது.

 

வரம் பெறுதல்

அரசனாதல் *

மகனைப் பெறுதல்

கஷ்டப்பட்டு எதிரியிடமிருந்து  விடுபடுதல்

இந்த நான்கும் ஒன்றுக்கு ஒன்று சமமானவை.

(* அரசன் என்பதற்கு இந்தக் காலத்தில் முக்கிய் உயரிய பதவி என்று எடுத்துக் கொள்ளலாம்.)

 

அரசன் விலக்க வேண்டிய கர்ரியங்கள் நான்கு.

புல்லறிவினர்

விரைந்து  செய்ய வேண்டிய காரியத்தைத் தாமதமாகச் செய்கிறவன்

சோம்பேறிகள்

முகஸ்துதி செய்பவர்கள்

இவர்களுடன் ஆலோசனை நடத்தக் கூடாது. இதைப் பண்டிதனானவன் தெரிந்து கொள்ள வேண்டும்.

 

செல்வத்துடன் கூடிய ஒரு இல்லறத்தான் கீழ்க்கண்ட நான்கு நபர்களுக்கும் பூரண வசதி அளித்து தன் வீட்டில் தங்கச் செய்ய வேண்டும்.

வயதான ஞாதி (அவன் நமக்குக் குல தர்மங்களை உபதேசிப்பான்)

தற்காலம் கஷ்ட தசையில் இருக்கும் நல்ல குலத்தில் பிறந்த ஒருவன் ( அவன் வீட்டிலுள்ள சிறுவர் சிறுமியர்க்குக் நல்ல ஒழுக்கங்களைக் கற்றுக் கொடுப்பான்)

ஏழையான ஒரு நண்பன் (அவன் நமது நன்மைகளை எடுத்துச் சொல்வான்)

குழந்தையில்லாத ஒரு சகோதரி (அவல் நமது சொத்தை நன்கு பாதுகாப்பாள்)

 

உடனே பலிக்கின்ற நான்கு எவை என்று இந்திரன் கேட்க பிரஹஸ்பது (குரு பகவான்)) கீழ்க்கண்ட நான்கை எடுத்துரைத்தார்.

தேவதைகளுடைய சங்கல்பம்

புத்திமான்களுடைய மகிமை

அறிஞர்களுடைய வினயம்

நாச கர்மம் ( நாசம் விளைவிக்கும் திருட்டு, வெடிகுண்டு வைத்தல், தீவிரவாதிகளின் இதர குற்றச் செயல்கள் என்று கொள்ளலாம்)

ஆகியவை உடனே பலன் அளிக்கும்.

 

அக்னிஹோத்ரம்

மௌனம்

அத்தியயனம்

யாகம்

ஆகிய் இந்த நான்கும் முறைப்படி அனுஷ்டிக்கப்பட்டால் மோக்ஷம் வரை உள்ள பயனை அளிக்கும்.

இவற்றை கௌரவத்திற்காக முறை தவறி ஆடம்பரமாகச் செய்தால் தீங்கையே விளைவிக்கும்.

 
5

எப்போதும் போற்ற வேண்டியவர்கள் ஐவர்

தாய்

தந்தை

அக்னி

ஆத்மா

குரு

இந்த ஐவகையினரையும் பூஜிக்கின்றவன் மிகுந்த புகழை அடைவான்

 

தேவர்கள்

பித்ருக்கள் (முன்னோர்)

பெரியோர்

சந்யாசிகள்

அதிதி (விருந்தினர்)

ஆகிய் இந்த ஐவரையும் கொண்டாட வேண்டும்

 

நண்பர்கள்

விரோதிகள்

நடு நிலைமையில் உள்ளவர்கள்

உன்னால் போற்றப்பட வேண்டிய குரு

உன்னை அண்டுகின்றவர்கள்

ஆகிய் இந்த ஐவரும் நீ போகும் இடமெல்லாம் கூடவே தொடர்ந்து வருவர்.

 

கண், காது, மூக்கு, நாக்கு, த்வக் (மெய்)  என்ற ஐந்து இந்திரியங்களுடன் கூடிய மனிதன் எந்த ஒரு புலனையும் சரியாகப் பாதுகாக்காமல் இருந்தாலும் அதன் வழியே அவனது புத்தி ஓட்டைப் பாத்திரத்தின் வழியே ஒழுகும் ஜலம் போல அழிந்து விடும்.

ஆதலால் ஒருவனது புத்தி சரியான நிலையில் இருக்க எல்லாப் புலன்களையும் சரியாகப் பாதுகாக்க வேண்டும்.

விதுர நீதி தொடரும்

***

விதுரன்  நீதி - பகுதி 19
- - - - - - - - - - - - - - - - - - - - - - 

விதுரர் கூறும் தர்ம நீதிகள்
- - - - - - - - - - - - - - - - - - - - -
62

பழியானாலும், பாராட்டானாலும்
அவற்றை சமமாக நினைப்பவன்,

துக்கமானாலும் சந்தோஷமானாலும்
சமமாகவே இருப்பான்.

63
யார் எல்லாருடைய நலனை
விரும்புகிறார்களோ,

யார் கெடுதல்களில் மனதை
செலுத்தவில்லையோ ,

யார் உண்மையையும்,
மேன்மையையும்
கொண்டு அடக்கமாக
இருக்கிறார்களோ,  

அவர் தான் உத்தமமான
மனிதர் ஆகிறார்.

64
யார் பயன்படாத நல்வார்த்தைகளை
சொல்லுவதில்லையோ,

யார் கொடுப்பதாக சொன்னால்,
அதை கொடுத்துவிடுகிறானோ

யார் பிறருடைய தப்புகளை
அறிந்து இருக்கிறானோ ,

அவன் மத்யமமான மனிதன்
ஆகிறான்.

65
யார் தகாதவற்றை உத்தரவாக
இடுகிறானோ,

யார் கெடுக்கப்பட்டவனோ,

யார் பழிச்சொல்லுக்கு ஆளனாவனோ,

யார் நன்றி மறந்தவனாக
இருக்கிறானோ

அவன் கோபம் என்னும்
கடலிலிருந்து திரும்பமாட்டான்.
.
66
கெட்ட சிந்தனை உடையவன்
ஒருநாளும் ஒருவருக்கும்  
நண்பனாக மாட்டான்

67
யார் தன்னையே  சந்தேகித்து,
பிறரையும் சந்தேகித்து,
நன்மைகளை நம்புவதில்லையோ,

யார் நண்பர்களை வெறுத்து
நிராகரிக்கிறானோ அவன்
அதமமான மனிதன்.

68
யார் தனக்கு உதவி தேவையோ,
அவர்கள் உத்தமனையே நாட வேண்டும்.

யார் தனக்கு உதவி தேவையோ,
அவசியமான சமயங்களில்
மத்யமானவனை நாடலாம்.

யார் தனக்கு உதவி தேவையோ,
அதமமானவர்களை ஒரு பொழுதும்
நாடக்கூடாது.

69
அதமமானவர்கள்,  
கெட்டவர்களுடைய பலத்தினாலே,
தினமும் முயற்சி செய்து,
அறிவினாலும்,
மனித சாமர்த்தியத்தாலும்,
லாபத்தை அடையவே செய்கிறான்.

ஆனால் நல்ல புகழை
அடைவதில்லை.
பெரியோர்களின் அடுத்தும்
சேருவதில்லை.

தொடரும்

ஒரு முறை #திருதராஷ்டிரன், தன் சகோதரர் #விதுரரிடம், ‘‘மனிதனுக்கு ஆயுள் நூறு வருடம் என்பர். எனினும் இதுவரை நூறு வருடங்களைக் கடந்த மனிதர்கள் எவரும் இல்லை என்றே தோன்றுகிறது. இதற்குக் காரணம் என்ன?’’ என்று கேட்டார்.

விதுரர் பதில் சொன்னார்: ‘‘அரசே #மனித #ஆயுளை #அறுக்கும் #வாள்கள் #ஆறு.

#முதலாவது #கர்வம்.

மனிதர்களில் பலர், ‘இந்த உலகில் நானே கெட்டிக்காரன். மற்றவரெல்லாம் முட்டாள்!’ என்று நினைக்கிறார்கள். ஒருவனுக்கு கர்வம் ஏற்பட்டால் கடவுள் சும்மா இருக்க மாட்டார். ஆகவே, கர்வம் இல்லாமல் இருக்க, தனது குற்றம் குறைகளைப் பார்க்க வேண்டும். பிறரிடம் நற்குணங்களையே பார்க்க வேண்டும்.

#இரண்டாவது வாள்- #அதிகம் #பேசுவது.

 தனக்குப் பேச விஷயங்கள் இல்லாதபோதும், வீண் பேச்சு பேசுபவன், வீண் வம்பை விலைக்கு வாங்குகிறான்.

#மூன்றாவது #வாள்- #தியாக #உணர்வு #இன்மை.
அதீத ஆசையே மனிதனின் தியாக உணர்வைத் தடுக்கிறது. இதை உணர்ந்தால், தியாக உணர்வு தானே வரும்.

#நான்காவது வாள்- #கோபம்.

கோபத்தை வெல்பவனே உண்மையான யோகி. கோபம் வந்து விட்டால், தர்மம் எது? அதர்மம் எது என்பது தெரியாமல் போகிறது. விவேகம் இழந்து பாவங்களைச் செய்ய நேரிடுகிறது.

#ஐந்தாவது வாள்- #சுயநலம்.

சுயநலமே எல்லா தீமைகளுக்கும் காரணம். சுயநலம் கொண்டவன் தனது காரியத்துக்காக பாவம் செய்யத் தயங்குவதில்லை.

#ஆறாவது #வாள்- #துரோகம்.

இந்த உலகில் நல்ல நண்பர்கள் கிடைப்பதே அரிது. அப்படிப் பட்டவர்களுக்குத் துரோகம் செய்வது தவறு.

*இந்த ஆறு விஷயங்களிலிருந்தும் ஒருவன் விலகி வாழ்ந்தால் நிச்சயமாக அவன் நூற்றாண்டை நிறைவு செய்வான்.’’*

விதுரர் நீதி..