Thursday, 16 July 2020

மூச்சு தியானம் மனம் அடங்கும் கலை

மூச்சு பற்றி ...

எதுவுமே 'ஒன்னுமே' கெடையாது'னு அழிச்சாட்டியமா பேசிக்கிட்டு இருந்தா என்னா பண்றது?

ஏதாவது ஒன்னே அடிப்படையா வச்சித்தானே ... மேலே மேலே முன்னேறிப் போக முடியுமாம்? ...

'ரெயில்வே லெவல் கிராசிங்'ல ... இரும்பு கம்பத்தை குறுக்கால போட்டு ... கேட் மாதிரி சாத்தி உட்டு  ... அந்த பக்கமும், இந்த பக்கமும் ... கார், வண்டி எதுவுமே ... தண்டவாளத்துல கடந்து போகாம பாத்துப்பாங்க ... 

டிரென் கடந்து போனதும்தான் அந்த 'குறுக்கால போட்ட கம்பத்தை' தூக்கி விட்டு ... வாகனங்கள் கடந்து போக வழி ஏற்படுத்துவாங்க ...

அப்பிடி 'குறுக்கால போட்ட கம்பத்தை' 50 பேர் சேர்ந்து தூக்குனாலும் ... தூக்க முடியாது, தொறக்க முடியாது. 

ஆனா, ஒரே ஒரு தொத்தலான railway gateman ... ஒத்த விரலால ... ஒரு lever ஐத் திருப்பி உட்டு  ... ரெண்டு பக்கத்து 'குறுக்கால போட்ட கம்பத்தை' அநாயசமாக தொறந்து உட்டுடுவாரு !!! இல்லையா?

அதே மாதிரி, மனுஷனுங்க 'மனசை அடக்கணும்', 'மனசை அடக்கணும்'னு .. மனசுகூட நேரடியா மல்லு கட்டிக்கிட்டு நின்னாக்க ... ஜென்மத்துக்கும் ஜெயிக்க முடியாது. 

அதே சமயம், அந்த தொத்தலான ரெயில்வே ஆசாமி அந்த 'குறுக்கால போட்ட கம்பத்த' ... அநாயசமாக நெடுக்கால தூக்கி நிறுத்தறத்துக்கு உபயோகப்படுத்தற lever மாதிரி ஒரு சமாச்சாரம் நம்மகிட்டேயும் இருக்கு ...

என்னா அது?

மூச்சுக்காற்று !!!

அதாவது, நேரடியா மனசுங்கற சமாச்சாரத்தை அடக்கறத்துக்கு பதிலாக ...

மூச்சுக் காற்றை ... சீராக்குனோம்னா ... மனசு கொழந்தை மாதிரி ... சொன்னப் பேச்சு கேட்கும் !!!

உண்மை !!!

மனந்தானே புத்தியாங் காரஞ்சித்தம்
மதியிரவி யண்டபிண்ட மானவாறும்
மனந்தானே சக்திசிவ மாய்கை ஞானம்
வாசிபார் தேசிபர பிரம்மம்யாவும்
மனந்தானே நாதவிந்து அரூபரூபம்
வளிகனல் விண்புனல் பண்புனல்மண்ணானவாறும்
மனந்தானேவுதிக்குமிட மொடுங்குமிடமிரண்டும்
வகைசொல்லுஞ் சற்குருவை வணங்கிக்கேளே

- அகத்தியர்

மனம் தான்  ... புத்தி, அகங்காரம், சித்தம் எல்லாம்.

'நான் அறிவேன்' என்கிற 'எண்ணத்தால் எழுந்ததால்' அது அகங்காரம்.

 'நான் அறிவேன்' என்கிற 'இருதயத்தால் எழுந்ததால்'  ... அது சித்தம் ...

'நான் அறிவேன்' என்கிற 'மூளையால் எழுந்ததால்' ... அது புத்தி.

எனவே எல்லாமே மனம் தான். 

மனம்தான் சக்தியாக உள்ளது ; சிவம் அறிவாக உள்ளது. இரண்டுமில்லாத நிலை தான் ஞானம்.  

உலக உயிர்கள், பிரம்மம் யாவுமே ... மனம்தான் என்பது விளங்கும். 

மனம் என்கிற ஒன்றால்தான் நாதம் விந்து என்கிற விஷயங்கள் உண்டாகின. 

மனமாக நிலைபெற்ற பிராணனாக உருவெடுத்தது, அறிவால் அந்தநிலை அடைந்த பிராணன் நீங்கியது. 

மனதிற்கு மூலம் காற்று. ஆக எல்லாமே காற்றாகவே உள்ளன.

மனிதனைப் பொறுத்தவரை மூச்சு என்று சொல்லப் படுவது ... ஜீவசக்தியாகிய வாயுவாகும். 

அந்த ஜீவ சக்தி வெளியில் சென்று ... உலக விஷயங்களை உள்ளே இழுத்துக் கொண்டு வருகிறது ... அவ்வாறு இழுத்து வரும் இத்தியாதிக்கு ... வாயு என்று பெயர்.

வாயு என்றால் சலிக்கின்றது  என்றாகும். அதாவது, சலனிக்கிறது ... சலனம் செய்கிறது ... இயக்கம் செய்கிறது ... அசைகிறது ... மேலும், கீழுமாக நகர்கிறது ... மூச்சுக் காற்றுத் தான் அது.

அந்த சலனதிலிருந்தாகும் விசாரம் உண்டாகின்றது. விசாரம்னா என்ன?

இது உலகம், இது உயிர்கள், இது சந்திரன், இது சக மனிதன் , இது அடுப்பு, இது டிவி ... அப்பிடி தனித்தனியாக விவரங்களை பதிவு செய்து கொள்வதுவே ... விசாரம் ... 

உலக அறிவு உருவாக காரணம் வாயு சலனித்து ... வெளியே போயி ... விசாரிச்சுக்கிட்டு ... 'அது என்ன, இது என்ன'னு விசாரிச்சு, அறிவதனால்தான் ... விசாரம் உருவாச்சி.

அந்த விசாரத்திற்குக் கர்த்தா (creator)மனம் . 

அவ்வாறு சலனமுள்ள பொருள் ... நம்மில் அடங்கும் இயல்புடையது ... 

காற்றுதான் மனதின் கூறு என்றால் ... காற்று உள்ளே அடங்கும் என்று சொல்லப் போனால் ... அப்பொழுது நம்முடைய மனமும் நம்மிலேயே அடங்கித்தானே ஆகணும்?

ஆகையினால், நம்மில் அடங்கினால் ... நமக்கு மற்றொன்றை காண்பதற்கும் அறிவதற்கும் ... முடியாமல் போக ... தன்னுள்ளேயே ஆழ்ந்து இருக்க கூடுமானது.

தன்னிலிருந்து வெளியே சலித்து ... அதாவது பரவிக் கொண்டிருக்கிறதற்குத்தான் வாயு என்று சொல்லப்படுகிறது.

 அது தன்னிலிருந்து வெளியே போகாமல் தன் உள் வழியாய் மேல் கீழாய் கதாகதம் செய்து அதாவது நடமாடி பிரம்மரந்திரத்தோடு தாக்கிக் கொண்டிருக்கிற நிலைமைக்கு கொண்டு போக முடியும்.

அப்படி ... மேல்கீழாக அசைவித்து, பிரம்மரந்திரத்தை (தலை உச்சி) தொடுவதற்கு ...
 “சமீரணன்” என்று பெயர்.

சமீரணன் என்றால் பிரம்மரந்திரத்தோடு 'ஈரணம்' செய்தல் ... அதாவது தாக்கிக் கொண்டிருத்தல்.

அந்தப் பொருளுடன் தொட்டு வேறுபடாமல் முட்டிக் கொண்டிருக்கிற கதியே அதாவது நடப்பே ஈரணம்.

அவ்விதமாயுள்ள கதியானது தன் உள் வழியாய் மேல் கீழ் நடந்து வெளியே விட்டுப் போகாமல் பிரம்மரந்தத்தோடு தாக்கிக் கொண்டிருப்பதற்கு 'சமீரணன்' என்றும்...

 அப்படியில்லாமல் வெளியே சென்று சலித்துக் கொண்டிருக்கிற கதிக்கு 'வாயு' என்றும் பெயர்.

அதனால் தன்னுடைய சக்தி எப்பொழுது தன்னில் லயிக்கின்றதோ, அச்சமயத்தில் மற்றொன்றையும் அறிகிறதில்லை என்று நாம் கண் கூடாக அனுபவப்பட முடியும்.

தன்னுடைய சலனத்திலிருந்தேயாகும் தனக்கு எல்லா ... நல்லது கெட்டதான  நிலைமைகளும் உண்டாகிறதென்பது வெளிப்படை.

தவிர, தன்னுடைய சலனம் தன்னிலடங்கி ஆலோசித்துக் கொண்டிருக்கும் போதுதான் நமக்கு உணர்வு உண்டாகிறது ... அதாவது ஆலோசித்துக் கொண்டிருக்கிற காரியம் ஞாபகத்துக்கு வருகிறது.

ஞாபகம் எவ்விடமிருந்து உண்டாகிறதென்றால் ... பிரகாசத்திலிருந்தே தான்.

பிரகாசம் அக்கினியிலிருந்து உண்டாகிறது.

அக்கினி உண்டாவது வாயுவிலிருந்து.

ஆக மொத்தத்தில் ... வாயுவாகி, அக்கினியாகி, பிரகாசமாகி, அறிவாக இருக்கின்ற ஜீவ சக்தி தன்னிலேயே அடங்கும் போது தான் நமக்கு 'தன் உணர்வு' உண்டாகிறது.

தன் உணர்வு'னா self awareness ! Self consciousness !!!

The consciousness can be related to a universal sea. Conscious-ness is therefore something that is moved only by a divine ebb and flow, by a realization of itself. This universal, all-penetrat-ing sea is the true substance of everything, for consciousness (or Self) was before the beginning and consciousness (or Self) is after the end. Beginning and end are illusions, but Self is eternal. Consciousness is therefore union with Self. Conscious-ness knows no separateness. As long as me and thee exist, consciousness is not perfected. Life and death, good and evil, light and shadow—these are the illusions of mind. But in consciousness diversity is totally annihilated and all things are one in reality and in essence.

அப்படீனா, அறிவாயிருக்கும் பொருள் எது?

ஜீவ சக்தியே !!!

அறிவாகி, ஜீவ சக்தியாயிருக்கின்ற பொருள் ... சலித்து வாயுவாகி ... நம்முள்ளிலிருந்து வெளியே போய்க் கொண்டிருருப்பதற்கே “மாயை” என்று சொல்லுவது ...

இதற்காகவே “யாதொன்று இல்லாததாகின்றதோ ... அது மாயை” என்று சொல்லுவதன் காரணமாகும்.

 “யாதொன்று” என்பது அறிவு.

அந்த அறிவு வாயு ரூபமாய் வெளியில் போய் நசித்துக் கொண்டிருப்பதற்கே மாயை என்று பெயர்.

இதற்காகவே தன்னுடைய மாயை அல்லது 'தான் சிருஷ்டிக்கும் உலகமானது' தன்னிலிருந்து  உண்டானது என்றும் சொல்லக் காரணம். 

“தான்” என்றால் யார் என்பதாய் நீர் கருதுகிறீர்?

தான் என்றால் அவனவனே

அப்பொழுது மாயையினுடைய உற்பத்தி எவ்விடமிருந்து?

அவனவனிடமிருந்தே ...

ஆகையினால் மாயை என்பது மேலே சொன்னபடி உண்டானதாகும்.

அதற்குப் பிறகேயாகும் மனதினுடைய உற்பத்தி. 

பிராணனை இழுப்பதும் வெளிவிடுவதும் கிளை நாடிகள் வழி horizontal-ஆக
நடந்தால் அது மாயையால் உண்டாகும் நிலையாகும்.

பிராணன்  vertical-ஆக மேலும் கீழும் நடந்தால் அதுவே உயிரை இயற்கையொடு ஐக்கியப்படுத்தும்.

 நாம சொல்ல வேண்டிய விஷயம் மேலே சொன்னதோடு முடிந்து விட்டாலும்கூட
 ...

'இடம் சுட்டி பொருள் விளக்குக' என்று மேலும் விளக்கம் பெறுவதற்காக ...

'Explain with reference to the context (ERC)'  ...

சூரிய வெளிச்சம் ... பூமி மேலே படும்போது ... வெளிச்சம் முடிஞ்சிபோற  ரெண்டு பக்கத்துலேயும் ... நிழல்ல கோடு போட்ட மாதிரி இருக்கும் ...

அதுக்கு பக்கத்துலேயே ஒளியினாலேயே ஆன கோடும் ... ரெண்டு பக்கத்துல இருந்தும் வரைஞ்ச மாதிரி இருக்கும் ...

மறுபடி சொல்லணும்னாக்க ...

எப்போதும் பூமிக்கு மறுபுறம் (சூரிய ஒளி இல்லாத புறம்) ஒரு நிழல் இருக்கும். அப்படியானால் இரு நிழற்கோடுகள் உண்டாகும். நிழற்கோடுகள் இருந்தால் அதைத் தொட்டு ஒளிக் கோடுகள் இருக்கும். 

இந்த நான்கு ... நிழல் மற்றும் ஒளிக் கோடுகள் செல்லும் பாதைகள் உடலிலும் உண்டு. 

அதைத் தான் நான்கு கலைகள் உடலில் உள்ளது'னு சொல்றாங்க பெரியவங்கள்ளாம்.

கண்டுகண்டு மனந்தானே அண்டஞ் செல்லக்
கலைநாலும் எட்டிலையுஞ் சேர்ந்து போகும் 

- காகபுசுண்டர்

நாணாம லொருநினைவாய்க் காக்கும் போது
நாலுமெட்டு மொன்றாகும் நாட்டி யூதே 

- அகஸ்தியர்

ஆகும் கலையோடு அருக்கன் அனல்மதி
ஆகும் கலையிடை நான்குஎன லாம்என்பர்
ஆகும் அருக்கன் அனல்மதி யோடுஒன்ற
ஆகும்அப் பூரணை யாம்என்று அறியுமே. 

-திருமந்திரம்

“சண் முக தூலமும் சதுர் முக சூட்சமும்” என்று ஒளவையார் கூறுகிறார். சூட்சமத்திற்கு நான்கு முகம் என்கிறார் அவர்.

இந்த நீண்ட நிலை பெற்ற (மடிந்த) பிராணனிடையே இரு புறமும் சூரிய ஒளி போலும் சந்திர ஒளி போலும் பிராணனும் அபானனும் இயங்குவதால் தான் ..

”அக்னி வடிவான சூரியனும் குளிர்ச்சி வடிவான சந்திரனும் ஹம்சத்தின் இரு சிறகுகள்” என்று ஹம்சோ உபநிஷதம் கூறுகிறது.

இப்போ எதுக்கு இந்த நாலமணொருவன், நான்கு முகம், நாலு கலை'னு ஒரே விஷயத்தை டிசைன் டிசைனா ... சொல்லிக்கிட்டு இருக்கோம்?

வெறும் சிந்தனையாக மட்டும் உள்ள போது ... ராகுவும்
கேதுவும் செயல்பட ...
சந்திரன் இரு புறமும், முன்னும் பின்னும் போய் வருவதைப் போன்ற நிலை உண்டாகும். 

நான் என்கிற உணர்வு மேலோங்கி இருக்கும் போதும், ஆசைகள் உள்ள போதும், சந்திரன் சூரியன் உதிக்கும் புறமாகவே வெளிச்சம் அதிகம் இருப்பதைப் போல், மற்ற பகுதிகளில் மிக்க இருள் சூழ்ந்து ... இருள் அதிகமாக இருக்கும்.

அறிவு நிகழும் போது ... சந்திரன் சூரியன் மறையும் புறமே பெரிதும் இருப்பதைப் போல் ... அறிவு நிகழும். 

இதைப் போலவே, நிலை பெற்ற பிராணனின் இரு புறமும் பிராணனும் அபானனும் இயங்கி வருகிறது.

இறுதியில் எண்ணங்களற்ற நிலையில் நிலை பெற்ற பிராணன் கரைய ... பிராணனும் அபானனும் கலக்க, தன்னை உணராத நிலை உண்டாகும்.

பிராணன் கீழிருந்து மேல் செல்வதால் உயிரோடு இணைக்கப் பட்டதாகவும் ...

அபானன் மேலிருந்து கீழ் இயங்குவதால் அறிவோடு இணைக்கப் பட்டதாகவும் உணர்த்தப் பட்டுள்ளது.

ராகு என்பது அறிவது ... கேது என்பது அறிய உதவுவது.

இரண்டும் ஒரே நாடியில் செலுத்த தன்னை உணர்வதை போல் ஒரு உணர்வு தோன்றுகிறது. 

"அருவுருவந் தானறிதல் ஆயிழையாய் ஆன்மா
அருவுருவ மன்றாகு முண்மை-அருவுருவாய்த்
தோன்றியுட னில்லாது தோன்றாது நில்லாது
தோன்றன் மலர்மணம் போற் றொக்கு."

நூல்- செப்படு வித்தை

No comments:

Post a Comment