Thursday, 9 July 2020

பிராணாயாமம் வாசியோகம் பற்றிய விளக்கம் செப்படு வித்தை நூலில் சொல்லப்பட்டது

பிராணாயாமம் , வாசியோகம் 

என்பினை நரம்பிற் பின்னி உதிரந்தோய்த்து இறைச்சி மெத்திப் புன்புறந் தோலைப் போர்த்து மயிர் பொலிய வேய்ந்திட்டு,ஒன்பது வாயிலாக்கி ஊன்பயில் குரம்பை என இவ்வுடம்பினியல்பினை உள்ள படியே ....

உடம்புல 18 சதவீதம் கார்பன் சேமிச்சி வைக்கப் பட்டிருக்கு.

புரோட்டீன், கார்போ ஹைட்ரேட் மற்றும் நல்ல கொழுப்பு ... இதுலேயெல்லாம் கார்பன் சேமிச்சி வைக்கப் பட்டிருக்கு.

நம்மளோட உடம்பு செல்களில் எக்கச்சக்கமான கார்பன் அணுக்கள் சேர்ந்து ... லச்சக் கணக்கான கார்பன் மாலிக்யுல் அமைப்பை சேர்த்து வச்சிருக்கு.

நம்ம உடம்பு சுவாசிக்கறது போல, நமக்கு உள்ளே இருக்கற அணு ஒவ்வொன்னும்  சுவாசிக்கிது.

நமக்கு மூளை இருக்கற மாதிரி, வயித்துக்கு மாத்திரம் தனியே மூளை இருக்கு!

வயித்து மூளைக்கும், உடம்பு மூளைக்கும் உள்ள ஒத்திசைவின் மாற்றம்தான் நோய் மற்றும் நோயின்மை !

உள்ளே இருக்கற அணு சுவாசித்து வெளியே விடறதுதான்... நமக்கு சக்தி தரக்கூடிய குளுக்கோஸ்.

அந்த குளுக்கோசுலதான் கார்பன், ஹைட்ரஜன் மற்றும் ஆக்கஸிஜன் இருக்குது.

அடுத்த து ADP ...

அடினோசைன் டரைபாஸ்பேட்'ங்கறது (ADP) மனுசனுக்கு கரன்சி மாதிரி ... உடம்புக்குள்ளே ... சத்து கரன்சி  ... இந்த ADP!

தேவையான சமயத்துல 2000 ரூபாய் நோட்டை  சில்லரை மாத்தி  செலவு பண்ணிக்கற மாதிரி ... இந்த ADPயை ... ஆக்சிஜனாகவும், கார்பனாகவும் மாத்தி  ... உடம்ப சக்தியை வாங்கி செலவழிச்சுக்குது.

இதுல  ஆக்சிஜன் சத்தைக் குடுத்துட்டு ... சக்கையானது தண்ணியா போயிடுது.

கார்பனானது சக்தியைக் குடுத்துட்டு ... சக்கையானது கார்பன் டை ஆக்சைடாக போயிடுது.

ஆக நம்ம ஒடம்பு தண்ணிய சேத்து வச்சிக்குது, கார்பனை சேத்து வச்சிக்குது, கொழுப்பை சேத்து வச்சிக்குது, குளுக்கோசை சேத்து வச்சிக்குது.

ஆனா இந்த மேல சொன்ன அத்தனைக்கும் ஆக்சிஜன் இருந்தாதான் வேலை செய்ய முடியும். அந்த ஆக்ஸிஜனை உள்ளடக்கிய ... காற்றை சேமிச்சி வைக்கிற பை ஒன்று கடவுள் உருவாக்கி ... நம்ம ஒடம்புக்குள்ள வச்சிருந்தா என்ன?

சோறு இல்லாத இருக்க முடியுது, தண்ணி இல்லாத வாழ முடியுது! ஆனா காத்து இல்லாத ஒரு நிமிஷம்கூட உயிர் வாழ முடியாதுதானே?

அதுக்கு ஒரு பை தயாரிச்சு உடம்பு உள்ளுக்குள்ளே ... எங்கேயாவது ஒரு எடத்துல கட்டித் தொங்க உடறது மாதிரி ஏற்பாடு பண்ணியிருக்க கூடாதா?

எது நம்மை உயிரோட இருக்க வைக்குது?

அடிப்படையான ஒன்னு ... அதில்லாம உயிரோடவே இருக்க முடியாது ... எது?

சக்தி அல்லது ஆற்றல் ... இது இல்லாத நாம உயிரோட இருக்க முடியாது. இல்லையா?

படிக்கறத்துக்கு, நடக்கறத்துக்கு, சாப்புடறத்துக்கு !, நெனைக்கறத்துக்கு மற்றும் நாம என்னென்ன செய்யறமோ எல்லாத்துக்கும் ஆற்றல் தேவைப்படுது.

எங்கேயிருந்து அந்த சக்தியோ, ஆற்றலோ  கிடைக்கிது?

நாம சாப்புடற சாப்பாட்டிலே இருந்து ... சக்தி கெடைக்குது.

சாப்பாட்டுலே இருந்து சக்தி கெடைக்குது ... அதை நாம் சேமிச்சி வச்சிக்கறோம். சாப்புடாம இருந்தா ... சக்தி இல்லாத போயிடுது ... ஒன்றும் செய்ய முடியறதில்லை; மயக்கம் வந்துடுது.

ஒரு இட்டிலியை, கெட்டிச் சட்டினி தொட்டுக்கிட்டு உள்ள தள்ளுன ஒடனே நமக்கு சக்தி கெடைச்சுப் போயிடுதா?

ஒடம்புக்குள்ளே ஏதோ ஒரு வேலை நடந்து ... இட்டிலியை ... சக்தியாக மாத்தி
உடுது.

இந்த சக்தியை உண்டு பண்ணக் கூடிய வேலைக்கு ... முக்கியமாக தேவைப்படறது ... காற்று!

காற்றுல பல வாயுக்கள் இருந்தாலும் ... நமக்கு சக்தியை உருவாக்கப் பயன்படுவது .... ஆக்ஸிஜன் மட்டுமே.

ஆக்ஸிஜன் ... நம்ம சாப்புடற சாப்பாட்டுடன் வினைப் பண்ணி ... சாப்பாட்டுல இருக்கற சக்தியைப் பிரிச்செடுத்து ... ஆற்றலை உடம்புக்கு குடுத்துடுது.

ஆக்ஸிஜன் இல்லாட்டி சக்தி பிரிக்காம ... எல்லா சாப்பாடும் சக்கையா வெளியே பொயிகிட்டே இருக்கும். அப்புறம் சக்தி இல்லாத உயிர் போயிடும்.

அதே சமயம், எந்த ஒரு ஆக்ஸிஜனானது ... உயிர் கொடுக்குதோ ... அதே ஆக்ஸிஜன்தான் ... உயிரை எடுக்கவும் செய்யுது !!!

நமக்கு வயசாகிப் போறத்துக்கும், நாம சாகறத்துக்கும் ... முக்கியமான காரணி யாரு? ஆக்ஸிஜன் !

ஒரு ஆப்பிளை வெளியே எடுத்து வச்சோமுன்னா ... அது ஊசிப்போகுது, அழுகிப் போகுது, கெட்டுப்போகுது.

எதனால?

ஆக்ஸிஜனா ... வந்து உணவை சத்தாக்குற ஒரு வஸ்து ...

உள்ளே வருகிற
சில ஆக்ஸிஜனுல ... ஒரே ஒரு அணுவை இழந்து வந்துகிட்டே இருக்கும்.

அந்த ஒரு அணுவை சேத்துக்கிட்டாதான் ஆக்ஸிஜன் முழுதன்மை பெறும் ...

அப்போ என்னா செய்யும்?

ஏற்கனவே ஒரு முழு ஆக்‌ஸிஜன் உணவோட வினைப் பண்ணி சத்தாக மாற்ற முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கற வேளையில் ...

இந்த குறையான ஆக்ஸிஜன் ... தன் சக ஆக்ஸிஜன்கிட்டே ... அந்த குறைந்த அணுவை எடுக்க முயற்சிக்காம ...

அந்த உணவுல இருக்கற ஆக்ஸிஜன் கிட்டே இருந்து ... ஒரு அணுவைப் பிரிச்சி எடுத்துக்குமாம் !

அந்த அரைகுறை ஆக்ஸிஜன் ... உணவோட வினை புரியறதால ... அந்த இடம் அழுக ஆரம்பிக்கிது.

அந்த ஒரு அணு குறைஞ்சதால ...

அதை அந்த ஆக்ஸிஜன் எடுத்துக்கிட்டதால ...

அந்த உணவு தன்னோட ஆக்ஸிஜன் அணுவை ஒன்றை கொடுத்ததாலே ...

இதுக்கு  ஒன்னு கொறஞ்சதை நிரப்புவதற்காக ...

அதே ஆப்பிளின் அருகாமையில் உள்ளப் பகுதியில இருக்கற ஆக்ஸிஜனைத் திருடி எடுத்துக்க  முயற்சி பண்ணி ...

எப்படியோ ... அந்த ஒரு அணுவைத் திருடி எடுத்துக்கிட்டு ... தன்னை சரிபண்ணிக்கும்.

ஆக்ஸிஜன் அணுக் குறைபாட்டை சரி பண்ணிக்கிட்டாலும் ... ஆக்ஸிஜன் அணுக் குறைபாடு ஏற்படுத்தி உட்ட ... அழுகலை அதனால சரி பண்ணிக்க முடியாது.

அதே சமயம் ... பக்கத்து, பக்கத்து இடத்துலேயும் போயி குறை அணுவை திருடி நிறையாக மாத்திக்கிட்டாலும் ...

அந்தப் பகுதி அழுகலை மட்டும் மாத்திக்க முடியாத போயிடும் ...

விளைவு?

ஒட்டுமொத்தப் பழமும் பாழ். அழுகிப் போயிடும்.

எத்தனை நல்ல ஆக்ஸிஜன் வந்து உணவை சத்தா மாத்திக்கிட்டு இருந்தாலும் ... இப்படி ஒன்னு, ரெண்டு குறை அணு கொண்ட ஆக்ஸிஜன் வந்து ... உணவை பாழ் பண்ணிடறதும் நடந்துகிட்டேதான் இருக்கும். இதுக்குப் பேரு ... ஆக்ஸிடண்ட் ( oxidant )

ஒரு உலோகம் துரு புடிக்கறதும் ... ஆக்ஸிடண்ட்டாலத்தான்.

இதே வேலத் தான் நம்ம உடம்புலேயும் நடந்து வயசாக வைக்கிது ...

தாக்குப் புடிக்கற வரைக்கும் தாக்குப் புடிச்சிப் பாத்துட்டு ... உடம்பு செத்துப் போயிடுது.

நாம சாப்புடற சர்க்கரையை வெளியே எடுத்து வச்சோமுன்னா ... காற்றோடு கள்ளத்தனம் புரிந்து .... தன் சுயத்தை இழந்து ... காற்றோடு கலந்துவிடும்.

இதே சர்க்கரையை ... நம்ம உடம்புக்குள்ளே போட்டாலும் உடம்பில் உள்ள செல்களை அரித்து ஆக்ஸிடைஸ் செய்து கெடுத்து வைத்து விடும்.

உடம்புக்கு தேவையான அனைத்தையும் ... நம்ம உடம்புக்குள்ளேயே ... ஏதோ ஒரு பாகத்துல சேர்த்து வச்சிக்கற உடம்பானது ... இந்த காத்தை மட்டும் சேத்து வச்சிக்க மாட்டேங்குதுன்னா ... காரணம் இதுதான்.

எந்த அளவுக்கு அமிர்தமோ ... காத்து ... அந்த அளவுக்கு நஞ்சும்கூட !

உடம்புக்கு தேவையான திடசக்தியை உருவாக்கித் தருகிற ஆக்ஸிஜன்தான் ... இந்த உடம்பை இயக்குகின்ற எண்ணங்களை ... உருவாக்கக் கூடிய காரணியாகவும் இருக்கிறது.

உடலின் தலைப்பகுதியில் ... மூளை உள்ளது.

உடலில் என்னவிதமான உணர்வு ஏற்பட்டாலும் அது மூளையில் பதிகின்றது.

மூளையில் அவ்வப்போது திரவம் சுரந்து ... பழைய உணர்வுகளை தேக்கி வைத்து வேதிக்கலவையோடு ... புதிதாக ஏற்பட்ட உணர்வுக்காக உருவாகி நிற்கும் வேதிக் கலவையும் சேர்ந்து ... காற்றும் கலந்து ... புதுபுது எண்ணங்களாக, உணர்வுகளாகத் உடம்பை அனுபவிக்கச் செய்கின்றன.

வேக வேகமாகவும், மேம்போக்காகவும், மாசு பட்டதாகவுமான காற்றை அவசர அவசரமாக சுவாசித்து ... அவசர அவசரமாக வெளியே விட்டால் ... காற்று தமக்குள் உராசி ... தம்மை உட்படுத்தி வைத்திருக்கும் உடம்பென்ற குடுவையின் மேல்பாகத்தில் உரசி ... சிதைந்து ... அணுக் குறைபாடுடைய ஆக்ஸிஜன் ... அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டு ... ஆக்ஸிடைஸ் உருவாகுவதற்கு காரணமாக ஆகி ... உயிரைக் கொன்று விடுகிறது.

மெல்லியதாக, ஒரு அடர்த்தி மிகுந்த தேனை, மயிலிறகால் தொட்டு துளி, துளியாக நழுவ விடுவதைப் போல தைலதாரையாய் ... நம் மூச்சு இருக்குமாறு அமைந்தால் ... ஆக்ஸிஜன் உடைவு இருக்காது ...

முழு, முழு, ஆக்ஸிஜன் ... உணவோடு வேதிவினை புரியும் ... நல்ல சத்தான உணவை உடலுக்கு கொடுக்கும்.

மட்டுமல்ல ...

மூளை பதங்கமாகி அவ்வப்போது தேவைக்கேற்ப ஆவியாகி ... உணர்வுகளையும், எண்ணங்களையும் உருவாக்கும் போது .... கொந்தளிக்காத, உராயாத ... அமெரிக்கையான ஆக்ஸிஜனானது ... மூளை ஆவி ஏற்கனவே கெட்ட அனுபவத்தை உள்வாங்கி ... கெட்ட பக்குவத்தை அடைந்து ... கெட்ட அனுபவத்தை வெளிபடுத்த முயற்சித்தாலும் கூட ... தைலதாரையான ஆக்ஸிஜனானது ... சாத்வீகப் படுத்திவிடும். சாத்வீகப் படுத்தப்பட்ட மூளை ஆவியானது ... மீண்டும் நீர்மைநிலை அடைந்து, திடமாக மாறி ... மூளையிலே படிந்து விடும்போது ... நல்ல உணர்வையும், எண்ணத்தையும் கொண்டதாக படிந்து வைக்கும்.

இந்த நிகழ்வு தொடர்ந்தால் ... அடிப்படை DNA விலிருந்து இதுநாள்வரை தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் கெட்ட பதிவுகள் ... மாற்றப்பட்டு ... நன்மை செய்யும் எண்ணங்களும், உணர்வுகளும் மட்டுமே தலைத்தூக்கும், தழைத்தோங்கும்.

இதுவே #பிராணயாமம் !!!

இதுவே #வாசி_யோகம் !!!

வாயுவினை நோக்கி உள மாண்டவய நாவாய்
ஆயுவினை நோக்கி உள வாழ்க்கை அதுவேபோல்
தீயவினை நோக்கும் இயல் சிந்தனையும் இல்லாத
தூயவனை நோக்கிஉள துப்புரவும் எல்லாம்.

( நூல்; செப்படுவித்தை  )

1 comment: