Thursday, 27 April 2017

குழந்தை வைத்தியம் மருந்தும் மாந்திரிகமும் ( பாகம் 19)

குழந்தை வைத்தியம் மருந்தும் மாந்திரிகமும் ( பாகம் 19)
பறவை தோஷம்.
நெஞ்சு கட்டும் உள் நாக்கு வீங்கும் பால் தாங்காது உடல் வலி உண்டாகும் கக்கிய பால் கசப்பு நாற்றம் அடிக்கும் கை கால் அழுக்கேறும் வேளைக்கு ஒரு நிறமாக உடல் மாறும்.
.
மேல் மூச்சு வாங்கும் தொண்டையில் வலி எடுக்கும் தூக்கத்திலிருந்து எழுந்து தண்ணீர் கேட்கும்.
பறவை தோஷத்திற்கு மருந்து வம்
1. ஞாயிற்றுக்கிழமை அல்லது வெள்ளிக்கிழமையில் சூரிய உதய காலத்தில் சிறு புள்ளடி வேருக்கு காப்புக் கட்டவும் சூரிய அஸ்தமான நேரத்தில் வேரைப் பிடுங்கி வந்து குழந்தை மார்பில் அல்லது தாயாருக்கும் குளிசமாகக் கட்டலாம்.
2. புங்க வேரை குளிசமாக்க கட்டத் தீரும்.
3. ஆவாரைக் கொழுந்து , வரட் பூலாங்கொழுந்து, வசம்பு, தூதுவளை, உள்ளி முதலியவைகளில் சம அளவு எடுத்துப் பசு நெய்யில் பொரித்துக் கொடுக்கவும்.
4. சிறு புள்ளடி, சின்னி இலை, உள்ளி, வசம்பு முதலியவைகளை வெண்ணெயுடன் குழப்பி அடுப்பின் மேல் ஏற்றி நெய்யாக கொண்டு மேல் பூசவும்.
5_ வாய் பேசாமல் அம்மான் பச்சரிசி வேரையும், வரட் சுண்டி வேரையும், உள்ளி, வசம்பு சேர்த்து நறுக்கிக் கொடுக்கவும்
6. வெள்ளைக் குன்றி மணிக்கு செவ்வாய்க் கிழமையில், பொங்கலிட்டுப் எழுமிச்சை பலி கொடுத்து சாபத்தைப் போக்க வேண்டும். பிறகு வடக்கே செல்லும் வேரை எடுத்து வந்து ஐந்து நிறமுள்ள நூலால் குளிசமாக்கி கழிப்பு கழித்து தூப தீபங்காட்டி குழந்தைக்கு கட்ட வேண்டும்.
புள்தோஷம் தொடரும் .. --.... -

அறுவதா பச்சிலை

அறுவதா பச்சிலை
மனமுடைய குறுஞ்செடி வலி போக்குதல், வெப்ப முண்டாக்கல் , கோழையகற்றுதல் மாதவிலக்கு உண்டாக்குதல் ஆகிய மருத்துவ குணங்களை உடையது.
1. இலைச் சாற்றில் 10 துளியைத் தாய்ப்பாலுடன் கலந்து சிறு குழந்தைகளுக்குக் கொடுக்க சளியை வெளியேற்றி காய்ச்சல் இசிவு ஆகியவற்றைப் போக்கும்.
2. இலையுடன் கால்பங்கு மஞ்சள் சேர்த்து அரைத்துக் குழந்தைகள் உடலில் பூசிக் குளிப்பாட்டி வர , சளி , நீர்க்கோவை முதலிய குளிர்ச்சி நோய்கள் வராமல் தடுக்கும்.
3. இலையைப் பொடித்து வைத்துக் கொண்டு வயதிற்கு ஏற்ப 1/4 முதல் 1 தேக்கரண்டி வரை தேனில் குழைத்துக் கொடுத்து வர வயிற்றுப்பொருமல், வயிற்றுவலி, செரியாமை, நாட்பட்ட மார்புச்சளி, பால் மாந்தம், மாந்த சுரம், கணை, வயிற்றுப்போக்கு ஆகியவை தீரும்.
4. உலர்ந்த இலையை நெருப்பிலிட்டு வரும் புகையை மென்மையாகச் சுவாசிக்க இருமல் தணியும்.
அன்புடன் சுவாமிகள் இயற்கை சித்தர் பீடம்

ஆவாரை

ஆவாரை
பளிச்சிடும் மஞ்சள் பூக்களை உடையது . சாலையோரங்களில் தானே வளர்வதுண்டு.
1. பூச்சூரணத்தையோ , பூ வைக் குடிநீராக்கிப் பாலில் கலந்தோ இதழ்களைக் கறிக் கூட்டாகவோ நாள்தோறும் பயன்படுத்த மேக வெட்டை , தேக உட்சூடு, உடல் நாற்றம், உடலில் உப்புப் பூத்தல், வறச்சி, ஆயா சம் நீங்கும்.உடல் பலத்தை தரும் . உடல் பொன் நிறமாகும்.
2. ஆவாரையின் பஞ்சாங்கம் சூரணம் (வேர் , இலை, பட்டை, பூ, காய்) 10 கிராம் வீதம் காலை, மதியம்,மாலை வெந்நீருடன் கொள்ள பிரமேகம், மதுமேகம், மிகு தாகம், மிகு பசி, உடல் மெலிவு , உடல் எரிச்சல், உடல் முழுவதும் வேதனை, பலக் குறைவு , மயக்கம் , மூச்சுத் திணறல் ஆகியவை தீரும் 45 | 90, 135 மண்டலம் சாப்பிட வேண்டும்
3. ஆவாரம் பட்டை, கஸ்தூரி மஞ்சள், ஒரு மிளகாய், சிறிது சாம்பிராணி' , நல்லெண்ணெயுடன் ( ஆவாரைத் தைலம்) காய்ச்சி, தலை முழுகி வர மதுமேகம் உடையவருக்குக் காணும் தோல் வேடிப்பு, வறட்சி, எரிச்சல் குணமாகும்,
4, 20 கிராம் பட்டையைப் பொடித்து ஒரு லிட்டர் நீரில் இட்டு 200 மி.லியாகக் காய்ச்சி 50 மி.லி. காலை, மாலை குடித்து வர மதுமேகம் , சிறு நீருடன் இரத்தம் கலந்து போதல், பெரும்பாடு , தாகம் ஆகியவை தீரும்.
5. உலர்ந்த பூ 10 கிராம் 250 மி.லி. நீரிலிட்டு நன்கு காய்ச்சி வடிகட்டி பால் சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை பருகி வர உட்சூடு நீரிழிவு நீர்க்கடுப்பு ஆகியவை தீரும்

Image may contain: plant, flower, outdoor and nature

அமுக்கிராக் கிழங்கு (அஸ்வகந்த)

அமுக்கிராக் கிழங்கு (அஸ்வகந்த)
( இருளி)
செயல் = ஆண்மைப் பெருக்கி, வீக்கம் நீக்கி, உறக்கமுண்டாக்கி
1. அமுக்கிராப் பொடி 5 கிராம், பிஸ்தா பருப்பு , பாதாம் பருப்பு, சாரப் பருப்பு வகைக் 3 கிராம், கசகசா 15 கிராம் இவற்றை அரைத்து 100 மி.லி. பாலில் கலந்து சர்க்கரையுடன் சேர்த்து காலையில் மட்டும் 3 முதல் 4 மாதங்கள் சாப்பிட்டு வர உடலுக்கு பலத்தையும் , இளமையையும் , நீண்ட ஆயுளையும் அளிக்கும்.
2. அழுக்கிர கிழங்கை அரைத்து புண், கட்டி, வீக்கம் போன்றவற்றில் பற்றுப் போட குணமடையும்
3. அமுக்கிராப் பொடியை தூதுவளைப் பொடியுடன் சம அளவு கலந்து 5 மி.லி. பால் அல்லது நெய்யுடன் தினமும் 2 அல்லது 3 வேளைகள் பத்திய முடன் உட்கொண்டு வந்தால், நீடித்த நோய்க்குப் பின் வரும் களைப்பு, சளிக் காய்ச்சல், தோல் நோய் , காது மந்தம் தீரும்,
4, அமுக்கிரா பொடியை தினமும் இரு வேளைகள் 2,4, கிராம் வீதம் தேனுடன் உட்கொள்ள வாதம், கபத்தினால் ஏற்படும் நோய்கள், உடல் பருமன், பசியின்மை நீங்கும்.
5 . அமுக்கிராப் பொடியை நெய்யுடன் கலந்து கொடுக்க, விந்துவைப் பெருக்கும். உடலுக்கு பலம் தரும்.
6. அமுக்கிராப் பொடி 1 பங்கும், கற்கண்டு 3 பங்கும். , சேர்த்து 5 கிராம் வீதம் தினமும் காலை, மாலை உட்கொண்டு 200 மி.லி பசும்பால் அருந்த நரம்புத் தளர்ச்சி நீங்கும். உடல் அழுகும், உறுதியும் பெருகும்
7. பொதுவாக அமுக்கராக் கிழங்கு அணைவருக்கும் ஏற்ற உடல் தேற்றி மருந்தாகும்.
அன்புடன் சுவாமிகள்

குமரி (சோற்றுகற்றாழை)

குமரி (சோற்றுகற்றாழை)
இதன் வேர் ஆண்மை நீடிக்கும்
சோற்றுக்கற்றாழையின் சேறு மந்தம், வயிற்று வலி, ரணம், குன்மக் கட்டி, பசியின்மை I புளியேப்பம், பொருமல் , மேக நோய் , பலவீனம், எரிச்சல், நீர்க்கசிவு கிரந்தி, அரிப்பு , தினவு , மஞ்சள் , சிவப்பு நீர் போதல், தாது இழப்பு, அரையர்ப்பு, தொடைக்கட்டி, உறுப்களில் அக , புற ரணங்கள் , சீழ்வடிதல் தீரும். மலச்சிக்கல் நீங்கி உடல் தேறும் ,

கழற்சிக் கொட்டை

கழற்சிக் கொட்டை
விரை வீக்கம், விரைய ழச்சி , மூல வீக்கம் , இரைப் பிருமல், குடல்வலி, சினைப்பையழற்சி, குடல் வாயு, அண்ட வாயு , பக்கச் சூலை , ஆகியவை தீரும்
மருத்துவம் 99421638 71

மத்தான் தைலம்

மத்தான் தைலம்
(தேரையர் தைல முறை)
ஊமத்தன் இலைச் சாறு
தேங்காய் எண்ணைய்
 மயில் துத்தம்
ஊமத் தான் இலைச் சாற்றை தேங்காய் எண்ணெயுடன் கலந்து காய்ச்சி சாறு ஒரளவுக்கு சுன்டிய பின் துத்தத்தை பொடித்து எண்ணெய்யில் சேர்த்துக் காய்ச்சி பதத்தில் வடித்து வைக்கவும்
மேல் பூச்சாக உபயோகிக்கவும். சீழ் வடியும் காதில் போடலாம். துணியில் தடவி புண்ணுக்குப் போடவும்
படை, சொறி , சிரங்கு, துஷ்விரணம், உண்வளருதல் , கசியும் படை, பிளவை, ஒழுகும் விரணங்கள் - காதில் சீழ்வடிதல், ஆகியவை குணப்பெரும்
Image may contain: plant, flower, nature, outdoor and food

சங்கஞ் செடி

சங்கஞ் செடி
X . சங்கிலை , தூதுவேளை இரண்டும் ஒரு பிடி அரைத்து நெல்லிக்காயளவு பசும்பாலில் கொள்ளக் கபரோகம் தீரும்
X. சங்கிலை, வேப்பிலை , சமன் அரைத்து நெல்லிக்காயளவு காய்ச்சி ஆறிய நீருடன் பிரசவ நாளிலிருந்து கொடுத்து வரக் கற் பாயச அழுக்குகள் வெளியெறிச் சன்னி, இழுப்பு வராமல் தடுக்கும்.
X. சங்கிலை, வேர்ப்பட்டை சமனளவு அடைத்து சுண்டக் காயளவு வெந்நீரில் காலை, மாலை கொள்ள 20 நாள்களில் ஆரம்பப் பாரிச வாதம், வாயு, குடைச்சல் , பக்கவாதம் தீரும்.
X. சங்கிலை, வேம்பு, குப்பை மேனி, நொச்சி, நாயுருவி ஆகியவற்றில்
வேது பிடிக்க வாத வீக்கம், வலி, நீர் ஏற்றம் , கீல்வாயு தீரும்.
X | சங்கம் வேர்ப்பட்டைச் சாறு 20 மிலி 100 மிலி வெள்ளாட்டுப் பாலில் குடிந்து வரச் சிறுநீர் தடை நீங்கும் .

பற்பாடகம்

பற்பாடகம்
சீதள , வாத, கபஜுரங்கள், பித்த ஜுரங்கள், விஷ ஜுரம், விடாது அடிக்கும் காய்ச்சல் ஆகியவற்றி கு அற்புத மருந்து
பற்பாடகம் , நெற் பொரி , வறுத்த பாசிப்பயறு, வில்லவேர் , அதிமதுரம் 5 . கிராம் அளவு எடுத்து கஷாயமிட்டு கொடுக்க அடங்காத சுரம் போகும்.
பற்பாடகம், சுக்கு, நெருஞ்சில் வேர், எருகன் வேர், முத்த காசு ,திப்பிலி மூலம், வகைக்கு 10 கிராம் எடுத்து இடித்து கஷயமிட்டு குடிக்க சூதக சன்னி , தோடம், நாக்கு வெடித்தல், விக்கல், பிதற்றல், ஓடுதல், படுக்கையைக் கிழித்து போடல் போன்ற சன்னி ஜுரங்கள் தீரும்.
மேலும் டிங்கு என்ற விஷ ஜுரம் நீக்கும் அற்புத மருந்து குணம் கொண்டது பற்பாடகம்
Image may contain: plant and outdoor
Image may contain: plant, flower, tree, outdoor and nature

மலை வேம்பு, நிலவேம்பு

மலை வேம்பு, நிலவேம்பு
உடலிலில் கிருமியினால் உண்டாகும் விஷத்தன்மையை நீக்குகிறது கிருமிகளை அழித்து உடலிற்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது . இது ஒரு ஆன்டி செப்டிக் மருத்துவம்
1. நிவேம்பு இலை - 100 கிராம்
2. மலை வேம்பு 100 கிராம்
3. அமுக்கரா . 20 கிராம்
4. திரிகடுகு 100 கிராம்
5. திரிபலாதி 100 கிராம்
6.அவுரி 20 கிராம்
7. அக்தி 10 கிராம்
& வெட்சி 10 கிராம்
9. வெற்றிலை 10 கிராம்
(0 ஓமம் " / / 10 கிராம்
11. லவங்கம் 20 கிராம்
மேற்கண்ட பொருட்களை உலர்த்தி பொடித்து சலித்து 500 மி.கி வீதம் 3 வேளை உணவிற்கு முன் நீருடன் சாப்பிடவும்.
9942163871

அத்தி

அத்தி
1. அத்திப்பால் 15 மில்லியுடன் வெண்ணெய், சர்க்கரை கலந்து காலை, மாலை கொடுத்து வர நீரிழிவு, குருதி கலந்து போதல், நரம்புப் பிடிப்பு, பித்தம் ஆகியவை தீரும்.
2 அத்திப் பாலை மூட்டு வலிகளுக்குப் பற்றிட விரைவில் வலி தீரும்.
3. முருங்கை விதை, பூனைக்காலிவிதை, நிலப்பனைக்கிழங்கு, பூமிச்சர்கரைக் கிழங்கு சமனளவாக இடித்துச் சலித்து 5 கிராம் பொடியில் 5. மி.லி அத்திப்பாலைக் கலந்து காலை, மாலையாக 20 நாள்கள் கொடுக்க, அளவு கடந்த தாது வளர்ச்சியைக் கொடுக்கும்.
4. அத்திப்பட்டை , நாவல் பட்டை கருவேலம்பட்டை, நறுவிளம்பட்டை சமனளவு இடித்த பொடியில் 5 கிராம்
50 மி.லி கொதி நீரில் ஊற வைத்து வடிகட்டி நாள்தோறும் மூன்று வேளை கொடுத்து வர பெரும்பாடு, சீதப் பேதி, இந்தப் பேதி ஆதியவை தீரும்.
5. அத்திப் பிஞ்சு, கோவைப் பிஞ்சு, மாம்பட்டை , செறு செருப்படை சமனளவு எடுத்து வாழைப் பூச் சாற்றில் அரைத்துச் சுண்டைக்காய் அளவு மாத்திரைகளாக உருட்டி வைத்துக் காலை, மாலை, வெந்நீரில் கொள்ள ஆசனக் கடுப்பு , மூல வாயு , இந்த மூலம், மூலக்கிராணி(வாயிற்றுப்போக்கு)
தீரும்.
6.அத்திப்பழத்தை உலர்த்தி இடித்துப் பொடி செய்து 1 தேக்கரண்டி காலை, மாலை, பாலில் உட்காள்ள இதயம் வலுவாகும், இரத்தம் பெருகும் .
7. அத்தி, அசோகு, மா, ஆகியவற்றின் பட்டைகளைச் சேர்த்துக் காய்ச்சிய குடிநீர் காலை, மாலை, குடித்து வரத் தீராத பெரும்பாடு தீரும்.

மலை நெல்லி ( நெல்லி வற்றல்)

மலை நெல்லி ( நெல்லி வற்றல்)
1 . கிலோ நெல்லி வற்றலை 4 லிட்டர் நீரில் போட்டு அரை லிட்டராகக் காய்ச்சி இறுத்து அரை கிலோ சர்க்கரை சேர்த்துப் பா காக்கி அதில் சுக்கு, மிளகு, திப்பிலி, வகைக்கு 30 கிராம் கிராம்பு, ஏலம், வெள்ளைப் குங்கிலியம், கற்பூரம், வாய் விளங்கம் , அதிமதுரம் , கூகை நீர் , கொத்தமல்லி, சீரகம் , ஓமம் வகைக்கு 10 கிராம் பொடித்துப் போட்டுக் கிளரி அரை லிட்டர் நெய் சேர்த்துக் காலை , மாலை கழற்சிகாய் அளவு சுவைத்து பால் அருந்த மேகச் சூடு , எலும்பைப் பற்றிய காய்ச்சல், என்புருக்கி , இருமல், ஈழை, காசம், கபம், வாயு, பீனிசம் , பொருமல் அனைத்தும் தீரும்.
2. நெல்லி வற்றலும் பச்சைப் பயிறும் வகைக்கு 20 கி ராம் 1 லிட்டர் நீரிலிட்டு 200 மி.லியாகக் காய்ச்சி வடித்து 100 மி.லி. யாகக் - காலை, மாலை சாப்பிட்டு வரத் தலைச்சுற்றல் கிறுகிறுப்புடன் கூடிய இரத்தக் கொதிப்பு தீரும்.
3 . நெல்லிவற்றலை நீரிலிட்டுக் கொதிக்க வைத்துப் பால் சர்க்கரை சேர்த்து 2 வேளை சாப்பிட்டு வர ஆண் குறிப்புண் ஆறும். சுவையின்மை வாந்தி ஆகியவை குணமாகும்.
Like
Comment

கிட்னிகல் கரைய

கிட்னிகல், பித்தப்பைகல், எந்த கல்லாக இருந்தாலும் வெளியெற்றும் கல்லுருவி மூலிகை ( சக்கரவர்த்தினி )
அற்புத மூலிகை
இந்த மூலிகையுடன் வெங்கர பஷ்பம் அல்லது வெடியுப்பு சுண்ணம் சேர்ந்து கொடுக்க கல் கரைந்து வெளியேறி விடும்
Provide translation into English
Like
Comment

முத்து சிகப்பு பற்பொடி

முத்து சிகப்பு பற்பொடி
காவிக் கல்பொடி - 1 கிலோ
மிளகு - 50 கிராம்
திப்பிலி - 50 கிராம்
பச்சைகற்பூரம் - 25 கிராம்
வேப்பிலை - 50 கிராம்
கடுக்காய் - 100 கிராம்
கிராம்பு - 25 கிராம்
செய்முறை:-
சரக்குகளை உலர்த்தி இடித்து , சலித்து, நன்றாக கலந்து டப்பாவில் பத்திரப்படுத்தவும்.
பல் வலிக்கும் இப் பற்பொடியை உபயோகிக்கலாம்
பல்கரை , பல் வலி, பற்சிதைவு , ரத்த க கசிவு , சொத்தை பல் அகியவை தீரும்.

மூலிகை குளிக்கும் தூள்

மூலிகை குளிக்கும் தூள்
மூலிகை குளிக்கும் தூளிலுள்ள மூலப் பொருட்கள் இயற்கையான சருமத்தினைக் கொடுப்பதுடன் தோலிற்கு பாதுகாப்பு மற்றும் முடி உதிர்தல், பொடுகு, இளநரை இவற்றைப் போக்கி அரோக்கியம் தரும்.
|
1 - உசிலை இலை ( அரப்பு) - 250 கி
2 . பூந்திக் கொட்டை - 250 கி
3 . சிகைக்காய் - 500 கி
4. பாசிப்பயறு - 500 கி 5. கஸ்தூரி மஞ்சள் 25 கிராம்
6. பூலாங்கிழங்கு 50 கி
7வேப்பிலை 100 கி
8. ரோஜாப்பூ 100 கி
மேலே உள்ள பொருள்களை தனித்தனியாக உலர்த்தி பொடித்து அரைத்து கலந்து பத்திரப்படுத்தி தேவையான அளவில் பயன்படுத்தலாம்
சருமத்தை பள பளக்கக் செய்து நோய் கிருமிகளில் பாதுகாக்கிறது. இயற்கை நறுமணம் கொண்டது உடலுக்கும் தலைக்கும் தேய்த்து குளிக்கலாம்
அன்புடன் மருத்துவம் 9942163871