Thursday, 27 April 2017

மலை நெல்லி ( நெல்லி வற்றல்)

மலை நெல்லி ( நெல்லி வற்றல்)
1 . கிலோ நெல்லி வற்றலை 4 லிட்டர் நீரில் போட்டு அரை லிட்டராகக் காய்ச்சி இறுத்து அரை கிலோ சர்க்கரை சேர்த்துப் பா காக்கி அதில் சுக்கு, மிளகு, திப்பிலி, வகைக்கு 30 கிராம் கிராம்பு, ஏலம், வெள்ளைப் குங்கிலியம், கற்பூரம், வாய் விளங்கம் , அதிமதுரம் , கூகை நீர் , கொத்தமல்லி, சீரகம் , ஓமம் வகைக்கு 10 கிராம் பொடித்துப் போட்டுக் கிளரி அரை லிட்டர் நெய் சேர்த்துக் காலை , மாலை கழற்சிகாய் அளவு சுவைத்து பால் அருந்த மேகச் சூடு , எலும்பைப் பற்றிய காய்ச்சல், என்புருக்கி , இருமல், ஈழை, காசம், கபம், வாயு, பீனிசம் , பொருமல் அனைத்தும் தீரும்.
2. நெல்லி வற்றலும் பச்சைப் பயிறும் வகைக்கு 20 கி ராம் 1 லிட்டர் நீரிலிட்டு 200 மி.லியாகக் காய்ச்சி வடித்து 100 மி.லி. யாகக் - காலை, மாலை சாப்பிட்டு வரத் தலைச்சுற்றல் கிறுகிறுப்புடன் கூடிய இரத்தக் கொதிப்பு தீரும்.
3 . நெல்லிவற்றலை நீரிலிட்டுக் கொதிக்க வைத்துப் பால் சர்க்கரை சேர்த்து 2 வேளை சாப்பிட்டு வர ஆண் குறிப்புண் ஆறும். சுவையின்மை வாந்தி ஆகியவை குணமாகும்.
Like
Comment

No comments:

Post a Comment