கஞ்சாங்கோரை ( சங்கரன் துளசி)
இதனை நாய் துளசி என்று கூறுவதுண்டு_
இது வேம்பு வைப் போலவே மனதிலும் உடலிலும் வேலை செய்யக் கூடியது
இரைப்பை, நூரையீரல், சர்மம், மனோ சம்மந்தப்பட்ட நரம்பு மண்டலம். ராஜ உறுப்புகள் நன்கு வேலை செய்யக் கூடியது. அத்துடன் கிருமிகளையும் அழிக்கும் சக்தியுடையது. வியர்வைகளை பெருக்கி உடலை உடலைத் தூய்மையாக்கும்
கஞ்சங்கோரையின் நறுமணம் மனதிற்கு அமைதியையும் சாந்த குணத்தையும் அளிக்கக்கூடியது.
இதனை துறவு பூண்ட சன்னியாசிகளும், பிரம்மசாரிய விரதம் அனுஷ்டிப்பவர்களும் கை கொண்டு புழங்டுவார்கள்.
சம்சாரத்திலுள்ளவர்களும் உபயோகிக்கலாம் , முடிவு பெறாத பல இச்சைகளை எண்ணி நாய் போல் அலையும் மனதை தூய்மைப்படுத்தி, ஒழுக்கத்தையும் மன அமைதியை உண்டாக்கும்.
உலகியல் மாயையில் விட்ட கன்ற துறவிகளின் மூம்மலத்தை நீக்கி, இன்பம் பொருள்களில் மனம் பற்றவிடாமல் பேரின்ப என்ணங்களை தூண்ட உதவுகிறது என்பது பல சித்தர்களின் கருத்து .
பேய் பிசாசு என்ற ஆவேசம் பிடித்தவர்களுக்கு வேப்பிலையால் அடித்து ஒட்டுவது போலவே. இந்த நாய்துளசி இலையை பிதற்றல், பாடல், சினத்தல் , ஓடல்' தொடர் பற்ற பேச்சுகளை பேசிக் கொண்டிருந்தல் ஆகியன போன்ற சித்தப் பிரமை பிடித்தவர்களுக்கும் பைத்தியம் பிடித்தவர்களுக்கும் தலையில் கட்டி வைக்கவும் படுக்கையில் போட்டு வைப்பதாலும் மேல் கண்ட நோய் நீங்கும்.
வீடுகளில் சேரும் பூச்களை ஓழிக்க நாள்தோறும் இறை வணக்கம் என்ற பழக்கத்தை உண்டாக்கி , சாம்பிராணி தூபம், தீபம் , ஊதுபத்தி முதலானவைகளை போடுவதால் பூச்சிகள் இந்த நறுமணம் சகிக்காமல் வீட்டை வீட்டு வெளியேறிப் போகிறது. அதோடு நமது பழிவாங்கும் நினைவு இறை வாழிபாட்டினால் அமைதி பெறுகிறது , கஞ்சங்கோரை மூட்டைப் பூச்சிக்கு பரம எதிரி ஆகவே இதை நாள் தோறும் கொண்டு வந்து கசக்தி வீட்டின் மூலை முடுக்குகளில் போட்டு வைக்க வேண்டும் i பத்து நாள் தொடர்ந்து போட இதன் நறுமணம் வீட்டைச் சுற்றியுள்ள மூட்டைப்பூச்சிகளையும் , கொசுக்களையும் அழித்து விடும். செய்து பாருங்கள் !
சிலருக்கு உடம்பெங்கும் ஒரு வித பேன் பிடிப்பதுண்டு. இந்த பேன் சாதரணமாக தலைப்பேன் போல் இல்லாமல் கடல் நண்டு உருவ அமைப்புடன் மிகவும் நுண்ணியதாக இருக்கும். கண் புருவம், இமைகள் ,மர்ம உறுப்புகளில் உள்ள ரோமங்கள் கால், கை, மார்புகளில் உள்ள ரோமங்கள் ஆகியவைகளில் உ ணிகள் போன்று கெட்டியாக பிடித்துக் கொண்டிருக்கும் நமைக்கும் போது சொறிந்தால் தோலுடன் பிய்த்துக் கொண்டு வரும்
இந்த பேன் பிடித்தவன் வாழ்கை அதோ கதிதான் நிறைவேறாத பல ஆசை நினைவுகளில் ஈடுபட்டு மனம் உடையவனாகி இவனை தரித்திரமும், நோய்களும் பிடுங்கித் தின்னும், -
இந்த பேன் தொலைய வேண்டுமானால் கஞ்சாங்கோரை இலையை அதன் கதிர்களும் சேர்த்து ஒரு துண்டு வசம்பு சேர்ந்து இடித்து தூளாக்கி அதில் கலந்து இரண்டும் மை போல் அரைத்து உடம்பெங்கும் தடவிக் கொண்டு 1 மணி நேரம் சென்று குளிர்ந்த நீரில் குளிக் வேண்டும். இப்படி 10 நாள் குளித்தால் பேன் ஒழிந்து போகும், சீலைப்பேன் என்று, சொல்லப்படும் ஒரு வித வெள்ளை பேன்களும் இதனால் நீங்கும்.
மார்ச் சளி ' ., காசம், இருமல், ஆரம்ப நிலை ரோகம், ஆகியவைகளுக்கு ஆறு மிளகு, கஞ்சாங்கோரை இலை இரண்டு ரூபாய் எடையும் எடுத்து நன்றாக அரைத்து வெந்நீரில் கலந்து கொடுக்க சரியாவும் வெளியே வந்து குணமாகி விடும்.
இதன் இலையை நிறைய சேகரித்து எடுத்துலர் த்தி தூள் செய்து வைத்துக் கொண்டு தினம் காலை நேரத்தில் ஒரு வேளை காபி பொடி போடுவது போல் பால், சர்க்கரை சேர்த்து 1 தேக்கரண்டி அளவு காய்ச்சி குடித்து வரலாம். இதனால் வியர்வை நாற்றம் போகும்: உடலும் தூய்மையாகும்.
No comments:
Post a Comment