ஆவாரை
பளிச்சிடும் மஞ்சள் பூக்களை உடையது . சாலையோரங்களில் தானே வளர்வதுண்டு.
1. பூச்சூரணத்தையோ , பூ வைக் குடிநீராக்கிப் பாலில் கலந்தோ இதழ்களைக் கறிக் கூட்டாகவோ நாள்தோறும் பயன்படுத்த மேக வெட்டை , தேக உட்சூடு, உடல் நாற்றம், உடலில் உப்புப் பூத்தல், வறச்சி, ஆயா சம் நீங்கும்.உடல் பலத்தை தரும் . உடல் பொன் நிறமாகும்.
2. ஆவாரையின் பஞ்சாங்கம் சூரணம் (வேர் , இலை, பட்டை, பூ, காய்) 10 கிராம் வீதம் காலை, மதியம்,மாலை வெந்நீருடன் கொள்ள பிரமேகம், மதுமேகம், மிகு தாகம், மிகு பசி, உடல் மெலிவு , உடல் எரிச்சல், உடல் முழுவதும் வேதனை, பலக் குறைவு , மயக்கம் , மூச்சுத் திணறல் ஆகியவை தீரும் 45 | 90, 135 மண்டலம் சாப்பிட வேண்டும்
3. ஆவாரம் பட்டை, கஸ்தூரி மஞ்சள், ஒரு மிளகாய், சிறிது சாம்பிராணி' , நல்லெண்ணெயுடன் ( ஆவாரைத் தைலம்) காய்ச்சி, தலை முழுகி வர மதுமேகம் உடையவருக்குக் காணும் தோல் வேடிப்பு, வறட்சி, எரிச்சல் குணமாகும்,
4, 20 கிராம் பட்டையைப் பொடித்து ஒரு லிட்டர் நீரில் இட்டு 200 மி.லியாகக் காய்ச்சி 50 மி.லி. காலை, மாலை குடித்து வர மதுமேகம் , சிறு நீருடன் இரத்தம் கலந்து போதல், பெரும்பாடு , தாகம் ஆகியவை தீரும்.
5. உலர்ந்த பூ 10 கிராம் 250 மி.லி. நீரிலிட்டு நன்கு காய்ச்சி வடிகட்டி பால் சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை பருகி வர உட்சூடு நீரிழிவு நீர்க்கடுப்பு ஆகியவை தீரும்
No comments:
Post a Comment