அமுக்கிராக் கிழங்கு (அஸ்வகந்த)
( இருளி)
( இருளி)
செயல் = ஆண்மைப் பெருக்கி, வீக்கம் நீக்கி, உறக்கமுண்டாக்கி
1. அமுக்கிராப் பொடி 5 கிராம், பிஸ்தா பருப்பு , பாதாம் பருப்பு, சாரப் பருப்பு வகைக் 3 கிராம், கசகசா 15 கிராம் இவற்றை அரைத்து 100 மி.லி. பாலில் கலந்து சர்க்கரையுடன் சேர்த்து காலையில் மட்டும் 3 முதல் 4 மாதங்கள் சாப்பிட்டு வர உடலுக்கு பலத்தையும் , இளமையையும் , நீண்ட ஆயுளையும் அளிக்கும்.
2. அழுக்கிர கிழங்கை அரைத்து புண், கட்டி, வீக்கம் போன்றவற்றில் பற்றுப் போட குணமடையும்
3. அமுக்கிராப் பொடியை தூதுவளைப் பொடியுடன் சம அளவு கலந்து 5 மி.லி. பால் அல்லது நெய்யுடன் தினமும் 2 அல்லது 3 வேளைகள் பத்திய முடன் உட்கொண்டு வந்தால், நீடித்த நோய்க்குப் பின் வரும் களைப்பு, சளிக் காய்ச்சல், தோல் நோய் , காது மந்தம் தீரும்,
4, அமுக்கிரா பொடியை தினமும் இரு வேளைகள் 2,4, கிராம் வீதம் தேனுடன் உட்கொள்ள வாதம், கபத்தினால் ஏற்படும் நோய்கள், உடல் பருமன், பசியின்மை நீங்கும்.
5 . அமுக்கிராப் பொடியை நெய்யுடன் கலந்து கொடுக்க, விந்துவைப் பெருக்கும். உடலுக்கு பலம் தரும்.
6. அமுக்கிராப் பொடி 1 பங்கும், கற்கண்டு 3 பங்கும். , சேர்த்து 5 கிராம் வீதம் தினமும் காலை, மாலை உட்கொண்டு 200 மி.லி பசும்பால் அருந்த நரம்புத் தளர்ச்சி நீங்கும். உடல் அழுகும், உறுதியும் பெருகும்
7. பொதுவாக அமுக்கராக் கிழங்கு அணைவருக்கும் ஏற்ற உடல் தேற்றி மருந்தாகும்.
அன்புடன் சுவாமிகள்
No comments:
Post a Comment