குழந்தை வைத்தியம் மருந்தும் மாந்திரிகமும் ( பாகம் 19)
பறவை தோஷம்.
நெஞ்சு கட்டும் உள் நாக்கு வீங்கும் பால் தாங்காது உடல் வலி உண்டாகும் கக்கிய பால் கசப்பு நாற்றம் அடிக்கும் கை கால் அழுக்கேறும் வேளைக்கு ஒரு நிறமாக உடல் மாறும்.
.
மேல் மூச்சு வாங்கும் தொண்டையில் வலி எடுக்கும் தூக்கத்திலிருந்து எழுந்து தண்ணீர் கேட்கும்.

பறவை தோஷத்திற்கு மருந்து வம்
1. ஞாயிற்றுக்கிழமை அல்லது வெள்ளிக்கிழமையில் சூரிய உதய காலத்தில் சிறு புள்ளடி வேருக்கு காப்புக் கட்டவும் சூரிய அஸ்தமான நேரத்தில் வேரைப் பிடுங்கி வந்து குழந்தை மார்பில் அல்லது தாயாருக்கும் குளிசமாகக் கட்டலாம்.
2. புங்க வேரை குளிசமாக்க கட்டத் தீரும்.
3. ஆவாரைக் கொழுந்து , வரட் பூலாங்கொழுந்து, வசம்பு, தூதுவளை, உள்ளி முதலியவைகளில் சம அளவு எடுத்துப் பசு நெய்யில் பொரித்துக் கொடுக்கவும்.
4. சிறு புள்ளடி, சின்னி இலை, உள்ளி, வசம்பு முதலியவைகளை வெண்ணெயுடன் குழப்பி அடுப்பின் மேல் ஏற்றி நெய்யாக கொண்டு மேல் பூசவும்.
5_ வாய் பேசாமல் அம்மான் பச்சரிசி வேரையும், வரட் சுண்டி வேரையும், உள்ளி, வசம்பு சேர்த்து நறுக்கிக் கொடுக்கவும்
6. வெள்ளைக் குன்றி மணிக்கு செவ்வாய்க் கிழமையில், பொங்கலிட்டுப் எழுமிச்சை பலி கொடுத்து சாபத்தைப் போக்க வேண்டும். பிறகு வடக்கே செல்லும் வேரை எடுத்து வந்து ஐந்து நிறமுள்ள நூலால் குளிசமாக்கி கழிப்பு கழித்து தூப தீபங்காட்டி குழந்தைக்கு கட்ட வேண்டும்.
புள்தோஷம் தொடரும் .. --.... -
No comments:
Post a Comment