"கோழி தானாக சாகும்" ஜாலம்
அதாவது செய்வினை கோளாறு நிவர்த்தி செய்யும் போது கோழியை கையில் எடுத்துக் கொண்டு வீடு முழுவதையும் தொழிலாளி அல்லது கையாள் சுற்றுவான் அவ்வாறு சுற்றி வரும்போது பிறர் அறியாவண்ணம் கோழியின் வாயினுள் மூக்குபொடியை துணித்து நாக்கிலும் தடவிவிடுவான். பின் கொண்டு வந்து பார்ட்டியின் தலையையும் சுற்றி கோழியை தரையில் போடுவான். கோழியானது இழுப்பு வந்தது போல் இழுத்து மயங்கி விழுந்து விடும். அப்படியே விட்டு விட்டால் அரை மணி நேரத்தில் இறந்துவிடும்.
தலையை சுற்றி சாமி படைப்பை நோக்கி கோழியை விட்டால் அது வலிப்பு வந்து இழுத்து இழுத்துக் கொண்டே படைப்பை நோக்கியே போய் சாகும். படைப்பின் சுவர் ஓரம் போட்டிருப்பார்கள் எனவே சுவரைத்தாண்டி போக முடியாமல் படைப்பின் மீதே விழுந்து சாகும்.சாமி பலி ஏற்றுக் கொண்டு விட்டது என்பார்கள் . பார்க்க பயங்கரமாக இருக்கும் .
30 நிமிடத்தில் இறந்துவிடுமாதலால் சிறிது நேரத்தில் கோழியின் முகத்தில் தண்ணீரை தெளித்தது கொஞ்சம் குடிக்கவும் கொடுத்தால் மயக்கம் நீங்கிவிடும்.
சிலரிடம் உங்கள் தோசத்தை கோழியில் இருந்து இறக்கிறேன் என்று சொல்லி கோழியை மேற்கண்டபடி செய்து மயங்கச் செய்து பின் ஒரு முட்டையை கொண்டு வந்து கோழியிடம் இறங்கிய தோசத்தை முட்டையில் இறக்கிவிடுவோம் என சொல்லி மயங்கி கிடக்கும் கோழியின் அருகில் முட்டையை வைத்து எதோ மந்திரம் சொல்வது போல் முணுமுணுத்து கோழியின் வாயை ஒட்டினார் போல் முட்டையை வைத்து ஓதி தண்ணீர் எரிவது போல் கோழியின் முகுத்தில் தெளிக்க சப்தம் போட்டுக் கொண்டு கோழி எழுந்து ஓடும். பார்ப்பவர்களுக்கு அதிசயமாக இருக்கும்.
பின் தோசம் முட்டையில் இறங்கி விட்டது எனச் சொல்லி முட்டையை முச்சந்தியில் ஏதேனும் சடங்குகள் செய்வது போல் செய்து எரித்து விடுவார்கள் இந்த கோழிக்கு பதில் ஒரு மனிதனை வைத்தாலும் அவன் நிலையும் இதுதான் எனச் சொல்வார்கள் அதனை கேட்டவர்கள் மிகவும் அரண்டு போவார்கள்.☣🔴
No comments:
Post a Comment