Wednesday 21 February 2018

கணபதி சக்கரம்

கணபதி சக்கரம்
கீழ்கண்ட சக்கரத்தை ஒரு செப்புத் தகட்டில் பிழை இல்லாமல் எழுதி,பால்,தயிர்,இளநீர்,பஞ்சகவ்யம் விட்டு அபிஷேகம் செய்து பூஜையில் வைத்து,பால், பழம், சுண்டல், தேங்காய், எழுமிச்சம் பழம், வெற்றிலை பாக்கு, ஊதுபத்தி, சாம்பிராணி மற்றும் ஐந்து முகமுள்ள குத்துவிளக்கில் 5 முகமும் தீபம் ஏற்றி வணங்கி.
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்ளெம் கம் கணபதயே வரத ஸர்வ ஜனமே வசமானய ஸ்வாஹா. என்ற மந்திரத்தை தினமும் காலையில் 1008 மாலையில் 1008 உரு இப்படி 48 நாளில் ஒரு லட்சத்து எட்டு உருப்போட விநாயகர் வசியமாகும் உலகமே வசியம் செய்யும் அஷ்டகர்ம செய்யலாம்....
ஒரு குருவின் அருள் இருந்தால் எதிலும் ஜெயிக்கலாம்.குருதான் பரப்பிரம்மம். அவரிடம் ஆசிபெற்றுச் செய்யும் எந்தக் காரியமும் கை கூடும். குரு அருளோடு ஏதாவது ஒரு உபாசனை இருக்க வேண்டும். குறிப்பாக விநாயகர், முருகன், சிவன், சக்தி, பெருமாள் இந்த ஐந்து தெய்வங்களை உபாசனை செய்யலாம். ஒரு லட்சத்து எட்டு என்ற எண்ணிக்கையில் உருக்கொடுத்துச் சித்தி பெற வேண்டும்.
புராண காலத்தில் தேவர்கள், அசுரர்கள், முனிவர்கள், ரிஷிகள் போன்றோர் பத்தாயிரம் வருடம்,இருபதாயிரம் வருடம் தவம் இருந்து அநேகமான வரங்கள் பெற்றதை அறியலாம். நமக்கு இஷ்டமான தெய்வம் எதுவாக இருந்தாலும் அது குரு ஆசியுடன் ஒரு மண்டலத்தில் 1,00,008 உரு ஜெபித்து தெய்வத்தின் வரத்தைப் பெறலாம். பூஜை முறைகள்,கட்டுப்பாடு குருவிடம் அறிக.மனதுக்குப் பிடித்த குருவில்லா விட்டால் பெருமையாக இருங்கள் நீங்கள் விரும்பும் தேவதைகள் உங்களுக்கு அன்பான குருவை கிடைப்பார்... சரியாக குரு இல்லாமல். புத்தகங்களை படித்து விட்டு பூஜைகள் செய்யலாம் என்று நினைக்காதீர்கள். புத்தகங்கள் வெளிவரும் மாந்திரீகம் குறிப்பு வேரு ,குருவிடம் எடுப்பது வேர் .நல்ல குரு கிடைத்தவர்கள் நல்ல பயணத்தை நோக்கி செல்வார்கள். தீய்ய குருவை அடைந்தவர்கள் தீண்ட தகுதிகள் அடைவார்கள்... எனவே மாந்திரீகம் கற்றுக்கொள்ள முக்கியம், மந்திரமே,எந்திரமே,தந்திரமே முதலில் வேண்டாம் நல்ல குரு கிடைத்தால் .நீ எதையும் தேடாமல் கிடைக்கும். அதுதான் குருவின் சிறப்பு...
முதலில் ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை வழிபடும் பூஜை முறைகள் பற்றிக் காண்போம். தங்கள் நட்சத்திரம் சாதகமான நாளில் பூஜை ஆரம்பிக்கவும் காலை 6:00 மணிக்கு பூஜைகள் முடித்திட வேண்டும். முதல் நாள் எத்தனை மணிக்கு பூஜையை ஆரம்பிக்கிறோமோ அதே நேரத்தில்தான் மறுநாளும் பூஜையைச் செய்ய ஆரம்பிக்கப்பட வேண்டும். பூஜை அறையை மிகத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்...நன்றி
கணபதி என்றிட கலங்கும் வல்வினைகள்
கணபதி என்றிட காலனும் கை தொழுவான்
கணபதி என்றிடல் கர்மமுமாதலால்
கணபதி இல்லாததோர் கர்மமும் இல்லையே..
நான் மாந்திரீகம் + கணபதியை பற்றிச் சொல்ல மேற்கண்ட பாடல் புரிந்தால் போதும்.
நன்றி குருமுனி மறைக்கப்பட்ட மாந்திரீகம் மர்மங்கள் விழிப்புணர்வு மற்றும் ஆராய்ச்சி மையம்
No automatic alt text available.

No comments:

Post a Comment