வசியம்"" சூலினி துர்கா ""
சூலினி துர்கா நாமமே, இவள் கையில் சூலத்தோடு விளங்குகின்றவள் என்பதையும், சூல வடிவுடையவளாக விளங்குகின்றாள் என்பதையும் குறிப்பிடுவதாகும். மூல துர்காவின் ஒரு அம்சம்தான் இந்த சூலினி துர்கா. சிவ பெருமானின் கையில் இருக்கும் சூலம் இவள் கரத்தில் விளங்குகிறது. சராசரி மனிதனுடைய வாழ்க்கையில்,நல்ல நண்பர்களைவிட தீய நண்பர்களே அதிகம். நண்பர்கள் என்று சொல்வதை விட விரோதிகள் என்று சொல்லலாம். இவர்கள் தன்னை ஒத்த மற்றவர்கள் வாழ்வதைப் பொறுக்காமல்,எப்படியாவது அவர்களின் இயக்கத்தை தடுப்பது என்று தேடிக்கொண்டு இருக்கிறார்கள். கரை ஏறாத ஆவிகளையும் இயக்கி விடுவது என்பது, ஒரு சிலருடைய வழி முறையாக இருந்து வருகிறது. இந்த வழியில் போகிறவர்கள், வாழ்வின் நிறைவில் துக்கப்படுவார்கள் என்றாலும், அவர்களால் இயக்கி ஏவப்பட்ட துர்பிஷங்களை மற்றவர்கள் சில காலம் அனுபவிக்கத்தான் வேண்டும்..
சூலினி துர்கா, எரியும் நெருப்பை போன்றவள். கொழுந்து விட்டெறியும் அவளுடைய ஜ்வாலை, கெட்டவர்கள் சம்ஹாரம் செய்யக்கூடாது. இவளுடைய மந்திரம் எளிமையும்,வலிமையும் வாய்ந்தது. இவளை நினைக்கின்றவர்களை அருகில் வரும் பூதப்பிரேத,பிசாசு பேய்களை உபத்திரவங்கள்,ஏவி விட்டவர்களையே சென்றடையும்.துர்காரியங்களை செய்தவனை நோக்கி திருப்பி விடும் ஆற்றல் பெற்றவள் சூலினி துர்கா.
சூலினி துர்கா,ப்ரத்யங்கரா,வாராஹி,தக்ஷிணகாளி, அக்னிகாளி போன்ற தெய்வங்கள் ஒரே மாதிரியாக துணை செய்வார். இவர்கள் எல்லோரும் நம்பினவர்களை காப்பாற்றுவார்கள்.
சூலினி துர்கா மந்திரத்தை மந்திர விதிப்படி ஜெபம் செய்து மந்திரம் சித்தியாகும். குறிப்பாக குருமுக வழிவேண்டும்...
சரி இந்த சூலினி துர்கா மந்திரம் பார்ப்போம்.
மூலமந்திரம்.
ஸ்ரீ சூலினி துர்கா மந்திரம்
.
.
ஓம் ஹ்ரீம் தும் தும் சூலினி துர்காயை ஹீம்பட் ஸ்வாஹா.
உரு +1008
No comments:
Post a Comment